Monday, September 29, 2008

எனக்கு UNEASYயாக இருக்கிறது!எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு “இன்னும் உன் ட்ரெஸ்ஸைத் தைக்கலையாம். வா. போய் வாங்கீட்டு வரலாம்” என்று அப்பா அழைப்பார். உடுமலைப்பேட்டை லைப்ரரிக்கு எதிரே ஒரு செட்டியார் மசால் பொரிக்கடை இருக்கும். (இப்போதும் இருக்கிறது.) அதற்கு அருகில் இந்த பாய் டெய்லர்கடை. இரவு பத்து மணிக்குப் போனால், நள்ளிரவு ஒரு மணிவரை உட்கார வைத்து தைத்துக் கொடுப்பார். (சட்டை, டவுசர்தான்!)

இன்று அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை!

அப்போதெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே உடைகள் எடுத்து, தைக்கக் கொடுத்து விடுவோம். இதோ இந்த வருட தீபாவளி நெருங்கி விட்டது. இன்னும் ட்ரெஸ் எடுக்கவில்லை. ‘என்ன ரெடிமேட்தானே. முந்தின நாள் கூட எடுத்துக்கலாம்’ என்கிற எண்ணம்தான்!

நான் உடுமலையில் இருக்கும்போது VIP டெய்லர்ஸ் ஆனந்த் என்பவர் பேண்ட் தைப்பதில் கில்லாடி. ஆளைப் பார்த்தே, அளவெடுக்காமலே கச்சிதமாகத் தைப்பார் என்ற பெயர் அவருக்குண்டு. பிறர் தைத்தால் THIGH பகுதியில், ஒரு மாதிரி பிடித்த நிலையில் UNEASY-யாக இருப்பதை, இவரிடம் தைக்கும்போது உணரமுடியாது. அதேபோல பேண்ட்டுக்கு ஃப்ளீட் வைப்பதிலும் இவர் கிங்! ஆனால் பின்னாளில் குடியினால் கெட்ட பேர் சம்பாதித்துக் கொண்டார்.

அதற்குப் பிறகு உடுமலையில் டெய்லர்களில் பெயர் வாங்கியவர் கிராண்டி டெய்லர்ஸ். இன்றைக்கும் உள்ளது என நினைக்கிறேன். இவருக்கு வாய் பேச வராது. ஒரு முறை இவருக்கு விளம்பர பேனர் வைக்கும்போது ‘கிராண்டி டெய்லர்ஸ் – தொழில் மட்டுமே பேசும்’ என்று வைத்தோம்! படு பயங்கர திறமை சாலி!

என் நண்பன் மயில்சாமியும் பெஸ்ட் டெய்லர்ஸ் என்ற பெயரில் டெய்லர்கடை வைத்திருந்தார். தீபாவளிக்கு ரெண்டு, மூணுவாரம் முன்னமே புக்கிங் க்ளோஸ் ஆகிவிடும். தீபாவளிக்கு முன் இரண்டு நாட்கள் கடையில் ரெடியானவற்றை அடுக்கிவைத்துக் கொண்டு, நாங்கள் வரும் வாடிக்கையாளர்களுக்கெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருபோம். அதற்கே நேரம் பத்தாது!

இப்போது எல்லாமே ரெடிமேட் தான். அவசர உலகமாகிவிட்டது! ரெடி மிக்ஸ், ரெடிமேடு மாவு, ரெடிமேடு புரோட்டா (விக்கிதுங்க!), ரெடிமேடு பதிவு (அதான் எதிர்வினைப் பதிவு. எடுத்தமா, கட்-எடிட் பண்ணினமா... ரெடி!)

ஆனால் இந்த ரெடிமேடு ட்ரெஸ் நமக்கு நச் சென்று பொருந்தினாலும் பழைய டெய்லர்கடை நினைவுகள் நம்மைத் தொடரத்தான் செய்கிறது!

ரெடிமேடு ட்ரெஸ் எடுப்பது என்பது அந்தஸ்தின் அடையாளமாகத்தான் முன்பெல்லாம் கருதப்பட்டது. யாராவது ரெடிமேடு ட்ரெஸ் எடுத்தால், அவனைப் பார்த்தால் ‘பெரிய பணக்காரண்டா’ என்பது போலப் பார்ப்போம்! இப்போது 150 ரூபாய்க்கெல்லாம் ரெடிமேட் ட்ரெஸ் கிடைக்கிறது.

எங்கள் ஊரில் ரெடிமேட் ட்ரெஸ் அதிபயங்கரப் பாய்ச்சலில் முன்னேறியது தளி ரோட்டில் எஸ்.குமார்ஸ் ஷர்ட்ஸ் என்ற கடை வந்தபோதுதான். ‘90 ரூபாய்க்கு நல்ல சட்டைடா’ என்று போய் வாங்கி வந்தார்கள். கடை முதலாளி வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள முடியாமல் முதல் இரண்டு நாட்கள் இரவு 7 மணிக்கெல்லாம் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார். பிறகு நிறைய சரக்கை (சட்டைங்க!) வாங்கிவந்து கடையை நிரப்பி, நல்ல வியாபாரம் பார்த்தார்.

இப்போதும் எங்கள் நிறுவனத்தில் தீபாவளிக்கு எல்லா ஸ்டாஃப்-க்கும் ஒரு செட் ட்ரெஸ் மெட்டீரியல்ஸ் கொடுக்கிறார்கள். ஒரு போதும் நான் அதைத் தைத்துக் கொண்டதில்லை. என் தம்பிக்கு கொடுத்துவிடுவேன். தைப்பதில் திருப்பூரில் சில சங்கடங்கள். இருக்கும் ஒன்றிரண்டு டெய்லர் கடைக்காரர்களும் எனக்கு நண்பர்கள். யாரிடம் கொடுத்தாலும் இன்னொருவரின் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். அதுவுமிலாமல் ரெடிமேட் நன்றாக செட் ஆகிவிட்டது!

ஆனால் இப்போதும் பெரும்பாலான பெண்கள் சுடிதார் மெட்டீரியல் எடுத்து தைத்துத்தான் போடுகிறார்கள். எனக்குத் தெரிந்து திருப்பூரில் ஒரு லேடீஸ் டெய்லர் கடையில் எப்போதும் கூட்டம்தான். வருடத்தின் எந்த நாளில் போய் ஆர்டர் கொடுத்தாலும் ‘ரெண்டு வாரத்துக்கு பிஸி. அப்புறம்தான் கிடைக்கும்’ என்பார். தரையில் ஆளுரயத்துக்கு துணிகளை அடுக்கி வைத்திருப்பார்! குடுத்து வெச்ச மனுஷன்!

பழைய படங்களில் எல்லாம் டெய்லர் கடையில் காஜா எடுக்கும் கேரக்டர் ஒன்று இருக்கும். (நடிகர் ஹாஜா ஷெரீப்-பின் பெயர் ஹாஜா ஷெரீப்பா, இல்ல காஜா எடுக்கற கேரக்டர்ல ஒரு படத்துல நடிச்சதால காஜா ஷெரீப்பா என்றொரு சந்தேகம் எனக்கு இருந்தது!) இப்போது டெய்லர் கேரக்டரே படத்தில் வருவதில்லை! இங்கே திருப்பூரில் காஜா எடுக்கும் மிஷினில் ஒரு நிமிடத்தில் 150-200 காஜா எடுத்துவிடலாம்! சின்ன வயதில் ‘நாளைக்கு வந்து வாங்கிக்கப்பா. இன்னும் காஜா எடுக்கலை’ என்று சொல்லப்பட்டிருக்கிறேன்!

எப்போதோ ஒருமுறை துணி எடுத்து தைக்கக் கொடுத்துப் போட்டுக் கொண்டாலும், எனக்கு UNEASY யாகத்தான் இருக்கிறது. (தலைப்பு வந்துடுச்சாப்பா?) ரெடிமேட் ட்ரெஸ்ஸில் இருக்கும் COMFORTABLE இதில் இல்லை. ஆகவே இப்போதெல்லாம் ரெடிமேடு ட்ரெஸ் மட்டுமே எடுக்கிறேன்!ஒரு கொசுறுச் செய்தி: மேலே இருக்கும் பெடல் மிஷின்தான் டெய்லர்கள் வைத்திருப்பார்கள். SINGLE NEEDLE MACHINE என்றழைக்கப்படும் இது SINGER என்ற கம்பெனியுடைய தயாரிப்பு. இந்த மிஷின் இப்போது மோட்டார் வைக்கப்பட்டு இதே சிங்கர் நிறுவனத்தால் POWER MACHINE ஆக வந்து கொண்டிருக்கிறது. வேறு நிறுவனத் தயாரிப்பும் இருக்கிறது என்றாலும், இன்றளவும் LOCK STITCH MACHINE என்றழைக்காமல் சிங்கர் மிஷின் என்றுதான் அழைக்கிறார்கள்! அதேபோல இந்த இயந்திரத்தை இயக்கத் தெரிந்தவர்கள் சிங்கர் டெய்லர்கள்தான்! (ஜெராக்ஸ் மிஷின் போல!)

பி.கு: லக்கி தப்பா நெனைக்கமாட்டாருன்னு இந்தத் தலைப்பை வெச்சுட்டேன்! ஒரு சாதாரண வார்த்தை ஒரு பிரபலத்தால் சொல்லப்பட்டால் எவ்வளவு புகழ் பெற்றுவிடுகிறது என்பதற்கு இந்த UNEASY ஒரு உதாரணம். ஹாட்ஸ் ஆஃப் லக்கிஜி!

24 comments:

ஜோசப் பால்ராஜ் said...

ஆயத்த ஆடைகளை உலகுக்கே ஏற்றுமதி செய்யிற திருப்பூர்ல இருந்துகிட்டு, தைச்சு போட்டா எப்டி? நீங்க ஆயத்த ஆடைகள் தான் அணியணும்.

ஜோசப் பால்ராஜ் said...

ஹையா, நான் தான் முதல்ல.

கோவி.கண்ணன் said...

//"எனக்கு UNEASYயாக இருக்கிறது!"//

தலைப்புக்கும், நேற்றைய பதிவில் லக்கி போட்ட பின்னூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று பின்குறிப்பு போட வேண்டுகிறேன்

:)

தலைவர்,
இப்படிக்கு பதிவை மேலோட்டமாக படிப்பவர்கள் சங்கம்

கோவி.கண்ணன் said...

இந்த பதிவு முழுவதையும் நானும் ஜெகதீசனும் வழிமொழிகிறோம்

தருமி said...

//ரெடிமேடு ட்ரெஸ் எடுப்பது என்பது அந்தஸ்தின் அடையாளமாகத்தான் முன்பெல்லாம் கருதப்பட்டது. //

உங்க வயசில கூட இப்படி இருந்துச்சா .. கொஞ்சம் பழைய ஆள் மாதிரி சவுண்ட் வருது ..

ஒரு காலத்தில் மதுரையில் உள்ள பாதி டெய்லர்களிடம் pants தைக்கக் கொடுத்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஒவ்வொருமுறையும் புதிதாகத் தைத்ததை ட்ரையல் ரூமில் போட்டுப் பார்க்கும்போது சரியா தச்சிருப்பாரான்னு நினச்சிக்கிட்டே போட்டுப் பார்க்கும்போதெல்லாம் bp எகிரும்; இதயத்துடிப்பு வேகமாகும்....

புதுகை.அப்துல்லா said...

கோவி.கண்ணன் said...
இந்த பதிவு முழுவதையும் நானும் ஜெகதீசனும் வழிமொழிகிறோம்

//

கோவி அண்ணனோடும், ஜெகதீசன் அண்ணனோடும் நானும் ஜாய்ண்டைப் போட்டுக்குறேன்.

முரளிகண்ணன் said...

எந்த ஏரியாவானாலும் புகுந்து விளையாடுறங்களே

வால்பையன் said...

நாங்கள் மொத்தம் மூன்று பேர் அண்ணன்,தம்பி என்பதால் எங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி துணி எடுத்து சங்கடப் படுத்துவர் எங்கள் அப்பா, எதோ யூனிபாம் போல இருக்கும், இப்போதெல்லாம் ரெடிமேட் மட்டுமே

வால்பையன் said...

பின்னூட்டங்களை மெயிலில் பெற

Unknown said...

:))))))

☼ வெயிலான் said...

எங்க ஊரில் ஒரு தையற்காரர் துணிகளை தண்ணீரில் நனைத்த பின்னரே தைத்து கொடுப்பார்.

தண்ணீரில் நனைக்கும் போது துணிகள் அதீதமாக சுருங்கி விட்டால் நம்மிடமே தைக்காமல் திருப்பி கொடுத்து விடுவார்.

☼ வெயிலான் said...

// ஒரு காலத்தில் மதுரையில் உள்ள பாதி டெய்லர்களிடம் pants தைக்கக் கொடுத்திருப்பேன் என்று நினைக்கிறேன். //

தருமி ஐயா! நானும் தான்.

nicefix தையல் கடையில் வரிசையில் நின்று கொடுத்திருக்கிறேன்.

narsim said...

//நள்ளிரவு ஒரு மணிவரை உட்கார வைத்து தைத்துக் கொடுப்பார். (சட்டை, டவுசர்தான்//

ஹ‌ ஹா.. மலரும் நினைவுகள் பரிசலாரே.. நாம் வருவதை தூரத்தில் பார்த்த உடன் நமது சட்டையை தேடி எடுத்து "காஜா மட்டும்தான் வைக்கனும்" என்ற டயலாக் டெய்லர்களின் தேசிய கீதம்..

நர்சிம்

கோவி.கண்ணன் said...

//பி.கு: லக்கி தப்பா நெனைக்கமாட்டாருன்னு இந்தத் தலைப்பை வெச்சுட்டேன்! ஒரு சாதாரண வார்த்தை ஒரு பிரபலத்தால் சொல்லப்பட்டால் எவ்வளவு புகழ் பெற்றுவிடுகிறது என்பதற்கு இந்த UNEASY ஒரு உதாரணம். ஹாட்ஸ் ஆஃப் லக்கிஜி!//

//கோவி.கண்ணன் said...
//"எனக்கு UNEASYயாக இருக்கிறது!"//

தலைப்புக்கும், நேற்றைய பதிவில் லக்கி போட்ட பின்னூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று பின்குறிப்பு போட வேண்டுகிறேன்

:)

தலைவர்,
இப்படிக்கு பதிவை மேலோட்டமாக படிப்பவர்கள் சங்கம்

30 September, 2008 8:21 AM
//

ஏற்கனவே டிஸ்கி போட்டாச்சா ?

இப்போதாவது நம்புங்கள், பதிவை படிக்காமலேயே பின்னூட்டம் போடுபவர்கள் உண்டு. :)

மங்களூர் சிவா said...

//
இப்போது எல்லாமே ரெடிமேட் தான். அவசர உலகமாகிவிட்டது! ரெடி மிக்ஸ், ரெடிமேடு மாவு, ரெடிமேடு புரோட்டா (விக்கிதுங்க!), ரெடிமேடு பதிவு (அதான் எதிர்வினைப் பதிவு. எடுத்தமா, கட்-எடிட் பண்ணினமா... ரெடி!)
//

ஆனா அந்த ரெடிமேடும் நல்லாதான்பா இருக்கு!!

துளசி கோபால் said...

ஐயோ இப்படி ஞாபகப்படுத்திட்டீங்களே....

ரெடிமேட் என்னும் தொடர் வெளியிட ஆரம்பிச்சு பகுதி 16 வரை வந்து, அப்புறம் கிடப்பில் போட்டுவச்சுருக்கேன்.

தூசு தட்டி எடுக்கணும்.

pudugaithendral said...

டெய்லர் கிட்ட கொடுத்து தெச்சு போட்டுக்கறது அம்புட்டு சுலபம் இல்ல. டைலர்னு சொல்லிகிட்டு நம்ம துணிகளை வாங்கிக்கிட்டு அத பாழடிக்கறவங்களும் இருக்காங.

நல்ல மனைவி, நல்ல கணவன் மாதிரி நல்ல டெய்லரும் அமைவது இறைவன் கொடுத்தவரம்னு நான் நினைக்கிறேன்.நம்ம நேரம் நல்லா இருந்தாதான் நல்ல டெய்லர் கிடைப்பாரு. :(

இதெல்லாம் பார்க்கும் போது ரெடிமேட் தான் பெஸ்ட்.

இப்பல்லாம் தையல் மிஷினில் சின்னதா மோட்டர் வெச்சுக்கறாங்க. அதனால் பெடல் போடத் தேவையில்லை. வேலையும் சுலபமா ஆவுது.

கோவி.கண்ணன் said...

முரளிகண்ணன் சொல்வதை வழிமொழிகிறேன்
:)

ஜெகதீசன் said...

கோவி.கண்ணன் சொல்லாததை வழிமொழிகிறேன்!!!

மணிகண்டன் said...

ஜெகதீசன் சொல்வதை வழிமொழிகிறேன்.

Kumky said...

அல்லார் சொல்லிகிறதையும் வளிமொலிஞ்சிகிறேன்..(எப்படி நம்ம ரெடிமேடு.?)

Anonymous said...
This comment has been removed by the author.
Thamira said...

தமிழிஷ் டூல் பாரில் என்னால ஓட்டு போட முடியலை. (முடியாதா? அங்கே போய் போட்ட ஓட்டுகள் மட்டும்தான் தெரியுமா?)

sings said...
This comment has been removed by the author.