Saturday, April 3, 2010

பையா - ஹையா!!!!!!!!!!!!


ண்டதும் காதல் வயப்படுகிற ஹீரோ. அந்த ஹீரோவிடம் எதேச்சையாக உதவி கேட்டுச் சேரும் ஹீரோயின். இருவருக்கும் இருவேறு வில்லன் கோஷ்டிகள். ஹீரோ இரு கோஷ்டிகளையும் சமாளித்து, ஹீரோயின் கரம் பிடிக்கும் சாதாரணக் கதைதான். ஆனாலும்.. பையா சளைக்க வைக்காமல் கவர்கிறான்.

வேலை தேடும் ஹீரோ, அவனுக்கு உதவும் நான்கைந்து நண்பர்கள் என்று கொஞ்சம் தொய்வாக ஆரம்பிக்கும் படம், தமன்னா கார்த்தியின் காரில் ஏறியவுடன் சூடு பிடிக்கிறது. எதற்காக எங்கு போகிறார் என்பது தெரியாமல் ஹைவேயில் கார் சீறிப்பாய்கிறது. திடீரென வில்லனின் ஆட்கள் துரத்த அவர்களை கார்த்தி பந்தாட இன்னும் ஸ்பீடாகிறது படம்.

தமன்னாவின் கதையை ஃப்ளாஷ்பேக்கில் காட்டாமல், சுருக்கமாக அவர் வாயாலேயே சொல்ல வைத்தது சிறப்பு. இல்லாவிட்டால் படம் கொஞ்சம் தொய்வடைந்திருக்கும்.

இடைவேளைக்குப் பிறகு இருவரும் மும்பை சென்று சேர்ந்துவிட அங்கே இருவர்களின் வில்லன் கோஷ்டியும் ஒன்று சேர்ந்துவிடுகிறது. அதன்பிறகு வழக்கமான சண்டை, வழக்கமான க்ளைமாக்ஸ்.


கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆக்‌ஷன் படம். முகத்தில் ஒரு ரஃப்னஸ் இருப்பதால் பொருத்தமாகத்தான் இருக்கிறது. தமன்னா, பெரிதாக ஒன்றுமில்லையெனினும் குறைவில்லாமல் தன் பாத்திரத்துக்குப் பாந்தமாய் நடித்திருக்கிறார். ‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை!இடைவேளைக்குப் பின் நண்டு ஜெகனின் ஸ்லாங்கும், காமெடியும் சிரிக்க வைக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா - க்ரேட்! ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது பின்னணி இசை துள்ளி விளையாடுகிறது. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். ‘என் காதல் சொல்ல’ க்ளாப்ஸை அள்ளுகிறதென்றால், சஸ்பென்ஸாக சிடியில் வராத இன்னொரு பாடலை அவரே பாடி மெய் மறக்கச் செய்கிறார். அதென்ன யுவன், காதல் சம்பந்தமான சோகப்பாட்டென்றால் அவ்வளவு இன்வால்வ்மெண்ட் உங்களுக்கு?


காமிரா - மதி. ஹைவே துரத்தல்கள், மண் புழுதிச் சண்டைகள், இரவு காட்டுக்குள் நடக்கும் சேஸிங், அடடா மழை பாடல் காட்சிகள் - எதை விடுப்பதென்று தெரியாமல் எல்லா இடங்களிலும் பாராட்ட வைக்கிறார்.

படத்தில் எந்த ட்விஸ்டோ, சஸ்பென்ஸோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேவையுமில்லை. கமர்ஷியலாக ஸ்பீடாகப் போகிறது. ‘ஒருத்தன் இத்தனை பேரை அடிக்கறதெல்லாம் நம்பவா முடியும்’ என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ஹீரோயிஸத்தை ரசிக்க முடிந்தால் படம் உங்களுக்கு(ம்) பிடிக்கும்.

ஆம். எனக்குப் பிடித்தது!


.

Friday, April 2, 2010

சங்கத்திற்கு பாடல் தந்த சிங்கம் வாழ்க!

ஏனோதானோ என்று பார்க்காமல் பொறுமையாக வரிக்கு வரி அர்த்தம் புரிந்து ரசித்துப் பார்க்கவும்.

.