கால ஓட்டத்தில் காணாமல் போனவை என்று கேட்டால் எப்போதுமே என் நினைவுக்கு வருவது கடிதம் எழுதும் பழக்கம்தான்! இதைப் பற்றி கடந்து போன கடிதநாட்கள் என்றொரு பதிவு நான் எப்போதோ போட்டுவிட்டதால் அதே தகவல்களைத்தான் இங்கே மறுபடி தரவேண்டியிருக்கும்! (நல்ல பதிவாக நான் நினைக்கும் அதற்கு இரண்டே பின்னூட்டம். அதில் ஒன்று நான்!)
அதைத்தவிர வேறொன்றென்றால் அதுவும் எழுதும் பழக்கம்தான். கடிதம் அல்ல! டைரி!
இப்போதெல்லாம் யாராவது டைரி எழுதுகிறார்களா என்ன? டைரியில் எதையோ எழுதுகிறார்கள். ஆனால் முன்பெல்லாம் போல நம்மைப் பற்றி, தினசரி நடப்புகளை சுயசரிதை போல டைரி எழுதுவோமே, அந்தப் பழக்கம் இப்போதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!
எனக்கு எழுதும் பழக்கம் வந்ததே நாட்குறிப்புகள் எழுதித்தான் எனலாம்! ‘காலை ஆறரை மணிக்கு எழுந்தேன். பல்துலக்கிவிட்டு காபி கேட்க அடுக்களைக்கு போகும் முன் மாமா ‘ஏண்டா.. படிக்காம அடுக்களைலல என்ன பண்ணீட்டிருக்க?’ என்று திட்டினார்’ என்கிற ரீதியில் சுவாரஸ்யமே இல்லாமலிருக்கும் என் நாட்குறிப்புகள். சில நாள் ‘இன்று மனது சரியில்லை. எழுதுவதற்கு ஒன்றுமில்லை’ என்றும் இருக்கும். பின்னாளில் அந்த டைரியைப் புரட்டிப் பார்க்கும்போது, அப்போது மனது சரியில்லாமலானது எதனால் என்று கேள்வி என்னைத் தாக்கும்! ‘அடேய்.. அதை எழுதியிருந்தா நல்லாயிருக்குமில்லையா’ என்று நானே நினைத்ததுண்டு!
கொஞ்சம் விவரம் தெரிந்து சுஜாதா, பாலகுமாரன் படிக்க ஆரம்பித்தபோது எழுதியவை சுவாரஸ்யமானவை! பார்த்த படம், நாட்டு நடப்பு (?), படித்த புத்தகங்களின் விமர்சனங்கள், சைட்டடித்த பெண்கள் என்று கண்டதையும் எழுத ஆரம்பித்தேன். கதை, நாவல்கள் தாண்டி சுஜாதாவின் கட்டுரைகளில் லயித்த நாட்களில் (இப்போதும்!) எழுத்து இன்னமும் சுவாரஸ்யமான தளத்தில் பயணித்தது. ஒவ்வொரு நாளும் அந்த நாளின் ஏதேனும் முக்கிய, சொல்லிக்கொள்ளும்படியான நிகழ்வை எடுத்துக் கொண்டு அதை டைரியில் கட்டுரை வடிவில் எழுதுவது அவ்வளவு இன்பமாக இருந்தது!
அதற்குப் பிறகு முன்கதை சுருக்கம் (பாலகுமாரன்), வனவாசம் (கண்ணதாசன்) இவற்றைப் படித்து ‘ஐயையோ.. நமக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாச்சே... பிற்காலத்துல என்னோட சுயசரிதை எழுதச் சொல்லி பதிப்பகங்கள் க்யூவுல நிக்கறப்ப என்ன பண்றது?’ என்று ஞானோதயம் பிறந்து நானே சுய சரிதை மாதிரி ட்ரை பண்ணினேன். ‘அவன்’ன்னு என்னை படர்க்கைல விளிச்சு எழுத ஆரம்பிச்சேன். எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசிச்சு (ஏன் ஆரம்பிக்கணும்ன்னு யோசிச்சிருக்கலாம்!) என்னோட நண்பர்கள் பத்தி முதல்ல எழுதலாம்ன்னு முடிவு பண்ணி, ‘அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் ஐந்து பேர்’ அப்படீன்னு துவங்கி, தனித்தனி தலைப்பெல்லாம் போட்டு என்னோட ஐந்து நண்பர்கள் பற்றி எழுதியிருந்தேன்.
ஒரு அசுபயோக அசுப தினத்தில் நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கொரு பீர் அடித்துவிட்டு இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சீரியஸாக விவாதித்துக் கொண்டிருந்தபோது சும்மா இருக்க மாட்டாமல் என் நண்பன் ஒருத்தன் என் கையில் இருந்த டைரியை வாங்கிப் பார்த்தான்.
அந்த டைரில முதல் மூன்று நான்கு பக்கங்களுக்கு வால்டர் தேவாரம் துப்பாக்கி கைல வேச்சிருக்கற ஸ்டில், விஜயகாந்த் எட்டி உதைக்கற ஸ்டில், ப்ரூஸ்லி நின்ஜாவைச் சுத்தற ஸ்டில்ன்னு ஒட்டி ஒவ்வொரு பக்கமும் ‘இதுக்கு மேல திறந்தா தீர்ந்தடா மவனே’ அப்படீங்கறமாதிரியெல்லாம் எழுதி லே-அவுட் பண்ணி வெச்சிருப்பேன். யாரும் பார்க்கக்கூடாதுன்னு! (பின்னாளில உமாகிட்ட அதையெல்லாம் காமிச்சு பேசீட்டிருந்தப்போ.. ‘யாராவது பார்க்கணும்ன்னு இவ்ளோ நேர்த்தியா பண்ணீருக்கிங்க’ ன்னாங்க! ‘அந்த யாரோ நீதான்னு அப்போ பீலா விட்டாலும், அவங்க சொன்னதுல இருந்த உண்மை ஒத்துக்கச் சொல்லிச்சு)
அதைப் பார்த்த நண்பன் ‘டேய் நான் பார்க்கலாமில்ல?’ ன்னான். பீர் மயக்கத்துல ‘நீ என் நண்பண்டா! பாரு’ன்னுட்டேன்! பார்த்துட்டு அந்த அஞ்சு பேரும் ஒரே ரகளை! நான்தான் கேனத்தனமா என்னமோ என்னோட எழுத்து நாட்டுடமையாகற மாதிரி பேசீட்டு திரிஞ்சேன்னா, அவனுங்க ‘எங்களைப் பத்தி
இவ்ளோ ஓப்பனா எழுதியிருக்க. நாளைக்கு பத்திரிகைல வந்தா என்னாகறது’ ன்னு சண்டை போட்டாங்க! எனக்கு வந்த சிரிப்புக்கு அளவே இல்லை. இப்ப வடிவேலு கேட்ட கேள்வியை அப்பவே நான் என்னையே கேட்டுகிட்டேன்!(இன்னுமாடா இந்த ஊர் நம்மளை நம்புது?) அந்த விவாதம் ஒரு கட்டத்துல முத்தி அந்த டைரியை கிழிக்க வேண்டியதா போச்சு! (அடுத்த நாள்தான் தெரிஞ்சது, முதல்ல டைரியை வாங்கிப் படிச்சவன் அடிச்சிருந்தது பீர் அல்ல. ஹாட்! அது பண்ணினதுதான் அத்தனையும்!)
அடுத்தநாள் அவங்க வந்து ‘நல்லா எழுதியிருந்தடா. ஏதோ எமோஷன்ல சொல்லீட்டோம். தொடர்ந்து எழுது’ன்னாங்க. சரீன்னு அவங்க பேர் போடாம எழுத ஆரம்பிச்சு, பல விஷயங்களையும் தொடர்ந்து சுவாரஸ்யமா எழுதினேன். பின்னாளில அதை உமாகிட்ட குடுத்தப்ப, அந்த டைரி திரும்பி வரும்போது பல இடங்கள்ல சிகப்பு ஸ்கெட்ச்ல அடிச்சுட்டுதான் குடுத்தாங்க! எதெது அவங்களுக்கு பிடிக்கலன்னு புரிஞ்சுக்க அது உதவிச்சு!)
அதற்குப்பிறகு அதிகமாக டைரி எழுதின ஞாபகமே இல்லை! அப்பப்ப பிடிச்ச, பாதிச்ச கவிதைகளை எழுதி வெச்சுட்டதோட சரி! நல்ல நினைவா என்கிட்ட இருந்த ஆறு டைரியையும் ஒரு யோகா க்ளாஸுக்கு எடுத்துட்டு போனப்ப ‘பழசை மறந்துடணும்’ன்னு சொல்லி, தீக்குள்ள போடச் சொல்லீட்டங்க! அது அப்படியே போச்சு! அதுல எழுதப்பட்ட விஷயங்கள் ஆயிரம் பதிவுகளுக்கு சமம்! (சிரிப்பைப் பாரு! சந்தோஷமா எல்லாருக்கும்?)
வருடா வருடம் இந்த முறை நல்ல டைரி வருமா என்று எதிர்பார்ப்பு இருப்பதுண்டு! இன்னமும் டைரி மீதான மோகம் குறையவே இல்லை. ஆனால் எழுதத்தான் முடிவதில்லை! நீங்கள் யாரேனும் எழுதுகிறீர்களா என்ன? (எழுதுகிறீர்களா என்ன-அப்படீன்னு கேக்கலாம். என்ன எழுதுகிறீர்கள்-ன்னு கேக்க முடியாது! தமிழ் ஈஸ் க்ரேட்யா!)
டிஸ்கி: கால ஓட்டத்தில் காணாமல் போனவை என்ற தலைப்பில் சுரேகா ஆரம்பித்து, புதுகைத் தென்றல் என்னை எழுதச் சொன்னதற்காக எழுதிய பதிவு. எனக்கடுத்ததாய் யாரை அழைப்பது என்று யோசித்தபோது, யார் யாருக்கெல்லாம் இந்த தலைப்புல மேட்டர் இருக்கோ அவங்க எல்லாம் எழுதலாம்ன்னு சொல்றது உத்தமம்ன்னு நெனைச்சுட்டேன்!
ஆனாலும் ஒருத்தர் கண்டிப்பா எழுதணும்ன்னு ஆணையிடறேன். அவர் என் பார்ட்னர் வெண்பூ.
80 comments:
:-)))...
அடைப்புக்குறி கமெண்ட்டுகள் ஜூப்பரு!!!
//எழுதுகிறீர்களா என்ன-அப்படீன்னு கேக்கலாம். என்ன எழுதுகிறீர்கள்-ன்னு கேக்க முடியாது! // செம சுவாரஸ்யமான கவனிப்பு! பரிசல்! ரொம்ப ஏங்க வெச்ச பதிவு! டைரி கல்லூரி நாட்களில் Infatuation(?)அனுபவங்கள், வேலையின் ஆரம்ப எரிச்சல்+சோதனை நாட்கள், வேலை தேடியபோது சோதனையான சுவாரஸ்யங்கள்னு எழுதி இன்னமும் வெச்சிருக்கேன்! ஆனா கடைசியா எழுதி ஒரு ரெண்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்! அப்புறம் உங்களுக்கு விசிறி வாங்கிட்டேன்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
எழுதும்போது கிடைக்காத டைரிகள், இப்ப எழுத முடியாதப்ப விதவிதமா வகைக்கு ஒன்னா கிடைக்குது.
அப்படியே மற்றவர்களுக்கு கொடுத்து விடுகிறேன்.
எழுதும் ஆசையில்தான் இந்த பிளாக் உலகில் சுற்றிக்கொண்டிருக்கிறோம். ஆகவே பெரும்பாலான பிளாகர்களுக்கு உங்கள் அனுபவங்கள் அப்படியே நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன், மிகவும் ரசித்தேன். பல விஷயங்களில் கொசுவத்தியை சுற்றிக்கொண்டேன். //கதை, நாவல்கள் தாண்டி சுஜாதாவின் கட்டுரைகளில் லயித்த நாட்களில் // இந்த வரியை சோறு தண்ணியில்லாமல் என சேர்த்து வாசித்துக்கொள்கிறேன்.
(எனது பேவரிட் கிழிஞ்ச டவுசர் ஒண்ண காணாமபோயி ரொம்ப வருசமாகுது..)
ஒரு தபா 'மீ த பஸ்ட்டு' போடலான்னா உட மாட்டாங்களே..
@ விஜய் ஆனந்த்
(அப்படியா? நன்றி!)
@ வெங்கட்ரமணன்
//உங்களுக்கு விசிறி வாங்கிட்டேன்!//
நெஜமாவா? இப்படீன்னு தெரிஞ்சதுன்னா வேற எதுனா கேட்டிருப்பேனே... அவ்வ்வ்வ்வ்!
@ வடகரை வேலன் said...
எழுதும்போது கிடைக்காத டைரிகள், இப்ப எழுத முடியாதப்ப விதவிதமா வகைக்கு ஒன்னா கிடைக்குது.//
ரிப்பீட்டேய்!
@ தாமிரா
//இந்த வரியை சோறு தண்ணியில்லாமல் என சேர்த்து வாசித்துக்கொள்கிறேன்.//
தனியா வேற சொல்லணுமா?
அவர் எழுத்துக்கு முன்னாடி சோறாவது, தண்ணியாவது!
ரொம்ப நயமா எழுதியிருக்கீங்க !
அழகு!
நானும் கடந்த 8 வருஷமா டைரி எழுதும் வழக்கத்தை காகிதத்திலிருந்து விட்டு...
நோட்பேடுக்கு மாறிட்டேன்.. எல்லா நாள் டைரியும் இப்போ...மடிக்கணிணியில்..பாத்துக்கவேண்டியதுதான்.!
//‘யாராவது பார்க்கணும்ன்னு இவ்ளோ நேர்த்தியா பண்ணீருக்கிங்க’ ன்னாங்க//
உண்மை..உண்மை..
நல்ல பதிவு..
(டைரி..ஜன 1 ல் முழுபக்கம்.. பிப் 1 ல் 1 சட்டை 2 பனியன் என சலவை கணக்கு..எங்கேயோ படித்தது)
நர்சிம்
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பரிசல்.
//கொஞ்சம் விவரம் தெரிந்து சுஜாதா, பாலகுமாரன் படிக்க ஆரம்பித்தபோது எழுதியவை சுவாரஸ்யமானவை! //
மிகச் சரியான உண்மை பரிசல். நாம் என்ன படிக்கிறோமோ அதுதான் நாம் எழுதுவதில் வெளிவருகிறது. லக்கி கூட ஒரு பதிவில் சொல்லியிருப்பார், நீங்கள் நல்ல எழுத்தாளர் / பதிவராக வர வேண்டுமென்றால் முதலில் பலதரப்பட்ட எழுத்தாளார்களையும் பதிவுகளையும் படியுங்கள் என்று.
இப்போ நீங்க டைரி எழுதலையேன்னு கவலைப்படாதீங்க.. அதுதான் வாரம் குறைந்தது ஐந்து பதிவாவது போட்டுடறீங்களே. அதுவும் பெரும்பாலும் உங்கள் ரியல் லைஃப் சம்பந்தமான பதிவா!!
******
ஆனாலும் என்னை மாட்டி விட்டிருக்க வேண்டாம்... :) கண்டிப்பாக எழுதுகிறேன்.
அருமை பரிசல்..ஒரு சந்தேகம். நீங்க எழுதிய பதிவை பல முறை வாசித்து பிழை திருத்தி, மெருகேற்றிய பின் பதிவேற்றம் செய்வீர்களா? எனக்கு பள்ளி தேர்விலிருந்தே ஒரு கெட்ட பழக்கம். நான் எழுதியதை மறு ஆய்வு செய்ய மாட்டேன்.. இப்பொதும் யோசித்துக் கொண்டே தட்டச்சு செய்து அப்படியே பதிவேற்றம் செய்கின்றேன். உங்க அடைப்புக்குறி கமெண்ட் எல்லாம் மறுவாசிப்பின் போது சேர்த்தது என் நினைக்கிறேன்
நன்றி சுரேகா!
@ நர்சிம்
நன்றி!
(1. உங்க ஃபோன் நெம்பர் கேட்டேன்.. அதிஷாகிட்ட. இதோ தர்றேன்னவரு இப்போ வரைக்கும் தர்ல.
2. படத்துல இருக்கறது நீங்களா? ஸ்மார்ட்!!)
@ வெண்பூ
//ஆனாலும் என்னை மாட்டி விட்டிருக்க வேண்டாம்... :) கண்டிப்பாக எழுதுகிறேன்.//
உங்ககிட்ட சுவையான பழைய ஞாபகம் எதையாவது தட்டி எழுப்பலாமேன்னுதான். நான் உங்க எழுத்துக்கு ரசிகன்ங்க!
கே.கே.
எப்போதும் போல படு சுவாரஸ்யமான பதிவு. Went nostalgic. டைரி எழுதுவது அறவே ஒழிந்தாலும், பதிவு எழுதுவது ஒரு சுக அனுபவம். (வாசிப்பவர்கள் பாவம்). ஆனாலும் டைரி அளவு உண்மை எங்கும் எழுத முடியாதது ஒரு பெரும் சோகம்.
//(எழுதுகிறீர்களா என்ன-அப்படீன்னு கேக்கலாம். என்ன எழுதுகிறீர்கள்-ன்னு கேக்க முடியாது! தமிழ் ஈஸ் க்ரேட்யா!)//
சச்சின் straight-drive மாதிரி vintage stuff. இப்பிடி ஆடு நண்பா.
அனுஜன்யா
‘இன்று மனது சரியில்லை. எழுதுவதற்கு ஒன்றுமில்லை’ என்றும் இருக்கும்
இந்த வரிகள் என் டைரியில் எக்கச்சக்கமாக இருக்கும் ,இதெல்லாம் ரொம்ப வருஷத்திற்கு முன்னாள்
// கார்க்கி said...
அருமை பரிசல்..//
நன்றி!
//ஒரு சந்தேகம். நீங்க எழுதிய பதிவை பல முறை வாசித்து பிழை திருத்தி, மெருகேற்றிய பின் பதிவேற்றம் செய்வீர்களா?//
கேள்விக்கு நன்றி கார்க்கி!
பலமுறை வாசிப்பதெல்லாம் இல்லை. மேட்டர் மனதுக்குள் ரெடியானதும் அப்படியே மனதுக்குள்ளேயே ஆரம்ப வரிகள்ல துவங்கி எப்படி முடிக்கறதுன்னு ஃப்ரீயா இருக்கறப்பவெல்லாம் மனசுல எழுதிகிட்டே இருப்பேன். கணிணி முன் உட்கார்ந்ததும் எழுத ஆரம்பிக்கும்போது அப்படியே எழுதீட்டே இருப்பேன்.
// உங்க அடைப்புக்குறி கமெண்ட் எல்லாம் மறுவாசிப்பின் போது சேர்த்தது என் நினைக்கிறேன்//
ப்ராக்கெட்ல இருக்கறதும் அப்பவே அடிக்கறதுதான். உங்க எழுத்த நீங்களே வாசகரா படிச்சா இது சாத்தியம்!
//
உங்ககிட்ட சுவையான பழைய ஞாபகம் எதையாவது தட்டி எழுப்பலாமேன்னுதான். நான் உங்க எழுத்துக்கு ரசிகன்ங்க! //
வடிவேலு சொல்றதுக்கு முன்னாலயே நீங்க உங்க நண்பர்கள்கிட்ட சொன்னதுதான் இதுக்கான என்னோட பதில்... :)
1.// உங்க ஃபோன் நெம்பர் கேட்டேன்.. அதிஷாகிட்ட. இதோ தர்றேன்னவரு இப்போ வரைக்கும் தர்ல.//
ஜிமெயிலிட்டேன் தலைவா..
நர்சிம்
டயரியைப் படிச்சா மாதிரியே எழுதியிருக்கீங்க.
நானும் டயரி எழுத ஆரம்பிச்சேன். அது நம்ம மனசு மாதிரி. அடுத்தவங்க படிக்க ஆரம்பிச்சா கஷ்டம்னு நினைச்சு விட்டுட்டேன்.
இப்ப டயரி வாங்குறது கூட இல்லை.
நல்லா சுவாரசியமா இருக்கு!
//புதுகைத் தென்றல் said...
டயரியைப் படிச்சா மாதிரியே எழுதியிருக்கீங்க./
டயரியை எழுதற மாதிரி-ன்னு சொல்ல வர்றீங்கன்னு நெனைக்கறேன்...!
//Sundar said...
நல்லா சுவாரசியமா இருக்கு!//
நன்றி சுந்தர்!
//கால ஓட்டத்தில் காணாமல் போனவை //
கையெழுத்துப் போடும் அல்ல ... எழுதும் பேனாக்கள் !
:)
நல்லா எழுதி இருக்கிங்க பரிசல்,
நான் டைரி எழுத முயற்சிக்கவில்லை. அதை எடுத்துப்படித்து யாரும் கிண்டல் அடிச்சிடுவாங்கன்னு பயம்.
இப்ப பதிவில் எதை எழுதினாலும் என்னுடைய அண்ணனும் படிக்கிறார்.
:)
ஹை, இப்பத்தான் நாங்கெல்லாம் ப்ளாக் எழுதறோமே. ஆனா நான் இதைப்பத்தி ஒரு தலைப்பை வெச்சிக்கிட்டு ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன், படிச்சுப் பார்த்தா வழக்கம்போல நொந்திடுவாங்க எல்லாரும்:):):)
@ கோவி.கண்ணன்
//கையெழுத்துப் போடும் அல்ல ... எழுதும் பேனாக்கள் !//
புரியல ஜி. எங்க வருது இந்த வரிகள்?
@ ராப்
நீங்க எதையாவது எழுதி நெகஸ்ட் இன்னிங்க்ஸை ஆரம்பீங்க ஆபீசர்!
டயரியைப் படிச்சா மாதிரியே எழுதியிருக்கீங்க//
unga diaryil irunthu oru pakkathai padicha mathirinu sonnen.
@ புதுகைத்தென்றல்
அடடே.. அப்படிச் சொன்னீங்களா?
//(நல்ல பதிவாக நான் நினைக்கும் அதற்கு இரண்டே பின்னூட்டம். அதில் ஒன்று நான்!)//
இன்னொன்னும் அனானியா நீங்களே போட்டதா???
//இப்போதெல்லாம் யாராவது டைரி எழுதுகிறார்களா என்ன? டைரியில் எதையோ எழுதுகிறார்கள்.//
ஆமா. என் வீட்ல தங்கமணி டைரியிலதான் சமையல் குறிப்பெல்லாம் எழுதிட்டு இருக்காங்க..
//(அடுத்த நாள்தான் தெரிஞ்சது, முதல்ல டைரியை வாங்கிப் படிச்சவன் அடிச்சிருந்தது பீர் அல்ல. ஹாட்! அது பண்ணினதுதான் அத்தனையும்!)//
ஒத்துகொள்ளவே முடியாத ஒன்று .
சிலர் பீர் அடித்தால் கூட இந்த மாதிரி வேலைகளெல்லாம் செய்வார்கள்
//வால்பையன் said...
ஒத்துகொள்ளவே முடியாத ஒன்று .
சிலர் பீர் அடித்தால் கூட இந்த மாதிரி வேலைகளெல்லாம் செய்வார்கள்
//
கரெக்ட். பரிசல் இவ்ளோ எழுதுனாலும் கரெக்டா உங்க ஏரியாவை புடிச்சீங்க பாத்தீங்களா???
/ஆமா. என் வீட்ல தங்கமணி டைரியிலதான் சமையல் குறிப்பெல்லாம் எழுதிட்டு இருக்காங்க..//
இதுக்கு பேர் தான் ப்ளான் பண்ணி கொடும பண்றதா
//(அடுத்த நாள்தான் தெரிஞ்சது, முதல்ல டைரியை வாங்கிப் படிச்சவன் அடிச்சிருந்தது பீர் அல்ல. ஹாட்! அது பண்ணினதுதான் அத்தனையும்!)//
பரிசல், உங்களையும் பீர் & ஹாட் நண்பர்களையும் பிரிக்கவே முடியாது போல... :)
// என்கிட்ட இருந்த ஆறு டைரியையும் ஒரு யோகா க்ளாஸுக்கு எடுத்துட்டு போனப்ப ‘பழசை மறந்துடணும்’ன்னு சொல்லி, தீக்குள்ள போடச் சொல்லீட்டங்க! //
தப்பிச்சோண்டா சாமி!!!! :)
பரிசல்,
வெங்கட்ரமணன் உங்களோட விசிறியா?
//வால்பையன் said...
/ஆமா. என் வீட்ல தங்கமணி டைரியிலதான் சமையல் குறிப்பெல்லாம் எழுதிட்டு இருக்காங்க..//
இதுக்கு பேர் தான் ப்ளான் பண்ணி கொடும பண்றதா
//
ஹி..ஹி.. உங்க வீட்ல இதெல்லாம் நடக்கறது இல்லையா? புதுசா எதாவது ஒரு சமையல் ப்ரோக்ராம் போட்டுட்டான்னா போச்சி? பிரச்சினை நமக்குதான்.
வாங்க வெயிலான்.. நல்வரவு :)
// என்கிட்ட இருந்த ஆறு டைரியையும் ஒரு யோகா க்ளாஸுக்கு எடுத்துட்டு போனப்ப ‘பழசை மறந்துடணும்’ன்னு சொல்லி, தீக்குள்ள போடச் சொல்லீட்டங்க! //
நல்லவேளை உங்களையும் சேர்த்து தீக்குளிக்க சொல்லலை
//பரிசல், உங்களையும் பீர் & ஹாட் நண்பர்களையும் பிரிக்கவே முடியாது போல... :)//
ஆனா வெண்பூ, அந்த நண்பரிடமிருந்து (வால்) ஹாட் விலகிப்போயாச்சு!
//நல்லவேளை உங்களையும் சேர்த்து தீக்குளிக்க சொல்லலை//
நாம எப்பவுமே புதுசுங்க...
//எனக்கு எழுதும் பழக்கம் வந்ததே நாட்குறிப்புகள் எழுதித்தான் எனலாம்! //
அப்ப இஸ்கோல்ல எல்லாம் எழுதவே மாட்டீங்களா??
//ஆனா வெண்பூ, அந்த நண்பரிடமிருந்து (வால்) ஹாட் விலகிப்போயாச்சு! //
ஆமாமா, அதனால தான் தினமும் ஹாட்டா திரியிறேன்
//நாம எப்பவுமே புதுசுங்க... //
பார்த்தாலே தெரியுதுங்கோ
//பரிசல்,
வெங்கட்ரமணன் உங்களோட விசிறியா?//
அவரு ஜப்பான்ல இருந்து என்னைப் பார்க்க வர்றாரு (ஹி..ஹி..) வர்றப்ப எல்லா ஜப்பான் பொண்னுங்க கைல இருக்கற விசிறி வாங்கீட்டு வரச் சொன்னேன். அதான் சொல்றாரு.
//
பரிசல்காரன் said...
//பரிசல், உங்களையும் பீர் & ஹாட் நண்பர்களையும் பிரிக்கவே முடியாது போல... :)//
ஆனா வெண்பூ, அந்த நண்பரிடமிருந்து (வால்) ஹாட் விலகிப்போயாச்சு!
//
கும்மிக்கு நடுவில் ஒரு சீரியஸ் வார்த்தை:
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் விட்டவருக்கும் பாராட்டுக்கள் விடவைத்தவருக்கும்.
//அப்ப இஸ்கோல்ல எல்லாம் எழுதவே மாட்டீங்களா??//
ம்ஹூம். அடங்கமாட்டோம்ல நாங்க...
//
வால்பையன் said...
//நாம எப்பவுமே புதுசுங்க... //
பார்த்தாலே தெரியுதுங்கோ
//
நீங்க என்னத்த பாத்தீங்க???
//ஆனாலும் ஒருத்தர் கண்டிப்பா எழுதணும்ன்னு ஆணையிடறேன். அவர் என் பார்ட்னர் வெண்பூ.//
பாட்னர், உங்களுக்கு டைரி எழுதும் பழக்கமுண்டா,
அடுத்தவங்க எழுதுறதை படிக்கம் பழக்கம் மட்டும் தானா
//மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் விட்டவருக்கும் பாராட்டுக்கள் விடவைத்தவருக்கும்.//
ரொம்ப சந்தோஷப் படாதீங்க. அடுத்ததடவை வெண்பூவை பார்க்கப் போறப்ப பார்ட்டி வெச்சுக்கலாம்ன்னு சொல்லித்தான் அவரை அடக்கி வெச்சிருக்கேன்!
// சில நாள் ‘இன்று மனது சரியில்லை. எழுதுவதற்கு ஒன்றுமில்லை’ என்றும் இருக்கும். பின்னாளில் அந்த டைரியைப் புரட்டிப் பார்க்கும்போது, அப்போது மனது சரியில்லாமலானது எதனால் என்று கேள்வி என்னைத் தாக்கும்!//
ஒருவேளை அத எழுதுனதுனாலயா இருக்கும்..
//நீங்க என்னத்த பாத்தீங்க???//
என் மனசை....
//ரொம்ப சந்தோஷப் படாதீங்க. அடுத்ததடவை வெண்பூவை பார்க்கப் போறப்ப பார்ட்டி வெச்சுக்கலாம்ன்னு சொல்லித்தான் அவரை அடக்கி வெச்சிருக்கேன்! //
ஏன் ரகசியத்தையெல்லாம் வெளியே சொல்றிங்க,
நாம போகும் போது, வெளியூர்ல இருக்கேன்னு ஜகா வாங்க போறார்
தமிழ்மண மறுமொழில என் பதிவு வரல. என்ன பண்ண?
//
வால்பையன் said...
பாட்னர், உங்களுக்கு டைரி எழுதும் பழக்கமுண்டா,
அடுத்தவங்க எழுதுறதை படிக்கம் பழக்கம் மட்டும் தானா
//
படிக்கிறது மட்டும்தான். ஏனோ டைரி எழுதுறதுல இன்ட்ரஸ்ட் இல்லை. (எத்தனை பர்சென்ட் இன்ட்ரஸ்ட் ???)
//நீங்க என்னத்த பாத்தீங்க???//
என் மனசை.... //
அதை மட்டும் தானா
//தமிழ்மண மறுமொழில என் பதிவு வரல. என்ன பண்ண?//
அம்மனுக்கு கூழ் ஊத்தி பாருங்க வந்தாலும் வரலாம்
//வால்பையன் said...
//நீங்க என்னத்த பாத்தீங்க???//
என் மனசை.... //
அதை மட்டும் தானா//
நான் ஒனக்கு சப்போர்ட் பண்ணினா என்னையே வாரி விடறியா?
ஹா... ஹா.. நாந்தான் 50
//படிக்கிறது மட்டும்தான். ஏனோ டைரி எழுதுறதுல இன்ட்ரஸ்ட் இல்லை. (எத்தனை பர்சென்ட் இன்ட்ரஸ்ட் ???) //
இன்ட்ரஸ்ட் கொடுத்தா எழுதுவிங்களா
//அம்மனுக்கு கூழ் ஊத்தி பாருங்க வந்தாலும் வரலாம்//
அம்மன் மீன்ஸ் ஐ லைக் ஒன்லி ரம்யா கிருஷ்ணன்!
//
பரிசல்காரன் said...
தமிழ்மண மறுமொழில என் பதிவு வரல. என்ன பண்ண?
//
தமிழ்மணத்தை கண்டித்து விடைபெறுகிறேன் அப்படின்னு வேண்ணா ஒரு பதிவு போடுங்களேன்.
//ஹா... ஹா.. நாந்தான் 50//
நீங்க கரெக்டா சைலண்ட் ஆனப்பவே தெரியுமில்ல?
//
பரிசல்காரன் said...
//அம்மனுக்கு கூழ் ஊத்தி பாருங்க வந்தாலும் வரலாம்//
அம்மன் மீன்ஸ் ஐ லைக் ஒன்லி ரம்யா கிருஷ்ணன்!
//
உங்க வீட்டுக்கு இந்த விசயம் தெரியுமா?
//நான் ஒனக்கு சப்போர்ட் பண்ணினா என்னையே வாரி விடறியா? //
அதுக்குள்ள என்ன அவசரம்!
நல்ல மனசு மட்டுமில்லை
நல்ல பழக்கமும் இருக்குன்னு சொல்லவந்தேன்
அப்ப ரம்யாவுக்கு பின்னால இருக்குற கிருஷ்ணன் நீங்கதானா?
//தமிழ்மணத்தை கண்டித்து விடைபெறுகிறேன் அப்படின்னு வேண்ணா ஒரு பதிவு போடுங்களேன்.//
இனியும் அப்படியெல்லாம் எழுதினா, சீரியஸாவே சிரிப்பாங்க பார்ட்னர்!
//
உங்க வீட்டுக்கு இந்த விசயம் தெரியுமா?//
ஓ!
//வால்பையன் said...
//நான் ஒனக்கு சப்போர்ட் பண்ணினா என்னையே வாரி விடறியா? //
அதுக்குள்ள என்ன அவசரம்!
நல்ல மனசு மட்டுமில்லை
நல்ல பழக்கமும் இருக்குன்னு சொல்லவந்தேன்
//
கரெக்ட். இந்த மாதிரி நல்ல பழக்கம்
//நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கொரு பீர் அடித்துவிட்டு//
//அப்ப ரம்யாவுக்கு பின்னால இருக்குற கிருஷ்ணன் நீங்கதானா?//
அது அந்தப் பாப்பாவோட அப்பா...
//நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கொரு பீர் அடித்துவிட்டு//
அதுக்கு முன்னாலயே அது என்ன தினம்ன்னு சொல்லியிருக்கேனே பார்ட்னர்!
//அது அந்தப் பாப்பாவோட அப்பா... //
என்னாது ரம்யா கிருஷ்ணன் பாப்பாவா? நர்சிம் போட்ட லிஸ்ட்ல "ரம்யா கிருஷ்ணன் மாதிரி முத்தின ஆன்ட்டிகளை பாப்பா என்கிறீர்களா?" அப்படின்னு ஒண்ணு சேத்திடலாம்
//அதுக்கு முன்னாலயே அது என்ன தினம்ன்னு சொல்லியிருக்கேனே பார்ட்னர்! //
பீரடிக்கும் தினமா
புதுப்பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க:):):)
//
பரிசல்காரன் said...
//நாங்கள் ஆறு பேரும் ஆளுக்கொரு பீர் அடித்துவிட்டு//
அதுக்கு முன்னாலயே அது என்ன தினம்ன்னு சொல்லியிருக்கேனே பார்ட்னர்!
//
அடிக்கடி அசுபயோக அசுப தினம் வராம பாத்துக்குங்க... :)
(இது சும்மானாச்சிக்கு.. உங்கள பத்தி நல்லா தெரியும்)
//புதுப்பதிவு போட்டிருக்கேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க:):):) //
எங்க நேரம் கிடைக்குது,
எதுக்கும் பதிவ அப்படியே காப்பி பண்ணி இங்கே பேஸ்ட் பண்ணிடுங்க
// என்கிட்ட இருந்த ஆறு டைரியையும் ஒரு யோகா க்ளாஸுக்கு எடுத்துட்டு போனப்ப ‘பழசை மறந்துடணும்’ன்னு சொல்லி, தீக்குள்ள போடச் சொல்லீட்டங்க! //
தப்பிச்சோண்டா சாமி!!!! :)
பரிசல்,
வெங்கட்ரமணன் உங்களோட விசிறியா?
இந்த தொடரோட நம்ம போர்ஷனை போட்டாச்சி: காணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை
யோவ் பாவிமனுசா! நான் எழுதனும்னு நினைச்சு இருந்த மேட்டர முந்திகிட்டு போட்டியேப்பா :(
நானும் கல்லூரி படிக்கிற காலம் வரைக்கும் டைரி எழுதிக்கிட்டுதான் இருந்தேன். கல்லூரி நாட்கள்ல வகுப்புக்கு போகாம சினிமாவுக்கு போனது, நண்பர்களோட காதலுக்கு உதவுனது, என்னை கவர்ந்த ஒரு பொண்ணப்பத்தி எழுதுனது எல்லாம் எங்க வீட்ல யாரோ படிச்சுட்டு பெரிய விசாரணை நடத்துனாங்க. அதுல இருந்த இனிமே ஆணியே புடுங்க வேணம்னு டைரி எழுதுறத நிறுத்திட்டேன்.
பரிசல்காரு டைரியாவது தீயில போட்டுட்டாரு. என் டைரியெல்லாம் எல்லாம் பத்திரமா ஒரு பெட்டியில போட்டு பூட்டி வைச்சுருக்கேன். அடுத்த தடவ ஊருக்கு போயிட்டுவர்றப்ப எடுத்துட்டு வந்துட வேண்டியதுதான்.
:-)))
/
ஆறு டைரியையும் ஒரு யோகா க்ளாஸுக்கு எடுத்துட்டு போனப்ப ‘பழசை மறந்துடணும்’ன்னு சொல்லி, தீக்குள்ள போடச் சொல்லீட்டங்க!
/
கடவுள்னு ஒருத்தர் இருக்கார் இப்ப நம்பறேன்!!
:)))))))))
435345345
பரிசலுக்காக ஓப்பன் ஐ.டியை உருவாக்கிவிடேன்.
மிக நேர்த்தியான பதிவு :) இந்தப் பதிவைப் படிக்கையில், ஏதோ ஒரு சொல்ல முடியாத சந்தோசம்.. ஒரு குறுகுறுப்பைப் போல.. ஏதோ ஒன்று.
என்னதான் notepad, advanced diary னு ஆயிரம் வந்தாலும், அந்த பழைய சுகத்துக்கு ஈடாகாதுங்க.. எப்படியோ, சின்ன வயசுலயே இந்த பழக்கம் எனக்கு ஒட்டிகிச்சு. கடந்த பத்து வருடங்களா நாள் தவறாம எழுதிகிட்டிருக்கேன்னு நினைக்கும் போது, எனக்கே ஒரு குதூகலம். :) அப்பப்போ, பின்னாடி நின்னு மூச்சு வாங்கும் போது, திரும்பிப் பாக்க இந்த டையரிகள்தாங்க கல்வெட்டு.
Post a Comment