Wednesday, June 4, 2008

அவியல்-5

(இன்றைய அவியலுடன் இலவச இணைப்பு- ‘தரிசனம்’ கவிதை-படிக்கத்தவறாதீர்கள்!)

நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் வலைப்பதிவர் சென்ஷி-க்கு இப்பதிவு சமர்ப்பணம்

வலைப்பதிவு ஆரம்பித்தது முதல், முதன்முறையாக இரண்டு நாட்களாய் ஒரு பதிவு கூட போடவில்லை. ஏன்? விடை கடைசியில்...
**************************************************
"அவருடைய உழைப்பைப் பற்றி கேட்கவே வேண்டாம். ‘ஒரு மனிதனால், தொடர்ந்து, இத்தனை வருட காலம் இவ்வாறு உழைக்க முடியுமா?’ என்று மலைப்பை ஏற்படுத்துகிற உழைப்பு. இவருடைய உழைப்பின் முன்னால், மற்ற பலரின் உழைப்பு, வெறும் பொழுது போக்கே. உழைப்பு பொதுவாக எல்லோருக்கும் ஒரு கடமை. கலைஞருக்கோ அதுதான் உயிர் மூச்சு."
-நேற்று 85-வது பிறந்தநாள் கண்ட இளைஞர் கலைஞரை இப்படிப் பாராட்டியிருப்பவர்.. சோ! (வாலியின் ‘கலைஞர் காவியம்’ அணிந்துரையில்)
-----------------------------------------------------------------------------
திருப்பூரின் முன்னணி ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் நடந்ததாக சொல்லப்படும் ஒரு சம்பவம்.

டி-சர்ட் ஏற்றுமதி செய்யப்படும் அந்த நிறுவனத்தில், நாய் ஒன்றின் முகம் மார்புப் பகுதியில் இருப்பது போல எம்பிராய்டரி டிசைன் செய்யப்பட்ட ஒரு ஆர்டர். அந்த எம்பிராய்டரியின் தரம் (Quality) சரியில்லாததால் அதன் தரத்தை பரிசோதிக்க வந்த Buying QC (Quality Controller) அந்த ஆர்டரை Re-check செய்ய உத்தரவிடுகிறார். (Re-Check என்றால் pack செய்யப்பட்ட எல்லா டி-சர்ட்களையும் பிரித்து என்ன குறைக்காக re check இடப்பட்டதோ, அதை நிவர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். Re check என்பது எந்த ஒரு ஏற்றுமதி நிறுவனமும் வெறுக்கும் சொல். பணச் செலவு, நேர விரயம் என்பதைவிட மிகப்பெரிய அவமானம்! அந்த குறிப்பிட்ட buyer-இடம் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் வேறு.)
நிறுவனத்தை சார்ந்த ஊழியர்கள் கடுமையாக உழைத்து, re check செய்து மீண்டும் buying QCயிடம் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், மறுபடி அதே நாய் டிசைனில் பல குறைகள்.. வெறுத்துப் போன அந்த QC இந்த முறையும் re check ஆர்டர் குடுத்துவிட்டு, நிறுவனத்தின் முதலாளிக்கும் அலைபேசியில் சொல்லி விடுகிறார். முதலாளிக்கு செய்தி போனதும், எல்லா சீனியர்களுக்கும் கிலியடித்துவிடுகிறது. Buying குவாலிட்டி இன்ஸ்பெக்டர் குறையென்று சொன்ன ஒரு சில டி-சர்ட்டுகளை எடுத்துக் கொண்டு முதலாளியின் அறைக்குள் செல்கிறார்கள் அவர்கள். முதலாளியின் டேபிளில் அவற்றைப் பரப்பி வைக்கிறார் நிறுவனத்தின் quality manager. அந்த நாய் டிசைன்களையெல்லாம் ஒரு முறை பார்க்கிறார் முதலாளி. பிறகு ப்ரொடக்ஷன் மேனேஜர், குவாலிட்டி மேனேஜர், எம்பிராய்டரி இன்சார்ஜ் என்று சுற்றி இருப்பவர்களை பார்க்கிறார். பிறகு சொன்னார் இப்படி:-

"Buying Inspector சொன்னது சரிதான். இங்க இருக்கற நாய்கள்ல எந்த நாயும் சரியில்ல!"
---------------------------------------------------------------------------------------
நேற்று புத்தக அலமாரியில் ஏதோ புத்தகத்தை தேடும் போது சுஜாதாவின் புத்தகங்கள் கண்ணில் பட்டன. அவர் இறந்த பிறகு, அவரது புத்தகங்களை நான் தொடவேயில்லை. விகடனில் வாரம் ஒரு சிறுகதை வெளியிடுகிறார்களே, அதைப் படிப்பதோடு சரி! நேற்று என்னையும் அறியாமல் கைகள் அவரை தொட்டன. ஸ்ரீரங்கத்து தேவதைகள், நீர்க்குமிழிகள், கணையாழியின் கடைசி பக்கங்கள், கனவுத்தொழிற்சாலை, ஆ, நகரம், சிறுகதை எழுதுவது எப்படி, குருப்ரசாத்தின் கடைசிதினம், மத்யமர், விவாதங்கள் விமர்சனங்கள், 21-ம் விளிம்பு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஓலைப்பட்டாசு, நிஜத்தைத்தேடி............. இன்னும்..இன்னும். ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் படித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னையும் அறியாமல் கண்ணிலிருந்து கண்ணீர் வந்துவிட்டது! We miss you boss!
--------------------------------------------------------------------------------
தரிசனம் (கவிதை - இலவச இணைப்பு)

முட்டித்தள்ளிய கூட்ட நெரிசலில்
கம்பியைவிட்டு விலகி
என் பின் நின்றிருந்த
மூதாட்டிக்கு இடம்தந்து-
ஆராதனையின்போது
அவள் கண்களில் கண்டேன்
இறைவனை.
-----------------------------------------------------------------------------
முதலில் கேட்ட கேள்விக்கு பதில்.. ‘மேட்டர் இல்லீங்ணா..’

6 comments:

வால்பையன் said...

பத்துமேட்டற ஒரே பதிவுல போட்டா எப்படிங்கண்ணா
தனியா பதிவு போட மேட்டர் கிடைக்கும்

வால்பையன்

முரளிகண்ணன் said...

பனியன் மேட்டர் சூப்பர் ஆனாலும் வருத்தத்தை வரவழைத்தது

☼ வெயிலான் said...

கேபிகே,

என்ன இது? தொழில் நுணுக்கங்களையெல்லாம் வெளியே சொல்லப்டாது.

சென்ஷி said...

//வால்பையன் said...
பத்துமேட்டற ஒரே பதிவுல போட்டா எப்படிங்கண்ணா
தனியா பதிவு போட மேட்டர் கிடைக்கும்

வால்பையன்
//

ஹி.. ஹி... ரிப்பீட்டே :)))

சென்ஷி said...

//நான் மிகவும் நேசிக்கும், மதிக்கும் வலைப்பதிவர் சென்ஷி-க்கு இப்பதிவு சமர்ப்பணம்//

ஏன் இந்த கொல வெறி :)))

சென்ஷி said...

தரிசனம் கவிதை அழகு :)