Friday, October 28, 2011

சவால் சிறுகதை - நீங்க எழுதிட்டீங்களா?

வால் சிறுகதைப் போட்டி - 2011 கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் திங்கள் (அக்.31) இரவு 12 மணி.

கடினமான சவால், குறைந்த நாட்கள் என இருப்பினும் ஆர்வத்தோடு கலந்து கொண்டவர்களின் 40க்கும் மேற்பட்ட கதைகள் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


போட்டி குறித்த பதிவுகள்:



சவாலில் கலந்து கொண்ட கதைகளின் தொகுப்புக்கு:



நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சவாலில் வெல்லுங்கள்!

.

Monday, October 10, 2011

சவால் சிறுகதைப் போட்டி - ஒரு விளக்கம்

ன்புக்குரிய இணைய நண்பர்களே..

சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ‘சவால் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதைகள் வரத்துவங்கியுள்ளன. யுடான்ஸ் திரட்டியின் இந்தப் பக்கத்தில் கோர்க்கப்பட்டுள்ள கதைகளை ஒரே இடத்தில் வாசகர்கள் காணலாம். மகிழ்வாக உணரும் இந்தத் தருணத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

மெயிலில் சில நண்பர்கள் போட்டிக்கான சவால் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். போட்டிக்கான சவாலாக கீழ்க்கண்ட படம் தரப்பட்டுள்ளதை அறிவீர்கள்.


போட்டிக்கான அறிவிப்புகள் அனைத்திலும்,



"இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.” - என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மெயிலில் வரும் நண்பர்கள், அதில் உள்ள துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகள் மட்டும் கதையில் வந்தால் போதுமா என்று கேட்கிறார்கள். இதையே போட்டிக்கு வந்த சில கதைகளிலும் பார்க்கமுடிகிறது.

ஃபோட்டோவில் உள்ள நிகழ்வு - ஒரு செல்போனையும், மேஜையில் கிடக்கும் இரண்டு குறிப்புகள் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுத்தாள்களையும் ஒரு நபர் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் அவற்றைக் கவனிக்கும் வேளையில் அவரது ஃபோனில் விஷ்ணு - இன்ஃபார்மர் என்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது. இந்த நிகழ்வு கதையில் வரவேண்டும் என்பதே சவால். இதை எந்த அளவுக்கு கதையோடு மிகச்சரியாக பொருத்தமுடியும் என்பது உங்களின் திறமை.



துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் பயன்படுத்தி எழுதப்பட்ட கதைகள் போட்டியிலிருந்து நீக்கப்படமாட்டாது. சவாலின் பொருத்தம், புதுமை, கதை நடை, மொழி, சுவாரசியம் என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் நடுவர்கள் கதைகளை மதிப்பிட இருக்கிறார்கள். ஆகவே ’சவாலின் பொருத்தம்’ என்ற ஒரு வகையில் உங்கள் கதைகளுக்குத் தரப்படும் மதிப்பு வித்தியாசப்படலாம். அவ்வளவே.!

ஆயினும் இந்தப் புகைப்படத்துக்கு துளியளவும் சம்பந்தம் இல்லாத கதைகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.

சென்ற ஆண்டு போட்டியில் தரப்பட்ட முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் தரப்பட்ட சவால் குறிப்புகளை, துவக்கத்தில் ‘மிகக் கடினமானவை’ என்று எண்ணினோம். ஆனால் அதைப் பயன்படுத்தி எத்தனை விதமான கதைக்களன்களில் நண்பர்கள் கலக்கினார்கள் என்பது ஆச்சரியம். போட்டிக்கு வந்த கதைகளின் எண்ணிக்கை 84. அதனால் ஏற்பட்ட உந்துதலே இந்த வித்தியாசமான சவாலைத் தரக் காரணமாக அமைந்தது. நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு ‘இப்படியான சந்தேகங்கள் எழுகின்றன, சவால் குறித்து என்ன எண்ணுகிறீர்கள்’ என்று கேட்டபோது சிரித்துவிட்டு, ‘மேலோட்டமாக பார்த்தால் சவால் கடினமானதாகவும், ஒரே மாதிரியான தளத்தில் எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தையும் தருவது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல..’ என்று எழுத வாய்ப்பிருக்கக்கூடிய 5-6 தளங்களை அந்த நிமிடத்திலேயே அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது. அதில் ஒரு நகைச்சுவைத் தளமும் இருந்தது இன்னும் சுவாரசியம். பேசும்போது டக்கென அவர் ‘அந்த ஃபோனை வெச்சுட்டிருக்கறது விஷ்ணு. அவர் யாருக்கோ அனுப்ப ரெண்டு துண்டுச் சீட்டுகளை ரெடி செய்து கொண்டிருக்கும்போது அவருக்கே, அவரோட தொலைஞ்சு போன ஃபோன்ல இருந்து கால் வருது’ன்னு கற்பனை பண்ணினா அதுகூட ஒரு புதுத் தளம்தான்’ என்றார்.

ஆக.. கற்பனையும் க்ரியேட்டிவிட்டியும் இருக்கும் வரை சவால் என்று வந்துவிட்டால் எதுவும் சுலபம்தான்.

உங்களிடமிருந்து ஆச்சர்யங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மீண்டும் வாழ்த்துகள்!

நட்புடன்
பரிசல்காரன் & ஆதி

.