Wednesday, September 3, 2008

விநாயகர் அவியல்!



இன்று விநாயகர் சதுர்த்தி! இணையில்லாத இவரைப் பத்தி இணையத்துல மேய்ஞ்சிட்டிருந்தப்போ, மேல இருக்கற படம் கிடைச்சது! ரொம்ப ஆராய்ச்சி நடந்திருக்கும் போல!

-----------------------------------

இவருதான் முதல் எழுத்தாளர்ன்னு சொல்றாங்க. அதாவது வியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல தன்னோட தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுத ஆரம்பிச்சாராம். அதனாலதான் நாம என்ன எழுதினாலும் முதல்ல பிள்ளையார் சுழி போடறோமாம்! நான் மொதல்ல எல்லாம் போட்டுட்டிருந்தேன். ஒரு தபா கணக்கெழுதறப்ப 13438ங்கற மொத்த டோட்டலை பிள்ளையார் சுழியையும் சேர்த்து கூட்டி 13440ன்னு போட்டதுக்கறப்புறம் போடறதில்லை. தலைவர் ஒண்ணும் நினைச்சுக்க மாட்டாருங்கற தைரியம்தான்!

----------------------------------------

பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில் இருக்காம். பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. வியாச முனிவர் வசித்த குகையும் அங்கே இருக்காம். போயிருக்கீங்களா யாராச்சும்?

------------------------------------------------------

சின்ன வயசுல இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சுசொன்னப்ப... இருங்க.. சரியா சொல்லீடறேன்., என் சின்ன வயசுல விநாயகருக்கு கல்யாணம் ஆயிடுச்சு சொன்னப்ப நான் நம்பலை. அதுக்காகவே உடுமலைப்பேட்டைல இருந்தப்ப, அங்க இருக்கற லைப்ரரில புத்தகம் புத்தகமா ஆராய்ச்சி பண்ணி 'அட! நெஜம்தான்ன்னு கண்டுபிடிச்சேன்!



பிரம்மா நாம க்ரேட்யா... என்னா டேலண்ட் நமக்குன்னு ஆணவமா படைப்பு வேலையை செய்ய ஆரம்பிச்சாராம். ஆணவத்தோட செய்யறப்ப பிறந்தவங்க எல்லாம் பின்னமா பிறந்தாங்களாம். என்னடான்னு யோசிச்சப்ப ஆணவம் அவருக்குள்ள வந்தப்ப அவரு விநாயகரைக் கும்பிடறதை நிறுத்தினதுதான் காரணம்ன்னு புரிஞ்சதாம். உடனே மெடிடேஷன்ல உட்கார்ந்து விநாயகர் கிட்ட “ஸாரி கணபதி.. மிஸ்டேக் ஆகிப்போச்சு. மன்ச்சுக்கப்பான்னு உருகினாராம். போனாப்போகுதுன்னு நம்மாளு வந்து இச்சா சக்தி, ஞான சக்திங்கற இரண்டு சக்திகளை பிரம்மாவுக்கு குடுத்தாராம். நம்மகிட்ட எந்த மேட்டர் வந்தாலும் பதிவா மாத்தீடறோம்ல? அதேமாதிரி பிரம்மா என்ன வந்தாலும் அதை மனுஷ உருவமாக்கிடுவாரு. அந்த இரண்டு சக்தியையும் பெண்களா மாத்தி தன்கூடவே வெச்சுகிட்டாராம். அதுதான் சித்தி, புத்தி!


அப்பாலிக்கா பிரம்மா ஸ்டெடியானப்பறம் விநாயகரோட சக்திகள் அவருகிட்டயே போகட்டும்ன்னு முடிவு பண்ணி அவரோட பேரண்ட்ஸ்கிட்ட சொன்னப்ப, “பையன் கல்யாணம் பண்ணிக்காம காலத்தை ஓட்டிடீடுவானோன்னு பயமா இருக்குப்பா. பேசாம இவங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்ன்னு பார்வதி சொல்ல எல்லாருமா கலந்துபேசி நம்மாளையும் மாட்ட வெச்சுட்டாங்களாம்!

வட நாட்டுலதான் இவரை அதிகமா குடும்பஸ்தரா கும்பிடறாங்கன்னு நெனைக்கறேன். அங்க இவருக்கு ஒரு குழந்தை பெண் - கூட இருக்கறதா பேச்சு உண்டு. யாருக்காச்சும் டீட்டெயில்தெரியுமா?


-----------------------------


இளையராஜா இசையமைச்ச விநாயகர் பாடல்கள்ல தாலாட்டுப் படவால வர்ற ‘வராது வந்த நாயகன்.. பாட்டும், (இது விநாயகர் பாட்டா-ன்னு கேக்கப்படாது!) ‘உடன்பிறப்புல வர்ற ‘சாமி வருது.. சாமி வருது வழியை விடுங்கடாவும் ரொம்ப பிடிக்கும் எனக்கு.

-----------------------------------

நேத்து ஒரு வேத விற்பன்னர்கிட்ட பேசிகிட்டிருந்தேன். எதைப்பத்தி பேசினாலும் அருமையா பேசக் கூடியவர் அவர். விநாயகரைப் பத்தி அவரு ஒண்ணு சொன்னார். அட! நெஜம்தான்ல!ன்னு ஆச்சர்யப்பட வெச்சது!


அதாவது கடவுள்கள்ல மோஸ்ட் ஃப்ரெண்ட்லி நம்மாளுதானாம். சிவனை பயத்தோட பாக்கலாம், முருகனை அருளோட பாக்கலாம், கிருஷ்ணாவை காதலோட பாக்கலாம் (உண்மைதான்), பிரம்மாவை ஆச்சர்யமா பார்க்கலாம் (அவரை பாக்கறதே ஆச்சர்யம்தான்!) ஆனா உங்கள்ல ஒருத்தனா ‘நண்பா... என்னப்பா கண்டுக்கவே மாட்டீங்கற?ன்னு ரொம்ப நட்பா நெனைக்க முடியறது விநாயகர் மட்டும்தான் அப்படீன்னார்!


உண்மைதான் இல்ல?

******************


டிஸ்கி: காலை ஆறிலிருந்து ஒன்பது மணிவரை பவர் கட்! அதுனால இதை இப்பவே..5.40... பதிவேத்தறேன்!!! காலைல 6 டூ 9, மாலை 6 டூ 7, இரவு 10 டூ 11 பவர் கட். (இது அறிவிக்கப்பட்டது. இதுக்கு மேல அறிவிக்கப்படாத மின்வெட்டும் இருக்கு!) இரவு அந்த நேரத்துலதான் எதுனா டிராஃப்ட் பண்ணுவேன். காலைல 8 மணிக்கு உட்கார்ந்து எழுதி போஸ்ட் பண்ணுவேன். இப்ப எதுவுமே முடியல. இன்னைக்கு விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெக்வெஸ்ட்டா விநாயகர்கிட்ட என்னோட வேண்டுகோள் இதுதான்..

‘எப்படியாச்சும் ஆற்காட்டார்கிட்ட பேசி ஒரு விடிவுக்காலம் கொண்டு வாப்பா!'


(அதுக்கு பேசாம ஒரு யூ.பி.எஸ். வாங்கிக்கப்பான்னு விநாயகர் சொல்லுவாருன்னு நெனைக்கறேன்!)

36 comments:

கோவி.கண்ணன் said...

பரிசல்,

விநாயக சதுர்த்திக்கு கொழுக்கட்டை தானே, ஏன் அவியல் என்று தலைப்பிட்டு இருக்கிறீர்கள்.

:)

கொடுத்திருக்கும் தகவல்கள் நன்று !

தமிழன்-கறுப்பி... said...

கோவி.கண்ணன் said...
\
பரிசல்,

விநாயக சதுர்த்திக்கு கொழுக்கட்டை தானே, ஏன் அவியல் என்று தலைப்பிட்டு இருக்கிறீர்கள்.

:)

கொடுத்திருக்கும் தகவல்கள் நன்று !
\

ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

கொழுக்கட்டை இல்லையா சாப்பிட்டு ரொம்ப நாளாயிடுச்சுப்பா...:)

தமிழன்-கறுப்பி... said...

\
வராது வந்த நாயகன்..’ பாட்டு
\
எனக்கும் பிடிக்கும்..

(மற்றப்பாட்டு சரியா நினைவில்லை)

வெண்பூ said...

நிறைய தகவல்கள் பரிசல். நன்றி.

விநாயகர் ஃபிரண்ட்லி மட்டுமல்ல செல்லப்பிள்ளையும் கூட... அனைவருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Mahesh said...

வினாயகர் அகவல் - வினாயகர் அவியல்

மேட்டர் நல்லாருக்கு....

"ஹேப்பி பர்த்டே டு கணேஷ்"

ஜோசப் பால்ராஜ் said...

இன்னிக்கு விநாயகர் சதுர்த்திங்கிறதால உங்க தலைப்பை அவியலுக்கு பதிலா கொழுக்கட்டைன்னு வைச்சுருக்கலாம்.
விநாயகர் குறித்த தகவல்கள் அருமை .

அடுத்த நவராத்திரி வரும்ல?

துளசி கோபால் said...

திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் சித்தி புத்தியுடன் விநாயகர் இருக்கார்.


நல்ல ஃப்ரெண்ட்லி சாமின்றதாலேதான் இன்னிக்கு ஒரு சோதனை(யும்) செஞ்சுட்டேன்.

கோச்சுக்கலைன்னு சொல்லி இருக்கார்:-)

ஜோசப் பால்ராஜ் said...

மத்தவங்க பின்னூட்டத்த பார்க்காமயே நான் பின்னூட்டம் போட்டுட்டு பார்த்தா எல்லாரும் தலைப்ப ஏன் கொழுக்கட்டைன்னு வைக்கலன்னுதான் கேட்ருக்காங்க. புத்திசாலிங்க எல்லாரும் ஒரே மாதிரி யோசிப்பாங்கன்னு சொல்லுவாங்க. நான் எப்ப புத்திசாலியானேன்னு தெரியல.

பரிசல்காரன் said...

//ஜோசப் பால்ராஜ் said...

மத்தவங்க பின்னூட்டத்த பார்க்காமயே நான் பின்னூட்டம் போட்டுட்டு பார்த்தா எல்லாரும் தலைப்ப ஏன் கொழுக்கட்டைன்னு வைக்கலன்னுதான் கேட்ருக்காங்க. புத்திசாலிங்க எல்லாரும் ஒரே மாதிரி யோசிப்பாங்கன்னு சொல்லுவாங்க. நான் எப்ப புத்திசாலியானேன்னு தெரியல.//

தப்பா நெனைச்சுக்கலைன்னா ஒண்ணு சொல்லிக்கறேன்.

நான் இந்த தலைப்பு வச்சதோட உள்ளர்த்தத்தை எங்க ஊர்க்காரர் மட்டும்தான் புரிஞ்சிடிருக்கார்!

அவியல் - நான் கலந்து கட்டி எழுதற பதிவோட தலைப்பு. விநாயகர் அகவல்-ஃபேமஸ்.

அதான் இப்படி தலைவா!

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதனாலதான் நாம என்ன எழுதினாலும் முதல்ல பிள்ளையார் சுழி போடறோமாம்! //

அட பாவமே... அது தீண்டல் குறிங்க... எழுத்தாணியின் முனையின் கூர்மையைச் சரி பார்ப்பதற்கு தீண்டி பார்ப்பார்கள்.

தீண்டல் குறி உ ஆனது பிறகு உ சிவமயம் ஆனது அதன் பின் ஓம் போட ஆரம்பித்தார்கள்... நல்ல வேலை பதிவுலகம் தப்பியது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) எங்க வீட்டுக்குப்பக்கத்தில் கூட சித்திபுத்தி விநாயகர்ன்னு ஒரு கோயில் இருந்தது.. ..

வடநாட்டில் குடும்பமா பிள்ளையாரா ? விசாரிக்கறேன். .. பொதுவா லக்ஷ்மி விநாயகர் இருவரையும் சேர்த்தே கும்பிடறாங்க பார்த்திருக்கேன்..

முரளிகண்ணன் said...

இந்த பதிவு எங்கள் கொள்கைக்கு மாறாக இருப்பதால் அட்டென்டென்ஸ் மட்டும் போட்டிட்டு எஸ் ஆகிக்கிறேன்

கார்க்கிபவா said...

உங்க தங்கமணி எல்லா வினாயகர் சதூர்த்திக்கும் காலைல எழுந்து உதவி பண்ண சொன்னா பந்தா பன்னுவீங்க..இப்போ பதிவேற்றம் செய்ய 5 மணிக்கு எழுந்திட்டீங்களா? பாவம் அண்ணி :(

Kumky said...

ஏன் தலீவரே இந்த பூசை போட்டுட்டு, அப்பாலிக்கா தன்னில கொண்டு போய் கவுத்திடறாங்களே அது ஏன்? ரொம்ப நாள் சந்தேகம், கொஞ்சம் தீக்கப்படாதா...

Kumky said...

அப்புறம்., ஆத்தங்கரை பக்கம் புள்ளையார் குந்திக்கினு கீறதே கலியானத்துக்கு பொன்னு பாக்கத்தானாம்./., எங்கியொ ஒதைக்குதே?

rapp said...

என்னமோப் போங்க, எங்க தெருவில் இருக்கிற, இருந்த எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்கவங்க அம்மாக்கள் டர்ன் போட்டுக்கிட்டு செஞ்ச கொடூரமான கொழுக்கட்டை(கர்லாக்கட்டை மாதிரி) நியாபகம் வந்து டார்ச்சர் ஆகுது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................

Sundar சுந்தர் said...

//காலைல 6 டூ 9, மாலை 6 டூ 7, இரவு 10 டூ 11 பவர் கட். (இது அறிவிக்கப்பட்டது. இதுக்கு மேல அறிவிக்கப்படாத மின்வெட்டும் இருக்கு!) //
அட பாவமே. ஆற்காட்டார்க்கு நீங்க எழுதறது பிடிக்கலை போலிருக்கு!

வால்பையன் said...

இன்று விஜய் டிவியில் பால கணேஷ் என்ற படம்,

சிவனின் துணையில்லாமல்! தானே உருவாகிய கணேஷை(அப்போது அந்த பெயர் தான்)
வாயிலை காக்க சொல்ல அவரும் கடமையே கண்ணாக அந்த பணியை பார்க்கிறார்.

வந்த சிவனை உள்ளே விட மறுக்க, சினம் கொண்ட சிவன் தன் படைகளை அவர் மீது ஏவுகிறார், இத அறிந்த பிரம்மன், அவர்களை திட்டி நான் புத்தி சொல்கிறேன் போங்கள் என்கிறார்.

அப்படியும் கடமையே பெரிது என்ற கணேஷை பிரம்மன் பல ஆயுதங்களால் தாக்குகிறார். கடைசியில் அந்த சிறுவனிடம் அடிவாங்கி ஓடுகிறார்.

இறுதியில் சிவனால் தலை கொய்யப்பட்டு இறக்கிறார்.

பார்வதி கதற
சவுண்டு கேட்டு வந்த எல்லா தேவர்களும் சிவனுக்கு அட்வைச

இவ்வளவு சினம் ஆகாது உங்களுக்கு என்று ஒருவர்
உங்கள் அகங்காரத்தை அகற்றுங்கள் என்று ஒருவர்.

என்ன கோமாளித்தனம் இது

மக்கள் கோயிலில் வேண்டிகொல்வதே சினமும், அகங்காரமும் போக வேண்டுமென்று
கடவுளுக்கே அது இருக்குமானால் நமக்கு எப்படி போகும்.

பொழுது போக படம் பார்க்கலாம் அல்லது பரிசல் மாதிரி ஒரு பதிவு எழுதலாம்,
அதுக்காக சிலையை துக்கிக்கிட்டு தெருத்தெருவா போகனுமா என்ன?

rapp said...

விநாயகர் அகவலா, ஹி ஹி, எனக்கு அதைக் கேட்டாலே ஜாலியாகிடும். வாயில திருட்டுத்தனமா போட்ட வடை, கையில எண்ணெயோட திரியும்போதுதான், இந்த விநாயகர் அகவல் சொல்லக் கூப்பிடுவாங்க, அதுக்கெல்லாம் எரிச்சல் பட்டு, ஏன் கடவுள் என்னை மட்டும் இப்படி அவர் பர்த்டே அன்னைக்குக் கூட சோதிக்கறார்னு சீரியஸா சிந்திச்சிருக்கேன். அது ஒரு அழகிய நிலாக்காலம் :):):)

rapp said...

//இவ்வளவு சினம் ஆகாது உங்களுக்கு என்று ஒருவர்
உங்கள் அகங்காரத்தை அகற்றுங்கள் என்று ஒருவர்.என்ன கோமாளித்தனம் இது

மக்கள் கோயிலில் வேண்டிகொல்வதே சினமும், அகங்காரமும் போக வேண்டுமென்று
கடவுளுக்கே அது இருக்குமானால் நமக்கு எப்படி போகும்.
//

:):):)

புதுகை.அப்துல்லா said...

அதுக்கு பேசாம ஒரு யூ.பி.எஸ். வாங்கிக்கப்பான்னு விநாயகர் சொல்லுவாருன்னு நெனைக்கறேன்
//


ஹா..ஹா...ஹா...வாட் எ பரிசல் டச்!!!!!!!

வால்பையன் said...

//ஏன் கடவுள் என்னை மட்டும் இப்படி அவர் பர்த்டே அன்னைக்குக் கூட சோதிக்கறார்னு சீரியஸா சிந்திச்சிருக்கேன்.//

யாருக்கு பர்த்டே உங்களுக்கா, அவருக்கா
ஒரு கமா விட்டு போச்சு
அது இப்படிக்கு பின்னால் வந்தால் அவருக்கு
அவருக்கு பின்னால் வந்தால் உங்களுக்கு

Nilofer Anbarasu said...

athu ennanga disky? konjam vilakka mudiyumaa?

Nilofer Anbarasu said...

konja naala 'diky' appudinguratha niraya padhivula paakkuren.....neengale thodarnthu moonu post-la disky potturkkeenga....exact meaning thaan puriyala......ethenum pin kurippaa?

pudugaithendral said...

அருமையான தகவல்கள்.

கரண்ட் கட் ஆனாலும் கடமை தவறாத வீரராக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

//konja naala 'diky' appudinguratha niraya padhivula paakkuren.....neengale thodarnthu moonu post-la disky potturkkeenga....exact meaning thaan puriyala......ethenum pin kurippaa?//

டிஸ்கி என்பது DISCLAIMERன் ஷார்ட் ஃபார்ம்!

பரிசல்காரன் said...

// VIKNESHWARAN said...

//அதனாலதான் நாம என்ன எழுதினாலும் முதல்ல பிள்ளையார் சுழி போடறோமாம்! //

அட பாவமே... அது தீண்டல் குறிங்க... எழுத்தாணியின் முனையின் கூர்மையைச் சரி பார்ப்பதற்கு தீண்டி பார்ப்பார்கள்.

தீண்டல் குறி உ ஆனது பிறகு உ சிவமயம் ஆனது அதன் பின் ஓம் போட ஆரம்பித்தார்கள்...//

விக்கி.. அதை பிள்ளையார் சுழின்னு சொல்றாங்களா? தீண்டல் குறின்னு சொல்றாங்களா?

அதுக்கு நீங்க சொன்னது உட்பட நிறைய புனைவுகள் உண்டு!

// நல்ல வேலை பதிவுலகம் தப்பியது.//

வேலையல்ல வேளை.

ஆனா.. இந்த வரி எதுக்குன்னு புரியல!

rapp said...

//// நல்ல வேலை பதிவுலகம் தப்பியது.//

வேலையல்ல வேளை.

ஆனா.. இந்த வரி எதுக்குன்னு புரியல!
//
இங்க நாம அந்தக் குறியீடை உபயோகப்படுத்தறது சிரமம் இல்லைங்களா, அதைத்தான் சொல்லவரார்னு நினைக்கறேங்க. நாம பேப்பரில் எழுதும்போது சர்வ சாதாரணமா இதை உபகோப்படுத்தும் பழக்கம் நெறயப்பேருக்கு இருக்கு இல்லைங்களா?


//
யாருக்கு பர்த்டே உங்களுக்கா, அவருக்கா
ஒரு கமா விட்டு போச்சு
அது இப்படிக்கு பின்னால் வந்தால் அவருக்கு
அவருக்கு பின்னால் வந்தால் உங்களுக்கு//
ஹா ஹா ஹா, ஆமாங்க வால்பையன், கவனிக்காம செய்திட்டேன்

பரிசல்காரன் said...

//புதுகைத் தென்றல் said...

அருமையான தகவல்கள்.

கரண்ட் கட் ஆனாலும் கடமை தவறாத வீரராக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்.//

நன்றி.. (புத்தகம் அனுப்பியாச்சு!)

சின்னப் பையன் said...

கணபதி பப்பா மோரியா!!!

narsim said...

நிறைய தகவல்கள்.. ஆகவே அவியல் தான் சரி..

பிரமிப்பான தகவல்கள்..

அப்ப இன்னும் யூபியெஸ் போடலியா?( ஆனாலும் நீங்க ரொம்ப நம்பி இருக்கீங்க‌ சார் ஆற்காட்டார)


நர்சிம்

பரிசல்காரன் said...

//( ஆனாலும் நீங்க ரொம்ப நம்பி இருக்கீங்க‌ சார் ஆற்காட்டார)//

narsim சார்.. நாம வேற என்ன பண்ணலாம்ன்னு நாளைக்கு ஒரு பதிவு போடறேன்! வந்து பாருங்க!

☼ வெயிலான் said...

// ‘எப்படியாச்சும் ஆற்காட்டார்கிட்ட பேசி ஒரு விடிவுக்காலம் கொண்டு வாப்பா!' //

பேசிட்டார் போல.

கரண்ட் கடன் கேட்க ஆற்காட்டார் டெல்லிக்கு போறார்.

மங்களூர் சிவா said...

//
கோவி.கண்ணன் said...

பரிசல்,

விநாயக சதுர்த்திக்கு கொழுக்கட்டை தானே, ஏன் அவியல் என்று தலைப்பிட்டு இருக்கிறீர்கள்.
//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு

லக்கிலுக் said...

எனக்கும் வராது வந்த நாயகன் ரொம்ப பிடிக்கும். அப்போவெல்லாம் ரூபிணி அழகா இருந்தமாதிரி தெரிஞ்சிது...