Friday, September 12, 2008

அதிஷாவுக்கு நேர்ந்த கொடுமை!




(ராஜ், அடியேன், வெயிலான், அதிஷா)


இந்தப் பதிவை இன்றைக்கு எழுதலாமா, நாளைக்கு எழுதலாமா என்று யோசித்து யோசித்துக் குழம்பிப் போய், ‘சரி... நாளைக்கே எழுதலாம்’ என்று நேற்றைக்கு முடிவானதால் இன்றைக்கு எழுதுகிறேன்.

பதிவர் அதிஷாவிடமிருந்து நேற்று (12.09.08) ஒரு அழைப்பு வந்தது.

“கிருஷ்ணா.. நான் கோவையில இருக்கேன். உங்களைப் பார்க்க திருப்பூர் வந்துகிட்டிருக்கேன். அஞ்சு மணிக்குள்ள வந்துடுவேன்”

வலையில் கொஞ்ச நாளாக அதிஷாவின் பங்களிப்பைக் காணோமே, மனுஷன் இங்க இருக்காரா என்று நினைத்தபடி வெயிலானுக்கு ஃபோன் போட்டேன். (அந்த ஃபோனை அவர் புடிச்சாரா-ன்னு கேக்கக்கூடாது!)

அதிஷா திருப்பூர் வந்து கொண்டிருப்பதைச் சொன்னேன். அவர் உடனே இன்னோரு பதிவரான ராமன் என்பவருக்கு ஃபோன் போட்டு “மச்சான்... ஒருத்தன் சிக்கீருக்காண்டா” என்று விளக்கிவிட்டார்.

எனக்கு ஈரவெங்காயம் என்ற பெயரில் பதிவெழுதும் சாமிநாதன் ஞாபகம் வந்தது. நமக்குத்தான் எதையும் நேரடியாகச் சொல்லியே பழக்கமில்லையே....

“சாமிநாதன்.. ஃப்ரீயா?”

“ஏன் கிருஷ்ணா.. என்ன விஷயம்?”

“அதிஷா-ன்னு ஒரு பதிவர் இருக்காங்கள்ல.. அந்த மேடம் இப்ப திருப்பூர் வந்துகிட்டிருக்காங்க”

“மேடமா? சும்மா கத விடாதீங்க. நேத்துதான் அவரும் லக்கியும் இருக்கற ஃபோட்டோ வரவணையான் ப்ளாக்ல பார்த்தேன்”

“அதெல்லாம் வலையுலக நுண்ணரசியல் சாமிநாதன். ஆக்சுவலா அந்தப் பொண்ணு பேரு விநோதினி. வினோத்-ன்னு சொல்லி ஆம்பிளையா காமிச்சுக்குது”

“அப்ப லக்கிகூட...”

“அது சும்மா. அவரு ப்ளாக்கரே அல்ல. லக்கியோட ஃப்ரெண்டு. ப்ளாக்ல ஏதாவது பொண்ணுங்க ஃபோட்டோ போட்டு பார்த்திருக்கீங்களா? இதெல்லாம் லக்கியோட ஐடியா”

“எ..என்ன சொல்றீங்க?”

“சரி.. ஒண்ணு கேக்கறேன். லக்கியைத்தவிர வேற யார்கூடயாவது அதிஷா ஃபோட்டோவைப் பார்த்திருக்கீங்களா?”

கொஞ்சம் யோசித்துவிட்டு.. “இல்ல”

“அதான் மேட்டரு. அந்தப் பொண்ணு லக்கியோட வேலை செய்யுது. லக்கிதான் ‘பொண்ணுன்னு காமிச்சுக்காதம்மா. பல கிராதகனுக இருக்கானுக’ன்னு அட்வைஸி, இந்த மாதிரி நாடகம் நடத்திகிட்டு இருக்காரு”

“ஓஹோ... அவங்க எப்ப திருப்பூர் வர்றாங்க?”

“வந்தாச்சு. இன்னும் பத்து, பதினைஞ்சு நிமிஷத்துல ஹோட்டல் சரவணாஸ்ல இருப்பாங்க”

“பத்தே நிமிஷத்துல அங்க வர்றேன்” என்று வைத்துவிட்டார்.

அதற்குள் வெயிலான் காரெடுத்துப்போய் அதிஷாவையும், அவருடன் வந்திருந்த கோவை நண்பர் கோகுலையும் அழைத்துக் கொண்டு வந்தார். நான் சாமிநாதன் மேட்டரைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பச்சை சுடிதாரில் ஒரு பெண் கையில் பேக்குடன் அந்த ஹோட்டலை நோக்கி வந்து எங்களுக்கு அருகே வந்து நின்றுகொண்டு யாருக்காகவோ காத்திருந்தது.

சாமிநாதன், அதிஷா ‘மேடத்தை’ப் பார்க்கும் ஆவலில் வீட்டுக்குப் போய் டிரெஸ் மாற்றிக்கொண்டிருந்தாரோ என்னமோ ஆளையே காணவில்லை. கொஞ்ச நேரத்தில், கூலிங்க்ளாஸெல்லாம் போட்டுக் கொண்டு பைக்கில் ஸ்டைலிஷாக வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவரைப் பார்த்ததும் அதிஷா கொஞ்சம் நகர்ந்து நின்றுவிட, நானும், வெயிலானும் அந்த பச்சைச் சுடிதார் பெண்ணுக்கு முன் போய் நின்று கொண்டு அவரைப் பார்த்து கையசைத்தோம். அவர் வந்து கூலிங்க்ளாஸை ஸ்டைலாக கழற்றியபடி “ஹாய்.. வணக்கம்” என்று சொல்லிக் கொண்டே பச்சைச் சுடிதாரைப் பார்த்துக் கொண்டே இருந்தார். ‘சீக்கிரம் இண்ட்ரட்யூஸ் பண்ணுங்கடா’ என்று நினைத்திருப்பார் போல. அடிவாங்கத் தெம்பில்லாத காரணத்தால் நாங்கள் சிரித்துவிட, அவரும் புரிந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்து “அவருதானே அதிஷா?” என்றபடி ஐக்கியமாகிவிட்டார்! கொஞ்ச நேரத்தில் பதிவர் ராமன், அவரது நண்பர் வெங்கட்ரமணனுடன் வந்து சேர்ந்தார்.


(வெயிலான், அதிஷா, உயரமான ராம், அடியேன், வெயிலானின் சாரதி ராஜ், அதிஷா பொண்ணுன்னு சொல்லி ஏமாத்தீட்டாங்களே என்று தலைகுனிந்து நிற்கும் சாமிநாதன்)


அதிஷாவின் தங்கை மகள் ஹரிணிக்கு (ஞாயிறு) காதணி விழா. மருதமலையில். அதற்கு அழைப்பு விடுத்து விட்டு, அப்படியே மினி பதிவர் சந்திப்பு நடத்திவிட்டுப் போகத்தான் வந்திருந்தார். (ஆனால் பதிவர் சந்திப்புதான் நடந்தது. மினி இல்லை! ப்ச். அதிஷா விரதமாம்!)





(சாமிநாதன், ராஜ், வெயிலான், ராமன், அதிஷா, வெங்கட்ரமணன்)

சரவணாஸில் நாங்கள் எட்டு பேரும் ஒரே டேபிளைச் சுற்றி உட்கார்ந்து ஆளாளுக்கு ஒவ்வொன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டபடி சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தோம். இடையிடையே அதிஷாவுக்கு அவரது டேமேஜரிடமிருந்து ஃபோன் வர.. “மதுரையைத் தாண்டீட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல திருச்சி போயிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். (உண்மைத் தமிழன் ஃப்ரெண்டு இப்படி பொய் சொல்லலாமா?)

ராமன் ‘இவர்தான் பரிசல்காரன்’ என்று என்னை அவரது நண்பருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, என்னிடம் வந்து ‘ஆமா.. நீங்க யாரு?’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். ‘நீங்களும் அதிஷாவும் டென்ஷனாவே இருக்கீங்க’ என்று டென்ஷனாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். (நீங்க எல்லாரும் பிஸினஸ் மேக்னட்ஸ்!, வெயிலான் மேனேஜராய்ட்டாரு. நாங்க மேலிடத்துல டூப்படிச்சுட்டு வந்து சந்திப்பு நடத்தறோம். டென்ஷனாகாம எப்படியிருக்கும்?)

ராமனின் நண்பர் வெங்கட்ரமணன் பிஸினஸே கண்ணாக வந்தவர்களில் தனது லைனில் யாராவது இருக்கிறார்களா என்று விசாரிப்பதிலேயே குறியாக இருந்தார். (நைஸ் மேன்!)

அதிஷாவின் நண்பர் கோகுலுக்கு நான் அடித்த மொக்கை ஜோக்குகள் புரியவில்லை. போதாத குறைக்கு அதிஷா வேறு அவரிடம் ‘போயும் போயும் இந்தாள் பக்கத்துலயா உட்கார்ந்த?” என்று கேட்டு விட்டார். அதனாலேயே அவர் ஒருவிதப் படபடப்புடன் காணப்பட்டார்.

ராம் நாங்கள், (சிவா-திவா போன்ற) சீரியஸாக சில டாபிக்குகள் பேசிக் கொண்டிருந்தபோது “என்னங்க... ப்ளாக்னா இவ்வளவு அரசியலா? ஆனா நீங்க எழுதறது அவ்ளோ ஜாலியா இருக்கு. பேசறது வேற மாதிரி இருக்கு?” என்று கேட்டார். ‘அது எழுத, இது பேச’ என்று சமாதானப் படுத்தினோம்.


(வெயிலான், அதிஷாவின் நண்பர் கோகுல், அதிஷா, மறைந்திருந்து பார்க்கும் ராம், அடியேன், ராஜ், சாமிநாதன்)


வெயிலானையும், அவரது சாரதி ராஜையும் பற்றிச் சொல்லாமல் இருக்கமுடியாது. வெயிலானின் கார் சாரதியான ராஜுக்கு ப்ளாக் உலகம் பற்றி பலவிஷயங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் வெயிலான். ஒரு மேனேஜர், இவர் என் கார் ட்ரைவர் என்ற எந்தவிதப் பாகுபாட்டையும் வெயிலானிடம் பார்க்கமுடியாது. அதற்காக வெயிலானுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். (ஒரு மனிதன் மனிதனாக நடந்துகொள்வதை தனியாகப் பாராட்ட வேண்டிய அளவுக்கு மனிதம் குறைந்துவிட்டதா...)


ஒரு வழியாக சாப்பிட்டு முடிந்து, வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்த போது அதிஷா மறுத்துவிட்டார். “ஸாரி கிருஷ்ணா. உங்க குட்டீஸைப் பார்க்கணும்ன்னு நானும் ஆசையா இருந்தேன். ஆனா எங்க மேனேஜர்கிட்ட இன்னும் இருபது நிமிஷத்துல திருச்சி போய் ஒரு மெய்ல் பண்றேன்’ன்னுட்டேன். மெய்ல் அனுப்ப வேண்டிய டீட்டெய்ல்ஸ் லாப்டாப்ல இருக்கு. சீக்கிரம் கோவை போய் அனுப்பணும்” என்று கிளம்பத் தயாரானார்.

கேமரா கொண்டுவரவில்லையே என்று வருத்தப் பட்டுக் கொண்டிருந்த போது சாமிநாதன் தனது நோக்கியா மொபைலில் படங்கள் எடுத்துக் கொடுத்தார்.


சிகரெட் வேண்டாமே என்று சொன்னாலும் கேட்காமல் சிகரெட் அடித்துவிட்டு வெயிலானோடு காரில் கிளம்பிவிட்டார்!

சரி... அப்படி என்ன கொடுமை அதிஷாவுக்கு நேர்ந்தது என்று கேட்கிறீர்களா?

அவர் திருப்பூர் வந்து இறங்கியதும் ஒரு இவரிடம் வந்து ஒரு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். “பஸ்ஸிலிருந்து அத்தனை பேர் இறங்கினோம். அதெப்படி அவன் என்னை வந்து பார்த்து இந்த நோட்டீஸைக் குடுக்கலாம்” என்று பொருமித் தள்ளிவிட்டார் மனுஷன்!

அப்படி அந்த நோட்டீஸில் என்ன இருந்தது என்றால்.....

வேண்டாம். சொன்னால் திட்டுவார்!

(சந்திப்பு நடந்து அரை மணிநேரத்துக்குள்ளேயே, புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்பி ஆச்சர்யப்படுத்திய சாமிநாதனுக்கு நன்றிகள்!)

30 comments:

பரிசல்காரன் said...

புகைப்படங்கள் வெளிச்சம் குறைவாக உள்ளது. கொஞ்சம் ப்ரைட்னஸ் ஏற்றி பதிவேற்றியிருக்கலாமே?

:-(

(அதிஷா குறித்த பதிவில் ஒரு பின்னூட்ட டுபுரித்தனம் இல்லாமல் இருக்கலாமா?)

முரளிகண்ணன் said...

கலக்கல் கவரேஜ்

Thamiz Priyan said...

அதிஷா நல்லா அழகா இருக்கார்......சன்னி தியோல் சாயல் இருக்கு... அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக நல்ல வாய்ப்பு இருக்கு...;))

Thamiz Priyan said...

அந்த படங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரித்தீஷ் மாதிர்யே இருக்கார்.. (முதல் கமெண்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை)

லக்கிலுக் said...

வாவ்... என்ன எழுதினால் சுவாரஸ்யம் உங்கள் எழுத்துக்களோடு ஒட்டிக் கொள்கிறது.

அதிஷா ஒரு பெண்ணென்று நினைத்து ஆனானப்பட்ட டோண்டு சாரே ஒரு காலத்தில் ஏமாந்து போனவர் தான்.

முரளிகண்ணன் said...

மூலம் சம்பந்தப்பட்ட நோட்டீசா? இல்லை வாலிப வயோதிக அன்பர்களேவா?

விஜய் ஆனந்த் said...

// இந்தப் பதிவை இன்றைக்கு எழுதலாமா, நாளைக்கு எழுதலாமா என்று யோசித்து யோசித்துக் குழம்பிப் போய், ‘சரி... நாளைக்கே எழுதலாம்’ என்று நேற்றைக்கு முடிவானதால் இன்றைக்கு எழுதுகிறேன். //

வாழ்த்துக்கள்!!!

விசு படத்துக்கு டயலாக் எழுத போறீங்களாமே!!!

விஜய் ஆனந்த் said...

// சிகரெட் வேண்டாமே என்று சொன்னாலும் கேட்காமல் சிகரெட் அடித்துவிட்டு வெயிலானோடு காரில் கிளம்பிவிட்டார்! //

யார சொல்றீங்க???

விஜய் ஆனந்த் said...

// அப்படி அந்த நோட்டீஸில் என்ன இருந்தது என்றால்.....

வேண்டாம். சொன்னால் திட்டுவார்! //

ஹாஹாஹா!!!

எனக்கு தெரிஞ்சு போச்சி!!!

கார்க்கிபவா said...

க்ரூப்பாதான் கிளம்பியிருக்காங்க...

narsim said...

எனது பதிவில் இந்த அவசர‌ ரகசிய பதிவர் சந்திப்பிற்கான‌ காரணத்தை அம்பலப்படுத்திவிட்டேன்!!!

ந‌ர்சிம்

குசும்பன் said...

ஆஹா அதிஷாவை பார்க்க வந்து பல்பு வாங்கினாரா!!! சூப்பர்:))

Thamira said...

அதற்குள்ளாக இன்னொரு சந்திப்பா? அதிஷாவைத்தவிர பிறர் அனைவரும் கோவை குரூப்பா? வேறு யாரெல்லாம் மிஸ்ஸிங்.. ஒரு பொது அறிவ வளத்துக்கலாமேனு கேக்குறேம்ப்பா..

Thamira said...

முரளி :வாலிப வயோதிக அன்பர்களேவா?// ரிப்பீட்டேய்..

பரிசல்காரன் said...

@ பரிசல்காரன்

பின்னூட்டமொ.மாரித்தனம்.

@ முரளி கண்ணன்

நன்றி & ரெண்டாவது சொன்னது...!

@ தமிழ்பிரியன்

ரொம்பப் புகழாதீங்க!

@ லக்கிலுக்

//வாவ்... என்ன எழுதினால் சுவாரஸ்யம் உங்கள் எழுத்துக்களோடு ஒட்டிக் கொள்கிறது.//

கேள்வி கேட்கறீங்களா?
இல்ல -என்ன எழுதினாலும்’ன்னு எடுத்துக்கவா?

நன்றி சகா!

@ விஜய் ஆனந்த்

இந்தக் கமெண்டை வெண்பூ போடுவார்ன்னு நேத்து ஒரு பெரிய மனுஷர் சொன்னார்!

@ கார்க்கி

ஆமா. ஆனா மொத்த க்ரூப்பும் ஞாயிறன்னைக்கும் கும்மலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு!

பரிசல்காரன் said...

@ நர்சிம்

தோழரே... அது அவரது சொந்த விஷயம். வெளியிட வேண்டாமென்றதால்தான் நான் வேறு மாதிரி சொல்லியிருந்தேன்.

ஏன் இப்படிச் செய்தீர்கள்?

:-((((

பரிசல்காரன் said...

@ குசும்பன் & தாமிரா

நன்றி

☼ வெயிலான் said...

// ஆமா. ஆனா மொத்த க்ரூப்பும் ஞாயிறன்னைக்கும் கும்மலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு! //

அங்கிளும் வரலாம்... வருவார்... வந்தாலும் வரலாம்... வருவார்...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அது என்ன அடிக்கடி அடியேன்... சாரு மாதிரி ஏதாவது ரூட்டு வுடறீங்களா???!!

சென்ஷி said...

ஈர வெங்காயத்தையே காய வைச்சுட்டீங்களேய்யா :))

சென்ஷி said...

எல்லோருமே உங்களை மாதிரி புத்திசாலியா இருக்க முடியுமா என்ன.. போன்ல கூட உங்களை ஏமாத்த முடியலையே பரிசல் :)

சென்ஷி said...

//லக்கிதான் ‘பொண்ணுன்னு காமிச்சுக்காதம்மா. பல கிராதகனுக இருக்கானுக’ன்னு அட்வைஸி,//

லிஸ்ட்ல லக்கி மொதோ பேரையும் சேர்த்து சொல்லியிருப்பாரே :))

Saminathan said...

நம்ம தல தான் உருளுதா இங்க...
அடப்பாவிகளா...

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிஷா... வாழ்த்துக்கள்...

பரிசல்காரன் said...

@ வெயிலான்

//அங்கிளும் வரலாம்... வருவார்... வந்தாலும் வரலாம்... வருவார்...//

நோ! அவர் ஈரோடு பயணிக்கிறார்,

அப்ப நீங்க வரலியா?

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

ஐயையோ.. அது சுஜாதாகிட்டேர்ந்து ஒட்டிகிட்டது சீனியர்!

@ சென்ஷி

இணையத்தொல்லை ஒழிந்ததா:-))

@ ஈரவெங்காயம்

:=))

@ விக்கி

உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா...

பரிசல்காரன் said...

பின்னூட்டக் கயமைத்தனம்.

Ramesh said...

Where is this Saravanaas?

அகநாழிகை said...

உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நான் வலைப்பதிவு எழுதுவதற்கு புதிது. நிறைய விஷயம் தெரியவில்லை. உங்களோட இந்த பதிவ படிக்கும்போது பொறாமையா இருக்கு. நாமும் இதுமாதிரி ஒரு வலை நட்பு வட்டத்துல இல்லையேன்னு ! கம்ப்யுடேர்ல பெரிய அறிவெல்லாம் எனக்கு கிடையாது. கொஞ்சம் கொஞ்சமா இப்போதான் கத்துக்கறேன். ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பக்கத்த உருவாக்கி இப்போதான் லேசா தண்ணீர் விட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள் போனா சரியாகிவிடும்.

MCX Gold Silver said...

nan tirupur than anakku blog alutha solli koduinga

Unknown said...
This comment has been removed by the author.