Saturday, April 3, 2010

பையா - ஹையா!!!!!!!!!!!!


ண்டதும் காதல் வயப்படுகிற ஹீரோ. அந்த ஹீரோவிடம் எதேச்சையாக உதவி கேட்டுச் சேரும் ஹீரோயின். இருவருக்கும் இருவேறு வில்லன் கோஷ்டிகள். ஹீரோ இரு கோஷ்டிகளையும் சமாளித்து, ஹீரோயின் கரம் பிடிக்கும் சாதாரணக் கதைதான். ஆனாலும்.. பையா சளைக்க வைக்காமல் கவர்கிறான்.

வேலை தேடும் ஹீரோ, அவனுக்கு உதவும் நான்கைந்து நண்பர்கள் என்று கொஞ்சம் தொய்வாக ஆரம்பிக்கும் படம், தமன்னா கார்த்தியின் காரில் ஏறியவுடன் சூடு பிடிக்கிறது. எதற்காக எங்கு போகிறார் என்பது தெரியாமல் ஹைவேயில் கார் சீறிப்பாய்கிறது. திடீரென வில்லனின் ஆட்கள் துரத்த அவர்களை கார்த்தி பந்தாட இன்னும் ஸ்பீடாகிறது படம்.

தமன்னாவின் கதையை ஃப்ளாஷ்பேக்கில் காட்டாமல், சுருக்கமாக அவர் வாயாலேயே சொல்ல வைத்தது சிறப்பு. இல்லாவிட்டால் படம் கொஞ்சம் தொய்வடைந்திருக்கும்.

இடைவேளைக்குப் பிறகு இருவரும் மும்பை சென்று சேர்ந்துவிட அங்கே இருவர்களின் வில்லன் கோஷ்டியும் ஒன்று சேர்ந்துவிடுகிறது. அதன்பிறகு வழக்கமான சண்டை, வழக்கமான க்ளைமாக்ஸ்.


கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆக்‌ஷன் படம். முகத்தில் ஒரு ரஃப்னஸ் இருப்பதால் பொருத்தமாகத்தான் இருக்கிறது. தமன்னா, பெரிதாக ஒன்றுமில்லையெனினும் குறைவில்லாமல் தன் பாத்திரத்துக்குப் பாந்தமாய் நடித்திருக்கிறார். ‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை!இடைவேளைக்குப் பின் நண்டு ஜெகனின் ஸ்லாங்கும், காமெடியும் சிரிக்க வைக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா - க்ரேட்! ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது பின்னணி இசை துள்ளி விளையாடுகிறது. எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். ‘என் காதல் சொல்ல’ க்ளாப்ஸை அள்ளுகிறதென்றால், சஸ்பென்ஸாக சிடியில் வராத இன்னொரு பாடலை அவரே பாடி மெய் மறக்கச் செய்கிறார். அதென்ன யுவன், காதல் சம்பந்தமான சோகப்பாட்டென்றால் அவ்வளவு இன்வால்வ்மெண்ட் உங்களுக்கு?


காமிரா - மதி. ஹைவே துரத்தல்கள், மண் புழுதிச் சண்டைகள், இரவு காட்டுக்குள் நடக்கும் சேஸிங், அடடா மழை பாடல் காட்சிகள் - எதை விடுப்பதென்று தெரியாமல் எல்லா இடங்களிலும் பாராட்ட வைக்கிறார்.

படத்தில் எந்த ட்விஸ்டோ, சஸ்பென்ஸோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. தேவையுமில்லை. கமர்ஷியலாக ஸ்பீடாகப் போகிறது. ‘ஒருத்தன் இத்தனை பேரை அடிக்கறதெல்லாம் நம்பவா முடியும்’ என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ஹீரோயிஸத்தை ரசிக்க முடிந்தால் படம் உங்களுக்கு(ம்) பிடிக்கும்.

ஆம். எனக்குப் பிடித்தது!


.

26 comments:

Nataraj said...

பையா..அட போய்யா (உங்கள சொல்லல..நான் என்ன சொன்னேன்)
ஒரே மிக்சட் விமரிசனமா வந்துக்கிட்டிருக்கு..10$க்கு வொர்த்தான்னு தெரில்லயே...

ஆமா, இந்த பட பாட்டுல ஒரு ஜீவன் (soul) இருக்குங்கறீங்களா?

வாசகி said...

Me not able to see !! :-( (

Vijay Ramaswamy said...

படம் ஒவோருவர் பார்வையில் ஒவோருவிச்தமாக இருக்கிறது எனது பார்வையில்....இந்த படம் சுமார் ரகம்தான்..... இதை போன்ற படங்களை தியேட்டர் இல் பார்ப்பதற்கு அங்காடி தெரு வை இருமுறை பார்க்கலாம்

எறும்பு said...

//‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை!//

அப்ப அந்த புள்ள, அந்த மழைய விட உங்க ஜொள்ளு மழைலதான் அதிகமா நனைஞ்சிருக்கும். அந்த பாட்டு எடுக்கும்போது உங்கள கூப்பிட்டிருந்தா தயாரிப்பளருக்கு தண்ணி செலவு மிச்சமாயிருக்கும்.
:)

Maduraimalli said...

அங்காடி தெரு vimarasanam eppo?? padam pudikalayae illae paakaliya?

நாஞ்சில் பிரதாப் said...

பதிவின் தலைப்பு ரைமிங்கா இருக்குன்னு உள்ளே வந்தேன்... அப்ப பார்க்கலாங்கறீங்க...ரைட்டு...

கார்க்கி said...

இந்த தலைப்பை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!!!!!!

பாஸ்.. சுறா பாடல்கள் கேட்டிங்களா?

படம் செம போர்னு என் ஆபிஸுக்கு எதிர இருக்கிற கண்பதிராம் தியேட்டர் டாக் சொல்லுது

பரிசல்காரன் said...

@ மதுரை மல்லி

அங்காடித்தெரு மாதிரியான அபாரமான படத்தை இன்னும் பார்க்கவில்லை. குடும்பத்தோடு படம் பார்ப்பது என் வழக்கம். சோகமா இருக்கும் போல.. என்று பயப்படுகிறார்கள். தனியே பார்த்து பிறகு எழுத விருப்பம்.

@ கார்க்கி

//சுறா பாடல்கள் கேட்டிங்களா?

படம் செம போர்னு //

படமே வர்ல.. அதுக்குள்ள போர்ன்னு பேச்சா??

ரமேஷ் வைத்யா said...

ngoyya

butterfly Surya said...

நேற்று ஒரு நண்பர் பார்த்து விட்டு சரியான மொக்கை படம் சொன்னாரு.
கேபிளும் அப்படிதான் சொல்றாரு.
எனவே ரிஸ்க் எடுக்க விரும்பல.
any way..பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.

கார்க்கி said...

/படம் செம போர்னு //

படமே வர்ல.. அதுக்குள்ள போர்ன்னு பேச்சா/

அப்படின்னா இது பையாவைப் பற்றின்னு புரிஞ்சிக்கனும்.. சாரு மாதிரி தேவையான வரிகளை மட்டும் காப்பி பேஸ்ட் செய்வது நம்ம வேலையா சகா???

நர்சிம் said...

அருமை பரிசல். //
படத்தில் எந்த ட்விஸ்டோ, சஸ்பென்ஸோ ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.//

ஏன் இவ்வளவு கோவம்? ;)

cs said...

ungalukku engal meethu enna kobam?

intha padaththai paarthu naangal

nonthu poganuma?

ethuvaga irunthalum pesi theeerthuk

kollalaam.

a.chandarsingh.

shabi said...

‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை!////same same feelings

ஆதிமூலகிருஷ்ணன் said...

படம் சுமார் ரகம்.!

Suresh said...

Padam waste theatre la orae sound, :-( from lingu and karthi we never expected this kind of movie

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

உங்களின் பார்வையில் விமர்சனம் அருமை !

gopi said...

I too saw the movie and liked a lot. No extra comedy track was a major relief. Also the songs gel well with the movie.

You are right about 'Angaadi Theru' movie. A very good movie. It's very depressing. Watching this without kids makes sense.

Cheers

Gopi

விக்னேஷ்வரி said...

‘அடடா மழைடா’ பாடலில் தமன்னாவை விட்டு கண்களைப் பிரிக்க முடியவில்லை! //

உமா, நோட் த பாயிண்ட்.

chezhian said...

தமன்னா, பெரிதாக ஒன்றுமில்லை


appadina enna

Jeeves said...

எனக்கும் பிடிச்சிருந்தது. நல்ல படம்

subramaniam said...

udal nangu therivittatha?

subramaniam said...

enna romba busy ya- yezhuthi naalachi pola iruke?

Rajeev said...

பரிசல், என்ன சேதி?? விடுமுறைக்கு வெளிநாடு போயிட்டீங்களா.. பதிவேதும் காணோம்..

Ganpat said...

நண்பரே,

ஒரு மாத காலமாக பதிவு இல்லை! எந்த அறிவிப்பும் இல்லை !!

எல்லாம் நலம்தானே?

நன்றி!

ஸ்ரீ.... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஸ்ரீ....