Wednesday, September 10, 2008

பாதியில் எழுந்து வந்த சினிமாக்கள்!

நான் பதிவெழுத ஆரம்பித்தபோது (ஆஹா.. கிளம்பீட்டான்யா ப்ளேஷ்பேக்கோட...) தினமும் பதிவு போடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ளவில்லை. (அப்படீன்னு ஏன் சொல்றாங்க?) ஆனால் கொஞ்சநாள் ஃபீல்டுல நிக்கறதுக்காக தொடர்ந்து பதிவு போட்டேன். நடுவுல ஒரு நாள் பதிவு போடல. அப்ப ஒருத்தர் என் மின்னஞ்சலுக்கு ‘இன்று நீங்கள் ஏன் பதிவு போடவில்லை? வந்து, பார்த்து ஏமாந்து போனேன்’ என்று மடலனுப்பியிருந்தார். அதுக்கப்புறம்தான் ஆஹா.. இனி விடக் கூடாதுடா-ன்னு தினமும் எழுத ஆரம்பிச்சேன்.(அவர் பேரைச் சொல்லலாம்தான். அப்புறம் அவரை சும்மா விடமாட்டீங்க. பாவம்! பொழைச்சு போகட்டும்!)

கொஞ்சநாள்ல ‘தினமும் எழுதறதுன்னா எதை எழுத?’ அப்படீன்னு ஒரு பயம் வரும்ன்னு நெனைச்சேன். வர்ல! அதுக்குப் பதிலா ‘இதை எழுதவா, அதை எழுதவா’ன்னுதான் தோணிச்சு! ‘எழுத்தாளன்னா எதையும் கூர்ந்து பார்க்கணும், எல்லாவற்றிலும் ஒரு சிறுகதை இருக்கும்’ன்னு சுஜாதா ஒரு தடவை சொல்லப்போக அது அப்படியே சின்ன வயசிலேர்ந்தே பழகினதும் ஒரு காரணம்! (அவரு எழுத்தாளனுக்குத்தானே சொன்னாரு? ஒனக்கு என்ன வந்தது...?)

ஆனா இப்போ எதையாவது எழுதினா, என் பதிவு எதிர்பதிவு ஆக்கப்பட்டு கலக்கறாங்க! சில பதிவுகளைப் பார்க்கும்போது, எனக்கும் கை துடிதுடிக்க நானும் எதிர்பதிவு போடறேன். இதுக்கு நடுவுல ‘தொடர்பதிவு எழுதவாங்க’ன்னு கூப்பிடற நண்பர்களோட கட்டளை வேற! அதுனால பதிவுகளுக்குப் பஞ்சமில்லை.

தொடர்பதிவு எழுதக் கூப்பிட்டா முடிஞ்சமட்டும் நான் தவிர்க்கறதில்லை. என்னை மதிச்சு கூப்பிடறாங்க... அதுக்கு ஒரு நன்றியா பதிவு போட்டுடுவேன்.

சரி... இப்போ விஷயத்துக்கு வருவோம்...

தாமிரா பாதியிலேயே எழுந்து வந்த தமிழ்சினிமாக்கள் மூன்று -ன்னு ஒரு பதிவு போட்டுட்டு நீங்களும் கலந்துக்கணும்ன்னு (நீங்களும்ன்னா நீங்க இல்ல, நான்) கேட்டிருக்கார். அதுல மூணுபடம்தான் இருக்கணும்ன்னு விதிமுறை வேற!

இனி நான் பாதியில் எழுந்து வந்த சினிமாக்கள்:-


ராணுவவீரன்:-

1981ல் வெளிவந்தது இந்தப் படம்! அப்ப எனக்கு 7 வயசு. இந்தப்படத்துக்கு என்னை என் பாட்டி அப்பாகிட்ட சண்டை போட்டு (கிருஷ்ணகுமாரும் வரணும்..) கூட்டீட்டு போனாங்க. உடுமலைப்பேட்டை கல்பனா தியேட்டர்ல படம். நல்ல மசாலா படம். ப்ரஜா ராஜ்யம் கட்சித்தலைவர் சிரஞ்சீவிதான் வில்லன். ஒரு கட்டத்துல ரஜினி, ஊர் மக்கள் பயம்நீங்கி, ஒத்துமையா இருக்க பாட்டுப் பாடிகிட்டு இருக்கார். படம் பார்க்கப் பார்க்க என்னால தாங்க முடியல. அடக்க முடியாத அளவுக்கு.....


வேற வழியே இல்லாம கால்வாசி படம் ஓடறப்ப வெளில வந்து... பாட்டி கூட டாய்லெட் போய் உச்சா போனேன். இது நான் பாதியில எழுந்த படம் இல்ல.. கால்வாசில எழுந்துவந்த படம்! (அப்புறம் போய் உக்கார்ந்து முழுசா பார்த்தேன்..)

இரண்டாவது படம்...

அபூர்வ சகோதரர்கள்.

நான் ஒரு தடவைக்கு மேல் (தியேட்டரில்) பார்த்த படங்கள் நாலே நாலு. தர்மதுரை, அபூர்வ சகோதரர்கள், சந்திரமுகி, தசாவதாரம். ஒவ்வொன்றும் மூன்று முறை. என்னடா சினிமா நடிகை மாதிரி இரண்டு ரஜினி படம், இரண்டு கமல் படம் சொல்கிறான் என்று நினைக்காதீர்கள். ரஜினியை ரசிக்கும் அளவு கமலையும் மிகப் பிடிக்கும் எனக்கு!

அபூர்வ சகோதரர்கள் உடுமலை லதாங்கி தியேட்டரில் பார்த்தேன். என்னா ஸ்க்ரீன் ப்ளே, என்னா டயலாக்ஸ், கமலுக்கு இணையான நாகேஷ் நடிப்பு... இதை கமல் படித்தால் (நெனப்புதான்) கோபப்படுவார்., ‘நாகேஷுக்கு இணையான கமல் நடிப்புன்னு போடுங்க கிருஷ்ணா’ என்பார்!

ச்சான்ஸே இல்லை! அசத்தலான படம். அந்தப் படத்தை இரண்டாவது தடவையாக நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இடைவேளை முடிந்து கொஞ்ச நேரத்தில் என் சீட்டருகே ஒரு தடியன் வந்தான்.

“ஏய்.. தம்பி.. நீ என் சீட்ல உட்கார்ந்திருக்க. எழுந்திரு” என்றான்.

உடனே, ‘ஏய்... யாரைப் பார்த்து என்ன சொன்ன?’ என்று வீறு கொண்டு எழுகிற கஷ்டமெல்லாம் படாமல்.. (முடியாததை ஏன் செய்யணும்?)

“ண்ணா.. முன்னால பாருங்கண்ணா. அந்த சீட் காலியா இருக்குல்ல? அதுதான் நீங்க உட்கார்ந்திருந்தது. இது நான் உட்கார்ந்திருந்த சீட்தான்”

“ஏய்.. என்னடா எதுத்து பேசற?” என்றவன் வாயிலிருந்து வந்தது சரக்கு வாடை என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அப்போதே சரண்டராகி எஸ்கேப்பாகி இருக்கலாம். விதி யாரை விட்டது! அவன் அப்ப்டிச் சொன்னபோதும் கேட்காமல்..

“இல்லீங்கண்ணா.. நான் என் ஃப்ரெண்ட்ஸோடதான் வந்திருந்தேன். நீங்க வேணும்னா கேளுங்களேன்” என்று திரும்ப, அவர்களோ கர்ம சிரத்தையாக ஜெயசங்கரை அப்பு கமல் கலாய்ப்பதைப் பார்த்து மூழ்கிப் போயிருந்தார்கள்.

“ஏண்டா.. உன் ஃப்ரெண்ட்சுங்கற... அப்படித் தெரியலியே” என்று அவன் மேலும் என்னைச் சீண்ட, எனக்கு படம் பார்க்கும் ஆவலே வடிந்து போய், ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒன்றுமே பேசாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து வெளியே வந்து நின்றுவிட்டேன். கொஞ்சநேரத்திலேயே என் நண்பன் ஒருவன் வந்து “டேய்... ஏண்டா வந்துட்ட? அவன் ஏதோ குடிச்சுட்டு பேசறான். இப்ப அவன் சீட்டுக்கு போய்ட்டான். வா” என்றழைத்தபோதும் போகும் மூடு இல்லாமல் தியேட்டர் வாசலில் நின்று படம் முடியும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மூன்றாவது படம்... என்ன யோசித்தாலும் இல்லை!

தாமிரா கேட்டது படம் பிடிக்காமல் பாதியில் வந்த படங்கள். அப்படி அந்தப் படத்திற்கும் பாதியில் வந்ததாய் நினைவில்லை. சின்ன வயசில் என்ன குப்பைப் படமென்றாலும் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். பிறகு ரசனையோடு பார்க்கப் பழகியபிறகு பிடிக்காவிட்டாலும் பாதியில் வரமுடிவதில்லை. காரணம்: பைக். பாதியில் வந்தால் பைக்கை எடுக்க விடமாட்டார்கள்.

குருவி, குசேலன் வரை பாதியிலேயே போய்த் தொலையலாம் என்று நினைத்த படங்கள் பல உண்டு. ஆனால் “பைக் குடுக்கலீன்னாலும் பரவாயில்ல, வா.. நடந்தே போகலாம். என்னால முடியலப்பா” என்று அழுதுகொண்டே பார்த்த... இல்லை, உட்கார்ந்திருந்த ஒரு படம்: மெர்க்குரிப் பூக்கள்! பாலகுமாரனின் மாஸ்டர் பீஸ் நாவல் தலைப்பு என்று நம்பிப் போய் ஏமாந்த படம். இதுவரை அதற்கு இணையான த்ராபைப் படத்தைப் பார்க்கவில்லை!

27 comments:

கார்க்கிபவா said...

மொத போனி ஆஜர்

விஜய் ஆனந்த் said...

ஏமாத்திட்டீங்களே...

பாதியில் எழுந்து வந்த சினிமாக்கள் - அப்படின்னதும், இன்டர்வெல்ல எழுந்து போயி பாப்கார்ன் வாங்கிட்டு வந்த சினிமாக்களைப்பத்தி எழுதுவீங்கன்னு நெனச்சேன்!!!

// அப்படி எந்தப் படத்திற்கும் பாதியில் வந்ததாய் நினைவில்லை. //
சரி...அப்போ நீங்க கேப்டன், டாக்குடரு படமெல்லாம் தியேட்டர்ல பாக்க மாட்டீங்களா??எல்லாமே திருட்டு vcd-தானா???

கார்க்கிபவா said...

// கார்க்கி said...
கடந்த ஒரு வாரத்து அனுபவத்த வச்சு பார்த்தா எனக்கென்னவோ பரிசல் எல்லா படத்தையும் முழுசாதான் பார்ப்பாருனு தோணுது..அவ்ளோ நல்லவரு அவரு...
//

நான் சொன்னது சரிதானு நிரூபிச்சிட்ங்க சகா..

கார்க்கிபவா said...

எப்படியும் எங்க‌ தல ஜே.கே.ஆர் படத்த சொல்லுவாருனு நினச்சு ஆட்டோவெல்லாம் சொல்லியிருந்தேன்.. இன்னைக்கு வேற யாராவ்து சிக்காமலா போயுடுவாங்க..

narsim said...

ஆஜர்..

டி.ராஜேந்தர் படம்லாம் பார்க்கமாட்டீங்களா?


நர்சிம்

Tech Shankar said...

Supernga..

narsim said...

பரிசலாரே!!

இன்றைய தினகரன் பார்த்தீர்களா??

மின்வெட்டை சமாளிக்க நீங்கள் சொல்லிய யோசனைகளின் ஒன்றான "அரசு விழாக்களில் ஆடம்பரம் தவிர்க்கப்பட வேண்டும்..(அந்த யோசனை கட்டாயம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவிற்கு வெளிச்சம்தான் என்று நான் பின்னூட்டம் கூட போட்டிருந்தேன்..(ஹிஹி ஒரு விளம்பரம்தான்)

அந்த யோசனையை சட்டம் ஆக்கி விட்டார் நீதிபதி.. இனி அரசு விழாக்களின் போது ஆடம்பர அலங்கார விளக்குகளுக்கு தடை!

சூப்பர்!

நர்சிம்

Mahesh said...

அப்ப... பழய விஜய், சங்கவி படமெல்லாம் முழுசும் பாத்திருக்கீங்களா? அய்ய்ய்ய்யோ... நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு :)

பரிசல்காரன் said...

@ கார்க்கி

நீங்க தாமிராவோட பதிவுல போட்ட பின்னூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். கரெக்டா சொல்லியிருக்கீங்க!

@ விஜய் ஆனந்த்

//அப்போ நீங்க கேப்டன், டாக்குடரு படமெல்லாம் தியேட்டர்ல பாக்க மாட்டீங்களா??எல்லாமே திருட்டு vcd-தானா???/

அப்படியெல்லாம் இல்ல. தியேட்டரில் பார்க்காத பட டி.வி.டி.யை நான் வாங்கமாட்டேன்... படம் சரியில்லைன்னு தோணிச்சுன்னா போகவே மாட்டேன். அதுக்குதான் நம்ம கலங்கரை விளக்கம் லக்கி இருக்காரே, அவர் வழிகாட்டுவார்!

நன்றி தமிழ்நெஞ்சம்!

@ நர்சிம்

//மின்வெட்டை சமாளிக்க நீங்கள் சொல்லிய யோசனைகளின் ஒன்றான "அரசு விழாக்களில் ஆடம்பரம் தவிர்க்கப்பட வேண்டும்..(அந்த யோசனை கட்டாயம் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவிற்கு வெளிச்சம்தான் என்று நான் பின்னூட்டம் கூட போட்டிருந்தேன்..(ஹிஹி ஒரு விளம்பரம்தான்)

அந்த யோசனையை சட்டம் ஆக்கி விட்டார் நீதிபதி.. இனி அரசு விழாக்களின் போது ஆடம்பர அலங்கார விளக்குகளுக்கு தடை!
//

அது நான் சொன்னதுன்னு பீத்திக்க முடியாது தலைவா. நிறைய பேர் அந்தக் கருத்தை சொல்லியிருக்காங்க. நானும் சொன்னேன்னு சொல்லலாம்!

ஆனா, ஏதாச்சும் செய்யணும் பாஸ் - செயல் வடிவம் பெறுது.. இல்லையா?

@ மகேஷ்

விஜய், சங்கவி... கண்டிப்பா பார்த்ததுண்டு.
ரசிகன், கோயமுத்தூர் மாப்ளே... சங்கவி ஒரு நல்ல....
.
.
.
.
.
நடிகை!

வெண்பூ said...

பரிசல்.. நீங்களும் இந்த விசயத்தில் என்னைப் போலவே. நான் பார்க்கும் படங்கள் குறைவு. ஆனால் படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் கண்டிப்பாக முற்றும் போடும்வரை பார்த்துவிட்டுதான் எழுவேன். :))))

அதனாலேயே படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் செல்வதில்லை.

பரிசல்காரன் said...

நன்றி வெண்பூ!

கல்யாணத்துக்கு போனீங்களா?

முரளிகண்ணன் said...

:-)))

வெண்பூ said...

//பரிசல்காரன் said...
கல்யாணத்துக்கு போனீங்களா?
//

ஆமா பரிசல் குடும்பத்தோட :)

போய் மணமக்கள வாழ்த்திட்டு கழுத்து வரைக்கும் சாப்பிட்டுட்டு வந்தோம்...

கார்க்கிபவா said...

//போய் மணமக்கள வாழ்த்திட்டு கழுத்து வரைக்கும் சாப்பிட்டுட்டு வந்தோம்...//

ஏன் சகா, அப்படியே வயித்துலயும் கொஞ்சம் இறக்க வேண்டியதுதானே?

கார்க்கிபவா said...

//இனி அரசு விழாக்களின் போது ஆடம்பர அலங்கார விளக்குகளுக்கு தடை//

எல்லாம் சரி..ஆனா எது ஆடம்பரம்னு சொல்லலைனா நம்ம ஆளுங்க விட மாட்டாங்களே...

கார்க்கிபவா said...

//நீங்க தாமிராவோட பதிவுல போட்ட பின்னூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். கரெக்டா சொல்லியிருக்கீங்க!//

எது,உங்கள ரொம்ப நல்ல்ல்ல்வருனு சொன்னதையா தல? :)

வெண்பூ said...

//கார்க்கி said...
//போய் மணமக்கள வாழ்த்திட்டு கழுத்து வரைக்கும் சாப்பிட்டுட்டு வந்தோம்...//

ஏன் சகா, அப்படியே வயித்துலயும் கொஞ்சம் இறக்க வேண்டியதுதானே?
//

அட வயிறு நிரம்பி கழுத்துவரைக்கும் சாப்பிட்டோம்னு சொல்ல வந்தேன்.. :)))

Thamira said...

மூன்று பேர்தான் இதில் கலக்கவேண்டும் என்று சொல்லியிருந்தேன் (சும்மனாச்சுக்கும்..!) ஆனால் அனைவருக்குமே இது புடிச்ச டாப்பிக்காகிவிட்டதென நினைக்கிறேன். எத்தனை பேர் எழுதுவார்கள் என்று பார்க்கலாம்.. நீங்கள் கார்க்கி சொன்னது போல ரொம்ப நல்லவருங்க.. ராணுவவீரன், அபூர்வம் எல்லாம் வேற காரண‌த்துக்காக பாதியில் எழுந்துள்ளீர்கள். இருப்பினும் 'மெர்க்குரிப்பூக்களில்' எதிர்பார்த்தது கிடைத்து மகிழ்ந்தேன். மாலையில் மீண்டும் வ‌ருகிறேன்.

முத‌ன்முத‌லாக‌ சில‌ம‌ணிநேர‌ங்க‌ளிலேயே செம்ம‌ ஹிட் (ந‌ன்றி சிவாவுக்கே..) ஆகியுள்ள‌து என் ப‌திவு ஒன்று. வாருங்க‌ள் சீக்கிர‌ம்.. எதிர்பார்க்கிறேன்.!

கார்க்கிபவா said...

//அட வயிறு நிரம்பி கழுத்துவரைக்கும் சாப்பிட்டோம்னு சொல்ல வந்தேன்.. :)))//

அட அப்படி தெளிவா சொல்லுங்க சகா..

rapp said...

ஹை, இன்னைக்குத்தான் நீங்க பார்முக்கு வந்திருக்கீங்க:):):) அந்த புண்ணியத்த கட்டிக்கிட்ட தாமிராவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):) நடுவுல கொஞ்ச நாள் முத்தாரம் படிக்கிற மாதிரி இருந்துச்சி:):):)

rapp said...

//நான் பதிவெழுத ஆரம்பித்தபோது (ஆஹா.. கிளம்பீட்டான்யா ப்ளேஷ்பேக்கோட...) தினமும் பதிவு போடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ளவில்லை. (அப்படீன்னு ஏன் சொல்றாங்க?) ஆனால் கொஞ்சநாள் ஃபீல்டுல நிக்கறதுக்காக தொடர்ந்து பதிவு போட்டேன். நடுவுல ஒரு நாள் பதிவு போடல. அப்ப ஒருத்தர் என் மின்னஞ்சலுக்கு ‘இன்று நீங்கள் ஏன் பதிவு போடவில்லை? வந்து, பார்த்து ஏமாந்து போனேன்’ என்று மடலனுப்பியிருந்தார். அதுக்கப்புறம்தான் ஆஹா.. இனி விடக் கூடாதுடா-ன்னு தினமும் எழுத ஆரம்பிச்சேன்.(அவர் பேரைச் சொல்லலாம்தான். அப்புறம் அவரை சும்மா விடமாட்டீங்க. பாவம்! பொழைச்சு போகட்டும்!)

கொஞ்சநாள்ல ‘தினமும் எழுதறதுன்னா எதை எழுத?’ அப்படீன்னு ஒரு பயம் வரும்ன்னு நெனைச்சேன். வர்ல! அதுக்குப் பதிலா ‘இதை எழுதவா, அதை எழுதவா’ன்னுதான் தோணிச்சு! ‘எழுத்தாளன்னா எதையும் கூர்ந்து பார்க்கணும், எல்லாவற்றிலும் ஒரு சிறுகதை இருக்கும்’ன்னு சுஜாதா ஒரு தடவை சொல்லப்போக அது அப்படியே சின்ன வயசிலேர்ந்தே பழகினதும் ஒரு காரணம்! (அவரு எழுத்தாளனுக்குத்தானே சொன்னாரு? ஒனக்கு என்ன வந்தது...?)

ஆனா இப்போ எதையாவது எழுதினா, என் பதிவு எதிர்பதிவு ஆக்கப்பட்டு கலக்கறாங்க! சில பதிவுகளைப் பார்க்கும்போது, எனக்கும் கை துடிதுடிக்க நானும் எதிர்பதிவு போடறேன். இதுக்கு நடுவுல ‘தொடர்பதிவு எழுதவாங்க’ன்னு கூப்பிடற நண்பர்களோட கட்டளை வேற! அதுனால பதிவுகளுக்குப் பஞ்சமில்லை.

தொடர்பதிவு எழுதக் கூப்பிட்டா முடிஞ்சமட்டும் நான் தவிர்க்கறதில்லை. என்னை மதிச்சு கூப்பிடறாங்க... அதுக்கு ஒரு நன்றியா பதிவு போட்டுடுவேன்.//


ஆஹா, சந்தோஷத்துலக் கூட புலம்புற ஆளா நீங்க:):):) ஹை ஜாலி என்னை மாதிரி இன்னொருத்தரை கண்டுப்பிடிச்சிட்டேன்:):):)

பரிசல்காரன் said...

//) நடுவுல கொஞ்ச நாள் முத்தாரம் படிக்கிற மாதிரி இருந்துச்சி//

பாராட்டா... திட்டா?

ராப்.. நீங்க இல்லாத இந்த கொஞ்ச நாள்ல எனைப் போட்டு வறுத்துட்டாங்க எல்லாரும். அதான் கொஞ்சம், கொஞ்சம் நல்ல மேட்டரையும் (அப்படீன்னு நானே சொல்லிக்கறேன்) கலந்துகட்டி அடிக்கறேன்...;-)))))))))

புதுகை.அப்துல்லா said...

anna sorry for late coming :((
(ekalappai is not working)

rapp said...

////) நடுவுல கொஞ்ச நாள் முத்தாரம் படிக்கிற மாதிரி இருந்துச்சி//

பாராட்டா... திட்டா?

ராப்.. நீங்க இல்லாத இந்த கொஞ்ச நாள்ல எனைப் போட்டு வறுத்துட்டாங்க எல்லாரும். அதான் கொஞ்சம், கொஞ்சம் நல்ல மேட்டரையும் (அப்படீன்னு நானே சொல்லிக்கறேன்) கலந்துகட்டி அடிக்கறேன்...;-)))))))))

//

நான் அதுக்கு சொல்லலைங்க, ஜாலியான விஷயமே அதிகம் இல்லாம, எனக்குக் கொஞ்சம் போரடிச்சுது. நீங்க எல்லார் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதறதுதான் சரி. நான் சும்மா ஜாலியா சொன்னேன்:):):)

சின்னப் பையன் said...

//நான் அதுக்கு சொல்லலைங்க, ஜாலியான விஷயமே அதிகம் இல்லாம, எனக்குக் கொஞ்சம் போரடிச்சுது. நீங்க எல்லார் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதறதுதான் சரி. நான் சும்மா ஜாலியா சொன்னேன்:):):)//

அப்போ நவரச திலகம்னு பட்டம் கொடுத்துட வேண்டியதுதான்....

RATHNESH said...

அருமையாக எழுதி இருக்கீங்க. எந்தப் படத்தையும் முழுவதும் பார்த்து விடும் பக்குவம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். நிஜமாகவே "வீராசாமி" படம் நீங்கள் பார்த்தீர்களா?

வால்பையன் said...

நான் எல்லா படங்களும் முடியும் வரை தியேட்டரில் தான் இருப்பேன்.
(கவனிக்க:இருப்பேன், பார்ப்பேன் அல்ல)
பாலுமகேந்திராவின் ஜூலி கணபதி படம் மட்டும் தங்கமணியின் தொல்லையால் பாதியிலேயே வரவேண்டியதாயிற்று இருப்பினும் பொறுமையின் சிகரமாய் தனியாக சென்று கடைசி வரை பார்த்தேன்