Tuesday, September 16, 2008

அதிஷாவுடன் ஒரு நாள்...

ஞாயிறு காலை ஒரு திருமணத்துக்குப் போய், அங்கிருந்து அதிஷாவின் தங்கை மகள் காதுகுத்துக்குப் போவதாய் திட்டம். (இந்தத் திட்டம் கார்க்கிக்கு தெரியுமா?)

மண்டபத்தில் இருந்தபோது செந்தழல் ரவியிடமிருந்து அலைபேசி அழைப்பு. ஃபோனை எடுக்கவா, இல்லை ‘எதுவும் செய்ய வேண்டாம் பாஸ்’ என்று பேசாமல் இருப்பதா என்று குழம்பி பிறகு எடுத்து அவரை வடவள்ளியில் நிற்கச் சொல்லிவிட்டு, போய் அவரைச் சந்தித்து அழைத்துக் கொண்டு இருவருமாய் மருதமலை சென்றோம்.

போகிற வழியிலேயே “நான் எதுக்கு காதுகுத்துக்கெல்லாம் வரேன்?” என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டிருந்தார். “எனக்கெப்படித் தெரியும்? இப்ப வர்றீங்களா இல்லையா?” என்று மிரட்ட வேண்டியதாயிற்று.

நாங்கள் மருதமலையை அடைந்தபோது ‘பதிவர்கள் கூட்டத்தால் மருதமலை அதிர்ந்தது’ என்று எழுத ஆசைதான். ஆனால் எங்கள் இருவரைத்தவிர அங்கு பதிவர்கள் என்று யாருமே இல்லை. அதிஷா கூட இல்லை! கூப்பிட்டால் ‘வந்துட்டே இருக்கேன் கிருஷ்ணா’ என்றார்!

நானும் செந்தழல் ரவியும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரவி அவரது வேலையைப் பற்றி மிக சுவாரஸ்யமாய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் கழித்து அதிஷா அவரது குடும்பத்தாரோடு வந்து சேர்ந்தார். கோயிலை நோக்கிப் போகும் போது, வழியிலேயே ஒரு கரம் என் தோளைத் தொட்டது. (தமிழ்வாணன் நாவல் படிக்கற மாதிரி இருக்கா?) திரும்பினால், வடகரை வேலன். நால்வருமாய் இன்னும் கொஞ்ச நேரம் நடந்தபோது ‘ஈரவெங்காயம்’ சாமிநாதன் அவரது மனைவியோடு நின்றுகொண்டிருந்தார்.




வடகரைவேலன், அதிஷா, செந்தழல்ரவி, சாமிநாதன், பரிசல்காரன் (இதை அரபிக் ஸ்டைலில் படிக்கவும்!)

சீக்கிரம் காதுகுத்துவாங்கன்னு பார்த்தா, அதிஷாவோட அம்மா ‘மொதல்ல எல்லாரும் உக்காருங்க’ன்னு சாப்பாடு போட்டாங்க. வயிறு முட்ட சாப்பிட்டப்புறம் எங்க பதிவர் சந்திப்பு நடத்துறது? ஆளாளுக்கு கொஞ்ச நேரம் மொக்கையாப் பேசீட்டு இருந்தோம். சாமிநாதன் அவரோட மனைவிகூட சென்னை சில்க்ஸ் புதிய கிளைக்கு போகணும்ன்னு சொல்லி கிளம்ப, செந்தழல் ரவியும், அவரோட மனைவி சீக்கிரம் வரச் சொல்லியிருக்காங்கன்னு சாமிநாதன் கூடவே கார்ல போய்ட்டாரு.

அதுக்கப்புறம் அதிஷாவோட தங்கை குழந்தைகள் ஹரிணி, சிவாஷினிக்கு மொட்டை போட்டு, காது குத்தற வைபவம் நடந்தது. நானும் வடகரை வேலனும் இருந்து குழந்தைகளை வாழ்த்தினோம்.




(ஹரிணிக் குட்டியும், அதிஷாவும்)


(சிவாஷினியும் அதிஷாவும்)

அதற்குள் வடகரை வேலனுக்கு அவரது மகளிடமிருந்து மிரட்டல் வரவே, அவரும் கிளம்பிவிட்டார்.


(ரெண்டு வீட்டிலயும் சொல்லி திருஷ்டி கழிக்கணும்! என்னா அழகு!!)

‘காலையிலிருந்தே தம் அடிக்கல’ என்று புலம்பிக் கொண்டேயிருந்த அதிஷா அவரது வீட்டாரிடம் அனுமதிபெற்றுக் கொண்டு என்னோடு வந்தார். மருதமலையை விட்டு பைக்கில் இறங்கும்போதுதான் கவனித்தேன். வழியெங்கும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். அதிஷாவிடம் புலம்பியபோது அவர் சொன்னார்.....


வேண்டாம். அவருகிட்டயே கேட்டுக்கங்க.


இருவருமாக அன்னபூர்ணா சென்று சில்லி புரோட்டா சாப்பிட்டுவிட்டு (இதெல்லாம் யாருய்யா கேட்டா... பதிவெழுத மேட்டர் இல்லீன்னா இந்தக் கொடுமையெல்லாம் பண்ணக் கூடாது..) நேராக சஞ்சய் வீட்டுக்குப் போனோம்.

ஞாயிறன்று கூட பொறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்த சஞ்சய் எங்களை வரவேற்று உபசரித்தார். அவரும், அதிஷாவும் பழைய தோஸ்த் ஆகையால் நான் சும்மா அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.


(சஞ்சயும் அதிஷாவும் பின்னே ஞானும்)


அதற்குப் பிறகு என் ப்ரதர்-இன்-லா வீட்டுக்குப் போய், அங்கிருந்து அதிஷா வீட்டுப் போய் அவரை பத்திரமாக ஒப்படைத்தேன்.


(அதிஷா வீட்டில் ஹரிணி)

பி.கு: அதிஷாவோட தங்கை மகள் ஹரிணி செமயா போஸ் குடுக்குதுங்க!

29 comments:

rapp said...

me the first

rapp said...

ரெண்டாவது படத்திலும் மூணாவது படத்திலும் குழந்தைகளுக்கு முன்ன நின்ன பூச்சாண்டி யார்?:):):)
அழகான குழந்தைகள்.

rapp said...

//ரெண்டு வீட்டிலயும் சொல்லி திருஷ்டி கழிக்கணும்! என்னா அழகு!! //
ஏதாவது செய்யணும் பாஸ்!!! :):):)

பரிசல்காரன் said...

//rapp said...

ரெண்டாவது படத்திலும் மூணாவது படத்திலும் குழந்தைகளுக்கு முன்ன நின்ன பூச்சாண்டி யார்?:):):)//

காதுகுத்தற பூசாரி ஸாரி... ஆசாரி.

கார்க்கிபவா said...

இந்த திட்டத்த பத்தி என்கிட்ட சொல்லாம விட்டது உங்க திட்டம்தானே சகா?

Vijayashankar said...

I thought Adisha was a girl!

Nice pictures. Twins?

முரளிகண்ணன் said...

பரிசல், மிக இளமையாக தெரிகிறீர்கள்

Sanjai Gandhi said...

//ஞாயிறன்று கூட பொறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்த சஞ்சய் எங்களை வரவேற்று உபசரித்தார். //

இதெல்லாம் ஓவரா இல்ல?.. படுத்துட்டு டிவி பாத்துட்டு இருந்தேன்.. ஓ.. இதைத் தான் பொறுப்பான வேலைனு சொல்றிங்களோ? :(

விஜய் ஆனந்த் said...

// முரளிகண்ணன் said...
பரிசல், மிக இளமையாக தெரிகிறீர்கள் //

நோட் தி பாயிண்ட்...ஜஸ்ட் தெரியறீங்க..அவ்ளோதான்!!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

//ரெண்டு வீட்டிலயும் சொல்லி திருஷ்டி கழிக்கணும்! என்னா அழகு//


ச்சீ ச்சீ இப்படியா கொஞ்சம் கூட நானம் இல்லாமல் சொல்வது. முருகா பரிசல திருத்துப்பா....

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க... :)
அதோட அழகாவும் இருக்கீங்க... 40 வய்சுன்னா யாரும் நம்ப மாட்டாங்க... ஒரு 28,29 மாதிரி தெரியுறீங்க

Thamiz Priyan said...

தாய் மாமன் சீர் என்ன கொடுத்தீங்கன்னு சொல்லலியே?... ;))

☼ வெயிலான் said...

என்னால் தான் வரமுடியவில்லை. படங்கள் கலக்கல் பரிசல்.

// ஃபோனை எடுக்கவா, இல்லை ‘எதுவும் செய்ய வேண்டாம் பாஸ்’ என்று பேசாமல் இருப்பதா என்று குழம்பி //

இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுது :)

// அதிஷா வீட்டுக்குப் போய் அவரை பத்திரமாக ஒப்படைத்தேன்.

பத்திரமாக ஒப்படைத்தேன்-னா என்ன அர்த்தம்னு எனக்கு தெரிஞ்சாகணும் ;)

ஏதோ நம்மளால முடிஞ்சது!

வெண்பூ said...

படுபாவிங்களா!!!!

இன்னிக்கு பின்னூட்டம் கிடையாது. ஏன் திட்டுறேன்னு பரிசலுக்கு தெரியும்...

Anonymous said...

//ஃபோனை எடுக்கவா, இல்லை ‘எதுவும் செய்ய வேண்டாம் பாஸ்’ என்று பேசாமல் இருப்பதா என்று குழம்பி பிறகு எடுத்து அவரை வடவள்ளியில் நிற்கச் சொல்லிவிட்டு, போய் அவரைச் சந்தித்து அழைத்துக் கொண்டு இருவருமாய் மருதமலை சென்றோம்.//


ஒரு வாகியத்துல எத்தனை செய்திகள். யப்பா கொஞ்சம் நிதானமா எழுதுப்பா. பைக் ஓட்டுற மாதிரியே எழுதுறயே.

Kumky said...

உள்ளேன் அய்யா(ய்யய்யோ)
அம்புட்டுத்தேன்.

பரிசல்காரன் said...

//கார்க்கி said...

இந்த திட்டத்த பத்தி என்கிட்ட சொல்லாம விட்டது உங்க திட்டம்தானே சகா?//

ம்ம்ம்..

// Vijay said...

I thought Adisha was a girl!

Nice pictures. Twins?//

நீங்களுமா?

//முரளிகண்ணன் said...

பரிசல், மிக இளமையாக தெரிகிறீர்கள்//

என் கேமரா என்னை எப்பவுமே இப்படித்தான் காட்டும்!

//SanJai said...

//ஞாயிறன்று கூட பொறுப்பாய் வேலை செய்துகொண்டிருந்த சஞ்சய் எங்களை வரவேற்று உபசரித்தார். //

இதெல்லாம் ஓவரா இல்ல?.. படுத்துட்டு டிவி பாத்துட்டு இருந்தேன்.. ஓ.. இதைத் தான் பொறுப்பான வேலைனு சொல்றிங்களோ? //

அடடே.. கிண்டலில்லை. தனி வீட்டில் இருக்கும் ஒரு பேச்சிலர் ஞாயிறன்று வீட்டிலிருப்பது பொறுப்புதானே? என்ன நான் சொல்றது?

பரிசல்காரன் said...

//விஜய் ஆனந்த் said...

// முரளிகண்ணன் said...
பரிசல், மிக இளமையாக தெரிகிறீர்கள் //

நோட் தி பாயிண்ட்...ஜஸ்ட் தெரியறீங்க..அவ்ளோதான்!!!!/

வேற ஒண்ணும் திட்டத் தோணலியா??

@ விக்கி

././ச்சீ ச்சீ இப்படியா கொஞ்சம் கூட நானம் இல்லாமல் சொல்வது. முருகா பரிசல திருத்துப்பா.//

நானம்-ன்னா என்னாங்க?

//தமிழ் பிரியன் said...

நல்லா எழுதி இருக்கீங்க... :)
அதோட அழகாவும் இருக்கீங்க... 40 வய்சுன்னா யாரும் நம்ப மாட்டாங்க... ஒரு 28,29 மாதிரி தெரியுறீங்க//

40ஆ? யோவ்...

//தாய் மாமன் சீர் என்ன கொடுத்தீங்கன்னு சொல்லலியே?..//

வாங்க மாட்டேன்னுட்டாரு...

@ வெயிலான்
//பத்திரமாக ஒப்படைத்தேன்-னா என்ன அர்த்தம்னு எனக்கு தெரிஞ்சாகணும் ;)//

அவரு பழைய நினைவுகள்ல மூழ்கீட்டாரு. அப்ப்டியே எங்கினயாவது எஸ்கேப்பாகாம கொண்டு சேர்த்தேன்னேன்..

//வெண்பூ said...

படுபாவிங்களா!!!!

இன்னிக்கு பின்னூட்டம் கிடையாது. ஏன் திட்டுறேன்னு பரிசலுக்கு தெரியும்..//

ஸாரி வெண்பூ. நீங்களும் மாட்டுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.. நீங்க மாட்டினது எனக்கும் நர்சிம்முக்கும் போனஸ்!

பரிசல்காரன் said...

@ வேலண்ணாச்சி

//ஒரு வாகியத்துல எத்தனை செய்திகள். யப்பா கொஞ்சம் நிதானமா எழுதுப்பா. பைக் ஓட்டுற மாதிரியே எழுதுறயே.//

பல சமயங்கள்ல நீங்க திட்டறீங்களா.. பாராட்டறீங்களான்னே தெரியறதில்லை!

@ கும்கி

சரி!

வெண்பூ said...

நீங்க இன்னும் ஒரு ரெண்டு நாள் அது பொய்னு சொல்லாம இருந்திருந்தா நான் கிஃப்ட் வாங்கிட்டு போய் அதிஷாவை பார்த்திருப்பேன் :)))

ஆனால்... :(.... ஸாரி நர்சிம்... நிஜமாகவே உங்களை தப்பாக நினைக்க வைத்துவிட்டார் பரிசல். தயவு செய்து விளையாடும்போது இது போன்ற பொய்கள் வேண்டாமே.. சீரியஸாகவே..

சின்னப் பையன் said...

பரிசல் -> தலைக்கு என்ன டை யூஸ் பண்றீங்கன்னு சொன்னா நல்லாயிருக்கும்... நன்றி....

கோவி.கண்ணன் said...

//ஒரு வாகியத்துல எத்தனை செய்திகள். யப்பா கொஞ்சம் நிதானமா எழுதுப்பா. பைக் ஓட்டுற மாதிரியே எழுதுறயே.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்....
:)

//ஹரிணி, சிவாஷினிக்கு மொட்டை போட்டு, காது குத்தற வைபவம் நடந்தது.//

குழந்தைகள் இருவருக்கும் வாழ்த்துகள் !

Known Stranger said...

junior vikatan have a new page called blog page. Recently i read a post wrtten by பரிசல்காரன். i guess it was your post. i liked it.

narsim said...

வழக்கம்போல் கலக்கல்..

அதிஷாவுக்கு .. ஸாரி.. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!

//வெண்பூ said...
படுபாவிங்களா!!!!

இன்னிக்கு பின்னூட்டம் கிடையாது. ஏன் திட்டுறேன்னு பரிசலுக்கு தெரியும்...//


வெண்பூ ஏன் வெந்த பூவா இருக்காரு??

நர்சிம்

ஜெகதீசன் said...

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்....

வால்பையன் said...

//ரெண்டு வீட்டிலயும் சொல்லி திருஷ்டி கழிக்கணும்! என்னா அழகு!!) //

முன்னாடி இருக்குற குழந்தைக்கு சுத்தி போடலாம், பின்னாடி இருக்குற குழந்தை! தலையுல சுத்திய போடலாம்

Kumky said...

what a good desition valooooooooooo......

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

//ரெண்டு வீட்டிலயும் சொல்லி திருஷ்டி கழிக்கணும்! என்னா அழகு!!) //

முன்னாடி இருக்குற குழந்தைக்கு சுத்தி போடலாம், பின்னாடி இருக்குற குழந்தை! தலையுல சுத்திய போடலாம்
//

வால்.. பின்னாடி இருக்கற அந்த முகம் தெரியாத அம்மணிமேல உங்களுக்கு என்ன கோவம்?

வால்பையன் said...

அம்மணி மேல எனகென்ன கோபம், இத்தனைக்கும் அவங்க முகம் கூட எனக்கு தெரியல, நான் சொன்னது மிச வச்ச குழந்தை தலையில