ஊட்டியின் தற்கொலை முனை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது.
அவன் கொஞ்ச தூரத்தில் புல் தரையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தான். அவள் எட்டிப் பார்த்தாள்.
‘எங்களின் இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை’ என்ற வரிகளில் நிறுத்தி யோசித்துக் கொண்டிருந்தான்.
"எனக்கு இந்த முடிவுல சம்மதமில்லை பாஸ்கர்" என்றாள் அவள்.
"வேற என்ன பண்ணச் சொல்ற கீதா? நினச்சபடி வேலையும் இல்லை.. காதலை விடவும் முடியல. அப்பா அம்மாவை எதிர்க்கற தைரியமுமில்லைங்கறப்ப யாராயிருந்தாலும் இந்த முடிவுதான் எடுப்பாங்க"
"ப்ச்.. நீங்க நிறைய இத்துப் போன தமிழ்ப் படம் பாக்கறீங்க.. தற்கொலை பண்ணிக்கறதால என்னாகப் போகுது?"
"அப்பா அம்மாவுக்கு உறைக்குமில்ல? இத்தனை வருஷம் பாசமா வளர்த்த மகனைவிட வறட்டு கவுரவம்தான் பெரிசுன்னு நெனைக்கறவங்களுக்கு வேற எப்படிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத் தெரியல"
"உங்களோட இந்த முடிவால தற்கொலைதான் தீர்வுன்னு இன்னும் பல பேர் நினைச்சா, அது உங்களுக்கு சந்தோஷமா?"
"அ..அது வந்து.."
"என்ன யோசனை?"
"நீ சொல்றது சரிதானோன்னு தோணுது.. வேற என்னதான் முடிவு?"
"என்னைக் கேட்டா? நீங்கதான் யோசிக்கணும். நானா சிறுகதைப் போட்டியில கலந்துகிட்டிருக்கேன்? அது உங்க தலைவலி. சீக்கிரம் எழுதிட்டு கிளம்புங்க.. இருட்டப் போகுது"
11 comments:
குடைக்குள் மழை மாதிரி, கதைக்குள் கதை.
நல்லா இருக்கு.
:)
குடைக்குள் மழை மாதிரி, கதைக்குள் கதை.
நல்லா இருக்கு.
:))
வாவ்.. உண்மையிலேயே கலக்கல் முடிவு....
நல்ல கதை... :)
நன்றி வடகரை வேலன், கப்பியார், கயல்விழி மற்றும் சென்ஷியாரே!
பரிசல்... கலக்கிட்டீங்க... சூப்பர் கதை...
BTW, என் பேரும் கிருஷ்ணகுமார் தான்!!
அவன் கொஞ்ச தூரத்தில் புல் தரையில் அமர்ந்து யோசித்துகொண்டிருந்தன்.
என இருந்தால் சற்று குழம்பி இருந்து இருக்கும்.
நான் பாஸ்கர் கூறுவது ரியல் லைப் யாக முடிபீர் என nenithian
லக்கிஜி.. உங்க பேரும் கிருஷ்ண குமாரா? மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்!
கிரீஷா, நீ சொல்ல வருவது என்னவென்று புரியவில்லை!
:-)
கலக்கல்...
அன்புள்ள கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
நலம். நலமறிய ஆவல். குமுதம் டாப்-10 வலைப்பூ வரிசை மூலம் உங்கள் வலைப்பூவை அறிந்தேன். இப்பொழுது தான் பழைய பதிவுகளில் இருந்து வாசித்து வருகிறேன். பரந்துபட்ட களங்களையும்/தளங்களையும் தொட்டுள்ளீர்கள். கவிதை, கதை, தகவல்கள், மேலும் மேலும். நல்ல வாசிப்பு அனுபவமாக உள்ளது. வாழ்த்துக்கள்!
ஒரு சிறு சுய விளம்பரம். உங்களின் இந்த "முடிவு" கதை படிக்கும் போது ஏறக்குறைய இதுபோலவே நானும் ஒரு முயற்சி செய்திருப்பது அதிசயமாக இருந்தது. நேரமிருப்பின் படிக்கவும்.
http://puthiyan-pakkam.blogspot.com/2009/01/blog-post_18.html
கண்டிப்பாக ஒப்பிட்டு பார்க்கும் எண்ணத்தில் அல்ல. ஒரு வாசகனின் வேண்டுகோள் மட்டுமே. நன்றி!
என்றும் அன்புடன்,
சீ கனகராசு
Post a Comment