Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Tuesday, September 23, 2008

இரு இளிச்சவாயன்கள் – தமிழ்மணம் கவனத்திற்கு!!

இரண்டொரு நாட்களுக்கு முன், சரியாக 20ம் தேதி... அதிஷாவிடமிருந்து ஒரு அழைப்பு.

“பரிசல்... ஒரு ஹேப்பி நியூஸ்”

“என்னாச்சு. நெஜமாவே ஒனக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சா?”


“அதுவும்தான். ஆனா இப்போ சொல்ல வந்தது அதில்ல”

“பின்ன?”

“தமிழ்மணத்துல அக்டோபர் 20-லிருந்து நான்தான் ஸ்டார்! இப்போதான் மெயில் பார்த்தேன்”

“ம். சூப்பரு. கலக்குங்க” என்று அவர் பாணியிலேயே வாழ்த்தினேன்.

கொஞ்சநேரம் வேலை பார்த்துவிட்டு என் மெயில் பாக்ஸைத் திறந்தால்... எனக்கும் ஒரு மின்னஞ்சல்! ‘அக்டோபர் 6 லிருந்து நட்சத்திரப் பதிவராகச் சம்மதமா? புகைப்படத்தை அனுப்புங்கள்’ என்று கேட்டு. சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அதெப்படி, ஒரே நாள்ல எங்க ரெண்டு பேருக்கும் மெயில் அனுப்பியிருக்காங்க-ன்னு ஒரு சந்தேகமும் தமிழ்மணத்தோட ஐ.டி. ஜி.மெயில்லயா இருக்கும்?’ன்னு ஒரு சந்தேகமும் வந்தது. எதுக்கும் இருக்கட்டும்ன்னு ‘ப்ரொஃபைல் போட்டோ ஒண்ணுதானே..’ன்னு கேட்டு வழக்கமா எழுதறா மாதிரி அளவில்லா அன்போடு – கிருஷ்ணா’ன்னு ஒரு ரிப்ளையைப் போட்டு வெச்சேன்.





அதிஷாகிட்ட கூப்ட்டு சொன்னேன்.


“ம்... சூப்பரு. கலக்குங்க” ன்னவருகிட்ட

“ஏன்யா.. யாராவது கலாய்க்கறாங்களா?” ன்னு கேட்டேன்.


“இல்ல.. இதே மாதிரிதான் இதுக்கு முன்னாடி நட்சத்திரமா இருந்தவங்களுக்கும் மெயில் வந்திருக்காம்”ன்னாரு.

“என்ன எழுதப்போறோம்ன்னு முன்னோட்டம் கேட்டிருக்காங்க?”

“அதெல்லாம் தேவையில்லயாம். சும்மா அறிமுகம் மட்டும் குடுத்துட்டு, எழுத ஆரம்பிங்க”

சந்தோஷத்தோட வடகரைவேலன் கிட்ட கூப்ட்டு பகிர்ந்துகிட்டேன். வாழ்த்தினாரு. (என்ன சந்தோஷமான செய்தின்னாலும் அண்ணாச்சிக்குதான் முதல் ஃபோன் போகும்!) அடுத்ததா, அந்த மின்னஞ்சலோட ப்ரிண்ட் அவுட் ஒண்ணு எடுத்துவெச்சுகிட்டு இரவு வெயிலானை சந்தித்து காமிச்சேன். அவரும் வாழ்த்துக்கள்-ன்னாரு.

அடுத்தநாள் ஞாயிறு. ‘டாப்டென்ல இருக்கிங்களே’ன்னு கூப்ட்ட நர்சிம்கிட்ட கூட சொன்னேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். “என்ன எழுதணும்ன்னு ப்ரிப்பேர் பண்ணிக்க ரெண்டு, மூணு வாரம் டைம் இருக்குல்ல? ஜமாயுங்க”ன்னாரு.


அன்னைக்கு பூரா தமிழ்மணத்தைத் திறந்து வெச்சுகிட்டு இதுக்கு முன்னாடி நட்சத்திரப்பதிவர்கள் என்ன மாதிரி அறிமுகம் குடுத்திருக்காங்க, என்ன பதிவு போட்டிருக்காங்க-ன்னு ஆராய்ச்சி செஞ்சேன். நாம எப்படி எழுதலாம்... வித்தியாசமா ஏதாவது பண்ணலாமா... ஏழு நாளும் நட்சத்திரம் சம்பந்தமா ஏழுவிதமா பதிவு போடலாமா, ஒண்ணு, ரெண்டுன்னு ஏழுவரைக்கும் வர்ற மாதிரி ஏழு பதிவு ரெடி பண்ணி ஒவ்வொண்ணா போடலாமா, திருப்பூர் சாயக் கழிவுகள்பத்தி நிச்சயமா ஒரு நாள் எழுதணும்-இப்படி பலவித சிந்தனைகள்!


நேத்து, திங்கள் காலையில பதிவு போட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு மெயில் பாக்ஸைத் திறந்தா.... இந்த மெயில் வந்திருந்தது.









”ஸ்டார் பக்கத்துல ஒரு ஃபோட்டோ இல்லாம, பத்து ஃபோட்டோவா கேப்பாங்க.. அதென்ன அளவில்லா அன்போடு.. நாங்க மட்டும் என்ன, அன்பை அளந்துகிட்டா இருக்கோம்?”

-இப்படிக்கு விளையாடியது
உங்கள் ரசிகனில் ஒருவன்


இப்படி மெயில் வந்திருந்தது!


‘எவ்வளவோ தாங்கியிருக்கோம். இதத் தாங்கமாட்டோமா?ன்னு கம்னு இருந்துட்டேன். அதிஷாவுக்கு ‘பாருய்யா இந்தக் கொடுமையை’ன்னு மெயிலை ஃபார்வேர்ட் பண்ணிவிட்டேன்.

‘அடப்பாவிகளா’ன்னு ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு ரூம்ல உட்கார்ந்து வருத்தப்பட்டுட்டு இருந்தாரு அவரு!

வேறொரு நண்பர்கிட்ட இது பத்தி சொன்னப்ப, ‘நீங்க ஓக்கே பரிசல். உங்களுக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும். ஆனா யாராவது பெண்பதிவர்களுக்கு இதுமாதிரி புகைப்படமும், அறிமுகமும் கேட்டு, அவங்க அனுப்பி அது தவறா பயன்படுத்தப்பட்டா என்ன ஆகறது? ஏற்கனவே பெண்பதிவர்கள் எழுதறது குறைஞ்சுகிட்டே வருது’ன்னு ஆதங்கப்பட்டார் அவர். நியாயம்தான்னு பட்டுது!

அதுக்காக, இதை ஒரு பதிவா போட்டு, ‘தமிழ்மணத்துல இருந்து மின்னஞ்சல் வந்தா எப்படி வரும், அதை எப்படி ஃப்ராட் ப்ரூஃப் (!?!) பண்ணிவெச்சிருக்காங்க-ன்னு அவங்களையே கேட்டா என்னன்னு தோணிச்சு!


நட்சத்திரப்பதிவர்கள் பற்றி ‘உதவி’ பக்கத்துலயே இது பற்றி ஒரு விளக்கம் குடுத்தீங்கன்னா சந்தோஷம்!


ஏன்னா, நான் கலாய்க்கறதையும், கலாய்க்கப் படுவதையும் ரசிச்சே பழகிட்டேன். எல்லாரும் அப்படின்னு சொல்லமுடியாது. இந்த மாதிரி ஒரு அங்கீகாரம் கிடைக்காதான்னு ரொம்ப எதிர்பார்த்து ஏமாற்றமானா ஒருமாதிரி வெறுத்துப் போற மனநிலைக்குப் போய்ட்டாங்கன்னா.. கஷ்டமில்லையா.. பாவம்! நானும் எதிர்பார்த்தேன். இல்லைங்கல. ஆனா, இது விளையாட்டுக்காக யாரோ பண்ணினதுன்னு தெரிஞ்சப்ப அவ்வளவா மூட் அவுட் எல்லாம் ஆகல. ‘ஆஹா... என்னைப்போல் ஒருவன்’ ன்னு நெனைச்சுகிட்டேன்!


கடைசியா அந்த நண்பருக்கு ஒரே ஒரு எச்சரிக்கை....

இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினீங்க.....

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அழுதுடுவேன்!



பி.கு. 1: இரு இளிச்சவாயன்கள்ன்னு சொல்லிகிட்டது என்னையும், அதிஷாவையும்தான். தலைப்பு தப்பு... எனக்கும் இப்படி ஒரு மெயில் வந்ததுன்னு சொல்றவங்க.. கூச்சப்படாம பின்னூட்டத்துல சொல்லுங்க. சோகத்தைப் பகிர்ந்துக்கலாம்!


பி.கு.2: இந்த விளையாட்டை விளையாடின நண்பர் யாருன்னு கண்டுபிடிக்க வடிவேலுவோட செல்வாக்கைப் பயன்படுத்தி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கேன். விரைவில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு, பலவித கலாய்த்தல்களுக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்படுகிறது!

Monday, July 14, 2008

தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?

நேற்று கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு மிட்டாய், வடை, குலாப் ஜாமூன், சாப்பாடு, மஞ்சூர் ராஜாவின் அன்பு, மஞ்சூர் ராஜா அவர்களது மனைவி, மற்றும் உறவினர்களின் வார்த்தையில் விவரிக்க முடியாத விருந்தோம்பல், சில லட்சியவாதிப் பதிவர்கள் மற்றும் என் போன்ற சில மொக்கைப் பதிவர்கள் ஆகியோரால் சிறப்புற நடைபெற்றது.


சந்திப்பில் ஞானவெட்டியான் என்ற பதிவரது லட்சியத்தைக் கேட்டபோது பிரமிப்பாய் இருந்தது. “இன்னும் வாழும் காலத்திற்குள்ளாக, வெளிவராத பல நூல்கள் குறித்து எழுதியே தீருவேன்” என்றார். அவரது அந்த லட்சியத்தைக் கேட்டு மெய்றந்து, பேச்சற்றுப் போயிருந்தோம் நாங்கள்.



நான் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும், அவரைப் பற்றி இன்னும் கேட்டுக் கொள்ள வேண்டும், அவரது நட்பு வேண்டும் என்று ஒருவரை நினைத்திருந்தேன். அவர் பேசியபோது நடுவே ஒன்று சொன்னார். “நான் தமிழ்மணத்துல எழுதறத விட்டுட்டேன். நான் எழுதறத நிறுத்தினதுக்கப்புறம் தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியாகிவிட்டது” என்றும் “நானும் (இன்னொரு நண்பரைச் சுட்டிக் காட்டி) அவரும் பொது மக்கள் பிரச்சினையை எழுதறோம். ஜ்யோவ்ராம் சுந்தர் மாதிரி எங்களுக்கும் திடீர்ன்னு மட்டுறுத்தல் வந்ததுன்னா என்ன பண்றது?” என்றும் ஆதங்கப்பட்டார்.



மிகவும் வருத்தமாக இருந்தது, அவர் எழுதியதை நிறுத்தியது. இன்ஃபாக்ட், அதைப் பற்றி கேட்கவே நினைத்திருந்தேன், ஆனால் “இப்பல்லாம் வெறும் மொக்கைப் பதிவுதான் போடறாங்க” என்ற அவரது வார்த்தைகள் புதிதாக வலையில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.



அங்கேயே, அவருக்கு முன் பேசிய லதானந்த் அங்கிள் சொன்னார். “எனக்கு தமிழை தூக்கி நிறுத்த வேண்டி எழுத வர்ல. திருப்பூர்லயெல்லாம் பார்த்தா இரவு, பகல் இல்லாத இயந்திர வாழ்க்கை. வெளிநாடுகள்ல இருக்கற பல தமிழர்களுக்கு ஏதோ கொஞ்ச நேர ரிலாக்ஸேஷனுக்காக நெட்ல வர்றாங்க.. அவங்கள மாதிரியானவிங்களுக்கு கொஞ்ச நேரம் சந்தோஷத்தை தர்றதுக்காக மட்டும்தான் நான் எழுதறேன்” ன்னார். சபாஷ் அங்கிள்!


நான் அங்கிருந்து ஒரு மரண விசாரிப்புக்குப் போக வேண்டியிருந்ததால், இந்த மொக்கைப் பதிவுகள் விசாரிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று ‘ஓசை’யில்லாமல் இருந்துவிட்டேன். அது மட்டுமின்றி, என் எழுத்துக்களை வைத்து என்னை எதிர்பார்ப்பவர்களுக்கு (யாரு உன்னை எதிர்பார்த்தாங்க?) என் உருவம் பார்த்தால் மதிக்கவே தோன்றாது. லதானந்த் அங்கிள் மாதிரி பார்த்தாலே சல்யூட் அடிக்கத் தோன்றும் உருவமோ, ஞானவெட்டியான், வாத்தியார் சுப்பையா மாதிரி ‘வணக்கம் சார்’ சொல்லத்தோன்றுகிற உருவமோ எனக்கில்லை. என்னைவிட வய்து குறைந்தவர்கள் என்னிடம் ‘அது வந்து தம்பி..’ என்று பேச ஆரம்பிக்கும்போதும் நான் அமைதியாக கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். `யோவ்.. எனக்கு 35 வயசாச்சு. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. ரெண்டு பொண்ணு இருக்கு. நான் 1991-லயே இந்த எழுத்து உலகத்துல..” என்றெல்லாம் ஜல்லியடித்து என்ன ஆகப் போகிறது என்று பேசாமல் இருந்துவிடுவேன். அதுவுமில்லாமல் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். எதுவும் தெரியாதவனாகவே இன்னும் இருக்கிறேன்.


எது மொக்கைப் பதிவு என்று யாருக்குமே ஒரு தெளிவான கருத்து இல்லை. என்னைப் பொறுத்தவரை ‘தனிமனித ஒழுக்கமே ஒரு சமூகத்தை உயர்த்தும்’ என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால் என் கருத்துகளை நீயும் கடைபிடி” என்று யாருக்கும் போதிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவே இல்லை. ஆகவே என் எழுத்துகளும் அதை ரொம்ப சீரியாஸாக உங்களுக்கு போதிக்காது. என் நோக்கமெல்லாம் எழுதும் நேரத்தில்
எனக்கிருக்கும் மகிழ்ச்சி, அதைப் படிக்கும் நேரத்தில் உங்களையும் தொற்றிக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே. இந்த ஒரே காரணத்தினால்தான் என் பதிவுகளில் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கிற பல விஷயங்களை நகைச்சுவை கலந்து, தேன் தடவி சொல்கிறேன். ”நான் இப்படி பண்ணி எனக்கு இந்த அனுபவம் கிடைச்சது, நீ என்ன பண்ணனும்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்பதே என் பாணி.


அதற்காக எல்லாப் பதிவையும் போதிக்கும் பதிவாக, சமூக நன்மைக்காக எழுதும் திராணியற்ற முதுகெலும்பில்லாத பதிவன் தான் நான். நீங்கள் அப்படி எழுதும் பதிவர், மொக்கைப் பதிவுகளுக்கு எதிரி என்பதில் மிகவும் அகமகிழ்கிறேன். உங்களுக்கு என் நமஸ்காரங்கள். ஆனால், உங்களைப் போன்றவர் எழுதாமல் விடுவதுதான் என் போன்ற மூன்றாம்தர மொக்கைப் பதிவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது!! இல்லையென்றால் எவனெவன் என்னைப் போல மொக்கைப் பதிவுகளை எழுகிறானோ, அவனுக்கெல்லாம்
போய் பின்னூட்டம் போட்டு `இப்படி எழுதாதே,, இப்படி எழுது’ என்று அறிவுறுத்தி அவனை செழுமைப் படுத்தி, தமிழ்மணத்துக்கு உதவலாமே? என்ன இருந்தாலும் அதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே? எங்களுக்கெல்லாம் வழிகாட்டுவதும் உங்களின் கடமைதானே?


இப்பொழுதுகூட, ஞானவெட்டியான் சொன்ன அரிய தகவல்கள் குறித்தோ, ஜோசப் பால்ராஜும், இந்த மொக்கைப் பதிவு குறித்து ஆதங்கப்பட்ட நண்பரும் அருமையாக விளக்கிய கணினித் தொழில்நுட்பம் குறித்தோ பதிவைப் போடாமல் தேவையில்லாமல் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு பதிவாய்ப் போடும் கீழாந்தர மூளைதான் எனக்கிருக்கிறது!!


”அவர் சொன்னது உன்னைப் பற்றி என்று நினைத்து ஏன் டென்ஷனாகற” என்று கேட்பவர்களுக்கு..


யாரைப் பற்றி என்றாலும் கேட்கணுமில்லையா? இதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே?