எனக்கு ரொம்ப நாளாய் அந்த எதிர் வீட்டு தாவணி மேல் ஒரு `கண்'...
அவள் அப்பா, அம்மா இல்லாத சமயமாய் போன வாரத்தில் ஒரு நாள் போய் அவளிடம் பயமின்றி நேரடியாகவே கேட்டும் பார்த்து விட்டேன். ம்ஹூம்! அவள் ஒத்துக் கொள்ளவில்லை. மிரட்டினால் பெற்றோரிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பேசாமல் வந்து விட்டேன்..
இன்று என் அப்பா, அம்மா ஒரு கல்யாணத்திற்காக கோவை சென்றிருக்கிறார்கள். தங்கையும் அவர்களுடன் சென்றிருக்கிறாள். எதிர்வீட்டிலும் யாருமில்லை.. அவளைத் தவிர..!
முடிவு செய்து விட்டேன் நான்.. இந்த சந்தர்பத்தை விட்டால் மறுபடி வராது..
விடு விடுவென அவள் வீட்டிற்குள் போனேன்.. வீதியில் யாரும் பார்க்கவில்லை..
எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த அவள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியோடு எழுந்தாள்..
"ஏய்.. ஏய்.. என்ன வேணும்? உம்பாட்டுக்கு உள்ள வர்ற?"
"ப்ரியா.. இன்னைக்கு நீ தப்ப முடியாது" கூறிக்கொண்டே அவள் தாவணியைப் பிடித்தேன்..
அவள் திமிறியபடி..
"விடு.. ஐயோ... விடு" என்று கத்த ஆரம்பித்தாள்..
"ஏய்.. கத்தாதே.. இப்போ தாவணிய கழட்டப் போறியா இல்லியா?" நான் கொஞ்சம் கோபமானேன்..
"என்ன திவ்யா இது.. நம்ம ரெண்டு வீட்டுக்கும் பகையா இருக்கு.. நீ என்னடான்னா காலேஜ் பங்க்ஷனுக்கு டிராமால நடிக்க இந்த தாவணிதான் வேணும்ன்னு தினமும் அடம்புடிக்கற.. ஒரு நாள் இது வீட்டுல இல்லீன்னாலும் அம்மா கண்டுபிடிச்சுடுவாங்கடி.." என்று மறுக்க "ப்ளீஸ்டி.." என்று கெஞ்ச ஆரம்பித்தேன் நான்..
47 comments:
:-))))
சொன்னா நம்பமாட்டீங்க. நானே இப்படி ஒன்னு நினைச்சு வச்சுருந்தேன்.
'ஒரு நாள் கொடியில் காயப்போட்டுருந்த தாவணியை உருவிக்கிட்டு வந்து தன் புதுச் சுரிதாருக்கு மேட்சிங் துப்பட்டாவாப் போட்டுக்கிட்டுப் போனாள்'ன்னு முடிவு வச்சுருந்தேன்.
நம்பறேன்.. நம்பறேன்..!
இன்னொரு விஷயம்.. இது நான் 1992ஜூன் 25-ல எழுதினது! (Blog ஆரம்பிச்சப்புறம் பழைய டைரியக் கிளர்றது தானே வேலை!
கதையெல்லாம் நல்லதான் இருக்கு :)
நல்ல Twist ஆனா ஒரு மாதிரி யூகிக்க முடிஞ்சது
இரண்டாவது வரியில் நேரடியா கேட்டுப்பாத்தேன் னவுடனேயே .. கதை புரிஞ்சுடுச்சு எனக்கு ...
துளசி உங்க முடிவும் நல்லா இருக்கு.. :)
:) போட்டாச்சுப்பா ஒரு ஸ்மைலி...
//1992ஜூன் 25-ல //
அவ்வ்வ்வ்வ்... அப்ப எனக்கு எட்டு வயசுதான்...
//சொன்னா நம்பமாட்டீங்க. நானே இப்படி ஒன்னு நினைச்சு வச்சுருந்தேன்.//
ச்சே ச்சே டீச்சர் எப்படி பொய் சொல்விங்க... (நம்புகிறேன் x 3)
//நல்ல Twist ஆனா ஒரு மாதிரி யூகிக்க முடிஞ்சது//
யூ ஆர் வெரி ஸ்மார்ட்
//கதை புரிஞ்சுடுச்சு எனக்கு ... //
யூ ஸ்மார்ட் டூ...
நாராயணா நாராயணா...
டைம் ஆச்சு... நான் போய் வருகிறேன்...
பாய் பாய்...
திரி நன்றாகத் தீபிடித்து சர்ர்ர்ர்ன்னு நல்லா எரிந்துகொண்டு வர வெடி கடைசில வெடிக்காம போனா சின்னப் பையன் என்ன ஏமாற்றம் அடைவானோ அதே ஏமாற்றம் தான் மிஞ்சியது. உம்! வாழ்த்துக்கள்.
நல்லா இருந்தது. எப்படியும் இது போன்ற முடிவுகள் தான்னு தெரியும். ஆனாலும் பர, பரன்னு படிக்க வைச்சீங்கள்ல. அங்க தான் நிக்கிறீங்க.
வாழ்த்துகள்.
நன்றி ரம்யாரமணி.. (Once again.. இந்தப் பேர் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு!)
தினமும் வர்றதுக்கு என் வந்தனங்கள் கயல்விழி முத்துலட்சுமி.. (வெறும் கயல்விழி’ன்னு போட முடியல.. இன்னொருத்தங்க வந்துட்டாங்கள்ல..)
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
(ஆறு பின்னூட்டத்துக்கு ஆறு தபா சொல்லீட்டம்ல??)
அல்லாரும் முடிவ கண்டுக்கறாய்ங்கப்பா.. ரொம்ப புத்திசாலிக!
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
நன்றி விக்கி..
(ஆறு பின்னூட்டத்துக்கு ஆறு தபா சொல்லீட்டம்ல??)
அல்லாரும் முடிவ கண்டுக்கறாய்ங்கப்பா.. ரொம்ப புத்திசாலிக!
அன்பின் அகரம்.அமுதாவிற்கு..
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்..
நான் ஏன் உங்கள் வலைப்பூவில் வந்து
‘எழுதுவதை விட்டுவிடலாமென்றிருக்கிறேன்’
என ஏன் சொன்னேன் என்று.
உங்கள் பாக்களைப் படித்த போது..
இப்படி மொக்கை போட்டு எல்லோரையும்
சோதித்துக் கொண்டிருப்பதற்காக
மிக வருந்தினேன்..
இதோ இப்போது...
நீங்களும் மாட்டிக்கொண்டீர்கள்!
(என்னடா இது ரொம்ப சீரியஸா போகுது..)
ஒக்கே. ஒக்கே.. அடிக்கடி வாங்க!
//முகவை மைந்தன் said...
நல்லா இருந்தது. எப்படியும் இது போன்ற முடிவுகள் தான்னு தெரியும். ஆனாலும் பர, பரன்னு படிக்க வைச்சீங்கள்ல. அங்க தான் நிக்கிறீங்க.
வாழ்த்துகள்.//
நன்றி முகவை மைந்தன்!
நான் ஒரு நாள் முதல்வரானால்
இந்த மாதிரி ட்விஸ்ட்-ன்னு சொல்லிகிட்டு
மொக்கைக் கதை எழுதற ஆளுகளப்
புடிச்சு உள்ள போட்ருவேன்.
அதுல நான்தான் மொதல்ல இருப்பேன்.. இல்ல??
1992ஜூன் 25-ல இருந்து இதே வேலைதானா?
அட, தாவணி உருவறதைச் சொல்லலீங்க.
எழுதறதச் சொன்னேன்.
நீங்க டாப் ஸ்லிப் போகலையா?
வாங்க வேலன்..
டாப்ஸ்லிப் போக ஆசைதான்..
போனா.. இங்க நம்ம டாப் ஸ்லிப் ஆகற மாதிரி இருந்தது. அதான் போகல..!
எல்லாருமே யூகிக்க கூடிய ட்விஸ்ட், அதுக்கின்னொரு காரணமும் இருக்குங்க. இப்பல்லாம் எல்லாருமே ஒரு எதிர்மறையான முடிவை நோக்கியே யோசிக்கறாங்க(அதாவது வித்தியாசமா யோசிக்கிறதுன்னு அதுக்கு பேரு)
இந்த கதைய எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு..
ஆனா நல்லாருக்குங்க பரிசல்
/// நீங்க டாப் ஸ்லிப் போகலையா? ///
வ.வேலனய்யா, சும்மாவே பரிசலுக்கு காதுல பொகை வந்திட்டிருக்கு. நீங்க வேற....
கதை நல்லாருக்குங்க..
டீச்சர் நீங்களும் அந்த கதைய கண்டிப்பா வலையேத்தணும். படிச்சுட்டு இதே கமெண்டு போடுவேன் :)
//VIKNESHWARAN said...
//1992ஜூன் 25-ல //
அவ்வ்வ்வ்வ்... அப்ப எனக்கு எட்டு வயசுதான்...
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் பொறக்கவேயில்ல :((
//rapp said...
எல்லாருமே யூகிக்க கூடிய ட்விஸ்ட், அதுக்கின்னொரு காரணமும் இருக்குங்க. இப்பல்லாம் எல்லாருமே ஒரு எதிர்மறையான முடிவை நோக்கியே யோசிக்கறாங்க(அதாவது வித்தியாசமா யோசிக்கிறதுன்னு அதுக்கு பேரு)
//
வேற எப்படில்லாம் யோசிக்கலாம்ன்னு டிப்ஸ் கொடுங்க அண்ணாச்சி, யூஸ் பண்ணிக்கறோம்.
@ ராப்..
//எல்லாருமே யூகிக்க கூடிய ட்விஸ்ட், அதுக்கின்னொரு காரணமும் இருக்குங்க. இப்பல்லாம் எல்லாருமே ஒரு எதிர்மறையான முடிவை நோக்கியே யோசிக்கறாங்க(அதாவது வித்தியாசமா யோசிக்கிறதுன்னு அதுக்கு பேரு//
வேற மாதிரி யோசிக்க ட்ரை பண்றேன் ராப்!!
@ அதிஷா..
வரவுக்கு நன்றி!
@ வெயிலான்
பாருங்க ரமேஷ்.. வெ.பு.வே.பாய்ச்சுறாங்க.. (எப்படியிருந்தது ட்ரிப்?)
@சென்ஷி
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் பொறக்கவேயில்ல :((//
இது எக்ஸ்ட்ரா ஓவர்!!
//வேற எப்படில்லாம் யோசிக்கலாம்ன்னு டிப்ஸ் கொடுங்க அண்ணாச்சி, யூஸ் பண்ணிக்கறோம்.//
அண்ணாச்சியில்ல அவங்க.. ஓக்கே.. வேற ஒரு மாதிரி யோசனை இருக்கு.. இன்னும் ரெண்டு நாள்ல பதிவேத்தம் பண்றேன்..
//எனக்கு ரொம்ப நாளாய் அந்த எதிர் வீட்டு தாவணி மேல் ஒரு `கண்'...//
அப்போ மற்றொரு கண் எங்கே இருந்துச்சு!!!
//இந்த சந்தர்பத்தை விட்டால் மறுபடி வராது//
நான் ஏதோ 'தேங்காபத்தை' ந்னு நினைச்சுட்டேன்!!!
//எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த அவள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியோடு எழுந்தாள்..
//
வேறே யார்தாவது சட்டையை பிக்கப் பண்ண திட்டம் போட்டுண்டுருக்காளோ!!!
though the end is predictable, the flow of writing made it intresting to read:)))
Nice!
கதை நல்லா இருந்தது, அதைவிட எழுத்து நடை நல்லா இருந்தது. :)
ரொம்ப தேங்க்ஸூங்கோவ் ச்சின்னப்பபையரே..! (ஆனாலும் ரொம்பத்தான் குறும்பு உங்களுக்கு!!)
//flow of writing made it intresting//
நனறி ஸ்வேதா(ஷ்வேதா??)..
//எழுத்து நடை நல்லா இருந்தது//
அதுதான் முக்கியம்.. அப்புறம் இந்தமாதிரி கதைல இலக்கியமா படைக்க முடியும்? உங்கள் உன்னிப்பான கவனிப்புக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பல..
இதே மாதிரி கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வந்தது குப்புசாமி செல்லமுத்து அவர்களின் பதிவு.அண்ணியின் அனைப்பில்(அல்லது அது போல ஒரு பெயரில்) வந்து விவாதம் எல்லாம் நிறைய நடந்தது :-)
http://karaiyoram.blogspot.com/2006/06/blog-post_30.html
நன்றி மனதின் ஓசை..
மீண்டும் முதல் பின்னூட்டத்திற்கு நான் அளித்த பதிலைப் பார்ககவும்..
வருகைக்கு நன்றி.. அடிக்கடி வாங்க..
/
"என்ன திவ்யா இது.. நம்ம ரெண்டு வீட்டுக்கும் பகையா இருக்கு.. நீ என்னடான்னா காலேஜ் பங்க்ஷனுக்கு டிராமால நடிக்க இந்த தாவணிதான் வேணும்ன்னு தினமும் அடம்புடிக்கற.. ஒரு நாள் இது வீட்டுல இல்லீன்னாலும் அம்மா கண்டுபிடிச்சுடுவாங்கடி.." என்று மறுக்க
/
அதுக்காக கட்டிகிட்டிருக்க தாவணிய "மறுக்க மறுக்க" (தினதந்தி கதற கதற ஸ்டைலில் படிக்கவும்)பிடுங்கறது நல்லா இருந்திச்சு நல்லா இல்லிங்கோ இருந்திச்சு இல்லிங்கோ
:))))))))))
சும்மா ட்ட்டமாஷுதானே சிவா..
(உங்க வருகைக்கு நன்றி!)
அட எதிர்பார்க்கவில்லை இப்படியொரு முடிவை....எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..? :)
அல்லாம் ரூம் போட்டுத்தான்!
யூகிக்க முடிந்த முடிவெனினும் நல்லாயிருந்தது.
/விக்கி விக்கி/ எனப் பின்னூட்டத்தில் இப்படி விக்கியிருக்கிறீர்களே:)! சரி பரிசலை நிறுத்தி ஆற்று நீரை அள்ளிப் பருகிக் கொள்ளுங்கள்:)!
//(Blog ஆரம்பிச்சப்புறம் பழைய டைரியக் கிளர்றது தானே வேலை!//
சரியாச் சொன்னீங்க. நானும் அதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
நன்றி ராமலட்சுமி மேடம்..
(என்னங்க.. அடிக்கடி வராம போயிடறீங்க?)
//(என்னங்க.. அடிக்கடி வராம போயிடறீங்க?)//
இனி வந்துட்டா போச்சு!
Vert Super
ஏன் அண்ணா கதை முடுஞ்சுத? இன்னும் திருப்பம் வருமம்மா?
you started with priya and ended with Divya. bad writing.
adadadadadadaaaaaaaaaa
adadadadadadaaaaaaaaaa
Post a Comment