Friday, September 5, 2008

சுஜாதா மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் - திருட்டுக் குறும்படம்!!!

இப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு கஷ்டமாகத்தான் உள்ளது!

நேற்று சக பதிவர் கேபிள் சங்கரின் பதிவில் ‘தனம்' பட விமர்சனம் இருந்ததைக் கண்டு அவரது பதிவைப் படிக்கப் போனேன்.

சங்கீதா அவ்வளவொன்றும் திறமையைக் 'காட்டி' நடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார்... வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

கவனிக்கும்போது, அவரது ப்ளாக்கின் இடப்பக்கத்தில் ACCIDENT என்றொரு குறும்படத்தைப் போட்டிருந்தார். எனக்கு அதைப் பார்ர்கும் ஆவல் அதிகரிக்கவே, க்ளிக்கிப் பார்த்தேன். என்னுடையது ஒரு வேலைக்காகாத ஸ்லோ கனெக்‌ஷன் ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஓப்பன் ஆனது. விளம்பரமெல்லாம் வந்து, குறும்படம் துவங்கியது. கொஞ்சம் ஓடி, பஃபர் ஆகி, பின் கொஞ்சம் ஓடி.. என்று என் இணையத் தொல்லையூடே தடுமாறி, தடுமாறி ஓடியது.

மொத்தம் 17 சொச்சம் நிமிடங்கள் என்றிருந்த அந்தக் குறும்படம், ஆறேழு நிமிடங்கள் ஓடியதும் எனக்கு படபடப்பு அதிகமானது..

எழுத்தாளர் சுஜாதா எழுதி, 1966ல் குமுதத்தில் வெளிவந்‘சசி காத்திருக்கிறாள்' கதையைப் போலவே இருந்தது அந்தப் படம். என்னால் உட்கார முடியவில்லை. உடனே கிளம்பி, ஸ்பீட் அதிகமான ஒரு ப்ரௌஸிங் செண்டருக்குப் போய் தொடர்ந்து பார்த்தேன்.


அதிர்ச்சியாக இருந்தது!

சுஜாதாவின் கதையை அச்சு அசலாகக் காப்பியடித்திருந்தார்கள்! இந்த லட்சணத்தில் எழுத்தும், இயக்கமும் சங்கர் நாராயணன் என்று வேறு போட்டிருந்தார்கள். நான் திரும்பத் திரும்ப எங்கேயாவது நன்றி: சுஜாதா என்றிருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. இல்லை!

நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவே இல்லை. சுஜாதாவின் மீது அளவில்லாத மதிப்பு எனக்கு உண்டு. அது எல்லையற்றது. அவர் எழுதியதில் பத்தோடு பதினொன்று அல்ல இந்தக் கதை. இது அவரது மாஸ்டர் பீஸ். அவர் இந்தக் கதையை எழுதி அனுப்பி, குமுதத்தில் வந்த பிறகு எஸ்.ஏ.பி (குமுதம் நிறுவனர்) அடிக்கடி எழுதுங்கள் என்று தன் கைப்பட எழுதி சுஜாதாவைப் பாராட்டியிருக்கிறார். இதை பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கதையையே இப்ப்டித் திருடியிருக்கிறார்களே என்று மனவேதனையடைந்தேன்!






சரி.. நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேபிள் சங்கருக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டேன். தனம் விமர்சனத்தைப் பற்றி ஒரு வரி எழுதிவிட்டு.. ‘ஒரு சீரியஸான வேண்டுகோள்: நீங்கள் இடப்பக்கம் குடுத்திருக்கும் குறும்படம் சுஜாதாவின் சசி காத்திருக்கிறாள் கதையின் காப்பி. குறைந்தபட்சம் சுஜாதாவுக்கு நன்றியாவது சொல்லச் சொல்லுங்கள்' என்று போட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன்.

இரவு வந்து பார்த்தால்....

அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கிறது!





வலைப்பூவின் இடது பக்கம் அவர் கொடுத்திருந்த அந்தக் குறும்படமும் நீக்கப்பட்டிருந்தது!

என்ன நடக்குது இங்கே?

நான் எவரையும் பழிக்காமல், விமர்சிக்காமல் தோழமையோடேதான் எழுதி, பேசி வருகிறேன். (இல்லையோ?) ஆனால் இதை என்னால் லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!

அந்தக் குறும்படத்தின் பக்கம் இதோ.




கேபிள் சங்கர் ஏன் என் பின்னூட்டத்தையும், அந்தக் குறும்படத்தையும் உடனே நீக்க வேண்டும்?

‘என்ன பண்ண பரிசல்? வர வர இயக்குனர்களுக்கு கதைப் பஞ்சம் போல' என்று ஏதாவது பதில் சொல்லியிருந்தாலோ, அல்லது ஒன்றுமே சொல்லாமலிருந்தாலுமோ நான் பாட்டுக்கு செந்தழல் ரவி சொல்வது போல எதுவுமே பண்ண வேண்டாம் பாஸ் என்று $$$ ###கிட்டுப் போயிருப்பேன்.

ஆனால், இப்போது சந்தேகம் வருகிறதே..

கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா?


அனுமதி வாங்கியிருக்கிறீர்களென்றால், பதில் சொல்லியிருக்கலாமே. என் பின்னூட்டத்தை நீக்கியது ஏன்?


இந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா?

ஒரு படைப்பை அச்சு அசலாகத் திருடுவதும் ,அதற்கு தனது பெயரைப் போட்டுக் கொள்வதும் நியாயமா?

இன்ஸ்பியரேஷன் என்பது வேறு, கதை, நடக்கும் இடம், பாத்திரங்கள் என்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதென்பதும் வேறு.

சுஜாதா இது போன்றவர்களை மன்னிக்கலாம், என்னால் முடியவில்லை!

யாராவது உண்மையக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்களேன்..

69 comments:

கார்க்கிபவா said...

பிழைத்து போகட்டும்.. உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.. ஒழுங்கான பதில் வரும்வரை அவரை புறக்கணிப்போம்

கார்க்கிபவா said...

மீ த ஃபர்ஸ்ட்டா?

rapp said...

me the 3RD

SurveySan said...

ஹ்ம். சுஜாதா பேர் போட்டா, ராயல்ட்டி கொடுக்க வேண்டி வரும்னு பயத்துல பண்ணியிருப்பாரோ?

ஆனா, இதை இன்ஸ்பிரேஷன் இல்லன்னு எப்படி நீங்க முடிவு பண்ணீங்கா? சீன் பை சீன் ஈ அடிச்சான் காப்பியா?
நான் அந்தக் கதைய படிச்சதில்ல, அதான் கேக்கறேன்.

கே.ஷங்கர் கிட்டயிருந்து பதில் வரும்னு நம்பரேன்.

பொய்யன் said...

இதற்கு பெயர்தான் சத்திய ஆவேசம். பாராட்டுகள் பரிசல். இவர்களை போன்ற Ôதிருட்டுÕ அறிவுஜீவிகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசிய அவசர காரியம்.

முரளிகண்ணன் said...

we will wait for his explanation.

Unknown said...

த‌வ‌று ந‌ட‌ந்திருப்ப‌து போல‌ உண‌ர்ந்த‌ உட‌னேயே மேலோட்ட‌மாக‌ குற்ற‌ம் சாட்டாம‌ல்,
ந‌ட‌ந்த‌து நிச்ச‌ய‌மாக‌ த‌ப்புதான் என உறுதிப்ப‌டுத்திக் கொள்வ‌த‌ற்காக‌
தாங்க‌ள் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் பாராட்ட‌த்த‌க்க‌வை.

கார்க்கி சொன்ன‌து போல‌ உண்மையை உர‌க்க‌ சொன்ன‌தற்கும் பாராட்டுக்க‌ள்.

நியாய‌மான‌ த‌ங்க‌ள் கோப‌த்தில் நானும் ப‌ங்கு கொள்கிறேன்.

வெண்பூ said...

அதிர்ச்சியின் உச்சம் இது பரிசல். இது குறித்து கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும். உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள்.

Unknown said...

சுஜாதாவே ஒரு காப்பி மன்னர்தானே
அவரது பல சிறுகதைகளும் ஆர்தர்.சி.கிளார்க் போன்ற பேர் வாங்கிய ஆங்கில எழுத்தாளர்களின் தழுவல்தானே ,அவரது பல நாவல்களும் ஆங்கிலத்தில் வெளியான சிறுகதைகளின் தழுவல் என்பதும் பல சிறுகதைகள் பல நாவல்களின் தழுவல் என்பதும் ஆங்கில கதைகள் படிப்போருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

அவரது பாய்ஸ் பட கதைகூட அமெரிக்கன் பய் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்

அவரது சிறுகதையை காப்பியடிப்பதில் என்ன தவறு

வெண்பூ said...

http://cablesankar.blogspot.com/2007_12_01_archive.html

Anonymous said...

தட்டிக்கேட்டிருக்கீங்க்க. என்ன விளக்கம் தர்ராருன்னு பாப்போம்

TBCD said...

பல முறை அழுத்தமாக சுஜாதாவால் சொல்லப்பட்ட மெக்சிகோ சலவைக்காரி "ஆ" நகைச்சுவைத் துணுக்கிற்கு சுஜாதா, உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...

உங்களுக்குத் தெரியும்மா...தெ.த.செ.சொ. :P

மங்களூர் சிவா said...

:((

குசும்பன் said...

வாழ்த்துக்கள் கலககாரரே!!!

எப்ப பிரிண்ட் ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்களோ அப்பயே நீங்க கலககாரர் ஆகிட்டீங்க:)))

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

வாழ்த்துக்கள் கலககாரரே!!!

எப்ப பிரிண்ட் ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்களோ அப்பயே நீங்க கலககாரர் ஆகிட்டீங்க:)))
/

ரிப்பீட்டு

வெண்பூ said...

//cheena said...
சுஜாதாவே ஒரு காப்பி மன்னர்தானே
அவரது பல சிறுகதைகளும் ஆர்தர்.சி.கிளார்க் போன்ற பேர் வாங்கிய ஆங்கில எழுத்தாளர்களின் தழுவல்தானே ,அவரது பல நாவல்களும் ஆங்கிலத்தில் வெளியான சிறுகதைகளின் தழுவல் என்பதும் பல சிறுகதைகள் பல நாவல்களின் தழுவல் என்பதும் ஆங்கில கதைகள் படிப்போருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

அவரது பாய்ஸ் பட கதைகூட அமெரிக்கன் பய் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்

அவரது சிறுகதையை காப்பியடிப்பதில் என்ன தவறு
//

வாங்க தல. உங்களத்தான் தேடிகிட்டு இருக்கோம். என்ன செஞ்சாலும் அதை சரின்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்கும்றது சரியாத்தான் போச்சி.

இப்ப பிரச்சினை சுஜாதா பண்ணினது சரியா இல்லையான‌றது இல்லை. அவரோட ஒரு கதையை காப்பி அடிச்சி தன் பேர் போட்டுகிறது சரியான்றதுதான்.

அப்புறம் "அமெரிக்கன் பை". அந்த கதையோட விமர்சனத்தை இங்க போயி பாருங்க.

http://en.wikipedia.org/wiki/American_Pie_(film)

அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் இருக்குற ஒரே ஒத்துமை பசங்க டேட்டிங் போறது மட்டும்தான். உடனே அந்த படத்தை வெச்சிதான் இந்த கதைய எழுதுனாருன்னா, தமிழ்ல வர்ற எல்லா சாமி படமும் திருவிளையாடல காப்பி அடிச்சி வருதுன்னு சொல்ற மாதிரி இருக்கு.

குசும்பன் said...

//கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா?//

பேரே பயமுறுத்துகிறது நண்பரே!அதனால் இங்கே இருந்து மீ தி எஸ்கேப்.

குசும்பன் said...

// தமிழ்ல வர்ற எல்லா சாமி படமும் //

தமிழில் சாமிபடம் வருவது ரொம்ப கம்மிங்க:(((

மலையாள டப்பிங்தான் அதிகம்:(

KARTHIK said...

சுஜாதாவும் பல மேலைநாட்டு புத்தகங்களை தமிழ்ல மொழி பெயர்த்திருக்காரு!ஆனா அதை தான் எழுதிய மாதிரி தான் காட்டியிருக்காரு.ஒரு எடத்துல கூட நன்றினோ வேறு வார்த்தைகளையோ அவரு பயன்படுத்தலை.அவருக்கொரு நியாயம் சங்கருக்கு ஒரு நியாயமா இதையெல்லாம் லூஸ்ல விடுங்க தல.

குசும்பன் said...

வெண்பூ said...
அதிர்ச்சியின் உச்சம் இது பரிசல். இது குறித்து கண்டிப்பாக எதாவது செய்தாக வேண்டும்.//

வெண்பூ கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும் ”பாஸ்” மிஸ்ஸிங்!

KARTHIK said...

// இப்ப பிரச்சினை சுஜாதா பண்ணினது சரியா இல்லையான‌றது இல்லை. அவரோட ஒரு கதையை காப்பி அடிச்சி தன் பேர் போட்டுகிறது சரியான்றதுதான்.//

சுஜாதா பண்ணியது சரியா இல்லையானு பேசவேண்டியது இல்லேன்னா.இவரு பண்ணியதையும் பேசவேண்டியதில்லை.

வெண்பூ said...

வாங்க குசும்பன்.. இங்கியும் கும்மியா??

// குசும்பன் said...
//கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா?//

பேரே பயமுறுத்துகிறது நண்பரே!அதனால் இங்கே இருந்து மீ தி எஸ்கேப்.
//

எனக்கும் அதே பயம் கொஞ்சம் அதிகமாக வருவதால் "நெக்ஸ்ட் மீட் பண்றேன்"

வெண்பூ said...

//கார்த்திக் said...
சுஜாதா பண்ணியது சரியா இல்லையானு பேசவேண்டியது இல்லேன்னா.இவரு பண்ணியதையும் பேசவேண்டியதில்லை.
//

அரசியல்வாதியா நீங்க? ஏன் ஊழல் பண்ணினிங்கன்னு கேட்டா எனக்கு முன்னால இருக்குறவன் ஊழல் பண்ணலயான்னு கேட்குறமாதிரி இருக்கு நீங்க சொல்றது.....

அப்படி பாத்தா யாரையுமே கேள்வி கேட்க முடியாது. ஏன்னா எந்த தப்பையுமே ஒருத்தர் மட்டுமே செய்யுறது இல்லை. கேள்வி கேட்டவுடனே இன்னொருத்தனும்தான் இதையே பண்ணியிருக்கான், அவனை ஏன் கேள்வி கேக்குலன்னு கேக்க ஆரம்பிச்சா...

Athisha said...

தோழர் , உங்கள் பதிவில் இவ்வளவு கோபத்தையும் ஆதங்கத்தையும் இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன்

நேற்று நாம் பேசும்போது இருந்த கனல் உங்கள் பதிவில் அதிகமாகவே இருக்கிறது .

கேபிள் சங்கர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார் எனபதை பொறுத்தே தவறு எப்படி நடந்தது என்பதை அறிய இயலும்

\\
மெக்சிகோ சலவைக்காரி "ஆ" நகைச்சுவைத் துணுக்கிற்கு சுஜாதா, உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...
\\

தோழர் புதசெவி அந்த கதை உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சாட்டில் கூறவும்..உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்

KARTHIK said...

// ஏன் ஊழல் பண்ணினிங்கன்னு கேட்டா எனக்கு முன்னால இருக்குறவன் ஊழல் பண்ணலயான்னு கேட்குறமாதிரி இருக்கு நீங்க சொல்றது..... //

அப்போ சுஜாதா ஊழவாதின்னு சொல்லவரிங்கள ?

அவரு அப்படின்னா இவரும் அவர் வழில போறது தப்பில்லை.

Indian said...

சுஜாதா கதை திருடினார் என்பவர்களெல்லாம் கொஞ்சம் ஆதாரம் please. அவஞ் சொன்னான், இவஞ் சொன்னான், மாமியா சொன்னா, மச்சான் சொன்னான் அப்படிங்கறது எல்லாம் காமெடியா இருக்கு. அமெரிக்கன் பை, பாய்ஸ் ரெண்டையும் ரசித்தவன் என்ற முறையில் சொல்வது ரெண்டுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்பதே.

குசும்பன் said...

TBCD said...
"ஆ" நகைச்சுவைத் துணுக்கிற்கு சுஜாதா, உபயம் போட்டு எழுதினதா எனக்கு நினைவே இல்லை...//

கோயிலில் இன்று சுண்டல் உபயம் திரு....., இந்த கண்ணாடி உபயம் திருமதி...... , இப்படிதானுங்க எழுதி பார்த்து இருக்கேன், மேட்டர் ஜோக்குக்கு எல்லாம் உபயம் போடுவாங்களா என்னா?

(தயவு செய்து அந்த ஜோக்கை சொல்லவும்) உபயம் போட்டாவது அல்லது உபயம் போடவிட்டாலும் பரவாயில்லை.

KARTHIK said...

// சுஜாதா கதை திருடினார் என்பவர்களெல்லாம் கொஞ்சம் ஆதாரம் please. //

எழுத்தில் திருட்டு என்பது இணையம் பரவலான பிறகு அப்பட்டாமாய்
தெரியத்தான் செய்கிறது. சுஜாதாவின் "ஆகாயம்' என்ற சிறுகதை. சுஜாதா எழுதிய
அறிவியல் புனைகதைகளிலேயே மிக அருமையான, உலகத்தரம் வாய்ந்த கதை என நான்
நினைத்துக்கொண்டிருந்த சிறுகதை. 1970களிலேயே மனிதர் இப்படி எல்லாம் யோசித்து
இருக்கிறாரே என வியந்தேன்.

இம்முறை இந்திய பயணத்தின் போது அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளரான பிலிப்
கே. டிக் (Philip K. Dick ) ன்ன் சிறுகதை தொகுப்பான "மனிதன் என்றால்?" (Human
Is?) என்ற புத்தகம் வாங்கினேன். அதில் Second Variety என்று ஒரு கதை. 1956ல்
எழுதப்பட்ட கதை. இதன் கரு, அப்படியே ஆகாயத்தில் உள்ளது. திருட்டு என சொல்ல
மாட்டேன். ஏனெனில் ஆகாயம் கதையின் களம் வேறு. ஆனால் இந்த கரு தான் "ஆகாயம்'
கதையை உலகத்தரம் வாய்ந்த கதை என என்னை எண்ண வைத்தது. அது சொந்த சரக்கு இல்லை
என்ற போது சுஜாதா கொஞ்சம் இறங்கி தான் போனார் என் மனதில். 70களில் அமெரிக்க
இலக்கிய பரிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்ற தைரியத்தில் நிகழ்ந்ததாக
இருக்கலாம் இது.
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/9f70bb129275ae24/966cf1383788912f?hl=ta#966cf1383788912f

நன்றி சித்தார்த்.

குசும்பன் said...

பதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் இது இருந்தாலும் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா? இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா? ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது?

இப்படிக்கு
சமூக ஆர்வலன்
குசும்பன்.

பரிசல்காரன் said...

@ ஆருயிர் நண்பன் குசும்பன்

//இந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா? இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா?//

அது சென்னையில் 17 ஆகஸ்ட்டில் எடுக்கப்பட்ட படம். நான், லக்கிலுக், அதிஷா, வெண்பூ, வால்பையன் எல்லாம் பேசிக் கொண்டிருந்தபோது, அப்துல்லாவிற்கு அழைப்பு வர, அவர் பேசிக்கொண்டிருந்தபோது எடுத்ததுதான்.

//ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள்//

கண்டிப்பாக அப்துல்லா அதில் இருக்கும் ஒரு நல்ல செய்தியையாவது பின்பற்றுவார் என்று எனக்குத் தெரியும்.. அவர் ரொம்ப நல்லவருங்க...

Unknown said...

இப்படி போட்டி போட்டு காப்பி அடிக்கிறீங்களே!!!!

ஆமா சுஜாதா அந்தளாவுக்கு நல்ல சமூக சீர்திருத்த கதையா எழுதி இருக்குறாரு?

ஆயில்யன் said...

//குசும்பன் said...
வாழ்த்துக்கள் கலககாரரே!!!

எப்ப பிரிண்ட் ஸ்கிரீன் எல்லாம் எடுத்து போட்டு கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டீங்களோ அப்பயே நீங்க கலககாரர் ஆகிட்டீங்க:)))//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

/குசும்பன் said...
//கேபிள் சங்கர்தான் அந்த குறும்படத்தை இயக்கிய சங்கர் நாராயணனா?//

பேரே பயமுறுத்துகிறது நண்பரே!அதனால் இங்கே இருந்து மீ தி எஸ்கேப்//

குசும்பன் இதற்கு ஏன் பயப்படறாரு ??

விசாரிச்சா ஒரு பதிவரின் பயங்கர வாக்குமூலம் ரேஞ்சுல தொடர் வரும்போல....???

:))))

ஆயில்யன் said...

//குசும்பன் said...
பதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் இது இருந்தாலும் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா? இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா? ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது?

இப்படிக்கு
சமூக ஆர்வலன்
குசும்பன்.///

ரிப்பிட்டேய்ய்ய்ய்

இப்படிக்கு
சமூக ஆர்வலனின்
நண்பன்!

ஆயில்யன் said...

சரி ஒரு கமெண்ட் போட்டா 35 ஆயிடுமாம்ல போட்டுட்டு நடையை கட்டுவோம்!

வெண்பூ said...

//இப்படிக்கு
சமூக ஆர்வலன்
குசும்பன்//

குசும்பனோட சமூக ஆர்வம், மத்தவங்க நல்லா இருக்கணும்னு அவர் நெனக்கிறது இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா இங்கே போங்க. :)

குசும்பன் said...

//கண்டிப்பாக அப்துல்லா அதில் இருக்கும் ஒரு நல்ல செய்தியையாவது பின்பற்றுவார் என்று எனக்குத் தெரியும்.. அவர் ரொம்ப நல்லவருங்க...//

பரிசல் why டென்சன்?:)) நான் சும்மாச்சுக்கு கேள்வி கேட்டா அதுக்கு சீரியஸா எல்லாம் பதில் சொல்லிக்கிட்டு என்ன இது சின்னபுள்ளதனமா!!!

*****************************
வெண்பூ said...
குசும்பனோட சமூக ஆர்வம், மத்தவங்க நல்லா இருக்கணும்னு அவர் நெனக்கிறது இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா இங்கே போங்க. :)//

மிஸ்டர் வொயிட் பிளவர் ஐ ஆம் யுவர் பிரண்டூஊஊ ஓக்கே!!!

மோதலில் ஆரம்பிக்கும் பழக்கம் காதலில் போய் முடியும் என்று S.J. சூர்யா சொல்லி இருக்கார், எங்க அந்த புள்ளைக்கு என்மேல் காதல் வந்துடபோவுதோ என்ற நல்ல என்னத்தில் சென்ஷியை மாட்டிவிட்டேன். அவரும் பாலைவனத்தில் ஒத்தையா நிக்கிறாரே என்ற ஒரு நல்லெண்ணத்தில்.

இது தப்பா!!!

வெண்பூ said...

//குசும்பன் said...
மிஸ்டர் வொயிட் பிளவர் ஐ ஆம் யுவர் பிரண்டூஊஊ ஓக்கே!!!
//

யாரு இல்லைன்னு சொன்னா?

//எங்க அந்த புள்ளைக்கு என்மேல் காதல் வந்துடபோவுதோ என்ற நல்ல என்னத்தில்//

அடப்பாவி கல்யாணம் இப்பதான் ஆச்சின்னு சொன்னாங்க.. அதுக்குள்ள இப்படியெல்லாம் கெளம்பியாச்சா? (அப்பாடா எதோ நம்மால முடிஞ்ச நல்ல காரியம், சிண்டு முடிஞ்சாச்சி)

//சென்ஷியை மாட்டிவிட்டேன். அவரும் பாலைவனத்தில் ஒத்தையா நிக்கிறாரே என்ற ஒரு நல்லெண்ணத்தில்.

இது தப்பா!!!
//

தப்புன்னு நான் சொல்லவே இல்லையே. நான் எழுதியிருக்குறத நல்லா படிச்சி பாருங்க.. ***மத்தவங்க நல்லா இருக்கணும்னு அவர் நெனக்கிறது இதெல்லாம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்னா ***

ஹா..ஹா..ஹா..

புதுகை.அப்துல்லா said...

சுத்த காவாளித்தனம்...
மொள்ளமாரித்தனம்....
பொறுக்கித்தனம்.......

புதுகை.அப்துல்லா said...

குசும்பன் said...
ஆயில்யன் said...


இந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா? இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா?
//


குசும்பன் மற்றும் ஆயில்யன் அண்ணன்களே!
அந்தப்படம் நான் கவனிக்காத நேரத்தில் பரிசல் என்னை எடுத்தது.
என் சொந்த வலைப்பக்கத்திலேயே எனது படத்தை போடாத நானா பரிசல் வலைப்பக்கத்தில் போஸ் குடுத்து போட்டோ போடச்சொல்வேன் :((
//
ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது?
//

எனது வலைத்தளத்தில் வழிப்போக்கனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என்று பதிவு இருக்கும். நேரம் கிடைத்தால் அதைப் படியுங்கள்.அதில் எனது செல்போன் பயன்பாடுகளைப் பற்றி குறிப்பிட்டு இருக்கேன்.

சந்தர் said...

நானும் ஒரு சுஜாதா வெறியன் தான். நன்றி போடவில்லை என்பதற்காக கேபிள் சங்கரின் குறும்படத்தை என்னால் தள்ளிவிட முடியவில்லை. கதை சுஜாதா என்று போட்டுவிட்டு பிரியா, கரையெல்லாம் செண்பக பூ இயக்குனர்கள் செய்த கொடுமைகளைவிட சுஜாதாவின் கதைக்கு நன்றாகவே திரைக்கதை அமைத்து கேபிள் சங்கர் இயக்கியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். இதை நாம் கேபிள் சங்கர் சுஜாதாவுக்கு செய்த சமர்ப்பணமாக ஏன் கொள்ளக்கூடாது? இவ்வளவு ஏன் நான் எழுதிய ஒரு குறுந்தொடரைக்கூட சுஜாதா எழுதியதை காபி அடித்தேன் (ஏதும் தெரியாமலேயே!) சொன்னவர்கள் உண்டு. http://baksa.blogspot.com/2007_01_01_archive.html
இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. என்கென்னவோ ஒழுங்காக பண்ணுகிறவரை இதெல்லாம் சுஜாதாவுக்கு பெருமை சோக்கிற விஷயம் என்றுதான் நினைக்கிறேன்.

யோசிப்பவர் said...

சுஜாதா காப்பியடிக்கவில்லையா என்ற கேள்விக்கு, சுஜாதாவும் காப்பியடித்தார் என்பதுதான் பதில்(உதா : ஆர்யபட்டா நாவல்- அந்தநாள் சினிமா). அதற்காக அவர் எழுதியது எல்லாமே காப்பிதான் என்று சொல்வது வடிகட்டின முட்டாள்தனம். எப்படி சுஜாதாவின் இது போன்ற திருட்டுக்களை நியாயப்படுத்த முடியாதோ, அது போலவே கே. சங்கரின் செயலையும் நியாயப்படுத்த முடியாது. சுஜாதாவும் திருடினார் என்பதால், அவரிடம் கே.சங்கர் திருடும்பொழுது கேள்வி கேட்கக்கூடாது என்பது சுத்த மடத்தனம். தவறு எங்கேயிருந்தாலும் சுட்டிக்காட்டிக் கேட்பதே நியாயம்.

லூஸ்ல விடுங்க என்பது போன்ற வெளிப்பாடுகள், நமது பொறுப்பற்ற மனோபாவத்தையே காட்டுகிறது!!:(

Bleachingpowder said...
This comment has been removed by the author.
Bleachingpowder said...

பெரியவங்க எல்லாம் கருத்து சொல்லீட்டு இருக்கீங்க. நானும் எனக்கு தோனுனத சொல்றேன்.

ஏதோ ஆர்வ கோளாறுலையோ, இல்லை சுஜாதவின் மேல் இருக்கும் ஆர்வத்திலேயோ அவர் சுஜாதா கதையை குறும்படமாக எடுத்துட்டார்.

அவரென்ன அத வெச்சு சினிமா படம் எடுத்து கோடி கோடியா சம்பாதிச்சுட்டாரா? எல்லாரும் இப்படி போட்டு அவர வறுத்தெடுக்குறீங்க.

சுஜாதா,ஜெயகாந்தனோட நாவல்கள் எல்லாம் PDF ஃபைலாக மாற்றி இலவசமாக இனையதளத்தில் கிடைகிறது. உன்மையாகவே சுஜாதா எழுத்தின் மீது மரியாதை இருந்தால் அதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுங்கள். அதையெல்லாம் விட்டு விட்டு இந்த சின்ன விசியத்தை ஏதோ பெரிய கொலை குற்றம் போல் அவரை சாடி எழுதியிருப்பது என்னமோ எனக்கு சரியாக படவில்லை.

//யாராவது உண்மையக் கண்டறிந்து நடவடிக்கை எடுங்களேன்..//

அது என்ன யாரவது உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது. நீங்கள் தானே கண்டுபிடித்தீர்கள் பரிசல்காரரே, நீங்களே நடவடிக்கை எடுங்கள்.

நாளை முதல் வேலையாக ஒரு வக்கீலை பார்த்து கோவை நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள். மாதம் இருமுறை சம்மன் வரும், அலுவலகத்தில் சொல்லி விடுப்பு எடுத்து கொண்டு நீதிமன்றம் போய் பராசக்தி சிவாஜி மாதிரி பேசி வாதாடுங்கள். வழக்கும் ஒரு பத்திருபது ஆண்டுகளில் முடிந்து அவருக்கு ஐநூறோ இல்லை ஆயிரமோ ஆபராதம் விதித்து தீர்ப்பு கொடுத்துவிடுவார்கள். சுஜாதாவின் ஆத்மாவும் சாந்தியடைந்துவிடும் :))

ஏதாச்சும் செய்யனும் பாஸ்னு ஒரு பதிவு வந்தாலும் வந்துச்சு நம்ம பதிவர்கள் எல்லாரும் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் விஜய்காந்த் மாதிரி பொங்கி எழறீங்க.

Thamira said...

உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுகள்.// ரிப்பீட்டு.!

சீனா, கார்த்திக்.. என்ன எதிர்கருத்தா? நடத்துங்க.. தனிச்சு தெரிவீங்க.! வாழ்த்துகள்!

பினாத்தல் சுரேஷ் said...

சுஜாதாவை எழுத்துத் திருடர் என்ற வலையில் தள்ளுபவர்களுக்கு சொர்க்கத்தீவு என்ற நாவலின் முன்னுரையாக அவர் எழுதி இருந்ததைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

1960களில் ஆரம்பித்த சுஜாதாவின் எடுத்தாளுகை / இன்ஸ்பிரேஷன் போன்ற விஷயங்களுக்கும் சசி காத்திருக்கிறாள் (இந்தக்கதை ஏற்கனவே பலமுறை காப்பி அடிக்கப்பட்டுவிட்டது) இன் வரிக்கு வரி காப்பியான இந்தக்குறும்படத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பது தமாஷாக இருக்கிறது. பிரபலத்தின் சுமை போல - அவர் சொல்லாமலே டபாய்த்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்குக்கு அவர் உபயம் போடவில்லை போன்ற கருத்துக்கள் :-)

அந்தக்குறும்படம் ஹெல்மட் உபயோகத்தை வலியுறுத்துவதாக இருந்தால் இப்படி ஒரு முடிவு தேவையில்லை - பிரபலமான கதையை எடுத்துக்கொண்டு நீதியை ஒட்டவைத்ததாகவே தோன்றியது. காப்பிதான் - சந்தேகமே இல்லை!

ரவி said...

சமீபமா 1966ல நீங்க எப்ப குமுதம் படிச்சீங்க ??

ஏன் இந்த கொலைவெறி ?

:)))))))))))))

புருனோ Bruno said...

//தோழர் புதசெவி அந்த கதை உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சாட்டில் கூறவும்..உங்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்//

முடிந்த அளவு டீசண்டாக கூறப்பட்ட அந்த நகைச்சுவையை இங்கு பார்க்கவும்

Anonymous said...

அண்ணே நான் இங்க ரொம்ப புதுசு . நண்பர் ஒருவர் குடுத்த இணைப்பு மூலமா இந்த பரிசல்காரனை பார்த்தேன். இன்னிக்கு தான் பஸ்ட் உங்க பரிசல்ல நீந்தினேன். அதனால இந்த வாட்டி நான் துடுப்பு போடல. ஆனா ஒன்னு மன்னிப்போம் மறப்போம். இதுதான நம்ம பண்பாடு. இத்தினி பேர் கேட்ட கேள்வி அவரு மனசு வரை போயிருந்த அதே போதும். நான் பரிசல்ல ஒரு லாங் பயணம் போகணும். வரட்டா...

புருனோ Bruno said...

//. 70களில் அமெரிக்க
இலக்கிய பரிச்சயம் இந்தியர்களுக்கு இல்லை என்ற தைரியத்தில் நிகழ்ந்ததாக
இருக்கலாம் இது. //

இருக்கலாம். இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் நான் கூறியது இங்குள்ளது

சுஜாதா காப்பி அடித்தார் என்பதால் அவர் கதையை காப்பி அடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

--

சில நாட்கள் கழித்து அந்த குறும்படத்தின் மூலமும், சுஜாதாவின் கதையின் மூலமும் ஒன்று என்று கூட தகவல் வெளிவரும் :) :)

புருனோ Bruno said...

//சுஜாதா காப்பியடிக்கவில்லையா என்ற கேள்விக்கு, சுஜாதாவும் காப்பியடித்தார் என்பதுதான் பதில்(உதா : ஆர்யபட்டா நாவல்- அந்தநாள் சினிமா). அதற்காக அவர் எழுதியது எல்லாமே காப்பிதான் என்று சொல்வது வடிகட்டின முட்டாள்தனம். எப்படி சுஜாதாவின் இது போன்ற திருட்டுக்களை நியாயப்படுத்த முடியாதோ, அது போலவே கே. சங்கரின் செயலையும் நியாயப்படுத்த முடியாது. சுஜாதாவும் திருடினார் என்பதால், அவரிடம் கே.சங்கர் திருடும்பொழுது கேள்வி கேட்கக்கூடாது என்பது சுத்த மடத்தனம். தவறு எங்கேயிருந்தாலும் சுட்டிக்காட்டிக் கேட்பதே நியாயம்.

லூஸ்ல விடுங்க என்பது போன்ற வெளிப்பாடுகள், நமது பொறுப்பற்ற மனோபாவத்தையே காட்டுகிறது!!:(//

கச்சிதமான கருத்துக்கள்.

வழிமொழிகிறேன்

பரிசல்காரன் said...

//சுஜாதாவின் கதைக்கு நன்றாகவே திரைக்கதை அமைத்து கேபிள் சங்கர் இயக்கியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.//

இதை நான் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன் சந்தர்.

சொல்லப்போனால், சங்கரின் இயக்கம்தான் என்னை அந்தக் குறும்படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. ஆரம்பித்திலேயே ஜல்லியடித்திருந்தால் (நன்றி: சுஜாதா!)பார்க்காமலேயே எஸ்கேப் ஆகியிருப்பேன்!

அச்சு அசலாக சசி காத்திருக்கிறாள் கதையை காப்பியடித்திருந்ததால் வேதனையாக இருந்தது!

கொஞசம் கதைக்களத்தை மாற்றி இதே கருவை அவர் எடுத்திருந்தால் கூடத்தேவலாம். (சங்கருக்கு அந்தத் திறமை/க்ரியேடிவிட்டி நிச்சயம் உண்டு என நம்புகிறேன்)

பரிசல்காரன் said...

//நாளை முதல் வேலையாக ஒரு வக்கீலை பார்த்து கோவை நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள். மாதம் இருமுறை சம்மன் வரும், அலுவலகத்தில் சொல்லி விடுப்பு எடுத்து கொண்டு நீதிமன்றம் போய் பராசக்தி சிவாஜி மாதிரி பேசி வாதாடுங்கள். வழக்கும் ஒரு பத்திருபது ஆண்டுகளில் முடிந்து அவருக்கு ஐநூறோ இல்லை ஆயிரமோ ஆபராதம் விதித்து தீர்ப்பு கொடுத்துவிடுவார்கள். சுஜாதாவின் ஆத்மாவும் சாந்தியடைந்துவிடும் :))

ஏதாச்சும் செய்யனும் பாஸ்னு ஒரு பதிவு வந்தாலும் வந்துச்சு நம்ம பதிவர்கள் எல்லாரும் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் விஜய்காந்த் மாதிரி பொங்கி எழறீங்க//

ப்ளீச்சிங் பவுடர்.. யோசனைக்கு நன்றி!

நெத்தியடியாகக் கூறி என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள்!

இனிமேல் எந்தத் தப்பு நடந்தாலும் கேட்குமுன் கொஞ்சம் யோசித்துவிட்டே கேட்கிறேன்!

அப்படியே தப்பாகக் கேட்டாலும் உங்களால் என் வாயைக் கழுவிக் கொள்கிறேன்!

குட்ட பீடி said...

கேபிள் சங்கர் செய்தது குற்றம் தான்.

நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய சில கேள்விகள்.

நாம் உபயோகிக்கும் விண்டோவ்ஸ் எக்ஸ்பி, காஷ்பர்ச்கை ஆண்டி வைரஸ் உள்ளிட்ட அனைத்து மென்பொருள்களும் ஒரிஜினல் தானா.?

நாம் ஒரிஜினல் DVD யில் / சினிமா தியட்டரில் மட்டும் தான் சினிமா பார்க்கிறோமா? திருட்டு DVD பக்கம் தலை வைத்து படுப்பதில்லையா?

நாம் நமது பதிவுகளில் உபயோகபடுத்தும் படங்கள் எல்லாம் நமது காப்புரிமை உள்ளவையா?

அடுத்தவர் படங்களை எடுத்து உபயோகித்தால் நாம் அந்த படங்களை எடுத்த தளங்களுக்கு link கொடுத்து நன்றி தெரிவிக்கிறோமா?

மேல் சொன்ன ஏதாவது ஒன்றில்,/ அடுத்தவர் உழைப்பை திருடும் கூட்டத்தில் நாம் இருந்தாலும் , கேபிள் சங்கரை பொதுவில் வைத்து கேள்வி கேட்க தகுதி இல்லாதவர்கள் நாம்.

Sridhar V said...

//அவரது பாய்ஸ் பட கதைகூட அமெரிக்கன் பய் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பலருக்கும் தெரியும்
//

இப்படித்தான் பல குற்றசாட்டுகள் பொத்தாம்பொதுவாக வைக்கப் படுகின்றன. அமெரிக்கன் பை போல் ஒரு நூறு ஆங்கிலப் படங்களில் காலேஜ் பசங்கள் பெண்களை நினைத்து ஏங்கும் அபத்த கதைகள் உண்டு.

கேபிள் சங்கரின் வீடியோவை பாக்கவில்லை. கதையை மாற்றி எடுக்கலாம் ஆனால் அப்பட்டமாக எடுப்பது நெருடலான விஷயம்தான்.

Kumky said...

sorry no comments due to avaal.

தமிழன்-கறுப்பி... said...

ஒண்ணும் சொல்றதுக்கில்லை...

Anonymous said...

நானும் இங்கே புதியவள். உங்கள் உமாவுக்கு பகுதி மூலம் தான் உங்கள் பதிவைத் தவறாமல் பார்க்கிறேன்.
அடுத்தவர்கள் செய்ததால் இவர் செய்ததையும் மன்னிக்கலாம்; அவர் தப்பு செய்தார் நானும் செய்யலாம்; என்ற மனோபாவங்களை விடுவோம். கண்ணில் பட்ட தவறை நயமாக சுட்டிக் காட்டியது மிகவும் நல்ல மனப்பாங்கு.
இறந்தவர்களை பற்றி எதுவும் பேசக்கூடாது என்பது பொதுவான தமிழர்களின் எண்ணம். (அவர்கள் செய்ததை நியாயப் படுத்தி அல்ல; அவர்களால் எந்த தன்னிலை விளக்கமும் தர முடியாது என்பதால்)
அதனால் அமரர் சுஜாதாவை விடுவோம்; சங்கர் விளக்கமோ மன்னிப்போ தெரிவிப்பது அவரைக் கௌரவிக்கும்.

Sundar சுந்தர் said...

//கரிகாலன் said...
த‌வ‌று ந‌ட‌ந்திருப்ப‌து போல‌ உண‌ர்ந்த‌ உட‌னேயே மேலோட்ட‌மாக‌ குற்ற‌ம் சாட்டாம‌ல்,
ந‌ட‌ந்த‌து நிச்ச‌ய‌மாக‌ த‌ப்புதான் என உறுதிப்ப‌டுத்திக் கொள்வ‌த‌ற்காக‌
தாங்க‌ள் மேற்கொண்ட‌ முய‌ற்சிக‌ள் பாராட்ட‌த்த‌க்க‌வை.

கார்க்கி சொன்ன‌து போல‌ உண்மையை உர‌க்க‌ சொன்ன‌தற்கும் பாராட்டுக்க‌ள்.
//
ரிப்பீட்டேய்!

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

//குசும்பன் said...
பதிவுக்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் இது இருந்தாலும் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த வார பதிவரில் இருக்கும் அப்துல்லா அவர்கள் செல்போனில் பேசுவது போல் போஸ் கொடுக்கிறாரா? இல்லை செல்போனில் பேசும் பொழுது எடுத்ததா? ஏன் என்றால் செல்போனின் பயன்பாட்டை குறைங்கோ என்று நீங்கதானே போனபதிவில் சொல்லி இருந்தீர்கள் அதான் ஒரு டவுட், எல்லோரும் இப்படி போஸ் கொடுக்க கிளம்பிட்டா என்ன ஆவது?

இப்படிக்கு
சமூக ஆர்வலன்
குசும்பன்.///

ரிப்பிட்டேய்ய்ய்ய்

இப்படிக்கு
சமூக ஆர்வலனின்
நண்பன்! /


இப்படிக்கு
சமூக ஆர்வலர்களின்
நண்பன்!

vall paiyen said...

அப்பட்டமாக ஒரு தவறு நடந்துள்ளது. பரிசல்காரனும் அதை மிக நாகரிகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் இங்கு வெளியாகியுள்ள பல பின்னூட்டங்கள் அந்த தவறை நியாய படுத்த முயற்சிப்பது மிக அதிர்சியாக உள்ளது. நேர்மையின் கோட்பாடுகள் நம்மிடயே சிறிது சிறிதாக மறைந்து வருவதற்கான அறிகுறியே இது. இதே ரீதியில் போனால் சாமர்த்தியமாக செய்யப்படும் தவறுகள் எல்லாம் சாதனைகளாகவே கருதப்படும்

Ramesh said...

http://pathivubothai.blogspot.com/2008/09/blog-post_07.html

நானும் நாகரிகமாக சுட்டி காட்டுகிறேன்.

narsim said...

உங்கள் ஆக்ஷனுக்கு நன்றி பரிசலாரே.. இல்லையென்றால் இன்னும் அந்த‌ குறும்ப‌ட‌ம் ப‌ல‌ர் பார்க்கும் வ‌கையில் அங்கேயே இருந்திருக்கும்..

அந்த‌ க‌தைக்கு குமுத‌ம் ஆசிரிய‌ர் எழுதிய‌ "முத‌ல் பின்னூட்ட‌ம்" தான் அவ‌ரை மேலும் மேலும் எழுத‌த் தூண்டிய‌தாக‌ சுஜாதாவே த‌ன் க‌ட்டுரையில் கூறியிருக்கிறார்.(க்ரைம் க‌தைக‌ள் தொகுப்பில்)

அறிவுச்சுர‌ண்ட‌ல் அனும‌திக்க‌ முடியாத‌து என்றால் அத‌ற்கு துணைபோவ‌தும் க‌ண்டிக்க‌த்த‌க்க‌தே..

ந‌ர்சிம்

அருண்மொழி said...

//இறந்தவர்களை பற்றி எதுவும் பேசக்கூடாது என்பது பொதுவான தமிழர்களின் எண்ணம். //

பெரியாரை பற்றி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும் அல்லவா.

நேரு பற்றி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும் அல்லவா.

வால்பையன் said...

சிவாஜியில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று ஒரு வசனம் இருக்கிறதே!
அது கிரி என்ற படத்தில் சுந்தர்.சி எழுதியது.

மத்தபடி நான் இந்த விசயத்துல கருத்து சொல்ல ஒண்ணுமில்ல

Bleachingpowder said...

//சிவாஜியில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்று ஒரு வசனம் இருக்கிறதே!
அது கிரி என்ற படத்தில் சுந்தர்.சி எழுதியது.//

வால்பையன் அது சுந்தர்.சி எழுதுனதில்லை பூபதிபாண்டியன் எழுதியது.கைப்புள்ள வசனமும் அவர் எழுதியது தான். இதற்கு அப்புறம் தான் அவர் தேவதையை கண்டேண், திருவிளையாடல் படமெல்லாம் இயக்கினார்.

வால்பையன் said...

மன்னிக்கவும்
அவர் இயக்கிய படம் அதனால் அவராகத் தான் இருக்கும் என்று நம்பி விட்டேன்.

Bleachingpowder said...

அட நீங்க வேற நானும் சுந்தர்.சி எழுதினதுதான் நெனச்சிட்டு இருந்தேன். போன மாசம் சன் டிவில பூபதி பாண்டியன் சொன்ன போது தான் எனக்கும் தெரிஞ்சது. ஆனா எதுக்கும் நீங்க நம்ம பரிசல்காரர்கிட்ட ஒரு மண்ணிப்பும், ஒரு விளக்க கடிதமும் குடுத்துறுங்க. அப்புறம் பூபதி பாண்டியன் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் பதிவ போட்டுற போறாரு :))

சு. திருநாவுக்கரசு said...

..ம்! பொதுவா திருட்டு என்பது அகௌரமில்லை..அதுவும் பிறர் கற்பனைகளை திருடுவதில் தவறே இல்லை!(:-)) சுஜாதாவிடம் எவ்வளவு திருடினாலும் தாங்கும்! அம்புட்டு விஷயம் அங்கு இருக்கு! ஆனால் அது என் கற்பனைதான் என்று சொல்லாமல் ஓடிவிட்டாரே! அதையெண்ணி மன்னித்து விடுங்கள்! # எழுத்து திருடர்கள் முன்னேற்ற சங்கம்!