Thursday, September 4, 2008

மின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு!


காட்சி 1:

கதாபாத்திரம் : ஒரு விவசாயி

“நான் நாலு ஏக்கர் நிலம் வெச்சு விவசாயம் பண்ணிகிட்டிருக்கேன். கரண்ட் வர்றப்ப பம்பு செட்டு போட்டு தண்ணி விடறேன். ஆனா அடிக்கடி போகற கரண்ட்னால நாலு ஏக்கருக்கும் முழுசா தண்ணி காட்ட முடியல. ஒவ்வொரு தடவை கரண்ட் வர்றப்பவும் ஒரு ஏக்கர் நனையுது. மறுபடி கரண்ட் கட்டாகுது. அப்புறம் கரண்ட் வந்து போடறப்ப அதே ஒரு ஏக்கர்கிட்ட தண்ணி போயி, தொடர்ந்து போகறதுக்குள்ள மறுபடி போயிடுது. என்ன பண்றதுன்னே தெரியல.”

------------------

காட்சி 2:

கதாபாத்திரங்கள்: ஒரு பொதுஜனம், ஒரு மின்சார வாரிய (இப்ப மின்சாரமே வாரிக்கிட்டுதான் இருக்கு!) லைன்மேன்

“என்ன ஈ.பி.க்காரரே... ஆறு மணிநேரம் கட்டாய மின்வெட்டுன்னு அறிவிச்சுட்டாங்களே. இனி இதுதான் கதியா?”


“ஆறு மணிநேரம்ங்கறது அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ரெண்டு மணிநேரம்ன்னப்பவே அஞ்சு மணிநேரம் கட் பண்ணினோம். இப்போ ஆறு மணி நேரம்னிருக்காங்க..”


“அப்ப பத்து மணிநேரம் கட் பண்ணுவீங்களா? இன்னைக்கு பேப்பர்ல, அமைச்சர் ஒருத்தர் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு இந்தப் பற்றாக் குறை தொடரும்ன்னு சொல்லியிருக்காரே...”


“அப்படீன்னா இன்னும் ஆறேழு வருஷத்துக்கு இதுதான் கதி!”


**************


காட்சி 3:

கதாபாத்திரம்: ஒரு படித்த இளைஞன்


“அதொண்ணுமில்ல சார். சென்னையில இருக்கற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒண்ணு போட்டிருக்காங்க. அதாவது இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவங்க நிறுவனத்துக்கு ஒரு நொடி கூடத் தடையில்லா மின்சாரம் வழங்கறதா ஒப்புதல் கொடுத்திருக்காங்க. அதான் இப்படி நம்மளைப் போட்டு வாட்டறாங்க. அந்த நிறுவனம் ஒரு மணிநேரத்துக்கு செலவழிக்கற மின்சாரத்தை வெச்சு ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் முழுதும் பயன்படுத்தலாமாம்.”


****************


காட்சி: 4

க.பா: ஒரு நடுத்தர வயது அதிகாரி


“சார்.. மின்சாரம் எடுக்கற தனியார் காற்றாலைகளுக்கு ஒரு வருஷம் ஒன்பது மாசமா குடுக்க வேண்டிய பில் அமௌண்டை இன்னும் கவர்மெண்ட் குடுக்கல. அவங்க எப்படி தொடர்ந்து ஓட்ட முடியும்? நிறைய பேர் இழுத்து மூடீட்டு போய்ட்டாங்க. இப்ப நம்ம படற கஷ்டங்களுக்கு அதுவும் ஒரு காரணம். அதுவுமில்லாம அரசு விழா, பொது விழாக்கள்ல பயன்படற மின்சாரத்துக்கு அளவே இல்லை!”


காட்சி: 5

கா.பா: இரண்டு பள்ளி மாணவர்கள்


“டேய்.. என்னடா.. நைட்டு அடிக்கடி கரண்ட் கட்டாகி படிக்கவே முடியலைடா.. கொசுத்தொல்லையால தூங்கவும் முடியல. அதுனால காலைல சரியா எழுந்திருக்கவும் முடியல. பரீட்சையை நினைச்சாலே பயமா இருக்குடா”


“கலைஞருக்கு ஒரு பெட்டிஷன் போடுவோமா? ஒரு ரூபாய்க்கு அரிசியெல்லாம் தர்றீங்க.. இந்தமாதிரி மின்சாரம் இல்லாத கஷ்டத்துலயும் படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு 50 மார்க் வாங்கினா, 50 மார்க் இலவசம்ன்னு அறிவிக்கச் சொல்லிடலாமா?”


**************


காட்சி: 6

க.பா: இரண்டு குடும்பஸ்தர்கள்


“காலைல ஆறு டூ ஒன்பது போகற கரண்டால ஒரே தொல்லைப்பா. மிக்ஸில அரைக்க முடியல. ஹீட்டர் போட முடியலன்னு ஆஃபீஸ் போகறதுக்குள்ள அவ டென்ஷனாகி, நம்மளையும் டென்ஷனாக்கிவிட்டுப் போறா. வேலையே ஓடமாட்டீங்குது”


“இங்கயும் அதே கதைதான். கேஸ் சிலிண்டர் ப்ராப்ளம்ன்னு மைக்ரோவேவ் அவன் வாங்கினேன். இப்போ அதுக்கு கரண்ட் ப்ராப்ளம். சம்சாரத்தை சமாளிச்சாலும், மின்சாரத்தை சமாளிக்க முடியலைப்பா”

************


காட்சி: 7

க.பா: இரு நண்பர்கள்

“நேத்து நாயகன் பார்த்தேண்டா. ஜே.கே.ரித்தீஷ் கண்ணுல பொறி பறக்குதுடா. என்னா ஆக்‌ஷன்ங்கற?”


“அப்ப அந்தப் பொறியிலேர்ந்து மின்சாரம் எடுத்து கரண்ட் பிரச்சினையை தீர்க்கவேண்டியதுதானே”


“ஏண்டா.. முடியாதுன்னு நெனைக்கறியா? பண்ணிக் காட்டுவோம்டா!”


“அவரு ரசிகன்தானே நீ. அதான் அவரு மாதிரியே காமெடியா பேசற!”


******************


இதன் தொடர் பதிவை இன்னும் இரண்டு மணிநேரத்தில் படிக்கத் தவறாதீர்கள்
!

30 comments:

ஆயில்யன் said...

ஹய்யய்யோ நாந்தான் பர்ஸ்டா :))

ஆயில்யன் said...

//புரிந்துணர்வு ஒப்பந்தம்///


இதுக்கு என்னப்பா அர்த்தம்????? :))))))))

ஆயில்யன் said...

//இதன் தொடர் பதிவை இன்னும் இரண்டு மணிநேரத்தில் படிக்கத் தவறாதீர்கள்!//


இரண்டு மணி நேரம் ????


ஓ...! கரண்ட் கட்?

:)))

ஆயில்யன் said...

//நேத்து நாயகன் பார்த்தேண்டா. ஜே.கே.ரித்தீஷ் கண்ணுல பொறி பறக்குதுடா. என்னா ஆக்‌ஷன்ங்கற?”//

பாவம்ய்யா அவுரு!
போற போக்கை பார்த்தா அந்தாளை அக்கு அக்கா பிரிச்சுப்போட்டு எல்லா பவரையும் எடுத்துடுவீங்க போல!!!

ஆயில்யன் said...

ஒ.கே ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கிறேன் :))

பரிசல்காரன் said...

தமிழ்மணத்துல சேர்த்த அந்த நல்லுள்ளத்துக்கு நன்றி! (ஜி.கே)

நீங்கதான் ஃபர்ஸ்ட் ஆயில்யன்!

புரிந்துணர்வு ஒப்பந்தம்ன்னா, தமிழ்ல மியூச்சுவல் அக்ரிமெண்ட்-ன்னு சொல்லுவாங்க!

விஜய் ஆனந்த் said...

// ஆயில்யன் said...
//இதன் தொடர் பதிவை இன்னும் இரண்டு மணிநேரத்தில் படிக்கத் தவறாதீர்கள்!//


இரண்டு மணி நேரம் ????


ஓ...! கரண்ட் கட்?

:))) //

கேள்வி ரிப்பீட்டேய்...

விஜய் ஆனந்த் said...

\\ ஆயில்யன் said...
ஒ.கே ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கிறேன் :)) //

நானும்!!!

பரிசல்காரன் said...

//ஓ...! கரண்ட் கட்?//

கரண்ட் கட்டெல்லாம் இல்ல.

பதிவு ரொம்பப் பெரிசா தெரிஞ்சதால ரெண்டா போட்டுட்டேன்.


அதுமில்லாம இதுக்கு எந்தமாதிரி ரியாக்‌ஷன் வருதுன்னு தெரிஞ்சுக்க 2 மணி நேரம் இடைவேளை!

Anonymous said...

பரிசல்,
நல்லா இருக்கு.

ஒரு சிறு தொழிலதிபர் தரப்பையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.

புரிந்தணர்வு ஒப்பந்தம் - மெமொரண்டம் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங்

george said...

//புரிந்துணர்வு ஒப்பந்தம்ன்னா, தமிழ்ல மியூச்சுவல் அக்ரிமெண்ட்-ன்னு சொல்லுவாங்க!//

ஆங் ..இப்படி தெளிவா சொல்லுங்க ........

முரளிகண்ணன் said...

மழை எங்க பேஞ்சாலும் தண்ணி கடலுக்குத்தான் வரும்கிற மாதிரி எல்லா பதிவுலயும் ரித்தீஷா?

சரவணகுமரன் said...

சினிமா எபெக்ட பதிவுல குடுக்கிறீங்களே... :-)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

கடந்த இரண்டு நாள்களாக நீங்கள் போடும் பதிவினை படித்த பிறகு ஒன்றே ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன் ,
இனிமேல் உங்களுக்கு லக்கி இடமிருந்து பின்னூட்டம் வருவது சந்தேகம் தான் .!!!

வெண்பூ said...

நல்லா இருக்கு பரிசல். ஒன்றே ஒன்றைத் தவிர..

//
சென்னையில இருக்கற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒண்ணு போட்டிருக்காங்க. அதாவது இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவங்க நிறுவனத்துக்கு ஒரு நொடி கூடத் தடையில்லா மின்சாரம் வழங்கறதா ஒப்புதல் கொடுத்திருக்காங்க
//

ஏன் எல்லாரும் ஐ.டி. நிறுவனங்களையே குறி வைக்கிறீர்களோ தெரியவில்லை. ஐ.டி. நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பது அந்த துறையில் இருக்கும் எனக்கு தெரியும். ஒரு ஐ.டி. நிறுவனத்திற்கு அனுமதி தரும்முன் அதற்கு தருவதற்கான மின்சாரம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வது அரசின் கடமை. அதை அவர்கள் செய்யத் தவறியதை நீங்கள் குறிப்பிடுவதாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

Mahesh said...

கலக்குங்கண்ணே.... ஆற்காட்டார் படிப்பாரா?

@ வெண்பூ : ஐ.டி ய விட நம்ம விவசாயத்துக்கும், சிறு தொழில்களுக்கும் மின்சாரம் ரொம்ப முக்கியம். ஐ.டி, கம்பெனியில ஏ.சி.க்கு செலவாகிற மின்சாரத்துல பல ஏக்கர் நிலத்துக்கு தண்ணி பாச்சலாம். நானும் ஐ.டி. தான் ஹி ஹி ....

Bleachingpowder said...

போன மாசம் மதுரைல ஒரு கல்யாணத்திற்கு போயிட்டு திரும்பி வரும் போது நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பதினைந்து பேர் ஜூஸ் குடிக்கலாம்னு பஸ் ஸ்டாண்ட் பக்கத்திருக்கும் ஒரு சிறிய கடைக்கு சென்றோம்.

எல்லாருக்கும் சாத்துகுடி குடுப்பானு சொல்ல ஆனா பாவம் அங்க க்ரண்ட் இல்ல.பாவம் அந்த கடைக்காரருக்கு முஞ்சியே இல்ல. சார் கரண்ட் இல்ல கூல் டிர்ங்ஸ் தான் இருக்கு ஆனா அதுலையிம் கூலிங் இல்ல சார்னு பாவமா சொன்னார்.

எல்லாரும் வேண்டாம்னு திரும்பி வந்துட்டோம். நான் மட்டும் ஒரு தண்ணீர் பாட்டில் அவருக்காக வாங்கினேன். நான் திரும்பியவுடன் அவன் கலைஞர திட்டுனான் பாருங்க, சூடு சொரன உள்ளவன் எவனும் அத கேட்டா வலது கைல சாப்பிட மாட்டான்

மங்களூர் சிவா said...

//நேத்து நாயகன் பார்த்தேண்டா. ஜே.கே.ரித்தீஷ் கண்ணுல பொறி பறக்குதுடா. என்னா ஆக்‌ஷன்ங்கற?”//

ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா :(

மங்களூர் சிவா said...

ரொம்ப நல்லா இருக்கு பதிவு.

narsim said...

//“கலைஞருக்கு ஒரு பெட்டிஷன் போடுவோமா? ஒரு ரூபாய்க்கு அரிசியெல்லாம் தர்றீங்க.. இந்தமாதிரி மின்சாரம் இல்லாத கஷ்டத்துலயும் படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு 50 மார்க் வாங்கினா, 50 மார்க் இலவசம்ன்னு அறிவிக்கச் சொல்லிடலாமா?”//

சிரிப்பாக இருந்தாலும் சிறப்பாக எழுதுயிருக்கீங்க தல..

யோசிக்கப்பட வேண்டிய வரிகள்

நர்சிம்

pudugaithendral said...

ரொம்ப நல்லா இருக்கு பதிவு.

மறுக்கா கூவிக்கிறேன்.

வால்பையன் said...

தமாஷாவும் இருக்கு ,சீரியஷாவும் இருக்கு
இத்தனை விஷயங்களை எப்படி கலக்ட் பண்றிங்க

Nilofer Anbarasu said...

//இந்தமாதிரி மின்சாரம் இல்லாத கஷ்டத்துலயும் படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு 50 மார்க் வாங்கினா, 50 மார்க் இலவசம்ன்னு அறிவிக்கச் சொல்லிடலாமா?”//
ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிச்சு கேட்ட கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு.

Bleachingpowder said...

//இந்தமாதிரி மின்சாரம் இல்லாத கஷ்டத்துலயும் படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு 50 மார்க் வாங்கினா, 50 மார்க் இலவசம்ன்னு அறிவிக்கச் சொல்லிடலாமா//

அவங்களுக்கும் ஓட்டு இருந்தா கண்டிப்பா அறிவிச்சுடுவாங்க

காஞ்சனை said...

//அதுவுமில்லாம அரசு விழா, பொது விழாக்கள்ல பயன்படற மின்சாரத்துக்கு அளவே இல்லை//

இது ரொம்ப சரி. கேட்பார் யார்?

CA Venkatesh Krishnan said...

//புரிந்துணர்வு ஒப்பந்தம்///


இதுக்கு என்னப்பா அர்த்தம்????? :))))))))//

புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால்

மெமோரண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங்க் என்று பொருள்.

வெங்கடேஷ்
(இன்னொரு ஆயில்யன்)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\
//புரிந்துணர்வு ஒப்பந்தம்///


இதுக்கு என்னப்பா அர்த்தம்????? :))))))))
\\

அதானே பரிசல் இந்த சொலலை எதுக்கு இங்க போட்டிங்க:)

ஆயிலயன் அது நம்ம ஊருல கேட்க வேண்டிய கேள்வி...:)

தமிழன்-கறுப்பி... said...

பரிசல் எப்படி இப்படில்லாம்...

தமிழன்-கறுப்பி... said...

கட்டாய மின் வெட்டு உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திடுச்சுன்னு நினைக்கிறேன்...:)

Kannan.S said...

In our companies also, frequent power cuts. It is not as you said for IT companies.

As IT companies are buying more diesel for generators, Diesel shortage is in action..! :)