Thursday, September 25, 2008
எல்லோர்க்கும் பெய்யும் மழை!
அந்தப்பெண்ணுக்கு அவள் தந்தை ஆறு வயதிருக்கும்போது சதுரங்கம் கற்றுக் கொடுக்கிறார். அவருக்கும் சதுரங்க ஆட்டம் மீது வெறி. பொழுதுபோக்காய் சொல்லிக் கொடுத்தாலும் அபார கவனிப்பும், நொடிப்பொழுது நகர்த்தல்களுமாய் கற்றுக் கொடுத்த தந்தையையே நாலே மாதங்களுக்குள் வென்று விடுகிறாள் அவள். அதற்குப் பிறகு பலமுறை விளையாடும்போது. தன் மகளிடம் தனித்திறமை இருப்பதாய்ப் படுகிறது அவருக்கு. சதுரங்கத்தில் மிகுந்த பற்று கொண்ட அவர் பல நண்பர்களுடன் விளையாடும்போதெல்லாம் உணர்ந்திராத சவால்களை தனது மகளுடன் விளையாடும்போது உணர்கிறார்.
அவர் பெயர் ஜெயச்சந்தர். சென்னைத் துறைமுகத்தில் பணி. சதுரங்கத்தில் தனித்திறமை கொண்ட மூத்த மகளை ஊக்குவிக்க நினைக்கிறார். ‘நம் மகள் என்பதால் எனக்குத்தான் அவள் விளையாடுவது சிறப்பாகத் தெரிகிறதோ’ என்று சந்தேகம் வந்தவர், சதுரங்கத்தில் திறமை வாய்ந்த தனது சில நண்பர்களுடன் தன் மகளை மோத விடுகிறார். அவர்களும் ‘உன் மகளிடம் நல்ல திறமை ஒளிந்துள்ளது’ என்று சான்றளிக்கின்றனர். அப்போது ஒரு நண்பர் மூலமாக சென்னை செஸ் ஃபெடரேஷனில் இருக்கும் ஒருவரது அறிமுகம் கிடைக்கிறது. அவரும் இவரது மகளை வெகுவாகப் பாராட்டி விட்டு, பெரிய அளவில் போட்டிகளில் இவள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.
அந்தப் பெண் தான் மோஹனப்ரியா. சிலதினங்களுக்கு முன் ஒரு போட்டிக்காக இவள் வியட்நாம் செல்ல உதவிகேட்டு பதிவு வெளியாகி, அதன் மூலம் பதிவர் புதுகை அப்துல்லா உதவியளிப்பதாய் சொன்ன அதே மோஹனப்ரியா!
ஆரம்ப வருடங்களில் மோஹனப்ரியாவின் தந்தை எப்படி சமாளித்தார்? பிடித்தமெல்லாம் போக வரும் எட்டாயிரம் ரூபாயில் இவளை எப்படி பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் போட்டிக்கு அனுப்புவது? ஊக்குவிக்க பலர் இருக்க, இவள் தந்தை வீட்டை விற்கிறார்! ஆலந்தூரில் தன் சொந்த வீட்டை விற்று, தற்போது வாடகை வீட்டில் குடியிருக்கிறார். இரண்டாவது மகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.
இதுவரை ரஷ்யா, ஜார்ஜியா, சிங்கப்பூர், துருக்கி, துபாய் உட்பட பல நாடுகளுக்கும் சென்று சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொள்ள அவர் வீட்டை விற்ற பணம் உதவிற்று. சென்ற இடமெல்லாம் மோஹனப்ரியாவுக்கு சிறப்பே. இரு நாடுகளில் தங்கப் பதக்கத்தையும், ஒரு நாட்டில் வெள்ளியும் வென்ற இவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற என்ன காரணம்?
தேசிய அளவிலோ, (NATIONAL) சர்வதேச அளவிலோ (INTERNATIONAL) போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டுமானால் சதுரங்க வீரர் தனக்கென தனிப் பயிற்சியாளர் வைத்துக் கொள்வது அவசியம். சென்னையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சர்வதேசப் பயிற்சியாளர் ஒரே ஒருவர்தான். தேசியப் பயிற்சியாளர் ஐந்து, ஆறு பேர் உள்ளனர். சர்வதேசப் பயிற்சியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. ஆயிரமும், தேசிய அளவிலான பயிற்சியாளருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. ஐநூறும் கட்டணம் ஆகும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரப் பயிற்சி என்று வைத்துக் கொண்டாலும் மாதத்துக்கு ரூ. 15000 அல்லது ரூ.30000! எங்கே போவார் அந்தத் தந்தை?
ஆம்! இதுவரை அவள் தனக்கென பயிற்சியாளரே வைத்துக் கொள்ளவில்லை! பல நாடுகளில் போட்டியின் போது இவளுடன் போட்டியிடுபவரின் பயிற்சியாளர் ஒரு சுற்றில் மோஹனப்ரியாவின் நகர்த்தல்களைப் பார்த்து, கிரகித்துக் கொண்டு அடுத்த சுற்றில் தங்கள் மாணவருக்கு சொல்லிக் கொடுத்து தயார்படுத்திக் கொண்டிருக்க பயிற்சியாளர் இல்லாமலேயே பல சவால்களைச் சந்தித்தவள் இவள்! இன்னொரு விஷயம் இரு தினங்களுக்கு முன் வரை சதுரங்கப் போட்டிக்கு முக்கியமாகத் தேவைப்படும் ‘டைமர்’ கூட இந்தப் பெண்ணிடம் கிடையாது. உடன் விளையாடி, சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இருக்கும் (அல்லது) அடுத்த சுற்றுக்காக காத்திருக்கும் சக வீரர்களிடம் டைமரை இரவல் வாங்கித்தான் விளையாடியிருக்கிறாள்! அது மட்டுமல்ல, விளையாடிப் பயிற்சி எடுத்துக் கொள்ள கணினியும் இவளிடம் இல்லை! இத்தனை சங்கடங்கள், சவால்களுக்கிடையில்தான் அந்த த்ங்க, வெள்ளிப் பதக்கங்கள்!
இப்படி விளையாடி இவள் அடைந்திருப்பது ஜீனியர் லெவலில் உலக அளவில் பத்தாவது இடம், இந்தியாவில் ஜூனியர் லெவலில் முதலிடம்! அதுவும் தொடர்ந்து மூன்று வருடங்களாக!
முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பத்தாவது படிக்கும் இவளுக்கு படிப்பிலும் நல்ல பெயர். இதுவரை முதல் அல்லது இரண்டாவது இடம்தானாம்! இரண்டாவது ரேங்கைத் தாண்டியதில்லையாம்!
இந்த நிலையில் வியட்நாமில் நடைபெறவிருக்கும் சர்வதேசப் போட்டியில் பங்குபெற மோஹனப்ரியா செல்ல வழியின்றித் தவிக்கிறார் அவளது தந்தை. கையிருப்பு எல்லாம் கரைந்துபோக, இதுவரை எவரிடமும் ஸ்பான்சர்ஷிப் கேட்காத இவள் தந்தை கையைப் பிசைந்து நிற்கிறார். நண்பர்கள் மூலம் வலைப்பதிவில் வேண்டுகோள் விடுக்கப் படுகிறது. ‘என் நிறுவனம் மூலம் ஆவன செய்கிறேன்’ என்று உறுதியளிக்கிறார் புதுகை அப்துல்லா!
இதற்கிடையில் தமிழக செஸ் ஃபெடரேஷனில் மோஹனப்ரியா வியட்நாம் செல்ல ரூ.70000/- அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நண்பர் அப்துல்லா தான் ஒத்துக் கொண்டபடி அந்தப் பெண்ணை அழைத்து என்னென்ன தேவைகள் என்று விசாரித்திருக்கிறார்.
அவர்கள் தேவைப் பட்டபடி டைமர் கருவியும், மோஹனப்ரியா விளையாடிப் பயிற்சி பெற மடிக்கணினியும், சதுரங்க விளையாட்டுக்கான மென்பொருட்களும் இரு தினங்களுக்கு முன் வழங்கிவிட்டார்! அதுமட்டுமல்ல, சதுரங்க விளையாட்டின் மூலம் மோஹன்ப்ரியாவுக்கு வருமானம் கிடைக்கும் வரை இந்தியாவுக்குள் எந்த நகருக்கு விளையாடப் போனாலும் அதற்கான செலவுகளை தனது நிறுவனம் ஏற்றுக் கொள்வதாய் அறிவித்திருக்கிறார் அப்துல்லா.
தனது அதிகார எல்லைக்குட்பட்டு இவ்வளவு மட்டுமே செய்ய முடிந்தது என்று வருத்தப்படும் அப்துல்லா, அந்தப் பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு சர்வதேசப் பயிற்சியாளர் (மாதம் ரூ.30000/-) நியமிக்க அனுமதி கேட்டு, அடுத்த BOARD DIRECTORS MEETING- க்காக காத்திருக்கிறார்.
சொந்தத் திறமை மூலம் இப்படி ஒரு உயரத்தை எட்டிப் பிடித்த மோஹனப்ரியாவைப் பாராட்டுவதா...
தகுதியுள்ள அந்தப் பெண் வெல்ல வழிவகுக்கும் அப்துல்லாவைப் பாராட்டுவதா..
மனதுக்கு நிறைவாக உணர்கிறேன் அப்துல்லா. வேறொன்றும் இல்லை சொல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
காலைல ஒரு நல்ல செய்தியோடு தொடங்க வழி செய்த பரிசலுக்கு நன்றி.. அப்துல்லாவிற்கு அதை விட ஒரு பெரிய நன்றி..
பரிசல்,
முதலில் உன்னைத்தான் பாராட்ட வேண்டும், தேவையறிந்து வலையில் வேண்டுகோள் விடுத்ததற்கு.
எரிகின்ற தீபங்களைவிட ஏற்றி வைத்த குச்சி மதிப்பு வாய்ந்தது.
அப்துல்லா, தேவையறிந்து காலத்தால் செய்த இந்த உதவி, ஞாலத்தின் மானப் பெரிது.
இறைவன் எல்லா வளமும் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் அருளட்டும்.
மோஹனப் பிரியா மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வலை நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
பரிசல்,
சுட்டு(ம்) விரலால் தீராப் பசியடங்கியவன் கதை தெரியுமா?
மனதுக்கு நிறைவாக உணர்கிறேன் அப்துல்லா.
வழிமொழிகிறேன்
பரிசல்,
நீ யாருக்கும் அல்லகை அல்ல, அள்ளக்கை.
செல்வம் இருக்குமிடமறிந்து, தேவைபடுபவருக்கு அள்ளிக் கொடுக்கும்கை.
மற்றவர்களுக்கு உதவுவதே இன் இயற்கை.
பிறர் குற்றம் புறம்தள்ளு அது செயற்கை.
குற்றம் சொல்வதே அவர்க்கு வாடிக்கை.
Hats off to Mr. Abdullaa and you too Mr. Parisal. !!!!
paaraattukkaL :-)
Well done அப்துல்லா!
அப்துல்லா.. நீயே மோகனபிரியாவுக்கு அல்லா.. வாழ்க.. உன் உள்ளம். வளர்க மோகனபிரியாவின் வெற்றி.
மோஹனப் பிரியாவிற்கு என் வாழ்த்துக்கள். அவள் தந்தைக்கும் என் வாழ்த்துக்கள். அப்துல்லா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள், அதுமட்டுமல்ல அவருடைய அனைத்து எதிர்கால முயற்சிகளும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
யார்யா சொன்னது வலைப்பதிவு எழுதறது வெட்டி வேலைனு....
அப்துல்லா உங்களுக்கு ஒரு சல்யூட்
பலரும் எண்ணியதை வேலன் அழகாகச் சொல்லி விட்டாலும்...
மோஹனப் பிரியா மேலும் பல போட்டிகளில் வென்று, ஆனந்தைப் போல் பெயர் பெறட்டும்.
அப்துல்லாவை நினைத்தால் மிகப் பெருமையாக இருக்கிறது. அதிஷா சொல்வதுபோல் பதிவுலகம் வெறும் வெட்டி உலகம் அன்று. Hats off Abdullah!
Last but not the least, இந்த மகத்தான சாதனை/உதவிகளின் பின் உங்கள் பெரும்பங்கும் இருக்கிறது பரிசல். As always you rock.
அனுஜன்யா
அப்துல்லாவிற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
பரிசல் உங்களுக்கும் சேர்த்துதான்.
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலில் பெரிது.
அப்துல்லாவின் அன்பு மனதிற்கு முன்னால் நான் மிகச்சிறிதாக உணர்கிறேன். நன்றியும் வாழ்த்துகளும் அவருக்கு.! தூண்டுதலாக இருந்த பரிசலுக்கு மனமுவந்த பாராட்டுகள்.
அதிஷா :யார்யா சொன்னது வலைப்பதிவு எழுதறது வெட்டி வேலைனு....//
கும்கி :பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலில் பெரிது.//
பெருமகிழ்வோடு ரிப்பீட்டு சொல்கிறேன்.
தலைப்பை பாராட்ட மறந்திட்டேன். அருமை.!
மனதுக்கு நிறைவாக உணர்கிறேன் அப்துல்லா//
இதுக்கு ஒரு ரீப்பீட்டு போட்டுக்கறேன்.
அப்துல்லா என் தம்பி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்.
மோஹனப்ரியாவிற்கு வாழ்த்துக்கள்.
பரிசல் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் அப்துல்லா.
பிடிர்ந்தமைக்கு நன்றி பரிசல்.
மென்மேலும் பல வெற்றிகளை குவித்திட மோகனபிரியாவுக்கு வாழ்த்துக்கள்.
//நம் மகள் என்பதால் எனக்குத்தான் அவள் விளையாடுவது சிறப்பாகத் தெரிகிறதோ’ என்று சந்தேகம் வந்தவர்//
நியாயமான சந்தேகம்
பாராட்டுக்கள் அப்துல்லாவிற்கும் கே கே விற்க்கும். கிடைப்பதிலே பேரின்பம் அடுத்தவருக்கு உதவி செய்வதில் தான்.
வடகரை வேலன் அவர்களிக் பின்னுட்டங்களை அப்படியே வழிமொழிகிறேன்.
வலைப்பதிவுகளால் என்ன நன்மையென கேட்டு பதிவிட்ட பதிவர் நண்பர்கள் இதை பார்த்து மனம் நிறையட்டும்.
அப்துல்லா, பரிசல் மற்றும் இந்தப்பெண் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//இந்தியாவுக்குள் எந்த நகருக்கு விளையாடப் போனாலும் அதற்கான செலவுகளை தனது நிறுவனம் ஏற்றுக் கொள்வதாய் அறிவித்திருக்கிறார் அப்துல்லா.//
தல..
வெளியூர் சென்றதால் தாமதம்.. மன்னிக்கவும்
அப்துல்லா... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. உங்களைப்போன்றவர்கள் விரல் பிடித்து இப்படி வழிகாட்டுவதுதான் என்போன்றவர்களுக்கு ஆதர்சனம்.. தொடரட்டும்.. அப்துல்லா..
நர்சிம்
பரிசல்.காம் ஆ?? வாழ்த்துக்கள் தலைவா...
நர்சிம்
அப்துல்லாவிற்கு வணக்கங்கள்
பரிசல் - உங்களுக்கேற்ற பெயர்தான்
மிகப் பெருமையாய் இருக்கிறது அப்துல்லா!!
பரிசல்,அப்துல்லா..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!
தோழர் அப்துல்லா மேன்மேலும் இதுபோன்ற பணிகள் செய்து சிறக்க இந்த ரமலான் மாதத்தில் எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்!
இன்ஷா அல்லா!
செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி பரிசல்!!!
நல்ல முயற்சி. இது போன்ற நல்ல விஷயங்கள் பல நடக்க வாழ்த்துக்கள்.
பெரிய விஷயம்யா நீங்க செய்திருப்பது. சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு.
// அதிஷா said...
யார்யா சொன்னது வலைப்பதிவு எழுதறது வெட்டி வேலைனு....//
அருமை.
அப்துல்லாவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
விஸ்வரூபம் எடுக்கறீங்க க்ருஷ்ணா
//பரிசல்,
முதலில் உன்னைத்தான் பாராட்ட வேண்டும், தேவையறிந்து வலையில் வேண்டுகோள் விடுத்ததற்கு.
எரிகின்ற தீபங்களைவிட ஏற்றி வைத்த குச்சி மதிப்பு வாய்ந்தது.//
repeataiii!!
//அப்துல்லா, தேவையறிந்து காலத்தால் செய்த இந்த உதவி, ஞாலத்தின் மானப் பெரிது.
இறைவன் எல்லா வளமும் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் அருளட்டும்.//
really nice words i repeat the same!!
அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்..
ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் !!!
அசத்திட்டீங்க அப்துல்லா.
வாழ்த்துக்கள் மோகனபிரியா.
பெரிய தொழில் அதிபரான திரு மிட்டல் அவர்கள் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து விளையாட்டில் ஈடுபடுவோர்க்கு உதவி செய்து வருகிறார். இவருக்கு இன்னும் உதவிகள் தேவையாயின் இவர்களையும் அனுகிப்பார்கலாம். கீழே உள்ள இணைய தளத்தை பார்க்கவும். இதற்கு முன்னை டென்னிஸ் வீராங்கனை மனிஷ் மல்ஹொத்த்ரா பொறுப்பு வகிக்கிறார்.
http://www.mittalchampionstrust.com/
SK said...
அசத்திட்டீங்க அப்துல்லா.
//
முதன்முதலில் இந்த விஷயம் தெரியவந்தது உங்களால் தானே எஸ்.கே அண்ணே... பாராட்டுக்கள் உங்களுக்கு.
அப்துல்லா அண்ணே, உங்களுக்கு ஒரு ஈமெயில் எழுதி இருக்கேன். அதை கொஞ்சம் பாருங்க அண்ணே.
எனக்கு முதன் முதலா இட்லிவடை மற்றும் கௌரிசங்கர் மூலமா தானே தெரிஞ்சது..
எங்களுக்கு உங்களால தான தெரிஞ்சது.
//எனக்கு முதன் முதலா இட்லிவடை மற்றும் கௌரிசங்கர் மூலமா தானே தெரிஞ்சது..
//
அப்ப அவங்களுக்கும் பாராட்டுகள்.
அண்ணே, உங்களுக்கு நான் எழுதற ஈமெயில் எல்லாம் வருதா இல்லை நான் எதாவது தப்பான ஐ டி க்கு அனுபிகிட்டு இருக்கேனா ??
குமார் என்ற பெயரில் வரும் மெயில்கள் தானே நண்பா?
ஆமாம் ஆமாம் அதே அதே
ஒ பேருலே கொழப்பமா ?? மன்னிச்சிடுங்க
Thank you Abdulla.
Lets not forget, that Hyundai Corp also given her money, for her trip, and I understand one of our other reader gopinath have sent US$500 to her.
Every drop is going to help her and motivate to achieve new heights.
மோஹனப்பிரியா - புதுகை அப்துல்லா - பரிசல்காரன் மூவரின் எண்ணங்களும் சிறக்க, வெல்ல எல்லா நல்ல உள்ளங்களும் வாழ்த்தும்.
இந்த நற்பணியில் வெளித் தெரியாமல் உதவி இருக்கும் / உதவ இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
//வடகரை வேலன் said...
பரிசல்,
முதலில் உன்னைத்தான் பாராட்ட வேண்டும், தேவையறிந்து வலையில் வேண்டுகோள் விடுத்ததற்கு.
எரிகின்ற தீபங்களைவிட ஏற்றி வைத்த குச்சி மதிப்பு வாய்ந்தது.
அப்துல்லா, தேவையறிந்து காலத்தால் செய்த இந்த உதவி, ஞாலத்தின் மானப் பெரிது.
இறைவன் எல்லா வளமும் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் அருளட்டும்.
மோஹனப் பிரியா மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வலை நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.//
ஒரு பெரிய ரிப்பீட்டு..
எல்லா பின்னீட்டையும் சேர்த்து ஒரு பெரிய ரிப்பீட்டு.....
நடராசன்
அப்துல்லா இரசிகர் மன்றம் - ஹவாய், ஐக்கிய நாடுகள்
இந்த சதுரங்க வீரங்கனைக்கு உதவி தேவை என முதலில் பதிவிட்ட இட்லி வடை, எஸ் கே ஆகியோருக்கும், பரிசல் அண்ணணுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கு ஓடோடி வந்து உதவும் அப்துல்லா அண்ணணுக்கும் என் வணக்கங்கள்.
அப்துல்லா அண்ணண் தான் செய்யும் உதவிகள் வெளியில் தெரியக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பார் என்பதால் எனக்கு தெரிந்து அவர் செய்த உதவிகளை நான் இதுவரை பதிவிடவில்லை.
உதவி தேவைப்படுபவர்களையும், உதவுபவர்களையும் இணைப்பது கூட ஒரு பெரிய செயல்தான். அந்த வகையில் பரிசல் மற்றும் இதே உதவியை வேண்டி பதிவிட்ட அனைவரும் போற்றத்தக்கவர்களே.
நீங்கள் மோகனப்ரியாவுக்கு செய்தது சாதாரண உதவியல்ல. நம் தேசத்திற்கே பெருமையளிக்கும் செயல். அந்த பெண் ஆனந்தை போல பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.
நம்ம ஊர்ல எந்த காலமும் மழை பொய்காதுண்ணே. அதான் இத்தனை நல்ல உள்ளங்கள் இருக்குல்ல.
Very good effort! Good work guys!
சுரேகாவின் பதிவில் தங்கள் பின்னூட்டம் கண்டு இங்கு வந்தேன் பரிசல் காரரே. அப்துல்லா உதவுவதாக வாக்களித்தது உங்கள் பதிவு மூலமே தெரியும். அதன் பிறகு நடந்தவற்றை அறிகையில் மகிழ்வாக இருக்கிறது. உங்களுக்கும் அப்துல்லாவுக்கும் மோஹனப்ரியாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அவரு எங்க ஊருக்காரரு
தெரியுமுல்ல?
:))))
Post a Comment