Saturday, September 27, 2008

பீர்பாட்டில் திறக்கிறேன்....


வால்பையன் மன்னிக்கவும்!

எனக்கு பீர் அறிமுகமானது நண்பனின் செந்தூர் ஒயின்ஸ் மூலமாக. அதன் பிறகு சில நாட்கள் பிறர் பீரடிப்பதைப் பார்க்க மட்டுமே செய்தேன். பதினொன்ணு, பனிரெண்டு வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு மாதத்தில் ஏதோ ஒரு நாள் (மப்பில் தேதி,கிழமை மறந்துவிட்டது) நானும் ஒரு பீரடிக்க ஆரம்பித்தேன். அதுவும் தற்செயலாகவே கிங்ஃபிஷ்ராக அமைந்துவிட்டது. சில ஊறுகாய், மிக்சருடன் ஆரம்பித்த எனது பீர் இப்போது பல ஆயிரங்களைக் கடந்துவிட்டது.

ஆனால் சில நாட்களாக இத்தோடு பீரடிப்பதை விட்டே ஓடிப்போய் விடலாமா என்று என்னும் அளவுக்கு மனஉளைச்சல். நான் ஏதோ விளையாட்டுக்கு ஸ்ட்ராங் அடிக்கப் போய் பன்முனை தாக்குதலில் மாட்டி கொண்ட மான் போல ஆகிவிட்டேன். நான் செய்த தவறு டூப்ளிகேட் சரக்கு விற்ற டாஸ்மாக் சூபர்வைசரைப் பகைத்துக் கொண்டது.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பீருக்கு வரிசையாக பத்து ஊறுகாய் கொடுக்கக் சொன்னார் அந்த டாஸ்மாக் சூபர்வைசர். சால்னாக்கடைக்காரரும் கொடுத்தார். அதில் ஒன்று மட்டுமே சாப்பிட்டேன். மற்றவை எல்லாம் திருப்பிக் கொடுத்தேன். பக்கத்திலேயே அவர் இருந்தாலும், நான் மப்பில் இருந்ததால்... சரியாகத் தெரியாமல் அவரது அலைபேசிக்கு அழைத்து கேட்டேன். அவ்வளவு ஊறுகாய்கள் தேவையில்லாதது அதனால் ஒன்றை மட்டும் சாப்பிட்டேன் என்று நானே கூறினேன். அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுதெல்லாம் அவருக்கு ஊறுகாய் திருப்பிக் கொடுப்பது பிடிக்காது என்று நினைத்தேன். அவருக்கு என்னையவே பிடிக்காது என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

கடைசியாக சாப்பிட்ட டூப்ளிகேட் பீரில் நான் ஏதும் மிக்ஸ் செய்யவில்லை. டாஸ்மாக் சூபர்வைசரின் அந்த சதியின்போது , பீரடித்து இறுதியாக "இந்த பீருக்கு நீங்கள் செவன் அப் மிக்ஸ் பண்ணி என்னை பெரியாளாக்க வேண்டாம், அதை உங்கள் சால்னாக்காரர்கள் பார்த்து கொள்வார்கள்" என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தேன். 'போடாங்கொய்யால... ம**” என்று திட்டிவிட்டார். மப்பில் சூடு சொரணை இருக்குமா என்ன? நானும் பின்விளைவாக "என்னடா சூபர்வைசரிடமிருந்து இன்னும் பதிலில்லையே என்று பார்த்தேன் வந்து விட்டது" என்றும் எழுதியிருந்தேன்.

அதை அவர் கண்டுகொள்ளவில்லை. நான் எப்பொழுது பீரடித்தாலும் எனக்கு மப்பு அவ்வளவாய் ஏறாது. இருந்தாலும் ஒரு பீரடித்து ஏறவில்லை என்றால் அதன்பின் இன்னொரு பீர் என் டேபிளுக்கு வருவது போல் ஆர்டர் செய்து விடுவேன். அப்போதும் அதைத் தான் செய்திருந்தேன், மற்ற டேபிளுக்கு பீர் வந்ததால், என் டேபிளுக்கு பீர் தருவீர்களா என்று கூட கேட்டிருந்தேன்.

அதற்கு பதில் அவர் வித்தியாசமாய் கொடுத்ததால் அங்கே செய்யும் விவாதத்திற்கு பதிலாக நானே ஒரு பீர் எடுக்க வேண்டியதாயிற்று. சமீபத்தில் மப்படித்த போது, சவுண்டு சந்திரனும் மஜாவேந்திரனும் பாரிலேயே ப்ளாட் ஆனபோதுகூட டாஸ்மாக் சூபர்வைசர் எழுப்பிவிடப் போனபோது நானும் கைகொடுத்து தூக்கிவிட்டு ஒரே ஒரு ஸ்மைல் மட்டும் காட்டினேன். சூபர்வைசர் எனது ஸ்மைலிற்கு திரும்ப சிரிக்கக்கூட இல்லை. ஆனால் அதன் பின் அவர் சிரித்தால் எனக்குத் தெரியும் வண்ணம் திரும்பி உட்கார்ந்தேன். முகத்தில் அவர் சிரிக்காமல் என் பின்னால் போய் முதுகில் சிரித்தது தெரிந்தது.

நான் என்ன துரோகம் அவருக்கு செய்தேன். நான் பீரடிக்கும் பாரில் எல்லாம் எனக்கு ஊறுகாய் தரக்கூடாதெனவும், நான் மப்பில் உளறுபவன், பீருக்கு காசுதராமல் போவேன் எனவும் ஒரு கும்பல் புரளியை கிளப்பி கொண்டு திரிகிறது, எனக்கு வேறு பெயரில் சொந்தமாகவே ஒரு பார் இருப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.





அது போல் நான் செய்வதில்லை என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். என் பீருக்கு நான் காசு கொடுக்காமல், கொடுக்க முடியாமல் முகத்தை மறைத்து சொல்லும் அளவுக்கு கடங்காரன் அல்ல நான்.


இவர்களுக்கு நான் எப்படி தான் நம்ப வைப்பது. எனக்கு கோட்டர் கோயிந்தசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆனால் மப்பு என்ற வார்த்தை போதையுடன் இணைந்துள்ளது என்று நம்புகிறேன். (ரெண்டும் ஒண்ணுதாண்டா வென்ரு!) நான் வாழ்க்கையில் அடித்த ஒரே ஹா(ர்)ட் சிக்னேச்சர்மீது ஆணையாக நான் காசுகொடுக்காமல் போனதில்லை, போவதில்லை, போகப்போவதுமில்லை. இதற்கு மேல் நம்பினால் நம்புங்கள் நம்பாட்டி போங்கள்.

இந்த வீணாய் போன பார் உனக்கு என்ன தந்தது என்று கேட்டால் நல்ல சால்னாக்களை என்று சொல்லி வந்தேன், ஆனால் நான் கொஞ்சமும் எதிர்பாராத, நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒரு சூபர்வைசர், நான் தான் மப்படித்து உளறுவேன் என்று சொல்லி வருவது பெருத்த காயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது.

எனக்கு கிங்ஃபிஷர் பீர் தவிர வேறொரு பீரும் பிடிக்கும். அதுவும் இதே பாரில்தான் அடித்திருக்கிறேன். எனது போதை நிமித்தமாக அதை பயன்படுத்தி வருகிறேன். பக்கத்துக் கடைகளிலிருந்து சில முக்கியமான சைட் டிஷ்களைத் சேர்த்து அப்போது அடிப்பேன். இதற்காக நான் கடைக்காரனுக்கு பணம் கொடுப்பதால் அந்த பணத்திற்குண்டான மரியாதையின் பொருட்டு அந்த பீரை முழுக்க முழுக்க நானே குடிக்கும் வழக்கம் வைத்திருக்கிறேன். இது தவிர நான் வேறு சரக்கெதுவும் அடிப்பதில்லை.


பொதுவாக நான் எந்த பாருக்கும் ஆதரவாளன் இல்லை. மப்படித்துவிட்டு உளறுவதும் எனக்கு பிடிக்காது, ஆனால் டாஸ்மாக் பார் சூபர்வைசர்களின் போதை உளறல்கள் அதை வி்ட கேவலமாக இருக்கிறது. ஒரு சில சூபர்வைசர்களால் நான் சால்னாக்கடைக்கார நண்பர்களையும் இழந்து விடுவோனோ என பயம் வருகிறது எனக்கு. நான் பீரடித்து எந்த புரட்சியையும் செய்து வி்ட போவதில்லை, சர்ச்சைக்குரிய பார்களில் எனக்கு சைட் டிஷ் கொடுத்து எனக்கு யாரும் போதையேற்றப் போவதில்லை. எனக்கு காசு செலவாவதே மிச்சமாகிறது.

இருப்பினும் என் மீது அவதூறு பரப்புவதற்கு அவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். நானே பார்ட்டி என்ற பெயரில் அரைமப்பு ஆறுமுகம் சார், நண்பர் மட்டை மனோகரனின் உளறல்களை கிண்டலடித்து நானும் மட்டையாகும் நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கிறேன். அதே போல் வேறு பார் ஏதாவதிலும் கச்சேரி நடந்திருக்கலாம்.


வேறு இடத்தில் நான் அப்படியேதேனும் மப்பில் உளறியிருந்தால் என்னை மன்னித்து, நான் உளறக்கூற முடியாத அளவுக்கு ஃபுல்மட்டையாக இன்னொரு பீர் எனக்கு ஆர்டர் செய்துவிட்டு, காசையும் செட்டில் செய்து விடுங்கள் என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன்.

இவ்வளவு நடந்தும் என் மீது நம்பிக்கை வைத்து என்னை நம்பும், எனக்கு பீர் ஆர்டர் செய்யப்போகும் நண்பர்களுக்கு நான் கோடான கோடி நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.








இத்துடன் எனது (எத்தனையாவது என்று தெரியவில்லை) பீர் முடிந்தது.


யோவ்... அடுத்த பீர் கொண்டுவாய்யா.....ங்கொய்யாஆஆஆஆஅல!


(முக்கியக் குறிப்பு: வால்பையனிடம் முன் அனுமதி பெறப்பட்ட எதிர்பதிவு. இதைப்படித்து கும்மி, மொக்கையே சரணம் என்று திருந்தி வருமாறு வால்பையனுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது!)

50 comments:

கோவி.கண்ணன் said...

பரிசல், பதிவை தமிழ்மணத்தில் சேர்த்தாச்சு !

:)

யாராவது முகாரி பாடினாலும் அதை கும்மி பாட்டாக்கி பாடினவங்களையே வெட்கப்பட வைக்கிறிங்களே ராசா...

அம்புட்டு நல்லவரா ?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பரிசல்காரன் said...

நன்றி கண்ணஞி.. (ரொம்ப நாளைக்குப் பின்னாடி யூ த ஃபர்ஸ்ட்!)

வாலுகிட்ட ‘நீங்க அவ்வளவு வருத்தப்பட்டு உணர்ச்சிபூர்வமா எழுதினத கலாய்க்கறதா'ன்னு கேட்டுட்டுதான் நேத்து போடவே இல்ல. இல்ல, போடுங்க. நானும் உங்க ஒரு பதிவை கலாய்ச்சு எழுதியிருக்கேன். கும்மலாம்-ன்னாரு, அதுனால மட்டும்தான் எழுதினேன்.

அனானிகள் யாரும் உணர்ச்சிவசப்படவேண்டாம் ப்ளீஸ்... ஒன்லி கலாய்த்தல் & மொக்கை.

தேவகோட்டை ஹக்கீம் said...

செம கலக்கல் தோழர்... தொடருங்கள்.....

முரளிகண்ணன் said...

எதிர்வினை ஏகாம்பரம், கலக்கல்

பரிசல்காரன் said...

//முரளிகண்ணன் said...

எதிர்வினை ஏகாம்பரம், கலக்கல்//

:-))))))))

Kumky said...

எது எப்படியோ..வாலுச்சாமிக்கு ...புரிந்தா சரி.....

Rajaraman said...

பீருக்கே இந்த நீண்ட புலம்பல்கள் என்றால் இன்னும் ஹாட் என்றால் எங்கள் கதி....... ஐயோ சாமி தாங்காது...........

Sanjai Gandhi said...

//சில ஊறுகாய், மிக்சருடன் ஆரம்பித்த எனது பீர் //

வாட்டர் மிக்சிங் மறந்துட்டிங்களே பரிசலாரே... :P(அது அப்போ.. இப்போ இல்ல.. இப்போ எல்லாம் தல ஹாட் சரக்குக்கே வாட்டர் சேத்துக்கிறதில்லை.. :)) )

புதுகை.அப்துல்லா said...

அதென்ன கிங்பிஷ்சரு மட்டும்? ஏன் மத்ததெலாம் பீர் இல்லையா?( உள் குத்து புரியுதா பரிசல் :))) )

Sanjai Gandhi said...

// புதுகை.அப்துல்லா said...

அதென்ன கிங்பிஷ்சரு மட்டும்? ஏன் மத்ததெலாம் பீர் இல்லையா?( உள் குத்து புரியுதா பரிசல் :))) )//

ஒன்னு சேர்ந்து குடிச்சத இதை விட நாசூக்கா சொல்ல முடியுமா என்ன? :))

Sanjai Gandhi said...

இந்த வாரப் பதிவரா என்னை விளம்பரப் படுத்துவதற்கு நன்றி.. சும்மா என் ப்ளாக் மீட்டர் அனல் பறக்க எகிறுது.. :))

Anonymous said...

குபீர் குபீர்னு சிரிச்சேன்

கார்க்கிபவா said...

வாலு மட்டும் கண்ணசைக்கட்டும்.. திருப்பூரில் பட்டப்பகலில் முதியவர் கொலைனு வரும்.. ஆமா சொல்லிப்புட்டேன்

anujanya said...

கே.கே.

வாலுக்கு ஏற்ற எதிர்வினை. 'டைட்' மேட்டர 'லூசா' ஆக்கிட்டீங்க. வால் இப்போவெல்லாம் இந்த சமாசாரங்களத் தொடரதில்லையாமே. 'பீர்', 'கிங்க்பிஷர்' 'மப்பு', 'டாஸ்மாக்' இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு என்கிட்டே போன் பண்ணி கேட்டாரு. 'பட்ட' தவிர வேறெதுவும் தெரியாதுன்னு வெச்சுட்டேன் போன. 'பட்ட'ய கிளப்புறீங்க.

அனுஜன்யா

narsim said...

பரிசல்.. பாவம்யா அவரு.. ம்ம்.. ஆனாலும் வெந்த புண்ணுல ஜில்லுனு பீர ஊத்தி கூல் பண்ணிட்டீங்க அவர.. அவர் சார்பா நன்றி..

நக்கல், கலக்கல்..!

தொடருங்கள்..
(சனிக்கிழமைங்கறதால தாமதமா வந்தேன்.. மன்னிக்கவும்)

நர்சிம்

தமிழ் அமுதன் said...

கிங் பிஷர் அடிச்சு மப்பு ஏறிச்சா? ஏறாதே ?ஏரோ பிளேனுக்கு எல்லாம் அந்த பேர வைச்சு இருக்கனுங்க அது மட்டும் எப்படித்தான் ஏறுதோ ?

விஜய் ஆனந்த் said...

ஹாஹாஹாஹா!!!

எங்க இன்னும் வாலக்காணோம்???

பரிசல்காரன் said...

//விஜய் ஆனந்த் said...

ஹாஹாஹாஹா!!!

எங்க இன்னும் வாலக்காணோம்???//

காலையிலேயே அழைத்தேன். வால்பையன் சேலம் செல்வதாக் சொன்னார்.

இப்போது அழைத்தபோது சேலத்தை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் சற்று நேரத்தில் ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த மீட்டிங்கில் கலந்துகொள்ளப் போவதாகவும் சொன்னார்.

அவரது சார்பாக கும்மி அடிக்கு வெண்பூ, குசும்பன், ராப், அப்துல்லா ஆகியோருக்கு உத்தரவிடச் சொன்னார்!

ஜெகதீசன் said...

:))

rapp said...

22

rapp said...

23

rapp said...

24

rapp said...

25:):):)

VIKNESHWARAN ADAKKALAM said...

நானும் ஒரு பீரடிச்சிட்டு வரேன்...

ஜிங்காரோ ஜமீன் said...

சூப்பரப்பு...

ஜிங்காரோ ஜமீன் said...

//அதுவும் தற்செயலாகவே கிங்ஃபிஷ்ராக அமைந்துவிட்டது//

நம்ம பிராண்டை தொடாததை வன்மையாக கண்டிக்கிறேன்

ஜிங்காரோ ஜமீன் said...

/சில ஊறுகாய், மிக்சருடன் ஆரம்பித்த எனது பீர் இப்போது பல ஆயிரங்களைக் கடந்துவிட்டது//

சே... அம்புட்டுதானா?

ஜிங்காரோ ஜமீன் said...

//நான் எப்பொழுது பீரடித்தாலும் எனக்கு மப்பு அவ்வளவாய் ஏறாது//

இதை நம்பனுமா?

பரிசல்காரன் said...

வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் நண்பர் ஜிங்காரோ ஜமீனுக்கு ரெண்டு பீர் ஆர்டர்!

ஜிங்காரோ ஜமீன் said...

//வேறு இடத்தில் நான் அப்படியேதேனும் மப்பில் உளறியிருந்தால் என்னை மன்னித்து//

அப்ப இது சீரியஸ் பதிவா? நல்லா உளறிங்களேன்னுதானே நினைச்சேன்:(

ஜிங்காரோ ஜமீன் said...

மறந்துட்டேன்.. டாப் 10ல் வந்ததற்கு வாழ்த்துக்கள்

ஜிங்காரோ ஜமீன் said...

உங்க பதிவை படிச்சுட்டு வீக் எண்டை ஒரு பீரோட கொண்டாடனும் போல இருக்கு..

ஜிங்காரோ ஜமீன் said...

//
Rajaraman said...

பீருக்கே இந்த நீண்ட புலம்பல்கள் என்றால் இன்னும் ஹாட் என்றால் எங்கள் கதி....... ஐயோ சாமி தாங்காது...........
//

நல்லவேளை.. பொழைச்சோம்ப்பா...

ஜிங்காரோ ஜமீன் said...

அதுசரி.. எங்கே சூப்பர்வைசரை இன்னும் காணோம்?

ஜிங்காரோ ஜமீன் said...

நம்ம வால் சாரையும் கூட காணோமே?

ஜிங்காரோ ஜமீன் said...

//கார்க்கி said...

வாலு மட்டும் கண்ணசைக்கட்டும்.. திருப்பூரில் பட்டப்பகலில் முதியவர் கொலைனு வரும்.. ஆமா சொல்லிப்புட்டேன்//

அப்போ போட்டோவில் இருந்ததெல்லாம் நிஜமான பரிசல் இல்லையா? :)

ஜிங்காரோ ஜமீன் said...

அப்பாடா 50 அடிச்சாச்சு..

வரட்டுமா பரிசல்....

ஜிங்காரோ ஜமீன் said...

அட மறந்துட்டேன்..

கும்மியர் சங்க தலைவர் குசும்பன்,

கொ.ப.சே வெண்பூ கூட இன்னும் வரலியேப்பா...

ஜிங்காரோ ஜமீன் said...

//
பரிசல்காரன் said...

வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் நண்பர் ஜிங்காரோ ஜமீனுக்கு ரெண்டு பீர் ஆர்டர்!
//

இன்னும் ஞாபகம் வைச்சிருக்கீங்களா மக்கா? ரொம்ப நன்றிப்பா...

சொல்றதும் சொல்றீங்க..
நம்ம பிராண்ட் பீரை சொல்லுங்க....

சென்ஷி said...

:)

kalakkunga :)

Saminathan said...

என்ன...என்ன...
என்ன இதெல்லாம்..???

நல்லதந்தி said...

பரிசல்காரன் சைட்டில் எதையோ எழுதனுன்னு வால்பையன் சொன்னாரு அது என்னான்னுமறந்துரிச்சி!.அதனால பொதுவா ஒரே ஒரு :) மட்டும்.மிச்சத்தை வால்பையனிடம் கேட்டுக்கொள்ளவும்.வால்பையன் காசியில் கங்கா ஸ்நானம் செய்து கொண்டு இருப்பதால் வால்பையனுக்காக!.

நல்லதந்தி

Thamira said...

கிடைச்ச பாலில் சிக்ஸர் தூக்கியிருக்கீங்க.. ஜூப்பரு..

நர்ஸிம்: பரிசல்.. பாவம்யா அவரு.. ம்ம்.. ஆனாலும் வெந்த புண்ணுல ஜில்லுனு பீர ஊத்தி கூல் பண்ணிட்டீங்க அவர// இது ஜூப்பரு..

ஜீவன் :கிங் பிஷர் அடிச்சு மப்பு ஏறிச்சா? ஏறாதே ?ஏரோ பிளேனுக்கு எல்லாம் அந்த பேர வைச்சு இருக்கனுங்க அது மட்டும் எப்படித்தான் ஏறுதோ ?// இது பதிவுக்கு சம்பந்தம் இல்லைனாலும் ரொம்ப நாயமான கேள்வி.

வேல‌ன் :குபீர் குபீர்னு சிரிச்சேன்// பாருங்க‌ளேன் ந‌ம்ப‌ அண்ணாச்சிய‌.. ஜோக்க‌டிக்கிறாரு.!

வெண்பூ said...

சூப்பர் பார்ட்னர்.. கலக்குங்க.. எதுக்கு டிஸ்கியெல்லாம், வால்பையனிடம் கேட்டாச்சின்னு, அவரு என்னா கோச்சிக்கவா போறாரு???

வெண்பூ said...

//பொSaடிnயJaன்i said...
இந்த வாரப் பதிவரா என்னை விளம்பரப் படுத்துவதற்கு நன்றி.. சும்மா என் ப்ளாக் மீட்டர் அனல் பறக்க எகிறுது.. :))
//

ஆனா உங்க போட்டோ போட்டதுல பரிசலுக்கு ஹிட் கம்மியாயிடுச்சின்னு வருத்தப்பட்டுகிட்டு இருக்காரே! அந்த மேட்டர் தெரியுமா உங்களுக்கு?? :)))

வெண்பூ said...

அட இன்னும் மூணு அடிச்சா ஐம்பதா???

வெண்பூ said...

காசா பணமா? நம்மளே அடிச்சிடுவோம்..

வெண்பூ said...

அடிச்சாச்சி 50

வால்பையன் said...

விடுமுறை தினங்களில் நான் பிளாக் பக்கம் வருவதில்லை என்பதால் கும்மியில் கலந்து கொள்ள முடியவில்லை!

தமாஷாக இருந்தது பதிவு
ரசித்தேன்