Saturday, June 14, 2008

முன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு வேண்டுகோள்

என்னுடைய நான்கு கேள்விகளுக்கும் புயல் வேகத்தில் பதில் சொன்ன நண்பர் கோவி.கண்ணனுக்கு நன்றிகள்.. லக்கிலுக் பற்றிதான் நான் கேட்டிருந்தேன்.. அவர் என்னைப் பற்றி சொல்லி மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்! (பிளான் பண்ணி பண்ணுறாங்க-ன்னு யாரும் நினைக்க வேண்டாம்!)

சிங்கப்பூர் பற்றி கேட்டதற்கு காரணம்: - எனக்கு யாரோ சொன்னார்கள், அல்லது எங்கோ படித்தேன்.. பெட்ரோல் கட்டுப்பாட்டிற்காக அங்கே ஒரு சட்டம் இருக்கிறதாம்.. ஒரு மகிழ்வுந்தில் ஒருத்தர் தானியாகப் போகக் போகக் கூடாதாமே? அப்படியா?
---------------------------------
பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லையென்றால் அந்தப் பதிவு அதிக வாசகர்களை கவரவில்லை என்று அர்த்தமா அல்லது பதிவின் தரம் அதனால் நிர்ணயிக்கப் படுகிறதா? பத்திரிகைகளுக்கு அனுப்பிய படைப்புகள் திருப்பி அனுப்பும்போது "இதுவே உங்கள் படைப்புகள் குறித்த இறுதி முடிவல்ல" என்பது போல ஒரு கடிதம் கூட வரும்.. ஒவ்வொரு நாளும் அதிக பின்னூட்டம் பெரும் படைப்பு குறித்து பின்னூட்ட சுனாமி உண்மைத்தமிழன் (அப்பா நாங்கெல்லாம் டுப்ளிகேட்டா?) ஆராய்ச்சி நடத்தலாமே? உண்மைத்தமிழனுக்கு ஒரு கேள்வி.. உங்க பேருக்கு பின்னால இருக்கற எண்கள் நீங்க மொத்தமா போட்ட பின்னூட்டமா? அல்லது ஒரு நாளைக்கு நீங்க போடற பின்னூட்டமா?
அப்புறம் கோவியாரின் கேள்விகளுக்கு பதில்களை சொல்லிவிட்டு லக்கிலுக் "டோண்டு சாருக்கு நாக்கை பிடுங்கிக் கொள்ளும் கேள்வி" களைக் கேட்டிருக்கிறார்.. நான் யாரையாவது நாக்கை பிடுங்கிக் கொள்ளும் கேள்வி கேட்டிருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பேன்.."உங்கள் நாக்கில் ஏதெனும் நோய் வந்து அதை எடுத்தால்தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை வந்தால் என்ன செய்வீர்கள்?" (ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு!)
------------------------------------------------
போன வார ஆனந்தவிகடனில் அடுத்த சூப்பர் ஸ்டார் ஜே.கே.ரித்தீஷின் பேட்டி படு நக்கலாக இருந்தது.. நம்ம எல்லாம் அவரைப் பத்தி கிண்டலடிக்கறது பத்தாதுன்னு அவரே, அவர அடிச்சுகிட்டு இருக்கார்! சாம்பிளுக்கு சில..

  • கானல் நீர் ஒரு டுபாக்கூர் படம்தான். (அவரது முதல் படம்) நான் சின்ன வயசுல எத்தனையோ படம் பார்த்து கிண்டல் பண்ணியிருக்கேன். கடசீல நாலு பேரு என்னைப் பார்த்து கிண்டல் பண்ணற மாதிரி முதல் படம் அமைஞ்சு போச்சு! (இதுல சில பிழைகளை சொல்லணும் - கடைசீல இல்ல முதல்லையே கிண்டல் பண்ற மாதிரி ஆயிடுச்சு. அப்பறம்.. நாலு பேரு இல்ல, அத்தனை பேரும் இன்னும் கிண்டல் பண்ணிட்டுதான் இருக்காங்க.. படத்துக்காக கூட இல்ல , உங்க அலப்பரைக்காக!)

  • (கலைஞருக்கு அந்தப் படம் போட்டு காட்டினீரா என்று கேட்டதற்கு..) உடம்பு சரியில்லாத நேரத்துல அவரது ஏன் தொந்திரவு பண்ணீட்டு-ன்னு போட்டுக் காட்டல. எனக்கு தெரியாத என் படம் எப்படி இருக்கும்-ன்னு?


எல்லாம் சரி.. நாயகன், தளபதி-ன்னு தலைப்பு வைக்கறதை தாங்க முடியல!

-------------------------------------------------

இன்னைக்கு மொக்கை இவ்வளவுதான்.. நேரமாச்சு.. கிளம்பறேன்!

9 comments:

கிரி said...

//உடம்பு சரியில்லாத நேரத்துல அவரது ஏன் தொந்திரவு பண்ணீட்டு-ன்னு போட்டுக் காட்டல. எனக்கு தெரியாத என் படம் எப்படி இருக்கும்-ன்னு? //

இவரு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு போல இருக்கு ..

ஆனா இவரை நம் வலைப்பதிவில் ஒருத்தர் விடாம எல்லோரும் வருங்கால சுஎப்ர் ஸ்டார் னே சொல்லுறாங்க :-))))

கிரி said...

//பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லையென்றால் அந்தப் பதிவு அதிக வாசகர்களை கவரவில்லை என்று அர்த்தமா அல்லது பதிவின் தரம் அதனால் நிர்ணயிக்கப் படுகிறதா? //

இவை எனக்கும் இருக்கும் நீண்ட நாள் சந்தேகங்கள் :-(

Anonymous said...

கிருஷ்ணகுமார்,

நீங்கள், எம் கோபால கிருஷ்ணனின் மணல் கடிகை நாவலை வாசித்திருக்கிறீர்களா.

திருப்பூரை களமாகக் கொண்ட நாவல்.

திருப்பூரில் பிறந்து வளரும் 5 நண்பர்களைப் பற்றியது.
ஒருவன் எக்ஸ்போர்ட் செய்கிறான், ஒருவன் மெர்ச்சண்டைஸ் செய்கிறான், ஒருவன் கம்பெனிக்குப் போகிறான், ஒருவன் கலெஷனுக்கு லைனுக்குப் போகிறான் மற்றவன் பேன்ஷி கடை வைத்திருக்கிறான்.

வாழ்க்கை நகர்தலில், மேலேறுவதும் குப்புற விழுவதுமான நியமங்களுக்கிடையிலும், நட்பு தொடர்கிறது.

கதாபாதிரஙக்ளின் மூலம் திருப்பூரின் அவலங்களையும், வேதனைகளையும் வழிந்தோட விடுகிறார்.

நான் இரு முறை வாசித்திருக்கிறேன்.

வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் அவரைச் சந்திக்க அழைத்துச் செல்கிறேன்.

பரிசல்காரன் said...

வருகைக்கு நன்றி கிரி..
வேலன்.. இன்னும் வாசிக்கவில்லை.. வாசித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன். சந்திப்ப்போம், சிந்திப்போம்..

துளசி கோபால் said...

//.."உங்கள் நாக்கில் ஏதெனும் நோய் வந்து அதை எடுத்தால்தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை வந்தால் என்ன செய்வீர்கள்?" (ரொம்ப நல்ல எண்ணம்டா உனக்கு!)//

இங்கே உள்ளூர் தொலைக்காட்சியில் சிகெரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டிக்கொள்ளும் விளம்பரம் ஒன்னு வருது. உண்மையாவே நாக்கில் புற்றுநோய் வந்து நாக்கை எடுத்துட்ட ஒரு நபர் அதில் வர்றார். சுவாசிக்கவும் அவருக்குத் தொண்டையில் ஒரு குழாய் வச்சுருக்காங்க. சாப்பாடு எல்லாம் ட்யூபில் வயித்துக்கு நேராப் போகுது.
அவரால் பேசவும் முடியாது.
இதைப் பார்க்கும்போது.... ஏந்தான் மக்கள்ஸ் இப்படி சிகெரெட் புகைக்கிறாங்களோன்னு இருக்கும். இங்கே இந்த நாட்டில் புகைபிடிக்கும் பெண்கள் தொகை மிக அதிகம். ஆண்கள் எண்ணிக்கை குறைவு.

பின்னூட்டங்களின் எண்ணிக்கைக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.
நீங்கபாட்டுக்கு எழுதுங்க. போய்ச்சேரவேண்டியவங்களுக்கு அது தானாப் போய்ச்சேரும்.

நம் கடமை எழுதுவதுதான்:-)))))

பரிசல்காரன் said...

மிக்க நன்றி துளசி கோபால்.. நான் இதை எழுதும்போது இது சாத்தியமா என்று நினைத்தேன்.. ஆனால் ஒருத்தர் அப்படி வாழ்கிறார் என்ற தகவல் புதிது.

சென்ஷி said...

//பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லையென்றால் அந்தப் பதிவு அதிக வாசகர்களை கவரவில்லை என்று அர்த்தமா அல்லது பதிவின் தரம் அதனால் நிர்ணயிக்கப் படுகிறதா? //

கண்டிப்பாக அப்படி கிடையாது. விரும்பிப்படிப்பவர்கள் எல்லோரும் பின்னூட்டுமளவு நேரமில்லாததே காரணம். பெரும்பாலானவர்கள் இதை புரிந்து கொள்வதில்லை என்பதுதான் வருத்தம். உங்களின் பலபதிவுகள் படித்தும் பின்னூட்டமிட முடிவதில்லை. காரணம் இணைய பிரசினை. என் செய்ய :((

தொடருங்கள்... வெற்றிகரமாக.. :)

பரிசல்காரன் said...

நன்றி சென்ஷி!

karthi said...

//பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லையென்றால் அந்தப் பதிவு அதிக வாசகர்களை கவரவில்லை என்று அர்த்தமா அல்லது பதிவின் தரம் அதனால் நிர்ணயிக்கப் படுகிறதா? //

கண்டிப்பாக அப்படி கிடையாது. விரும்பிப்படிப்பவர்கள் எல்லோரும் பின்னூட்டுமளவு நேரமில்லாததே காரணம். பெரும்பாலானவர்கள் இதை புரிந்து கொள்வதில்லை என்பதுதான் வருத்தம். உங்களின் பலபதிவுகள் படித்தும் பின்னூட்டமிட முடிவதில்லை. காரணம் இணைய பிரசினை. என் செய்ய :((

தொடருங்கள்... வெற்றிகரமாக.. :)
i agree with senshi
inaia prachanaikal mattumalla somberiththanamum oru kaaranamthaan. sms mathiriyana pada vimarsanathukkellaam niraiya pinnutangal varathukkuk karanam vayitherichalthan othuk kolkirirkala tholare?
all the best