tag:blogger.com,1999:blog-71283982119417113012024-02-19T08:15:10.216+05:30பரிசல் கிருஷ்ணா பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger593125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13349520346353716202020-03-26T14:28:00.000+05:302020-03-26T14:36:00.549+05:30இந்த நாள் இப்படி விடிந்தது
26 ஜுலை 2016
’அந்த புத்தகத்தை எப்ப வாங்கிக்கலாம்?’ - சுரேகா நேற்றிரவு அழைத்தபோது எப்படிக் குடுக்கலாம் என்று பேசி இன்று காலை மெரினாவில் வந்து வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்தோம். காலை அவனே அழைத்தான். நான் மேன்ஷனை விட்டு இறங்கினேன். கையில் அவருக்குக் கொடுக்க வேண்டிய புத்தகமும், சி.ஏ.பாலனின் தூக்குமர நிழலில் - ம் இருந்தது.
வெளியே வானம் மெதுவாக தன் தூறலைத் துவங்கியிருந்தது. புத்தகத்தை மறைத்துக் கொண்டே நடந்தேன். மேன்ஷனிலிருந்து இறங்கி வலது புறம் திரும்பி, இடது வலதாய் திரும்பினால் சேப்பாக்கம் ஸ்டேடியம் சாலை வந்தது. இப்போது தூறல் இன்னும் வலுவாக ஆரம்பிக்கவே ‘நீ ஸ்டேடியம் முன்னாடி வந்துடு’ என்றேன் சுரேகாவிடம்.
நான் நடக்கவும் அவன் வரவும்.. இருவருமாய் அவன் பைக்கில் ரத்னா கஃபே வந்தோம்.
காஃபி. அரட்டை. பகிர்தல்.
‘இங்கதான் பிரபஞ்சன் அடிக்கடி வருவாராம். காலச்சுவடுல தேவிபாரதி ஒரு கதை எழுதிருப்பார்.. கழைக்கூத்தாடியின் இசை-ன்னு. அதுல படிச்சேன்’ என்றேன்.
காஃபியை முடித்துவிட்டு வெளியே வந்து நின்றும் அரட்டை தொடர்ந்தது. இந்த நாடகங்களிலெல்லாம் வருமே.. ‘அதோ.. அவரே வந்துட்டாரே’ என்று. அதுபோல இருந்தது கொஞ்ச நேரத்தில் தோளில் தொங்கும் பையுடன் பிரபஞ்சன் வந்தபோது.
’அடேய்! இப்பத்தாண்டா சொன்ன?’ என்றான் சுரேகா.
பிரபஞ்சன் நேராக உள்ளே சென்றார்.
‘இன்னொரு காஃபி அவர்கூட குடிப்போமா?’
உற்சாகமாக உள்ளே போனோம்.
‘சார்.. நான் பரிசல்.. இவர் சுரேகா’
அறிமுகமும் அதைத் தொடர்ந்து பல பகிர்தல்களும் நடந்தன. பெயர்களைப் பற்றிய பேச்சு வந்தது.
‘இது வானம்பாடிகள்ல எனக்கு வெச்ச பேரு. பாலசுப்ரமணியத்துக்கு சிற்பி. இன்னொருத்தருக்கு புவியரசு. எனக்கு பிரபஞ்சன்’
தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகவே பீட்டர்ஸ் காலனி வீட்டில் இருந்து வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் சொன்னார்.
‘மித்தலாஜிக்கல் நாவல்தான். ஒரு ராஜா திடீர்னு பெண்ணா மாறிடறான். அங்க அவனுக்கு - அதாவது - அவளுக்கு ஒரு காதலன் செட் ஆகறான்.. அவனே மறுபடி ஆணா ஆகறப்ப அரண்மனைல ராணிகூட இருக்கான். இப்டி ஒரு மாசம்.. அப்டி ஒரு மாசம்.. அப்டி போகுது கதை. ப்ளாட்ஃபார்ம்ல 50 காசு புக்ல ஒருவரிய படிச்சப்ப தோணின கரு’
வெளியே வந்தோம்.
’எழுத்தாளனா இருக்கறதுல இப்ப பொருளாதாரம் ரொம்ப முக்கியத்துவம் வகிக்குது. என் வீட்ல என்னைக் கேள்வி கேட்காம இருக்கறதால போய்ட்டிருக்கு.. ‘
‘ஆமா சார்.. நாமெல்லாம் செல்லம்மாக்களால்தான் வாழறோம்’
’உண்மைதான்.. நான் வேலைக்குன்னு போகல. இப்டியே படிப்பு, எழுத்துன்னு இருந்துட்டேன். குமுதம், விகடன்ல எல்லாம் கொஞ்சநாள் வேலை பார்த்தேன். ஆனா அது எனக்கு ஒத்துவரலை’
‘விகடன்ல வேலை பார்த்தீங்களா?’
‘ஆமாமா.. பாலசுப்ரமணியம் எனக்கு பழக்கம். அவர் 7.30க்க்கு வந்தார்னா.. நான் 7.45க்கு உள்ள இருப்பேன். நாந்தான் மொதலா போவேன். கதைகளைப் படிச்சு அதைப் பத்தி பேசிப்போம். அதான் எனக்கு முக்கியமான வேலை. அவர் மொதல்லயே சொன்னார்.. ‘பிரபஞ்சன்.. நீங்க வெளில இருந்தே வேலை பார்க்கலாமே.. உள்ள இருந்தா உங்களுக்கு சில சங்கடங்கள் வரக்கூடும். உங்களுக்கும் - இன்னொருத்தர் பேர் சொல்லி - அவருக்கும் பிரச்னை வரும்.. அப்டி வந்தா நான் அவங்க பக்கம்தான் நிப்பேன். ஏன்னா அவங்க என்னை நம்பி இருக்காங்க’ன்னார்.”
நாங்கள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். ‘யார் அவர்’ என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல் எங்களால் அவர் சொல்கிற அடுத்த எந்த விஷயத்துக்கும் மனம் கொடுத்துக் கேட்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
மெதுவாக சிரித்தவர் அந்த ‘அவர்’ பெயர் சொன்னார்: ‘......... ஆனா கடைசில பாலு சொன்ன மாதிரிதான் ஆச்சு’
‘சினிமா பார்த்தா டிக்கெட் குடுத்து காசு வாங்கிக்கணும். ஒரு சினிமா பார்த்துட்டு டிக்கெட்டை தொலைச்சுட்டேன். நானும் விட்டுட்டேன். வீயெஸ்வி எனக்கு சிறந்த நண்பர். அவர் டெஸ்க்ல இருந்து சத்தமா டிக்கெட் கேட்டார். நான் தொலைச்சுட்டதா சொல்லி.., விடுங்கன்னுட்டேன். வீயெஸ்வி எனக்கு நல்லது பண்ண, ’அவர்’கிட்ட போய் ‘டிக்கெட்டை தொலைச்சுட்டார்.. பணம் குடுத்துடலாமான்னு கேட்டிருக்கார். உடனே ’அவர்’ அதெல்லாம் முடியாதுன்னு, அவர் கேபின்லேர்ந்து என் டெஸ்குக்கு வந்து அதெப்படி தொலைக்கலாம்னு ஆரம்பிச்சு..’
‘நீங்கதான் கேட்கவேல்லியே..’
‘ஆமா.. ஆனா அவங்க அப்டித்தானே ஆரம்பிப்பாங்க. அது எங்கங்கயோ போய்.. ப்ச். விடுங்க’
அப்போது அங்கு கவின்மலர் வந்தார்.
அவருடன் மீண்டும் ஒரு காஃபிக்கு பிரபஞ்சன் உள்ளே போக, ‘நாங்க ஏற்கனவே ரெண்டு ஆச்சு சார். கிளம்பறோம்’ என்று நின்றுகொண்டிருந்தோம்.
பேசிக்கொண்டிருக்கையில், ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் வந்தார். பைக்கை கடைக்கு நேராக நிறுத்தி இறங்கினார். முன்னே வந்த ஒரு மினிடோர் லோடு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தச்சொன்னார்.
அந்த வண்டி, இடதுபுறம் திரும்பி ஜாம்பஜார் ரோட்டில் நின்றது. இவர் பின்னாடியே போனார்.
’சரி.. போலாம்’ என்று சுரேகா சொல்லி, நடக்க.. நான் தொடர்ந்தேன். டிராஃபிக் கான்ஸ்டபிள் பைக்கை ஒட்டி நடந்தபோது கீழே என்னமோ கிடந்ததைப் பார்த்தேன்.
நூறு ரூபாய்.
அதன் மடிப்பே அது டிராஃபிக் கான்ஸ்டபிளின் பாக்கெட்டில் இருந்ததைச் சொன்னது. சரியாக இல்லாமல், வாங்கியதும் உள்ளங்கைக்குள் மடக்கிச் சுருட்டி யாரோ நீட்ட, வாங்கி அவசரத்தில் உள்ளே வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவரிடம் இருக்கப் பிடிக்காமல் அது வெளியே வந்து விழுந்திருக்கிறது.
‘இன்னைக்கு இது உனக்குக் கெடைக்கணும்னு இருந்திருக்கு’ என்றான் சுரேகா.
அதை எடுத்து.. கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்த நான் கடைக்குள்ளே பார்த்தேன்.
ஹோட்டலின் யூனிஃபார்முடன் இருந்த ஒரு சிறுமி கடையில் போர்டை வைத்து ‘இன்றைய ஸ்பெஷல்’ என்று முத்துமுத்தாக எழுதிக்கொண்டிருந்தார்.
நேரே போய் அவரிடம் கொடுத்தேன். ‘என்னுதெல்லாம் இல்லைம்மா. கீழ கெடந்தது. நீ வெச்சுக்கோ’
வெளியே வந்தபோது சுரேகா என்னைக் கட்டிப்பிடித்து ‘நல்ல காரியம் பண்ணடா’ என்றான்.
கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்க ‘என்ன யோசனை’ என்றான்.
‘இல்லடா... அந்த நோட்டோட டிராவலை நெனைச்சேன்’
வெளியே வந்து பிரபஞ்சனும், கவின்மலரும் ‘இன்னும் போலயா’ என்றார்கள். அவர்களின் இந்தச் சம்பவத்தைச் சொன்னதும் ‘அந்தப் பணத்துக்கே கான்ஸ்டபிள்கிட்ட இருக்கறது பிடிக்கலை. அந்தக் கோணத்துல எழுதுங்க’ என்றார்.
எழுதணும் என்று நினைத்தேன். சொன்னேன். எழுதுவேனா என்று தெரியவில்லை :-)
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-28284663966845190462019-04-11T14:10:00.000+05:302019-04-11T15:15:54.559+05:30ஆகவே மகாஜனங்களே....
உடுமலைப்பேட்டையில் தளிரோடு நூலகத்துக்கு அருகே உள்ள குட்டை விநாயகர் கோயிலுக்கு எதிரே உள்ள செட்டியார் மசால் பொரிக்கடை இப்பொழுதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பள்ளி நாட்களில் அங்கு செல்வதென்றால் அலாதி ப்ரியம். சினிமாப் பாட்டுப்புத்தகங்கள் பலவும் அங்கு வாங்கியவைதான். பொரி அத்தனை காரசாரமாக இருக்கும். இதை எழுதும்போதே அந்த மசால்பொரியின் நெடி உணர்கிற அளவுக்குப் பிடிக்கும். பள்ளி முடிந்து நண்பர்களோடு கிட்டத்தட்ட தினமும் செல்வதுண்டு. இரண்டு தட்டவடைக்கு நடுவே மசாலை வைத்துத் தருவார். பொரிக்குப் பிறகு அதையும் ஒன்றிரண்டு சாப்பிட்டுவிட்டு, ஒரு தேங்காய் பருபியும் சாப்பிட்டால்... வ்வாவ் என்றிருக்கும். மசால் பொரி, பூண்டுப்பொரி, காரப்பொரி என்று விதவிதமாக இருக்கும்.
அதேபோல, திருப்பூரில் சின்னக்கரை லீஷார்க்கில் பணிபுரிகையில் பல்லடம் ரோடு - சின்னக்கரை கார்னரில் ஒரு வடைக் கடை. மனைவி, குழந்தைகளோடு தள்ளுவண்டியில் வடை போட்டு விற்பார். பருப்பு வடை 50 காசு. 50 ரூவாய்க்கெல்லாம் வாங்கிக்கொண்டு ஆஃபீஸ் முழுக்க சாப்பிடுவோம். பின்னொரு நாள் அவர் ‘நாளைல இருந்து இருக்க மாட்டேன் தம்பி. சொந்த ஊருக்குப் போறேன்’ என்றார். அப்போது அவர் சொன்ன அவரின் கதை, எனக்கு பெரியதொரு வாழ்க்கைப் பாடம். அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
பிறகு கொஞ்ச கொஞ்சமாய் வடநாட்டவர்களின் புழக்கம் அதிகரிக்க, இவையெல்லாம் அருகிவிட்டன. அந்த மசால்பொரி என்கிற சமாச்சாரம் அன்றைய சுவையில் இல்லாமல் கேரட், அது இது என்று போட்டு சவசவ என்று ஏதோ தருகிறார்கள். வடை என்கிற ஐட்டம் ஏதோ பெரிய பெரிய ஹோட்டல்களில் ஒண்ணு 20 ருவா, 30 ரூவா என்று அலங்கரித்துத் தருகிறார்கள். எங்கு பார்த்தாலும் பானிபூரி, பேல்பூரிதான். எங்காவது தேடித்தேடித்தான் வடை, பொரி சமாச்சாரங்கள் கிடைக்கின்றன.
`எக்ஸ்பிரஸ் அவென்யூ’வில் ‘Goodness Of Arokya’ என்று ஆரோக்யாவின் ஃபாஸ்ட் ஃபுட் அவுட்லெட் ஒன்று உள்ளது. காபி இருக்கா என்றால் ‘காபச்சீனோ’ என்று போர்டைக் காட்டுகிறார்கள். ‘ஏன்யா உங்க டேக் லைனே ‘நலம் அன்புடன் நமது கிராமங்களிலிருந்து..’ கிராமங்களிலிருந்து எங்கடா காபச்சீனோலாம் வருது?” என்று கேட்டால் நஹி மாலும் நஹி மாலும் என்றுதான் பதில் வரும்.
சென்னையில் திருவல்லிக்கேணி மசூதிக்கு எதிரே ஒரு தள்ளுவண்டியில் மசால் வடை, போண்டா எல்லாம் குட்டிக்குட்டி சைஸில் கிடைக்கிறது. சரக்குக்கு செம சைடிஷ். மற்றபடி தெருவுக்குத் தெரு பானிபூரி, சமோசாக்கள்தான்.
சினிமா தியேட்டர்களிலும் இந்த வடக்கத்திய உணவு நொறுக்குகள் எல்லாம் கிடைக்கும். வடையோ பஜ்ஜியோ கிடைக்காது. வடை பஜ்ஜியே இல்லை என்ற பிறகு, மசால் பொரியெல்லாம்.. ம்ஹும்!
வடக்கத்தியர்கள் இந்த பானிபூரி, பேல்பூரியெல்லாம் விற்றது ஓகே. அவர்கள் வந்ததும் நம்ம ஆட்களின் விற்பனை குறைந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் அவர்கள் ஆக்ரமித்துக்கொண்டதும்தான் கொடுமை.
ஆகவே, தயவு செய்து பிஜேபிக்கு ஓட்டுப்போடாதீர்கள்!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47544683840618717422018-11-04T15:09:00.003+05:302018-11-04T15:13:27.568+05:30கதை... திரை(மறை)கதை... டைரக்ஷன்!
"இந்த இடத்துல இண்டர்வெல் விடறோம் சார்”
பிரபல தயாரிப்பாளர் வேணுவிடம் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அஷோக் ராஜாவின் அலைபேசி ஒலித்தது. அதை சைலண்ட் செய்துவிட்டுத் தொடர்ந்தான்.
“நீங்க சொன்ன மாதிரி, ஸ்டார்ட்டிங்ல வெச்சிருந்த சீனை, இப்ப இண்டர்வெல்லுக்கு அப்பறம் மாத்திட்டேன். அதுபடி, ஹீரோ இப்ப என்ன பண்றார்னா...”
மறுபடியும் அலைபேசி அழைப்பு.
“அட்டெண்ட் பண்ணுங்க. ரெண்டு மூணு வாட்டி கூப்டறாங்க. எதும் அவசரமா இருக்கப்போவுது” தயாரிப்பாளர் வேணு சொன்னதும் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துக்கொண்டுத் தள்ளி வந்தான்.
“டேய்.. எடுக்கலைன்னா புரிஞ்சுக்கடா. பத்து வருஷ கனவு. இவ்ளோ பெரிய தயாரிப்பாளர். ராக் ஸ்டார் ரமேஷ் டேட்ஸ் இவருகிட்டதான் இருக்கு. அவர் சொன்ன சில மாற்றங்களோட ஃபைனலா கதை சொல்ல வந்திருக்கேன். உனக்கும் தெரியும். எத்தன வாட்டி கூப்பிடுவ?”
எதிர்முனையில், அழைத்த நண்பனின் குரலில் பதற்றம். “அது தெரிஞ்சுதான் கூப்டறேன். உடனே யூ ட்யூப் பாரு. தீபாவளிக்கு வர்ற ராக் ஸ்டார் ரமேஷோட ‘மாணிக்’ பட டிரெய்லர் ரிலீஸாகிருக்கு”
“சரி. அதுக்கென்ன அவசரம்? இவர்கூட டிஸ்கஷன் முடிஞ்சு பார்த்துக்கறேன்.”
”சொன்னாக் கேளுடா. உடனே பாரு. ப்ளீஸ். நான் அங்க வந்துட்டிருக்கேன். அடுத்து என்ன பண்றதுனு பேசிக்கலாம்” சொல்லிவிட்டு உடனே போனைக் கட் செய்தான் நண்பன்.
அஷோக் ராஜா, குழப்பத்துடனே தயாரிப்பாளர் வேணு அருகில் வந்தான். மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்த வேணு, கண்ணாடியைக் கழற்றியபடி “அஷோக் ராஜா, இதக் கொஞ்சம் பாருங்க” என்று நீட்டினார். அது, இயக்குநர் விகேஷ் இயக்கத்தில் ராக் ஸ்டார் ரமேஷ் நடித்து வெளிவர இருக்கும் ’மாணிக்’ படத்தின் டிரெய்லர். ப்ளே பட்டனை அழுத்தி ஓடவிட்ட அஷோக் ராஜாவுக்குக் கொஞ்ச நேரத்தில் உடலெங்கும் கெமிக்கல் ரியாக்ஷன்கள் நிகழ, கையிலிருந்த செல்ஃபோன் நழுவுவது போல உணர்ந்தான்.
“என்னய்யாது.. நீங்க மூணு மாசமா என்கிட்ட சொல்லிட்டிருக்கற கதையைப் படமா எடுத்து வெச்சிருக்கான். நீ என்னடான்னா ஏதோ புது கதை மாதிரி அதை என்கிட்ட சொல்லிட்டிருக்க?” - அவர் வார்த்தைகளில் இருந்த மரியாதை குறைந்ததை கவனித்தான் அஷோக் ராஜா.
“சார்... இல்ல சார். இது என் கதை. 10 வருஷம் முந்தியே ரெஜிஸ்டர் பண்ணி வெச்ச கதை. அந்த ஒன்லைன் மட்டும் சின்க் ஆகுது சார். மொத்தமா இப்படியானு தெரியல. நான் பேசிட்டு சொல்றேன் சார்.”
“மொத்தமா எப்படியோ... டிரெய்லர்ல இருக்கற எல்லாமே உன் கதைலயும் இருக்கு. அதெல்லாம் அப்பறம் உன் கதைல ஒண்ணுமே இல்லையே? இப்ப என்ன பண்ணப்போற?”
“எழுத்தாளர் சங்கத்துல பேசணும் சார். கணேசமூர்த்தி சார்தான் இப்ப தலைவர். அவரு வந்தப்பறம் இந்த மாதிரி பிரச்னைக்கெல்லாம் ஒரு தீர்வு வரும்னு நாங்க எல்லாருமே நம்பிட்டிருக்கோம். மொதல்ல அவரைப் பார்த்துட்டு என்ன பண்றதுன்னு சொல்றேன் சார்”
கணேசமூர்த்தி பெருமூச்சு விட்டார்: “நல்லா புரியுதுய்யா. நீயும் ஃபீல்டுலதான இருக்க? டைரக்டர் விகேஷ், ராக்ஸ்டார் ரமேஷ்கூட இந்தப் படம் எப்போ அறிவிப்பு வந்துச்சு. ஆறேழு மாசமா ’மாணிக்’ பட வேலைலாம் நடந்துட்டிருக்கு. இதான் கதைன்னு உனக்குக் கொஞ்சம்கூடவா தகவல் வர்ல?”
“இல்ல சார்... நெஜம்மா எனக்குத் தெரியாது.”
“ அட.... போனவாரம் ‘பொறுக்குமா உலகமே... கனவெல்லாம் கலகமே... ’ பாட்டு வந்து கன்னா பின்னானு ஹிட்டாய்டுச்சு. அந்த வரிகளைக் கேட்டுமா உனக்கு டவுட் வர்ல? ரெண்டு வாரத்துல ரிலீஸை வெச்சுக்கிட்டு இப்பப் போய் என் கதைன்னா என்ன அர்த்தம்னு வேண்டாமா?”
“சார் .. நான் ரெண்டு மூணு வருஷமா தெலுங்கு ஃபீல்ட்ல வொர்க் பண்ணிட்டிருக்கேன். இங்க இருக்கற அப்டேட்ஸலாம் நியூஸ், வெப்சைட்ஸ்ல பார்க்கறதோட சரி. பாட்டெல்லாம் நானும் கேட்டேன் சார். ஆனாலும் டிரெய்லர் பார்த்தப்பதான் இவ்ளோ ஒற்றுமை இருக்குனு தெரியும் சார். செயற்குழு கூட்டி, சீல் பண்ணி வெச்சிருக்கற என் பவுண்டட் ஸ்கிரிப்ட் படிங்க சார். நான் ஏன் இவ்ளோ பேசறேன்னு உங்களுக்கே புரியும்.”
“சரி... புகாருக்கு உண்டான தொகையைக் கட்டிட்டு, புகாரை சங்கத்துல சப்மிட் பண்ணிடு. நான் ஈ.சி. மெம்பர்ஸ்கூட கலந்துகிட்டு என்ன பண்றதுனு சொல்றேன்.”
இன்னும் இரண்டு வாரங்களில் ‘மாணிக்’ ரிலீஸ். அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளில் இருந்த விகேஷ், கணேசமூர்த்தியின் அழைப்பை மறுக்க முடியாமல், எழுத்தாளர் சங்கத்தில் இருக்கும் அவரது அறைக்கு வந்தான்.
“உன்னோட ஹீரோவுக்காக, இந்தக் கதையை சொல்லிட்டிருக்கான்யா அஷோக் ராஜா. அவன் பத்து வருஷமா இந்தக் கதைய வெச்சுட்டுப் போராடிட்டிருக்கான். இப்ப தெலுங்குல கொண்டயராஜுகிட்ட அசோஷியேட்டா இருக்கான். தயாரிப்பாளர் வேணுகிட்டயும் பேசினேன். பையன் நல்ல பையன். க்ளீன். காசெல்லாம் அவனுக்கு மேட்டரே இல்லை. செழிப்பாதான் இருக்கான். அவனோட ஸ்கிரிப்ட்டை எக்ஸிக்யூட்டிவ் மெம்பர்ஸ் முன்னாடிதான் சீலையே ஒடைச்சுப் படிச்சோம்.”
“சார்.. ‘மாணிக்’ என்னோட கொழந்தை சார். ஒன்னரை வருஷமா, இஞ்ச் இஞ்ச்சா நானும் அசிஸ்டெண்ட்ஸும் உருவாக்கின கொழந்தை. இப்ப வந்து ஒருத்தன் அப்படிச்சொன்னா கேட்டுருவீங்களா சார்?”
“விகேஷ்... உனக்கு இது பத்தாவது படம். நீயும் ராக் ஸ்டாரும் அல்ரெடி மூணு ஹிட் கொடுத்தவங்க. தயாரிப்பு கருடா பிக்சர்ஸ் வேற. இதையெல்லாம் தெரியாம, உன் டைமை வேஸ்ட் பண்ண இங்க கூப்பிடலை. என் மேல உனக்கு மரியாதை இருக்கா இல்லையா?”
“நிச்சயமா இருக்கு சார்”
“அப்ப நீ மொதல்ல, அஷோக் ராஜாவோட இந்த பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படி. அப்பறம் பேசலாம்.”
சொல்லிவிட்டு இரண்டு காஃபி ஆர்டர் செய்தார். இரண்டு காஃபி, நான்கு ஆனபோனது விகேஷ் ஸ்கிரிப்ட்டை முடித்திருந்தான்.
தலைக்கு மேல் ஸ்டைலாக இருந்த கூலிங் க்ளாஸை, எடுத்து டேபிள் மேல் வைத்தான் விகேஷ். எழுந்தான். முகம் களையிழந்திருந்தது. டேபிள் மேலிருந்த ஏ.சி ரிமோட்டை எடுத்து டெம்ப்ரேச்சரைக் குறைத்தான். கணேசமூர்த்தி, ஓரக்கண்ணால் அவனை கவனித்தாலும், கவனிக்காதது போல செல்ஃபோனில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
“சார்..” கணேசமூர்த்தியை அழைத்துக் கொண்டே அவரருகில் வந்தான்
விகேஷ்.
அடுத்தநாள் சமூக ஊடகங்களில் கணேச மூர்த்தி கையெழுத்துடன் எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளிவந்த கடிதம் வைரலானது. ` ‘மாணிக்’ படம் யாரோ அஷோக் ராஜா- அப்டின்றவர் கதையாமே?’, ‘யாரிந்த அஷோக் ராஜா?’ என்று ஆன் லைனில் ஆரூடங்கள் பறந்தன. இரண்டு மணி நேரத்தில் மொத்த யூ ட்யூப் சேனல்களும் கணேச மூர்த்தியின் வீடு, ஆஃபீஸ் என்று படையெடுத்தன. இரண்டு நாட்களுக்கு இணையம் முழுவதும் அவரது பேட்டிகள்.
“அஷோக் ராஜா கதையும், விகேஷின் கதையும் ஒன்றுதான். ஆனால் அதற்குப் பிறகான காட்சிகளில் வேறு சில சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த அடிப்படைக் கதையில் ஒற்றுமை இருக்கிறது. அஷோக் ராஜா அதே ராக் ஸ்டார் ரமேஷை வைத்து இதை இயக்க தயாரிப்பாளரை ஃபிக்ஸ் செய்ததெல்லாமும் உண்மை. ஆனால் இப்போது அது முடியாது என்பதால், டைட்டிலில் அவருக்கு ஒரு கிரெடிட் கொடுக்க மட்டுமே சொன்னேன். அதற்கு விகேஷ் ஒப்புக்கொள்ளாததால், அஷோக் ராஜாவுக்கு எங்களால் உதவ முடியவில்லை. இப்போது அஷோக் ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 31ம் தேதி கோர்ட்டில் என்ன நடக்கும் என்பதை நான் சொல்ல முடியாது.” - இதையே வேறு வேறு விதமான எல்லா சேனல்களுக்கும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் கணேச மூர்த்தி.
இன்னொரு புறம் விகேஷ் பொங்கிக்கொண்டிருந்தான். “கணேச மூர்த்தி சொல்வதை ஏற்க முடியாது. இருவது வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய பல படங்களும் வேறு சில படங்களை ஒத்திருந்தவைதான். இப்போது நியாயவான் போல பேசும் அவர், அதையெல்லாமும் கருத்தில் கொண்டிருக்கலாம்” என்கிற ரீதியில் கணேச மூர்த்திக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தான்.
சமூக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் அல்வா போல இந்தச் செய்திகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டிருந்தன. ராக் ஸ்டார் ரமேஷின் ரசிகர்கள், விகேஷுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக் களமிறங்கினர். இன்னொரு பக்கம், விகேஷ் அதற்கு முன் இயக்கிய திரைப்படங்களெல்லாமே காப்பியடிக்கப்பட்டவை என்று ஆரம்பித்து அவனை வறுத்துக் கொண்டிருந்தனர்.
மீடியாவின் இன்னொரு டீம் யார் அந்த அஷோக் ராஜா என்று தேடிக் கொண்டிருந்தனர். ‘கோர்ட்டில் வழக்கு இருப்பதால் பேச மாட்டார்’ என்று அஷோக் ராஜாவின் வழக்கறிஞர் பேட்டி கொடுத்தார். அவனது முகம் கூட எதிலும் காட்டப்படவில்லை. ஆனால் பத்திரிகைகள் மோப்பம் பிடித்து தெலுங்கு டைரக்டர் கொண்டயராஜுவைப் பிடித்தார்கள். ஏர்போட்டில் மீடியாவிடம் ‘ஹி ஈஸ் டெஃபனட்லி டேலண்டட்.. என்னோட கடைசி மூணு படம் ஹிட்டடிச்சதுல அஷோக் ராஜாவுக்கு பங்குண்டு. மத்தபடி மாணிக் பிரச்னை பத்தி நான் ஒண்ணும் சொல்லமுடியாது’ என்று பேட்டி கொடுத்தார்.
செல்ஃபோனை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த விகேஷ், ஒரு கட்டத்தில் தாங்காமல் ட்விட்டரிலிருந்து வெளிவந்தான். கணேச மூர்த்தியை அழைத்தான்.
“சார்... இதெல்லாம் எனக்குத் தேவையா சார்? இந்த ஒரு படம் மட்டுமில்லாம, எல்லாப் படமும் இப்படித்தான் அப்டிங்கற ரேஞ்சுக்குப் பேசறாங்க சார். என்கூட ஃப்ரெண்ட்ஸா இருந்தவங்களே எனக்கெதிரா இதை எடுத்துட்டுப் போறாங்க சார். நாம ப்ளான் பண்ணினது இப்படியெல்லாம் போகும்னு நான் எதிர்பார்க்கல சார்..”
எதிர்முனையில் கணேசமூர்த்தி மௌனமாய் இருந்தார். “ஸாரி விகேஷ். இதெல்லாம் நானும் எதிர்பார்க்காததுதான். எனக்கு மட்டும் என்ன? கூடவே இருக்கற எத்தனை பேர் எனக்கெதிரா பேசிட்டு இருக்காங்கன்னு பார்க்கறப்ப ஆச்சர்யமாவும் வெறுப்பாவும் இருக்கு. ஆனா ஒரு நல்ல விஷயத்துக்காக ஆரம்பிச்சது இது. நம்மளைச் சுத்தி இருக்கறவங்களைப் புரிஞ்சுக்கற வாய்ப்பா மட்டும் இதைப் பார்க்கலாம் விகேஷ்.”
“ஓகே சார். நாளைக்கு 31ம் தேதி. கோர்ட்டுக்கு நான் வர்ல சார். நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு ஈவ்னிங், உங்களுக்கு ஒரு லெட்டர் குடுத்துடறேன். நாளைக்கு கோர்ட்ல வெச்சு அதை ரிலீஸ் பண்ணிக்கோங்க.”
அடுத்தநாள். ஒட்டுமொத்த மீடியாவும் கோர்ட் முன் கூடியிருந்தன. விகேஷ் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதை, அஷோக்ராஜாவின் வழக்கறிஞர் சொல்லிக் கொண்டிருந்தார். அருகில் கணேச மூர்த்தி நின்று கொண்டிருக்க, அவரை நோக்கி நீண்டன மைக்குகள்.
“டைட்டிலில் அஷோக் ராஜாவின் பெயரை போடுவதாக விகேஷ் ஒப்புக்கொண்டு கடிதம் கொடுத்துவிட்டார். ஆகவே...” அவரைத் தொடரவிடாமல் எல்லா நிருபர்களும் கூச்சலாக ஒரே கேள்வியைக் கேட்டனர். “சார்... அதெல்லாமே வக்கீல் சொல்லிட்டார்.. அஷோக் ராஜா எங்கே? அவர் என்ன சொல்கிறார்?”
சிறு புன்னகை இடைவெளி விட்டார் கணேச மூர்த்தி. பிறகு, “இதோ இவர்தான் அஷோக் ராஜா.” கொஞ்சம் விலகி, பின்னால் நின்று கொண்டிருந்த அஷோக் ராஜாவை முன்னே தள்ளி நிறுத்தினார். “நீ பேசுப்பா” என்றார். ஒட்டுமொத்த மீடியாவும் அஷோக் ராஜாவை ஃபோகஸ் செய்தது. அடுத்தநாள் எல்லா நாளிதழ்களிலும் முன்பக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் அஷோஜ் ராஜா.
தீபாவளி களை கட்டிக்கொண்டிருந்தது. `மாணிக்’ இரண்டு ஷோக்கள் முடிந்ததும் சோஷியல் மீடியா படத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. ஆன்லைனில் ரெட் ஷர்ட் ரெமொ முதல் தட்டீஸ் தருண் வரை எல்லாரும் ஒருமித்தவகையில் ‘விகேஷ் - ரமேஷ் காம்போவில் இதுதான் ஆகச் சிறந்த படம். ப்ளாக் பஸ்டர்’ என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருந்தனர். நான்கு மணிக்கு, அஷோக் ராஜா, சத்யம் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் நிருபர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
“தேங்க்ஸ் கார்டுல உங்க பேருக்குக்கூட தியேட்டர்ல அவ்ளோ ரெஸ்பான்ஸ். படம் விஷுவலா எப்படி இருக்கு?”
“விகேஷ் சார் அவரோட சீனியாரிட்டியை நிரூபிச்சிருக்கார். ராக் ஸ்டார் ரமேஷுக்காக அவர் எழுதிருக்கற சில காட்சிகள், எனக்கு பாடம் மாதிரி இருந்தது. அதே பேஸ் லைன்லதான் நானும் யோசிச்சிருந்தேன்னாலும், அவர் மாதிரி சீன்ஸ் யோசிச்சிருக்கவே மாட்டேன். படம் வேற லெவல்ல இருக்கு” - அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே டைரக்டர் விகேஷிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
“உடனே கணேசமூர்த்தி சார் வீட்டுக்கு வா.”
அஷோக் ராஜா, கணேச மூர்த்தியின் அறைக்குள் நுழைந்தபோது அங்கே விகேஷ் அமர்ந்திருந்தான். விகேஷைப் பார்த்ததும் கைகூப்பியபடி “இப்ப்பதான் படம் பார்த்துட்டு வரேன் சார். என்ன சொல்றதுனு தெரியல. அடிப்படை ஒண்ணுதான் அப்டின்னாலும் உங்க ஸ்கிரீன் ப்ளேவும், காட்சியமைப்புகளும் தனியா தெரியுது சார். உங்களுக்கு எதிரா கேஸ் போட்டதுக்கு சாரி சார். எனக்கு அந்தச் சூழ்நிலைல....”
கணேச மூர்த்தி அவனைக் கையமர்த்தினார்.
“நான் சொல்லித்தானே கேஸ் போட்ட? உனக்கொண்ணு சொல்லவா? அன்னைக்கு ஸ்கிரிப்ட் படிச்சப்பவே விகேஷ், உன் பேரை டைட்டில்ல போடறேன்னு ஒத்துகிட்டார். உன் பவுண்டட் ஸ்கிரிப்ட்டைப் படிச்சுட்டு அவர் அவ்ளோ ஆச்சர்யப்பட்டார். இன்ஃபாக்ட், உன் ஸ்கிரிப்ட்ல இருந்த ஒண்ணு ரெண்டு சீன்ஸை, அச்சு அசலா அவர் படத்துல ஷுட் கூட பண்ணிருந்தார். ஆனா உன் ஸ்கிரிப்ட் படிச்சுட்டு அதையெல்லாம் எடுத்துட்டார்.”
”சார்.. என்ன சொல்றீங்க? அப்ப அவர் பேர் போட ஒத்துகிட்டார்னா எதுக்கு கேஸ் போடச் சொன்னீங்க. எத்தன பேர் வாய்ல பேச்சு வாங்கி, ஏன் இதுல்லாம்?”
“ஓகே.. சொல்றேன். அன்னைக்கு நீ என்கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேட்டப்ப நீ காசு கேட்கல. அங்கீகாரம்தான் கேட்ட. கார்டுல பேர் போடறதால உனக்கு அங்கீகாரம் கிடைக்கும்தான். ஆனா எத்தனை பேருக்கு அதுனால உன்னைத் தெரியும்? நானும் விகேஷும், அதையெல்லாம் தாண்டி உன் பேர் ரசிகர்களுக்குப் போகணும்னு ஆசைப்பட்டோம். எந்த டைரக்டரும் முதல் ஸ்கிரிப்ட் இப்படி ஆச்சுன்னா, அவனை நிரூபிக்கறது ரொம்பவே கஷ்டம். ஃபீல்டுல தெரியலாம். பப்ளிக்குக்கு உன்னைத் தெரியணும்னா என்ன பண்ணலாம்னு யோசிச்சோம்”
இப்போது விகேஷ் குறுக்கிட்டான். “நம்ம மீடியாக்கு எப்பவுமே ஒரு விஷயம் கிடைச்சதுன்னா அதைப் பரபரப்பாக்கிடணும். அதை யோசிச்சுதான் கணேச மூர்த்தி சார்தான் இப்படி ரியலா ஸ்கிரீன் ப்ளே பண்ணினாரு. அதுனாலதான் உன்கிட்டகூட சொல்லல. இப்ப நீ யார்னு தமிழ்நாட்ல எல்லாருக்குமே தெரியும். செயற்குழுவுக்குத் தெரியாம இதெல்லாம் பண்ணினதால, மனசாட்சி கேட்கலைன்னு ரிசைன் பண்றேன்னு சொல்றாரு...” - விகேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனது அலைபேசி ஒலித்தது. எதிர்முனையில் ராக் ஸ்டார் ரமேஷ்.
“என்னா டைரக்டரே... நம்ம காம்போவுல, நாலாவது படத்துலயும் சிக்ஸரே அடிச்சுட்டீங்களே.. இது ஹிட்டாச்சுன்னா அடுத்த படமும் உங்ககூடதான்னு ஏற்கெனவே சொன்னேன். இப்ப அஃபிஷியலாவே சொல்றேன். அடுத்த படமும் உங்ககூடதான். எப்ப கதை சொல்ல வர்றீங்க?”
“தேங்க்ஸ் ரமேஷ். அடுத்து உங்ககூட இயக்குநரா இணையல. தயாரிப்பாளரா இணையறேன். கதை சொல்ல நாளைக்கு டைரக்டர் வருவாரு”
“யாரு?”
“அஷோக் ராஜா” என்றான் விகேஷ்.
டிஸ்கி: இந்தக் கதை, டாபிகல் ஸ்டோரி என்ற ஜானரில் சமகால சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கற்பனைக் கதையே.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47097457270087723112018-01-05T16:27:00.002+05:302018-01-05T16:27:44.030+05:30எலி.. பூனை - ஒரு கூட்டணிக்கதை!
இன்னைக்கு ஒரு கதை சொல்றேன். தெரிஞ்சிருந்தாலும், வேற வழியில்லை. படிங்க.
பொந்துக்குள் இருக்கிற எலி ஒன்று, வெளியே உலா போகலாமென்று எட்டிப்பார்க்கிறது. வெளியே ஒரு பூனை நின்றுகொண்டிருக்க, டபக்கென்று உள்ளே ஓடிவிடுகிறது எலி.
பூனை பொந்தின் அருகே வந்து, 'வாய்யா ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்’ என்று எலியை அழைக்கிறது.
“நோ. நான் உனக்கு இரை. நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கறது?” என்று மறுத்துவிடுகிறது எலி. அந்த நேரம் பார்த்து, வேடன் விரித்த வலை ஒன்றில் சிக்கிக்கொள்கிறது பூனை.
இப்போது வெளியில் வருகிறது எலி. “யோவ்.. மாட்டிகிட்டேன்யா.. வலையைக் கடிச்சு, அறுத்து காப்பாத்து” என்று எலியைக் கேட்கிறது பூனை.
(இதை என் சின்னவயதில், எனக்குச் சொன்னவரிடம் ‘பூனையே கடிச்சுக்கவேண்டியதுதானே?’ என்று கேட்டேன். ‘போடா வெளில’ என்று அனுப்பிவிட்டார். பிறகு மகாபாரதக்கதை என்று கேள்விப்பட்டு தேடிப்படித்தேன் என்பது கிளைக்கதை.)
கதைக்கு வருவோம். இப்போது எலி சொல்கிறது.. “நான் உன்னைக் காப்பாத்தி வெளில கொண்டுவந்தா, என்னை நீ தின்னுப்புடுவ. போய்யா” என்று மறுத்தது. அந்த நேரம் பார்த்து கொஞ்ச தூரத்தில் பாம்பு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைத் துரத்திக்கொண்டு கீரியும்.
'அச்சச்சோ.. பாம்பு வருதே’ என்று எண்ணிய எலி உடனே பூனையுடன் ஒரு ஒப்பந்தம் போடுகிறது. ”இந்தாய்யா.. நான் வலையைக் கிழிச்சு உன்னையக் காப்பாத்தறேன். ஆனா அதுக்கு முன்ன, வலைக்கு மேலயே உன் சைடுல ஒளிஞ்சுக்கறேன். என்னிய ஒண்ணும் பண்ணிப்புடாத. பாம்பு வருது. அது போனதும் வலையைக் கட் பண்ணி வுடறேன்” என்கிறது. பூனையும் ஒப்புக்கொள்கிறது. கொஞ்சநேரத்தில் பாம்பும், கீரியும் அந்த இடத்தைக் கடந்துவிட “சரி.. இப்ப கட் பண்ணு” என்கிறது பூனை.
“மாட்டேன்”
“டே... லூசு. வாக்கு குடுத்திருக்க.. மறந்துட்டியா?” என்று கேட்கிறது பூனை.
"குடுத்தேன், மறுக்கல.. மறக்கல. ஆனா இப்ப கட் பண்ண மாட்டேன். இரு வேடன் வரட்டும்” என்கிறது எலி.
“ஏன்யா இந்தக் கொலவெறி?”
“அப்படிலாம் இல்லை. வேடன் பக்கத்துல வர்றப்ப, அறுத்துவிட்டா, அவன்கிட்ட இருந்து தப்பிக்கறதுலதான் உன் கவனம் இருக்கும். நானும் ஓடிரலாம். அதுனால அப்பத்தான் கட் பண்ணுவேன்” என்று தீர்க்கமாகச் சொல்கிறது எலி. அதேபோல, வேடன் அருகே வரவர.. வலையை அறுத்துவிடுகிறது எலி. பூனையும் வெளியே வந்ததும் ஓடிவிடுகிறது.
மீண்டும் கொஞ்சநேரத்தில் எலிப்பொந்தில் அருகே வருகிறது பூனை. “நீயும் எனக்கொரு ஹெல்ப் பண்ணிருக்க.. நானும் ஒரு ஹெல்ப் பண்ணிருக்கேன். வெள்ல வாயேன். நாம ஃப்ரெண்ட்ஸா இருப்போம்” என்று கேட்கிறது.
“நொட்டு! இந்த வேலைலாம் என்கிட்ட வேண்டாம். உனக்கும் எனக்கும் ஒரு தேவை இருந்தது. ரெண்டுபேருமே பரஸ்பரம் உதவியா இருந்துட்டோம். ரெண்டுபேருக்குமே அப்படி இன்னொரு சந்தர்ப்பம் வந்தா பார்க்கலாம். மத்தபடி நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கறதெல்லாம் வாய்ப்பே இல்லை. கெளம்பு கெளம்பு” என்றுவிட்டது எலி.
அவ்ளதான். அப்பறம்.. இதை ஏன் இப்பச் சொல்றேன்னு நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6676674707076569662018-01-02T11:37:00.000+05:302018-01-02T16:08:21.799+05:30ஸ்க்ரீன் டைம் - ஒரு விளக்கம்
“பரிசல், இரண்டு நாள்களுக்கு முன் எழுதிய பதிவில் ‘ஸ்கிரீன் டைம் அதிகமாகிவிட்டது’ என்று எழுதியிருந்தீர்கள். மொபைல் பார்த்துக்கொண்டிருப்பதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிந்தது. அதிகம் என்பதை எப்படிக் கணக்கிட்டுச் சொல்கிறீர்கள்?”
கீழே ‘வாசுதேவன், மணச்சநல்லூர்’ என்று போட்டால் உட்டாலக்கடி என்பீர்கள். ஆனால் நிஜமாகவே சிலர் அழைத்தும், இன்பாக்ஸிலும் கேட்ட கேள்வி இது.
ஸ்கிரீன் டைம் என்பது மொபைலைப் பார்ப்பது மட்டும் அல்ல. ஒளி உமிழும் எந்தத் திரையையும் பார்த்துக்கொண்டிருப்பது ஸ்கிரீன் டைம்தான்.
டெலிவிஷன், கம்ப்யூட்டர், வீடியோ கேம் கேட்ஜெட்ஸ், மொபைல் ஃபோன் என்று எல்லாமே.
மருத்துவர்கள் ஒருநாளின் அதிகபட்ச ஐடியல் ஸ்கிரீன் டைம் என்பது 2 மணிநேரங்கள் மட்டுமே என்று தயவுதாட்சண்யம் இல்லாமல் சொல்கிறார்கள். ’டாக்டர்.. இந்த ஆய்வெல்லாம் எந்தக் காலத்துல பண்ணிருப்பாங்க. இந்தக் காலத்துல போய் வெறும் 2 மணிநேரம் மட்டுமே ஸ்கிரீனைப் பார்த்துட்டிருக்கணுமா சாத்தியமா’ என்று கேட்டால் ‘20-20-20 ரூல் ஃபாலோ பண்ணு’ என்றார்.
அதென்ன 20-20-20?
ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும், திரையிலிருந்து 20 அடிகள் தள்ளிப்போய், 20 செகண்ட்ஸ் வேறு எதையாவது பார்ப்பதுதான் 20-20-20 ரூல். அது கண்ணுக்கு நல்லது.
தொடர்ச்சியாக ஒளி உமிழ்திரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் கண் எரிச்சல், கண் வலி, தூக்கமின்மை, கழுத்து-தோள்பட்டை வலி, அடிக்ஷன், Mood disability என்பதில் ஆரம்பித்து சிலபலவற்றை பட்டியல் இடுகிறார்கள்.
மீண்டும் சொல்கிறேன். கிண்டில் அதிக ஒளி உமிழ்வதில்லை. புத்தகங்கள் இன்னும் பெட்டர். எத்தனை டிவைஸ்கள் வந்தாலும், எல்லாவற்றிலும் படித்தாலும் இன்னமும் நான் புத்தகக் கட்சிதான். அதுதரும் ஆதாரசுகம், ஈடில்லாதது.
சும்மா ஓடிக்கொண்டிருக்கும் டிவியை அணைத்துவைப்பது, அலுவலகத்தில் வேலையைத் தாண்டி எதற்கும் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருப்பது, சாப்பிடும்போது, பேசும்போதெல்லாம் மொபைல் குட்டிச்சாத்தானை பாக்கெட்டை விட்டு எடுக்காமல் இருப்பது, ஓவியம் இசை என்று வேறேதாவதொன்றில் தீவிர கவனம் செலுத்துவது என்று இதிலிருந்து தப்பிக்க குட்டிக்குட்டியாயும், பெரிதாயும் நிறைய வழிகள் உண்டு.
இவையெல்லாவற்றையும்விட முக்கியமாகத் தேவை, இதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற மனம். தாலிகட்டுவதையோ, பிடித்த ஆளுமையைச் சந்திப்பதையோகூட நேருக்கு நேர் பார்க்காமல் மொபைல் ஸ்கிரீன் வழியாகத்தான் பார்க்கிறோம். அத்தியாவசியமாகிவிட்டவைகளுக்கு வேறு வழியில்லை. சிலவற்றை நிச்சயம் மாற்றலாம்.
மொபைல் ஸ்கிரீன் டைமை கண்காணிக்க, மொபைலிலேயே (:-)) நிறைய Apps உள்ளன. நான் வைத்திருப்ப்பது Moment எனும் ஆப். ப்ரீமியம் மெம்பர்ஷிப் (400 ஓவா!) கட்டி கோச்சிங் எல்லாம் எடுத்தேன். திடீரென்று முதல்நாள் இரவு, ‘நாளைக்கு காலையில் 11 மணிவரை ஃபோனைக் கையில் எடுக்காதே’ என்று மிரட்டும். இப்படிச் சில. அதன் சுவாரஸ்யம் கருதிப் பின்பற்றினேன். ‘குட்நைட் சொல்லல, என் மெசேஜையே பாக்கல, Blah Blah’க்கள் எல்லாம் அரங்கேறின. அதுதந்த திரில்லுக்காகவே அவ்வப்போது தொடர்ந்தேன்.
இந்தப் பதிவை எழுதும்போது, அந்த App-ல் எனது வீக்லி ரிப்போர்ட் பார்த்தேன். சராசரியாக ஒருநாளைக்கு 6 மணிநேரம் 35 நிமிஷம் மொபல் ஸ்கிரீனைப் பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளுக்கு 107 முறை ஃபோனைக் கையில் எடுக்கிறேன் என்கிறது அது.
இன்றைக்கு மட்டும் - இதை எழுதிய நேரம் காலை 9.30 மணி - இதுவரை 2 மணிநேரம் 22 நிமிஷம் உபயோகித்திருக்கிறேன். இதைத் தாண்டியும், 2 சிறுகதைகள் (சுப்ரமணிய ராஜு... வாவ்...!) படித்திருக்கிறேன். Communication குறித்த ஆங்கிலப்புத்தகம் ஒன்றில் 12 பக்கம் படித்திருக்கிறேன். இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
'முன்னமாதிரி படிக்கவெல்லாம் நேரம் இல்லை’ என்று எவராவது சொன்னால் என் சார்பில் அவர் மண்டையில் நறுக்கென்று கொட்டுங்கள்.. ப்ளீஸ்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71716030109735438612018-01-01T20:24:00.000+05:302018-01-01T20:24:30.958+05:30இனிய இரண்டாயிரத்துப் பதினெட்டு!
நம் நியூரான்களில் பரபரவென்று ஓடும் கருத்தோஃபோபியாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கச் சொன்னதுதான் அது. நாட்டில் என்ன நடந்தாலும் உடனடியாக அதைப்பற்றி நாலு வரிகளோ, நாற்பது வரிகளோ எழுதிக் கொட்டாவிட்டால் மனசு அடங்காமல் திரிகிறது.
நிஜத்தில் நம் கருத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பதே நிஜம். அப்படியும் கருத்துச் சொல்லும் Urge இருந்ததென்றால் தோன்றுவதை எழுதி டிராஃப்டில் போட்டு வையுங்கள். பிறகு அதைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குறைந்தது 24 மணிநேரங்கள் கவனியுங்கள். ‘அட... இதத்தானே நான் நெனைச்சேன். மொதல்லயே போட்டிருந்தா எனக்கு இந்த 500 லைக்ஸ் கிடைச்சிருக்குமே’ என்று தோன்றும். அப்படிக் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் ஒவ்வொரு லைக்ஸிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அது நீங்கள் எப்போது எழுதினாலும் கிடைக்கும். முதலில்எழுதி, ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேசமயம், ஒருவிஷயத்தில் உங்களுக்கு தீவிரமான, தெளிவான கருத்து இருந்து அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்களென்றால் எழுதலாம். இல்லாதபட்சம், அதைப் பற்றிய அறிவும், தெளிவும் உள்ளவர்கள் எழுதியதைப் படியுங்கள். விவாதங்களைக் கேளுங்கள். இணையப் பரிச்சயம் இல்லாத சக நண்பர்களிடம் அதுபற்றி உரையாடுங்கள். 24 மணிநேரம் கழித்து அதைப் பற்றி எழுதும்போது இன்னும் தெளிவும் தீவிரமும் கிடைக்கும்.
இந்த ஒரு சுய ஒழுங்கை மட்டும் கடைபிடித்தால்.. அட்லீஸ்ட் என்னுடைய டைம்லைனாவது நியூஸ் பொல்யூஷனால் பாதிக்காமல் இருக்கும் என்ற சின்ன ஆசைதான் காரணம்.
மற்றபடி, இந்த 2018-ல் இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ் இல்லாமல் சினிமா டிக்கெட் புக் செய்யவும், அவரசமாக ஆஃபீஸ் போகும்போது சிக்னலில் சிவப்பு விழாமலிருக்கவும், லேட்டாக வீட்டுக்குப் போகும்போது சிரித்தபடி மனைவி கதவு திறக்கவும், கேட்டதுக்கு டபுள் மடங்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிஃப்ட் தரவும், பர்ஸை கையில் கொடுக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் அமையவும், நீங்கள் நிற்கும் க்யூ வேகமாக நகரவும், இன்னபிற இனிமைகள் நடக்கவும் வாழ்த்துகள்!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74729599620974038142018-01-01T20:10:00.002+05:302018-01-01T20:11:00.196+05:302017 - கற்றுக்கொண்டதும்.. பெற்றுக்கொண்டதும்!
2017. எல்லா வருடங்களையும்போலவே எதையெதையோ கற்றுக்கொண்ட ஆண்டு.
எப்போதும்போலவே எனக்குள் புதுப்புது திறப்புகளை இசையும் வாசிப்பும் திறந்தன. அதேபோல மனிதர்களும்.
ட்விட்டர், ஃபேஸ்புக் மோகமெல்லாம் ஒழிந்து வருடங்களாகிவிட்டது. இந்த இடங்களில்லெல்லாம் லைக்ஸை எண்ணாமல் ஒரு பார்வையாளனாகக் கடந்துபோகும் மனம் வாய்த்திருக்கிறது. ஆனால் நிச்சயமாக ஒரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள இவற்றை நாடுகிறேன் என்பதில் சந்தேகமில்லை. நேரடியாக லைக்கோ, கமெண்டோ இல்லாவிட்டாலும் இன்னாருடைய கண்கள் இந்தப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கும் என்ற உணர்வே போதுமானதாக இருக்கிறது. ஒரு வாழ்த்தைப் பெற்றதைப் போல உணரவைக்கிறது.
ஸ்கிரீன் டைம் எப்போதும்போல அதிகம்தான். 2018லாவது குறைத்துக்கொள்ள பிரயத்தனப்படலாமென்றிருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பிருந்ததைப்போல வெறித்தன வாசிப்பைத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமாக சிறுகதைகள். லாசரா, ரேமண்ட் கார்வர், யங் ஹா கிம், அரவிந்த் அடிகா, தஞ்சை பிரகாஷ், எஸ்ரா, ஜெமோ, கந்தவர்வன், சர்வாகன், டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், ஜெயந்தன் என்று கலந்து கட்டிய வரிசை. ஒரு புத்தகம் என்றெல்லாம் இல்லாமல், ஒரு நாளைக்கு இரண்டு சிறுகதைகள் என்ற இலக்கில் பறக்கிறது குதிரை. நல்ல காபிக்குப் பிறகு சில மணி நேரங்கள் ஒன்றுமே குடிக்காமல் இருப்போமே, அப்படி ஒரு சில கதைகளின் தாக்கத்தால், சில நாட்களுக்கு ஒன்றுமட்டும்தான். கிண்டில், நல்லதொரு துணைவனானது இந்த வருடம்தான்.
நண்பன் கட்டதுரை ‘30 Days Walking Challenge’ என்ற ஒன்றை ஆரம்பிக்க, 5 கிமீ, 10 கீமீ என்று தினமும் நடைப்பழக்கம் ஆரம்பித்தது. அதுவும் மழையில் இயர்ஃபோனில் பாட்டுக்கேட்டுக்கொண்டே நடக்கும் அனுபவமெல்லாம் கிடைத்தது. ஒருநாளைக்கு - 3 தவணைகளில் - 33 கிமீ நடந்ததெல்லாம்.. நடந்தது.. நடக்கும்போது, ஆடியோ புக்ஸ் கேட்பது, சில நல்ல உரைகளைக் கேட்பது என்று அந்த நேரமும் பயனுள்ளதாய் அமைவது டபுள் தமாக்கா! கூடவே அவன் பரிசளித்த்த அடிடாஸ் ஷூவும்.
பாட்டு கேட்பதில் புதிய உத்திகளை இந்த வருடம் முயன்றேன். ஒரு பாடலை, அதில் வரும் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை மட்டும் உன்னிப்பாக கவனித்து ஏழெட்டு முறை கேட்பது.. அதைத் தொடர்ந்து அந்த இசைக்கருவி வேறு பாடல்களில் எப்படியெப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சங்கிலித்தொடர் போல கேட்பது இப்படி. கோரஸ் மட்டும் அதிக முக்கியத்துவம் பெறும் பாடல்கள் என்னென்ன இருக்கின்றன, எப்படியெப்படியெல்லாம் கோரஸ் பாடப்பட்டிருக்கின்றன.. இப்படி. இப்படித்தான் ‘இசையில் தொடங்குதம்மா’வும், ‘மகராஜனோடு ராணி வந்து சேரும்’ பாடலும் கடந்த ஒரு வாரமாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
எப்போதும்போல மனிதர்கள் நிறைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காலமெல்லாம் கற்றுக்கொண்டாலும் நமக்குப் போதவில்லை. சின்னத் துணுக்குறலுக்கும் ‘என்ன ஆச்சு கிருஷ்ணா?’ என்று கேட்கும் நண்பர்களையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவர எண்ணி, சில எழுதினேன். எழுதியவற்றில் இரண்டுதான் எனக்குப் பிடித்தது. மற்றவற்றை மீண்டும் படிக்க எண்ணி, ஓரம்கட்டி வைத்தேன். ஒரு சில எழுத்துக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்ந்து கொண்டேன்.
1993லிருந்து எனக்குக் கனவாக இருக்கும் ஆனந்தவிகடனில் பணி என்பது நேரடியாக நிறைவேறியது இந்த ஆண்டுதான். பணியின்பொருட்டே நிறைய படிக்க நேர்ந்ததும், மகிழ்ச்சியான விஷயம். ஏஜண்ட் வீட்டுக்கே சென்று முதல் ஆளாக வாங்கிய ஒரு பத்திரிகையின் ஒவ்வொரு பக்கங்களையும் வெளிவரும் முன்னே ரசித்துப் படித்து கருத்தைப் பகிர்ந்து என்று.. மனநிறைவான விஷயம். பணியையும் தாண்டி, அதில் என் பெயரும் வரவேண்டும் என்று அவ்வப்போது எழுதியும் கொண்டிருந்தேன். ஒரே இதழில் ஆறு படைப்புகளெல்லாம் வந்தது இந்த வருடம்தான். இந்த வருடத்தின் ஆகச்சிறந்த மனநிறைவு.. இந்த விஷயம் எனலாம்.
2018ல் இன்னும் படைப்பு சார்ந்து தீவிரமாக இயங்கும் எண்ணம் இருக்கிறது. சிறுகதைகள் தொகுப்பு கொண்டுவருவது சர்வ நிச்சயம். குறைந்த பட்ச இலக்காக, ஒன்று இருக்கிறது.
நாளைக்குத் தேதி எழுதும்போது, 2017 என்று முடிக்காமல் இருக்க வேண்டும்.
எழுதிய நாள்: 31.12.2017
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62115366099117641832018-01-01T20:07:00.002+05:302018-01-01T20:18:25.164+05:30ஒரு மொட்டையின் கதை!
டிசம்பர் 29 2017
"வரியெல்லாம் சேர்த்து மொத்தமா 1000 ரூவாய்க்குள்ள சொல்லுங்கம்மா” என்று கேட்டுக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. அது ஒரு யுனிசெக்ஸ் சலூன். ஹேர்கட் செய்ய நான் அங்கு சென்றிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த அம்மாவுக்கு அருகில் அவரது மகள்.
”அப்படின்னா இந்த Pack போட்டுக்கோங்க” என்று எதையோ காட்டினார். “டேக்ஸ்லாம் சேர்த்து 890 ரூவா வரும்”
அந்த அம்மா தலையாட்ட, மகள் முகத்தில் அதிருப்தி. “அதெல்லாம் போதும்ப்பா. போ” என்று அம்மா சொல்ல, உள்ளே சென்றார் மகள்.
சோபாவில் அமர்ந்திருக்கும்போது, அந்த அம்மாவின் முகம் வாடியிருந்தது. நிலைமையைச் சமாளிக்கப் பேச்சுக்குடுத்தேன். கொட்டித்தீர்த்தார் அவர்.
“எல்லாம் என் தப்புதான். சின்ன வயசுல நல்லா விளையாடறானு கோ-கோ விளையாடவிட்டேன். இப்ப என்னடான்னா இவ்ளோ கறுத்துட்டா ” என்று அங்கலாய்த்தபடி ஆரம்பித்தார்.
விஷயம் இதுதான். அவரது மகள் கறுப்பாக இருந்தார். அதில் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை. “இப்ப காலேஜ் படிக்கறா. கோ-கோல ஸ்டேட் லெவல்ல விளையாடிருக்கா. ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவா. இவளே கொரியோகிராஃபும் பண்ணுவா. இப்ப காலேஜ்ல ஏதோ ஃபங்ஷனுக்கு டெய்லி ப்ராக்டீஸ் போகுது. ’கறுப்பா இருக்க. அதுனால நீ சொல்லிக்குடுத்துட்டு, ஆடறப்ப நாலாவது வரிசைல போய் ஆடு’னு சொல்லிட்டாங்கனு இன்னைக்கு ஒரே புலம்பல். அதான் வந்தோம்” என்றார்.
நானும், அந்த சலூனில் பொறுப்பில் இருந்த பெண்மணியும் அவருக்கு எடுத்துச் சொன்னோம். ‘அழகுன்றது வெளில இல்லம்மா.. கறுப்புங்கறது வெறும் நிறம்தான்’ போன்ற எல்லா க்ளிஷே வசனங்களையும் சொல்லிப் பேசிக்கொண்டிருந்தோம். “எல்லாம் நானும் சொல்லிருக்கேன் தம்பி. யாரோ ஒருத்தர் டெய்லியும் கிண்டல் பண்றாங்க. ‘ஏண்டி இவ்ளோ கறுப்பா இருக்க?’ன்னு கேட்கறாங்கனு சொல்லுவா.” என்றார் அந்த அம்மா. அந்த சலூன் பொறுப்பாளினி, ‘அப்பப்ப இங்க கூட்டிட்டு வாங்கம்மா, சர்வீஸ்க்கு அல்ல.. நான் பேசறேன் அவங்ககிட்ட” என்றார்.
நான் சொல்ல வந்த விஷயம் அது அல்ல. அங்கிருந்து ஹேர்கட் முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். குளித்து முடித்து, இந்த விஷயத்தைச் சொன்னேன். “யாரோ என்னமோ சொல்லணும்னு இருக்கணும். அதுக்கெல்லாம் கவலைப்பட்டா முடியுமா?” என்று உரையாடல் தொடர்ந்தது. எனக்கு போனமாசமே மொட்டை போட ஆசை இருந்தது. அப்போது ‘எதுக்கு? சும்மா இருங்க’ என்ற உமா, “இப்ப போட்டுக்கவா?” என்று கேட்டதும் ‘ஓகே... உங்க இஷ்டம்’ என்றார்.
சட்டென்று கிளம்பி, கீழே வந்து ஒரு பார்பர் கடையில் மொட்டை போட்டுக்கொண்டேன்.
இரண்டு நாட்களாக ‘எதுக்கு மொட்டை.. எந்தக் கோயில்... அய்ய.. நல்லாவே இல்ல. பார்க்கவே சகிக்கல. உங்க மொத்த அழகும் முடில மட்டும்தான் இருந்தது போலயே’ என்று எக்கச்சக்க கமெண்ட்ஸ்!
ஒரே மாதிரி இருக்கறதுல என்ன த்ரில் இருக்கப்போவுது? ல்ல?
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29556826525973103182015-02-11T08:36:00.000+05:302015-02-11T08:36:54.696+05:30போஸ்ட் ஆஃபீஸ்
99 நாள் ஃப்ரீடம் என்றொரு சமாச்சாரத்தில் இருக்கிறேன். 99 நாட்களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் குழுக்களிலெல்லாம் இல்லை. “ஓ.. அதான் ப்ளாக்ல அப்டேட்ஸா?” என்று புருவமுயர்த்துபவர்களுக்கு ஒரு புன்னகை. படிக்க சேர்ந்துவிட்ட புத்தகங்களின் மிரட்டலும், இங்கே அதிகமாக எழுதவேண்டுமென்றும்தான் இந்த விரதமே.
இந்த 99 நாட்களுக்காக மட்டுமல்லாமல் ரொம்ப நாள் ஆசையாக, ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறேன். கடிதமெழுதுவது. எழுதுவது என்றால் எழுதுவது. மின்னஞ்சல் அல்ல.
ஏற்கனவே ஆரம்பித்து, சிலபேருக்கு எழுதியும் ஆயிற்று. வித்யாசமான க்ராஃப் ஷீட், கலர் கலர் பேனாக்கள் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.
இரண்டு நாட்கள் முன்னர் போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நண்பருக்கு ஒரு புக் பார்சல் அனுப்ப வேண்டியிருந்தது. முன் அறையில் பார்வைச்சவால் நிறைந்த ஒருவரும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.
”ஸ்பீட் போஸ்ட் பண்ணணும்”
“உள்ள ரெண்டாவது கவுண்ட்டர்” - என்றார் அந்தப் பெண்.
உள்ளே ஐந்து கவுண்ட்டர்கள் இருந்தன. அமர்ந்திருந்தவர்களில் நான்கு பேர் இந்த வருடத்திற்குள் ரிட்டயர்டாக இருப்பவர்களாக இருக்கலாம். இரண்டாவது கவுண்ட்டரில் விசாரித்தபோது, “இங்க ஸ்டாம்ப் மட்டும்தான். ஸ்பீட் போஸ்ட் அடுத்த கவுண்ட்டர்” என்றார்.
நான்கடி நகர்ந்து பின்னுக்கு வந்து நின்றேன். மொத்தம் எத்தனை கவுண்டர்கள் என்று மீண்டும் எண்ணினேன்.
ஐந்து.
ஆக, எந்தப் பக்கத்திலிருர்ந்து எண்ணினாலும் ஸ்பீட்போஸ்ட் இரண்டாவது கவுண்டரில்லை. மூன்றாவது. அல்லது நட்டநடு கவுண்டர் என்று சொல்லியிருக்கலாம் அந்த முன்னறைப் பெண். சரி, அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.
புத்தகத்தைக் கொடுத்து, எத்தனை ரூபாய்க்கு ஸ்டாம்ப் என்று கேட்டேன். அவர் எடை பார்த்துவிட்டு, சுற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு, வாட்ச்சில் மணி பார்த்துவிட்டு, டிரங்க் பெட்டியின் பூட்டை சரிபார்த்துவிட்டு, கணினியில் எதையோ பார்த்துவிட்டு
-101 ரூபாய் என்றார்.
இந்த நேரத்திற்குள், முன்னறையில் இருந்த பார்வைச் சவால் நிறைந்த அந்த நபர் வந்தார். குறிப்பிட்ட சில இடங்களில் நடையை எண்ணி, சரியாக அந்தப் பெண்மணிக்கு சற்றுப் பின்னால் வந்து நின்றார்.
“சித்ரா” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றார்.
ஸ்பீட்போஸ்ட் பெண்மணி ஒன்றும் பேசவில்லை.
“சித்ரா”
அப்போதும் இந்த அம்மணியிடமிருந்து பேச்சேதும் இல்லை.
“ஓ.. அம்மாங்களா” என்றார் அவர். “சித்ரா இல்லீங்களா?”
“இல்ல” என்றார் இவர். அந்த நபர் நூறுரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுத்து, நூறு ரூபாயா என்று தடவித் தடவி சரி பார்த்து “சித்ராகிட்ட குடுக்கணும்” என்றார்.
ஸ்பீட்போஸ்ட் அம்மணி பக்கத்து கவுண்ட்டரி்ல் கொடுக்கச் சொல்ல அந்த நபர் “சரிங்க.. நான் நாளைக்கே குடுத்துடறேன்” என்று திரும்பி ஸ்டெப் வைத்து நடந்துபோனார்.
ஒரு பார்வையற்ற நபரின் குரலுக்கு முதல்தடவையிலேயே பதில் சொல்ல என்ன வந்தது இவருக்கு? இவர் அமைதியாக பதில் சொல்லாமல் இருப்பது கண்டு, அந்த நபரே “ஓ.. நீங்களா” என்று கேட்கிறார். உள்ளே பணிபுரியும் சக அலுவலருக்கே ரெஸ்பான்ஸ் இல்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன்.
ஸ்பீட் போஸ்ட் வேலையை முடித்ததும் - திடீரென்று ஒன்று தோன்றியது.
85க்குப் பின் அல்லது 90களில் பிறந்தவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். அதில் கடிதம் சென்றிருக்குமா அவர்களுக்கு?
பக்கத்து கவுண்ட்டரில் கேட்டேன்.
“இன்லாண்ட் லெட்டர் இல்லீங்க”
“ஓ... நாளைக்கு வரும்களா?”
“தெரியலைங்க”
“இல்ல மேடம்.. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் கடிதம் எழுதறதுன்னு நாலைஞ்சு பேர் முடிவு பண்ணீருக்கோம். அதுக்காக..”
“நல்ல விஷயம். பண்ணுங்க. இன்லாண்ட் இல்லை”
நான் வெளியில் வந்துவிட்டேன்.
நேற்றைக்கு வேறொரு போஸ்ட் ஆஃபீஸில் விசாரித்தபோதும் “இன்லாண்ட் இல்லை” என்ற பதிலே வந்தது.
“ஏப்ரலுக்கப்பறம்தான் வரும் சார். எந்த போஸ்ட் ஆஃபீஸ்லயும் இல்லை” என்றார்.
வெளியில் வந்தபோது, கையில் பேப்பர்களுடன் ஒருத்தர் நின்றிருந்தார். கோடுபோட்டப்பட்ட பேப்பரில் பலரின் கையெழுத்துகள். என்னவென்று கேட்டேன்.
“சார்... BSNL தனியார் மயமாக்கக்கூடாதுன்னு ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். பப்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கறோம். ப்ளீஸ் ஒரு கையெழுத்து போடுங்களேன்”
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6340044090924324132015-02-09T23:00:00.000+05:302015-02-09T23:00:50.146+05:30சாருவுடன் ஒரு சந்திப்பு
12வது புத்தகக் கண்காட்சி திருப்பூரில் இனிதே நிறைவுற்றது. திருப்பூர் போன்ற ஒரு தொழில்நகரத்தில் வாசிக்கும் பழக்கம் மிக மிக அவசியமாகிறது. எந்நேரமும் தொழில் குறித்த சிந்தனையும், கொஞ்சமும் ஓய்வில்லாத மனவோட்டமும் கொண்ட மனிதர்களிடையே வாசிப்பு குறித்த உணர்வை, ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி மூலம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் பின்னல் புத்தக நிலையத்திற்கு பாராட்டுகளும், அன்பும்.
நாசர், மனுஷ்யபுத்திரன், பூமணி, சாருநிவேதிதா என்று இந்த வருடம் விஐபிக்களின் வருகையால் மகிழ்வுற்றனர் வாசகர்கள்.
“நாம மீட் பண்றது இதான் மொத டைம்ல?” என்றார் சாருநிவேதிதா, என்னை நண்பர் அவரிடம் அறிமுகப்படுத்தியபோது. நான் ஏதேதோ உளறினேன் என்றாலும் இதுதான் முதல்முறை அவரை சந்திப்பது. ஆனால் அப்படி நினைக்காமல் இருக்க வைத்தது அவருடன் உரையாடிய நிமிடங்கள்.
நான் அப்படி ஒன்றும் பெரிய ஆளில்லையெனினும்,
“ஓ.. நீங்கதான் அவரா?” என்று ஒரு கெத்தாகக் கேட்டுவிட்டு போய்விடாமல், ஞாபகம் வைத்திருந்து உரையாடிய சாரு நிச்சயம் வித்தியாசப்பட்டுக் கவர்ந்தார்.
திருப்பூரின் எழுத்தாளர் லெனினின் பங்களிப்பு நிச்சயம் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஸ்டால் போட குழி தோண்டிய நாளிலிருந்து, முடியும் நாள் வரை அவர் வீட்டுக் கல்யாணம் போல பாவித்துக் கொண்டிருந்தார். அறிந்த முகங்களை வரவேற்பது, விருந்தினர்களை உபசரிப்பது, கூட்டம் எத்தனை என்று அவ்வப்போது மேடை முன்னிருக்கும் பார்வையாளர்களை எண்ணிப் பார்த்துக் கொள்வது, யாருக்காவது ஏதாவது உதவி என்றால் முகத்தைப் பார்த்தே, ‘என்னாச்சுங்க’ என்று ஓடிப் போய்க் கேட்டு உதவுவது என்று அனைத்தனையும் புன்னகை மாறாத முகத்தோடு செய்து கொண்டிருந்தார்.
சனிக்கிழமை சாருவை காரில் அனுப்பிவிட்டபிறகு, எழுத்தாளர்கள் பாரதி சுப்பராயன், செல்வகுமார் பழனிச்சாமி மற்றும் லெனினுடன் டின்னர். சுவையான அரட்டையோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், லெனின் மட்டும் கொஞ்சம் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு கேட்டேன்:
“என்னாச்சுங்க.. என்னமோ மாதிரி இருக்கீங்க?”
“ஆமா பரிசல். கொஞ்சம் வருத்தமா இருக்கு”
“ஏன்?”
“கூட்டம் கொஞ்சம் கம்மி இன்னிக்கு. என்னான்னு தெர்ல. அதுபோக நாளையோட கண்காட்சி வேற முடியுது. இனி அடுத்த வருஷம்தான்” என்றார்.
இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் கண்காட்சி குறித்த சிந்தனையோடேதான் திரிந்தார்.
நண்பர் கவின் ஆசிரியராய் இருக்கும், “பாஷோ’ ஹைக்கூ இதழை திங்களன்று மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். போலவே சனிக்கிழமை ட்விட்டர் நண்பன் “செல்வு எஃபெக்ட்” புகழ் செல்வா அழைத்தான்.
“அண்ணே.. எங்கிருக்கீங்க?”
“ஆஃபீஸ்ல. என்னாச்?”
“என்னோட எலி நாவலை சாரு கொஞ்ச நேரம் முந்தி வெளியிட்டுட்டார். இங்க வருவீங்களா?”
“கொஞ்சநேரத்துல அங்கிருப்பேன்” என்று சென்றேன்.
வெளியிட்ட உடனே என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. முன்னுரையை எழுதிக் கொடுத்திருந்தேன். என் புத்தகத்திற்கும், இதற்கும் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதாய்ப் பட்டது. முக்கியமான ஒற்றுமை எழுத்துப் பிழைகள். கிருஷ்ணகுமாரை, கிருஷ்ணக்குமாராக்கியது உட்பட சில. இதை ஜாலியாகத்தான் சொல்கிறேன் என்பதற்காக இங்கே ஒரு ஸ்மைலியை கற்பனை செய்துகொள்ளுங்கள். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் புத்தகத்தைப் பார்த்ததும் ஏற்கனவே வேறொருவர் மூலமாக இந்தப் புத்தகம் குறித்து அறிந்ததையும், புத்தகத்தின் ஃபாண்ட் உட்பட சிலது குறித்தும் அவர் உரையாடியது செல்வாவுக்கு மகிழ்ச்சியளித்திருக்கும் என அவதானிக்கிறேன்.
விஜய்யின் அடுத்தபடம் புலி. வடிவேலுவின் அடுத்தபடம் எலி என்கிற சூழலில் இந்த நாவல் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாங்கி, ஊக்குவிக்குமாறு கே.கொ.
ஜனவரி 30லிருந்து ஃபிப்ரவரி 8 வரை பத்து நாட்கள் நடைபெற்றாலும், நாசர் வந்த - கடந்த - ஞாயிறுதான் கூட்டம் என்றார்கள். சினிமா பிரபல்யம். இது குறித்து லெனினுடன் பேசிக் கொண்டிருக்கையில், ‘சினிமால மாஞ்சு மாஞ்சு புக் படிக்கற ஆளுக நிறைய இருக்காங்க. அடுத்தவாட்டி அவங்களையெல்லாமும் கூப்டணும்’ என்று பேச்சு வந்தது. ராஜேஷ், கரு. பழனியப்பன், கிட்டி, மிஷ்கின் என்று பல பேர் அடிபட்டது.
அடுத்தவருடத்திற்கு இன்னும் 365 நாட்களிருக்கிறது. அதற்குள் எப்படியாவது நயன்தாராவோ, நமீதாவோ நிறைய தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சொல்லவில்லை.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40891986052398178262015-02-07T08:31:00.001+05:302015-02-07T14:04:14.045+05:30சென்னை!
“ஜப்பான், அமெரிக்கா, சீனா மூணு பேரும் இவனுக ஒருத்தனையும் விட்றாதீங்க. எல்லாவனையும் சாவடிங்க. ஒரு தமிழனும் இருக்கக்கூடாது. இவனுகள்ல ஒருத்தனுக்கும் அறிவில்ல. சுயநலம் பிடிச்சவனுக. எல்லாத்தையும் அழிக்கணும்.. விடக்கூடாது” - காந்திசிலைக்குக் கொஞ்சம் தள்ளி நடந்தபோது கையில் பிரம்புடன் ஒருவர் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தார். கலைந்த, அழுக்கு உடை. பழுப்பான கண்களில் ஏதோ வெறி. குரல்மட்டும் அத்தனை தீர்க்கம். அதுவும் வாகன இரைச்சல்களற்ற அந்த அதிகாலை ஆறுமணிக்கு தெளிவாக நூறு அடிவரை அவர் குரல் கேட்ட இடம் மெரினா.
எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. ஜனவரி 30-31 சென்னை சென்றிருந்தேன். சென்னையைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அது என் ஊர் என்கிறாற்போல ஒரு நெருக்கத்தை உணர்கிறேன். சனிக்கிழமை காலையில், மெரினா சென்று இரண்டு மணிநேரங்களை செலவிட்டேன். மக்கள். மக்கள். மக்கள். “நைட் கொஞ்சம் ஏறிடுச்சு மாமூ” என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அருகம்புல் ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தார். யுவன் - யுவதிகள் காதில் இயர்ஃபோன். அங்கங்கே சின்னஞ்சிறார்கள், கோச்சுடன் வந்திருந்தார்கள். ஒரு கோச், ‘லேட்டா வந்தியில்ல, அவன் பேக்கையும் நீ தூக்கீட்டு ஓடு’ என்று தண்டனையாய்ச் சொன்னதை லேட்டாய் வந்த பையன் உற்சாகமாய் செய்ததைக் காணமுடிந்தது.
‘கைவிரல் தரைல தொடணும். அப்டியே இடதுபக்கம் தலையை மட்டும் திருப்புங்க. அப்டியே நிமிந்து, மறுக்கா விரல் தொட குமிஞ்சு வலது பக்கம் திரும்புங்க. டென் டைம்ஸ்’ என்ற குரல் கேட்ட இடத்தில் குழுவாக நின்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞனுக்கு வலதும் இடதுமாய் இளைஞிகள் இருக்க, முழு உற்சாகமாய் இருபுறமும் திரும்பிக் கொண்டிருந்தான்.
“அம்பது கிலோ மூட்டை. அப்டியே இப்டிக்கா தூக்கி, அப்டிக்கா அடுக்குவேன். இன்னா நென்ச்ச நீயி?” இளநீர்க் கடையொன்றின் முன் நான்கைந்து பெருசுகள் அமர்ந்திருக்க, ஒருவர் அவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். கேட்டவர் அத்தனை ஒல்லி. ‘ஒடம்பு இருந்தா பலம் இருக்குன்னு அர்த்தமாக்கும்?’ என்றார் அவர். ‘சரி சரி போ.. ஒனக்கு ஆள் வந்துடுச்சு’ என்று அமர்ந்திருந்தவர் சொல்ல. கிட்டத்தட்ட அவர் சைஸுக்கு ஐந்து மடங்கிருந்த ஒரு பெண்மணி மூச்சிரைக்க நடந்து வந்து, ‘என்னாங்குது ஓமக்குச்சி?’ என்று இவர்களைப் பார்த்து கேட்டுவிட்டு ‘வாய்யா போலாம்’ என்று நடந்தார்.
ஃபீனிக்ஸ் மால் LUXE திரையரங்கு. 150 ரூபாய் டிக்கெட். நிச்சயமாகக் கொடுக்கலாம், அந்தத் திரையரங்குக்கு. ஒவ்வொரு அடியிலும் உங்களைக் கவர ஏதோ ஒன்றை இழைத்து இழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். இசை படத்தில், சத்யராஜ் சுருட்டு பற்ற வைக்கும்போதெல்லாம் சுருட்டின் பேப்பர் கருகும் ஓசை காதுக்கருகில் கேட்கிறது. ஒலி அத்தனை துல்லியம். இந்தத் தியேட்டரில், நாயகி சாவித்திரியின் தொப்புளைக் காண்பித்த சைஸில்தான் சி செண்டர் டூரிங் டாக்கீஸ்களின் மொத்தத் திரையே இருக்கும்போல. (ஒரு குறிப்பு: தொப்புள் ரசிகரான கே.எஸ்.ரவிகுமாருக்கு சரியான போட்டி எஸ்.ஜே.சூர்யா என்றால் அது.... அதென்னது... ஆங்.. மிகையாகாது!)
ஒவ்வொரு கடையையும் சுற்றிவரவே, நேரம் சரியாக இருக்கிறது. யார் போனாலும் HIDESIGN கடைக்குச் செல்ல மறக்காதீர்கள். ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் தோத்தார்கள்!
ஒருகாலத்தில் மந்திரமாய் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ‘ஸ்பென்சர் ப்ளாஸா’ மார்க்கெட் இழந்த நடிகையாக (படு மொக்கையான, பல பேர் சொன்ன உதாரணம்) பொலிவிழந்து நிற்க, அதைத் தாண்டி எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. இதைப் போன்ற மால்களை மக்கம் ஈக்களாய் மொய்க்க, சுத்தமும், சுதந்தரமும்தான். போலவே, கஸ்டமர் கேர். எந்தக் கடையிலாவது ‘இது என்ன விலையிருக்கும்?’ என்று உங்கள் மனதுக்குள் நினைத்தால் ‘நைன் ஹண்ட்ரண்ட் சார்’ என்று தோளுக்கருகே குரல் கேட்கும். வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவர்கள் முகம் அஷ்டகோணலாவதுமில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு கடை விடாமல் போய் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்று கூட வாங்காமல். ஒரு கடையிலும் அவரை தடுக்கவோ, வேண்டாமென்று சொல்லவோ இல்லை.
எத்தனை முறை சென்றாலும் இடங்கள், வழிகள் என்றால் எனக்கு தடுமாற்றம்தான். முகவரி கேட்டால் ஆட்டோகாரர்கள் அத்தனை பாந்தமாக உதவுகிறார்கள். "உட்லண்ட்ஸ்னா நியூ உட்லண்ட்ஸா? நேரா போங்க. யாரையும் கேட்கவேணாம். ஒண்ணு, ரெண்டு, மூணு... நாலாவது சிக்னலாண்ட லெஃப்ட். அங்கிருந்து நேரப்போனீங்கன்னா.. ஒண்ணு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சாவது சிக்னலாண்ட லெஃப்ட் எடுங்க. ஃப்ளை ஓவர் வரும். அதுல போகக்கூடாது. கீழ போனீங்கன்னா... ஆமா எங்கிருந்து வர்றீங்க?"
"திருப்பூர்"
"அப்ப வேணாம். கஷ்டம்.. நீங்க என்ன பண்றீங்க.. நேராப் போய்ட்டேஏஏஏஏ இருங்க. நாலாவது சிக்னல்ல லெஃப்ட் எடுங்க. யாரையும் கேட்கவேணாம்... " என்று தொடர்ந்தார்.
வழி சொல்கிற அனைவரின் வாயிலும் "யாரையும் கேட்கவேணாம்" தவறாமல் வருகிறது.
சனிக்கிழமை காலை மெரினா வாக்கிங் போனேன் அல்லவா? அன்று மாலை நண்பர் அப்துல்லாவைச் சந்தித்தபோது “அண்ணே.. நாளைக்கு சாந்தோம் பீச் போலாம்னிருக்கேன். எப்டிப் போறதுண்ணே?” என்றேன்.
“இன்னைக்கு எங்க போனீங்க?”
“வீரமா முனிவர் சிலைக்குப் பக்கத்துல காரை நிறுத்தீட்டு, ஒரு கிலோ மீட்டர் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் போனேன்”
“அதாண்ணே சாந்தோம் பீச்”
ஓஹோ என்று வழிந்துவிட்டு வந்தேன்.
ஞாயிறு திரும்பும்போதுதான் ஞாபகம் வந்தது. நான் கேட்க நினைத்தது பெசண்ட் நகர் பீச்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48427633037368550002015-01-28T23:06:00.000+05:302015-01-28T23:08:44.538+05:30அவன்களால்தான் நிறைந்த உலகு
2005
அவன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.
“என்னாச்சுங்க?”
“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.
“அப்ப அரை கிலோமீட்ட முன்னாலதான பெட்ரோல் பங்க்? எதுக்கு தள்ளீட்டே போறீங்க? இனிமே போனா அஞ்சாறு கிலோமீட்டராகும் பெட்ரோல் பங்க் வர..”
“அது வந்து..” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, வார்த்தைகளை மென்று விழுங்கினர்.
“ஏங்க.. என்னாச்சு?”
“பெட்ரோலுக்கு காசில்லைங்க. அதான் அப்டியே தள்ளீட்டு போய்டறோம். மூணு, நாலு கிலோமீட்டர்ல எங்க கம்பெனி வந்துடும்”
அவன் யோசித்தான். “என்னோட பைக்கும் ரிசர்வ்தான் பாஸ். வேண்ணா ஒண்ணு பண்லாம்” தன் பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். “முப்பது ரூவா இருக்கு. அப்டியே பின்னால போய், அந்த பங்க்லயே அடிச்சுட்டுப் போங்க. வேகாத வெயில்ல எவ்ளோதூரம் தள்ளுவீங்க!”
“ரொம்ம்ம்ப தேங்க்ஸ் பாஸ்!!”
2010
அவன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.
“என்னாச்சுங்க?”
“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.
இவன் பைக்கை நிறுத்தினான். சாலையோரம் ஏதும் தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று தேடினான்.
“பெட்ரோல் பங்க் ரொம்ப தூரம்க. நான் கொஞ்சம் பெட்ரோல் தர்றேன். போயிருங்க. வெயில் வேற ஜாஸ்தியாருக்கு. பாட்டில் ஏதும் கெடைக்குதான்னு பாருங்க”
அவர்கள் இருவரும் இவன் அருகில் வந்து தேடினர்.
சாலை நீளமாய், ஒன்றிரண்டு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது. நான்கைந்து நிமிடங்களில் ஒருவரும் இருக்கவில்லை சாலையில்.
இவன் பாட்டிலைத் தேட, இவன் இருபுறமும் நின்றிருந்த இருவரில் ஒருவன், இவன் தோளில் கைபோட்டான். இன்னொரு கையில் ச்சின்ன கத்தி முளைத்திருந்தது.
“பாஸ்.. ஃபோன், காசு, வாட்ச் எதிருந்தாலும் எடுத்து அவண்ட்ட குடுத்துடு பாஸு. எதும் வித்தியாசமா ட்ரை பண்ணி வெட்டு வாங்கிக்காத”
இவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. டக்கென்று இடதுகையை பாக்கெட்டில் விட்டு, மோதிரத்தை நைஸாக விரலாலேயே கழட்டி பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.
டக்கென்று பின்பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். வாட்ச்சைக் கழட்டினான்.
“முன்னூறு ரூவாதான் இருக்கு. வாட்ச் இந்தாங்க. ப்ளீஸ் ஃபோனை விட்டுடுங்க. ஆஃபீஸ் ஃபோன். காண்டாக்ஸ்லாம் இருக்கு. நான் மெர்ச்செண்டைஸரா வேலை செய்யறேன். கால் வந்துட்டே இருக்கும். ப்ளீஸ் கெஞ்சிக் கேட்டுக்கறேன். உங்களை நம்பி பட்டப்பகல்ல பைக்கை நிறுத்தினேன். இப்டி பண்ணீட்டீங்களே..”
“அட்வைஸ்லாம் வேணாம் பாஸ். ஓகே. ஃபோனை வெச்சுக்கங்க” என்ற ஒருவன், இரண்டாமவனிடம் “போலாண்டா. வேற காசில்லை இவண்ட்ட” என்றபடி தங்கள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினர்.
அவன் மிகுந்த வேதனையோடு தன் பைக்கை எடுத்து அந்த இடத்தைக் கடக்கையில், வெறும் இருநூறு அடி தொலைவில் இருந்த போலீஸ் செக்போஸ்ட்டை வாழ்நாளுக்கான வெறுப்புடன் பார்த்தபடி கடந்தான்.
2015
அவன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் ஒருவரைப் பார்த்தான். தன் பைக், நின்று கொண்டிருக்க - இவனை நோக்கி கை காட்டியபடி நின்று கொண்டிருந்தார்.
அருகில் சென்றவன் ஏதோ யோசனை வந்தவனாய், பைக் வேகத்தை அதிகப்படுத்தியபடி சென்றுவிட்டான்.
குறிப்பு: அவனும் அவனும் அவனும் வேறு வேறு ஆட்கள். ஆனால் அவன் செய்தது, அவனுக்கும்-அவனுக்கும், அவனுக்கு நிகழ்ந்தது அவனுக்கும்-அவனுக்கும் தெரியும். அவன் செய்ததன் காரணமாக, அவன் செய்ய நினைத்து மாட்டிக் கொண்டதால் அவன் அதைச் செய்யவில்லை. அவ்வளவுதான்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79101421168561799992015-01-26T15:05:00.000+05:302015-01-26T15:05:57.845+05:30அவியல் 26 ஜனவரி 2015
எந்தக் குடியரசு தினம் வந்தாலும், போய் நெட்டில் இரண்டு விஷயங்களைத் தேடுவோம்.
1. இது எத்தனையாவது குடியரசு தினம்?
2. சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?
இதை இரண்டையும் தெரிந்து கொண்டு கொஞ்சம் மானே தேனே போட்டு குடியரசு தினத்தைக் கொண்டாடிவிட்டு வந்தாச்சு.
‘டேஏஏஏஏஏஏஏஏய்.... ஒரு இந்தியன் இப்டி எப்டிச் சொல்லப் போச்சு?’ என்று குத்தவராதீர்கள். இந்தியன் என்றால் உண்மையைச் சொல்லலாம் இல்லையா?
தொட்டால் தொடரும்
நண்பர் கேபிள் சங்கர் டைரக்ஷன், வசனம், இன்னொரு நண்பன் கார்க்கி இயக்கம் - வசனத்தில் உதவி என்று வந்திருக்கும் படம்.
நல்ல கதை. நல்ல வசனம், மோசமான திரைக்கதை, படு கடுப்பேற்றும் பின்னணி இசை. ஹீரோயின், வேறொரு ஃபோட்டோவை எடுத்து தன் ஃபோட்டோவை வைக்கும் இடத்தில் படம் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த விறுவிறுப்பை கொண்டு போனபடியே மற்றவற்றை ஃப்ளேஷ்பேக்கில் காட்டியிருக்கலாம். பாலாஜியின் நடிப்பும் வசனங்களும் நன்று. தமன் / அருந்ததி நடிப்பும் நிறைவு.
பழம் தின்று கொட்டை போட்ட சிலர் எடுக்கும் படங்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது சீனிலேயே கொட்டாவி வர வைக்கிற சமயத்தில் முதல் படமாக இது பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம் கேபிள்!
உடனடி கருத்து சொல்கிற வியாதி ஒன்று படுமோசமாக பரவி வருகிறது. எல்லாவற்றிற்கும் உடனடி கருத்து. செய்திகளை முந்தித் தருவதாய் எண்ணி கே.பாலச்சந்தர் இறப்பதற்கு முன்னரே RIP போட ஆரம்பித்துவிட்டார்கள் வாட்ஸப்பில். ரஜினிகாந்துக்கு இவர்களே பத்மபூஷன் குடுத்துவிட்டார்கள். இப்படி நிறைய.
ஒரு 99 நாள் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் க்ரூப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.
அதுவரை இங்கே மட்டும் எழுதுவதாய் உத்தேசம். பார்க்கலாம்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55884305032625012852015-01-23T23:51:00.003+05:302015-01-24T00:04:59.875+05:30ரிப்போர்ட்
"ஏப்பா ரிப்போர்ட் கேட்டு ரெண்டு நாளாச்சு. இன்னைக்கு தர்றேன்ன.. ஞாபகமிருக்கில்ல?”
“இருக்கு சார்” என்றான் கணேஷ்.
“இருக்கா? ஞாபகமிருக்குங்கறியா... இல்லை ரிப்போர்ட் ரெடியா இருக்கா?”
“ஞாபகமிருக்கு சார். ரிப்போர்ட் இன்னும் ஒன் ஹவர்ல ரெடியாகிடும்”
“சரி.. கேபினுக்கு கொண்டு வா” என்று நகர்ந்தார் மேனேஜர்.
“இன்னிக்கு நீயா?” என்றாள் மானஸா.
“ஆமாப்பா” என்றான் கணேஷ்.
“என்ன ரிப்போர்ட் குடுத்தாலும் எதாச்சும் ஒரு நொள்ளை சொல்லுவார். நாம எவ்ளோ கரெக்டா, எல்லா டேட்டாஸ் எடுத்தாலும் இல்லாத ஒண்ணைத்தான் கேட்பாரு” - புலம்பினாள் மானஸா.
”இப்படித்தான் போனவாரம் நான் ஒரு ரிப்போர்ட் குடுத்தனா..” என்று ஆரம்பித்தான் அடுத்த டெஸ்க் சுந்தர். அதன்பின் நான்கைந்து இப்படித்தான்கள் வந்தன.
“ப்ளீஸ்.. இன்னும் அரைமணி நேரத்துல ரெடி பண்ணிக் கொண்டு போகணும். எல்லாரும் சைலன்ஸ் ப்ளீஸ்” என்றான் கணேஷ்.
சிஸ்டத்தில் ஃபோல்டரைத் தேடினான். எக்ஸெல்லை திறந்தான். ஒவ்வொன்றாக காபி பேஸ்டினான். மூன்று மாத ரிப்போர்ட்டைத் தொகுத்தான். ஒவ்வொரு ஷீட்டிலும் ஒவ்வொரு விதமாக அதை பதிவாக்கினான். எல்லாவற்றிற்கும் Chart க்ரியேட் செய்தான். ஒவ்வொன்றையும் தனித்தனியாக காண்பிக்க எழுத்து / எண்களுக்கெல்லாம் வேறு வேறு கலர் கொடுத்தான். மொத்தம் 12 பக்கம் வந்தது.
45 நிமிடங்களானது முடிக்க.
ப்ரிண்ட் எடுத்தான். ஃபைல் ஃபோல்டர் ஒன்றை தேடி எடுத்து அதில் வரிசையாக சொருகினான்.
55 நிமிடங்கள்.
எழுந்தான். சுற்றியுள்ளவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான்.
மேனேஜர் கேபினை - எக்ஸ்யூஸச் சொல்லிவிட்டுத் - திறந்தான்.
“3 மாச ரிப்போர்ட் சார்” என்றான்.
வாங்கியவர் இரண்டே நிமிடங்கள் மேய்ந்து விட்டுக் கேட்டார்:
“ப்ரிண்டர் டோனர் மாத்தலியா? பேப்பர்ல கோடு விழுது பாரு. போனதடவை சுந்தர்கிட்டயே சொன்னேன். மேனேஜர்ட்ட ஒரு ஃபைல் குடுக்கறதுன்னா இப்படித்தான் குடுப்பீங்களா? சீ மிஸ்டர் கணேஷ்...” என்று ஆரம்பித்தார் மேனேஜர்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74571796088780765532015-01-22T23:00:00.003+05:302015-01-22T23:15:55.851+05:30தொட்டால் தொடரும்!
உள்ளதை உள்ளபடி ஒரு சிலரிடம் மட்டுமே பேச முடியும். எனக்கு அப்படி ஒரு நண்பர் கேபிள் சங்கர்.
பேசாவிட்டாலும் இவனுக்கு என்னையும் எனக்கு இவனையும் தெரியும். அவன் - கார்க்கி.
வலையுலகம் தொட்டு ஆரம்பித்த நட்பு - தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நன்றாக நினைவிருக்கிறது... கேபிளுக்கு இந்தப் படம் இயக்க வாய்ப்பு வந்ததும், உடனே நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு, “கார்க்கி.. நீயும் என்கூட வொர்க் பண்ற” என்றார்.
உதவி இயக்கம், வசனம் உட்பட பாடல் ஒன்றையும் எழுதியிருக்கிறான் கார்க்கி. அவன் பெயரை போஸ்டரில் பார்த்தபோதே மகிழ்வாக இருந்தது. நாளை திரையில் பார்க்கப் போகிறேன்.
சூப்பர் சிங்கர் ஜூனியரில், குழந்தைகளுக்காக ஓட்டு கேட்கும் பெற்றோர்களை நேற்றுதான் கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.
“நல்லா இருந்தா ஓட்டுப் போடுங்கன்னு கேட்காம, ‘உங்க வீட்டுக் கொழந்தை, ரொம்ப ப்ராக்டீஸ் பண்ணினா, அவளுக்கு இசைதான் உயிரு’ இப்டியெல்லாமா சொல்லி ஓட்டுக் கேட்பாங்க?” என்று.
அதன்படி, படத்தை உண்மையாக விமர்சியுங்கள். விமர்சிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆங்! தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டும்!
கேபிள் சங்கர் & கார்க்கி...
உங்கள் பெயர் திரையில் வருகையில் ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு கைதட்டலும் என்னுடையதாக எண்ணிக் கொள்ளுங்கள்!
இந்த வெற்றிப் பயணம்.... தொடரட்டும்!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66084606353455148942015-01-22T00:04:00.001+05:302015-01-22T00:05:40.479+05:30இதை எதுல எழுதுவீங்க?
“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.
ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ.. ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.
கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.
நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.
“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”
உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.
“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”
“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”
“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.
அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.
“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”
“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”
இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.
“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.
புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.
உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.
“தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”
“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”
“நீங்க நிருபரா?”
“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”
“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”
“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”
“புரியலையே தம்பி...”
“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”
“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”
“ஐயா உங்க பேர் கேட்டேனே...”
“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”
“சரி.. உதவின்னா காசு வாங்குவீங்களா?”
அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.
“சில்லறை இல்லீங்களா?”
“இல்லீங்களே”
இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.
“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.
“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.
வாங்கியவர், அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.
“ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.
“கறாரா வாங்கீடுவீங்க போல?”
“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி. ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”
அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.
“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”
“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.
“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”
“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”
“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”
“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.
“சரிங்க” என்றேன்.
“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”
“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”
“தெரியாதுங்களே..”
“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”
“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”
“சரிங்கய்யா”
“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.
“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”
நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.
“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.
“அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.
“நீங்க?”
“நான் இங்கதான் இருக்கேன்”
“எங்க?”
“இதே ஊர்ல..”
“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”
“சும்மாதான் இருக்கேன்” என்றான்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90863846522759655322015-01-20T22:08:00.001+05:302015-01-20T22:08:31.093+05:30வெல்டன் மதன் கார்க்கி!
ஐ
mile emotic(1)
ஐ!
மிகுந்த எதிர்பார்ப்போடு போய்ப் பார்த்தபடம். படம் பார்த்தபிறகு, ஷங்கர் ஒரு விளம்பர ஏஜன்ஸி ஆரம்பித்திருந்தால் நம்பர் ஒன் ஆக வந்திருப்பார் என்று தோன்ற வைத்தது அவர் காட்சிப்படுத்தியிருந்த சில பல ஐடியாக்கள்.
அதிலும், ஐல ஐல ஐ பாடலில் நான்கு ப்ராடக்டுகளுக்கான விளம்பரத்தைக் கண்பித்திருப்பார்கள். அந்தப் பாடலின் மூலமேதான், விளம்பர உலகில் எமியும், விக்ரமும் ஜோடி சேர்ந்து கலக்குவார்கள் என்பதும் / அவர்களிருவரும் காதலிக்கத் துவங்கி - காதலில் திளைப்பதும் காண்பிக்கப்பட்டிருக்கும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கான்செப்ட்கள் அட்டகாசம். யார் குடுத்திருந்தாலும் சபாஷ்!
இதில் விசேஷம் என்னவென்றால், மதன் கார்க்கியின் அசத்தலான வரிகள். தனியாகக் கேட்டால், இருவரும் பாடும் காதல் பாடல் போலவும், படத்தில், காண்பிக்கப்படும் ப்ராடக்ட் விளம்பரங்களுக்கான வரிகள் போலவும் இருக்கும்.
மதன் கார்க்கி.... You Rock Man!!!
இப்போது வரிகளையும் அது எதற்காக காண்பிக்கப் படுகிறது என்பதையும் பாருங்கள்:
உன் பிடியிலே என் உயிரும் இருக்க,
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ
எனில் முட்கள் கொய்தாய்!
காலை உந்தன் முத்தத்தில் விடியும்,
நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ
எனை மென்மை செய்தாய்!
எனது ரோமனே
சிறிது கீறவா?
விழியின் கூரிலே
மனதை கூறவா?
முகத்தின் மூடியை
திருடிப் போகவா?
நீங்கா.......தே!
என் ரோமனே....வா!
<ஷேவிங் ரேஸர்>
(2)
கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி
ஐலா ஐலா எடுப்பாயா?
தூரிகையிலே எனை கிடத்தி விண்
மீன்கள் வெள்ளை அடிப்பாயா?
துப்புத் துலக்க வருவாயா?
முத்துச் சிதறல் oh yeah!
பூ இல்லாமல் ஐலா,
வாசம் oh yeah!
நீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா?
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி - இனி
மின்சாரப் பஞ்சம்
தீர்ப்போம் சிரி துளி!
<டூத் பேஸ்ட்>
(3)
உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச
எட்டிப் பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே hey yeah!
இளஞ்சிவப்பை oh yeah!
ரோஜா பூவில் ஐலா!
வண்ணத்தை oh yeah!
நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக!
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள் - உன்
கீழே பூக்கும் வெண் பூக்கள்
பூக்கள் இல்லை, நிழல்!
<ஃபேர்னஸ் க்ரீம்>
(4)
சக்கையென வானத்தைப் பிழிந்து
ஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
பேய் வெறி உன்னில் கண்டேன்
இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா?
காதல் தறியிலே
நாணம் உரிக்கவா?
பருத்தித் திரியிலே
பொறிகள் தெறிக்கவா?
ஓடா.......தே!
என் ஜீன் மானே....வா!
<ஜீன்ஸ்>
எப்பூடி!!!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17935127100380453262015-01-19T21:05:00.000+05:302015-01-19T21:05:58.759+05:30இந்த நாடும்...
“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”
முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.
நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.
இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.
இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.
“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.
வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.
எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.
எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:
1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?
2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?
3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?
4. &$%&க் கொழுப்பு.
இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?
ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.
என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.
ஆமென்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-92140900392583059382014-10-05T12:24:00.000+05:302014-10-05T12:26:47.353+05:30அர-மெட்-ஜீ-பேங்!
சமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்!
1. அரண்மணை:
மூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம்பிப் போனோம்.
சந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.
‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா?” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.
“படம் எப்டி?” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா? இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.
2. மெட்ராஸ்:
நல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.
ரஞ்சித் - Waiting For Your Hat trick Movie!
3. ஜீவா:
சமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா!.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா!’
குறியீடுகள் என்று பார்த்தால், இதிலும். கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல!
பாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.
OUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு? “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.
ச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
4. BANG BANG
மெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88902754257895695752014-10-03T00:01:00.000+05:302014-10-03T00:03:44.024+05:30கிருஷ்ணகதா 03-10-2014 - மதுப்பழக்கம் கேடானது எப்படி?
“புராணகாலத்துல எல்லாம் சோம பானம் சோம பானம்னு சொல்லப்படுது. முனிவர்கள், தேவர்களெல்லாம் குடிச்சதா படிச்சிருக்கேன், இந்த மதுப்பழக்கம் எப்டி கெட்ட பழக்கம்னு ஆச்சு?’ – ஃப்ரெண்ட் கேட்டாப்ல. அதுக்காகத்தான் இந்தக் கதை.
மொதல்ல கேரக்டர்ஸை தெளிவா உள்வாங்கிக்கோங்க. அப்ப படிக்கறப்ப குழப்பம் இருக்காது. மொத்தம் நாலே கேரக்டர்ஸ்.
1. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யார். 2. அவர் மகள் – தேவயானி.
3. தேவர்களின் குரு பிரகஸ்பதி. 4. அவர் மகன் – கசன்.
மனப்பாடம் பண்ணீட்டீங்களா? சரி.
தேவர்கள் – அசுரர்கள் போர் நடந்துட்டிருச்சு. அசுரர்கள்ல இறந்தவங்களை, சுக்கிராச்சார்யார் டெய்லி உயிர்ப்பிச்சுட்ட்டே இருந்தார். தேவர்கள், தங்களோட குருகிட்ட போனாங்க.
“ஹல்லோ குருஜி, வாட்டீஸ் திஸ்”ன்னு கேட்டாங்க.
அதுக்கு பிரகஸ்பதி, ‘வாட் கேன் ஐ டூ மை பாய்ஸ்? சுக்கிராச்சார்யார்க்கு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கற சஞ்சீவினி மந்திரம் தெரியும். எனக்கு தெரியாதே”ன்னாராம்.
உடனே தேவர்கள், ‘உங்க பையன் கசன் இருக்கான்ல? அவனை சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா அனுப்ச்சு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துட்டு வரச் சொல்லுங்க”ன்னாங்க. அதன்படி, பிரகஸ்பதி, தன் மகன் கசனை, சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா சேர்த்திவிடறார்.
கசன், சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்கத்தான் தன்கிட்ட சிஷ்யனா வந்திருக்கான்னு சுக்கிரருக்கு தெரியும். அவரும், குருகுல வழக்கப்படி சேர்த்துகிட்டு எல்லா வேலையும் வாங்கீட்டிருக்கார். அந்த மந்திரத்தை சொல்லிக் குடுக்கறபாட்டையே காணோம்.
இப்ப, அசுரர்களுக்கு இந்த மேட்டர் கேட்டு கிலியாகிடுது. எங்க சுக்கிராச்சார்யார் சொல்லிக் குடுத்துடுவாரோன்னு பயப்படறாங்க. சுக்கிரர், ‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பயப்படாதீங்க’ன்னுடறாரு. ஆனாலும் அசுரர்களுக்கு மனசு கேட்கல. ஆடு மேய்க்கப்போன, கசனைக் கொன்னு நாய்க்கு உணவாப் போட்டுடறாங்க.
இங்க ஒரு ட்விஸ்ட். சுக்கிராச்சார்யாரோட மகளான தேவயானிக்கு கசன் மேல ஒன் சைட் லவ்வு. சாயந்திரமாச்சு, கசனைக் காணோம்னு கவலையோட அப்பாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. அவரு ஞானதிருஷ்டில பார்த்து, கசன் இறந்துட்டதைத் தெரிஞ்சுக்கிறார்.
தேவயானி அழ, மகள் மேல பாசமா இருக்கற சுக்கிரர், ‘டோண்ட் வர்ரிம்மா.. வெய்ட்டீஸ்’ன்னுட்டு சஞ்சீவினி மந்திரம் சொல்லி கசனை உயிர்ப்பிக்கிறார். கசனும், நாய் வயித்தைக் கிழிச்சுட்டு உயிரோட வந்துடறான்.
அசுரர்களுக்கு கோவம் வருது. ரெண்டாவது தடவையா கசனைக் கொன்னு கடல்ல போட்டுடறாங்க. மறுபடி தேவயானி கண்ணீர். எகெய்ன் மந்திரம். கசன் எண்ட்ரி.
அசுரர்களுக்கு கடுப்பாவுது. இந்தாள் என்ன இப்டியே பண்றாருன்னு மூணாவது வாட்டி கசனைக் கொன்னு, அவன் அஸ்தியை சுக்கிராச்சார்யார் தினமும் குடிக்கற சோமபானத்துல கலந்துடறாங்க.
அப்பல்லாம் டெய்லி கொஞ்சம் சோமபானம் சாப்டுட்டு தூங்குவாங்க. சுக்கிராச்சார்யாரும் அதன்படி லைட்டா சாப்டுட்டு தூங்கப்போறார்.
கசன், இன்னும் வர்ல. தேவயானிக்கு டென்ஷனாவுது. அப்பாட்ட மறுக்கா கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. வழக்கம்போல தன் ஞா.தி-ல கசன் எங்கன்னு பார்க்கற சுக்கிரருக்கு ஷாக்!
கசன், தான் குடிச்ச சோமபானம் மூலமா, தன்னோட வயித்துக்குள்ளதான் இருக்கான்னு தெரியுது. இப்ப அவனை உயிர்ப்பிச்சா, வயிறு பொளந்து, இவர் இறக்க நேரும். தேவயானிகிட்ட ‘வாட் டு டூ?’ன்னு கேட்கறாரு.
“டாடி, எனக்கு நீங்களும் வேணும். அவரும் வேணும். ப்ளீஸ்..”ன்னு கெஞ்சறாங்க தேவயானி.
’நாம சொல்லித்தரக்கூடாதுன்னு நெனைச்சோம். இப்ப அசுரர்களோட துர்புத்தியே, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்க வைக்குது’ன்னு நெனைச்ச சுக்கிராச்சார்யார், வெளில இருந்தபடி வயித்துக்குள்ள இருக்கற கசனை உயிர்ப்பிச்சு, சஞ்சீவினி மந்திரத்தை சொல்லிக்குடுத்து, ‘என் வயித்தக் கிழிச்சு வந்து, அப்பறம் இதே மந்திரத்தைச் சொல்லி என்னை உயிர்ப்பி’ங்கறார். அதன்படியே நடக்குது.
வெளில வந்த கசன், தேவயானியோட லவ்வை, ‘உங்கப்பா வயித்துல இருந்து வந்ததால நான் உன் சகோதரன் அல்லவா? ஸாரிம்மா”ன்னு ரிஜெக்ட் பண்ணது கிளைக்கதை. மெய்ன் மேட்டருக்கு வருவோம்.
சுக்கிராச்சார்யார் உயிர்த்து எழுந்ததும், அந்த சோமபான பாட்டிலைப் பார்க்கறார். “இந்தக் கெரகத்தைக் குடிச்சதாலதான் எதிரிப் படையோட குரு மகனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தது? இதக் குடிக்கலைன்னா இவ்ளோ டெலிகேட் பொஸிஷன் வந்திருக்காதுல்ல?”ன்னு யோசிச்சு,
“இனி இந்த சோமபானத்தைக் குடிக்கறவங்க, தன் மதியிழந்து போகக் கடவது”ன்னு சாபம் விட்டுடறாரு!
அதுக்கப்பறம்தான் மதுன்னா, கெட்டதுன்னு ஆச்சாம்! அக்காங்ப்பா!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17654342627656225682014-09-27T09:09:00.000+05:302014-09-27T09:40:04.153+05:30கற்காததினால் ஆய பயன்...
அப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.
போய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.
உடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.
அடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.
“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க?”
“வெளில, ஹோட்டலுக்குத்தான்”
“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே?”
“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே?” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.
அப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.
டெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.
நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.
காரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.
அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.
காரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
நேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.
கற்றதினால் ஆன பயனென் கொல்?
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17259493578416339642014-09-16T23:38:00.000+05:302014-09-16T23:38:46.895+05:30அவியல் 16-9.2014
‘ஐ’ பட இசைத்தட்டை சக நண்பர் அர்னால்ட் ஸ்வாஷ்ஸ்னகர் வந்து ரிலீஸ் செய்துவிட்டார். இனி மாதம் மும்மாரி பொழிவதுடன், தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சினை உள்ளிட்டவைகள் தீர்ந்துவிடும் என்று நம்புவோமாக.
என்னதான் இப்படி நக்கலடித்தாலும், ஷங்கர் தன் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றிவிட்டார் என்றே கூறவேண்டும். நாடு முழுவதும் ‘ஐ’ ஜுரம்தான். டீசரும் வெளியாகிவிட்டது. பத்து ஸ்க்ரோலிங்கில் ‘இதான்பா கதை’ என்றொன்று வாட்ஸப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஏ.. இந்தாரு, எந்திரன் மாதிரியே செவப்புச்சாரி, மல்லிப்பூ’ என்றொரு படம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கவனித்தது இன்றைய தினசரிகளில் அர்னால்ட்டின் இரண்டு படங்கள்.
அர்னால்ட், யாரோ பூக்கடை துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் தோளில் கைபோட்டு ஜாலியாக பேசியதை ‘தி இந்து’வெளியிட்டிருந்தது. பொது இடங்களில் எதிர்ப்படும் முகங்களைப் பார்த்து புன்னகைப்பதும், ஹலோ சொல்வதும் அவர்களுக்குண்டான பழக்கம்தான். பக்கத்து வீட்டினரையே முறைத்தபடி கடக்கும் நமக்கு இது கண்டிப்பாக நியூஸ்தான். நான் அமெரிக்கா சென்றிருந்தபோதும், பாரீஸில் வேலை நிமித்தம் இருந்தபோதும், அதேபோல லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில்..
சரி விடுங்க. நான் ஜாலி வாலி ஜாதி. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை.
இரண்டாவது அம்மாவும் அர்னால்டும் புகைப்படம். கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அம்மா ஹாயாக சாய்ந்திருக்க, நான்குமுறை மிஸ்டர் யுனிவர்ஸும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியாவும் வென்ற பாடி பில்டர் அர்னால்ட், சாயாமல் வெகு பவ்யமாக அமர்ந்திருந்தார்.
யாரோ சொல்ல்ல்லி, அனுப்ச்சிருக்காங்க!
இன்று காலை கன்னாபின்னாவென்று கோவை நோக்கி பேருந்துகள் பறந்து கொண்டிருந்தன. பல தனியார் பேருந்துகள். உள்ளே ஓரிருவர் கூட இல்லை. விசாரித்தால் கோவையில் முதல்வர் விழாவுக்காம்.
‘அதுக்கேன்யா காலியா போவுது?’ என்று கேட்டேன்.
‘கணக்கு காட்டத்தான். ஹெலிகாப்டர்லேர்ந்து அம்மா பார்த்தா பூரா பஸ்ஸா தெரியணும். அதுக்குத்தான்”
உடனே நான்..
ப்ச். வேணாம். அர்னால்டே அவ்ளோ பவ்யம்னுட்டு நான் பேசினா அவ்ளோதான்.
ஸ்டார் மகாபாரதம். இதிகாசத்தை சீரியலாக்கி இருக்கிறார்கள். அபிமன்யு வதமெல்லாம் “கர்ண” கொடூரம்! எந்த மொழியிலும் இப்படி எழுதப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் என்னென்ன நிகழப்போகிறதோ!
கிருஷ்ணா!!!
நேற்று முன்தினம் YCI சார்பாக, உடுமலையில் IMA ஹாலில் பேசியபோது, உடுமலை இரயில்நிலையம் காணாமலே போய்விட்டது என்று அங்கலாய்த்தேன். எனக்குப் பின் பேசிய டாக்டர் பாலசுப்ரமணியம், உடுமலை மக்கள் பேரவை அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் இன்னும் நான்கு மாத காலத்திற்குள்ளாக இரயில் நிலையம் செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி.
போலவே என்னைக் கடுப்புக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம், உடுமலையின் ஒரு சாலை விடாமல் எல்லாச் சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பாதாள சாக்கடையாம். பேசாமல் பூமிக்கு கீழேயே வழியமைத்து புரட்சி பண்ணலாம். அத்தனை குழிகள். என்றைக்கு சரி செய்வார்களோ!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55712285887906190402014-09-12T09:07:00.001+05:302014-09-12T09:07:53.656+05:30வரு-மானம்
நண்பனோடு அந்த உணவகத்தில் டின்னரில் இருந்தபோது, ரேடியோ போன்றொரு ஒலி கேட்டது.
‘நால்ரோடு சிக்னல் நால்ரோடு சிக்னல்’
நிமிர்ந்தால் வாக்கிடாக்கியுடன் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரர் உள்ளே வந்தமர்ந்தார். கொஞ்சமே கொஞ்சம் அந்த வாக்கி டாக்கியின் சத்தத்தைக் குறைத்தார். வாஷ் பேசினில் போய்க் கைகழுவி வந்தவர், “ஏம்ப்பா டிஷ்யூ பேப்பர் இல்லையா?’ என்றார். நார்மலாக இந்த எழுத்து 12 ஃபாண்ட் சைஸ் என்றால், அவர் கேட்டதை ஃபாண்ட் சைஸ் 30ல் எழுதலாம் அவ்வளவு ச-த்-த-மா-க-க் கேட்டார்.
‘இல்லை சார்’ என்று மிகவும் தன்மையாக பதில் சொன்ன சர்வர், இடதுபுறச் சுவற்றைப் பார்த்தார். அங்கே டிஷ்யூ பேப்பர் உபயோகத்தால் அழியும் மரங்களைப் பற்றிய ஒரு சிறிய போஸ்டர் இருந்தது. போக்குவரத்து காவல்துறை நண்பர் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.
“என்ன இருக்கு?” என்றார். அதே 30 ஃபாண்ட் சைஸ் குரல்.
ஆர்டர் செய்துவிட்டு, வாக்கி டாக்கியின் சப்தத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, ஃபோனை எடுத்தார்.
“அப்பறம் மாப்ள? எங்க இருக்க?”
“..............................” - எதிர்முனையின் பேசியது - நல்லவேளை - கேட்கவில்லை.
“நான் இங்க சாப்டுட்டு இருக்கேன் மாப்ள. கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கெல்லாம் போகாமயே டூட்டீல ஜாய் பண்ணீட்ட போல?”
அவரது குரலுக்கு உணவருந்திக் கொண்டிருந்த எல்லாருமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அதை சட்டை செய்ததாய்த் தெரியவே இல்லை.
சில நொடிகள் சம்பாஷணைக்குப் பிறகு, “அப்பறம்? இன்னைக்கு என்ன வசூல்?” என்றார் அதே சத்தமான குரலில்.
நான், திடுக்கிட்டு - நிமிர்ந்து நேராய் அவரையே பார்த்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை.
“அவ்ளோதானா? இதை வெச்சுட்டு என்னய்யா பண்ணப்போற? கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது? டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ?”
இதற்கு எதிர்முனை, ‘உனக்கு?’ என்று கேட்டிருக்கவேண்டும் என்பது இவரது பதிலில் தெரிந்தது.
“ப்ச்.. இங்க அதவிட மோசம் மாப்ள. காலைல இருந்து ஒண்ணும் சிக்காம, சாயந்தரம் ஒரே ஒரு மணல் லாரிக்காரான் வந்தான். வெறும் 400 ரூவாதான் கறக்க முடிஞ்சது. கடுப்பாய்டுச்சு மாப்ள இன்னைக்கு”
பொது இடத்தில், நான்கைந்து பேர் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவகத்தில் லஞ்சப் பரிமாற்றம் குறித்து வெளிப்படையாய், இத்தனை சத்தமாய்ப் பேசிக் கொள்வது குறித்த கவலை கிஞ்சித்தும் அவருக்கு இருக்கவில்லை. அதை ஏதோ ‘இன்னைக்கு எங்க பாஸ் என்னைப் பாராட்டினார்’ என்று ஊழியர்கள் செய்தி பரிமாறிக் கொள்வதைப் போல, பெருமையாய்ப் பகிர்ந்து கொள்கிறார்.
எனக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பனிடம் புலம்பிக் கொண்டே, அவசர அவசரமாய் அந்த இடம் விட்டு நகர்ந்தேன். கை கழுவிட்டு, பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகபட்சமாய் அந்தக் காவல்துறை நண்பரைக் கடக்கும்போது அவரை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் பார்க்கவில்லை என்றதால் இருக்கலாம்.
வெளியே வந்து பைக் எடுக்க நிற்கையில் நண்பன் சொன்னான். “அவனுக்கே அக்கறை இல்லை, பயம் இல்லை. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற?”
“இல்ல பாஸ். முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். இத்தனை பேர் கவனிக்கறாங்கன்னுகூட தெரியாதா? பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது?”
“தைரியமா பேசறான்னா அவ்ளோ லஞ்சம் குடுத்துதான் அவனும் வேலை வாங்கீருப்பான். அத அடைக்கணும்ல?”
‘அது சரி” என்ற நான் ஒரு நிமிஷம் நின்றேன். போனமுறை இதைப்போன்ற ஷாப்பிங் மால் விவகாரம் ஒன்றைப் பகிர்ந்தபோது, நண்பர்கள் ‘நானா இருந்தா சும்மா வந்திருக்க மாட்டேன். நாலு கேள்வி கேட்டுட்டுதான் வந்திருப்பேன்’ என்றெல்லாம் உசுப்பேற்றியது ஞாபகம் வந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘ப்ச்’ என்று பைக்கை எடுக்கப் போனேன்.
திடீரென்று ஒன்றை கவனித்து, “இரு வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு, நேராக அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன்.
சாப்பிட்டு முடித்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “என்ன?” என்பதாய் புருவமுயர்த்தினார்.
“உங்க பைக்கை, க்ராஸா நிறுத்திருக்கீங்க. என் பைக்கை எடுக்க முடியல. கொஞ்சம் வர்றீங்களா?” என்றேன். இப்போது என் குரல் சாதாரணத்தை விட கொஞ்சம் கடுமையாய், உயர்ந்திருந்தது.
“சைடுல தள்ளி வெச்சுட்டு எடுத்துப் போங்க பாஸ்”
“இல்லைங்க.. சைடு லாக் பண்ணீருக்கு. நீங்களே வந்து எடுங்க” என்றேன்.
அவர் மிகுந்த சலிப்புடனே எழுந்து வெளியே வந்தார். Anti Snatching Squad என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தன் பைக்கை சைட் லாக் விடுவித்து நகர்த்தினார்.
அப்போது நான் என் பைக்கை எடுத்தவாறே, என் நண்பனைப் பார்த்து சொன்னேன்.
“நான் சொன்னேன்ல.. ? இவருதான் பாஸ்”
என் நண்பன் குழப்பமாய்ப் பார்க்க, அந்த போலீஸ்காரரும் என்னைப் பார்த்தார்.
“ஒண்ணும் இல்ல சார்.. வெறும் நானூறுதான் வருமானம் வந்துச்சுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம் சார்.. வர்ட்டுங்களா?” என்று பைக்கை உதைத்து விரட்டினேன்.
இன்றைக்கிலிருந்து அவர் திருந்துவாரா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர் வாங்கும் லஞ்சப்பணத்தை பொது இடங்களில் இவ்வளவு சத்தமாய்ப் பகிர்ந்துகொள்ள மாட்டாரென்பது மட்டும் நிச்சயம்.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80197104905902709412014-09-07T10:19:00.000+05:302014-09-07T10:19:05.732+05:30கேள்வி கேட்டா தப்பா சார்?
வரிசையில் நான் முதல் ஆள். Counter Opening Time: 8.45 AM என்றிருந்தது. நான் வாட்சைப் பார்த்தேன். 9.01 என்று காட்டியது. கொஞ்சம் தள்ளி, சலவைக்கல் பெஞ்ச்சில் உமாவும், மகள்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அது கோவையின் ஒரு Shopping Mall. ‘8.45க்கு டிக்கெட் வாங்கிட்டு, மால் ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு, 9.30 ஷோ பார்க்கலாம்’ என்பது எங்கள் திட்டம்.
என் வாட்ச், ‘9..02’ என்றபோது சாவகாசமாக அரட்டை அடித்தபடி மூன்று பேர் கவுண்டர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளிருந்த, ஸ்க்ரீன் உயர்த்தப்படவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான்கைந்து கவுண்டர்கள் முன்னிலும் அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர்.
9.03
9.04
9.05
9.06
இப்போது மாலின், பணிப்பெண் ஒருத்தி சீருடையில் அந்த கவுண்டர் கதவைத் திறந்து, ஒரு கையில் கதவைப் பிடித்தவாறே உள்ளிருந்த ஒருத்தியிடம் 500 ரூவாய்த் தாளை நீட்டி டிக்கெட் கேட்டார். உள்ளிருந்த பெண்ணும் ஜாலியாக சிரித்துக் கொண்டு, ஏதோ அரட்டை அடித்தபடியே அவளுக்கு முதல் டிக்கெட்டை வழங்க ஆயத்தமானார்.
வழக்கம்போல என்னுள் இருந்த அம்பி விழித்துக் கொள்ள, “ஏங்க 8.45 கவுண்டர் ஓபன்னு போட்டிருக்கு. டிக்கெட் வாங்கிட்டு சாப்டுட்டு படம் பார்க்கலாம்னு வந்தா, 9.10 ஆகப்போவுது.. இன்னும் டிக்கெட் இஷ்யூ ஆரம்பிக்காம இருக்கீங்களே?’ என்றேன்.
நான் சொன்னது உள்ளிருந்தவர்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை. பாதிக் கதவை திறந்தபடி நின்றிருந்த பெண் நான் சொன்னதை உள்ளே வழிமொழிந்தார்:
”எட்டே முக்கால்ன்னு போட்டு, எட்டேமுக்காலுக்குத் தொறக்கலியாம். இப்டி லேட் பண்ணினா எப்டி டிஃபன் சாப்டு படம் பார்க்கறதுன்னு கேட்கறாரு” என்றார், கொஞ்சம் அதிகபட்ச டெசிபலில்.
அதற்கு உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வர சட்டென்ற ஒரு பயங்கரச் சிரிப்பு அவர்களுக்குள்ளே பரவியது.
‘என்ன சொன்னாங்க?’ என்று கேட்டேன் சற்றே கோபமுற்ற நான்.
“அவங்க என்கிட்ட சொன்னாங்க”
“நான் சொன்னத உள்ள சொன்னீங்கள்ல? அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்கிட்டயும் சொல்லுங்க”
“அவங்க என்கிட்டதான் சொன்னாங்கன்னு சொல்றேன்ல?”
இதற்குள் உள்ளே இருந்த பெண், ‘ஏய்.. உள்ள வந்து கதவைச் சாத்துடி. இப்டி பாதிக் கதவை தொறந்து நின்னு பேசாத’ என்று அதட்ட அந்தப் பெண்ணும் உள்ளே சென்றார்.
ஓரிரு நிமிடங்களில் கண்ணாடியைத் தடுத்திருந்த திரை உயர்த்தப்பட, என் முன்னே இருந்த கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பெண்ணும், அவருடன் வெளியிலிருந்து வந்த பெண்ணும் நின்றிருந்தனர். என்னைப் பார்த்ததும், அந்தப் பெண், டிக்கெட் வழங்கும் பெண்ணிடம் ஏதோ சொல்ல, டக்கென்று அவர் சீட் மாறி வேறு கவுண்டரில் சென்றமர்ந்தார். இப்போது நான் நின்றிருந்த கவுண்டரில் டிக்கெட் வழங்க யாருமில்லை.
நான் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மாலின் ஊழியப் பெண் வெளியே வந்து என்னை அவசரமாய்க் கடந்து சென்று விட, மற்ற டிக்கெட் கவுண்டர் வழியே ஆளாளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ஏதுமறியாத என் மகள் மீரா என்னிடம் வந்து, ‘என்னாச்சுப்பா.. ஃபோன் குடுங்க நான் அந்தக் கவுண்டர்ல நின்னு வாங்கிடறேன்’ என்று என் ஃபோனை வாங்கி இன்னொரு வரிசையில் நின்றாள். இதையெல்லாம் முகத்தில் வெற்றிக் களையுடன் டிக்கெட் கொடுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.
நுழைவுச் சீட்டு கிடைத்ததும், நேராக மேலே திரையரங்குக்குப் போனோம். லிஃப்ட் கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்த வரிசையில் போய் நின்றோம். 20 பேர்கள் இருந்த வரிசை, என் முன்னே நான்கைந்து பேராக குறைந்ததும் கவனித்தேன். கீழே 500 ரூபாயைக் கொண்டு வந்து டிக்கெட் வாங்கிய பெண் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், அவர் அருகே நின்று கைப்பயைச் சோதித்துக் கொண்டிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த அம்மணி என் முன் நின்றவர்களை விடுத்து, நேராக என்னைப் பார்த்தார்.
‘நான் சொன்னேன்ல.. இவன்தான் கீழ ரூல்ஸ் பேசினது’ – இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது உ.கை.நெ.கனி.
எனக்கு மீண்டும் ஒரு மாதிரி அவமான உணர்வு மேலிட, அவர்கள் அருகே சென்றதும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன்:
“ஜெயிச்சாச்சா? நான் நியாயமாக் கேட்ட கேள்விய உள்ள கிண்டலா சொல்லி, அந்தம்மாவை சீட் மாறி உட்கார வெச்சு எனக்கு லேட்டா டிக்கெட் கெடைக்க வெச்சதுல ஒரு சந்தோஷம் உங்களுக்கு.. இங்க இவங்ககிட்ட என்னைப் பத்தி கமெண்ட் பண்றதுல ஒரு சந்தோஷம். இப்ப நல்லா ஃபீல் பண்றீங்கள்ல?”
இதைக் கேட்டதும் சற்றுத் தள்ளி இருந்த சஃபாரி ஆசாமி வந்தார்.
”என்னம்மா ப்ரச்னை?’
“தெரியல சார். கீழயும் இப்டித்தான் ஏதோ கேட்டு ப்ரச்னை பண்ணாரு”
“என்ன சார் வேணும்?”
“கஸ்டமர் கேர்தான் சார் வேணும். வேறென்ன வேணும்? 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம்? 8.45க்கு போட்டுட்ட்டு 9.10 வரைக்கும் கவுண்டர் திறக்கல. அதக் கேட்டதுக்குத்தான் இத்தனையும்....”
இதற்குள் உமாவும் மகள்களும், ‘வாங்க போலாம்’ என்றழைக்க, நானும் நகர்ந்தேன்.
இடைவேளையில் நடந்தவற்றை என் மகள்களிடம் பகிர்ந்து கொண்டேன். படம் முடிந்ததும், ‘வெளில போறப்ப அந்தப் பொண்ணைப் பார்த்து மறுபடி கேட்கலாமாப்பா?’ என்றாள் மீரா. ‘வெளில போற வழி வேற.. அதுனால அவங்களைப் பார்க்கப் போறதில்ல” என்றேன்.
ஆனால், சாப்பிட்டு விட்டு வேறு வழியாக எஸ்கலேட்டரில் இறங்க, கீழே அந்தப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தார்.
“ப்பா.. அந்தக்கா நிக்குது. ஏதும் கேட்கப் போறீங்களா?’
”இல்ல குட்டீம்மா. அவங்க கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நினைக்கறேன்” என்றேன்.
கீழே இறங்கி, அவரைக் கடக்க எத்தனிக்கையில் என்னைத் தடுத்து, “ஸாரி சார்.. நான் பண்ணது தப்புதான். ஃபேமலியோட, ஒரு லீவு நாளைக்கு வந்த உங்க மூடை ஸ்பாய்ல் பண்ணீட்டேன். மேனேஜர்ட்ட சொல்லி, கரெக்ட் டைமுக்கு கவுண்டர் திறக்க வைக்கறேன்” என்று சொல்வாரென்று நினைத்தேன். ம்ஹும். முன்னைவிடக் கடுமையாக முறைத்துவிட்டுக் கடந்தார்.
அடுத்தமுறை அங்கு செல்கையில், இந்தச் சம்பவம் மறந்து - அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்கும் மனோபாவம் எனக்கு வாய்க்கவேண்டும். பார்ப்போம்!
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43110756496590916582014-08-02T08:44:00.000+05:302014-08-02T08:44:14.916+05:30வரம்!
அலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.
இன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.
அசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.
வந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு?; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.
ஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-
“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா?”
“தெரியும்” - ஏஞ்சலின்.
“பாடு?”
பாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.
செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்கு:-
கண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.
நமக்கு?
தோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.
செந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.
பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com1