Saturday, July 12, 2008

சென்ஷி இனி என் நண்பர் அல்ல!

நானொரு கேள்வி நண்பர் சென்ஷியைக் கேட்டதும், அவர் அதற்கு பதில் சொல்லி என்னை மூக்குடைத்ததும் நாடறிந்த விஷயம்!


சென்ஷியின் அந்தப் பதிவுக்கு நான் எப்போதும் போலல்லாமல் செம மூடில் ஒரு – ஸாரி – பல பின்னூட்டம் போட்டிருந்தேன். அது எத்தனை பேர் பார்வையில் பட்டதோ என்று தெரியாததாலும், அவற்றைத் திரட்டி ஒரு பதிவாகப் போடவேண்டுமென்று நானும் சென்ஷியும் நினைத்ததாலும், அவரு போடறதுக்கு முந்தி நான் போடணும்னு நினைப்பதாலும், இன்னைக்கு மேட்டர் எதுவும் கிடைக்காததாலும்..... (சரி... சரி... முடிஞ்சுடுச்சு!) அந்தப் பின்னுட்டங்களின் தொகுப்பே இங்கு பதிவாக..


என் கேள்விக்கு அவர் பதிலை படிச்சீங்கதானே?

இப்போ என் பின்னூட்டங்கள்:-


//ஐயா..அம்மா.. எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க.. நம்ம சென்ஷி இப்படி ஆனதுக்கு நாந்தான் காரணம்.. இதுக்கு என்ன தண்டனை குடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்..
எந்த எடத்துல சென்ஷி இப்படி ஆயிட்டாருன்னு பாப்போம்.//


(கதாபாத்திரங்கள்:- ஒரு புது ப்ராக்டீஸ் பண்ற டாக்டர், நர்ஸ் & ஒரு சீஃப் டாக்டர்.)


//எனது உறவுச்சங்கிலியின் மிகமுக்கியமான வளையமாக நான் நினைக்கும் //

இப்ப நல்லா இருக்காரு.


//காரணம், கேள்வி என்ற குறிப்புகளின் வழி தொலைதூர எல்லைகளை கடக்க வேண்டிய பதில்கள் நமக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கின்றது//


அருமையாச் சொல்லிருக்கார்.. இங்க அவர் அறிவுபூர்வமா யோசிச்சுட்டு இருக்கார்..


//தெளிவான நீரில் நனையும் செருப்பில்லாத காலை காட்டுவதில் இருக்கக்கூடிய மகிழ்ச்சி //


என்ன ஒரு உவமை! இந்த ஒரு வரிக்காகவே இவரை குணப்படுத்த ஆகற செலவை நான் ஏத்துக்கறேன்!

Senshe.. From my heart I'm telling you, these lines broken me! Great!! (ஹூம்.. இத படிக்கற மனநிலைல அவரு இல்லையே!
!)


//இனி பரிசல்காரனுக்கான பதில் விரிவாக 50 வரிகளில்...

மனித நாகரிகத்தின் பரிணாமம் பேச்சிற்கு முன்பிருந்தே குறியீடுகளாக //


இங்கதான் லைட்டா அவருக்கு ஆரம்பிக்குது..


//எளிமையாகக்கூறும் முயற்சியில் ஈடுபட்டதில் கிடைத்த வார்த்தை "பாத்திரத்தில் நிரம்பிய நீராக நீர் இருக்கிறீர்".//


இப்போ மறுபடி நல்லாயிடறார்..


//குறியீட்டு வடிவங்கள் குறிப்பிடத்தகுந்த எழுத்துக்களை சிந்தனைகளின் வடிகாலாக சிதறடிக்கத்தொடங்கிய சமயத்திலும் எதிர்மாறான கருத்துக்கள் //


ஐயையோ.. ரிப்போர்ட் தாறுமாறா ஒடுது.. நர்ஸ் அவரைப் புடிச்சு பெட்ல படுக்க வைங்க..


//எழுதியவனின் மேலுள்ள குற்றத்தை எழுத்துக்களின் மேல் சுமத்தி கிழித்து எரிக்கின்ற புதிய சமுதாயம் வளர்ச்சியில் முன்னிலை கொண்டு அதிர்வுகளின் படியில் ஏறி அதிகாரத்தை அடைகிறது.//


இங்கதான் எனக்கு நம்பிக்கை போகுது.. ப்ச்..நம்ம கைல ஒண்ணுமில்ல..


//கரையோரம் கட்டப்பட்ட ஓட்டைப்படகில் சவாரி செய்யும் நிலையில் தப்பிக்க முயற்சிக்கிறான்//


சொல்லீருந்தா நான் கொண்டுபோய் சேர்த்திருப்பேன்ல.. நம்மளுது நல்லாத்தான் இருக்கு


// நிச்சயமற்ற சூழலில் கிடைக்கின்ற வார்த்தைகளின் வரிசைகள் எதேச்சதிகாரமாக தன்னை நிலைநிறுத்த அல்லது தனது படிம சூழலைக் கொண்டாட வைக்க கவர்ச்சியை அள்ளிப்பூசிக் //


நர்ஸ்.. சீஃப் டாக்டரைக் கூப்பிடுங்க..


//எழுத்துக்கள் சாக்கடையில் கிடந்தாலும் எழுத்தாளன் சந்தனத்தை ரசிக்கத்தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் //

//எங்களிடம் உள்ளது கழுதைதான் என்றாலும் அதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற நம்பிக்கை கிடைப்பதால்//


டாக்டர்..என்னமோ ஒரு பெரிய சோகம் இவருக்குள்ள இரூக்கு.. இருங்க என்னான்னு பாக்கலாம்


//நான் சமைத்ததை நானே சாப்பிட்டும் வாழ வேண்டிய இரு வேறு கொடுமைகள் இல்லாத காரணத்தாலும் //

//என்னுடைய காதலிகளின் வரிசைப்பட்டியலை மறந்து//


டாக்டர்.. இதுதான் காரணம் பார்த்தீங்களா? என்ன பிராக்டீஸ் பண்றீங்க நீங்க?


// மொக்கை கேள்வியை வலையுலக பெரிய கோணிஊசி திரு. லக்கிலுக்கிடம் //


நர்ஸ்.. சீக்கிரமா ஹாஸ்பிட்டலை விட்டு எல்லாரும் வெளில ஓடுங்க.. யாரைக் கூப்ப்ட்டுருக்காருன்னு பாத்தீங்கள்ல?


”ஐய்ய்ய் ஐஇய்ய்ய்.. ஒய்ய்ய்ய்”

நர்ஸ்; சார்... சார்.. சீஃப் டாக்டர் சட்டையை கழட்டீட்டு ஓடறாரு.. புடிங்க..இந்தளவு அவரைக் கலாய்த்ததோடு விடவில்லை நான்.. இவ்வளவுக்குப் பிறகும்...


// எப்புவுமே ஒரு பின்னூட்டம் வந்தாலே.. பதில் சொல்லுவாரு சென்ஷி.. இன்னும் ஆளைக் காணோம் பாத்தீங்களா//


என்று கேட்டிருந்தேன்...


இப்படியெல்லாம் ஒருத்தர் என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டிருந்தால் நான் தையாதக்கா என்று குதித்திருப்பேனோ என்னவோ... ஆனால் சென்ஷி கொஞ்சமும் கோபப்படாமல்..


// என் பதிவ விட உங்க கமெண்டுதான் இன்னிக்கு ஹிட்டு.. கலாய்ச்சி எடுத்துருக்கீங்க. அதுவும் கரெக்டா எந்த எடத்துல கவுக்கணுமோ அங்கனயே கவுத்து மேல பெஞ்சு போட்டு ஏறி நின்னு அடிக்கறீங்க பாருங்க ஒரு டான்ஸ்.. எனக்கு அந்து போச்சு//


என்று நகைச்சுவையாகவும், என்னைப் பாராட்டியும் பின்னூட்டமிட்டிருக்கிறார்!!


இப்படிப்பட்ட சென்ஷியை என் நண்பர் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை!


சென்ஷி....

இன்றுமுதல் நீ என்..

நண்பன்!

31 comments:

rapp said...

வாழ்க உங்கள் நட்பு

பரிசல்காரன் said...

இன்னைக்கும் நீங்கதான் மொத ஆப்பா?

மிக்க நன்றீ வெட்டியாபீசர்!

வெண்பூ said...

என்னடா பதிவு போடுறதுன்னு எவ்வளவோ யோசிச்சும் ஒண்ணும் தோணாம சும்மா (இது தமிழ் சும்மா, ஹிந்தி இல்ல) நாமெல்லாம் இருக்கறப்ப, தான் போட்ட பின்னூட்டத்தை எல்லாம் எடுத்து ஒரு பதிவு. ஆஹா..ஆஹா..அண்ணன் பரிசலுக்கு வலையுலக சிந்தனை சிற்பி என்ற விருதை தமிழ்மணம் வாசகர்கள் சார்பாக கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..நற.நற.நற.நற.நற.நற.நற.நற.

☼ வெயிலான் said...

பரிசல் இனி மொக்கை பதிவர் அல்ல.
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
மாபெரும் மொக்கை பதிவன்......

பரிசல்காரன் said...

எல்லாம் ஒரு செட்டப்புதான் வெண்பூ!

பரிசல்காரன் said...

@ வெயிலான்

நாளைக்குப் போய் எல்லாருகிட்ட இருந்தும் வாங்கிக் கட்டிக்கறதுன்னு முடிவு பண்ணீட்டேன் - ல!

Vijay said...

நீங்க அடிச்சி ஆடுங்க பரிசில், நமக்கு கவுண்ட்தான் முக்கியம். :P

வெண்பூ, & வெயிலான் பதிவர் வாழ்க்கைல இது எல்லாம் சகஜம்பா.

ஆயில்யன் said...

:(((

:))))

:))))

:))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு அடிச்சிக்கிட்டு அழணும்போல தோணுது!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைச்சேன் இப்படித்தான் இருக்கும்ன்னு .. நடத்துங்க.. நாங்கல்லாம் எதுக்கிருக்கோம்.. என்ன எழுதினாலும் பின்னூட்டம் போடுவோம்..

பரிசல்காரன் said...

@ விஜய்

//நீங்க அடிச்சி ஆடுங்க பரிசில், நமக்கு கவுண்ட்தான் முக்கியம்.//

நானும் காமக்கதை, சட்டிக் கதை- ன்னு எழுதலாம்னு இருந்தேன்.. அங்க பெரிய தலைகளுக்கே... அந்தக் கதின்னா... நம்மளையெல்லாம் ஆட்டோ வச்சுத் தூக்கிருவாங்க..

@ ஆயில்யன்

//அடிச்சிக்கிட்டு அழணும்போல தோணுது!//

என்னை அடிச்சுட்டு, அப்புறமா அழுங்க!

@ கயல்விழி முத்துலெட்சுமி

//நாங்கல்லாம் எதுக்கிருக்கோம்.. என்ன எழுதினாலும் பின்னூட்டம் போடுவோம்..//

நிஜமா உங்களைஎல்லாம் நம்பித்தான் நானிருக்கேன்!

தமிழன்-கறுப்பி... said...

நாஸ் டாக்டர் என்று பலருக்கு இவ்வளவு நடந்தும் சின்ன எபெக்ட்,
ரியாக்சன் கூட இல்லாம போன பரிசல்காரன்...

!!!!!!!!!!!!!!!!!!!!!!

????????????????????????

தமிழன்-கறுப்பி... said...

இந்த பின்னுட்டங்களை போட்ட பரிரசல் காரன் நிலமை எந்தளவில் இருக்கிறது...????;)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி அண்ணே உங்களை கவுக்கிறதுக்கான சதி எங்கேயோ உருவாகிட்டிருக்கு...! ;)

தமிழன்-கறுப்பி... said...

/இப்படியெல்லாம் ஒருத்தர் என் பதிவுல வந்து பின்னூட்டம் போட்டிருந்தால் நான் தையாதக்கா என்று குதித்திருப்பேனோ என்னவோ... ஆனால் சென்ஷி கொஞ்சமும் கோபப்படாமல்../


/என்று நகைச்சுவையாகவும், என்னைப் பாராட்டியும் பின்னூட்டமிட்டிருக்கிறார்!!/

அதுதான் பின் நவீனத்துவத்தின் சிறப்பம்சமே. -உரையாடல்களுக்கான குறிக்கீடுகளற்ற செவிசாய்த்தல்-
அந்த வகையில் எழுத்தை நோக்கிய சென்ஷியின் நகர்வு சில படிகளை கடந்திருக்கிறது...

மாப்பி...(சென்ஷி அண்ணன்) சரியா சொல்லிட்டனா...:))

தமிழன்-கறுப்பி... said...

///
இப்படிப்பட்ட சென்ஷியை என் நண்பர் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை!

சென்ஷி....

இன்றுமுதல் நீ என்..

நண்பன்!///


இதுதான் வலைப்பதிவுகளின் சிறப்பே முகம்தெரியாத பல நட்புகளை மனதுக்கு நெருக்கமாக்கியிருப்பதும், வலுவான நல்லுறவுகளை தமிழுக்கு ஏற்படுத்திதந்திருப்பதும் ...

நீங்க மொக்கைன்னு போட்டாலும் நாங்க மெஸேஜா மாத்திடுவம்ல...

தமிழன்-கறுப்பி... said...

நல்லா போடுறாய்ங்கய்யா பதிவு:)

தமிழன்-கறுப்பி... said...

வாழ்க உங்கள் நட்பு...!
நல்லா இருங்கப்பு...!

சென்ஷி said...

//இப்படிப்பட்ட சென்ஷியை என் நண்பர் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை!


சென்ஷி....

இன்றுமுதல் நீ என்..

நண்பன்!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... தலைப்ப பார்த்துட்டு கொஞ்சம் பயந்துதான் உள்ள வந்தேன்.. நெகிழ வச்சுட்டீங்க..

சென்ஷி said...

ஒரு உண்மைய சொல்லட்டுமா பரிசல், அந்த பதிவு போட்ட அன்னிக்கு ஒரு சில நிகழ்வுகளால் மனம் நொந்து போயிருந்தேன். ஒரு விபத்தை நேரில் கண்டு, அதிலிருந்து தப்பித்து அமர்ந்திருந்தபோதுதான் உங்களின் பின்னூட்டங்களை படிக்க நேர்ந்தது. பொதுவாய் இரவு நேரங்களை தவிர மற்ற நேரங்களில் இணைய இணைப்பு சரிவர கிடைக்காத சூழலில் அந்த காலை வேளையில் உங்கள் பின்னூட்டம் மன ஆறுதலாக அமைந்து மனதை மாற்றி வைத்தது. வெகு நேரத்திற்கு உங்கள் கமெண்டுகளை பார்த்து தனியாக சிரித்துக்கொண்டு இருந்தேன்.

பின்னூட்டங்களில் விளையாடுவது எனக்கும் பிடித்தமான ஒன்று. முன்பெல்லாம் பின்னூட்டங்களை மட்டும் குறி வைத்து ஆடியவர்களில் நானும் ஒருவன். :). அவ்வகை பின்னூட்டங்களினால் எனக்கு கிடைத்த முகம் தெரியாத நண்பர்கள் மிக அதிகம். யாரும் என்னை எப்படி கோபித்ததில்லை என்பது இன்னும் எனக்கு தெரியாமல் இருக்கிறது.

என்னை உங்கள் நண்பன் பட்டியலில் இணைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

சென்ஷி said...

@ தமிழன்..

//அதுதான் பின் நவீனத்துவத்தின் சிறப்பம்சமே. -உரையாடல்களுக்கான குறிக்கீடுகளற்ற செவிசாய்த்தல்-
அந்த வகையில் எழுத்தை நோக்கிய சென்ஷியின் நகர்வு சில படிகளை கடந்திருக்கிறது...

மாப்பி...(சென்ஷி அண்ணன்) சரியா சொல்லிட்டனா...:))//

நம்ம பதிவு படிச்ச உடனே நீங்களும் கரெக்டா ரூட்டு புடிச்சுட்டீங்க.. :))

தமிழன் சொல்லுக்கு தப்பேது :))

சென்ஷி said...

ஆனாலும் இன்னொரு நண்பர் அனுஜன்யா இன்னும் இங்க எட்டிப்பார்க்காம இருக்கறது மனசுக்கு வேதனையா இருக்குது... :(

என்னை கொலவெறியோடு துரத்துறதுல அவருக்கு ஒரு முக்கிய இடத்த நான் மனசுல கொடுத்துருக்கேன் :))

சென்ஷி said...

@ மறுக்கா தமிழன்...

//இதுதான் வலைப்பதிவுகளின் சிறப்பே முகம்தெரியாத பல நட்புகளை மனதுக்கு நெருக்கமாக்கியிருப்பதும், வலுவான நல்லுறவுகளை தமிழுக்கு ஏற்படுத்திதந்திருப்பதும் ...

நீங்க மொக்கைன்னு போட்டாலும் நாங்க மெஸேஜா மாத்திடுவம்ல...//

மறுக்கா உரக்க சொல்லேய்..... :))

Syam said...

nalla irunga raasa rendu perum :-))

//raasa//

indha rendu A kku numerology ellaam kaaranam illa..nedil kaaga..

சின்னப் பையன் said...

நான் எனக்கே நண்பனில்லை.. நார்தான் எனக்கு நண்பன்...

'ர்','ன்' ரெண்டையும் வேறே இடத்திலே மாத்திப் போட்டு பாத்தேன்..

டாக்டர் விஜய் பஞ்ச் டயலாக் மாதிரி வந்துடுச்சு!!!

பரிசல்காரன் said...

தமிழன் & சென்ஷி..

என்னவென்று சொல்ல..
வார்த்தையொன்றும் வர்ல!

(அட.. அடுத்த படத்துக்கு பாட்டெழுதப் போகலாம் போலிருக்கே)

சனி, ஞாயிறு பதிவு போட்டா அதிக பின்னூட்டம் வராதுன்னு தெரிஞ்சு, கஷ்டப்பட்டு இருபதைத் தாண்ட வெச்ச
உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல?
(பார்றா.. இவன் எதுக்கு ஃபீல் பண்ணீருக்கான்னு' என்று நினைத்தீர்கள் தானே?)


@ syam

thank u very much!

பரிசல்காரன் said...

@ ச்சின்னப்பைய”ர்”

சூப்பனுங்க!!

ச்சே.. சூப்பருங்க!

Anonymous said...

உங்கள் நண்பி யார்னு அடுத்த பதிவு போடுங்க.

கோவை விஜய் said...

ஜூலை 13ம் தேதி கோவையில்
திரு. மஞ்சூர் ராசா இல்லத்தில்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.
காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு

வருகைதரும்

கோவை இணைய நண்பர்கள்

மஞ்சூர் ராஜா
தமிழ்பயணி சிவா
லதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்
ஓசை செல்லா
திருப்பூர் தியாகு
புரவி ராம்
ஞானவெட்டியான்
காசி
சுரேஷ்
காயத்ரி
கனகராஜ்
ஜெயபிரகாஷ்
நாமக்கல் சிபி
கார்த்திக்
புதுகை பாண்டி
வடகரை வேலன்
பரிசில்காரன்
கூடுதுறை
வெயிலான்
கிரி

மேலும்
வருபவர்களையும்

வருக வருக
என
வாழ்த்தி
வரவேற்கிறேன்(தகவல்:http://podian.blogspot.com/)

தி.விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com

VIKNESHWARAN ADAKKALAM said...

எப்படிங்க இப்படியெல்லாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நினைச்சேன் இப்படித்தான் இருக்கும்ன்னு .. நடத்துங்க.. நாங்கல்லாம் எதுக்கிருக்கோம்.. என்ன எழுதினாலும் பின்னூட்டம் போடுவோம்..//

பாருங்க நான் என்ன பின்னூட்டம் போடனும்னு நினைச்சனோ இவுங்க போட்டாச்சு... இப்ப புரியுதா கடைசிய வந்து பின்னூட்டம் போட்டா என்ன எட்வாண்டேஜ்னு...

பரிசல்காரன் said...

@ சின்னஅம்மணி

//உங்கள் நண்பி யார்னு அடுத்த பதிவு போடுங்க.//

ஏங்க, வீட்ல அடி வாங்கறதுக்கா?

@ விஜய்

நேர்ல சந்திப்போம்!

@ விக்கி..

லேட்டா வந்துபோட்டு வியாக்கியானம் வேற...!