Thursday, June 19, 2008

முன்குறிப்புகள் (என்கிற) அவியல்

"நேற்று ஒரு நாள் எந்தப் பதிவும் போடவில்லை. அப்பப்பா.. எத்தனை மெயில்கள்.. எத்தனை ஃபோன் கால்கள்.. என் வலைப்பக்கத்திற்கு இத்தனை வரவேற்பா.. என்று பிரமித்துப் போனேன்" என்றெல்லாம் எழுத ஆசைதான். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. வழக்கம் போல சூரியன் கிழக்கே உதிப்பதில் தொடங்கி எல்லாரும் எல்லா அன்றாடப் பணிகளை செய்து கொண்டு நேற்றும் ஒரு நாளாய் எல்லாருக்கும் கழிந்தது. எனக்குதான் ‘என்னடா இது நாம இன்னைக்கு ஒண்ணுமே எழுதலியே.. உலகம் சுத்தாதுன்னு நெனச்சா எல்லாம் சுமூகமா எப்பவும் போல நடந்துட்டிருக்கே’ன்னு அதிர்ச்சியா இருந்தது. ம்..ம்..உங்களையெல்லாம்.. கார்த்திக் முதலமைச்சராகட்டும்.. அப்புறம் வெச்சுக்கறேன்!
--------------------------------------

இந்த வார கிசு கிசு

வலையுலகத்திற்கு வந்த குறுகிய காலத்தில் தனது பத்திரிகையுலக அனுபவ எழுத்தால் பலரையும் கவர்ந்த ‘அந்த’ப் பதிவர் இனி வலைப்பூவில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து விட்டாராம். இது வெறும் ‘இடைவேளை’யாக இருக்கட்டும்.. சீக்கிரம் எழுதுங்கள் என்று அவரது நண்பர்களும், வாசகர்களும் அவரை நச்சரித்துக் கொண்டிருப்பதாய் தகவல்.
"ஏனுங்ணா.. நீங்க இப்படிப் பண்லாமுங்களா?"
--------------------------------------


போன வருடம் எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம்..
எங்கள் முதலாளி வடக்கத்தியர் என்பதால் தமிழ் அரைகுறைதான். அதுவும் எண்கள் அவருக்கு ஆங்கிலத்தில்தான் சொல்லப்படவேண்டும்.
சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒரு ஊழியர் அவரிடம் விடுமுறை கேட்பதற்காக வந்தார்..


"வர்ற கார்த்திகை ஒம்பதாம் தேதி சபரிமலைக்கு இருமுடி கட்டறேன்.. ஒரு வாரம் லீவு வேணும்"

"எப்போ போறிங்க?"

"கார்த்திகை ஒம்பது"

"இங்க்லீஷ்ல சொல்லுப்பா"

அவர் கொஞ்ச நேரம் யோசித்து.. "டிசம்பர் இருபத்தி மூணுங்க"

"ஐயோ.. இங்க்லீஷ்ல சொல்லுப்பான்னேன்"

"இங்லீஷ்லதான்.. டிசம்பர் இருபத்தி மூணு"

இப்படியே கொஞ்சநேரம் கடந்தது.. பிறகு நாங்கள் "கமிங் ட்வொண்டி த்ரீ" என்று புரியவைத்தோம்!

(பி.கு: உடனே காலண்டர் எடுத்து போன வருஷத்தில் கார்த்திகை ஒன்பது டிசம்பர் இருபத்தி மூணுதானா-ன்னெல்லாம் பாக்கப்படாது.. ஏதோ எழுதிட்டேன்..விடுங்க)
--------------------------------------

இருதினங்களுக்கு முன் எழுதிய குட்டிக் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு. (இதுவரைக்கும் ஒரு செருப்படிகூட இல்ல!!) அதுனால இதோ இன்னும் ரெண்டு.. (இவனையெல்லாம் சும்மா விட்டது தப்பா போச்சு!)

எனது காதலியின்

திருமணப் பத்திரிகையில்

என் பெயர்..

முகவரிப்பகுதியில்!

****
சங்கிலியை இழுங்கள்

நிற்கட்டும் ரயில்

அழகான கடல்.
--------------------------------------


முன்பு நான் எழுதிய பழமொழியின் உண்மையான அர்த்தங்கள் பதிவில் இது விட்டுப் போய்விட்டது..


பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

இது பந்தியில முன்னாடி போய் உக்கார்ந்துடணும்.. சண்டைன்னா பின்னாடி போயிடணும்-ங்கற அர்த்தத்துல உலவி வருது. உண்மையான அர்த்தம் என்னான்னா..


ஏதாவது விருந்து.. பந்தின்னா உக்காந்து சாப்பிடும்போது உங்க கை உடம்புக்கு முன்னாடிதான் வருது...அதே போர்ப்படையில இருக்கும்போது வில்லை எடுத்துப் போராடணும். வில்லை எடுத்து அம்பு விடும்போது (நாண் இழுக்கையில்) உங்க கை எப்படிப் போகுது? பின்னாடி போகுது! அந்த அர்த்தத்துல தான் பந்திக்கு முந்து.. படைக்கு பிந்துன்னாங்க பெரியவங்க. சரியா?
------------------------------------

‘குசேலன்’ ஸ்டில்ஸ் இன்றைய தினகரனில்... இரண்டு ஸ்டில்ஸ் கலக்கலாக இருந்தது. ஒரு பாடலுக்கு விஜய், அஜித், சூர்யா தலைவருடன் நடனமாடுகிறார்களாம். ஜூன் 30 பாடல்கள் வெளியீடு.. ஜூலை மாதத்தில் படம் வெளியீடு. வலைப்பதிவர்கள் எல்லாம் அடுத்த கும்மிக்கு தயாரா இருங்க!!

25 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:))

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் வந்துட்டேன்.. படிச்சிட்டேன்.. வந்ததற்கு அடையாலமா ஒரு ஸ்மைலி போட்டுட்டேன்... வர்ட்டா...

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆங்... சொல்ல மறந்துட்டேன்.. முதல் கவிதை விளங்கல...

ரெண்டாவது சூப்பர்... முகவரி பகுதியிலாவது பெயர் பந்துச்சேன்னு மனச தேத்திகுங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

//கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!//

அவ்வ்வ்வ்...

VIKNESHWARAN ADAKKALAM said...

கடைசியா ஒன்னு சொல்லனும்...

பாய் பாய்...

VIKNESHWARAN ADAKKALAM said...

நான் கடைசியானு சொல்லிட்டேன்.. என் பின்னூட்டத்துக்கு பதில் போட்டு இந்த பக்கம் வர வச்சிராதிங்க...

உண்மையா இன்னோரு பாய் பாய்...

கோவி.கண்ணன் said...

//எனது காதலியின்
திருமணப் பத்திரிகையில்
என் பெயர்..
முகவரிப்பகுதியில்!
//

காதலிக்கு தெரியாமலேயே ஒருதலையாய் அவளை காதலிப்பவருக்கு அந்த பாக்கியம் கிடைக்கலாம். :)

அவியலும் நல்லா இருக்கு.....தொடர்ந்து கலக்குறிங்க.

//"நேற்று ஒரு நாள் எந்தப் பதிவும் போடவில்லை. அப்பப்பா.. எத்தனை மெயில்கள்.. எத்தனை ஃபோன் கால்கள்.. என் வலைப்பக்கத்திற்கு இத்தனை வரவேற்பா.. என்று //

போன் நம்பர் இருந்தால் போன் போட்டு இருப்போம்ல. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேத்து நிஜம்மாவே பழய பதிவை மறுமொழி திரட்டில எடுத்து புதுசோன்னு பார்த்தேன்.. இன்னைக்கும் இது பழசோன்னு விட்டுட்டு போக இருந்தேன்.. ஒரே மாதிரி தலைப்பு வைக்கப்போறீங்கன்னா. அதுக்கு விடுபட்டவை மாதிரி டேட் போடுங்க சார்.. இல்லாட்டி மிஸ் பண்ணிடுவோம்ல.. :))

Anonymous said...

//ம்..ம்..உங்களையெல்லாம்.. கார்த்திக் முதலமைச்சராகட்டும்.. அப்புறம் வெச்சுக்கறேன்!//

அவரு எல்லாத்தையும் லேப்டாப்ல வாட்ச் பண்ணிட்டுருக்காரு. அவரை தேவையில்லாம வம்புக்கிழுக்காதீங்க.

கயல்விழி said...

//இந்த வார கிசு கிசு

வலையுலகத்திற்கு வந்த குறுகிய காலத்தில் தனது பத்திரிகையுலக அனுபவ எழுத்தால் பலரையும் கவர்ந்த ‘அந்த’ப் பதிவர் இனி வலைப்பூவில் எழுதுவதில்லை என்று முடிவெடுத்து விட்டாராம். இது வெறும் ‘இடைவேளை’யாக இருக்கட்டும்.. சீக்கிரம் எழுதுங்கள் என்று அவரது நண்பர்களும், வாசகர்களும் அவரை நச்சரித்துக் கொண்டிருப்பதாய் தகவல்.
"ஏனுங்ணா.. நீங்க இப்படிப் பண்லாமுங்களா?"//

நிஜமாவா???

rapp said...

//கார்த்திக் முதலமைச்சராகட்டும்.. அப்புறம் வெச்சுக்கறேன்!//
கார்த்திக்: வாட்டீஷ் திஸ் மிஷ்டர்.கிருஷ்ணா? இந்த நாட்ல டெமாக்ரஸியே இல்ல, எல்லாரும் ப்ளோக்ல கூட என்ன மெரட்டறாங்க. நோ பீஷ் ஆப் மைண்ட். எனக்கு ஒரே பயமா இருக்கு
//இந்த வார கிசு கிசு//யாருங்க? ஜ்யோவ்ராம் சுந்தரா? நானெல்லாம் கொஞ்சம் மந்தம். எங்களுக்கும் புரியற மாதிரி க்ளூ கொடுங்க(அதாவது டைரக்டா பேரையே சொல்லிடுங்கன்னு அர்த்தம்)
//சங்கிலியை இழுங்கள்நிற்கட்டும் ரயில்அழகான கடல்//
ஆஹா, அவனா நீயி! ஏனுங்க ஏற்கனவே யாரும் ஒரு எடத்துக்கும் நேரத்துக்குப் போய் சேர முடியல. உங்க ரசிப்புத்தன்மைக்கு ஒரு அளவே இல்லையாய்யா?
//உடனே காலண்டர் எடுத்து போன வருஷத்தில் கார்த்திகை ஒன்பது டிசம்பர் இருபத்தி மூணுதானா-ன்னெல்லாம் பாக்கப்படாது// நிஜமாவே என்னை மனசுல வெச்சிகிட்டு எழுதன மாதிரி இருக்கு. நான் அதத்தான் செய்ய இருந்தேன்.

பரிசல்காரன் said...

நன்றி விக்கி.. ‘முடியல..!’ (இது வடிவேலு சொல்ற ‘முடியல’. முடிஞ்சுச்சா? இது நான் கேக்கறேன்..

விக்கி:
//ஆங்... சொல்ல மறந்துட்டேன்.. முதல் கவிதை விளங்கல...

ரெண்டாவது சூப்பர்... முகவரி பகுதியிலாவது பெயர் பந்துச்சேன்னு மனச தேத்திகுங்க...//

தவறு செய்துவிட்டீர் மன்னா.. ரெண்டாவதுதான உங்களுக்கு வெளங்கல..
அதோட அர்த்தம் அவ்வளவு ரசிப்புதன்மை இருக்கு ஒருத்தனுக்கு.. அதாவது.. ப்ச்.. விடுங்க எல்லாரும் மொறைக்கறாங்க..

சரி விக்கி, உங்க பின்னூட்டத்துக்கு பதில் போடல. ஓக்கேவா?

பரிசல்காரன் said...

நன்றி கோவி.கண்ணன்.. போன் நம்பர் இருக்கு. ஆனா இன்கமிங்க் இல்ல. ஒன்லி ஒவுட்கோயிங்தான்!

எனக்கு புடிச்ச ஸோமா வனதேவதாவோட ஒரு கவிதை இப்படி முடியும்...
"இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை.."

பரிசல்காரன் said...

ஸாரி கயல்விழி.. திருத்திக்கறேன்..! (அதுக்காக ‘அவரோட’ பதிவை எனக்கு உதாரணமா சொல்லியிருக்கீங்களே.. புல்லரிக்குது!) - (உடனே யாரும் இதுக்கு ‘சொறிஞ்சுக்கோ’ ன்னு பின்னூட்டம் போட்றாதீங்க..)

வாங்க வேலண்ணே.. என்ன இது நீங்க உங்க பதிவுல ஒண்ணுமே புதுசா போட மாட்டீங்கறீங்க??

வாங்க கயல்விழி.. அது ‘நெசந்தானுங்கோ’ (இப்ப புரிஞ்சுதா யார்னு?)

ராப்.. சூப்பரா கார்த்திக் டைப்ல எழுதிருக்கீங்க. ஒரு தனி பதிவா வெட்டியாபீசர்ல போடலாமே?

//யாருங்க? ஜ்யோவ்ராம் சுந்தரா? நானெல்லாம் கொஞ்சம் மந்தம். எங்களுக்கும் புரியற
மாதிரி க்ளூ கொடுங்க//

ஜ்யோவ்ராம் சுந்தரெல்லாம் இல்ல. பாவங்க அவரை... ஏன் இழுக்கறீங்க?
மேல கயல்விழிக்கு சொன்ன பதில்ல தெரிஞ்சுதா?
டென்ஷனில்லாம ‘ஆனந்த’மா யோசிங்க.. புரியும்..

rapp said...

அடப் போங்க நீங்க. எனக்கொண்ணும் புரியல.

பரிசல்காரன் said...

ராப்.. இப்போதான் ‘அவருக்கு’ தொலைபேசினேன். அவரு கூட இருந்த ஒரு நண்பர் ‘கவலப்படாதீங்க.. அவரு எழுதுவாரு.. எழுத வைக்கறோம்’ ன்னாரு. அவரு எழுதட்டும்.. அப்புறமா சொல்றேனே.. ப்ளீஸ்..

சின்னப் பையன் said...

//நேற்று ஒரு நாள் எந்தப் பதிவும் போடவில்லை. அப்பப்பா.. எத்தனை மெயில்கள்.. எத்தனை ஃபோன் கால்கள்//
எனக்கும் இதே மாதிரிதாங்க.. தூங்கவிடமாட்டாங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சின்னப் பையன் said...

//ஜூலை மாதத்தில் படம் வெளியீடு. வலைப்பதிவர்கள் எல்லாம் அடுத்த கும்மிக்கு தயாரா இருங்க!!//

ரெடியாயிட்டோமில்லே.. 'குசேலன்' ரஜினி மென்பொருள் நிபுணரானால்!!!...

கயல்விழி said...

//வாங்க கயல்விழி.. அது ‘நெசந்தானுங்கோ’ (இப்ப புரிஞ்சுதா யார்னு?)//

எனக்கு புரியுது அது யாரென்று, திடீரென்று நிறுத்தியது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

பி.கு: உங்க வூட்டுக்கு மறக்காம வந்தாச்சு!

பரிசல்காரன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ச்சின்னப்பையன்! (உங்களை யாரும் ச்சின்னப்பையன்-ன்னா உங்களுக்கு கோபமே வராதுல்ல?)

வெரிகுட் கயல்விழி.. கற்பூர புத்தி உங்களுக்கு!!

சென்ஷி said...

//கோவி.கண்ணன் said...
//எனது காதலியின்
திருமணப் பத்திரிகையில்
என் பெயர்..
முகவரிப்பகுதியில்!
//

காதலிக்கு தெரியாமலேயே ஒருதலையாய் அவளை காதலிப்பவருக்கு அந்த பாக்கியம் கிடைக்கலாம். :)
//

மறுக்கா சொல்லேய்...

உங்களையும் காதலிச்ச பொண்ணாயிருந்தா சத்தியமா கல்யாண பத்திரிகைய வேஸ்ட்டாக்கியிருக்க மாட்டா.. :(( (நொ(சொ)ந்த அனுபவம்)..

//அவியலும் நல்லா இருக்கு.....தொடர்ந்து கலக்குறிங்க.

//"நேற்று ஒரு நாள் எந்தப் பதிவும் போடவில்லை. அப்பப்பா.. எத்தனை மெயில்கள்.. எத்தனை ஃபோன் கால்கள்.. என் வலைப்பக்கத்திற்கு இத்தனை வரவேற்பா.. என்று //

போன் நம்பர் இருந்தால் போன் போட்டு இருப்போம்ல. :)//

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்பீட்டேய்ய்ய்ய் :)))

கோவை விஜய் said...

//‘நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!’

லோகநாதன் தயவால் நம் மண் செழிக்கட்டும்!

(இந்த வார விகடனில் வந்த பகப்படத்தை எடுத்த விஜய் நீங்களா?)//

வருகைக்கு நன்றி,
நான் அந்த 'விஜய்' இல்லை..
இந்த இயற்கை போராளியின் செயல்களை உலகிற்கு யார் எடுத்துச்சொன்னாலும்.,எனக்கு பெருமை தான்..யோகநாதன்-எனது வைல்டு-லைவ் போட்டோகிரபிக்கு வழிகாட்டி..
நன்றி..

பரிசல்காரன் said...

நன்றி சென்ஷி.. (பதிவு போட்டாச்சா.. இல்லயா?)

சரி விஜய்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! (இவரு என்னய்யா வித்யாசமா அவரு ப்ளாக்ல கேட்ட கேள்விக்கு நம்ம வூட்டுக்கு வந்து பதில் சொல்லீட்டு போறாரு.. ரொம்ப நல்லவரு போல..!)

karthi said...

tholare,
panthiku munthu padaikku munthu enpatharku artham veru.
panthiyil munnal senraal thaan arusumvai unavukalai suvaika mudiyum. (panthiyil naam seiya ventiya velaiye athuthane. athu mattumalla nammai munnal azaithu saappidas sollum alavukku mukkiyamaanavaraka irukka ventum endrum kollalaam)
padaikku pinthu means padaiyil naam pinnaal irukka vendum. padai viirarkaL munnal sella avarkaLai vazi nadaththum thalapathy pinnal than selvaan. appadi uyarwana thalaimaip pathaviyil(kalaignar mathri alla) irukka ventum endru porul.

வேல் முருகன் said...

அருமையான கவிதைகள்
இப்படிக்கு
அ. வேல் முருகன்
அரக்கோணம்