Sunday, September 21, 2008

என்ன கொடுமை சார் இது?

என்ன கொடுமை இது-ங்கற தலைப்புல எழுதறது இப்போ ட்ரெண்டா? ரெண்டு, மூணு போஸ்ட் இந்தத் தலைப்புல பார்த்தேன்!

ஓக்கே, மேட்டருக்கு வரேன்.

நேத்து உமாவோட அண்ணன் பையன் ருத்ரேஷுக்கு மொட்டை அடிக்க ஒரு கோயிலுக்குப் போனேன். பையனுக்கு முடியெடுக்க வந்தவர், ஒரு குச்சி எடுத்து ப்ளேடு சொருகி, நூலால கட்டி ஷேவிங் ரேசர் ஒண்ணு ரெடி பண்ணினாரு. கடுப்பாய்ட்டோம் நாங்க!

இந்த ஃபோட்டோவப் பாருங்க!என்ன கொடுமை இல்ல?

ஆனா ஒரு நியூஸ் என்னான்னா, அதுக்கப்புறம் நாங்க வாங்கிக் கொடுத்த ரேசரை விட இந்த ஆயுதம்தான் அவருக்கு இலாவகமா இருந்தது!
மொட்டைப் பையனுக்கு வாழ்த்து சொல்லீடுங்க!

31 comments:

பின்னூட்ட said...

நல்ல டெக்னிக்கா இருக்கே... இனிமேல் ஷேவ் பண்ண இதை கடை பிடிக்க வேண்டியதுதான்...

பின்னூட்ட said...

அப்பாடா யாரையும் மீ த பர்ஸ்டுன்னு போடா விடாம தடுத்தாச்சு..

விஜய் ஆனந்த் said...

மொட்டப்பையனுக்கு வாழ்த்துக்கள்!!!

Syam said...

//அப்பாடா யாரையும் மீ த பர்ஸ்டுன்னு போடா விடாம தடுத்தாச்சு..//

me the firstu... :-)

Syam said...

மொட்டை இஸ் சோ சுவீட்...வாழ்த்துக்கள்!!!

Syam said...

சூப்பர் டெக்னாலஜி.... :-)

வெண்பூ said...

ஏன் அவரை அதை உபயோகிக்க அனுமதித்தீர்கள் பரிசல்? ஒரு நாவிதனிடம் ஒரு நல்ல சவரக்கத்தி கூட கிடையாதா? :(

**

மொட்டை ஸோ ஸ்வீட், ஸோ க்யூட்...

குசும்பன் said...

குசேலன் பசுபதிக்கு போட்டியா?

ரேசர் மேட்டரை காப்பிரைட் செஞ்சு வெச்சுடுங்க, இல்லை இதுக்காகவே குசேலன் பார்ட் 2 வரும்.

மொட்டைக்கு வாழ்த்துக்கள்!

அதிஷா said...

பயலுக்கு சுத்தி போட சொல்லுங்க அப்புறம் உங்க பிளாகுக்கும் .( 8 வது இடம் புடிச்சதுக்கு )

கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே

ச்சின்னப் பையன் said...

மொட்டை இஸ் சோ சுவீட்...வாழ்த்துக்கள்!!!

ஜோசப் பால்ராஜ் said...

என்ன அண்ணே, வரிசையா ஒரே மொட்டையா போட்டுக்கிட்டு இருக்கீங்க? போன வாரம் அதிஷா வீட்டு குழந்தைகளுக்கு மொட்டையடிச்சீங்க. இன்னைக்கு அண்ணியோட அண்ணண் பையனுக்கா?

கும்க்கி said...

ரெம்ப ஓல்ட்டு டெக்னாலஜி. நாம் என்னதான் தலய தலய அடிச்சிகிட்டாலும் அவங்களுக்கு அதுதான் வசதி போல.(அது சரி..தாய் மாமன் சீர் என்னவோ?)

புதுகை.அப்துல்லா said...

:) மொட்டைக்கு வாழ்த்துகள்

கும்க்கி said...

சந்தன மொட்டைக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

மொட்டை நல்லா இருக்கு... :)

தமிழ் பிரியன் said...

மொட்டையும் மொட்டையும் சேர்ந்துச்சாம், முருங்க மரத்துல ஏறுச்சாம்

தமிழ் பிரியன் said...

மொட்டைகளுக்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள்!!!

Ram said...

கல்கத்தாவில் காளி கோவிலில் முடி கொடுப்போர் குறைவு என்றாலும், சிலர் கூர்மை மூங்கில் குட்சி வைத்து மழிப்பார்கள். ரத்தம் ஒழுகும் நேர்த்தி கடன். டைப் செய்யவே எனக்கு நடுங்கியது.

சிம்பா said...

வருசையா விசேசங்கள் போல.. கலக்குங்க நண்பா கலக்குங்க.. ருத்ரேஷுக்கு வாழ்த்துக்கள்.

குட்டிக்கு ஒரு செய்தி.
விவரம் தெரிஞ்ச பின்னாடி இப்படி மொட்டை அடிக்காதடா கண்ணா. அப்புறம் பொண்ணு கிடைக்காது...

narsim said...

நிஜமாகவே மிகக் கொடுமை.. நல்ல வேளை பெரிய மனது வைத்து பிளேடை உபயோகித்தாரே.. கற்காலம் போல் கல்லை கூறாகத்தீட்டிக்கொண்டு காத்திருக்காமல்.. கொடுமை..
.....

மொட்டை.. வாழ்த்துக்கள்(க் இருக்கா??)

நர்சிம்

சுபாஷ் said...

ஸ்வீட் மொட்டை.
வாழ்த்துக்கள்

கிரி said...

என்ன கொடுமை சார் இது :-)))))))))

நல்லதந்தி said...

என்னைய்யா கொடுமை இது!.இதையெல்லாம் ஒரு பதிவுன்னுட்டு போடுறீர்.போட்டது போட்டீர் இதை சீரியஸ் பதிவாப் போட்டிருந்தாக்கூட நியாயமான ஒண்ணூன்னு மன்னிசிப்பிடலாம்!.அது சரி இந்த இணைய லோகத்துல இப்போ இப்பிடி கும்மியடிக்கறதுதான் ஃபேஷன்.நாம என்ன பண்ணறதுடி...பட்டு.. லோகம் நன்னா கெட்டுப் போயிடுத்துடீ...பட்டு!.எல்லாம் கலிகாலம்! :)_

Anonymous said...

பரிசல்,

ஒன்னு மொக்கை போடுறீங்க. இல்ல மொட்ட போடுறீங்க.

என்ன கொடுமை இது?

Shajahan.S. said...

மொட்டைக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்!அட இது என்ன டெக்னிக்!சௌதிஅரபியாவில் முஸ்லிகள் ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றான மொட்டை போடுவதில் ஒரே நாளில் இருபது லட்சத்துக்கும் மேலான மக்கள் மொட்டை போட ஆப்ரிக்க நாவிதர்கள் வெறும் பிளேடு மட்டும் விரல்களுக்கிடையில் லாவகமாக பிடித்து ஒரே ஆள் பல நூற்றுக்கணக்கானோருக்கு மொட்டை அடிப்பதை அங்கு சென்றவர்கள் பார்த்திருக்கலாம்.ஆனாலும் நம்மவர்களின் மரக்குச்சி கருவியும் சாதனை தான்!

தமிழ்ப்பறவை said...
This comment has been removed by the author.
தமிழ்ப்பறவை said...

மொட்டைக்கு வாழ்த்துக்கள்.... உம்ம மொக்கைக்கும் வாழ்த்துக்கள்...
பிளேடு மேட்டரு செம ஷார்ப்.(நம்ம பதிவுகளை விட)....
போன பின்னூட்டம் மாறிப் போய் இங்க வந்துடுச்சி... அதான் அழிச்சுட்டேன்...

அது சரி said...

என்ன சாமி.. இப்பிடில்லாம் கூடவா ஷேவிங் ப்ளேடு பண்ணுவாங்க? நிஜமாவே இது ரொம்பக்கொடுமையா இருக்கு! அப்பிடியே பயமாவும் இருக்கு!

SurveySan said...

தொழில் சுத்தமா இருந்த மாதிரிதான் தெரியுது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் :)

சரவணகுமரன் said...

ருத்ரேஷ்க்கு வாழ்த்துக்கள்... :-)