“பரிசல்... ஒரு ஹேப்பி நியூஸ்”
“என்னாச்சு. நெஜமாவே ஒனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சா?”
“அதுவும்தான். ஆனா இப்போ சொல்ல வந்தது அதில்ல”
“பின்ன?”
“தமிழ்மணத்துல அக்டோபர் 20-லிருந்து நான்தான் ஸ்டார்! இப்போதான் மெயில் பார்த்தேன்”
“ம். சூப்பரு. கலக்குங்க” என்று அவர் பாணியிலேயே வாழ்த்தினேன்.
கொஞ்சநேரம் வேலை பார்த்துவிட்டு என் மெயில் பாக்ஸைத் திறந்தால்... எனக்கும் ஒரு மின்னஞ்சல்! ‘அக்டோபர் 6 லிருந்து நட்சத்திரப் பதிவராகச் சம்மதமா? புகைப்படத்தை அனுப்புங்கள்’ என்று கேட்டு. சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அதெப்படி, ஒரே நாள்ல எங்க ரெண்டு பேருக்கும் மெயில் அனுப்பியிருக்காங்க-ன்னு ஒரு சந்தேகமும் தமிழ்மணத்தோட ஐ.டி. ஜி.மெயில்லயா இருக்கும்?’ன்னு ஒரு சந்தேகமும் வந்தது. எதுக்கும் இருக்கட்டும்ன்னு ‘ப்ரொஃபைல் போட்டோ ஒண்ணுதானே..’ன்னு கேட்டு வழக்கமா எழுதறா மாதிரி அளவில்லா அன்போடு – கிருஷ்ணா’ன்னு ஒரு ரிப்ளையைப் போட்டு வெச்சேன்.
“ம்... சூப்பரு. கலக்குங்க” ன்னவருகிட்ட
“ஏன்யா.. யாராவது கலாய்க்கறாங்களா?” ன்னு கேட்டேன்.
“இல்ல.. இதே மாதிரிதான் இதுக்கு முன்னாடி நட்சத்திரமா இருந்தவங்களுக்கும் மெயில் வந்திருக்காம்”ன்னாரு.
“என்ன எழுதப்போறோம்ன்னு முன்னோட்டம் கேட்டிருக்காங்க?”
“அதெல்லாம் தேவையில்லயாம். சும்மா அறிமுகம் மட்டும் குடுத்துட்டு, எழுத ஆரம்பிங்க”
சந்தோஷத்தோட வடகரைவேலன் கிட்ட கூப்ட்டு பகிர்ந்துகிட்டேன். வாழ்த்தினாரு. (என்ன சந்தோஷமான செய்தின்னாலும் அண்ணாச்சிக்குதான் முதல் ஃபோன் போகும்!) அடுத்ததா, அந்த மின்னஞ்சலோட ப்ரிண்ட் அவுட் ஒண்ணு எடுத்துவெச்சுகிட்டு இரவு வெயிலானை சந்தித்து காமிச்சேன். அவரும் வாழ்த்துக்கள்-ன்னாரு.
அடுத்தநாள் ஞாயிறு. ‘டாப்டென்ல இருக்கிங்களே’ன்னு கூப்ட்ட நர்சிம்கிட்ட கூட சொன்னேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். “என்ன எழுதணும்ன்னு ப்ரிப்பேர் பண்ணிக்க ரெண்டு, மூணு வாரம் டைம் இருக்குல்ல? ஜமாயுங்க”ன்னாரு.
அன்னைக்கு பூரா தமிழ்மணத்தைத் திறந்து வெச்சுகிட்டு இதுக்கு முன்னாடி நட்சத்திரப்பதிவர்கள் என்ன மாதிரி அறிமுகம் குடுத்திருக்காங்க, என்ன பதிவு போட்டிருக்காங்க-ன்னு ஆராய்ச்சி செஞ்சேன். நாம எப்படி எழுதலாம்... வித்தியாசமா ஏதாவது பண்ணலாமா... ஏழு நாளும் நட்சத்திரம் சம்பந்தமா ஏழுவிதமா பதிவு போடலாமா, ஒண்ணு, ரெண்டுன்னு ஏழுவரைக்கும் வர்ற மாதிரி ஏழு பதிவு ரெடி பண்ணி ஒவ்வொண்ணா போடலாமா, திருப்பூர் சாயக் கழிவுகள்பத்தி நிச்சயமா ஒரு நாள் எழுதணும்-இப்படி பலவித சிந்தனைகள்!
நேத்து, திங்கள் காலையில பதிவு போட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு மெயில் பாக்ஸைத் திறந்தா.... இந்த மெயில் வந்திருந்தது.
”ஸ்டார் பக்கத்துல ஒரு ஃபோட்டோ இல்லாம, பத்து ஃபோட்டோவா கேப்பாங்க.. அதென்ன அளவில்லா அன்போடு.. நாங்க மட்டும் என்ன, அன்பை அளந்துகிட்டா இருக்கோம்?”
-இப்படிக்கு விளையாடியது
உங்கள் ரசிகனில் ஒருவன்
இப்படி மெயில் வந்திருந்தது!
‘எவ்வளவோ தாங்கியிருக்கோம். இதத் தாங்கமாட்டோமா?ன்னு கம்னு இருந்துட்டேன். அதிஷாவுக்கு ‘பாருய்யா இந்தக் கொடுமையை’ன்னு மெயிலை ஃபார்வேர்ட் பண்ணிவிட்டேன்.
‘அடப்பாவிகளா’ன்னு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு ரூம்ல உட்கார்ந்து வருத்தப்பட்டுட்டு இருந்தாரு அவரு!
வேறொரு நண்பர்கிட்ட இது பத்தி சொன்னப்ப, ‘நீங்க ஓக்கே பரிசல். உங்களுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும். ஆனா யாராவது பெண்பதிவர்களுக்கு இதுமாதிரி புகைப்படமும், அறிமுகமும் கேட்டு, அவங்க அனுப்பி அது தவறா பயன்படுத்தப்பட்டா என்ன ஆகறது? ஏற்கனவே பெண்பதிவர்கள் எழுதறது குறைஞ்சுகிட்டே வருது’ன்னு ஆதங்கப்பட்டார் அவர். நியாயம்தான்னு பட்டுது!
அதுக்காக, இதை ஒரு பதிவா போட்டு, ‘தமிழ்மணத்துல இருந்து மின்னஞ்சல் வந்தா எப்படி வரும், அதை எப்படி ஃப்ராட் ப்ரூஃப் (!?!) பண்ணிவெச்சிருக்காங்க-ன்னு அவங்களையே கேட்டா என்னன்னு தோணிச்சு!
நட்சத்திரப்பதிவர்கள் பற்றி ‘உதவி’ பக்கத்துலயே இது பற்றி ஒரு விளக்கம் குடுத்தீங்கன்னா சந்தோஷம்!
ஏன்னா, நான் கலாய்க்கறதையும், கலாய்க்கப் படுவதையும் ரசிச்சே பழகிட்டேன். எல்லாரும் அப்படின்னு சொல்லமுடியாது. இந்த மாதிரி ஒரு அங்கீகாரம் கிடைக்காதான்னு ரொம்ப எதிர்பார்த்து ஏமாற்றமானா ஒருமாதிரி வெறுத்துப் போற மனநிலைக்குப் போய்ட்டாங்கன்னா.. கஷ்டமில்லையா.. பாவம்! நானும் எதிர்பார்த்தேன். இல்லைங்கல. ஆனா, இது விளையாட்டுக்காக யாரோ பண்ணினதுன்னு தெரிஞ்சப்ப அவ்வளவா மூட் அவுட் எல்லாம் ஆகல. ‘ஆஹா... என்னைப்போல் ஒருவன்’ ன்னு நெனைச்சுகிட்டேன்!
கடைசியா அந்த நண்பருக்கு ஒரே ஒரு எச்சரிக்கை....
இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினீங்க.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அழுதுடுவேன்!
பி.கு. 1: இரு இளிச்சவாயன்கள்ன்னு சொல்லிகிட்டது என்னையும், அதிஷாவையும்தான். தலைப்பு தப்பு... எனக்கும் இப்படி ஒரு மெயில் வந்ததுன்னு சொல்றவங்க.. கூச்சப்படாம பின்னூட்டத்துல சொல்லுங்க. சோகத்தைப் பகிர்ந்துக்கலாம்!
பி.கு.2: இந்த விளையாட்டை விளையாடின நண்பர் யாருன்னு கண்டுபிடிக்க வடிவேலுவோட செல்வாக்கைப் பயன்படுத்தி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கேன். விரைவில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு, பலவித கலாய்த்தல்களுக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்படுகிறது!
170 comments:
பரிசல், அவர் கலாய்த்திருந்தாலும் ஸ்டார் பதிவர் ஆவதற்குரிய எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கிறது என்பது உங்களை படிக்கும் எங்களுக்கு தெரியும். அதனால் கவலைப்பட வேண்டாம் கண்டிப்பாக வாய்ப்பு தேடிவரும்
பி.குறிப்பு: நாளைக்கு நெஜமாவே தமிழ்மணத்தில இருந்து மெயில் வந்தா எவனோ வெளையாடுறான்னு நெனச்சி கம்முனு இருந்திராதீங்க :)))
ஒட்டல.. ஒட்டல.. ஒட்டவேயில்ல...
அந்த நண்பர் பதிவு போடுறதுக்கு முன்ன நீங்க போட்டு தப்பிச்சிடிங்க.. உஷாருப்பா.. (ஆவ்வ்வ்வ்வ்வ் அப்புறம் எப்படி ஏமாறுவிங்க ) கொஞ்சம் உஷாருப்பா...
:))
@ வெண்பூ
கவலைப்படறதா...நானா? அதுசரி!
@ கார்க்கி
அவனா நீ? :-)
நாதாரி தனம் செஞ்சாலும் நாசூக்கா செய்வோம், ஏற்கனவே ஸ்டார் ஆனவங்களுக்கு வந்த மெயிலில் இரண்டு வரியை மட்டும் தான் சேர்தோம்.
நீங்க இப்படி எல்லாம் கிராஸ் செக் செய்வீங்க என்று தெரியும்:))
நல்லா கலாய்ச்சி இருக்காங்கய்யா... :)))))
அதிஷா ரிப்ளேவே செய்யவில்லை அப்புறம் எப்படி அவரு இ.வா ஆனாரு!!!
admin@thamizmanam.com என்ற முகவரியில் இருந்து தான் தமிழ்மணத்தில் இருந்து மற்றவர்களுக்கு செய்தி வரும் என்று நினைக்கிறேன்.... நட்சத்திரம் என்றாலும் அப்படித்தான் வரும்.
வெண்பூ சொன்னது உண்மை, அப்படியே மெயில் வந்தாலும் கம்முன்னு இருந்துடாதீங்க!!!
இடையில் தமிழ்ப்பிரியன் கமெண்டும், அதன் டைம்மும் ஒத்துவருவதால் ஒருவேளை தமிழ்பிரியனாக இருக்குமோ!!!
//பாவம்! நானும் எதிர்பார்த்தேன். இல்லைங்கல. //
ச்சே... பாவம்....
இது எல்லாமே அதிஷா வேலையா இருக்கும்னு எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது....
பரிசல் கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்களும் இப்படி ஒருவரை ஸ்டார் ஆக்கியும், அதிஷாவை பெண் என்று சொல்லி ஒருவரை வரவழைத்தும் ஏமாற்றியதுக்கும் இந்த சதிக்கும் சம்மந்தம் இல்லை இல்லை இல்லை:)))
உங்களுக்கு மெயில் அனுப்பியது லக்கிலுக்காக இருக்கும். அவருக்கு ஜால்ரா போட்ட உங்களுக்கும், அதிஷாவுக்கும் மட்டுமே இப்படி மெயில் வந்தது ஐயத்தை கிளப்புகிறது.
///டவுட் தனபால் said...
இடையில் தமிழ்ப்பிரியன் கமெண்டும், அதன் டைம்மும் ஒத்துவருவதால் ஒருவேளை தமிழ்பிரியனாக இருக்குமோ!!!///
மொக்கைக்கும், கும்மிக்கும் அளவுண்டு அண்ணே.. :(
பி.கு. 1: இரு இளிச்சவாயன்கள்ன்னு சொல்லிகிட்டது என்னையும், அதிஷாவையும்தான். தலைப்பு தப்பு... எனக்கும் இப்படி ஒரு மெயில் வந்ததுன்னு சொல்றவங்க.. கூச்சப்படாம பின்னூட்டத்துல சொல்லுங்க. சோகத்தைப் பகிர்ந்துக்கலாம்!//
ஒன்லி டூ பேர் மட்டுமே!!!
தாமிராவுக்கு அனுப்பலாம் என்று நினைச்சேன் ஏனோ போனா போகுது என்று விட்டுவிட்டேன்.
:-)
sogak kathaiyaa irunthaalum interestingaa irukku. enakku mele comment poddavanggalle yaaro oruththarthaan ithai panniyirukkaangga.. kandupidichudungga Krishna. :-)
நண்பரே மை பிரண்டு சொல்வதுதான் சரி மேலே இருக்கும் யாரோ தான் அப்படி செஞ்சு இருப்பாங்க எனக்கு வெண்பூ மேலதான் டவுட்.
ஆமா, மேலே கமெண்ட் போட்ட யாரோ தான் மெயில் அனுப்பி இருக்கணும்
இங்கு வால் பையன் வராததால் ஒரு வேளை வால் பையானக கூட இருக்கலாம்!!!
வெண்பூ சொன்னதுமாதிரி அடுத்தாப்ல வந்தால் வேற யாரோன்னு நினைக்காதீங்க..வந்துடும் சீக்கிரமாவே..
நான் தலைப்பு பார்த்து உங்களை கூப்பிட்டதைத்தான் சொல்லவரீங்கன்னு நினைச்சேன்..
ஆமா பழய நட்சத்திர பதிவரெல்லாம் புரட்டினீங்களே..என்னோடது படிச்சீங்களா :)
மை ஃபிரண்ட் ::. said...
kandupidichudungga Krishna. :-)//
மை பிரண்டின் சிரிப்பை பார்த்தால் ஏதோ வில்லங்கம் இருப்பது போல் தெரிகிறது.
ஆமா..
விக்னேஷ் மேலே கூட ஸ்லைட்டா டவுட் வருது. :-)
//
குசும்பன் said...
நண்பரே மை பிரண்டு சொல்வதுதான் சரி மேலே இருக்கும் யாரோ தான் அப்படி செஞ்சு இருப்பாங்க எனக்கு வெண்பூ மேலதான் டவுட்.
//
அடப்பாவி.. நானே அப்ரைசல்ன்ற பேர்ல எனக்கு கீழ இருக்குறவனுங்க அடிக்கிற ஆப்பு தாங்க முடியாம நடு நடுவால வந்து ஒரு ரெண்டு வரி கமெண்ட் போட்டுட்டு இருக்கேன். அது பொறுக்கலயா??? :)))
உண்மையில் அது நானில்லை. :)))
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
ஆமா பழய நட்சத்திர பதிவரெல்லாம் புரட்டினீங்களே..என்னோடது படிச்சீங்களா :)//
அக்கா வந்த காரியத்தை சரியா பண்ணிட்டாங்க. :-P
//ஆனா யாராவது பெண்பதிவர்களுக்கு இதுமாதிரி புகைப்படமும், அறிமுகமும் கேட்டு, அவங்க அனுப்பி அது தவறா பயன்படுத்தப்பட்டா என்ன ஆகறது? ஏற்கனவே பெண்பதிவர்கள் எழுதறது குறைஞ்சுகிட்டே வருது’ன்னு ஆதங்கப்பட்டார் அவர். //
என்னே ஒரு சமூக அக்கரை.
யார் அந்த பெண்ணீய ஆதரவாளர்.
ஒரு வேளை அப்ப்டியா இருக்குமோ?
ஒரு வேளை இப்படியா இருக்குமோ?
ஒரு வேளை அப்படியும் இப்படியுமா இருக்குமோ?
ஒரு வேளை இப்படியும் அப்படியா நடந்திருக்குமோ? ;-)
ஹாஹாஹா!!!
பிம்பிலிக்கி பிலாக்கி!!!
மாமா பிஸ்கோத்து!!!
வெண்பூ said...
உண்மையில் அது நானில்லை. :)))//
பரிசல் பாருங்க சிரிச்சுக்கிட்டே சொல்றார், இவருதான் புடிங்க புடிங்க!!!
என்னா இருந்தாலும் அதிஷாவுக்கு கல்யாணம்னு சொல்லி பல்பு கொடுத்த பரிசல். வெடிச்சி போன பல்பு வாங்கினதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்...
// VIKNESHWARAN said...
என்னா இருந்தாலும் அதிஷாவுக்கு கல்யாணம்னு சொல்லி பல்பு கொடுத்த பரிசல். வெடிச்சி போன பல்பு வாங்கினதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்...//
நான் சொன்னது சரியா போச்சு.. கிருஷ்ணா.. புடிங்க புடிங்க.
முதல் கட்ட விசாரனையில்
1) வெண்பூ
2) வால்பையன்
3) லக்கி
4) மை பிரண்டு
5) குசும்பன்
ஆகியோருக்கு சம்மந்தம் இருக்கலாம் என்று தெரியவருகிறது, குசும்பன் அப்பாவி என்பதால் அவரை விட்டுவிடலாம் என்று பரிந்துரைக்கிறோம்.
நான் இல்லைங்கோ...
குசும்பன்னு நான் சொல்ல மாட்டேன், என்னா எனக்கு தெரியும் அவரு அப்படி செய்வாருனு ச்சே ச்சே சாரிப்பா.... செய்யமாட்டாரு...
முடிவே பண்ணியாச்சு. குசும்பனை தவிர வேற யாரும் இப்படி கலாய்க்கவே முடியாது!!
நான் தான் மெயில் அனுப்பியவன் என்று ஒத்துக்கிறேன்.
தண்டனையை குறைக்குமாறு கேட்டுக்கிறேன்.
சி.பி.ஐ சாரே,
அப்பாவி பெண்ணை இப்படி சந்தேகப் படலாமா? அவ்வ்வ்வ்....
பரிசல் அதர் ஆப்சனை ஓப்பன் செய்ய சொன்ன எனக்கே அனைவரும் ஆப்பு வைப்பதால் அதர் ஆப்சனை குளேஸ் செய்யுங்க!!!
FBI பெயரில் போட்டது ஒரு பெண் பதிவர்:)))
உண்மையை சொல்லிடுறேன் ஐயா..
பரிசலண்ணா, நாந்தேன்.. நாந்தேன் விளையாட்டா ஈமெயில் பண்ணிட்டேன்..
ஆயிரம் தோப்புக்கரணம் போட்டுக்குறேன்.
ஹா ஹா ஹா சூப்பர். உங்க அக்கறை கரெக்டுதான். ஆனா சந்துல சிந்து பாடின அந்த நல்ல மனசுக்காரரை பாராட்டவும் தோணுது. என்னை யாரும் இப்படி பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................பண்ண மாட்டேங்குறாங்களே.
அப்துல்லா அண்ணனை காணோம்
இன்னைக்கு அதர் ஆப்ஷன் அவைலபிளாக இருப்பதால் மெயில் அனுப்பினவன் பூந்து விளையாடி சந்தோஷமாக இருக்கிறார்
வெண்பூ இவ்வளவும் பண்ணிட்டு நல்ல புள்ளையாட்டும் இருந்தா எப்படி? ஆளாளுங்கு அடிச்சிக்கிறாங்கல்ல.... வந்து உண்மைய ஒத்துக்குங்க....
வர போறிங்களா இல்லையா?
45
VIKNESHWARAN said...
வெண்பூ இவ்வளவும் பண்ணிட்டு நல்ல புள்ளையாட்டும் இருந்தா எப்படி? ஆளாளுங்கு அடிச்சிக்கிறாங்கல்ல.... வந்து உண்மைய ஒத்துக்குங்க....//
அதான் அப்ரூவர் ஆறுமுகம் பெயரில் வந்து ஒத்துக்கிட்டாருல்ல, அது வெண்பூதான்.
இந்த விசாரனையை சரிவர முடிக்கும் படி GAPடன் விசயகாந்துக்கு அறிக்கை விடபடுகிறது...
என்ன சரத்துகுமாரும் வராரா?
49
50
அப்பாடா 50 போட்டாச்சுப்பா....
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு குசும்பன் இருக்கிறார் மறவாதே..
ஒரு குசும்பன் இருக்கிறார் மறவாதே..
//அன்னைக்கு பூரா தமிழ்மணத்தைத் திறந்து வெச்சுகிட்டு இதுக்கு முன்னாடி நட்சத்திரப்பதிவர்கள் என்ன மாதிரி அறிமுகம் குடுத்திருக்காங்க, என்ன பதிவு போட்டிருக்காங்க-ன்னு ஆராய்ச்சி //
கேட்கும் பொழுதே தேன் வந்து பாயுதே!!!
மெயில் அனுப்பியவன் என்ற பின்னூட்ட IP ஐடி சென்னையில் இருந்து இருப்பதால் அது தாமிரா என்று சந்தேகம் வருகிறது.
உங்க பதிவு போட்ட நேரத்தில் நானும் ஒரு உடலை அழகாக்குவது எப்படின்னு பதிவு போட்டா அது காத்து வாங்குது:((
//குசும்பன் has left a new comment on the post "இரு இளிச்சவாயன்கள் – தமிழ்மணம் கவனத்திற்கு!!":
உங்க பதிவு போட்ட நேரத்தில் நானும் ஒரு உடலை அழகாக்குவது எப்படின்னு பதிவு போட்டா அது காத்து வாங்குது:(( //
இங்கண ஃப்ரீ விளம்பரம் பண்றாப்ல இருக்கு? ;-)
லஞ்சு போறதுக்கு முன்னாடி 17 கமெண்டு, அதுக்குள்ள ஐம்பது போட்டுட்டீங்களே ?
மரண கும்மிடா சாமீ !!!!!!!
ஐய்யா நிழலும் நிஜமும் நீங்க பாட்டுக்கு ஏதாவது கொளுத்தி போட்டுட்டு போவாதீங்க, அனுப்பியவன் உண்மைய ஒத்துக்கலாம் என்று நினைக்கும் பொழுது இப்படி ஒரு கமெண்டை போட்டு பீதிய கிளப்புறீரே, எந்த வித உள்நோக்கோடும் மெயில் அனுப்பவில்லை, அதிஷா பரிசலுக்கு நண்பர் அதனால் இருவரும் பேசிப்பார்கள் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
செந்தழல் ரவி said...
லஞ்சு போறதுக்கு முன்னாடி 17 கமெண்டு, அதுக்குள்ள ஐம்பது போட்டுட்டீங்களே ?
மரண கும்மிடா சாமீ !!!!!!!//
ரவி நீங்க சாப்பிட எடுத்துக்கிட்ட நேரம் அம்புட்டு:))))
இதுபோல் பரிசலை ஏமாற்றியவனை கண்டுபிடுத்து தருபவர்களுக்கு பரிசல் கையால் தங்க பேனா வழங்கப்படும் சாமியோவ்வ்வ்வ்வ்
டும் டும் டும் டும்
(யார் என்று தெரிய ஒரு வார்த்தை இருக்கு)
.:: மை ஃபிரண்ட் ::. said...
இங்கண ஃப்ரீ விளம்பரம் பண்றாப்ல இருக்கு? ;-)//
பிரைம் டைம்ல விளம்பரம் கொடுக்கலாமேன்னு.....அப்படியும் காத்துவாங்குது.
பரிசல்,
இப்போ.. இப்பவே உங்க மெயிலை பாருங்க. நான் யாருன்னு ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்
பரிசல்காரரே உங்கள் பதிவு கவணத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது, உங்க குமுறலை கண்டு நாங்கள் வருந்துகிறோம், ஆகையால் அடுத்த வாரத்தில் இருந்து நீங்கள் ஸ்டார்க இருக்கலாமா என்று அதே மெயில் ஐடிக்கு ரிப்ளே செய்யவும்.
நாங்கள் வரும் முன்பே பரிசலை நீங்க புக் செஞ்சா எப்படி அடுத்த வாரம் அவர் தான் எங்கள் ஸ்டார்!!!
பரிசல் நீங்கள் அடுத்த வாரம் ஸ்டார் ஆக இருக்கமுடியுமா? என்பதை அதே மெயில் ஐடிக்கு ரிப்ளே செய்யவும்.
// குசும்பன் said...
பிரைம் டைம்ல விளம்பரம் கொடுக்கலாமேன்னு.....அப்படியும் காத்துவாங்குது.//
சூடு எங்கே அதிகமா இருக்கோ அங்கேதான் கும்மி அடிக்கப்படும் என்பது விதி! அதைத்தானே நீங்களும் நானும் சோஷியல் சர்வீஸா பண்ணிட்டு இருக்கோம் குசும்பா.. ;-)
லஞ்சம் வாங்கிக் கொண்டு நான் தான் மெயில் அனுப்பினேன் என சொல்லும் மெயில் அனுப்பியவரை கண்டிக்கிறேன்....
இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்மந்தப்பட்டு இருப்பது போல் இருக்கிறது, நாங்கள் குற்றவாளியை நெருங்கிக்கிட்டே இருக்கோம் விரைவில் பிடிபடுவார்.
மை பிரண்ட் இங்க வரும்போதெல்லாம் அனானி பின்னூட்டம் தலை தூக்குகிறது என்பதை நாசுக்கா சொல்லிக்கிறேன் சாமியோவ்...
அட யாரப்பா இது? கூட்டணி ஆட்சியிலிருந்து வந்து எங்க வலையில எழுது எழுதுன்னு பரிசல்காரரை நச்சரிச்சிட்டு இருக்கா?
என்ன கொடும சரவணா இது!
இது மை பிரண்ட்டு மற்றும் குசும்பனின் சதி வேலையாக இருக்கலாம் என செய்தி வட்டங்கள் தகவல் பரப்புவதை பகிரங்கமாக(நாங்களும் பகிரங்கமாதான் சொல்லுவோமாம்) அறிவிக்கிறேன்....
.:: மை ஃபிரண்ட் ::. said...
சூடு எங்கே அதிகமா இருக்கோ அங்கேதான் கும்மி அடிக்கப்படும் என்பது விதி! அதைத்தானே நீங்களும் நானும் சோஷியல் சர்வீஸா பண்ணிட்டு இருக்கோம் குசும்பா.. ;-)//
அது சரிதான்!
அட இப்படியெல்லாம் நடக்குமா ?
:))
வடகரை அண்ணாச்சி போட்டோ கலக்கலாக பளீர்னு இருக்கு.
கிருஷ்ணா...
யாரந்த கேடி?
கண்டுப்பிடிச்சுட்டேன்..
உங்களுக்கு ஆதாரத்துடன் ஈ-மெயிலில் அனுப்பியிருக்கேன். பாருங்க..
மத்தவங்களுக்கு,
யாரந்த கேடி?
தெரியணுமா?
எத்தனை பெட்டி அனுப்புவீங்கன்னு முதல்ல சொல்லுங்க. :-))
// VIKNESHWARAN said...
மை பிரண்ட் இங்க வரும்போதெல்லாம் அனானி பின்னூட்டம் தலை தூக்குகிறது என்பதை நாசுக்கா சொல்லிக்கிறேன் சாமியோவ்...//
விக்னேஷ்,
பண்றதையும் பண்ணிட்டு பழி மட்டும் என் மேலேயா? நடத்துங்க சாமி நடத்துங்க.
ஃபிலாச் நியூஸ்: பல்பு வாங்கிய பரிசல் மன வேதனையின் காரணமாக பாரில் பியர் அடித்துக் கொண்டிருக்கிறார்... அவரைக்கு இப்படி ஒரு நிலையை ஏற்படுத்திய சதிகார கும்பல் மாட்டுமாயின் அனைவருக்கும் விசாரனையின்றி தூக்கு தண்டனை கொடுக்கப்படும் என பகிரங்கமாக(இதுவும் பகிரங்கம் தான்) அறிவிக்கப்பட்டுள்ளது...
:))
VIKNESHWARAN said...
இது மை பிரண்ட்டு மற்றும் குசும்பனின் சதி வேலையாக இருக்கலாம் என செய்தி வட்டங்கள் தகவல் பரப்புவதை பகிரங்கமாக(நாங்களும் பகிரங்கமாதான் சொல்லுவோமாம்) அறிவிக்கிறேன்....//
நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!!!
//இராம்/Raam said...
:))//
சந்தேகம்.. இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்??
என்னையும் ஒரு முறை தமிழ்மனத்த்லிருந்து பேசுகிறேன் என்று பரிசல் கலாய்திருக்கிறார்!
அதனால் இந்த மெயில் அனுப்பியது பரிசலாக கூட இருக்கலாம்!
(வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாச்சுன்ன விசாரணையே இல்லாம தண்டனை வாங்கி கொடுத்துருவாங்க போலிருக்கே)
வால்பையன் said...
(வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாச்சுன்ன விசாரணையே இல்லாம தண்டனை வாங்கி கொடுத்துருவாங்க போலிருக்கே)//
அவ்வ்வ் எப்படி இப்படி எல்லாம்? என்னமோ இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி!!!
வால்பையன் said...
என்னையும் ஒரு முறை தமிழ்மனத்த்லிருந்து பேசுகிறேன் என்று பரிசல் கலாய்திருக்கிறார்!//
அப்ப பழிக்கு பழியா வால்!!!
இருந்தாலும் படிக்க செம குஜாலா இருக்குப்பா!
அதர் ஆப்சனில் விளையாடுபவர்கள் சம்மந்தப்பட்ட பதிவர் பெயரை யூஸ் செஞ்சா அது அந்த பதிவர் போடவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ”பரிசல்காரண் போலி” அல்லது பரிசல்காரன் 11212 இப்படி போடவும் , சும்மாக பரிசல்காரன் என்று போட்டால் படிக்கும் மற்றவர்கள் குழம்புவார்கள், அது ஆரோக்கியமும் அல்ல.
கும்மி ரூல்ஸ் வகுத்தவர்
வாஸ்த்யாயனர்.
யாராவது வாங்கப்பா!!! கை வலிக்குது!
// குசும்பன் said...
அதர் ஆப்சனில் விளையாடுபவர்கள் சம்மந்தப்பட்ட பதிவர் பெயரை யூஸ் செஞ்சா அது அந்த பதிவர் போடவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் ”பரிசல்காரண் போலி” அல்லது பரிசல்காரன் 11212 இப்படி போடவும் , சும்மாக பரிசல்காரன் என்று போட்டால் படிக்கும் மற்றவர்கள் குழம்புவார்கள், அது ஆரோக்கியமும் அல்ல.
கும்மி ரூல்ஸ் வகுத்தவர்
வாஸ்த்யாயனர்.//
அண்ணே. எங்கேயோ போயிட்டீங்க.. ச்சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..
“குசும்பன் கும்மி நலனுக்காக பாடுபவர்”ன்னு. :-)
// குசும்பன் said...
யாராவது வாங்கப்பா!!! கை வலிக்குது!//
அட்டண்டன்ஸ் ப்ரசண்ட்.
என்னதான் நானும் கும்மி க்ரூப்பில் ஒருவன் என்று நினைத்து கொண்டிருந்தாலும்
அதர் ஆப்சனில் பின்னூட்டம் இடுவது எனக்கு பிடிக்கவில்லை, அதனால் நான் இப்படியே தொடர்கிறேன்
கிட்டக்க நெருங்கிட்டோம்!
(இன்னும் ஒரு வருசத்துக்கு இதையே தான் சொல்லுவோம்)
//சி.பி.ஐ said...
கிட்டக்க நெருங்கிட்டோம்!
(இன்னும் ஒரு வருசத்துக்கு இதையே தான் சொல்லுவோம்)//
இப்பத்தான் நெருங்கியிருக்கீங்களா. நான் கண்டுப்பிடிச்சு மணிக்கணக்கா ஆகுது.. இவ்வளவு ஸ்லோவா நீங்க? ;-)
“குசும்பன் கும்மி நலனுக்காக பாடுபவர்”ன்னு. :-)//
மை பிரண்ட் நான் பாடினா என் காதே செவிடாகிடும், அப்ப மத்தவங்க கதி!
//வால்பையன் said...
என்னதான் நானும் கும்மி க்ரூப்பில் ஒருவன் என்று நினைத்து கொண்டிருந்தாலும்
அதர் ஆப்சனில் பின்னூட்டம் இடுவது எனக்கு பிடிக்கவில்லை, அதனால் நான் இப்படியே தொடர்கிறேன்//
நல்ல ப்ரின்ஸிப்.. கீப் இட் அப். :-)
என்னா வாலு சொல்றிங்க
பரிசலே பரிசலுக்கு அனுப்பிக்கிட்டாரா?
ஒரு கட் அடிச்சிட்டு வந்து கும்மி போட்டாதான் சரிபடும் போல...
குசும்பன் அந்த மெயிலை எனக்கு அனுப்பாததற்கு காரணம் என் மேல் உள்ள பாசம் தானே
//குசும்பன் said...
“குசும்பன் கும்மி நலனுக்காக பாடுபவர்”ன்னு. :-)//
மை பிரண்ட் நான் பாடினா என் காதே செவிடாகிடும், அப்ப மத்தவங்க கதி!//
அந்த மைக்-ஐ பிடிங்கிடுறேன். எல்லாம் சரியாகிடும். :-)
எங்களை எல்லாம் திசை திருப்பி விட்டு இருக்கிறார் அந்த நல்லவர், இந்த காரியத்தை செய்தவர் கோயம்புத்தூர் தொழில் அதிபர் என்று மை பிரண்டு சொல்கிறார், அதை உறுதி செய்யப்போய்கிட்டே இருக்கோம்.
//வால்பையன் said...
குசும்பன் அந்த மெயிலை எனக்கு அனுப்பாததற்கு காரணம் என் மேல் உள்ள பாசம் தானே//
இங்க பார்றா பாசமலர் அண்ணன் தும்பிகள! ;-)
வால்பையன் said...
குசும்பன் அந்த மெயிலை எனக்கு அனுப்பாததற்கு காரணம் என் மேல் உள்ள பாசம் தானே//
நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்
// சி.பி.ஐ said...
எங்களை எல்லாம் திசை திருப்பி விட்டு இருக்கிறார் அந்த நல்லவர், இந்த காரியத்தை செய்தவர் கோயம்புத்தூர் தொழில் அதிபர் என்று மை பிரண்டு சொல்கிறார், அதை உறுதி செய்யப்போய்கிட்டே இருக்கோம்.//
அந்த “நல்லவரையும்” விட்டு வைக்கலையா? :-P
மை பிரண்டு, சஞ்சய் இவுங்கதான்
100
//குசும்பன் said...
வால்பையன் said...
குசும்பன் அந்த மெயிலை எனக்கு அனுப்பாததற்கு காரணம் என் மேல் உள்ள பாசம் தானே//
நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்///
நீங்கள் அவனில்லை. நான் நம்புறேண்ணே.. ;-)
100 அடிச்ச அண்ணன் குசும்பனுக்கு வாழ்த்து சொல்லுங்கப்பா. :-)
இங்கே அதுக்கும் தனக்கும் சம்மந்த இல்லாதது போலவும், தான் கண்டுபிடுத்தது போலவுல் செய்தி பரப்பும் மை பிரண்ட் தான் குற்றவாளி என்று ஆதாரங்கள் சொல்கின்றன.
என்னத்த சொல்ல செய்யறதெல்லாம் செஞ்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி பின்னூட்டம் போட்டு பாவத்தை கழுவும் குசும்பன என்னானு சொல்வது...
டோஹா எண்ணைக்காரரை விட்டுட்டீங்க போல? ;-)
மை ஃபிரண்ட் ::. said...
நீங்கள் அவனில்லை. நான் நம்புறேண்ணே.. ;-)//
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கும், ஆனா அந்த சிரிப்பை பார்த்தா பயமா இருக்கு.
சி.பி.ஐ யாருன்னு கண்டுபிடுச்சுட்டேன். IP address-உம் இருக்கு. யாருக்கு வேணும்?
// குசும்பன் said...
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கும், ஆனா அந்த சிரிப்பை பார்த்தா பயமா இருக்கு.//
:-) --> இதுக்கு பயப்படக்கூடாது
:-))))))))) -> இதுக்குதாண்ணே பயப்படணும்.
:-)))))))
பச்ச புள்ள முகத்த வச்சிகிட்டு ஊர ஏமாத்தாதிங்கய்யா...
மை பிரண்டு
குசும்பன்
வாலு
மூனு பேருதான் இந்த வேலை செய்திருக்கிங்கனு சி.பி.ஐ எனக்கு இப்பதான் போன் போட்டாங்க...
நான் அப்பாவி
VIKNESHWARAN said...
என்னத்த சொல்ல செய்யறதெல்லாம் செஞ்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி பின்னூட்டம் போட்டு பாவத்தை கழுவும் குசும்பன என்னானு சொல்வது...//
பாவத்தை கழுவுறேன், பாதத்தை கழுவறேன் என்று சொல்லிக்கிட்டு, காலையில் உங்களிடம் சாட்டும் பொழுது கும்மி அடிக்க வேண்டியபதிவில் தான் கும்மி அடிப்பேன் நீங்கள் எழுதிய ஆராய்சி கட்டுரையில் எல்லாம் கும்மி அடிக்க மாட்டேன் என்று சொன்னேன் அதுக்கு ஏற்ப இது கும்மி அடிக்க தகுந்த பதிவு. அதான் இங்க கும்முறேன்.
எனக்கு ஒண்ணுமே தெரியாது
இது எதிர் கட்சிகள் செய்த சதி
:-)))))))
இதுக்கு பயப்பட சொல்ரிங்களே...
நீங்கதான் குருப் லீடரா
விக்கி நான் பரிசல் போன் நம்பரை கேட்ட பொழுது தாங்கள் சொன்னதை ஆதாரத்தோடு வெளியிடவா?
அந்த ஒரு ஆதாரம் போதும் நீங்கதான் என்று!
யெஸ்ஸு..
அடி அடி..
கும்மி அடி..
பரிசல் நமக்கு அந்த மெயிலை அனுப்பிய நண்பர் கையும் களவுமாக பிடிபட்டார் அதை அலைபேசியில் கூறுகிறேன் அங்கு வேண்டாம்
ஆமா இங்க என்ன நடக்குது?
பரிசல் ஏன் இந்த பதிவை போட்டோம்ன்னு நொந்துக்கப்போறாரு. :-))
யாருக்கோ யாரோ லெட்டர் போட்டாங்களாமே? யாருக்கு? ஏன்???
அந்த லெட்டர் போட்டவ்ருக்கு வால் இருக்குமாமே உண்மையாவா?
//அதிஷா said...
பரிசல் நமக்கு அந்த மெயிலை அனுப்பிய நண்பர் கையும் களவுமாக பிடிபட்டார் அதை அலைபேசியில் கூறுகிறேன் அங்கு வேண்டாம்//
ஏற்கனவே இதை நான் பரிசலிடம் சொல்லியாச்சு. இனி நீங்க சொல்ற அந்த “நல்லவர்” யாருன்னு அவரே உங்க கிட்ட சொல்லுவார். :-))
ஆமாம் காலையில் நீங்க போட்ட பின்னூட்டத்தை பார்த்து என் பக்கத்து கேபின் ஆளுக்கு ஹாட் அடாக் வந்துடுச்சு..... குசும்பனா இவ்வளோ சாந்தமா பின்னூட்டம் போட்டிருக்காருன்னு...
குசும்பா தேவ இரகசியத்தை இப்படியா அம்பலபடுத்துவது... சரிப்பா நான் கிளம்புறேன்...
//தமிழ் பிரியன் said...
அந்த லெட்டர் போட்டவ்ருக்கு வால் இருக்குமாமே உண்மையாவா?//
நான் அடையாளம் சொல்லவா?
அவருக்கு ரெண்டு கண்ணு. ஒரு மூக்கு, ஒரு வாய், ரெண்டு காது.. ரெண்டு கைகள்.. அதில் பத்து விரல்கள். அந்த பத்து விரலை வச்சுதான் டைப் பண்ணார் அந்த மெயிலை. ;-)
//VIKNESHWARAN said...
குசும்பா தேவ இரகசியத்தை இப்படியா அம்பலபடுத்துவது... சரிப்பா நான் கிளம்புறேன்...//
Cepatnye balik? Puasa ke?
யாரு தமிழ் பிரியனா...
இந்த சதி வேலைக்கு நீங்கள் உடந்தையாக இருந்ததாக தமிழ் மண பதிவர் வட்டத்தில் ஒரு கிசு கிசுப்பு நடக்குது...
//Cepatnye balik? Puasa ke?///
நீங்க என்ன அசிங்கமா திட்டுறிங்கனு சொன்னா எல்லோரும் நம்புவாங்க இல்லையா... இங்க பல்பு விக்கலாம் போல இருக்கே...
குசும்பன் சதிகார கும்பலோடு போனில் அரட்டை அடித்துவிட்டு இப்போது இங்கு வந்து கும்முவார்...
.:: மை ஃபிரண்ட் ::. said...
ஏற்கனவே இதை நான் பரிசலிடம் சொல்லியாச்சு. இனி நீங்க சொல்ற அந்த “நல்லவர்” யாருன்னு அவரே உங்க கிட்ட சொல்லுவார். :-))//
நானும் கண்டுபிடிச்சுட்டேன் நிஜமா அவர் நல்லவர்தான்:)))))))))))))
சரியா?
மைக் டெஸ்டிங் 1 2 3
யாராவது இருக்கிங்களா?
// VIKNESHWARAN said...
//Cepatnye balik? Puasa ke?///
நீங்க என்ன அசிங்கமா திட்டுறிங்கனு சொன்னா எல்லோரும் நம்புவாங்க இல்லையா... இங்க பல்பு விக்கலாம் போல இருக்கே...//
அடப்பாவி!!!!
அடப்பாவிகளா..
ம்ம்ம்ம்..
விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..
வருத்தமாக இருக்கிறது..
நர்சிம்
// narsim said...
அடப்பாவிகளா..
ம்ம்ம்ம்..
விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..
வருத்தமாக இருக்கிறது..
நர்சிம்//
அண்ணாச்சி என்னமா ஃபீல் பண்றாரு..
VIKNESHWARAN said...
//Cepatnye balik? Puasa ke?///
யப்பா விக்கி இது சதிகாரர்களின் சீக்கிரட் கோட் இது:))
narsim said...
அடப்பாவிகளா..
ம்ம்ம்ம்..
விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..
வருத்தமாக இருக்கிறது..
நர்சிம்//
நாங்களும் உங்கள் வருத்ததில் பங்கேற்கிறோம்:))))
சாரி போன் பின்னூட்டத்துக்கு ஸ்மைலி போட மறந்துட்டேன்.:((((((((((((((
//narsim said...
அடப்பாவிகளா..
ம்ம்ம்ம்..
விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..
வருத்தமாக இருக்கிறது..
நர்சிம்//
SAME OLD DIALOGUE?
allaarukkum thanksppaa!
ippadi oru naaL poora jaaliya pinnoottam padikkarathukkaagave, eththanai mottaik kaditham kooda vaangalaam pola irukke?
//பரிசல்காரன் said...
allaarukkum thanksppaa!
ippadi oru naaL poora jaaliya pinnoottam padikkarathukkaagave, eththanai mottaik kaditham kooda vaangalaam pola irukke?//
ஓக்கேப்பா..
மக்கள்ஸ், வாங்க.. நாமெல்லாம் http://gmail.com போய் புதுசா ஒரு மெயில் create பண்ணி, பரிசலுக்கு மெயில் அனுப்புற விளையாட்டு விளையாடலாம். ;-)
இந்த பக்கம் காசி, பெயரிலி இவுங்க எல்லாம் வராததால் ஒருவேளை அவுங்களாக இருக்குமோ!!!
எங்க மாமா பிசியா இருக்கார் அவர் இல்லை
ஏய் என்ன நடக்குது இங்கே ?
///பரிசல் நமக்கு அந்த மெயிலை அனுப்பிய நண்பர் கையும் களவுமாக பிடிபட்டார் அதை அலைபேசியில் கூறுகிறேன் அங்கு வேண்டாம்//
ஏய் அது எப்படி கையும் களவுமா பிடிப்பீங்க ? மெயிலும் நெட்டுமால்ல புடிக்கனும் ?
நொந்தழல் கவி
///கவனத்திற்கு!!"
144 Comments - Show Original Post //
இதுக்கு மேல தடை இல்லை
பரிசல் ஓட்டையாம்...
47
இன்னும் 3 போடனும்
இன்னும் 2
150
ராப் அடிச்ச கும்மியை தாண்டுமா ? எஞ்சின் கொஞ்சம் முக்குறா மாதிரி இருக்கு...
ப்ளீஸ். குசும்பனை அல்லது தமிழனை அழைக்கவும்...
HELLO, YAARU ATHU PARISAL PERLA PINNOOTTAM POTARATHU?
//இரு இளிச்சவாயன்கள்ன்னு சொல்லிகிட்டது என்னையும், அதிஷாவையும்தான்.//
ஒண்ணுமே புரியலைங்க... என்னங்க நடக்குது இங்க...ப்ரீயாக இருந்தா (வாய்ப்பே இல்லைனுதான சொல்றீங்க)கொஞ்சம் விளக்குங்க...(இதை விடவானு கேக்காதீங்க)..
இது உலக மகா கும்மி சந்தை டா சாமி ...
oosssss.
hello.. at mis ner opis timle iopder rte yuio mnhj tvero ipon ket men..
தாமிராவுக்கு அனுப்பலாம் என்று நினைச்சேன் ஏனோ போனா போகுது என்று விட்டுவிட்டேன்.//
என்ன விட்டுடுங்கடா சாமி.. நானே இங்கன ஆபீஸுல நொந்து போயி கிடக்கேன். ஒருத்தருக்கும் பின்னூட்டம் போட முடியலை. பதிவு போடாமலிருந்தாலோ நம்பளை ஆட்டத்திலிருந்து கழட்டி விட்டுடுவாங்களோனு பயந்துபோய் கிடைக்கிற கேப்புல போட்டுனுகிறேன். அல்லாரும் மன்னிச்சுக்குங்கப்பா..
இந்தப்பதிவில் பின்னூட்டங்களை படிக்காமல் முதல் முறையாக பின்னூட்டமிடுகிறேன். தற்செயலா என் பெயர் கண்ணுல பட்டுது. பார்த்தேன்.
என்னடா இம்மாங்கூத்து நடந்திருக்குது நம்ப பரிசலுக்குன்னு பாத்தா.. நானு லிஸ்ட்ல இருந்தேனா? விளங்கிடும். இந்த பின்னூட்டத்தை போட்டவந்தானா அவன்னும் தெரியாது. லேடு கெடச்சதினால நம்பாளுங்களே விளையாடுறதுக்கும் சான்ஸ் இருக்குது. என்னோட 'மழைநாள்' பதிவுல sj surya னுஒரு ஆள் பின்னூட்டமிட்டிருக்கான். நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல. அட போங்கப்பா தல சுத்துது.
ஒரு ஆர்வத்தில படிக்க ஆரம்பிச்சேன். மீண்டும் என் கொள்கையை உறுதி செய்து கொள்கிறேன். பின்னூட்டம் படிக்காமல் இனி பின்னூட்டமிடுவதில்லை.
என்ன கூத்து.. என்ன கும்மி.! ரொம்ப ரசிச்சேன்.
மெயில் அனுப்பியவன் என்ற பின்னூட்ட IP ஐடி சென்னையில் இருந்து இருப்பதால் அது தாமிரா என்று சந்தேகம் வருகிறது.// எனக்கு போனில் யாராவது விளையாடினாலே புடிக்காது. தெரிந்த குரலை அடையாளம் செய்துகொள்ளவே டான்ஸ் ஆடுவேன். இந்த மாதிரி வேலைலாம் எனக்கு அலர்ஜி.! நம்புங்க.! (வீக்னெஸ வேற உளறிட்டனா?)
அதனால் இந்த மெயில் அனுப்பியது பரிசலாக கூட இருக்கலாம்// இதென்ன ராஜேஷ்குமார் கதையாட்டம் இருக்குது.
விஜய் : பிம்பிலிக்கி பிலாக்கி!!!
மாமா பிஸ்கோத்து!!!// ROTFL.. தாங்க முடியாமல் கண்ணீர் வழிய சிரித்து உருண்டேன்.
:))
எதையும் தாங்கும் (உங்க)இதயம்
இதையும் தாங்கியிருக்கிறது!!!
me the 162nd :) comment ellam superu...
166
இவ்வளவு கமன்ட்டுக்கு மேல நாம என்னத்தை சொல்ல அதான் நம்பர் போட்டிருக்கேன்...!
:(
அடப் பாவிகளா! தமிழ்மணத்துக்கே போலியா?
@#$!%^&$@!$#@!%$@^%&&(*)(+_()(#@$#%$........................
haiya 171 :)
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு.. ஏ இத நீங்களே செய்திருக்கக் கூடாது...?! தமிழ் மணத்த தாக்க இப்படியும் ஒரு வழியா!
விரைவில் நீங்க நிஜ தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகள் :)
Post a Comment