Thursday, June 12, 2008

முன்குறிப்புகள்

நான் சமீபத்தில் ரசித்துப் படித்த தானே கேள்வி! தானே பதில்!! (இதை எழுதியவர் யாரென்று தெரிகிறதா?)

கேள்வி: என்னது.. நீங்களும் ‘தானே கேள்வி தானே பதில்’ ஆரம்பிச்சுட்டீங்க?பதில்: நம்மளையெல்லாம் யாரு கேள்விகேட்கப்போறாங்க’ன்னு தைரியம்தான்!
------------------------------------------
கேள்வி: ரோட்டில் குப்பை கொட்டினால் அபராதம்’ என்று சட்டம் வந்துவிட்டதைப் பற்றி?
பதில்: அந்த சட்டத்தை குப்பையில் கொட்டி, அந்தக் குப்பையை ரோட்டில் கொட்டிவிடுவார்கள் நம்மவர்கள்.
-------------------------------
கேள்வி: பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாதாமே?
பதில்: அவரவர் உதட்டில் தானே பிடிக்கிறார்கள்? அது பொது இடமா? Jokes apart.. இந்த சட்டத்தால் பலருக்கு உள்ளுக்குள் புகைகிறதாய் கேள்வி!
-----------------------------
கேள்வி: ஐ.பி.எல்-லை ராஜஸ்தான் வென்றது குறித்து..பதில்: வாழ்த்துக்கள். ஆயினும் சென்னையைத் தவிர வேறு எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தாலும், ஷேன் வார்னேவை இப்படி கடைசி பந்து வரை மிரட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே!
-----------------------------------------------
கேள்வி: தசாவதாரம் ரிலீஸ் ஏன் தாமதமாகிறது?
பதில்: எடிட்டிங் செய்யும் போது, நீளம் அதிகம் என்று வேண்டாத சிலர் நடித்த பல பகுதிகளை வெட்டி விட்டார்களாம். கடைசியில் கமல் ப்ரிவ்யூ பார்த்து ‘நான் நடித்த சில பாத்திரங்கள் காணவில்லையே’ என்று கேட்ட பிறகுதான் வெட்டிய பல பகுதிகளில் இருந்தது கமல் என்று தெரிந்ததாம். இப்போது மறுபடி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
--------------------------------------------
கேள்வி: நீயெல்லாம் வலைப்பதிவு எழுதலன்னு யாரு அழுதா?
பதில்: நானேதான் அழுதேன். ‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு! படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்!
-----------------------------------------
கேள்வி: போதைமருந்து வைத்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் கைது செய்யப்பட்டது பற்றி?

பதில்: ஆ..! ச்சீப்!
***********************************
முந்தைய அவியலில் இந்த மாதிரி மிக்ஸ் பண்ணி எழுதும் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாமென்று கேட்டிருந்தேன். எக்கச்சக்கமான ஐடியாக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்த உள்ளங்களுக்கு நன்றி! (நற..நற) `முன்குறிப்புகள்' ஓக்கேவா? வேறு யாராவது இந்தத் தலைப்பில் எழுதுகிறார்களா? தெரியல.. தெரிஞ்சா சொல்லுங்க மாத்திக்கறேன்!
-----------------------------
சரியா.. தப்பா?


அந்த முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை கேட்டு அவ்விரு பெண்களும் வந்திருந்தார்கள்.. இருபது, இருபத்தி ஒன்று வயது. நல்ல சிகப்பு. கேரளாவை சேர்ந்த இருவருக்குமே தமிழ் சுத்தமாக தெரியவில்லை. அக்கா போல இருந்த ஒரு பெண் அழகாக இருந்தாள். தங்கை சுமார்தான். நிறுவனத்தின் எம்.தி. இன்டர்வியூ நடத்தினார். ஐயோ பாவம்.. இருவருக்கும் ஆங்கிலமும் அவ்வளவாகத் தெரியவில்லை. உடனே அவர் அவ்விரு பெண்களையும் மலையாளம் தெரிந்த மற்றொரு சீனியரிடம் அனுப்பி வைத்தார். அவர் நேர்முகத்தேர்வு நடத்தி அக்கா மட்டும் செலக்ட் ஆனதாக எம்.டி.இடம் சொன்னார். எம்.டி. கையெழுத்து போடும் சமயம் அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் "pls you once see the applicants. He's telling only one selected. Anyhow we need freshers now" என்று அப்பிளிக்கேஷனை என்னிடம் கொடுத்தார். நான் இருவரிடமும் பேசியதில் (மலையாளத்தில்தான்) அந்த சீனியர் சொன்னது சரிதான் என்று தெரிந்தது. ஆனால் முடியும் சமயம் ஒன்றாக அழைத்து தங்கையிடம் `உன் அக்காவுக்கும் அவ்வளவாக தமிழ் தெரியவில்லை.. ஆனால் நீ ஏன் உனக்கு உன் அக்கா மாதிரி இல்லாமல் நெர்வசாக இருக்கிறாய்?' என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் பேசாமலே தலை குனிந்து நின்றாள். அப்போது அக்காள் அவள் தங்கையை "நீ ஏன்பா இப்படி இருக்க?" என்பது போல கண்ணில் நீர் கோர்க்க ஒரு பார்வை பார்த்தாள் பாருங்கள்.. எனக்கு என்னவோ போலாகிவிட்டது. உடனே இருவரது அப்ளிகேஷனிலும் `செலக்டட்' என்று கையொப்பமிட்டு HRDக்கு அனுப்பி விட்டேன்!
----------------------------------------------
ஒரு ஜோக்..

நம்மாளு ஒரு பார்க்குல, பெஞ்சுல படுத்திருக்காரு. ஒருத்தர் வந்து ஸ்டைலா இங்கிலீசுல "ஆர் யூ ரெஸ்டிங் ?" னு கேட்டிருக்காரு. நம்ம ஆளு நம்மளை மாதிரி (என்னை சொல்லிகிட்டேன்) அரைகுறையா இருக்கறதால புரியாம "நோ.. நான் கருப்பசாமி" ன்னிருக்காரு. கேட்டவரு மண்டைய சொறிஞ்சிகிட்டு போய்ட்டாரு. திரும்ப பத்து நிமிஷத்துல வேறொருத்தர் வந்து அதே மாதிரி "ஆர் யூ ரெஸ்டிங் ?" ன்னு கேட்க, இப்பவும் நம்மாளு "நோ.. நான் கருப்பசாமி" ன்னுட்டாரு. திரும்ப ஒரு அரை மணி நேரத்துல நாலஞ்சி பேர் அதே கேள்விய கேட்டிருக்காங்க. நம்மளும் அதே பதிலா சொல்லி இருக்காரு! அப்பறம் வெறுத்துப் போய் எழுந்து கொஞ்ச தூரத்துல இருந்த என்ச்சுள் படுத்துட்டு இருந்தவர் கிட்ட போய் "ஆர் யூ ரெஸ்டிங்?" னு கேட்டிருக்காரு. அவரும் "எஸ்.. ஐயாம் ரெஸ்டிங்"ன்னுருக்காரு. கோவம் வந்தது பாருங்க நம்மாளுக்கு.. "யோவ்.. உன்னை எல்லாரும் அங்க தேடிட்டு இருக்காங்க.. நீ என்னய்யா இங்க வந்து ஜாலியா படுத்து போஸ் குடுத்துட்டு இருக்க?" ன்னு புடிச்சு வாங்கிட்டாரு!
---------------------------------------
முதல் மரியாதை பட முதல் நாள் ஷூட்டிங்.. சிவாஜி வர, மாலை - மரியாதைகள் முடிந்து பாரதிராஜா பணிவாக நடிகர் திலகத்திடம் சென்று.. "உங்களையெல்லாம் பார்துதாங்க நானும் மாத்திக்கறேன்சென்னை வந்தேன்" என்கிறார். பட்டென கேட்டார் சிவாஜி..

"ஏன்.. உங்க ஊர்ல கண்ணாடியே கிடையாதா?"
--------------------------------------
முதலில் இருக்கும் கேள்வி பதில்கள் நான் எழுதினதுதான்.. ஒரு பின்னூட்டம் கூட வர்லீன்னா.. இப்படித்தான் கழுத்தறுப்பேன்!

11 comments:

கோவி.கண்ணன் said...

கிருஷ்ணகுமார் என்ற பெயர் வைத்து இருப்பவர்கள் லொள்ளர்களா ?
:)

பரிசல்காரன் said...

என்னை விடுங்க.. லக்கி லுக் மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்?

பரிசல்காரன் said...

கோவி ஜி .. ரா.கி.ர-வோட புனைப்பெயரும் கிருஷ்ணகுமார்தான் தெரியுமா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு! படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்!//

இப்பவே நாங்க பதிவா அதாவது தொடர்ந்து இந்த குறிப்புகளை வாசிக்க ஆரம்பிச்சாச்சு கவலை விடுங்க..

கிரி said...

//முதலில் இருக்கும் கேள்வி பதில்கள் நான் எழுதினதுதான்.. ஒரு பின்னூட்டம் கூட வர்லீன்னா.. இப்படித்தான் கழுத்தறுப்பேன்//

பரிசல்காரன் உங்க பதிவை நான் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டு இருப்பேன் :-) உண்மையாகவே நன்றாக இருந்தது. பேச்சிற்காக கூறவில்லை.

ஒரு கேள்வி பதிலுக்குண்டான நக்கல் நகைச்சுவை அதில் இருந்தது. வாழ்த்துக்கள்.

நிறைய கேள்வி பதில்கள் தற்போது வருவதால் அதை படிக்கும் ஆர்வம் போய் விட்டது. அதனாலேயே உங்கள் பதிவையும் தவறவிட்டு விட்டேன்.

anujanya said...

கே.கே,

சுவாரஸ்யமாக உள்ளது கேள்வி-பதில் பகுதி. ஒரு மெல்லிய ஹாஸ்யம் இருக்கவேண்டும் எப்போதும். அஃது உங்களிடம் இருக்கிறது. தொடருங்கள்.
தொடர என்றதும் நினைவுக்கு வருகிறது. அந்த 'அக்கா-தங்கை' கதையில் வேறு ஏதேனும் சுவையான திருப்பங்கள்?

ambi said...

//அந்த 'அக்கா-தங்கை' கதையில் வேறு ஏதேனும் சுவையான திருப்பங்கள்?
//

மறு நாள் தலையில் பூரிகட்டை காயத்துடன் பரிசல்காரர் ஆபிஸ் வந்தாராம். :p

rapp said...

நான் அப்போ ஊர்ல இல்லைங்க(ஹஸ்பண்டோட பிறந்தநாள், அதனால் மாமியார் வீட்டுக்கு போயிருந்தேன்), அதனால யார் பதிவயுமே ஒழுங்கா படிக்கமுடியல. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க இந்த கேள்வி பதிலை ஜாஸ்தி எழுதலாமே. ரொம்ப சூப்பர். தலைப்பு ஓகே,ஆனா திருப்பி யோசிங்க. வேறொரு தலைப்பு கெடச்சா வைங்க. அதென்னங்க ஆண்களுக்கெல்லாம் மல்லு பிகருங்களை பார்த்தா மட்டும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது(சும்மா ஜாலியா சொன்னேன், கோச்சுக்காதீங்க) resting ஜோக்க நெறைய தடவை கேட்ருக்கேன். இவரு மாதிரிப்பட்டவங்க கொழுப்ப அடக்கத்தான் இப்போ எங்க தலை ஜெ.கே.ரித்தீஷ் வந்துருக்கார். சிவாஜியாம்,கமலாம் இவருக்கு இவங்கெல்லாம் ஈடாவாங்களா?

பரிசல்காரன் said...

//இப்பவே நாங்க பதிவா அதாவது தொடர்ந்து இந்த குறிப்புகளை வாசிக்க ஆரம்பிச்சாச்சு கவலை விடுங்க..
//
நன்றி கயல்விழி.. நான் கவலைப் படறதை நிறுத்திக்கறேன். இனி படிக்கப் போற நீங்க ஆரம்பிங்க!

//பரிசல்காரன் உங்க பதிவை நான் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டு இருப்பேன் :-) உண்மையாகவே நன்றாக இருந்தது. பேச்சிற்காக கூறவில்லை.//

மிக்க சந்தோஷம் கிரி! (உங்க profile படம் சூப்பர்! அதைப் பார்த்துதான் உங்க பிளாக்குக்கு வந்தேங்கர உண்மைய ஒத்துக்கறேன்!)

//அந்த 'அக்கா-தங்கை' கதையில் வேறு ஏதேனும் சுவையான திருப்பங்கள்?//

வருகைக்கு வன்றி அனுஜன்யா! (பெயர் வித்தியாசமாக/நன்றாக உள்ளது!) அந்த திருப்பம் அதைவிட சுவாரஸ்யம்.. அடுத்த முன்குறிப்புகளில் சொல்கிறேன்!

//மறு நாள் தலையில் பூரிகட்டை காயத்துடன் பரிசல்காரர் ஆபிஸ் வந்தாராம்//

அம்பி.. வீட்டில் இன்னும் படிக்கவில்லை அந்தப் பதிவை. படித்தால் நடக்கலாம்! (பையன் நலமா?)

//அதென்னங்க ஆண்களுக்கெல்லாம் மல்லு பிகருங்களை பார்த்தா மட்டும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது//

உண்மைதான் ராப். ஆனால் இந்தப் பதிவில நான் சொல்ல வந்தது பிகரைப் பார்த்து மயங்கின விஷயமில்லை. என் ரெண்டு மகள்ல பெரியவ கொஞ்சம் விவரம்-சின்னவளை விட. எதுக்காவது சின்னவ திட்டு வாங்கிட்டு இருக்கும் போது பெரியவ வேற என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் ஓரக்கண்ணால சின்னவ எப்படி சமாளிக்கறா, அழுதுடுவாளா-ன்னு நோட் பண்ணிட்டே இருப்பா. அந்த ஞாபகம் வந்துடுச்சு!

அப்புறம் ராப், எப்படி இப்படி ஒரு பதிவுல இருக்கற எல்லா மேட்டருக்கும் பின்னோட்டம் போடுறீங்க? ரியல்லி கிரேட்!

Udhayakumar said...

ஜோக் நல்லா இருக்கு. நல்லாவும் எழுதறீங்க :-)

நம்ம ஊரு கொங்கு தமிழில் அள்ளி விடுங்க. "ரெண்டு நாள நான் ஒன்னும் படிக்கலை"ன்னு அழ ஆட்கள் சேரக்கூடும்.

சென்ஷி said...

கலக்குறீங்க அண்ணா :))

பார்க்கு ஜோக்கு சூப்பரு :)))