Monday, September 29, 2008

ஸ்பெஷல் அவியல் - 29.09.08



(கனலி, பரிசல்காரன், செந்தில்வேல்)


என் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்வால்பையன், வெயிலான், அப்துல்லா, அதிஷா ஆகியோருக்கு அறிமுகமான என் நண்பர் செந்தில்வேல் மேல்படிப்பு மற்றும் வேலை விஷயமாக லண்டன் (மான்செஸ்டர்) செல்கிறார். இன்று மதியம் 3 மணிக்கு கோவையிலிருந்து விமானம் மூலம் செல்கிறார். (சென்னை வந்திருந்தபோது என்னோடு இருந்தாரே.. அவர்!)

இதை வலையுலக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளச் சொன்னார். அங்கே போய் அவரும் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் அறிகுறிகள் தெரிகிறது. எதுக்கும் ஜாக்கிரதை!

அங்கே யாராவது ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் இருக்கீங்களா? இருந்தா ஒரு மெயிலைத் தட்டுங்களேன். ஒரு கோல்டன் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு நான் கியாரண்டி!

நண்பா.. ஆல் தி பெஸ்ட்ப்பா!

***********************************************

இங்கே செந்தில் இருக்கும்போது மாதத்துக்கு ஒருமுறைகூட பார்த்துக் கொள்வதில்லை. ஃபோன் மட்டும்தான், ஆனால் இப்போது ஒன்று, ஒன்றரை வருடங்கள் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது என்னமோ செய்கிறது.

************************

நான் வாரா வாரம் அவியல் எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது கொஞ்ச நாட்களாக எழுதுவதில்லை. லட்சக்கணக்கான மெயில்கள் அனுப்பியும், நேரில் மிரட்டியும் ‘ஏண்டா எழுதறதில்ல’ என்று கேட்பார்கள் என்று நினைத்தால் ஒருத்தரும் கேட்கவே இல்லை! எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன் என்று தெரிகிறது. இருங்க.. இருங்க உங்களை வேற வழீல வெச்சுக்கறேன்!

*********************************

இன்னைக்கு காலைல இங்கே திருப்பூர்ல அங்கங்க சாலை மறியல்கள். தண்ணிப் பிரச்சினை. தண்ணி சரியா வர்றதில்ல, அப்படியே வந்தாலும் தண்ணி வர்ற நேரத்துல மின்சாரம் இல்லைங்கற ப்ரச்சினை. மின்சாரம் இல்லாத நேரத்துல, தண்ணி வந்து மோட்டார் போட்டு தண்ணி ஏற்ற முடியாததால சம்சாரம் திட்டற ப்ரச்சினை. இப்படி என்னென்னவோ சொன்னாங்க.

நான் அப்படி இப்படி புகுந்து ஆஃபீஸ் வர ட்ரை பண்ணிகிட்டிருக்கறப்ப ஒரு ஆளு என் பைக்கை குறுக்காட்டி, ‘சார்... என்ன ப்ராப்ளம் சார்?’ ன்னு கேட்டார். எனக்கிருந்த கடுப்புல “டாஸ்மாக்ல பீர் ஸ்டாக் இல்லைன்னு ரகளை பண்றாங்க சார்”ன்னு சொல்லீட்டு போய்ட்டேன்.

அரை மணிநேரத்துக்கப்பறம் ஆஃபீஸ் வந்தப்ப ஒரு ஸ்டாப் என்கிட்ட வந்து “கிருஷ்ணா, மேட்டர் தெரியுமா? டாஸ்மாக்ல பீர் இல்லைன்னு சாலை மறியலாம்” -ன்னாரு. இன்னொருத்தரு “ஆமாமா, அப்படியே குடுத்தாலும் கூலிங் பீர் தர்றதில்லயாம்”ன்னாரு.

அப்ப வந்த இன்னொருத்தரும் “திருப்பூர்ல டூப்ளிகேட் சரக்கெல்லாம் வருதுப்பா. அந்தப் பிரச்சினையையும் தீர்த்தா பரவால்ல”ன்னாரு.

“மூணுபேரும் போங்க, குடத்தோட நிறையபேர் உட்கார்ந்திருக்காங்க. கூட உட்கார்ந்து உங்க ப்ரச்சினையையெல்லாம் சொல்லுங்க”ன்னேன்.

“குடத்தோடயா?”

“ஆமா. இவ்ளோ நாள் கிடைக்காதவங்களுக்கு குடம் ஃபுல்லா பீர் தரணும்ன்னுதான் சாலை மறியலே”ன்னுட்டு போனேன்.

‘இது இவன் வேலையாத்தான் இருக்கும்’ன்னு அவங்க பேசினது கேட்டுது.

30 comments:

கார்க்கிபவா said...

மீ த ஃப்ர்ஸ்ட்டு..

கார்க்கிபவா said...

போச்சு.. நீங்க பேர் மாத்தினதுல இருந்து அவியல் எழுதாத கன்டிச்சு ஒரு பதிவு எழுதி வச்சிருந்தேன்.. ஒழுங்கா அவியலனே இருந்திருக்காலாம்னு சொல்ற அத நாளைக்கு போடலாம்னு இருந்தேன்.. பரிசலுக்கு மீன்டும் ஒரு பகிரங்க கடிதம்னு.. அத்க்குள்ள பால்ராஜ் எழுதிட்டாரு, நீங்க வெள்ளிகிழமைக்கு பதிலா இன்னைக்கே அவியல் எழுதறீங்க.. எல்லாம் வேஸ்ட்டு.. போங்க சகா.. நாளைக்கு நான் என்ன எழுத?

கோவி.கண்ணன் said...

பதிவு தமிழ்மணத்தில் வராமல் பின்னூட்டத்தில் வருது.

டாஸ்மார் தண்ணீர் பிரச்சனையா ?

வாலுக்கு போனைப் போடுங்க பெரும் படையோடுவந்து சாலை மறியலுக்கு தலைமை ஏற்பார்.

கோவி.கண்ணன் said...

லண்டன் சொல்லும் உங்கள் நண்பர் செந்தில்வேலுக்கு வாழ்த்துகள்

லக்கிலுக் said...

//என் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்//

தயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-)

Athisha said...

பரிசல் சார் நான் உங்கள் நண்பன் கிடையாது தயவு செய்து எனது பெயரை உங்கள் பதிவிலிருந்து நீக்கவும்..

மிகவும் uneasyஆக இருக்கிறது

Anonymous said...

பரிசல் சார், என்னுடைய பெயரை போடாதது மிகவும் uneasy ஆக உள்ளது.

செந்தழல் ரவி

☼ வெயிலான் said...

செந்திலுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க க்ருஷ்ணா!

வெண்பூ said...

செந்திலுக்கு வாழ்த்துக்கள்.

***

பீர் ஜோக் அருமை. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ?

***

//சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்வால்பையன், வெயிலான், அப்துல்லா, அதிஷா //

லக்கிலுக் மற்றும் வால்பையன் இடையே இடைவெளியே விடாத உங்கள் நுண்ணரசியலை ரசித்தேன் :))))

வெண்பூ said...

//லக்கிலுக் said...

தயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-)
//

இப்போதுதான் இதை படித்தேன்.. ஹா..ஹா..ஹா.. :))))

விஜய் ஆனந்த் said...

:-)))...

வெண்பூ said...

//அங்கே யாராவது ப்ளாக் ஃப்ரெண்ட்ஸ் இருக்கீங்களா? //

எனக்கு கறுப்பர்கள் யாரும் நண்பர்களாக இல்லை. மன்னிக்கவும். (நானே கொஞ்சம் கறுப்புதான் என்பது வேறு விசயம்)

வெண்பூ said...

//அதிஷா said...
பரிசல் சார் நான் உங்கள் நண்பன் கிடையாது தயவு செய்து எனது பெயரை உங்கள் பதிவிலிருந்து நீக்கவும்..

மிகவும் uneasyஆக இருக்கிறது
//

நான் ப்ளாக்கரே கிடையாது. என் பெயரையும் நீக்கவும். மிகவும் uneasyஆக இருக்கிறது.

rapp said...

13

rapp said...

14

rapp said...

15:):):)

குசும்பன் said...

//பேருக்கு சம்பந்தமில்லா பெரியமனுஷன்! (படத்தில் க்ளிக்கினால் இவரைப் படிக்கலாம்!)//

இது ரொம்ப ஓவர்! நீங்க சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிறீங்க! அவரு எம்புட்டு பெரும் அரசியல் தலைவர், தொழிலதிபர் அவருக்கே விளம்பரமா? ங்கொக்கா மக்கா என்ன கொடுமை இது சஞ்சய் மாம்ஸ்!:((

குசும்பன் said...

அதர் ஆப்சன் ஏன் இங்கு திரும்ப மூடப்பட்டது?:(((((

குசும்பன் said...

//லக்கிலுக் மற்றும் வால்பையன் இடையே இடைவெளியே விடாத உங்கள் நுண்ணரசியலை ரசித்தேன் :))))//

லக்கிக்கும் அதிஷாவுக்கு போதிய இடைவெளி விடனுமா? என்னய்யா இது இங்க குடும்ப கட்டுப்பாடு விளம்பரமா கொடுக்கிறாங்க!!!

குசும்பன் said...

//கோவி.கண்ணன் said...
லண்டன் சொல்லும் உங்கள் நண்பர் செந்தில்வேலுக்கு வாழ்த்துகள்//

காலம் எப்பொழுதும் கடமையை செய்கிறது பாருங்க!


நானும் என் வாழ்துக்களை சொல்லிக்கிறேன்.

ஜெகதீசன் said...

//லக்கிலுக் said...

தயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-)
//
:))))

வினையூக்கி said...

தங்கள் நண்பர் செந்திலுக்கு வாழ்த்துகள். அட சொந்த வலைத்தள முகவரி. கலக்குங்க பரிசல்.வாழ்த்துகள்

புதுகை.அப்துல்லா said...

நண்பர் செந்திலுக்கு வாழ்த்துகள்


நான் சென்னையே வந்தது கிடையாது.என் பெயரையும் நீக்கவும். மிகவும் uneasyஆக இருக்கிறது.

ஜோசப் பால்ராஜ் said...

//
லக்கிலுக் said...
//என் வலையுலக நண்பர்கள் சஞ்சய், வெண்பூ, லக்கிலுக்//

தயவுசெய்து என் பெயருக்கு அருகில் ஒரு கமா போட்டு இடைவெளி விடவும். uneasy ஆக இருக்கிறது :-) //

சரியாத்தான் இருக்கு.

வால்பையன் said...

செந்திலுக்கு என் வாழ்த்துக்கள்,

கார்க்கிபவா said...

செந்திலை எனக்கு ஃபோட்டோவில் நன்றாக தெரிகிறது.. எனவே என் பெயரையும் சேர்க்கவும். i feel uneasy ya

Raman Kutty said...

that uneasy matter super pa!! all are very smart ...!!!

Anonymous said...

உங்கள் நண்பர் செந்தில்வேலுக்கு வாழ்த்துகள்

narsim said...

என் பெயரையும் நீக்கவும்.. ஸாரி போடவே இல்லையா..!!@@@!! மாசக்கடைசி டார்கெட் குடைச்சலுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆ இருக்கு பதிவும் பின்னூட்டங்களையும் பார்க்கும்பொழுது..

கலக்கல்..

நர்சிம்

பரிசல்காரன் said...

உங்களுக்குள் இடைவெளி இருப்பது என் போன்ற பலருக்கும் UNEASYயாக இருக்கிறது தோழர்(களே..)

ஏதோ, நிஜத்தில் கொஞ்ச நாளாகும், எழுத்திலாவது இருக்கட்டுமே என்றுதான் இந்த வேலை.