Monday, September 22, 2008

வேணாம் வடிவேலு... விட்டுடுங்க.அன்புள்ள வடிவேலுவுக்கு...

நான் உங்க ரசிகன்-ங்கறத சொல்லவே வேண்டியதில்லை. உங்க டயலாக் டெலிவரிக்கும், மாடுலேஷனுக்கும், பாடி லேங்குவேஜூக்கும் யாருதான் உங்களுக்கு ரசிகனா இருக்க மாட்டாங்க?

விவேக் மேல்தட்டு மக்களை தன்னோட சிந்திக்கற டைப் காமெடி மூலம் ஒரு பாதைல நடந்து போய்ட்டிருக்கறப்ப, ஒண்ணும் தெரியாத மாக்கான் மாதிரி இருந்துகிட்டு, நீங்க பண்ற சேட்டைகள் மூலமா கலக்கலா எல்லாரையும் கவர்ந்தீங்க. நீங்க வர்றவன், போறவன்கிட்டயெல்லாம் அடிவாங்கறப்ப எதுக்கும் கலங்காம நீங்க பேசற டயலாக் பலதும் இன்னிக்கு சொன்னதுமே ‘குபுக்’ன்னு சிரிப்பு வர்ற அளவுக்கு பேர் பெற்றிருக்குது.

’அது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்’

‘வேணாம்… வலிக்குது. அழுதுடுவேன்’

‘ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க’

‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?’

’இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?’

‘கிளம்பீட்டாய்ங்கய்யா… கிளம்பீட்டாய்ங்க’

‘என்னை வெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே’

‘இதுதான் அழகுல மயங்கறதா?’

‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ் மட்டம் வீக்’

‘என்னா வில்லத்தனம்?’

‘இப்பவே கண்ணைக் கட்டுதே..’

இந்தப் பட்டியல் ‘முடியல’ வரைக்கும் முடியாத ஒண்ணு! படிக்கும்போதே உங்க மாடுலேஷன்லதான் படிக்கமுடியும். படிச்ச உடனே ஒரு ரிலேக்சேஷன் கிடைக்கும். ஏன், என் வாழ்க்கையிலயே பல சிக்கலான சந்தர்ப்பங்களை உங்களோட ஏதாவது டயலாக்கைச் சொல்லி, கூட இருக்கற எல்லாரையும் சிரிக்கவெச்சு, சூழ்நிலையிலவே மாத்தியிருக்கேன்.

ஒரு கட்டத்துல விவேக்குக்கும், உங்களுக்கும் கடுமையான போட்டி ஆரம்பிச்ச சமயம், அது ஆரோக்யமான போட்டிதான்-ங்கற மாதிரி, விவேக் சில படங்கள்ல உங்க ‘கிளம்பீட்டான்யா’ வைச் சொல்லி சிரிக்க வெச்சாரு. அவ்வளவு ஏன், நீங்க நடிக்காத சூப்பர் ஸ்டாரோட ‘சிவாஜி’ல விவேக் உங்க மாடுலேஷன்ல ஒரு இடத்துல பேசுவாரு. அதுமட்டுமில்லாம ரஜினிகாந்தே ‘என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே’ன்னு டயலாக் பேசினாரு. அவன் டயலாக்கை நான் பேசறதா’ன்னு கொஞ்சமும் தயங்காம பேசினது சூப்பர் ஸ்டாரோட பெருந்தன்மைன்னாலும், அந்த டயலாக் யாரு எழுதியிருந்தாலும் உங்களாலதான் அது பிரபலாமாச்சுங்கறதுல எந்தவித சந்தேகமுமில்லை!

ஆனா… சமீபமா உங்க பேரு அரசியல்ல அடிபடறது பிடிக்கல தலைவா. உங்களுக்கு அது தேவையில்லாத விஷயம்ன்னு எனக்குப் படுது. அரசியல் தேவையில்லைன்னு சொல்ல வரல. சும்மா காசுக்காக மேடைல அரசியல் பேசி, காணாமப் போன காமெடி நடிகர்கள் லிஸ்ட்ல நீங்களும் வந்துடுவீங்களோன்னு பயமா இருக்கு! ரூம்போட்டு யோசிச்சு, உங்களை வெச்சு காமெடி பண்ண ஒரு கூட்டம் கெளம்பீடுச்சு. அதுல நீங்க மாட்டினா அப்புறம் ’வேணாம். வலிக்குது’ன்னு ’அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ன்னு அழ வேண்டியதுதான். ஏன்னா அரசியல்ல உங்க பில்டிங்கும் ஸ்ட்ராங்கில்ல, பேஸ்மட்டம் வேற வீக்கா இருக்கு. இது உங்களுக்கே தெரியும்.

இதுக்கு முதல்ல உங்க வீட்டுக்கு முன்னாடி நடந்த கார் பிரச்சினையப்ப உங்க மேல அவ்வளவா தப்பில்லைன்னு சம்பவ இடத்துல இருந்த என் நண்பர் மூலமா தெரிஞ்சுகிட்டப்ப ’பாவம்யா இவரு’ன்னுதான் தோணிச்சு. அதே மாதிரி இரண்டு நாட்களுக்கு முன்னாடி உங்க வீட்ல, அலுவலகத்துல நடந்த கல்வீச்சு சம்பவமும் வன்மையா கண்டிக்கக்கூடிய விஷயம்தான். அதுல பாதிக்கப்பட்ட உங்களோட மனம் எவ்வளவு சங்கடத்துக்குள்ளாகியிருக்கும்ன்னு புரிஞ்சுக்கமுடியுது. அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படக் கூடியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

ஆனா, இன்னைக்கு காலைல செய்திகள்ல உங்க பேட்டியைப் பார்த்தேன். ‘விஜய்காந்த் எந்தத் தொகுதியில நின்னாலும் அவரை எதிர்த்து நிக்கறேன். அவரா, நானான்னு பார்க்கறேன்’ –ன்னு சொன்ன நீங்க அதுக்கு முன்னாடி, ‘பார்க்கலாமா… நீயா நானான்னு பார்க்கலாமா?’ன்னு ஒருமைல சொன்னதை என்னால ரசிக்க முடியலைங்க.

நான் யாருக்கும் பரிஞ்சு பேசல. அரசியல்ல குதிக்கறது அவ்வளவு சாதாரணமா என்ன? ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே யோசிச்சு, யோசிச்சு நம்ம மனநிலைக்கு இது ஒத்துவராதுன்னு அமைதியா இருக்காரு. உங்களுக்கு எதுக்கு இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு பேட்டி? இதுனால நீங்க நாளைக்கே அரசியலுக்கு வருவீங்கன்னு நான் சொல்லல. இந்தமாதிரி பேட்டியெல்லாம் நீங்க குடுக்கறதால உங்களை யாரோ பின்னாடி இருந்து இயக்கறதாகவும், அதுக்கு நீங்க பலிகடா ஆகற மாதிரியும் தோணுது.

ஒரு காலத்துல விஜய்காந்த்-துக்கு குடைபிடிக்கற கேரக்டர்ல நடிச்ச நீங்க இன்னைக்கு நிஜ வாழ்க்கைல அவரையே இப்படி எதிர்க்கற அளவுக்கு வளர்ந்ததுக்கு பின்னாடி இருக்கற உங்க உழைப்பு சந்தேகத்துக்கிடமில்லாதது. அதற்குப் பாராட்டுக்கள். ஆனா, எல்லாரையும் அரவணைச்சுப் போங்க தலைவா. இந்த மாதிரியெல்லாம் பப்ளிக்ல ஒருத்தரை, அதுவும் உங்க சொந்த ஊர்க்காரரை ஒருமைல திட்டற அளவுக்கு போகணுமா?

வேணாம் வடிவேலு...விட்டுடுங்க!

இப்படிக்கு
உங்கள் ரசிகர்கள்ல ஒருத்தன்.

48 comments:

Kumky said...

நேநே முந்துகு ஒச்சிச்ஸ்தானு.

Kumky said...

மீரு நாயங்கா செப்பியுன்னாரு.வால்ல்லூ இநுவால்ன்னே...(மனோரமா அக்கா மாட்லாடிந்திதா கவனம் ஒஸ்துந்தி..சரிகாபோயிந்தியா?)

கார்க்கிபவா said...

ஹலோ திருப்பூரா? என் பிரதர் பரிசல் இருக்காரா? வாட், நீ(ங்க)தான் பேசறீயா? ஏன் மேன் அழுவுற? இஸ் இட்? ஓ.. கூல் டவுன் கூல் டவுன்.. டோன்ட் வொரி.. பீ ஹேப்பி..

பரிசல்காரன் said...

@ கும்க்கி

நிங்களு பறஞ்ஞ்து சரிக்கும் மனசிலாயில்லா. மே மேரே தோஸ்த்சே பூச்கே, சமஜ்கயா. எனிவே, தேங்க்ஸ் ஃபார் யுவர் ஒப்பீனியன்!

பரிசல்காரன் said...

@ கார்க்கி

அவ்வ்வ்வ்வ்வ்

குசும்பன் said...

அதர் ஆப்சன் இல்லாததால் கும்மி அடிக்க வந்த வடிவேலு திரும்ப சோகத்தோடு போகிறான்.

narsim said...

ஷேம் ஃபீலிங்ஸ்..

நானும் இதையேதான் நினைத்தேன்.. இருந்தாலும் அத்துமீறல் என வரும்பொழுது யாராக இருந்தாலும் கோபம் வருவதும் இயற்கைதானே..

பதிவில் வார்த்தைகள் அருமை..


வாழ்த்துக்கள்‍ முதல் 10ல் இடம் பிடித்ததற்கு..

நர்சிம்

KARTHIK said...

// இதுனால நீங்க நாளைக்கே அரசியலுக்கு வருவீங்கன்னு நான் சொல்லல. //

தல நானும் அந்த பேட்டிய பாத்தேன்.அவர் அரசியலுக்கு வருவேங்கிரத சொல்லாம சொல்லிட்டாரு.

விஜய் ஆனந்த் said...

வடிவேலு காமெடி பண்ணா நல்லாருக்கும்...

ஆனா அரசியல் பண்ணா???

Anonymous said...

வடிவேலு அரசியல் பண்ணா காமெடியா இருக்கும்

வெண்பூ said...

அருமை பரிசல்.. எனக்கும் இதேதான் தோன்றியது (பெரும்பாலான அவரது ரசிகர்களும் இதையேத்தான் நினைத்திருப்பார்கள்).

சங்கர் said...

காமெடி ... அரசியல்
வித்தியாசம்????

Vaanathin Keezhe... said...

சரி... வடிவேலு அரசியலுக்கு வரவேணாம். நியாயமான கருத்துதான்.

ஆனால் விஜய்காந்தை என்ன பண்ணலாம்?

ஏற்கெனவே தனக்கும் வடிவேலுக்கும் இருக்கிற பகையை வச்சி திமுக - அதிமுக சதி பண்ணிடுச்சின்னு சொல்ல வர்றீங்களா...?

என்னைக் கேட்டால், விஜய்காந்த் மாதிரி அரைவேக்காடுகளை, சுயநலமிகளை எக்ஸ்போஸ் பண்ண இது வாய்ப்பு!

கிரி said...

வடிவேலுக்கு இது வேண்டாத வேலை ..படத்தில் பேசும் வசனங்களும் நிஜத்தில் பேசும் வசனங்களும் ஒன்றல்ல. என்னமோ போங்க!

பரிசல்காரன் said...

//குசும்பன் said...

அதர் ஆப்சன் இல்லாததால் கும்மி அடிக்க வந்த வடிவேலு திரும்ப சோகத்தோடு போகிறான்//

தொறந்துட்டா போச்சு!

@ நர்சிம்

நன்றி!

@ கார்த்திக்

//தல நானும் அந்த பேட்டிய பாத்தேன்.அவர் அரசியலுக்கு வருவேங்கிரத சொல்லாம சொல்லிட்டாரு.//

சிரிப்புதான் வருது!

விஜய் ஆனந்துக்கு பதில் சொன்னதுக்கு நன்றி வேலன்!

@ வெண்பூ

ஆமா

@ சங்கர் said...

காமெடி ... அரசியல்
வித்தியாசம்????//

வேணாம். அழுதுடுவேன்.

@ கிரி

சரியாச் சொன்னீங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்பயும் கார்டூன் தான் ஓடுது .. செய்தி எல்லாம் யாரு பாக்கமுடியுது.. நீங்கள்ளாம் சொன்னாதான் செய்தி.. இப்படி எல்லாம் நடக்குதா.. வடிவேலுவுக்கு எதுக்கு இது எல்லாம் ? :(

சரவணகுமரன் said...

//ரூம்போட்டு யோசிச்சு, உங்களை வெச்சு காமெடி பண்ண ஒரு கூட்டம் கெளம்பீடுச்சு. அதுல நீங்க மாட்டினா அப்புறம் ’வேணாம். வலிக்குது’ன்னு ’அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ன்னு அழ வேண்டியதுதான். ஏன்னா அரசியல்ல உங்க பில்டிங்கும் ஸ்ட்ராங்கில்ல, பேஸ்மட்டம் வேற வீக்கா இருக்கு//

சூப்பரா சொல்லி இருக்கீங்க...

Sen22 said...

அருமையா சொல்லி இருக்கீங்க Boss..

ISR Selvakumar said...

நீங்க என்னதான் அமுக்கமா எழுதியிருந்தாலும்,

"வேணாம் விஜயகாந்த் விட்டுடுங்க" என்று விஜயகாந்துக்கு எழுதாமல்,

"வேணாம் வடிவேலு விட்டுடுங்க . ." என்று வடிவேலுவுக்கு லெட்டர் எழுதியதால்

நீங்கள் நடுநிலைப் போர்வையில் விஜயகாந்த்தை ஆதரிப்பவர் என்பவர் என்பது என் கருத்து

//‘பார்க்கலாமா… நீயா நானான்னு பார்க்கலாமா?’ன்னு ஒருமைல சொன்னதை என்னால ரசிக்க முடியலைங்க.//

விஜயகாந்த் குண்டர்கள் வடிவேலு வீட்டில் கல்லெறிந்ததை கண்டித்து "நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் விஜயகாந்த்?" என்று பன்மையிலாவது திட்டியிருக்கலாம்.

//ஒரு காலத்துல விஜய்காந்த்-துக்கு குடைபிடிக்கற கேரக்டர்ல நடிச்ச நீங்க இன்னைக்கு நிஜ வாழ்க்கைல அவரையே இப்படி எதிர்க்கற அளவுக்கு வளர்ந்ததுக்கு பின்னாடி இருக்கற உங்க உழைப்பு சந்தேகத்துக்கிடமில்லாதது. அதற்குப் பாராட்டுக்கள். ஆனா, எல்லாரையும் அரவணைச்சுப் போங்க தலைவா. இந்த மாதிரியெல்லாம் பப்ளிக்ல ஒருத்தரை, அதுவும் உங்க சொந்த ஊர்க்காரரை ஒருமைல திட்டற அளவுக்கு போகணுமா?//

படிக்கும்போதே கண்ணைக் கட்டுது. வடிவேலண்ணே உங்க வீட்டுக்குள்ள வந்து விழுந்த கல்லையெல்லாம் விஜயகாந்த்தண்ணேகிட்ட திருப்பிக்குடுத்துட்டு (ஏன்னா அது அவர் எறிஞ்ச கல்லு)
‘வேணாம்… வலிக்குது. அழுதுடுவேன்’
‘என்னா வில்லத்தனம்?’
’இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?’
‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ் மட்டம் வீக்’குன்னு திரும்பி வந்துடுங்க.

ஏன்னா விஜயகாந்த் சார் ஹீரோ. அவர் என்ன வேணும்னாலும் செய்யலாம்.
நீங்க காமெடியன் ‘என்னை வெச்சு காமெடி, கீமெடி பண்ணலியே’ன்னு அடிவாங்கிக்கிட்டு சும்மா இருங்க.

ISR Selvakumar said...

அடிச்சவனை விட்டுட்டு
அடி வாங்கினவனை மிரட்டாதீங்க தலைவா!

VIKNESHWARAN ADAKKALAM said...

வேணாம் விட்டுடுங்க.... வலிக்குது.... அவ்வ்வ்வ்

ஜெகதீசன் said...

வேண்டாம் பரிசலு... விட்டுடுங்க அப்படின்னு யாராச்சும் எதிர் பதிவு போடுங்களேம்ப்பா....
:P

rapp said...

ஏன் என்ன தப்புங்கறேன்? என்ன, வடிவேலுவுக்கு நம்ம கேப்டன் அளவுக்கு காமடி வருமான்னு தெரியல:):):)

rapp said...

மீ த 24TH

rapp said...

மீ த 25TH:):):)

rapp said...

இது முந்தைய பதிவிற்கான கமெண்டு, அந்தக் குழந்தை ரொம்ப ரொம்ப அழகா இருக்கு:):):) க்யூட் பாப்பா

rapp said...

சகலகலா சம்பந்தி வெண்பூவுக்கு என்னாச்சு? வர வர கேரெக்டர் ஆர்ட்டிஸ்டு மாதிரி பேசிக்கிட்டு இருக்கார்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................

வெண்பூ said...

//சகலகலா சம்பந்தி வெண்பூவுக்கு என்னாச்சு? வர வர கேரெக்டர் ஆர்ட்டிஸ்டு மாதிரி பேசிக்கிட்டு இருக்கார்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................
//

(விவேக் ஸ்டைலில் படிக்கவும்) ஆஹா.. வந்துட்டீங்களாம்மா?? எங்க இருக்கீங்க எப்படி வர்றீங்கன்னே தெரியமாட்டேங்க்குது. ஆனா என்னை கும்முறதுக்கு மட்டும் கரெக்டா வந்துடுறீங்களே... :)))

புது பதிவு போட்டுட்டமுல்ல.. மொக்கையை படிச்சி பாத்துட்டு பேசுங்க.. :))

Anonymous said...

எந்த கேனப்பயலும் இந்த சூழ்நிலையில் கல்லெறிய மாட்டான் ,

வடிவேலுவுக்கு சம்பாதித்த காசை திமுக விடம் இழக்க ஆசை .

என்ன செய்ய , எம்ஜியாரை எப்படி முதல்வர் ஆக்கினாரோ அதேபோல் கருப்பு எம்ஜியாரை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டார் கயவர் கருணாநிதி

Anonymous said...

after a long time.. testing..........

சிம்பா said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. இதே வடிவேலு நாளைக்கு தே.மு.தி.க வுல கோ.பா. சே, வா வந்தாலும் வரலாம். ஆனால் இதற்கு முன் இவர்கள் முட்டிக்கொளும் போது, நம்ம வடிவேலு செம்ம மப்புல இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

ஏன் டா சாவு வீடு அங்க இருக்க எதுக்கு டா கார கொண்டாந்து இங்கக்குள்ள நிப்பாட்டுற, நாலு பேரு சேந்து கூட்டம் கூடிட்டா என்ன வேன்னாலும் பண்ணுவியா.. என்று அப்பொழுதே நம்ம வடிவேலு ஒருமையில் பேசியுள்ளார். ஏற்கனவே தமது தலைவர் படத்தில் நடிக்க மறுத்து, இப்போ இப்படி வேற நீ கெளம்பிட்டியா என்று ஆரம்பித்த மோதல், இன்று இப்படி வளர்ந்துள்ளது. மேலும் நேற்று வடிவேலு அவர்கள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு மாதிரியான பேட்டி கொடுத்துள்ளார்.

நண்பரே இது அரசியல். சத்தியமா சாமானியனுக்கு புரியாது...:-))))

சின்னப் பையன் said...

அருமையா சொல்லி இருக்கீங்க Boss..

Saminathan said...

கேக்கறவன் கேனப்பயலா இருந்தா, கே.ஆர்...................

வேண்டாம் வாயாக் கிண்டாதீங்க பரிசல்...

நண்பர்கள் சிம்பா, நிழலின் குரல் சொல்வதே சரியென்று படுகிறது...

RATHNESH said...

அப்படியே பிரதி எடுத்து வடிவேலுவுக்கு அனுப்ப வேண்டிய நல்ல பதிவு. கூடவே, அவருடைய பழைய புகைப்படம் ஒன்றையும் (போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு காலப் படம்) அனுப்பினால் ஒருவேளை ஏதாவது 'போதை'யில் தன்னிலை மறந்திருந்தார் என்றால் . . . தெளிவதற்கு உதவும்.

நாமக்கல் சிபி said...

//வடிவேலு அரசியல் பண்ணா காமெடியா இருக்கும்//

ஏற்கனவே அரசியல்ல இவரை விட பெரிய காமெடி ஜாம்பவான்களெல்லாம் இருக்குறப்போ இவரு வேற எதுக்குங்கறேன்?

தமிழன்-கறுப்பி... said...

கொஞ்ச நாள் இணையத்துக்கு வர முடியலைன்னா எத்தனை பதிவுகள் அப்பப்பா...
ஒரு முடிவோடதான்யா இருக்காய்ங்க...:))

தமிழன்-கறுப்பி... said...

பரிசல் என்னா வில்லத்தனம் உங்களுக்கு...;)

தமிழன்-கறுப்பி... said...

எப்படி பரிசல் இத்தனை பதிவுகளை எழுதுறிங்க...!!!

தமிழன்-கறுப்பி... said...

வடிவேலுவும் அரசியல்லயா?!!
"முடியல...."

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...
//வடிவேலு அரசியல் பண்ணா காமெடியா இருக்கும்//

ஏற்கனவே அரசியல்ல இவரை விட பெரிய காமெடி ஜாம்பவான்களெல்லாம் இருக்குறப்போ இவரு வேற எதுக்குங்கறேன்?
\\

ரிப்பீட்டு...:)

Anonymous said...

Dear Parisal

Well said. Keep it up. You are trying your level best to control the anger.

Raghavan, Nigeria

துளசி கோபால் said...

இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது.

எல்லாத்தையும் நம்பக்கூடாதுன்னு அவருக்கு யாராய்ச்சும் சொல்லுங்கப்பா.

tamilraja said...

அதெப்படி எழுத்துல சுளுக்கு எடுக்கறீங்கநான் வலைக்குள்ள வந்து கொஞ்ச நாளாச்சு இப்பதான் ஒவ்வொரு வலையையும் முழுசா படிச்சு பின்னூட்டம் இடறேன்
ஆனா நீங்க எழுதற வீச்சப்பார்த்தா இப்பவே கண்ணகட்டுது

Subash said...

இவங்க சண்டைய விட பதிவிற்கு தெரிவுசெய்திருக்கும் பெருத்தமான 2 படங்களும் சூப்பரு.

குடுகுடுப்பை said...

உங்களுக்கு அரசியல் காமெடி ஒத்து வராதுங்கோ. அப்புறம் நான் வேற போட்டில இருக்கேன் தயவு செஞ்சு வெலகிக்கங்க.என்னை எதித்தி நிக்கிறேன்னு அறிக்கையெல்லாம் விடாதீங்க.

Anonymous said...

Mr. Selva kumar neenga solvathae

Sari. Neengal sonna anaithum correct.

Vijayakanth - Hero arasiayalukku vanthal o.k.

Vadivel - comedian arasiayalukku vanthal sariyillaiaya?

Ean? Ean?

I don't understand

Hero than muthalvan, mla, mp ahanuma? Comediayan arasiyalil nindral jaikkamattarkala?

Nam Tamil nattil than "Muzhu Madaiayarkal Jasthi"

"COMEDIAN" enpathal Ellorum nakkal pannukereerkal Yarum avarin unarchikku mathippu kodutha mathiri theriyavillai.

Nalla Nadu Idhu.

கொங்கு நாடோடி said...

தீர்க்கதரிசியோ நீர்? மூணு வருஷம் கழிச்சு நடந்துடுச்சே...

நடந்திரிச்சே நடந்திரிச்சே ....

Suresh said...

neenga oru theerkatharisi