சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:-
- சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..
- டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..
- கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!
- வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!(அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)
- எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.
- எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.
- அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.
- டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.
- பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.
- வில்லனின் வலது கை அல்லது வில்லன்கூட இருக்கும் கதாபாத்திரம் ஒன்றுக்கு கிறிஸ்துவப் பெயர் இருக்கும்.
அப்புறம் இலவச இணைப்பாய் ஒரு கவிதை!
காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?
**************************************
பி.கு: வேற வழியே இல்ல நண்பர்களே. கொஞ்சம் வேலை ஜாஸ்தி. இது ரெண்டுமே மீள் பதிவுதான்!
49 comments:
நல்லா இருக்கு
//டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.//
கண்ண கழட்ட முடியாதுல
// கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!//
அப்போ உங்களுக்கு ??
சினிமா & இலவச இணைப்பு...
நல்லா இருக்கு!
நீங்க சொல்லியிருப்பவைகள் என்றென்றும் மாறாதது. :)
மீராவைப் பற்றிய கவிதை. ம்ம்ம். நல்லா இருக்கு. இந்தக் கவதை படித்ததும் என் மனதில் தோன்றிய பாடல் வசந்தராகம் படத்தில் ஜானகி குரலில் “கண்ணன் மனம் என்னவோ கண்டுவா தென்றலே” தான்.
இந்தப் பாட்டை பற்றிய ஒரு பதிவு நான் வலைச்சரம் தொகுத்தபோது கிடைத்தது.
http://kannansongs.blogspot.com/2008/06/95.html
நான் இப்பதான் படிக்கிறேன்...
இதெல்லாம் மாறினா அது தமிழ்ப்படமே இல்லை..
மிடி ப்ராக் போட்ட கதாநாயகி கல்யாணம் ஆனதும் இழுத்து போத்திட்டு தலை குனிந்து நடப்பது கூட இன்னும் மாறலை.
//மிடி ப்ராக் போட்ட கதாநாயகி கல்யாணம் ஆனதும் இழுத்து போத்திட்டு தலை குனிந்து நடப்பது கூட இன்னும் மாறலை.//
இது சூப்பரு!
:)
இலவச இணைப்பு அருமை
// சோகமான ....,
செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது.. //
Visual மீடியா இல்லியா?
அதா அதிர்ச்சிய விசுவலா காட்டராங்க!!!
// வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!//
எதுலயும் புரபஷனலா இருக்கற வக்கீல் எங்கறத காட்டத்தான் !!!
( அதுக்காக அங்கயுமா என்னு கேக்கக்கூடாது)
//அதேபோல அதிகபட்ச படங்களில் வக்கீல்கள் வில்லன்களோடுதான் இருக்கிறார்!)//
அப்பாவி ஹீரோ எப்பேர்ப்பட்ட புத்திசாலியளோடு மோதுகிறாரு என நாம நினைக்கவேணாமா?
//எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.//
இந்த இடத்திலதா டைருடக்கரின் டச் இருக்கு.
அவரு அந்த ரிசீவரையும் ஒரு கதாபாத்திரமாக சித்தரித்திருப்பாரு!!!
//எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.//
என்னத்த சொல்ல,
வைரமுத்துவும் வாலியும் அப்படித்தானே வெளி இடங்கள்ள வாராங்க. டைரக்கர் என்ன பண்ணுவாரு?
// டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.//
டீச்சர் தன்மேல விழும் எல்லாதியும் தாங்கற அப்பாவியா இருப்பாங்க. ஸோ குடை!!!
கலக்டர் உடனே கொதிச்சு எழுந்து சுலோ மோஷனில் போவார் ( வெளியே நடந்து போவாருங்க) ஸோ குடை தேவல.
//பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.//
1. அவருக்கு படத்துலதா முத முதலா வண்டி ஓட்ட கிடச்சிருக்கும்
2. ஒரு சவுண்டு எஃபெக்ட்டுக்காக அப்படி எடுத்திருப்பாங்க
//வில்லனின் வலது கை அல்லது வில்லன்கூட இருக்கும் கதாபாத்திரம் ஒன்றுக்கு கிறிஸ்துவப் பெயர் இருக்கும்.//
இன ம ஒற்றுமையை டைருடக்கரு வில்லன் கோஷ்டிலகூட காட்டி தன்னோட சமுதாய அக்கறய வெளிப்படுத்தராரு.
புரிஞ்சுக்கோங்பப்பா!!!
ம்ம்ம்
அப்படியே எல்லா கமன்ட்ஸையும் சைட் ஆங்கிள்ள பாத்துட்டு சொல்லுங்க.
ஒரு எதிர்கால டைருடக்கர் அதுல தெரியல ????
:) :) :)
//சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..//
கையில எதுவும் இல்லைனா! வேற எங்கயாவது இருக்குறது எடுத்து கீழே போடுவாங்களா
சூப்பரோ சூப்பரு :-))))))
//டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது, ட்ராயர் முழுவதையும் கலை, கலை என்று கலைத்துவிடுவது..//
அண்ட்ராயரில் தேடும்போதும் இதே போல் நடக்க வாய்ப்பிருக்கிறதா
//கைதி, ஹீரோவாகவோ, முக்கிய நடிகராகவோ இருந்தால் கண்டிப்பாக FANCY NUMBER தான்!//
ஆனா கண்டிப்பா 007 வராது கவனிச்சிங்களா
//வக்கீல் கக்கூஸூக்கு போனாலும் கருப்பு கோட்டோடுதான் போவார்!//
கடமை உணர்வோடு இருப்பார்ன்னு சொல்லுங்க
//எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.//
ஒரு சத்தமும் இல்லையே, போனை டைரக்டர் வைக்க சொல்றாரேன்னு பாத்துருப்பாங்க
//எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உடை ஜிப்பாதான்.//
அதனால் தான் எழுத்தாளர்கள் தமிழகத்தில் கொண்டாட படுவதில்லையோ
//அதேபோல.. டீச்சருக்கு - கண்ணாடி + குடை / கலெக்டர் - கண்ணாடி மட்டும்.//
டியூசன் டீச்சர் படத்துல அப்படி ஏதும் இல்லையே
//டாக்டர் சோகமான செய்தி சொல்லும் போது, மறக்காமல் கண்ணாடியை கழட்டுவார்.//
கண்ணாடி போடாத டாக்டர், பக்கத்திலிருப்பவர் கண்ணாடியை கழட்டுவார்
//பெரும்பாலான கதாபாத்திரங்கள் வண்டியை நிறுத்தும் போது சடன் பிரேக் போட்டுத்தான் நிறுத்துவார்கள்.//
இதுக்கு தான் என்ன சொல்றதுன்னே தெரியல,
//வில்லனின் வலது கை அல்லது வில்லன்கூட இருக்கும் கதாபாத்திரம் ஒன்றுக்கு கிறிஸ்துவப் பெயர் இருக்கும்.//
வில்லனே கிறிஸ்துவனாக இருந்தால், முஸ்லீம் பெயர் இருக்குமா
//காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?//
கவிதை நல்லாருக்கு
நீங்க இதை 2075ல மீள்பதிவா போட்டாலும் இந்த சீன்லாம் அப்பிடியே தான் இருக்கும்..
கலக்கல்..
இலவச இணைப்பு அருமை..
நர்சிம்
முத்துலெக்ஷ்மி :இதெல்லாம் மாறினா அது தமிழ்ப்படமே இல்லை..
மிடி ப்ராக் போட்ட கதாநாயகி கல்யாணம் ஆனதும் இழுத்து போத்திட்டு தலை குனிந்து நடப்பது கூட இன்னும் மாறலை.// நீங்க ஏற்கனவே சூப்பர்னு சொல்லிட்டா என்னால ரிப்பீட்டு போட முடியாதா.? ரிப்பீட்டுங்க..
தலைவரே,
Drawer க்கு தமிழ் லிபி டிரா இல்லையோ
(ச்சும்மா ஜ்ஜீக்கே)
நோட் இருந்த காலத்திலேயே எழுதிவைத்ததால்... நீங்கள் க.தி.உ.
சுபாஷு சபாஷு!
@ //வால்பையன் said...
//எதிர்முனையில் ஃபோன் வைக்கப்பட்டாலும், திரையில் இருக்கும் கதாபாத்திரம் ரிசீவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுதான் வைப்பார்.//
ஒரு சத்தமும் இல்லையே, போனை டைரக்டர் வைக்க சொல்றாரேன்னு பாத்துருப்பாங்க//
இது சூப்பரோ சூப்பரு!
//விடமாட்டேன் said...
தலைவரே,
Drawer க்கு தமிழ் லிபி டிரா இல்லையோ//
!!!!
கிளப் டான்ஸ் ஆடும் பெண், வில்லனின் வலது கை அல்லது அல்லக்கை முன்பாக வந்து குனிந்து குலுக்குவார்
எதிரிகளின் கூடாரத்துக்குள் துப்பறியப்போனால் எல்லார் கவனத்தையும் ஈர்க்கும்படி மையமாக நின்று பாடி ஆடுவார்கள்.
கல்யாண மேடையில் மாப்பிள்ளை சார், பெண்ணை முழங்கையால் குறும்பாக இடிப்பார்.
பளிங்குச் சாலையில் போனாலும் வாகனத்தில் இருப்பவர்கள் குலுங்குவார்கள்.
enna innikkum vaalpaiyan post pottuttaaraa?
இப்படி இருந்தாதான் தமிழ் சினிமா. கவிதை செம சூப்பர்.............!!!!!!!!!!!!
விடமாட்டேன்...
உங்க க்ளிஷேவெல்லாம் சூப்பருங்க!
முக்கியமான ஓண்ணை விட்டுட்டீங்களே.. ஹீரோ ஓரு விதவை பொண்ணுக்கு வாழ்கை கொடுத்தா அந்த பொண்ணு முதலிரவுக்குள்ளேயே விதயாகியிருக்கிறது.(கன்னி கழியாதவளாம்)
வீரமா வசனம் பேசும் ஹீரோ ,இடையில அம்மாவ பத்தியோ?,தங்கச்சிய பத்தியோ ?
பேசும்போது கண்ணெல்லாம் கலங்கிட்டு அப்புறம் வசனத்த தொடருவாரு !
இதெல்லாம் கவனிக்க மாட்டிங்களா
:))
good one Parisal, some more :
ஒரு கிறிஸ்துவப் பெண் வேடம் என்றால் கண்டிப்பாக
பொட்டு வைத்திருக்க மாட்டார். நகைகள் அணிந்திருக்க மாட்டார்
கல்லூரிப்பேராசிரியர் என்றாலே கமேடியனாகத்தான் இருப்பார்கள்.
வெளி நாட்டு பிரதமரிடம் நம் ஹீரோ பேசினாலும், தமிழிலேயே
பேசுவார்.
பணக்கார அம்மான்னா நடுராத்திரி எழுந்திருச்சி வந்தாலும் காஞ்சிபுரம் பட்டுப் புடவை, தலைநிறைய மல்லிபூ வச்சிட்டு இருப்பாங்க
வருகைக்கு நன்றி தருமி ஐயா.
Post a Comment