Saturday, September 20, 2008

எனக்குப் பிடித்த சில விளம்பரங்கள்!

எனக்கு விளம்பரங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்!

ஒரு பெரிய சைஸ் புத்தகத்தில், ஒரு பக்கம் இடது உள்ளங்கை விரித்த நிலையிலும், வலதுபக்கம் வலது உள்ளங்கை விரித்த நிலையிலும் ப்ரிண்ட் செய்யப்பட்டு, ‘கொசுவை ஒழிக்க இதைப் பின்பற்றுங்கள்’ என்று எழுதி, இந்தப் பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, கொசு வரும்போது அடியுங்கள் என்று இருக்கும். கீழே துக்கிணியூண்டு சைஸில் ‘அல்லது ஹிட் உபயோகியுங்கள்’ என்று இருக்கும்!

இன்னொரு விளம்பரம், இது எதற்கான விளம்பரம் என்று நினைவில்லை. ஒருத்தன் கடலுக்கு நடுவே யாருமில்லாத குட்டித் தீவு ஒன்றில் நின்று கொண்டிருப்பான். (தீவு என்றால் குட்டி மணல் மேடு போலத்தான் இருக்கும்) இரண்டே இரண்டு தென்னை மரங்கள் (ஒரு பத்தடி இடைவெளியில்) இருக்கும். இவன் கொஞ்சநேரம் ஏதாவது கப்பல் வராதா என்று மண்டை காய்ந்துகொண்டு நின்றிருப்பான். சிறிது நேரத்தில் தூரத்தில் ஒரு மரப்பெட்டி ஒன்று வரும். இவனிருக்கும் இடத்துக்கு கொஞ்சம் தள்ளி, அந்தப் பெட்டி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும். இவனுக்கு நீச்சல் வராததால், கடலுக்குள் சென்று எடுக்கவும் முடியாது. திடீரென்று யோசனை வந்தவனாய் அருகே இருக்கும் ரம்பம் போன்ற ஒரு இரும்புசாதனத்தால் ஒரு மரத்தை அறுக்கத் தொடங்குவான். மரம் மடங்கி கடலில், அந்தப் பெட்டி இருக்கும் இடத்தருகே விழும். இவன் தடுமாறித் தடுமாறி அந்த மரத்தின் மீது நடந்து போய் அந்தப் பெட்டியைக் கைப்பற்றி வருவான்.

கொண்டுவந்து திறந்து பார்த்தால், அதில் இரு மரங்களில் கட்டி ஆட உபயோகிக்கும் ஊஞ்சல் இருக்கும்! மண்டை காயும் இவனுக்கு!


இந்தமாதிரி விளம்பரங்கள் குறித்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை, ஜெயா டி.வி-யில் முன்பு ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

AXNல் இரவு பதினோரு மணிக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்த WORLD’S SEXIEST ADVERTISEMENTS என்ற நிகழ்ச்சியும் எனக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சிதான்! இப்போதும் ஒளிபரப்புகிறார்களா என்று தெரியவில்லை!

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரங்களை மட்டும் பார்க்கும், ஆவல் எனக்கு அதிகம். ஃபெவிகாலின் எல்லா விளம்பரங்களும் எனக்கு மிகப் பிடிக்கும். கார்ப்பெண்டர்கள் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டே டி.வி.பார்த்துக் கொண்டிருக்க, பாலத்திலிருந்து விழும் காதலியின் ஒரு கையைப் பிடித்தபடி காதலன் தடுமாறிக் கொண்டிருப்பான். ‘என் கையை விட்டுடாதே’ என்று அவள் கெஞ்சிக் கொண்டிருப்பது மட்டும் கேட்கும். கொஞ்ச நேரத்தில், அவள் கை தளர்ந்து, கீழே விழுந்து விடுவாள். அப்போதும் ‘என் கையை விட்டுடாதே’ என்ற குரல் கேட்கும். அந்த கார்ப்பெண்டர்கள் என்னடா என்று பார்ப்பார்கள். அங்கிருக்கும் நாலைந்து டி.விக்களில் ஒரு டி.வி.யில் மட்டும் அவள் கையை காதலன் விடாமல் பிடித்திருக்க, அந்த டயலாக் கேட்டுக் கொண்டெ இருக்கும். மெதுவாக கேமராவை மேலே கொண்டு சென்றால், அந்த டி.வி-யின் மேல் ஃபெவிகால் டப்பா!
.
அதே போல எம்.சீலுக்கு ஒளிபரப்பான உயில் விளம்பரம், (ஒரு லட்சமோ, கோடியோ எழுதியிருப்பதில் ‘1’ என்ற எண் மட்டும் நீர் பட்டு அழியும்), ஹால்மார்க் க்ரீட்டிங்ஸ் கார்டுக்கு வந்த ஒரு விளம்பரம், (மழையில் நனைந்தபடி ஒரு க்ரீட்டிங் கார்டை மார்போடு அணைத்தபடி, கஷ்டப்பட்டு நனையாமல் கொண்டு சென்று, கோவித்துக் கொண்டு செல்லும் காதலியை அடையும் காதலன், அந்தக் கார்டை அவளிடம் கொடுப்பான். பிரித்தால் ‘ஸாரி’ என்றிருக்கும். அவ்வளவு நேரம் மழை நீரில் நனையாது காத்த அந்த கார்ட், நனையும்.. அவள் கண்ணீரால்!), ஃபெவிக்விக் மீன் பிடி விளம்பரம் (ரொம்ப நேரம் ஒருத்தன் மீன் பிடிக்காமல் கஷ்டப்பட, திடீரென வரும் ஒரு கிராமவாசி குச்சி ஒன்றில் 1,2,3,4 என ஃபெவிக்விக்-கைத் தடவி, நீருக்குள் விட்டு வெளியில் எடுக்க, நாலு மீன் ஒட்டி இருக்கும்), பஜாஜ் க்ளாஸிக் ஸ்கூட்டருக்கு வந்த ஒரு விளம்பரம் (ஸ்கூட்டரில் செஸ் ஆடிக்கொண்டே செல்வார்கள் – அவ்வளவு அலுங்காமல், குலுங்காமல் போகுமாம்!), DHL கொரியருக்கு வந்த ஒரு விளம்பரம், (கொலம்பஸ் கடலில் நீந்தி கரை சேர்ந்து ஒரு நாட்டைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில், கூக்குரலிடும்போது, கரையிலிருந்து வரும் DHL பணியாளர் ‘கொலம்பஸ்.. எ லெட்டர் ஃபார் யூ’ என்று அவரிடமே கொரியர் டெலிவரி பண்ணுவது), பஜாஜ் பைக்குகளின் விளம்பரம் என்று வித்தியாச விளம்பரங்கள் என் மனதை கொள்ளை கொள்ளும்!

பேசியது போதும்... இனி கொஞ்ச நேரம் கீழே இருக்கும் விளம்பரங்களை ரசியோ ரசி என்று ரசியுங்கள்!













































































































எப்படி? அசத்தலா இருக்குல்ல?

இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகிட்ட வாலுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகள்!


வித்தியாசமான விளம்பரங்களின் (மேலே இருப்பது போல) தொகுப்பு புத்தகம் பற்றிய தகவல்களை லக்கிலுக் போன்ற அத்துறையில் இருப்பவர்கள் தந்தால் மகிழ்வேன்! (கஷ்டப்பட்டு, காசு சேர்த்து வாங்கத்தான்..!)



பி.கு. 1: என் மகளை நல்லதொரு அட்வர்டைஸிங் டைரக்டர் ஆக்கும் ஆவல் உண்டு. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

பி.கு 2: பேனா விளம்பரத்துக்காக ஒரு கான்செப்ட் வைத்திருக்கிறேன். யாருக்காவது வேணுமா? 

52 comments:

Kumky said...

s boss ...m t first ஆ..

Kumky said...

கமெண்ட்ட யோசிச்சி சாய்ந்தரமா போட்டுக்கலாம்...

Kumky said...
This comment has been removed by the author.
VIKNESHWARAN ADAKKALAM said...

நேற்றுதான் மின் மடலில் பார்த்தேன்...

வெண்பூ said...

நல்ல தொகுப்பு பரிசல். வால் அனுப்பிய படங்கள் எல்லாமே அருமை என்றாலும் என்னை மிக கவர்ந்தது "drill through anything" மற்றும் "quick dry" விளம்பரங்கள். :)

பாபு said...

அந்த குட்டி பையன் உண்டியல் எடுத்துக்கொண்டு வருவானே, அந்த விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும், locker இல் வைத்த பின் அந்த கதவை ஒரு முறை இழுத்து பார்ப்பானே ,சூப்பர்

முரளிகண்ணன் said...

பரிசாலாரே கலக்கல்

நாதஸ் said...

Very Nice Ads !
Thanks for sharing :)

Anonymous said...

ஃபெவிக்கால் விளம்பரத்துக்கு, பஸ் டாப்புல போற கும்பல் ஒன்னு காட்டுவாங்களே அருமையா இருக்கு.

அரிய சுவை உதயம் புதிய சன்ரைஸ் எனக்குப் பிடித்த விளம்பரம்.

quikfix ஆரம்பகால விளம்பரத்துல ‘joins everything except broken heart' அப்படீன்னு வரும். அதும் நல்லா இருக்கும்.

விளம்பரத்துறையில ஃப்ரீ லேன்சரா ஏதாவது பண்ண முயற்சி செய்யுங்க.

சரண் said...

அருமையான விளம்பரங்கள்...

உக்காந்து யோசிப்பாய்ங்களோ?

லக்கிலுக் said...

//ஃபெவிகாலின் எல்லா விளம்பரங்களும் எனக்கு மிகப் பிடிக்கும். //

O & M நிறுவனத்தின் சீப் கிரியேட்டிவ் டைரக்டர் ப்யூஸ் பாண்டே உருவாக்கியவை அவை. பெரும் புகழ்பெற்ற ஹட்ச் விளம்பரங்களும் இதே நிறுவனத்தின் கைவணனம் தான்.


//வித்தியாசமான விளம்பரங்களின் (மேலே இருப்பது போல) தொகுப்பு புத்தகம் பற்றிய தகவல்களை லக்கிலுக் போன்ற அத்துறையில் இருப்பவர்கள் தந்தால் மகிழ்வேன்! (கஷ்டப்பட்டு, காசு சேர்த்து வாங்கத்தான்..!)//

தமிழில் விளம்பரத்துறை குறித்து அறிய போதுமான புத்தகங்கள் இல்லை. இத்துறை எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள கூட ஆங்கிலத்தை தான் நாடவேண்டும். ஆங்கில புத்தகங்களில் நம்ம ஊரு நேட்டிவிட்டி இருக்காது.

எனக்கு தெரிந்து ரமேஷ்பிரபா இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜூ.வியில் தொடராக வந்தவை அவை இரண்டும்.

1) எப்படி ஜெயித்தார்கள்?
2) விளம்பர உலகம்

இந்த இரண்டு புத்தகங்களையுமே அவர் கல்கத்தா ஐஐஎம்மில் மாணவராக இருந்தபோது எழுதினார் என்று நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளும்படி சூப்பராக எல்லாம் இருக்காது :-( இப்போது எழுதினால் கலக்கலாக எழுதுவார். குங்குமம் லாஞ்சிங் கேம்பைனுக்கு அவர் எழுதிய ‘புதுசு கண்ணா புதுசு' தமிழின் மிக முக்கியமான விளம்பரத் தொடர்.

விளம்பரத்துறை பற்றி அறிய David Ogily எழுதிய Ogilvy on Advertising வாசிப்பது அவசியம். Copywriters manual என்ற இன்னொரு புத்தகம் அற்புதமானது. ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இதுபோல உண்டு. நான் குறைந்தபட்சம் 30 புத்தகங்களை(எல்லாமே பெரிய சைஸ் புத்தகங்கள்) டிக்‌ஷனரி துணையோடு வாசித்திருக்கிறேன்.

லக்கிலுக் said...
This comment has been removed by the author.
லக்கிலுக் said...

ராமானுஜம் ஸ்ரீதர் எழுதியிருக்கும் One land One billion minds புத்தகம் Branding குறித்தான அற்புதமான புத்தகம். எளிமையான ஆங்கிலத்தில் நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கும். இதை வாசிக்க நமக்கு டிக்‌ஷனரி தேவைப்படாது.

ஆனால் விளம்பரம் குறித்த போதுமான அறிவு பற்றாதவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தால் மண்டை காயும் :-)

நீங்கள் சென்னை வரும்போது Ogilvy on advertising மற்றும் One land One billion minds இரண்டும் தருகிறேன். வாசித்துவிட்டு மறக்காமல் திருப்பி தாருங்கள்.

Advertising குறித்த புத்தகங்களுக்கு நீங்கள் செலவு செய்ய ஆரம்பித்தால் உங்களுக்கு ஏதாவது சொத்து, பத்து இருந்தால் அதை விற்றுத்தான் செலவழிக்க வேண்டும்.

நான் நண்பர்களிடம் இரவல் வாங்கி தான் பல புத்தகங்கள் வாசித்தேன்.

கார்க்கிபவா said...

பாருங்க வால்பையனுக்கு பதிவா போடனும்னு தோணல.. ஆன்மிகவாதிகளுக்கு எல்லா இடத்திலயும் கடவுள் தெரிவாராம்.. உங்களுக்கு எல்லாமே பதிவா தெரியுது.. அதனால உங்கள பதிவுவாதினு சொல்லலாமா?(அட, பகுத்தறிவுவாதியோட சுருக்கமா இருக்கு பதிவுவாதி.உங்களுக்கு ஓக்கேவா சகா)

ஆயில்யன் said...

//இந்தப் படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகிட்ட வாலுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகள்!/

வால் பையனுக்கு பதில் மெயில்ல சொல்லணும்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்!

இங்க சொல்லிக்கிறேன் நெண்டு பேருக்குமே :))))

கணேஷ் said...

//
AXNல் இரவு பதினோரு மணிக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்த WORLD’S SEXIEST ADVERTISEMENTS என்ற நிகழ்ச்சியும் எனக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சிதான்! இப்போதும் ஒளிபரப்புகிறார்களா என்று தெரியவில்லை
//


அத நிப்பாட்டிட்டாய்ங்க தல.... நிப்பாட்டிட்டாய்ங்க

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

நல்ல படங்கள், மிக நல்ல ரசனை உங்களுக்கு

Subash said...

படங்களை விட உங்களின் எழுத்தில் விளம்பரங்களை வாசிக்க நல்லா இருந்தது.
விளம்பரங்கள் மேக்கிங் பற்றி இணையத்திலேயே படிக்கலாமே.

narsim said...

விளம்பரத்திற்கே விளம்பரம் அருமை!..


சுவாரஸ்யமான விளம்பரங்கள்!


கலக்கல் பரிசலாரே!


நர்சிம்

Blogger said...

//AXNல் இரவு பதினோரு மணிக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்த WORLD’S SEXIEST ADVERTISEMENTS என்ற நிகழ்ச்சியும் எனக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சிதான்! இப்போதும் ஒளிபரப்புகிறார்களா என்று தெரியவில்லை!

AXN இரண்டு மாதங்கள் இந்த நிகழ்ச்சிக்காக தடை செய்யப்பட்டது.
இனி வர வாய்ப்பில்லை..

Anonymous said...

லக்கி,

அலிக் பதம்ஸீ இந்திய விளம்பரத்துறையில் ஒரு மறக்க முடியாத ஆளுமை.

அவரது double life புத்தகம் படித்திருக்கிறீர்களா? அவர் கிரியேட் செய்த பிராண்டுகள்( லலிதாஜி, சன்லைட், சர்ஃப், லிரில், காமசூத்ரா) பற்றி விளக்கமாக எழுதியிருப்பார்.

அவரை ஒரு எக்ஸெண்ட்ரிக் என்பார்கள். எனக்கு உடன்பாடு இல்லை கலைஞன் என்பவன் கட்டுபாட்டுக்குள் அடங்காதவனே. அவரை ஒரு ரிபெல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Ramesh said...

இரண்டு நாள் முன்பு ஒரு பார்வட் மெயில் வந்தது. உங்களுக்கும் வந்தது போலே?

லக்கிலுக் said...

//அலிக் பதம்ஸீ இந்திய விளம்பரத்துறையில் ஒரு மறக்க முடியாத ஆளுமை.//

டபுள் லைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அலிக் ஒரு விளம்பர ஜாம்பவான் என்றாலும் நாடகம், விளம்பரம் என்று இரட்டை மாட்டு சவாரி ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் விளம்பரத்தில் மட்டுமே இருந்திருந்தால் உலகளவில் புகழ்பெற்றிருப்பார். Celebrity Advertisingல் ஆர்வம் கொண்டவர்.

Anonymous said...

//அலிக் ஒரு விளம்பர ஜாம்பவான் என்றாலும் நாடகம், விளம்பரம் என்று இரட்டை மாட்டு சவாரி ஓட்டிக்கொண்டிருந்தார். அவர் விளம்பரத்தில் மட்டுமே இருந்திருந்தால் உலகளவில் புகழ்பெற்றிருப்பார். Celebrity Advertisingல் ஆர்வம் கொண்டவர்.//

ஆமங்க லக்கி, அவர் ஒரு தியேட்டர் ஆசாமி.

மேலும் அவரது குணத்தால் அவரது மனவாழ்க்கையும் சரியாக அமையவில்லை. கடைசி வரை ஒரு தேடல் நிறைந்ததாகவே இருந்தது அவர் வாழ்க்கை.

Raman Kutty said...

பதிவு சூப்பர், எனக்கும் விளம்பரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதே போல , ஐடியா அய்யாசாமிகள் பற்றி ஒரு தொடர்பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன், ஒரு உதாரணம்.. வடக்கே கோடைக்காலங்களில் 'லஸ்ஸி' மிகவும் பிரல்பலம், தேவை அதிகமாக இருக்கும் ஆதலால் 'மிக்ஸி' போன்றவற்றை பயன்படுத்தி பூர்த்தி செய்ய இயலாது, எனவே, அவர்கள், 'வாஷிங் மெஷினை' உபயோகித்து லஸ்ஸி தயாரிக்கிறார்கள்.. இதுபோல, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை சொல்லலாமே..

அன்புடன் ‍
இராமன்

Thamira said...

நிஜம், நம்புவீங்களா?.. என்னவொரு கோ‍இன்ஸிடென்ட். இதே கன்டென்ட்டில் எனது அடுத்த பதிவை 'ரசனையான‌ விளம்பரங்கள்' என்ற தலைப்பில் நாளை போட இருந்தேன். அதற்காக 10 நாட்களாக விளம்பரங்களை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஜஸ்ட் மிஸ்ஸு.! பரிசல் முந்திக்கொண்டார், மிகச்சிறப்பாக.. வாழ்த்துகள்.!

Thamira said...

ஹார்லிக்ஸின் பாதி உணவை உண்ணும் குழந்தைகள், HDFCஸியின் 'அப்பாக்கிட்ட ஒரு நல்ல பிளான் இருக்கு நீ அஸ்ட்ரோனாட் ஆக' போன்ற விளம்பரங்கள் என் தேர்வில் இருந்தன. நீங்கள் தந்திருந்த விளம்பரங்கள் அனைத்துமே கிரியேட்டிவிட்டியின் அற்புதங்கள். நீங்களும் பண்ணுவீர்கள் போல தெரிகிறது, வாழ்த்துகள்.! நமக்கு ரசிக்கத்தான் தெரியும்.

Thamira said...

என்னிடம் மெயிலில் வந்த adi மற்றும் சில கார் நிறுவனங்களின் ஒரு ரசனையான தொடர் விளம்பரங்கள் இருந்தது, இருந்தால் அனுப்பிவைக்கிறேன்.

பரிசல்காரன் said...

நன்றி கும்க்கி

நன்றீ டிலீட்டின ஆசாமி!

நன்றி விக்கி

நன்றி வெண்பூ

நன்றி பாபு

நன்றி முரளி கண்ணன்

நன்றி நாதாஸ்

பரிசல்காரன் said...

//வடகரை வேலன் said...

ஃபெவிக்கால் விளம்பரத்துக்கு, பஸ் டாப்புல போற கும்பல் ஒன்னு காட்டுவாங்களே அருமையா இருக்கு.//

அடங்க மறுத்துத் திரியும் குழந்தையை ஃபெவிக்கால் டப்பாவில் உட்கார வைக்கும் அம்மா...?

//விளம்பரத்துறையில ஃப்ரீ லேன்சரா ஏதாவது பண்ண முயற்சி செய்யுங்க.//

முயல்கிறேன்..

@ சூர்யா

சில சமயம் ஓடிகிட்டே கூட யோசிப்பாய்ங்க மக்கா..!

பரிசல்காரன் said...

@ லக்கிலுக்

தகவலுக்கு நன்றி!!!

//நீங்கள் சென்னை வரும்போது Ogilvy on advertising மற்றும் One land One billion minds இரண்டும் தருகிறேன். வாசித்துவிட்டு மறக்காமல் திருப்பி தாருங்கள்.//

இதுக்காகவே வருவோம்ல!

//Advertising குறித்த புத்தகங்களுக்கு நீங்கள் செலவு செய்ய ஆரம்பித்தால் உங்களுக்கு ஏதாவது சொத்து, பத்து இருந்தால் அதை விற்றுத்தான் செலவழிக்க வேண்டும்.//

கேள்விப்பட்டிருக்கிறேன்!

//நான் நண்பர்களிடம் இரவல் வாங்கி தான் பல புத்தகங்கள் வாசித்தேன்.//

:-))

பரிசல்காரன் said...

@ கார்க்கி

:-)) எனக்கொண்ணும் பிரச்னையில்லை!

@ ஆயில்யன்

உங்களுக்கும் நன்றி!!

@ கணேஷ்

//அத நிப்பாட்டிட்டாய்ங்க தல.... நிப்பாட்டிட்டாய்ங்க/

:-(

பரிசல்காரன் said...

@ கேபிள் சங்கர்

நன்றி!

நேத்து உங்க ரா.தே.சீ. பட விமர்சனத்துக்குப் பின்னூட்டம் போடணும்னு நெனைச்சென். போடல. நிங்க எனக்கு வந்து பின்னூட்டினதுக்கு மகிழ்ச்சி நண்பரே!

பரிசல்காரன் said...

@ சுபாஷ்

ஒக்கே!

@ நர்சிம்

நன்றி!

நன்றி The Rebel


நன்றி ராம்.

நன்றி raman- Pages!!!

@ தாமிரா

அதுனாலென்ன போடுங்க நண்பரே!

சிம்பா said...

நான் லேட் போல , உங்க பதிவ படிக்க. ஆனாலும் உங்க ரசனை அனியாயத்துக்கு நல்லாஇருக்கு.

ஆனாலும் ஒரு சின்ன வருத்தம். என்னோட choice உங்க பதிவுல வருமான்னு பார்த்தேன். ஏமாத்திடீங்க.

MENTOS (ஆதி மனிதன்) & EMAMI FAST RELIEF (மனித எந்திரம்) விளம்பரங்கள் மிஸ்ஸிங்.

பரிசல்காரன் said...

//
ஆனாலும் ஒரு சின்ன வருத்தம். என்னோட choice உங்க பதிவுல வருமான்னு பார்த்தேன். ஏமாத்திடீங்க.

MENTOS (ஆதி மனிதன்) & EMAMI FAST RELIEF (மனித எந்திரம்) விளம்பரங்கள் மிஸ்ஸிங்.//

பிடிச்ச விளம்பரங்களைப் பட்டியலிடணும்ன்னா தனி வலைப்பூவே ஆரம்பிச்சு டெய்லி எழுதலாம் நண்பா!

பதிவு எழுதும்போது ஞாபகம் வந்தவைகளை மட்டுமே குறிப்பிட்டேன்!

குறிப்பிட மறந்த முக்கியமான விளம்பரம் டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் சில விளம்பரங்கள்!!

Vaanathin Keezhe... said...

very interesting...

Raman Kutty said...

நானும் ஒரு விளம்பரத்தை குறிப்பிட விரும்பினேன், HDFC ‍ பேங்கின் விளம்பரங்கள்..

Syam said...

//என் மகளை நல்லதொரு அட்வர்டைஸிங் டைரக்டர் ஆக்கும் ஆவல் உண்டு. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?//

நான் டாக்டர் ஆகனும்னு நெனச்சேன் முடியல அதுனால என்னோட மகன டாக்டர் ஆக்க போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு...உங்கள் பொண்ணுக்கு எந்த துறைல ஈடுபாடு இருக்கோ அதுல சேர்த்து விட்டா சிறப்பாக வருவாள்...நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Kumky said...

ஸ்யாம் சொல்லியதை நானும் வழி மொழிகிறேன்..(எதுக்கு ரிப்பீட்டேய்.,எல்லாம்.)

Kumky said...

நான் ரசித்த விளம்பரங்களை (g mail)மெய்ல்லிட்டேன்.. பார்த்து நீங்கதான் கமெண்ட்டனும்.

Sundar சுந்தர் said...

// Syam said...
//என் மகளை நல்லதொரு அட்வர்டைஸிங் டைரக்டர் ஆக்கும் ஆவல் உண்டு. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?//

நான் டாக்டர் ஆகனும்னு நெனச்சேன் முடியல அதுனால என்னோட மகன டாக்டர் ஆக்க போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு...உங்கள் பொண்ணுக்கு எந்த துறைல ஈடுபாடு இருக்கோ அதுல சேர்த்து விட்டா சிறப்பாக வருவாள்...நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
//
ரிப்பீட்டேய்!

Venkatramanan said...

http://creativecriminal.blogspot.com/ - விளம்பரங்களுக்கெனவே பிரத்தியேகமான ஒரு பதிவு! ரொம்ப நல்லா இருக்கும்! சென்னைக்கு வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி தனி மடலிடுங்க அல்லது தொலைபேசுங்க பரிசல்! கண்டிப்பா சந்திப்போம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்

பரிசல்காரன் said...

//
நான் டாக்டர் ஆகனும்னு நெனச்சேன் முடியல அதுனால என்னோட மகன டாக்டர் ஆக்க போறேன்னு சொல்ற மாதிரி இருக்கு...உங்கள் பொண்ணுக்கு எந்த துறைல ஈடுபாடு இருக்கோ அதுல சேர்த்து விட்டா சிறப்பாக வருவாள்//

இந்தப் பாய்ண்டை சீரியஸா அடிக்கடி நானும் உமாவும் பேசுவோம் நண்பா. இதுவரைக்கும் பார்த்தவரையில மீராவுக்கு விளம்பர ஆவல் ரொம்பவே இருக்கு. சில சமயம் இந்த விளம்பரத்தை இப்படிப் பண்னியிருக்கலாமோ’ன்னு கூட சொல்லியிருக்கா.

பார்க்கலாம். அப்படி அவளுக்கு வேற துறைல விருப்பமிருந்தா அதுபடியேதான் போவோம்!

உரிமையோட சொன்ன உங்களுக்கும், ரிப்பீட்டின நண்பர்களுக்கும் நன்றி ஸ்யாம்!

Syam said...

//உரிமையோட சொன்ன உங்களுக்கும், ரிப்பீட்டின நண்பர்களுக்கும் நன்றி ஸ்யாம்!//

என்னங்க மாப்ஸ் நன்றி எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க...என்னோட மருமகள் நல்லா இருக்கணும் பெரிய ஆளா வரணும்னு என்னோட ஆசை.. :-)

Mahesh said...

உங்க விளம்பர ரசனை அருமையோ அருமை.... நானும் சில காலம் விளம்பரனாக இருந்தபோது ஏஜன்ஸியோட guard books மற்ற ஏஜன்ஸிகள் & க்ளையன்ட்களோட reel shows இதெல்லாம் பார்க்க, படிக்க, அனுபவிக்க, விவாதிக்க இன்னும் பல ...க்கக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு அழகிய கனாக் காலம். சில பல சொந்த நிர்ப்பந்தங்களுக்காக பாதை மாறி விட்டாலும், விளம்பர உலகத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடனேயே இருக்கிறேன். நம்ம creative faculty க்கு ஒரு வடிகால் தேவையாக் இருக்கு.

முன்னமே சொல்லியிருந்தேன்... என் விளம்பர உலகைப் பத்தி ஒரு பதிவு போடணும்னு.... சீக்கிரமே போடறேன்.

வால்பையன் said...

வந்த மெயிலை அப்படியே போடாமல், அதற்கு பலமான முன்னுரை எழுதி அசத்தீட்டிங்க!

வால்பையன் said...

//நல்ல தொகுப்பு பரிசல். வால் அனுப்பிய படங்கள் எல்லாமே அருமை //

நன்றி வெண்பூ

Sadhiq said...

Hai,

Its VeryNice

Plz Visit funnyplace.org, all funny ad only

புருனோ Bruno said...

அனைத்தும் அருமை

தலைக்கவச விளம்பரம் பிரமாதம் !!

பரமார்த்தகுரு said...

விளம்பரம்

நான் ஒரு வேட்டி விளம்பரம் இயக்க போகிறேன் வேட்டிக்கு நல்ல கான்செப்ட் இருந்தால் சொலுங்களேன்