மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்..
”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”
”ஏன்? யாருக்கு என்னாச்சு?”
”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”
(கார்த்திக் சொன்னதுல பாதி உண்மை மீதிப் பொய்)
இதுக்கு மேல இந்தக் கதையைத் தொடரப் பரிசல்காரனை அழைக்கிறேன்
------------------------------------
இப்படீன்னு அண்ணன் வடகரை வேலன் அவர்கள் ஒரு கதை எழுதி என்னைத் தொடரச் சொல்லியிருந்தார். அவர் ஆரம்பித்ததை இங்கே படித்துவிட்டு இதைத் தொடருங்கள்....
---------------------
கௌரியை அழைத்ததும் கார்த்திக் தனது செல்போனை அணைத்துவிட்டு கங்கா ஹாஸ்பிடலின் ஐ.சி.யு-விற்குள் எட்டிப் பார்த்தான்..
“சார்.. உள்ள வராதீங்க” வெள்ளுடை நர்ஸ் தடுக்க..
“சிஸ்டர்.. தலைல சிவியர் இஞ்சுரி-ன்னு மட்டும் சொல்லீட்டு போன டாக்டர் இன்னும் வரவே இல்ல. நான் அவன் அப்பா, அம்மாகிட்ட கூட தகவல் சொல்லல. அவன் கட்டிக்கப்போற பொண்ணுகிட்ட சின்ன ஆக்ஸிடெண்ட்-ன்னு பொய்யச் சொல்லி வரச் சொல்லிருக்கேன். டாகடர் எப்ப வருவாரு.. எப்ப ஸ்கேன் பண்ணப் போறீங்க?” என்று பதட்டததோடு பொரிந்தான் கார்த்திக்.
“மிஸ்டர்.... ஐயாம் டாக்டர் இருதயராஜ்’
குரல் கேட்டு திரும்பினான்.
“டாக்டர்..”
“அந்த டாக்டர் வேற ஒரு அவசர ஆப்ரேஷனுக்காக போய்ட்டாரு.. உங்க ஃப்ரண்டை நாந்தான் அட்டெண்ட் பண்ணப் போறேன். ப்ளிஸ்.. ஒரு பத்து நிமிஷம் அப்பிடி உக்காருங்க”
சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டார்.
கார்த்திக் அவர் கைகாட்டிய இடத்தில் இருந்த நாற்காலியை ஆக்ரமித்தபோது, ஹாஸ்பிடலுக்கு வெளியே கௌரியின் கார் நின்றது.
ரிசப்ஷனில் விசாரித்து, பதட்டத்தோடு ஓட்டமும் நடையுமாய் ஐ.சி.யு. முன் அமர்ந்திருந்த கார்த்திக் முன் வந்து நின்றாள் கௌரி.
“என்ன கார்த்திக். செல்லை ஆஃப் பண்ணீட்டீங்க?’
”ஐ.சி.யு-க்குள்ள போகலாம்னு ஆஃப் பண்ணினேன். ஏன்... என்னாச்சு கௌரி?”
“அஞ்சு நிமிஷம் முன்னாடி சங்கர் எனக்கு ஃபோன் பண்ணினார்”
”என்னது?”
அதிர்ச்சியோடு கேட்டான் கார்த்திக்...
“நானும் சங்கரும் வந்த கார் ஆக்ஸிடெண்ட் ஆகி எனக்கு சின்னக் காயம் கூட இல்லாம தப்பிச்சுட்டேன். என் கண்ணு முனனாடி தலைல வழியற ரத்தத்தோட சங்கரை ஐ.சி.யு-க்குள்ள அனுப்பினது நான்.. அவன் உனக்கு ஃபோன் பண்ணினானா? என்ன விளையாடறியா?”
“நான் விளையாடல கார்த்திக். சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் அவர் ஃபோனை நீங்க எடுக்கலியில்ல?”
”இல்ல”
“ஐ.சி.யு-ல இருந்த டாக்டர் வெளில போய்.. இப்போ வேற ஒரு டாக்டர் வரப்போறதா சொன்னாங்களா?”
“சொன்னாங்களாவா? வேற ஒரு டாக்டர் உள்ள போயாச்சு”
“அவரு பேரு இருதயராஜா?”
“ஆ...ஆமாம்.. ஆனா இதெல்லாம் நீ எப்படி கரெக்டா சொல்ற?”
”ஐயோ.. எல்லாம் நீங்க போனை ஆஃப் பண்ணினதால வந்த வினை”
“எனக்கு ஒண்ணுமே புரியல கௌரி” என்றவாறு தனது செல்ஃபோனை ஆன் செய்தான் கார்த்திக்.
ஆன் செய்ததுமே ஏழு புதிய மெசேஜ் என திரை காட்ட, திறந்தான்.
ஆறு மெசேஜ் சங்கரிடமிருந்து ஆறு மிஸ்டு கால் வந்திருப்பதை சொன்னது.
ஏழாவது மெசேஜைத் திறந்தான்.. படித்ததும் வியர்த்துப்போனது கார்த்திக்குக்கு. செல்ஃபோன் கையிலிருந்து நழுவுவது போல உணர்ந்தான்..
“கௌ.. கௌரி...”
“கார்த்திக்.. என்னாச்சு...?”
கௌரிக்கு பதில் சொல்ல முடியாமல் அரை மயக்கமாய் கார்த்திக் நாற்காலியில் விழ, அவன் கையிலிருந்த செல்ஃபோனை வாங்கிப் பார்த்தாள்.
அதில்...
------------------------------
வடகரை வேலன் சொன்னது போலவே, இங்கிருந்து இதைத் தொடர நண்பர் வெயிலான் அவர்களை அழைக்கிறேன்..
வடகரை வேலன் போட்ட கண்டிஷன்கள்:-
1. யாரையும் சாகடிக்ககூடாது.
2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.
3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.
எனது எக்ஸ்ட்ரா கண்டிஷன்..
4. எந்த டாக்டரையும் மோசமானவராகக் காட்டக்கூடாது..
(ம்ம்ம்ம்மாட்னீங்களா? அடுத்தவங்களை சிக்க விட்டு வேடிக்கை பாக்கறதுல என்னா ஒரு ஆனந்தம்!!)
23 comments:
விறுவிறுப்பாக ராஜேஷ் குமார் கதை போல் இருக்கிறது.
அடுத்து நண்பர் வெயிலான் என்ன எழுதுவார் என்று படிக்க ஆவல்
உங்கள விட எனக்கு ஆவலா இருக்குங்க.. எக்குத்தப்பா வெயிலானை மாட்ட விட்டுட்டோமோன்னு இருக்கு...
வேலன் உங்களிடம் ஒழுங்காகக் கொடுத்த கதையை இப்படி சிக்கலாக்கி வெயிலானிடம் கொடுத்தால் என்ன செய்வாரோ ! நல்ல முயற்சி. வெயிலானுடன் முடியுமா அல்லது இன்னும் முப்பது பதிவர்கள் கைவண்ணத்தில் இது மிளிருமா !
அனுஜன்யா
நல்ல விறுவிறுப்பான பாக்கெட் நாவல் படிக்கிற மாதிரி இருக்கு.. ம்.. நடத்துங்க..
கண்ணை மூடி, திறந்தா கங்கா ஆஸ்பத்திரி தான் சுத்தி சுத்தி தெரியுது.
என்ன பிரச்சனையா இருந்தாலும், நேர்ல பேசித் தீர்த்துக்கலாம்! அதுக்காக இப்படியா?
//நல்ல விறுவிறுப்பான பாக்கெட் நாவல் படிக்கிற மாதிரி இருக்கு.. ம்.. நடத்துங்க..
//
இதை வழிமொழிகிறேன். கதைனா உங்களுக்கு அல்வா சாப்டற மாதிரி ஆச்சே பரிசல். :))
//விறுவிறுப்பாக ராஜேஷ் குமார் கதை போல் இருக்கிறது//
நான் இதை வழிமொழிகிறேன்.
புதிய முயற்சி வாழ்த்துக்கள்!
????? ????? ????????.. (???? ???????? ????? ???????????)
??????????? ???????.. ??????? ???? ??????????!
????????, ??????? ????? ??????? ?????? ????? ???????! ????? ?????? ?????????? ????????? ????? ??????????, ???? ????? ????? ?????????!
@ ?????..
???? ???????? ????? ?????????? ????????? ????????? ??????????! (???, ???? ??? ???? ??! ??? ??????? ??????????????)
????????????? (??????-? ??????? ?????????????, ????????????? ???? ?????!) ????? ????????!
@ ????????..
???????.. ????? ?????? ????????? ????????? ??????? ????????? ???????????? ??????! ????????? ????? ?????????!
வாழ்க்கை எத்தனை கேள்விகள் நிறைந்தது!! போன பின்னூட்டத்தைப் பார்த்த தெரியுதா?
நன்றி அனுஜன்யா(எங்க.. அடக்கடி காணாமப் போயிடறீங்க?)
தேங்க்சுங்க கயலக்கா.. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!)
சாரிங்க வெயிலான்.. காலைல இதப் பதிவு பண்ணிட்டு உங்களை செல்போன்ல கூப்ப்ட்டப்போ, உங்க குரல் ரொம்ப பரிதாபமா இருந்தது.. ஆரம்பமே இப்படி இருக்கே, பாவம்ன்னு நெனச்சேன்! ஆனா நீங்க கலக்குவீங்க-ன்னு தெரியும்!)
அம்பி.. உங்க கூட டூ! ஏன் அப்பப்ப எஸ்-சாயிடறீங்க?
@rapp
சரிங்க ஆபீசர்! (வெட்டியாபீசர்-ன்னு கூகுல்-ல அடிச்சா வேட்டியாபீசர்-ன்னு வருது!!!)
லதானந்த் அங்கிள்.. தயாரா இருங்க! நாங்கெல்லாம் குட்டையக் குழ்ப்பி உங்ககிட்ட குடுக்கரதாத்தான் ப்ளான்! ஒக்கே?
// உங்களை செல்போன்ல கூப்ப்ட்டப்போ, உங்க குரல் ரொம்ப பரிதாபமா இருந்தது..//
தூங்கிட்டிருந்தவனை செல்போன்ல கூப்ட்டா குரல் அப்படித்தான் இருக்கும் ;)
எப்படிங்க இந்த மாதிரி அசத்துறீங்க..
நாவல் படிக்கிற மாதிரியே இருந்தது....பல திறமைகளை வைத்து இருக்கீங்க..கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு :-))
வாழ்த்துக்கள்
எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்புறம் - கச்சாமுச்சான்னு த்ரில்லா கொண்டுபோயிட்டீங்களா?......
//தூங்கிட்டிருந்தவனை செல்போன்ல கூப்ட்டா குரல் அப்படித்தான் இருக்கும்//
இருக்கும்... இருக்கும்.
அதான் மாட்டி விட்டுட்டம்ல.
கலக்கல்... வெயிலானின் பதிவுக்காக இப்போதிலிருந்தே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.
@ வெயிலான்
ஏங்க நான் கூப்ட்டது ஒம்பதேகால் மணிக்கு! என்னமோ ஆறு மணிக்கு உங்களை கூப்ட்டு தொந்தரவு பண்ணினதா எல்லாரும் நெனச்சுக்கப்போறாங்க!
@ கிரி..
டெய்லி வந்து பின்னூட்டம் போடணும்.. ஆமா.. (அப்புறம் எப்படி நான் தினமும் நமீதாவ தரிசிக்கறது?)
@ச்சின்னப்பையன்
//எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்புறம் - கச்சாமுச்சான்னு த்ரில்லா கொண்டுபோயிட்டீங்களா//
அப்படியெல்லாம் இல்லீங்க.. ஆக்சுவலா நான் எந்தப் பிளானும் பண்ணி உக்காரலை.. நண்பனை ஐ.சி.யு-ல சேர்த்துட்டு அவன் ஆஸ்பத்திரில இருக்கான்-ன்னு ஆரம்பிச்சு அந்தச் சூழ்நிலைல என்ன நடக்கும்ன்னு யோசிச்சு.. யோசிச்சு கொண்டுபோய்ட்டே இருந்தேன்.. நடுவுல கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டேன்! அது இப்படிப் போய் நின்னுடுச்சு!
@வடகரை வேலன்
//இருக்கும்... இருக்கும்.
அதான் மாட்டி விட்டுட்டம்ல.//
ம்க்கும்.. இனி எப்படி தூங்கறாருன்னு பாப்போமே!!
@ சென்ஷி
வாங்க..வாங்க.. க்யூ ரொம்பப் பெரிசா இருக்கே...
நல்ல மர்மக்கதை. ஆனால் நல்ல கட்டத்தில் விட்டுடீங்க, திரும்ப யாராவது தொடரும் வரும் காத்திருக்கனும் :(
வாங்க கயல்..
‘யாராவது' இல்ல.. அதான் சொல்லீட்டேனே., வெயிலான் தொடருவார்-ன்னு!
//@ச்சின்னப்பையன்
எப்படியும் கதையை நீங்க முடிக்கவேண்டாம்னு நினைச்சப்புறம் - கச்சாமுச்சான்னு த்ரில்லா கொண்டுபோயிட்டீங்களா//
ஹா ஹா ஹா
//@ கிரி..
டெய்லி வந்து பின்னூட்டம் போடணும்.. ஆமா.. (அப்புறம் எப்படி நான் தினமும் நமீதாவ தரிசிக்கறது?)//
என்னங்க இது! இப்படி சொல்லிட்டீங்க..அது மாளவிகாங்க ..
கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்..எங்களுக்கு இப்ப நமீதா தான் முக்கிய எதிரி (சொல்றதுக்கு தான் மற்றபடி ஹி ஹி ஹி ஹி ) எங்க தலைவி கூட சண்டை போட்டுட்டாங்க
சவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து நீங்கள் எழுதியது போன்று வெயிலான் தொடருவார் என்று நம்புகிறேன். பார்க்கலாம்
வாங்க வல்லவி...
நன்றி!
என்னங்க இது லேசான குழப்பதிலிருந்தத மோசமான குழப்பத்துக்கு கொண்டு போயிட்டிங்க :(
அடுத்து என்ன சொல்றாங்கனு கவனிப்போம்....
ARUMAI MIGA ARUMAI
Post a Comment