Sunday, June 1, 2008

அவியல்-4

# ரவி, வாசு, வாசுதேவன், கணேஷ், மூர்த்தி இவர்களையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? யோசித்து வையுங்கள்..
---------------------------------------------------------
# சென்னை சூப்பர் கிங்க்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஒரு தமிழனாக சந்தோஷம்தான். ஆனால் ஷேன் வார்னேவின் பலமான அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களென்று கவலையாகத்தான் இருக்கிறது! இன்று காலை பேப்பர் வாங்கும் பெட்டிக் கடையில் இரண்டு பேர் பஞ்சாப் தோற்றதற்கு வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்கள். கேட்டதற்கு ‘தோனியை என்னமோ பிடிக்கவேயில்லை’ என்கிறார்கள். அதிலும் ஒருத்தன் சொன்ன காரணத்தைக் கேட்டு ---------ல் சிரித்துவிட்டு வந்து விட்டேன். அவனுக்கு சச்சின் பிடித்த ப்ளேயராம். தான் கேப்டனாக இருந்த ஒரு மேட்ச்சில், தோனி சச்சினைக் கூப்பிட்டு ‘அங்கே போய் நில்லு’ என்று சொன்னாராம். இதை நடித்துக் காட்டிய அந்தப் பையன்.. ‘அவன் யாரு சார், சச்சினை ஆர்டர் பண்றதுக்கு? அதிலேர்ந்து எனக்கு தோனியை பிடிக்கறதில்லை" என்றான்!
-----------------------------------------------------------
# மானாட மயிலாட ரெண்டு வாரம் முன் வாட்டர் ஃபால்ஸ் செட் போட்டிருந்தார்கள். க்ளோசப்பில் பார்க்கும் போது, மிகவும் தத்ரூபமாக இருந்தது. அந்த செட்டைப் போட்ட ஆர்ட் டைரக்டர் யார், அவரின் உதவியாளர்கள் யார்.. யார்?
கலக்கப்போவது யாரு ஷோவில் ஒரு பங்கேற்பாளர் தீ மிதிப்பது போல நடித்த போது, கீழே தீ எஃபெக்டுக்காக ரோஜாப்பூக்களை கொட்டியிருந்தார்கள். அடுத்த பங்கேற்பாளர் வரும் போது, செட் சுத்தமாக இருந்தது! செட்டை சுத்தம் செய்த உழைப்பாளிகள் யார்.. யார்? இது போன்றவர்களை ஒரு எபிசோடில் திரையில் காட்டி அவர்களை பெருமைப்படுத்தி மகிழ்விக்கலாமே?
----------------------------------------------------------
# ‘இன்றைக்கு எங்காவது வெளியில் போகலாமே’ என்று மனைவி கேட்டதற்கு ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு என்றேன். இப்போதுதான் சன் டி.வி-யில் நான்கு மணிக்கு ஒரு படம் (புத்தம் புதிய சூப்பர் ஹிட் படமாம்!) போடுவதாய் காட்டியதைப் பார்த்ததுமே கண்டிப்பாய் வீட்டிலேயே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். ஏதாவது சேனல் மாற்றும் போது பார்த்துவிடுவேனோ என்று பயமாயிருக்கிறது! ‘வீராச்சாமி’ போடுறாங்களாம்! நானில்லை சாமி!
-----------------------------------------------------------
#முதல் பராவில் குறிப்பிட்டிருப்பவர்கள்- ‘நிழல்கள்’ ரவி, ‘அல்வா’ வாசு, ‘மலேசியா’ வாசுதேவன், ‘டெல்லி’ க்ணேஷ், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி. பெயரைவிட பட்டம் எவ்வளவு முக்கியமாய் ஆகிவிட்டது!

2 comments:

சென்ஷி said...

//பெயரைவிட பட்டம் எவ்வளவு முக்கியமாய் ஆகிவிட்டது!//

அது சரி :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட ஆமாங்க.. கொஞ்ச நாள்க்கப்பறம் நீங்களும் உங்க் பேரை பரிசல்காரன் ----- அப்படின்னு போட்டுக்கவேண்டியதாகலாம்.. :)