Wednesday, September 17, 2008

வாழ்க ஜனநாயகம்!

எனது நண்பர் தங்கியிருந்த காம்பவுண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்போது எழுதுகிறேன்...

சின்ன சின்ன பத்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட். இவர் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார். ஒரு நாள் சனிக்கிழமை... இரவு ஒரு மணிக்கு இவரது வீட்டிற்கு எதிர் வரிசை வீடொன்றிலிருந்து சத்தம் வரவே வெளியே வந்து பார்த்திருக்கிறார். வடநாட்டிலிருந்து வந்து இங்கே பணிபுரியும் சில இளைஞர்களிருந்த அறையிலிருந்துதான் சத்தம். ‘தண்ணியப் போட்டுட்டு இவனுங்களுக்கு இதே வேலையாப்போச்சு’ என்று புலம்பியபடி வீட்டிற்குள் சென்றவர், கொஞ்ச நேரத்தில் ‘அலப்பறை’ அதிகமாகவே வெளியே வந்து
அவர்களின் அறையை எட்டிப் பார்த்திருக்கிறார். ஒருத்தன் மேல் இருவர் அமர்ந்து தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்த நம் நண்பருக்கு அதிர்ச்சி!

"பாதகம் செய்பவரைக் கண்டால்.." பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.. உடனே வீறுகொண்டு.. ‘ஏய்.. ஃபேமிலியெல்லாம் குடியிருக்கற காம்பவுண்ட்ல சும்மா இருக்க முடியாதா?’ அவ்வளவுதான்.. "அவனை அடிங்கடா.." என்று இவரை நோக்கி வருகிறார்கள்.. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சத்தம் அதிகமாகவே-பக்கத்து தெருவில் இருக்கும் தனக்கு தெரிந்த வார்டு உறுப்பினர் ஒருத்தருக்கு அலைபேசி அழைத்து வரச்சொன்னார்.

உடனே வந்த அவரிடமும் “ஏய்.. வந்துட்டாருடா நாட்டாமை” என்று தண்ணி பார்ட்டி இளைஞர்கள் வம்பு பேசிவிட, உடனே அவர் ரோந்து வந்து கொண்டிருந்த போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீஸ் வந்ததும்... கொஞ்ச நேர விசாரணைக்குப் பிறகு ‘தண்ணி’யடித்திருந்த இளைஞர்களை ஜீப்பில்
ஏற்றிவிட்டு...


"யாருப்பா கம்ப்ளைய்ண்ட் பண்ணினது?"

உடனே சுதாரித்த வார்டு உறுப்பினர் நமது நண்பரை அழைத்து..

"சொல்லுப்பா.. என்ன நடந்தது?"

நம்ம ஆளு பாரதியார் வெறியன் வேறயா... ‘ஆஹா.. சமூகத்துக்கு ஒரு நல்லது செய்யறோம்’ என்று தன் மனதில் இருந்ததெல்லாம் கொட்டுகிறார்.

"வாரா வாரம் இதே கூத்துதான் சார். வாரா வாரம் சனி, ஞாயிறுல தண்ணி போட்டுட்டு ரகளை பண்றது, கேமரா செல்ல வெச்சுட்டு வெளில உட்கார்ந்து போற வர்றவங்களை படம் புடிக்கறது வேற..-ன்னு இவங்க பண்ற அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்ல சார்.."

"சரி தம்பி, நீ என்ன பண்ற.. ஹவுஸ் ஓனரையும் கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா"


மணி இரவு இரண்டு! அந்த நேரத்தில் ஹவுஸ் ஓனரை எழுப்பி, அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு போகிறார்.

விடிகாலை நான்கு மணிவரை நடந்த பஞ்சாயத்து.. ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்கிறது. (அதாவது நம்ம ஹவுஸ் ஓனரிடம் ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள்!)

உடனே நமது நண்பர்..

"நாங்க கம்ப்ளைன்ட் பண்ண வந்தோம், நாங்க ஏன் பணம் குடுக்கணும்?"

"ஆங்? என்னப்பா தம்பி என்னமோ கேக்குறாரு?" என்று போலிஸ் கேட்டதும் பதறுகிறார் ஹவுஸ் ஓனர்..

"சும்மா இருப்பா.. நான் அந்த ஏரியால நிம்மதியா இருக்க வேண்டாமா? சும்மா தூங்கிட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்து மாட்டிவிட்டுட்டு, கேள்வி வேற கேட்குற..." என்று நம் நண்பரை அதட்டி விட்டு.. போலீசிடம்..

"அவ்வளவு பணமில்ல சார் இப்போ.."

"பரவாயில்ல.. நம்ம தம்பி இருக்காரில்ல.. இவர்ட்ட நாளைக்கு குடுத்து விடுங்க.." (நம்மாளுதான்!)

வெளியே வந்த போது தான் நம்ம நண்பருக்கு தெரிந்திருக்கிறது.. யார் மீது கம்ப்ளைய்ண்ட் பண்ணினாரோ அந்த இளைஞர்கள் ஏற்கனவே பேரம் படிந்து அறைக்கு போய்விட்டார்கள்!

"என்ன கொடுமை சார் இது?" என்று ஹவுஸ் ஓனரைப் பார்த்து கேட்டவருக்கு அடுத்த கொடுமை காத்திருக்கிறது..

"இந்தா ஐநூறு ரூபா.. நாளைக்கு வந்து குடுத்துடு"-என்கிறார் ஹவுஸ் ஓனர்.

"ஏன் சார்.. பணம் வெச்சிருக்கீங்கள்ல? குடுத்திருக்க வேண்டியதுதானே?"

"மூடிட்டு வா. உனக்கு அதெல்லாம் தெரியாது.."

அடுத்த நாள்.. ஞாயிறு..

காலை ஆறு மணிக்குதான் படுத்தாலும், வேறு வழியில்லாமல் ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்து (அந்த ‘அலப்பறை’ இளைஞர்கள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க..) ஸ்டேஷன் போய்.. பல குற்றவாளிகளுக்கு நடுவே.. சங்கடப்பட்டவாறே நின்று.. பேரம் பேசி காசைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்!

திரும்பி ரூமுக்கு வந்த போது.. அந்த இளைஞர்கள் சண்டே ஸ்பெஷல் மதிய உணவுக்காக.. சுதி ஏற்றிக்கொண்டிருந்தார்களாம்!

வாழ்க ஜனநாயகம்!

பின் குறிப்பு: வேலை அதிகமென்றால் மீள்பதிவன்றி வேறு வழியில்லை!

25 comments:

லக்கிலுக் said...

:-)))))))

பரிசல்காரன் said...

பரஸ்பர சொறிதலுக்கு நன்றி லக்கி!

Saminathan said...

இதெல்லாம் சுண்டைக்கா மேட்டர்...

இதவிட பெரிய மேட்டர் எல்லாம் நேர்ல சொல்றேன்...

ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜமப்பா...

விஜய் ஆனந்த் said...

;-)))...

சிம்பா said...

வழிமுறை 1:
கண்ணியமான காவல் துறை கிட்ட போறதுக்கு பதிலா, வீட்டு உரிமையாளரை பிடிதித்து ரெண்டு கும்மு கும்முதல்.

வழிமுறை 2:
சத்தமில்லாமல் வேறு இடம் பார்ப்பது. (துஷ்டனை கண்டால் தூர ஓடு).

வெண்பூ said...

படிக்க ஆரம்பிச்ச உடனே, இது ஏற்கனவே எங்கியோ படிச்ச மாதிரி இருக்கே. பரிசலும் சுட ஆரம்பிச்சிட்டாரான்னு நெனச்சேன். அப்புறம்தான் ஞாபகம் வந்தது இது உங்க பதிவுலயே படிச்சதுன்னு.

கடைசியில கன்ஃபர்ம் ஆனது இதை படிச்சப்புறம்தான். :)))
//பின் குறிப்பு: வேலை அதிகமென்றால் மீள்பதிவன்றி வேறு வழியில்லை!//

****

உண்மைதான். நம்ம ஊர் போலீசுக்கு ரவுடிகளும் பொறுக்கிகளும் பயப்படுவதைவிட டீசன்டான ஆட்கள்தான் அதிகம் பயப்படுகிறோம்.. :(

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
பரஸ்பர சொறிதலுக்கு நன்றி லக்கி!
//

ஹி..ஹி..ஹி...

கார்க்கிபவா said...

நிஜமாவா சொல்றீங்க?இதுக்கு கொரில்லா முறைதான் சிற‌ந்தது.. வெளியே கதவை பூட்டி விட வேண்டும்...


அப்புறம் பரிசல், ஏதோ நமீதா பத்தி பின்னூட்டமிட்டீங்க.. எனக்கு புரியல சகா.. கொஞ்சம் விளக்குங்களேன்.

லக்கிலுக் said...

தோழர் பரிசல்!

உடனடியாக ‘பொய் சொல்லப் போறோம்' படம் பார்க்கவும்! :-)

சென்ஷி said...

//ஜனநாயகத்துல இதெல்லாம் சகஜமப்பா...//

ரிப்பீட்டே :)

பரிசல்காரன் said...

//வெண்பூ said...

படிக்க ஆரம்பிச்ச உடனே, இது ஏற்கனவே எங்கியோ படிச்ச மாதிரி இருக்கே. பரிசலும் சுட ஆரம்பிச்சிட்டாரான்னு நெனச்சேன். அப்புறம்தான் ஞாபகம் வந்தது இது உங்க பதிவுலயே படிச்சதுன்னு.//

நான் எழுதி 0 பின்னூட்டம் வந்த பதிவு இது!

narsim said...

அந்த போலிஸ்லாம் விஜயகாந்த் படமோ இல்லன்னா நம்ம தலயோட நாயகனோ இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்

நர்சிம்

rapp said...

//அந்த போலிஸ்லாம் நம்ம தலயோட நாயகனோ இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்//

ரிப்பீட்டே :)

Thamira said...

அறிவிப்பு :
ரெண்டு நாளா பயங்கர பிஸி, யாருக்கும் பின்னூட்டம் போட நேரம் கிடைக்கல. கிடைச்ச கேப்பிலயும் ஒரு பதிவுதான் போட முடிஞ்சுது. இப்பவும் அவசரமா ஹைதராபாத் கிளம்பிகினுருக்கேன். சனிக்கிழமைதான் வருவேன். ஆகவே மேலும் இரண்டு நாட்களுக்கு ஈவினிங் கும்மிக்கு வரமுடியாது. பகலில் லேசா டச் பண்ணிக்குவேன்.

Thamira said...

நானும் அப்படியே ஒரு மீள்பதிவு போட்டுட்டு போகவா?

முரளிகண்ணன் said...

:-))))))))))))

பரிசல்காரன் said...

//தாமிரா said...

நானும் அப்படியே ஒரு மீள்பதிவு போட்டுட்டு போகவா//

ஆமா. என்னோட இந்தவாரப் பதிவர் நீங்க. இங்கிருந்து க்ளிக்கி வர்றவங்களை ஏமாத்தலாமா?

வர்றவரை டெய்லி ஒண்ணு பதிவுல வர்ற மாதிரி, போஸ்ட் ஆப்ஷன் போட்டுட்டு போங்க!

கார்க்கிபவா said...

இருக்கிங்களா சகா?

வால்பையன் said...

சொந்த கதையை சோக கதை போல் சொல்லும் பழக்கம் உங்களுக்கும் தொத்தி கொண்டதா

பரிசல்காரன் said...

//வால்பையன் said...

சொந்த கதையை சோக கதை போல் சொல்லும் பழக்கம் உங்களுக்கும் தொத்தி கொண்டதா//

இது என் கதை அல்ல. என் நண்பன் சௌந்தருக்கு நேர்ந்தது!

Kumky said...

இந்தியா எனது நாடு. மேலும் இந்தி"யர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்.மேலும் மேலும் இந்தியா ஒரு சனநாயக நாடு.(சனநாயகம் மீன்ஸ்- எது வேண்டுமானாலும் நடக்கலாம்)வலிவுள்ளவன்(மட்டுமே)பிழைப்பான்..
(பயமாயிருக்குங்க சார்.. இதுக்கு ஏதும் dogs கமெண்ட் இன்னும் வரலியே?)

Anonymous said...

பரிசல்,

நல்லா இருக்கு.

நல்லா இருக்கு.

புதுகை.அப்துல்லா said...

அண்ணே வேலை ரொம்ப அதிகமாயிருச்சு. இப்பல்லாம் கம்பெனி ரொம்ப செட்டுப் போச்சு. வேலையெல்லாம் பார்க்க சொல்லுறாய்ங்க. அதுனால ஓரு ரெண்டு மூணு நாளைக்கு நம்பள ரொம்ப பார்க்கமுடியாது. பொழச்சுப்போங்க :))

Syam said...

நல்லா சொல்றீங்க சாமி டீட்டைலு...சம்பளம் இல்லாம வேலை செய்யற போலீசுக்கு இந்த மாதிரி கிடைக்கற துட்ட விட்டா குடும்பம் நடத்த வேண்டாம்...

ees said...

/// //வால்பையன் said...

சொந்த கதையை சோக கதை போல் சொல்லும் பழக்கம் உங்களுக்கும் தொத்தி கொண்டதா//

இது என் கதை அல்ல. என் நண்பன் சௌந்தருக்கு நேர்ந்தது! ////

என்ன தல, இந்த டிஸ்கி [ அப்டினா என்ன ?] நம்ம பதிவுல பாத்தது மாதிரி இருக்கே ??