(வீரபாண்டியன் ஒரு பிரம்மச்சாரி. தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் அவன் லாட்ஜ் வாடகை கட்டுப்படியாகாமல்.. தனக்குத் தெரிந்த தரகர் ஒருவரிடம் சிறிய வீடொன்று பார்க்கச் சொல்லியிருக்க... அது பற்றி விசாரிக்க அந்த தரகர் வீட்டிற்குச் செல்கிறான்)
காட்சி - 1
இடம்: தரகர் வீடு
பாத்திரங்கள்: அண்டா, குண்டா.. ச்சே.. தரகர் தங்கமணி, வீரபாண்டி.
தரகர்: அடடே! வாங்க வீரபாண்டித்தம்பி!
வீ.பா: நான் வீரபாண்டி தம்பி இல்ல. வீரபாண்டியே நாந்தான்.
தரகர்: கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா! சும்மா பாசமா தம்பி'ன்னு கூப்பீட்டேன்..
வீ.பா: வேணாம். கூப்பிடாதீங்க. சொத்துல பங்கு கேட்டுடுவேன்.. (சுற்றிலும் பார்த்து) எங்க உங்க சம்சாரத்தைக் காணோம்?
தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!
வீ.பா: யோவ்.. வீட்ல இல்லியான்னு கேட்டேன். சரி.. வீடு பாக்கச் சொன்னேனே.. என்னாச்சு?
தரகர்: வீடு இருக்கு தம்பி. சின்னதா ஒரு ரூம். பாத்ரூம்.. டாய்லெட்.. அவ்ளோதான். பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து நேராப் போய் ரைட்ல கட் பண்ணினா வீடு வந்துடும்..
வீ.பா: வீடு வந்துடுமா? என்னய்யா.. நடமாடும் வீடா? வாடகை எவ்ளோ? வீட்டுக்க்காரர் யாரு?
தரகர்: வாடகை ரொம்பக் கம்மிதான். ஹவுஸ் ஓனர் கவர்மெண்ட் வேலைல இருக்காரு. ரொம்ப நல்லவரு. கறை படியாத கைக்காரர்!
வீ.பா: ஏன்.. இங்க் பேனாவே யூஸ் பண்ண மாட்டாரா?
தரகர்: லஞ்சமே வாங்க மாட்டாருன்னேன்பா..
வீ.பா: இப்ப யாருமே லஞ்சம் வாங்கறதில்ல.. ஒன்லி `அன்பளிப்பு'தான்!
தரகர்: எல்லாத்தையும் விட தண்ணி கஷ்டமே இல்ல..
வீ.பா: பககத்துலயே டாஸ்மாக்கா? சரி.. எப்ப அங்க போலாம்?
தரகர்: கிளம்புங்க.. இப்பவே போலாம்.
காட்சி - 2
இடம்: புதிய வீடு
பாத்திரங்கள்: வீட்டுக்காரர், அவரது மகள், வீரபாண்டி & தரகர்
(தரகர் கதவைத் தட்டுகிறார்)
தரகர்: என்னங்க.. சார்.. ஹலோ..
வீ.பா: போதும்யா.. விட்டா மைக் டெஸ்டிங் மாதிரி பேசிட்டே போற..? பொறு.. வருவாங்க..
(கதவு திறந்து ஒரு கையில் ருத்திராட்ச மாலையுடன் நிற்கிறாள் ஒரு இளம்பெண்)
பெண்: யாருங்க வேணும்?
வீ.பா: வீட்டுக்காரர் இல்லையா?
(அவள் வெட்கமாய் நெளிகிறாள்)
வீ.பா: நெளிஞ்சது போதுங்க.. உடைஞ்சிடப் போறீங்க..
பெண்: எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்க..
வீ.பா: அதுக்கு நான் என்னங்க பண்றது?
தரகர்: (இடைமறித்து) உங்க வீட்டுக்காரர் இல்லீங்க.. ஹவுஸ் ஓனரைக் கேட்டோம்..
பெண்: ஓ! அப்பாவா?
வீ.பா: அது எனக்கெப்படிங்க தெரியும்?
தரகர்: (வீரபாண்டியிடம்) அடி வாங்காம போகமாட்ட போல..
பெண்: உள்ள வந்து உட்காருங்க.. (சொல்லிவிட்டு அவள் வீட்டினுள் செல்ல, இருவரும் சோபாவில் அமர்கிறார்கள்)
வீ.பா: யாருய்யா இந்தப் பொண்ணு? மாதாஜி திவ்யாதேவி மாதிரி?
தரகர்: ஐயோ.. அந்த மாதிரி இல்லிங்க.. கொஞ்சம் பக்தி ஜாஸ்தி.
(வீட்டு ஓனர் வருகிறார்)
ஓனர்: வீட்டைப் பாத்தீங்களா?
வீ.பா: பாத்துட்டோங்க.. அதுசரி.. ஏன் வீட்டு வெளி சுவத்துல பூரா காவி அடிச்சிருக்கு?
ஓனர்: அதுவா? மொதல்ல அங்க ஒரு சாமியார் இருந்தார்..
வீ.பா: சாமியாரா? அப்ப இந்நேரம் வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருக்குமே?
ஓனர்: அந்த மாதிரி இல்ல. ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தின ஒரிஜினல் சாமியார்.. சரி.. எப்ப பால் காய்ச்சுவீங்க?
வீ.பா: தினமும் காலைல பால்காரன் வந்ததும் பால் காய்ச்சுவோம்
ஓனர்: யோவ்.. வீட்டுக்கு எப்ப குடி வர்ற-ன்னு கேட்டேன்..
வீ.பா: நாளைக்கே வந்துட்டா போச்சு!
காட்சி: 3
(புதிய வீட்டிற்கு குடி போன ஒரு வாரத்தில் வீரபாண்டியின் வேலை போய்விடுகிறது. வெறுத்துப் போய் அவன் அமர்ந்திருக்க கமிஷன் பணத்திற்காக தரகர் வருகிறார்)
தரகர்: தம்பி.. உங்க கம்பெனிக்கு போயிருந்தேன்.. வேலையை விட்டு நிறுத்தீட்டாங்களாமே.. ஏன் தம்பி?
வீ.பா: ஆங்? எல்லாரும் தூங்கும்போது, நான் மட்டும் வேலை செஞ்சேன்னுதான். நீ வேற ஏன்யா! டெம்பரவரி தானே.. வேணாம்னதும் வீட்டுக்குப் போடான்னுடாங்க..
தரகர்: சாப்பாடு, வாடகையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க?
வீ.பா: அதான் யோசிக்கறேன். இருக்கறத வெச்சு ஒருமாசம் ஓட்டிடுவேன்.. (இந்த நேரத்தில் வெளியே ஒரு கிராமவசியின் குரல் கேட்கிறது)
கி.வாசி: சாமி.. சாமி..
வீ.பா: (வெளியே வந்து) யாரு வேணும்?
கி.வாசி: சாமி.. நீங்கதான் இந்த வீட்ல இருக்கற சாமியாரா? சாமி.. என் பசுமாடு ஒண்ணு காணல.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு குடுங்க சாமீ..
வீ.பா: யோவ்.. என்னய்யா இது என்னை பேச விடாம.. நானே வேலை தேடீட்டு இருக்கேன்.. இதுல இவன் மாட்டை வேற தேடணுமாம்.
கி.வாசி: சாமி.. எப்படியாச்சும் மனசு வைங்க சாமி..
வீ.பா: (எரிச்சலோடு) போய்யா மொதல்ல.. (என்று கிராமவாசியைத் துரத்த அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான்) போய்யான்னா.. (என்று கத்தியபடி கீழே இருக்கும் கல் ஒன்றை எடுத்து எறிகிறான் வீரபாண்டி) இனிமே இந்தப் பக்கம் வந்தே... அவ்வளவுதான்..
தரகர்: தம்பி.. நம்ம கமிஷன்...
வீ.பா: நீ வேற கமிஷன், கமிஷன்னுகிட்டு.. என் ஃப்ரண்டு ஒருத்தன் எனக்குப் பணம் தரணும். ரெண்டு பேருமா போலாம். அதை வாங்கி உனக்குத் தர்றேன்
(மறுபடி வெளியே கிராமவாசியின் குரல் கேட்கிறது)
கி.வாசி: சாமீ.. சாமீ..
வீ.பா: இன்னும் போகலியா இவன்.. இவனை... (கோபமாய் வெளியே வர கிராமவாசி பசுமாட்டுடன் நிற்கிறார்)
கி.வாசி: சாமீ... எங்க கிராமத்துல சொன்னாங்க.. சாமியார் எதையுமே குறிப்பாத்தான் சொல்லுவாருன்னு. நீங்க கல்லைத்தூக்கி எறிஞ்சீங்களா.. சரீன்னு அந்த திசைலயே போனனா, என் பசுமாடு கெடச்சுடுச்சு! என் கூட வந்த பயலுக எல்லாம் உங்களைப் பாத்ததே இல்லியாமே.. பஸ் ஸ்டாண்டுலதான் இருக்கானுவ.. உங்களுக்கு பூஜை போடணுமில்லா.. இருங்க கூட்டியாரேன்.. (சொல்லிவிட்டு ஓடுகிறான். வீரபாண்டி தலையிலடித்தபடி உள்ளே போகிறான்)
தரகர்: தம்பி.. போலாமா உங்க ஃபிரண்ட் வீட்டுக்கு?
வீ.பா: இருய்யா.. குளிச்சுட்டு வரேன்
காட்சி: 4
(குளித்துவிட்டு வந்த வீரபாண்டி தலைசீவி விட்டு, விபூதியை எடுத்து நெற்றியில் வைக்கப் போக, வெளியே ஏதோ குரல் கேட்கிறது. விபூதிக் கையுடன் வெளியே வருகிறான். அங்கே கிராமவாசியும், அவன் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் சிறு கூட்டமாய் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன் தரகர் அமர்ந்திருக்கிறார்)
தரகர்: நம்ம வீரபாண்டிச் சாமி ரொம்ப அடக்கமானவரு.. தான் கடவுளோட மறு அவதாரம்கிற கர்வமே இல்ல..
வீ.பா; (கோபமாய்) கர்வப்பட இதென்ன கலெக்டர் வேலையா? போங்கய்யா.. நான் சாமியாருமில்ல.. ஒண்ணுமில்ல...
கூட்டத்தில் ஒருவர்: என்னா அடக்கம்.. என்னா அடக்கம்..
மற்றொருவர்: `நான்' கிறது ஒண்ணுமில்ல ன்னு எவ்ளோ எளிமையா சொல்றாரு!!
கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..
கூட்டம்: ஜே!
கி.வாசி: வீரபாண்டிசாமிக்கு..
கூட்டம்: ஜே!
வீ.பா: சும்மா கத்தாதீங்க. நான் சாமியாரே (அதற்குள் தரகர் அவனது வாயைப் பொத்தி, காதில் கிசுகிசுப்பாய்..)
தரகர்: தம்பி.. சும்மா இருங்க.. இதை விட்டா சூப்பர் பிஸினசே இல்ல! (கூட்டத்திடம்) நீங்க சொல்லுங்க..
கூட்டம்: வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!
(இந்த நேரத்தில் வீட்டு ஓனரின் மகள் கையில் ருத்திராட்ச மாலையுடன்
வர.. கூட்டம் அவளப் பார்த்து..)
“சிஷ்யாதேவிக்கு ஜே! ஜே!”
வீரபாண்டி வெறுப்புற்றவனாய் `என்னமோ பண்ணுங்க' என்று கையை உதற கையிலிருந்த விபூதி சிதறுகிறது.. அதைப் பார்த்த தரகரும், வீட்டு ஓனரின் மகளும் கூட்டத்தினரோடு சேர்ந்து கோஷமிடுகிறார்கள்..
“வீரபாண்டி சாமிக்கு.. ஜே! ஜே!”
(வீரபாண்டி திகைத்து நிற்கிறான்)
பின்குறிப்பு: இன்றைக்கு புதிதாய் எழுத மூடு வராததால் (தப்பிச்சீங்க!) 1995 அக்டோபர் மாதம் உங்கள் ஜூனியர் மாத இதழில் நான் எழுதிய இந்த நாடகம் சின்ன சின்ன திருத்தங்களோடு..
”இதுக்கு நீ தர்ற ஊசிப்போன அவியலோட மொக்கையே பரவால்லியேடா”- ங்கறவங்கல்லாம் கையைத்தூக்குங்க'
அப்படியே இருங்க! இனி நான் அவியல் போடறப்பதான் கையை இறக்கணும்!
32 comments:
ரெம்ப நல்லா இருக்குதுங்க...
:)
நல்ல நகைச்சுவை இருந்தது.ஆனால் கொஞ்சம் கிரேஸீமோகன் எட்டிப்பார்க்கிறார்.
அவர் ஸ்டைலில் ஒன்று:
நபர்1: சார் உங்களைப்பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கு...
நபர்2: யோவ் நான் உண்மையிலேயே படிச்சவன்தாயா.
//1995 அக்டோபர் மாதம் உங்கள் ஜூனியர் மாத இதழில் நான் எழுதிய இந்த நாடகம் சின்ன சின்ன திருத்தங்களோடு..//
கே கே,
வாவ்...எழுத்தில் ஆழ்ந்த அனுபவம் இருக்கிறதோ...அதுதான் கலக்குறிங்க.
உருவாகிறார்.. சரி எப்ப மாட்டுவார் போலீஸில்.... :)
நகைச்சுவை நாடகத்தை நேரில் பாத்துட்டு வந்தமாதிரியே இருக்கு..
வீரபாண்டியின் ஒவ்வொரு பதிலும்.. சிரிக்க வைத்தது. 95-லேயே நடிகர் விவேக்குக்காக எழுதப் பட்ட காமெடி ட்ராக் என சொல்லலாமா? அருமை.
// தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!//
என்ன ஒரு வில்லத்தனம்....:))))
ஆஹா வீரபாண்டி வசனம் எல்லாம் டாப் :)
\\வெண்பூ said...
// தரகர்: ஐ! என் சம்சாரத்தைக் காணோமா! ஹைய்யா..! ஜாலி!//
என்ன ஒரு வில்லத்தனம்....:))))
\\
ரிப்பீட்டுடுடுடு
cute story
பழைய பெருங்காய டப்பா! வாசனை பலமாத்தான் இருக்கு. கூடவே கடியும் இருக்கு.
//வீ.பா: நெளிஞ்சது போதுங்க.. உடைஞ்சிடப் போறீங்க..
பெண்: எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்க..
வீ.பா: அதுக்கு நான் என்னங்க பண்றது?//
நல்ல நகைச்சுவை. பேசற மாதிரியே எழுதறது உங்க பலம்.
நல்லா இருக்கு க்ருஷ்னா... கண்டினியூ எங்கே?
புதிதாய் வருகை புரிந்திருக்கும் திரு. ஜெகதீசன் அவர்களே... மற்றும் நல்லதொரு கிரேசி டைப் காமெடியை சொல்லி முதல்முறை வந்திருக்கும் நாஞ்சில் பிரதாப் அவர்களே.. (ஐயையோ.. விட்டுடுங்க இனிமே இப்படியெல்லாம் பேசமாட்டேன்.... )
நன்றி வருகைக்கு. அடிக்கடி வாங்க.. கடி வாங்க!
நல்லா இருக்குங்க பரிசல்காரரே. ஒவ்வொரு வரியிலும் சிரிப்பு வெடிகள். :-)
krishna,
புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க
ஹாஹா. சூப்பர் கடிக் கதை.... நல்லா இருக்குங்க...
ரொம்ப சூப்பரா இருக்குங்க....
@ நாஞ்சில் பிரதாப்
//நல்ல நகைச்சுவை இருந்தது.ஆனால் கொஞ்சம் கிரேஸீமோகன் எட்டிப்பார்க்கிறார்//
அதென்னங்க `ஆனால்'? நகைச்சுவைன்னா அவரில்லாமயா?
@ கோவி. கண்ணன்
//வாவ்...எழுத்தில் ஆழ்ந்த அனுபவம் இருக்கிறதோ...அதுதான் கலக்குறிங்க//
நன்றி கண்ணன்!
@ கயலக்கா, ராமலட்சுமிம்மா, வெண்பூ, ரம்யாரமணி, rapp, (உங்க பேரை அடிக்கறப்பல்லாம் மொழி மாற்றம் செய்ய வேண்டியதாயிருக்கு!) வெயிலான், வேலண்ணா, நந்து, குமரன், ச்சின்னப்பையன், விக்கி..
எல்லோருக்கும் அதத் தவிர என்னாத்தச் சொல்லப்போறேன்?
அதேதான்!
(ஏற்கனவே லதானந்த் அங்கிள் பின்னூட்டப் பெருங்கோ'ன்னு பட்டம் கொடுத்துட்டாரு! இதுல எனக்கு நானே எத்தனை பின்னூட்டம் போட்டுக்கறது? அதுனால ஒரே “அது”!
நல்ல நகைச்சுவை 'பின்னூட்டப் பெருங்கோ'பரிசல்காரரே. :)
அதுக்கு பேசாம வெட்டிஆபிசர்னு அடிச்சிடுங்க இனிமே.
வாங்க கயல்.. என்னடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன்! நன்றி!!
//அதுக்கு பேசாம வெட்டிஆபிசர்னு அடிச்சிடுங்க இனிமே//
சரிதான்.. ஆனா அதென்னமோ உங்களை திட்டற மாதிரியில்லயா?
அண்ணே தனியா உக்காந்து சிரிக்க வச்சிட்டிங்க...
கலக்கல்...:)
சட சடன்னு ஒரே பதிவுகளா போட்டுத்தள்ளுறிங்க தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள்...
என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டீங்க, என் ப்ளாக் பேரே அதான. அதுமட்டுமில்லாம நாங்கெல்லாம் வின்னர் பட கைப்புள்ள ஜாதி.ஹி ஹி ஹி.
வாங்க தமிழன்! ரொம்ப நாளா உங்களை எதிர்பார்த்துட்டிருந்தேன்..
அடிக்கடி வாங்க!
@rapp
ஓக்கே வெட்டியாபீசர்!
இனிமே உங்க பதிவை நான் ஆபிஸ்ல உக்காந்து படிக்கவே போறதில்லை பரிசல். எல்லாரும் பைத்தியக்காரனாட்டம் என்னைப் பாக்கிறாங்க. :))))
சிரிச்சுகிட்டே படிச்சு முடிச்சுட்டேன் பரிசல்காரரே. ரொம்ப நாளைக்கு அப்புறம் S.ve Sekhar நாடகத்தை ரேடியோல கேட்ட மாதிரி சந்தோசம்.
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணியின் தாக்கமோ :-)
சிரிச்சுகிட்டே படிச்சு முடிச்சுட்டேன் பரிசல்காரரே. ரொம்ப நாளைக்கு அப்புறம் S.ve Sekhar நாடகத்தை ரேடியோல கேட்ட மாதிரி சந்தோசம்.
ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணியின் தாக்கமோ :-)
அப்புறம் பரிசல்காரரே தடவி தடவி இரண்டு பதிவ தமிழ்ல போட்டிருக்கேன். நேரம் கிடைக்கும் போது பார்த்து காரி துப்பிட்டு போங்க :-)
பின்னூட்டமல்ல!பின்னூட்டமல்ல!
வணக்கம் பரிசல் அண்ணா, தங்களிடம் பேச வேண்டும் ஆட்சேபனை இல்லையெனில் உங்கள் அலைபேசி எண் தர இயலுமா?
அன்பன்,
சிநேகிதன்..
என் அலைபேசி எண் 9840903575
தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இஈஈஈஈஈஈஈஈஈஈஈஈயக்குனர் கிடைத்து விட்டார் நண்பர்களே. . . .
Post a Comment