Wednesday, September 24, 2008

நான் யாருக்கு அல்லக்கை?


அல்லக்கை என்ற வார்த்தை எப்படி வந்திருக்கக் கூடும் என்ற ஆராய்ச்சிக்கு சரியான விடை கிடைக்கவில்லை. கூகுளில் அல்லக்கை என்று தேடினால் முக்கால்வாசி நம்ம வலையுலகில் பல சந்தர்ப்பங்களில், வலையுலகப் பதிவர்களால்தான் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறதுதான் வருகிறது.


தமிழகத்தில் இந்த வார்த்தையைப் பரவலாக்கச் செய்த பெருமை நம்ம கவுண்டமணியையே சாரும் என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. அதற்கு முன் இந்த வார்த்தைப் பிரயோகம் சினிமாவில் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. (முரளிகண்ணன்தான் பதில் சொல்லணும்!) கவுண்டமணி (எங்க ஊர் – உடுமலைப்பேட்டைக்காரர்ங்க!) இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தியதால், இது கோவை மாவட்டத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையா? அப்படி ஒன்றும் தெரியவில்லை. கோவைக்காரர்களைவிட, சென்னைக்காரர்கள் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.




இதன் அர்த்தத்தைத் தேடியபோது “The meaning of allakkai is errand boy, useless, money crazy” என்றும் “Allakkai is a tamil word with very rich meaning. Loosely translated it means "Uppukku chappani" என்றும் வந்தது. ஆனால் இது எந்த அகராதியில் சொல்லப்பட்டதுமல்ல. நம்மைப் போன்ற யாரோ பதிவர்கள்தான் இப்படி எழுதியிருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒருவரின் அல்லக்கை என்றால் அவரை ஆதரிப்பவர், அவர் இட்ட பணியை செய்பவர் எனலாம். ஒருசில இடங்களில் ஜால்ரா, எடுபிடி என்னும் பொருள்படும்படியும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், ரொம்ப ஆழமாக யோசித்தால் யாரையாவது நமது வலது கை, இடது கை என்பது போல, இந்த அல்லக்கையும் வந்திருக்கக்கூடும். அதாவது நான் அவருக்கு வலது, இடது கை என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமல்ல, வேண்டுமானால் அல்லக்கை (உடம்போடு அல்லாத, கொஞ்சம் தள்ளியிருக்கும் கை) என்று வைத்துக் கொள்ளலாம். அல்லாத கை, மருவி அல்லக்கையாகியிருக்கக்கூடும்!




என் வசதிக்காக அல்லக்கை என்றால் ஆதரிப்பவர் என்றே வைத்துக்கொண்டு இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். (இன்னும் ஆரம்பிக்கவே இல்லையா? கிழிஞ்சது போ!)



நேற்று லக்கிலுக் ‘நான் சாரு நிவேதிதாவின் அல்லக்கை’ என்றதுதான் இந்தப் பதிவுக்கான பொறி என்பது பதிவுக் குழந்தைக்குக் கூடத் தெரியும். எனக்கும் சாருவின் எழுத்து பிடிக்கும். (அதானே, லக்கி சொன்னா உடனே ஆமாம் போடுவியே..) எல்லாரும் அவரது பல புத்தகங்களைக் குறிப்பிட்டாலும், நான் கோணல் பக்கங்களின் கிறுக்குத்தனமான ரசிகன். போதாக்குறைக்கு அவருக்கு கடிதமெல்லாம் எழுதி, ஒருமுறை அவராகாவே எனது அலைபேசிக்கு அழைத்துப் பேசியதில் இருந்து அவரைப் பிடித்துப் போனது. (அப்போதெல்லாம் எனக்கு வலையுலகத் தொடர்பே கிடையாது!)



குடும்பத்தைப் பொறுத்தவரை என் தாயமாமா பாலசுப்ரமணியனுக்கு நான் அல்லக்கையாக இருந்திருக்கிறேன். சின்ன வயது தொட்டு அவருடனே சுற்றி இன்றளவும் என் பல செயல்களும், நடத்தையும் அவர் போலவே இருக்கிறதாய் நானே நினைத்துக் கொள்வதுண்டு!



எழுத்துத்துறையைப் பொறுத்தவரை தமிழ்வாணன் (சீனியர்!), பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார் என்று பலரைப் படித்திருந்தாலும் பாலகுமாரன், சுஜாதா என்னை மிக பாதித்தார்கள். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரை, இனிது இனிது காதல் இனிது என்று பலவும் பைபிள் போல வைத்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் உடையார், அது இதுவென்று அவர் போனபிறகு அவரை தொட(ர)வில்லை! :-(



ஆனால் சுஜாதா என்னுள் அசைக்கமுடியாமல் சிம்மாசனமிட்டு இருக்கிறார்! விஞ்ஞானம், மருத்துவம், கவிதை, நகைச்சுவை, சிற்றிதழியல் என்று கலந்துகட்டி அடிக்கும் அவரைப் பார்க்கவே முடியாதது என் துரதிருஷ்டம்! எழுத்துத்துறையைப் பொறுத்தவரை நான் சுஜாதாவின் அல்லக்கை. அதில் எனக்கு சந்தேகமே இல்லை!



பள்ளிக்கூட நாட்களில் நான் யாருக்கும் அல்லக்கையாக இருந்ததில்லை. நானுண்டு, என் படிப்புண்டு என்றுதான் இருந்திருக்கிறேன். நண்பர்கள் என்றாலும் ஓரிரு க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்தான். அங்கே எனக்கு இந்த அல்லக்கை ப்ரச்சினை வந்ததில்லை!



பதிவுலகில் வந்தபிறகு நான் லக்கிக்கு ஜால்ரா அடிக்கறேன், லக்கியின் அல்லக்கை என்பது போன்ற மெயில்கள் எனக்கு வந்துள்ளது. அதில் எனக்கேதும் இழிவோ, கவலையோ இல்லை. (லக்கி ஒரு வேளை கவலைப்படலாம்!!!) நான் எழுதவருமுன்னே, நான் முன்னே எழுத வந்திருந்தால் எப்படியெல்லாம் எழுதியிருப்பேனோ அப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருந்த ஒருத்தரின் ப்ரதியாக என்னைப் பார்ப்பதில் என்ன வருத்தமிருக்கமுடியும்!




ஆனால், லக்கியின் அரசியல் ஆர்வம் எனக்கு ஆச்சர்யமளிக்கக் கூடியது. அவரது அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சிக்கவோ, விவாதம் புரியவோ செய்யும் அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் என்றாலே ‘வேண்டாமே’ என்று ஒதுங்கும் சராசரியாகத்தான் நான் இருக்கிறேன். ஓட்டுப் போடுவதும், அரசியல் நிகழ்வுகளை கவனிப்பதுமன்றி அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் லக்கியுடன் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்ற பெரியபுள்ளி ஒருவர் (இவருக்கு லக்கியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது) லக்கி பல கட்சிகளின் வரலாறு பற்றி பேசியதைக் கேட்டு ‘அவருக்கு அரசியலைப் பற்றி நிறைய வரலாறு தெரிஞ்சிருக்குங்க. நிச்சயம் அவர் ஒரு நாள் மந்திரியாகக் கூடிய வாய்ப்பிருக்கு’ என்றார்! (நோட் பண்ணிக்கங்கப்பா!)



அல்லக்கை பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை வேறு தளத்தில் பயணிப்பதால் இதோடயே நிறுத்திக்கறேன். இதன் தொடர்ச்சியை இன்றைக்கு மதியம் இரண்டாவது பதிவாக வேறொரு பிரபல பதிவர் போடுவார் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

34 comments:

bullet said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...

மீ த ஃபர்ஸ்ட்டு போட்டா நான் உங்கள் அல்லக்கை இல்லையே?

கார்க்கிபவா said...

//அடிக்கும் அவரைப் பார்க்கவே முடியாதது என் துரதிருஷ்டம்!//

இதாங்க ஒருத்தருக்கு துரதிர்ஷ்டம் இன்னொருத்தருக்கு அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க..( அய்யோ நான் சுஜாதாவ சொல்லலைங்க)

கார்க்கிபவா said...

//அல்லாத கை, மருவி அல்லக்கையாகியிருக்கக்கூடும்!//

சொல்லிட்டாருப்பா பாலமன் ஆப்பையா?

// எனக்கும் சாருவின் எழுத்து பிடிக்கும்.//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கிபவா said...

//போதாக்குறைக்கு அவருக்கு கடிதமெல்லாம் எழுதி, ஒருமுறை அவராகாவே எனது அலைபேசிக்கு அழைத்துப் பேசியதில் இருந்து அவரைப் பிடித்துப் போனது//

அட அவர பத்தி பெருமையா பேசினா என்ன வேணும்னா செய்வாருனு "ஜெயமோகன்" சொல்லி இருக்காருங்க..

//பதிவுலகில் வந்தபிறகு நான் லக்கிக்கு ஜால்ரா அடிக்கறேன், லக்கியின் அல்லக்கை என்பது போன்ற மெயில்கள் எனக்கு வந்துள்ளது. அதில் எனக்கேதும் இழிவோ, கவலையோ இல்லை//

நல்லா கேட்டுக்குங்க..

நான் ஜே.கே ஆரின் அல்லக்கை அல்ல நம்பிக்கை....

நான் டீ.ஆரின் அல்லக்கை அல்ல தும்பிக்கை

சத்யராஜின் அல்லக்கை அல்ல, வழுக்கை

rapp said...

me the sixth

rapp said...

லக்கியின் அபீஷியல் அல்லக்கையாக உங்களை நீங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள இந்த பொன்னான நேரத்தில், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் லொடுக்குசுந்தரிகள் மற்றும் விருச்சிககாந்த்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

rapp said...

//சமீபத்தில் லக்கியுடன் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்ற பெரியபுள்ளி ஒருவர் //
யாருங்க அவரு?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................உடனே எனக்கு லக்கிலுக் யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டேன்னு நெனச்சிக்காதீங்க, நான் கேக்குறது அவர் கூட ரெபர் பண்ணி இருக்கீங்களே ஒரு 'பெரும்புள்ளி' அவரைப் பத்தி கேக்குறேன்.

Ramesh said...

அல்லக்கை = பல்லக்கை அல்லையில் வைத்து தூக்குபவர்கள். ஒரு பல்லக்கு கவுட்டி என்றும் எழுதியுள்ளார். பல்லக்கு டிரைவர்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் படித்து பக்கம் என் சொல்லுங்கள். அல்லது கருப்பு வெளுப்பு சிவப்பு ஸ்கேன் காபிகள் இருந்தால் அதில் வரும்.

ஜால்ரா என்று காரணப்பெயர்.

கோவையில் நான் கேட்டது, குழந்தையை அல்லக்கையில் வச்சு ரொம்ப தூரம் நடக்கணும் சாமி. ரோடு நல்ல போட சொல்லுங்க அய்யா.

குசும்பன் said...

உள்ளேன் ஐயா!

VIKNESHWARAN ADAKKALAM said...

//
தமிழகத்தில் இந்த வார்த்தையைப் பரவலாக்கச் செய்த பெருமை நம்ம கவுண்டமணியையே சாரும் என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.//

இருக்குனு சொன்னா என்ன பண்ணுவிங்கலாம்...

Thamira said...

கார்க்கி :நான் ஜே.கே ஆரின் அல்லக்கை அல்ல நம்பிக்கை....
நான் டீ.ஆரின் அல்லக்கை அல்ல தும்பிக்கை
சத்யராஜின் அல்லக்கை அல்ல, வழுக்கை // ஜூப்பரு கார்க்கி, ரிப்பீட்டு போட்டுக்குறேன்.

புதுகை.அப்துல்லா said...

rapp said...
லக்கியின் அபீஷியல் அல்லக்கையாக உங்களை நீங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள இந்த பொன்னான நேரத்தில், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் லொடுக்குசுந்தரிகள் மற்றும் விருச்சிககாந்த்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

//

அதை நான் வழிமொழிகிறேன் :)

அப்துல்லா
பொருளாளர்
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

VIKNESHWARAN ADAKKALAM said...

//தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
//

எனக்கு எதாவது பதவி போட்டு கொடுங்க... தலைவரின் வெற்றிக்கு ஊன்றுகோலாக இருப்பேன்...

வெண்பூ said...

ஆஹா.. என்னா ஒரு ஆராய்ச்சி... யாராவது மொக்கை யூனிவர்சிட்டியில சொல்லி பரிசலுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்க சொல்லுங்கப்பா!!! :)))

நான் இந்த வார்த்தையோட மூலமா ரெண்டு விதமா நெனச்சிட்டு இருந்தேன்.
1. அள்ளைக்கை: எப்ப பார்த்தாலும் அவனுக்கு அள்ளையில (சைடுல) இருந்துகிட்டு, அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுறவன்
2. அன்னக்கை: சோறு போடுவான் அப்படின்றதுக்காக அவன் சொன்னதெல்லாம் செய்யுறவன்.

ஆனா உங்க ஆராய்ச்சி அருமை :)))

சென்ஷி said...

:)

rapp said...

சகலகலா சம்பந்தியும், வலையுலகின் திடீர் கேரெக்டர் ஆர்ட்டிஸ்டுமான வெண்பூ அவர்களே, கிருஷ்ணா நம்ம நண்பர் இல்லையா? அவருக்கு டாக்குடர் பட்டத்தை கொடுத்து இப்படி கேவலப்படுத்தனும்னு உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி? அப்புறம் நீங்க எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களோட படத்துக்கு பாலாபிஷேகம் பண்ற மாதிரி தண்டனை கொடுத்திடப் போறார்:):):)

rapp said...

அப்துல்லா அண்ணே, விக்கி நம்ம மன்றத்தில் ஒரு பதவியைக் கேக்குறார் பாருங்க. வழிப்போக்கன் இப்போ களப்பணி செய்யாம இருக்கறதால, அவர் திரும்ப வர வரைக்கும் விக்கி அவர்களை தற்காலிக கொ.ப.செ ஆக்கிடுவோமா? அண்ணே நீங்களே துணைத்தலைவர் ச்சின்னப்பையன் அவர்களை ஆலோசிச்சு சொல்லுங்க:):):)

விஜய் ஆனந்த் said...

:-))))...

ஆராய்ச்சிப்பதிவின் பின்னூட்டங்களிலும், ஆராய்ச்சிகள் கரைபுரண்டு ஓடுகின்றன...

வெண்பூ said...

//சகலகலா சம்பந்தியும், வலையுலகின் திடீர் கேரெக்டர் ஆர்ட்டிஸ்டுமான வெண்பூ அவர்களே, கிருஷ்ணா நம்ம நண்பர் இல்லையா? அவருக்கு டாக்குடர் பட்டத்தை கொடுத்து இப்படி கேவலப்படுத்தனும்னு உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி?//

என்னா இப்படி சொல்லீட்டீங்க? இந்த பதிவை படிச்சப்புறமும் கொலவெறி யாருக்குன்னு உங்களுக்கு புரியல. உங்களயெல்லாம் கட்டி போட்டு உங்க கவுஜயவே படிச்சி காட்டணும், அப்பதான் சரி வருவீங்க? :)))))

லக்கிலுக் said...

அல்லக்கை புராணம் அபாரம்! :-)

நான் யார் யாருக்கு அல்லக்கை என்று எழுதினால் அது பகவத் கீதை ரேஞ்சுக்கு வரும் :-(

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பரிசல்காரன் said...

டாக்டர் பட்டமா? எனக்கா!

கிகிகி...

பரிசல்காரன் said...

அன்புள்ள அனானிக்கு...

உங்கள் கருத்துக்கு நன்றி! நீங்கள் சொல்வதில் உள்ள உண்மையை ஏற்கிறேன். திருத்திக் கொள்கிறேன்.

நான் என்னைப்பற்றித்தான் எழுதியிருகிறேன் என்பது தலைப்பிலேயே தெரிகிறதே.. பிறகும் வந்து ஏமாற வேண்டுமா சாரே?

இருந்தாலும் உங்களை வருத்தப்பட வைத்ததில் எனக்கும் வருத்தமே!

கருத்துக்கு நன்றியோ நன்றி!

நையாண்டி நைனா said...

அண்ணே... உங்களுக்கான பதில்இங்கேஇருக்கு....

முரளிகண்ணன் said...

என்ன நடக்குது இங்க?

Kumky said...

கார்கிய வுசுப்பி வுனும்னே இத்த போட்டீங்களா தல? அது சரி..இந்த ரித்தீஷ்..ரித்தீஷ் .. அப்படிங்கறாய்ங்களே அவரு யாரு? அவருக்கும் உங்களுக்கும் யன்னா சம்மந்தம்?

Thamira said...

வெண்பூ :உங்களயெல்லாம் கட்டி போட்டு உங்க கவுஜயவே படிச்சி காட்டணும், அப்பதான் சரி வருவீங்க?// ROTFL.. kalakkal veNpU.!

புதுகை.அப்துல்லா said...

அவர் திரும்ப வர வரைக்கும் விக்கி அவர்களை தற்காலிக கொ.ப.செ ஆக்கிடுவோமா? அண்ணே நீங்களே துணைத்தலைவர் ச்சின்னப்பையன் அவர்களை ஆலோசிச்சு சொல்லுங்க:):):)
//

அண்ணன் ச்சின்னப்பையன் சரின்னுட்டாரு :))

வால்பையன் said...

//அல்லக்கை என்ற வார்த்தை எப்படி வந்திருக்கக் கூடும்//

அரசியல்வாதிகளின் கையை பார்த்து கொண்டே திரியும் தொண்டர்களை பார்த்து வந்திருக்கலாம்

வால்பையன் said...

//கோவைக்காரர்களைவிட, சென்னைக்காரர்கள் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.//

ஈரோட்டிலும் இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது.

வால்பையன் said...

//குறிப்பிட்ட ஒருவரின் அல்லக்கை என்றால் அவரை ஆதரிப்பவர், அவர் இட்ட பணியை செய்பவர் எனலாம். //

ஆதரிப்பவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பணியை முடிக்க வேண்டும் என்று அல்லகைகளுக்கு கட்டாயம் இல்லை.
பணியினை ஏதாவது ஏமாளிகள் தலையில் கட்டுவதற்கே அல்லக்கைகள்

வால்பையன் said...

//நேற்று லக்கிலுக் ‘நான் சாரு நிவேதிதாவின் அல்லக்கை’ என்றதுதான் இந்தப் பதிவுக்கான பொறி என்பது பதிவுக் குழந்தைக்குக் கூடத் தெரியும்.//

இத்து அந்த அரசியலா
நான் வேற சீரியஸா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேனே

பழமைபேசி said...

முன்காண் எழில் மடம்! அல்லையிற்காண்
தர்மம் பொழில் மடம்!!
என்று வள்ளலாரின் ஆசிரமத்தைப் பற்றிய தமிழ்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனவே அல்லையில் என்பது பக்கவாட்டில் என்பது தெளிவாகிறது. மேலும், எனது ஈழத்து நண்பர்கள் இச்சொல்லைப் பாவிக்கக் கேட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டிலே, இச்சொல் கொங்கு மண்டலத்தில் வழமையாகப் பாவிப்பார்கள். அல்லக்கை என்ற சொல் பிரபலமடையக் காரணம் அண்ணன் சத்தியராசு அவர்கள் என்பது எம் தாழ்மையான கருத்து.