Thursday, September 18, 2008

பகிரங்க மன்னிப்பு கோருகிறோம்!

கடந்த வெள்ளிக் கிழமை அதிஷா என்னை வந்து சந்தித்ததை சனிக்கிழமை பதிவாகப் போட்டுவிட்டு அதிஷாவுக்கு கூப்பிட்டேன்.

“நம்ம சந்திப்பை அதிஷாவுக்கு நேர்ந்த கொடுமை-ன்னு பதிவு போட்டுட்டேன் நண்பா” -ன்னேன்.


“எல்லாருக்கும் நான்தான் கிடைச்சனா? இப்பதான் நர்சிம் கூப்ட்டு எனக்கு கல்யாணம்ன்னு பதிவு போடறதா சொன்னார்” என்றார் அதிஷா.

எனக்குள்ளிருந்த குறும்பன் (குசும்பன் ஃப்ரெண்டு!) விழித்துக் கொள்ள... என் செல்லிலிருந்து அடுத்த அழைப்பு நர்சிம்முக்கு போனது.

“பாஸ்... அதிஷாவுக்கு கல்யாணம்ன்னு பதிவு போடறீங்களா?”

“ஆமா கிருஷ்ணா... ஆனா நான் சிஸ்டம்கிட்ட போக கொஞ்ச நேரமாகும். நீங்க எழுதறீங்களா?” என்று கேட்டார் நர்சிம்.

நான் அப்போது ஒரு வீக்லி மீட்டிங்கின் ஆரம்பத்தில் இருந்தேன். (வெளங்கிடும்!)

”எனக்கும் லேட்டாகுமே பாஸ். நீங்க எழுதிடுங்க. கொஞ்ச நேரத்துல நான் அதை சூடான இடுகைல கொண்டு வந்துடறேன்” என்றேன்.

அடுத்த சில மணித்துளிகளில் நர்சிம்மிடமிருந்து அழைப்பு.

காரில், லேப்பின் டாப்பில் லேப்டாப்பை வைத்தபடியே டைப்பி முடித்திருந்தார் மனுஷன்!

“கிருஷ்ணா.. படிக்கறேன் கேளுங்க” என்று முழுப் பதிவையும் படித்தார்.


“செந்தழல் ரவியும் வர்றாரு பாஸ். அதையும் கடைசில மென்ஷன் பண்ணிடுங்க” என்றேன்.

எழுதி, பதிவேற்றி விட்டார்!

கொஞ்ச நேரத்தில், வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையை முடித்துவிட்டு நர்சிம்மின் பதிவில் போய், சீரியஸாக ஒரு பின்னூட்டத்தைப் போட்டு, பார்ப்பவர்கள் உண்மை என்று நினைக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

நர்சிம்மின் பதிவைத் திறந்தபோது அதில் நான் மிக மதிக்கும் பதிவர்கள் இருவர் அதிஷா திருமணத்துக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள். பைத்தியக்காரன் முதல் பின்னூட்டம் போட்டிருந்தார். அதேபோல ஜ்யோவ்ராம் சுந்தரும் பின்னூட்டம் போட்டிருந்தார். (மற்ற பின்னூட்டம் போட்டிருந்தவர்கள் விஷயம் தெரிந்து கிண்டலடித்திருந்தார்கள்)

படித்து கஷ்டமாகப் போய்விட்டது. அதில் ஜ்யோவ்ராம் சுந்தர் உடனே நர்சிம்முக்கு அலைபேசி “என்ன நடக்குது இங்கே” என்று விசாரித்திருக்கிறார். நர்சிம்மும் உண்மையைச் சொல்லிவிட்டார்.

“இதெல்லாம் பேசி வெச்சுட்டுதான் பண்றோமுங்க”என்று.

உடனே ஜ்யோவ்ராம் சுந்தர் சாரும் (அதாவது ஜ்யோவ்ராம் சுந்தரை ‘சார்’ங்கறேன். வேற ‘சாரு’ம் இல்ல!) “அப்படியா, இருங்க நானும் கும்மறேன்” என்று என்னைத் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டார்.

நானும் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஜ்யோவ்ராம் சுந்தர் சாருக்கு அலைபேசி “தப்பா நெனைச்சுக்காதீங்க தலைவா” என்று சொல்லிவிட்டேன். எத்தனையோ நாளுக்கு முன் அவரது அலைபேசி எண் கிடைத்திருந்தாலும் ‘அவ்ளோ பெரிய மனுஷன்கிட்ட ஒரு மொக்கைச்சாமி என்ன பேசிவிட முடியும்’ என்று பேசவில்லை. முதல் பேச்சே இப்படி அமைந்துவிட்டது!

அன்று (சனிக்கிழமை) இரவு ஒரு வெளிநாட்டு அழைப்பு. என் இனிய நண்பர் வெற்றிகரமான மகிழ்ச்சியானவர் அழைத்தார்.

“பரிசல்... இப்போ நான் உங்க ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறதுல பெருமைப் படறேன்” என்றார்.

“அப்படியா? இப்படி நீங்க ஃபீல் பண்ர அளவுக்கு என்ன ஆச்சு?” என்றேன்.

“அதிஷாவோட காதல் திருமணத்துக்கு நீங்க உதவுறீங்களே.. அதைச் சொன்னேன்” என்றார்.

கொஞ்ச நேரம் புரியாமல் முழித்து, அடடே' என்று சுதாரித்து ஸ்க்ரீன் ப்ளேவில் செட்டிலாகி.. “அதுக்கென்ன வி**? (பேரைச் சொல்லக்கூடாது!) நான் கூட லவ் மேரேஜ்தான். உதவ மாட்டேனா?”

“எப்ப கல்யாணம்?”

“நாளைக் காலைல 7.30 - 9. பொண்ணு இங்க என் வீட்லதான் இருக்காங்க, பேசறீங்களா? வாழ்த்து சொல்லுங்க” என்றேன். (‘சரி.. லைன் குடுங்க’ என்றால் கடகடவெனச் சிரித்து உண்மையைச் சொல்லிவிடலாம் என்ற நினைப்பில். ஆனா நான் இன்னும் இ.வா-வாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நின்றால் நானென்ன செய்யமுடியும்?)

“இல்ல பரிசல். நான் இப்போ ஒரு மார்க்கமா இருக்கேன். காலைல கரெக்டா 9.30 மணிக்கு கூப்ட்டு வாழ்த்தறேன்” என்றார்.

அடுத்த நாள் இன்னொரு பூப்போன்ற வெள்ளை மனதுக்காரர் (இதுக்கு நீ பேரையே சொல்லித் தொலைச்சிருக்கலாம். நீயும் உன் கிசுகிசுவும்..) ஃபோன் செய்தார். அவருக்கு உண்மை தெரியும் என்று நினைத்தேன். அவர் எப்போதுமே கொஞ்சம் ஜாலியாகப் பேசக்கூடிய பேர்வழி. சீரியஸாக பேச ஆரம்பித்தார். ‘ஓஹோ.. உண்மையைத் தெரிஞ்சுகிட்டு என்கிட்டயே நடிப்பா’ என்று நினைத்துக் கொண்ட நான் ஸ்க்ரீன் ப்ளேவை பக்காவாக மெய்ன்டெய்ன் செய்து பேசி முடித்தேன்.


அதுக்கப்புறம் அடுத்த நாள் அதிஷாவோட தங்கை மகள்கள் காதுகுத்துக்கு நானும். செந்தழல் ரவியும் போறப்ப ஈரோட்டிலிருந்து கார்த்திக் கூப்ட்டார். அவர்கிட்ட “பொண்ணு மாப்பிள்ளை முன்னாடி கர்ல போறாங்க. நாங்க பின்னாடி போய்ட்டிருக்கோம்”ன்னேன். முடிஞ்சு கீழ வந்தப்ப எனக்கு நிறைய மிஸ்டு கால் அலர்ட்ஸ் இருந்தது. அதுல ரெண்டு, மூணு அந்த வெளிநாட்டுப் பதிவர்கிட்டேர்ந்து. அன்னபூர்ணால சாப்பிட்டுடு அவருக்கு ‘கூப்டுங்க’ன்னு மெசேஜ் குடுத்தேன். கூப்ட்டாரு.

“அதிஷாவுக்கு லைன் குடுங்க. வாழ்த்திக்கறேன்:” ன்னாரு. அதிஷாகிட்ட பேசிட்டு மறுபடி என்கிட்ட “என்னங்க.. அவரு கல்யாணம் முடிஞ்சுடுச்சான்னா காதுகுத்துக் கல்யாணம்-ங்கறாரு?” ன்னு பாவமா கேட்டாரு. ஒருத்தரை எவ்ளோ நேரம்தான் கலாய்க்கறதுன்னு நானும் உண்மையச் சொல்லீட்டேன்!

யோசிச்சுப் பார்த்தா, இது தப்போன்னு மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. முக்கியமா ஏமாந்த ரெண்டு, மூணு பேர் நம்ம ஃப்ரெண்ட்ஸ்தான். கெட்ட வார்த்தைல திட்டினாலோ, திரும்பி நில்லுடா’ன்னு சொல்லி முதுகுல நாலு போடு போட்டாலோ நானும், நர்சிம்மும் வாங்கிக்குவோம். அவங்களும் உரிமையோட அடிப்பாங்க...

ஆனா பைத்தியக்காரன் மாதிரி ஒரு மதிப்புமிக்க பதிவர், கும்மி, மொக்கையெல்லாம் தெரியாத ஒரு நல்ல மனுஷன் மனசு ‘என்னடா.. இப்படியெல்லாமா விளையாடறது’ன்னு இதுனால கஷ்டப்பட்டிருக்குமோ நினைக்கறப்ப ஒரு மாதிரி ஆய்டுச்சு. ரெண்டு நாளா இதுக்கு ஒரு மன்னிப்பு பதிவு போடணும்னு கெடந்து துடிக்குது.

இது ஏதோ ஜாலிக்காக சம்பந்தவங்கிட்ட அனுமதி வாங்கிப் பண்ணினதுதான்னாலும், நேரடியாகவும், மறைமுகவாகவும் இதுனால எங்களைத் தப்பா நெனைச்ச எல்லார்கிட்டயும் நானும், நர்சிம்மும் மன்னிப்பு கேட்டுக்கறோம். கொலை செஞ்சவனை விட, உடந்தையா இருக்கறவனுக்குதான் தண்டனை அதிகம்-ங்கறா மாதிரி.. நானே பதிவு போட்டு ஸாரி கேட்டுக்கறேன். ஏன்னா, எனக்கு நல்லா தெரியும்.... நர்சிம் கிட்ட ‘இதெல்லாம் வேணாம் பாஸ்’ன்னிருந்தா அவரு கேட்டுகிட்டிருப்பாரு. நல்ல மனுஷன். தப்பு என் மேலதான்.


பி.கு:-
பதிவு ரொம்ப சீரியஸா முடியற மாதிரி இருக்கறதால் ஒரு மேட்டரைச் சொல்லி, முடிச்சுக்கறேன். ‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!

52 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆண்டவா....

VIKNESHWARAN ADAKKALAM said...

என்ன கொடுமை இது பரிசல்....

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்த்துக்கள் அதிஷானு சொன்னதுக்கு உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சானு ஒரு நொல்லக் கேள்வி வேற....

VIKNESHWARAN ADAKKALAM said...

அதப்பார்த்து நானும் அதிஷாவ நக்கலடிச்சி வேற பதிவ போட்டு தொலைச்சிட்டேன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

அப்பவே அதிஷா கேட்டாரு "யோவ் உங்களுக்குலாம் நான் தான் கிடைச்சனானு".

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிஷா இப்பலாம் சரியா பேசறது கூட இல்லை....

VIKNESHWARAN ADAKKALAM said...

ஒழுங்க ஒரு பாட்டில் வாங்கி கொடுத்து அவரை சமாதான படுத்தும்படி மிக தாழ்மஒயோடு சபையோர் முன் கேட்டுக் கொள்கிறேன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்கள ஏசனும் போல இருக்கு....

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்லா வருது...

VIKNESHWARAN ADAKKALAM said...

வேண்டாம்விடுங்க....

VIKNESHWARAN ADAKKALAM said...

அழுவாத குறையா கும்முறேனு தெரியுதா இல்லையா....

VIKNESHWARAN ADAKKALAM said...

இன்று காலையில் புத்தகம் கிடைத்தது... மிக்க நன்றி....

VIKNESHWARAN ADAKKALAM said...

பரிசல் நல்லா இருங்க....

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் வரேன்....

VIKNESHWARAN ADAKKALAM said...

15

கார்க்கிபவா said...

நல்ல வேளை நான் இந்த ஆட்டத்துல எங்கேயும் சீன்ல வரல.. லைட்டா டவுட் இருந்தது.. நர்சிம் பதிவுல நீங்க சூட பின்னூட்டமிட்டும் அவரு பதில தராத போது வந்தது அந்த டவுட்..

சரி,என் மேட்டருக்கு இன்னும் பதில் வரல சகா

கே.என்.சிவராமன் said...

நண்பா,

எல்லாரையும் மாதிரி நானும் சாதாரணமானவன்தான். 'மதிப்பு' கொடுத்து நண்பர்களை விலக்கி வச்சிடாதீங்க :)

நான் ஏமாந்தது உண்மை. அதனால என்ன, நண்பர்கள்கிட்ட விளையாடாம வேற யார்கிட்ட விளையாடப் போறீங்க / போறோம்?

நோ ப்ராப்ளம் பரிசல்... கூல்..

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

பரிசல்,

என்னயக் கோமாளி ஆக்கீட்டீங்க.

நானும் சீரியஸா பதிவர் சந்திப்புன்னெல்லாம் போஸ்ட் போட்டேன்.

அதவிடக் கொடும. வடவள்ளியில(ஊரின் மேற்கோடி) இருக்க நான் இருகூரில் (ஊரின் கீழ்க்கோடி) ஒரு கிரஹப்பிரவேசத்திற்கு சென்றிருந்தேன். சென்ற இடத்தில் ஒரு துக்கச் செய்தி கேள்விப்பட்டு அங்கும் சென்று, திரும்ப வீட்டிற்கு வந்து மீண்டும் ஒருமுறை குளித்துவிட்டு, அடித்துப் பிடித்து வந்தேன்.

காலேல கூட நீங்க இத எங்கிட்டச் சொல்லியிருக்கலாம்.

வழக்கத்தைவிட அதிக வேகத்தில் கார் ஓட்டியதற்கு என்ணை நானே நொந்து கொண்டேன்.


நீங்க இப்படித்தான் இருப்பீர்கள் உங்க சுபாவம் அதுதான். அட்லீஸ்ட் வெயிலானாவது எச்சரித்திருக்கலாம்.

அவருக்கும் இந்தச் சதியில் பங்கு உண்டா?

☼ வெயிலான் said...

அண்ணாச்சி,

எனக்கும் இந்த ஆட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை.

நீங்க இது விசயமா என்னைக் கேட்டிருந்தா உங்களைக் காப்பாத்தியிருப்பேன்.

கி.கு - இன்னும் வெளையாட்டு புள்ளையாவே இருக்கு. பாவம்! வுட்டுடுங்க. நாம தான் சொல்லி திருத்தணும்.

நீங்க திருப்பூர் வர்றப்போ கச்சேரி வச்சுக்கலாம்.

narsim said...

நான்பாட்டுக்கு சிவனேன்னு தானய்யா போய்க்கிட்டுஇருந்தேன்!(வடிவேலு..)

பி கேர்புள்.. நான் என்னச்சொன்னேன்..!

சுந்தர்ஜிவயின்(குரு) அழைபின்போதுதான் மைல்ட்டா ஒரு பயம் வந்துச்சு.. ம்ம்!

(ஆனாலும் அதிஷாவுக்கு இப்பிடி ஒரு பதிவு இருக்குடி....என்ன.. இன்னும் ஒரு ரெண்டுவருஷம் ஆகுமா அதிஷா???)திரு பைத்தியக்காரன் ,மன்னித்துவிடுங்கள்.. உங்கள் அழைபேசி எண் இல்லாததால் தான் கேட்க முடியவில்லை..

நர்சிம்

லக்கிலுக் said...

பகிரங்க மன்னிப்பு - நீங்க ரஜினி ரசிகர் என்பதை அப்பப்போ ப்ரூப் பண்ணிடுறீங்க தலை...

இந்த மாதிரி மேட்டருக்கு நாங்கள்லாம் மன்னிப்பு கேட்குறதா இருந்தா தினமும் பகிரங்க மன்னிப்பு பதிவு தான் போடணும் :-)

சென்னைக்கு புத்தகக் கண்காட்சி நேரத்தில் வாருங்கள், அப்பொது நர்சிம்மின் பார்ட்டியை அட்டெண்ட் செய்யலாம்!!

கே.என்.சிவராமன் said...

அடாடா, பரிசல்க்கு அடுத்து நண்பர் நர்சிம்மா?

பதிவுலகை கொண்டாட்டமாக்கும் நீங்கள், எதற்காக இப்படி அழுகாச்சி காவியங்கள் பாடுகிறீர்கள்?

விடுங்கள் நண்பா... மீசையில் மண் ஒட்டியதும் அழகாகத்தான் இருக்கிறது :)

ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பரிசல்காரன் said...

@ விக்னேஸ்வரன்

கும்மிக்கு நன்றி!

@ கார்க்கி

//சரி,என் மேட்டருக்கு இன்னும் பதில் வரல சகா//

அது சும்மா கும்மிக்கு சகா! கண்டுக்காதீங்க. நல்லா ஒரு பின்னூட்டம் போட மேட்டர் இல்லீன்னா அப்ப்டித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாம பின்னூட்டுவோம்!

Anonymous said...

”கேமிரா பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கு, லோக்க்ல்ல எனக்கு ஒரு பேட்டரி வாங்கி வர முடியுமா? பங்சன்ல பாதில காலியாயிட்டா கஷ்டம்” னு ஒரு பில்டப்பு வேற.

அவரு சொல்ற பிராண்டுதான் வேனுமாம். அதுதான் ரெடி 2 யூஸ் பேட்டரியாம்.

நல்லா இருங்க.

பரிசல்காரன் said...

@ பைத்தியக்காரன்

நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது. நான் வருந்தியது உண்மைதான் எனினும் இதையெல்லாம் எதுக்குப் பதிவா போடணும்? எல்லாம் நம்மாளுகதான்ப்பா’ என்று பலபேர் (2 பேர்!) சொன்னார்கள்.

ஆனாலும், உங்கள் கவனத்தைப் பெற்று, பின்னூட்டம் போடவைத்துவிட்டதால் இந்தப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது!

//அதனால என்ன, நண்பர்கள்கிட்ட விளையாடாம வேற யார்கிட்ட விளையாடப் போறீங்க / போறோம்?//

நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும்!

rapp said...

நீங்க ப்ளான் பண்ணபடி அது சூடான இடுகைல வந்துதா இல்லைங்களா? ஆனா நான் எப்படி இதை பார்க்காம மிஸ் பண்ணேன். இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் நான் தேடிப்போய் வாழ்த்துவேனே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................

இந்த பதிவை பார்த்தப்புறம்தான் அங்கப் போய் பார்த்தேன்.

அடடா, நானும் வாழ்த்துசொல்லி இருந்தா, என்னையும் புகழ்ந்து, நல்லவர் வல்லவர் புத்திசாலி(!) ஹி ஹி, இப்படில்லாம் சொல்லி ஒரு மன்னிப்பும் கேட்டிருப்பீங்க இல்ல:):):) (ஜாலியா போட்ட பின்னூட்டம், யாரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்)

பரிசல்காரன் said...

//வடகரை வேலன் said...

பரிசல்,

என்னயக் கோமாளி ஆக்கீட்டீங்க.//

அண்ணாச்சி, பல உண்மைகள் வெளிய வருதே...!

உங்களுக்கு தெரியாதுன்னு நான் நெனைக்கலங்க. ஊர்க்காரரா இருந்துட்டு இப்படியா ஏமார்றது?

// வடகரை வேலன் said...

”கேமிரா பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கு, லோக்க்ல்ல எனக்கு ஒரு பேட்டரி வாங்கி வர முடியுமா? பங்சன்ல பாதில காலியாயிட்டா கஷ்டம்” னு ஒரு பில்டப்பு வேற.

அவரு சொல்ற பிராண்டுதான் வேனுமாம். அதுதான் ரெடி 2 யூஸ் பேட்டரியாம்.

நல்லா இருங்க//

அதெல்லாமே நெஜம்ங்க. காதுகுத்தைத் தான் சொன்னேன். சில ரீ சார்ஜபிள் பேட்டரி, வாங்கி 8 மணிநேரம் சார்ஜ் பண்ணிப் போடணும். அதில்லாம யூனிரோஸ் மாதிரி சில ப்ராண்ட் ரெடி டு யூஸ் ன்னு விக்கிறாங்க. அதத்தான் கேட்டேன்!

rapp said...

//”கேமிரா பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கு, லோக்க்ல்ல எனக்கு ஒரு பேட்டரி வாங்கி வர முடியுமா? பங்சன்ல பாதில காலியாயிட்டா கஷ்டம்” னு ஒரு பில்டப்பு வேற.

அவரு சொல்ற பிராண்டுதான் வேனுமாம். அதுதான் ரெடி 2 யூஸ் பேட்டரியாம்.

நல்லா இருங்க.

//

ஹா ஹா ஹா சூப்பர், கலக்கல்ங்க :):):)

குசும்பன் said...

ரைட்டு உசார் மாக்கான் நிகழ்ச்சிக்கு ஆள் ரெடி:)

விக்கி போன் செஞ்சு பல்பு வாங்கியவர் நீங்கள் தானே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு:))

வெண்பூ said...

எதுக்கு மன்னிப்பெல்லாம் பரிசல்???? (ஏன்டா திட்டுறதையும் திட்டிட்டு நல்லவன் மாறி எதுக்கு மன்னிப்புன்னா கேக்குற)

// பதிவு ரொம்ப சீரியஸா முடியற மாதிரி இருக்கறதால் ஒரு மேட்டரைச் சொல்லி, முடிச்சுக்கறேன். ‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!//

இது மேட்டரு.. ரூம் போட்டுன்னா என்னா அர்த்தம்????

வெண்பூ said...

அய்யா சாமிகளா!!! நான் அந்த ரெண்டு நாளும் ஊரில் இருந்ததால் இணையம் பக்கம் வரவே இல்லை. திரும்பி வந்தது திங்கள் மதியம்தான். அதன் பின் ஆபிஸில் ஆணி அதிகம் இருந்ததால் என்னால் உங்கள் பதிவுகளை படித்தாலும் பின்னூட்டம் இட முடியவில்லை. கண்டிப்பாக கோபமெல்லாம் இல்லை... இல்லை... இல்லை....

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நானும் முதலில் ஜாலியாகத்தான் பின்னூட்டம் போட்டேன். உங்களின் பின்னூட்டம் பார்த்தபின், அடடா இது சீரியஸ் மேட்டர் போல, எதுக்கு பிரச்சனை என்று நான் போட்ட பின்னூட்டங்களை அழித்துவிட்டேன் :(
பிறகுதான் நர்சிம்மிடம் பேசியது...

ஏற்கனவே ஏப்ரல் 1ம் தேதி லக்கியின் பாலபாரதி திருமணம் பற்றிய பதிவில் இப்படி ஏமாந்திருக்கிறேன். சரி, இறுதியான உண்மையென்று ஒன்றும் கிடையாது என என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன் (வேறு என்ன செய்ய :)) ).

என்சாய் மேடி!! (சென்ஷிக்கு நன்றி).

விஜய் ஆனந்த் said...

:-)))...

என்ன இப்படி பண்ணிட்டீங்க...

பாவம் எத்தன அப்பாவி, குழந்த மனசுக்கார நல்லவங்க ஏமாந்து போயிட்டாங்க...

:-(((...

Saminathan said...

ஒஹோ...இப்படி ஒரு ட்ராக் ஓடிட்டு இருக்கா இங்க...

செவிடனும் குருடனும் பேசிக்கற மாதிரி இருக்கு பின்னூட்டங்களைப் பார்த்தா...

கதம்..கதம்..போய் வேலையப் பாருங்கய்யா...

பரிசல்காரன் said...

// வெயிலான் said...

அண்ணாச்சி,

எனக்கும் இந்த ஆட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை.//

அடப்பாவி!

@ நர்சிம்

//(ஆனாலும் அதிஷாவுக்கு இப்பிடி ஒரு பதிவு இருக்குடி....என்ன.. இன்னும் ஒரு ரெண்டுவருஷம் ஆகுமா அதிஷா???)//

ம்ஹூம்! வரும் மார்ச் 2009!!!!!

ஜோசப் பால்ராஜ் said...

அந்த வி**** எனக்கும் போன் செஞ்சு சொன்னாரு, நான் சரி சரின்னு சொல்லிட்டு விட்டுட்டேன். அடுத்த நாளு அண்ணா இப்டி ஆயிடுச்சுன்னு மறுபடியும் சொன்னாரு. சரி , இதெல்லாம் சகஜம் தம்பி, யாரும் பார்க்கலடா சூனா பானன்னுட்டி போயிகிட்டே இருன்னு சொல்லி தம்பிக்கு ஆறுதல் சொன்னா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டு காலிபன்னிட்டீங்க. மன்னிப்பு எங்களுக்கு புடிக்காத வார்த்தை. தம்பி இந்த பதிவ பார்த்துட்டுத்தான் அழுவப் போறான்.

பரிசல்காரன் said...

//லக்கிலுக் said...

பகிரங்க மன்னிப்பு - நீங்க ரஜினி ரசிகர் என்பதை அப்பப்போ ப்ரூப் பண்ணிடுறீங்க தலை..//

:-))))

@ பைத்தியக்காரன்

விடுங்கள் நண்பா... மீசையில் மண் ஒட்டியதும் அழகாகத்தான் இருக்கிறது :)

ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்...//

நன்றி தலைவா! நீங்க ரொம்ப வித்தியாசமானவரா இருக்கீங்க..!

@ ராப்

//ஜாலியா போட்ட பின்னூட்டம், யாரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்//

இது என்ன மன்னிப்பு கேட்கும் வாரமா?

@ குசும்பன்

//விக்கி போன் செஞ்சு பல்பு வாங்கியவர் நீங்கள் தானே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு://

அவரல்லங்க.. வெற்றிகரமான மகிழ்ச்சியானவர்ன்னா விஜய் ஆனந்த்-ங்க! என்ன நீங்க போங்க!!!!!!

சாரி விஜய் ஆனந்த்! கோவம் வந்துடுச்சு... அதான்!

பரிசல்காரன் said...

@ வெண்பூ

//இது மேட்டரு.. ரூம் போட்டுன்னா என்னா அர்த்தம்//

அது உங்களுக்கு சம்பந்தமில்லாதது! விடுங்க!

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

//சரி, இறுதியான உண்மையென்று ஒன்றும் கிடையாது என என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன் //

இது சூப்பர்!

//விஜய் ஆனந்த் said...

:-)))...

என்ன இப்படி பண்ணிட்டீங்க...

பாவம் எத்தன அப்பாவி, குழந்த மனசுக்கார நல்லவங்க ஏமாந்து போயிட்டாங்க...

:-(((...//

தற்புகழ்ச்சி வேண்டாமே! :-))))

//ஈர வெங்காயம் said...

ஒஹோ...இப்படி ஒரு ட்ராக் ஓடிட்டு இருக்கா இங்க..//

ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு?

பரிசல்காரன் said...

//ஜோசப் பால்ராஜ் said...

அந்த வி**** எனக்கும் போன் செஞ்சு சொன்னாரு, நான் சரி சரின்னு சொல்லிட்டு விட்டுட்டேன். அடுத்த நாளு அண்ணா இப்டி ஆயிடுச்சுன்னு மறுபடியும் சொன்னாரு. சரி , இதெல்லாம் சகஜம் தம்பி, யாரும் பார்க்கலடா சூனா பானன்னுட்டி போயிகிட்டே இருன்னு சொல்லி தம்பிக்கு ஆறுதல் சொன்னா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டு காலிபன்னிட்டீங்க. மன்னிப்பு எங்களுக்கு புடிக்காத வார்த்தை. தம்பி இந்த பதிவ பார்த்துட்டுத்தான் அழுவப் போறான்.//

தல, அதான் போட்டு ஓடச்சிட்டேனே.. அப்புறம் என்ன தம்பி, நொம்பி..

விஜய் ஆனந்த் பாவம்ங்க!

KARTHIK said...

// மாப்பிள்ளை முன்னாடி கர்ல போறாங்க. நாங்க பின்னாடி போய்ட்டிருக்கோம்”ன்னேன்.//

எங்க ஊருக்கு வாங்க வாங்கன்னு கூபிடுறது வந்த பின்னாடி இப்படிஒரு பிட்டப்போடுறது.
நானும் இது உண்மைனு நெனச்சு வாலபையனை தொடர்பு கொண்டேன் அவரு தம்பி நிச்சயத்துல பிசியா இருந்ததால அவரு கெடைக்கலை.இல்லேன்னா வந்தாலும் வந்திருப்போம் :-))

Ramesh said...

வாழ்த்துக்கள். பகிரங்கம். சூப்பர்.

விக்நேஷ்வரனுக்கு நெறைய டைம் இருக்கும் போல?

ஆமா eramurukan.in படிக்கறீங்களா?

When to Chennai? mail podunga.

Thamira said...

ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்// இது பிரமாதம்ங்க..

இன்னொரு முக்கிய விஷயம்ங்க.. பின்னூட்ட சுனாமி என் பதிவுக்கு வந்துட்டு போயிருக்குது. புடிங்க, புடிங்க.. என்னாச்சுன்னு பாருங்க, அது எவ்வளவு டேமேஜ் ஆயிருக்குதுனு பாக்கணும்.. சீக்கிரம் புடிங்க.!

Sanjai Gandhi said...

//இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!//

உமா அக்காவுக்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. :))

புதுகை.அப்துல்லா said...

நல்ல வேளை நண்பா நா இ.வா ஆகல :))

Kumky said...

ஹூம்..காது... குத்து(யாராருக்கோ..)கல்யாணம்.குத்திக் கிழிஞ்சது போங்கோ..(நர்சிம்மா இப்படி..சரி உங்களோட சேந்தாச்சோன்னோ.)

Kumky said...

இந்த வடகரை.. வடகரை அப்படின்னு உங்க ஊர்ல யாரோ ஒரு அப்புராணி இங்கிட்டும் அங்கிட்டும் போய் வந்துகிட்டு இருக்காமே? அட்றஸ்ஸும்.,செல் நம்பரும் கொடுத்தா நம்பலுக்கு ரெம்ப யூஸ்புல்லா இருக்குமே....கவனிக்கிறியலா?

முரளிகண்ணன் said...

பதிவுல இதெல்லாம் சகஜமப்பா

பரிசல்காரன் said...

//SanJai said...

//இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!//

உமா அக்காவுக்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. :))
//

அவங்க கூட இருக்கறப்பதான் நர்சிம் அழைப்பு வந்தது. இவரு பெரிய ஆளுப்பா, பெரிய கம்பெனி, பெரிய பதவி, ஆபீசர்.. ஆபீசர்"ன்னு சொல்லி ஒக்கே வாங்கிட்டோம்ல? சும்மாவா இவ்ளோ பகிரங்கமா ஒத்துக்கறோம்?

:-))))))))))))

கல்யாணமானப்புறம் நிறைய டிப்ஸ் தர்றேன் நண்பா!

Thamira said...

.:புல் மீல்ஸ் ரெடி.! கடைக்கு வரவும். (நீங்க சொன்னப்புறம் கூட போடலைன்னா எப்பிடி?)

Kumky said...

ஏன் தல., அம்மாம் பெரிய ஆப்பிசர்கிட்ட ரூம் போட்டு பேச போவசொல்லோ என்னையும் இட்னு போவீங்கதான?

வால்பையன் said...

//‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’//

கூடவே நானும் உண்டு


இதில் தப்பியது நான் மட்டும் தானா,
உடம்பு சரியில்லாம போறது சில சமயம் நல்லதுக்கு தான் போலிருக்கு,
நான் பிளாக் பக்கமே ஒரு வாரம் வரலையே

சுரேகா.. said...

என்ன நடக்குது இங்க!?


ஆனாலும் உங்கள் நல்ல மனதுக்கு
வாழ்த்துக்கள்!
பிறகு...மன்னிப்பு கேட்பது
பெரிய விஷயமில்லையா?