“சில நாட்களாக என்று சொல்ல முடியாமல் பல நாட்களாகவே இணையத்தொல்லை இருந்து வருகிறது.
பதிவை படித்துவிட்டு பின்னூட்டமிட செல்லும்போது இணையத்தொடர்பிலிருந்து பதிவுகள்
விடுபட்டு தன்னிச்சையாக அதிகாரம் புரியும் மோசமான சர்வாதிகாரியின் வாயிலிருந்து
வெளிவரும் சிகரெட் புகைபோல் மாறி மீண்டும் சுயாட்சியை தேடச்சொல்கிறது.
கடினம்தான். பதிவுகளை படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்லும் அவலநிலை
காதலியை தூர இருந்து ரசிக்கும் மனோபாவம் ஒத்ததை விட அவள் கணவனுடன் செல்லும்
துர்பாக்கியத்தை பெற்றவனாகவே கருதுவேன்.
எனினும்.. கலங்க வேண்டாம்.. கலக்கம்
வேண்டாம். ரோஜாவில் அமர்ந்து தன்னை அழகாக்கிக்கொண்ட அந்த பனித்துளியென்ற
உவமானத்தில் உங்கள் பதிவில் எனது பின்னூட்டம். அந்த முத்து நீர் மொட்டுக்கள் சூரிய
வரவால் காற்றில் கலப்பதுபோல் நானும் என் பின்னூட்ட எழுத்துக்களுடன் உங்களை தேடி
வருவேன். வந்து கொண்டே இருப்பேன்.”
என்னடா இது, இவரு சாதரணமாப் பேசறதே இந்தமாதிரி பின்நவீனத்துவமாகத்தான் இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டேன். என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டவர்களுக்கு எப்போதும் ஏதாவதொரு பதிலை, நன்றியைத் தெரிவிப்பது என் வழக்கம். எத்தனையோ பணிகளுக்கிடையே, நம்மை மதித்து வந்து போகிறார்களே என்ற அன்பில். நேற்று அதுவும் முடியவில்லை. இந்த சென்ஷியின் பதிலை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அதோடு நான் என் பின்னூட்டத்திலேயே எழுதிய ஒன்றையும் இங்கே எடுத்து இடுகிறேன்.
இடையறாத பணியினாலும்,
இடையே வந்தபோதெல்லாம்
இடையூறு செய்த
இணையத்தொடர்பாலும்
இடைவிடாது
இங்குவந்து நன்றிசொல்ல
இயலாமைக்கு வருந்துகிறேன்!
---------------
”சுப்பிரமணியபுரம்” படம் பார்த்தேன்! என்ன ஒரு இயல்பான படம்! படத்தில் என்னை மிகக் கவர்ந்தவர் சசிக்குமார்! சச்சினும், சேவாக்கும் ஆடும்போது, சேவாக்கை அடித்து ஆடவிட்டு பார்ட்னர்ஷிப் கொடுத்துக் கொண்டே, சேவாக் அவுட் ஆனால், பிறகு சச்சின் வெளுத்துவாங்குவாரே, அதே போல ஜெய்யை முதலிலிருந்தே அடித்து ஆடவிட்டு, அவர் இறந்ததும் தூள் கிளப்பிவிட்டார்! சசிக்குமார் எந்த ஒரு ஃபிரேமிலும் படம் பார்ப்பவர்களை அவர் ஒரு நடிகரென்று நினைக்காத வண்ணம் வெகு இயல்பாக நடித்திருக்கிறார்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ! அப்புறம் அந்த ஹீரோயின் சுவாதி! எனக்கு நான் சைட்டடித்த பழைய ஃபிகர்களையெல்லாம் ஞாபகத்துவர வைத்துவிட்டார்! (அடுத்த படத்தில் இவரை அரைகுறை ஆடையோடு எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்!)
-------------------------------
சுப்பிரமணியபுரம் படம் பார்க்கும்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு பொறம்போக்கு கதையை சொல்லிக்கொண்டே வந்தான். வேண்டுமென்றே மாற்றி, மாற்றிச் சொன்னான். க்ளைமாக்ஸின் போது எனக்கும் அவனுக்கும் சண்டையாகி விட்டது. கேட்டால் `நான் என் ஃப்ரண்டுகிட்டதான் பேசினேன்.. நீங்க காதைப் பொத்திகிட்டு இருக்கலாம்ல’ என்று வேறு வியாக்கியானம் கொடுத்தான். வேறு சிலரும் எனக்கு சாதகமாகப் பேசியதால் மூடிக்கொண்டு போய்விட்டான். இந்த மாதிரி படத்தை ரசிக்க விடாமல், கதை சொல்லுபவர்களுக்கு பயந்தேதான் முதல் நாளிலேயே படம் பார்க்க விரைவேன்.
டிஸ்கி: என் பைக்கில் பாரதியார் படம் போட்டு `அச்சம் தவிர்’ என்று எழுதி வைத்துள்ளேன். அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.
-----------------------------------
இதுவும் சுப்பிரமணியபுரம் படம் பற்றித்தான். இசை ஜேம்ஸ் வசந்தன்! அருமை! `கண்கள் இரண்டால்’ பாடல் மனதில் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இது எந்தப் பாடலின் சாயல் என்று தெரிகிறதா?
கவிக்குயில் படத்தில் தலைவர் இளையராஜா இசையில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய `சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ பாடலின் சாயலிருக்கிறதா? ஒருவேளை அந்தப் பாடலின் ராகத்திலேயே (ரீத்திகௌலா) இதுவும் அமைக்கப்பட்டிருக்கிறதோ? தெரியல சாமி!
”சின்னக்கண்ணன் அழைக்கிறான்..
ராதையைப் பூங்கோதையை
அவள் மனக்கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி..”
ச்சே! என்னா ஒரு பாட்டு!
---------------------
ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன சைஸ்தான் அழகு! எங்காவது பயணிக்கும்போது, ஈஸியாக எடுத்துச்சென்று படிக்க வசதியாய், கைக்கு அடக்கமாய் இருந்தது. இதுபற்றி பதிவுலக நண்பர் வடகரைவேலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது “அவங்களோட மத்த எல்லா பத்திரிகைகளும் பெரிய சைஸ்லதான் வருது. இதுமட்டும் ச்சின்னதா வர்றதுல டெக்னிக்கலா இழப்பிருக்கு. அதுனால மாத்தீருப்பாங்க” என்றார். ”அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன ஃபார்மெட் தானே?” என்று நான் கேட்பதற்குள் என் அலைபேசியில் பாட்டரி தீர்ந்துவிட்டது! ஆப்செட் ப்ரஸ் வைத்திருக்கும் அவர் இதுபற்றி விளக்குவார்!
--------------------------------------
சென்னை செல்வதற்காக என் கஸின் ப்ரதர் (கிரேசி கிரியின் அண்ணா) திருப்பூர் ரயில் நிலையம் வந்திருந்தார். ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அங்கேயிருந்த ஒரு அறிவிப்பை கவனித்தேன்.
`பயனிகள் கவணிக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.
“பாருண்ணா, தமிழை எப்படிக் கொலைபண்ணியிருக்காங்கன்னு” என்று காட்டினேன். அவர் பார்த்துவிட்டுச் சொன்னார்.
“மூணு சுழி ண வரவேண்டிய இடத்துல ரெண்டு சுழி னவும், ரெண்டு சுழி ன வரவேண்டிய இடத்துல மூணு சுழி ண வும் வந்திருக்கறத சொல்றயா?”
“ஆமா”
“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”
சந்தோஷம்! மகிழ்ச்சி!
--------------------------
இன்றைக்கு நான் குறிப்பிடப் போகும் கவிதையும் `எங்கே இந்தக் கவிஞர்கள்’ வரிசையில் வராது. காரணம் இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது அடிக்கடி பத்திரிகைகளில் வந்துகொண்டுதானிருக்கிறது. பலமுறை நான் சொன்னதுபோல எனக்கு மிகப் பிடித்த, மிக மிகப் பிடித்த கவிஞர் ரவிசுப்பிரமணியம் அவர்கள் மனிதாபிமானம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இதோ!
மரித்துப் போனது
மனிதமனம்
பக்கத்துவீட்டு
மரணம்
எதிர்வீட்டுத்
திருட்டு
அடுத்தவீட்டுப் பெண்
ஓட்டம்
கோடி வீட்டுத்
தகராறு
நமக்கேன் வம்பு.
கதவை மூடு.
டிஸ்கி: கொஞ்சநாளாக தமிழ்மணத்தை திறக்கவே பயமாயிருக்கிறது!
------------------------
38 comments:
//அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.
:-)
//என்னடா இது, இவரு சாதாரணமாப் பேசறதே இந்தமாதிரி பின்நவீனத்துவமாகத்தான் இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டேன்.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
//இடையறாத பணியினாலும்,
இடையே வந்தபோதெல்லாம்
இடையூறு செய்த
இணையத்தொடர்பாலும்
இடைவிடாது
இங்குவந்து நன்றிசொல்ல
இயலாமைக்கு வருந்துகிறேன்!//
இதை நான் என் பதிவுலயும் யூஸ் பண்ணிக்கட்டா :))
//டிஸ்கி: என் பைக்கில் பாரதியார் படம் போட்டு `அச்சம் தவிர்’ என்று எழுதி வைத்துள்ளேன். அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.//
ஹா...ஹா...ஹா... :))
கவிஞர். ரவிசுப்ரமணியத்தின் கவிதை சூப்பர்......
இங்கப்பாருங்கண்ணே... ஒண்ணுக்கு நாலு (இது அஞ்சாவது) கமெண்டா போட்டுட்டேன். மறுபடி மெயில் அனுப்பி பின்னூட்டம் வரலைன்னு மிரட்டக்கூடாது. சொல்லிப்புட்டேன். நான் சின்னப்புள்ள. பயந்துடுவேன்... :))
அப்புறம் நீங்க எனக்கு அனுப்பின மெயிலையும் பதிவுல ஏத்தி உங்க பரிசலை கப்பல் ஏத்திவுட்டுடுவேன். :))
மிக்க நன்றி சரவணக்குமரன்!
@ சென்ஷி..
திறந்ததும் ஆறு பின்னூட்டம்ன்னு இருந்ததுமே, ஆறுமே உங்களோடதாத்தான் இருக்கும்ன்னு நெனச்சேன்! ஜஸ்ட் மிஸ்! (பாம்பின் கால்...)
//இதை நான் என் பதிவுலயும் யூஸ் பண்ணிக்கட்டா :))//
என்ன கேள்வி இது? நான் உங்களுக்கு கெஞ்சிக் கூத்தாடி ஒரு மெயில் அனுப்பி, அதுக்கு நீங்க எனக்கு அழகா அனுப்பியிருந்த பதிலை உங்களைக் கேக்காமயே நான் போட்டுக்கலியா? என்ன வேணா பண்ணிக்கோங்க!
//மறுபடி மெயில் அனுப்பி பின்னூட்டம் வரலைன்னு மிரட்டக்கூடாது. சொல்லிப்புட்டேன்.//
இதை கட்பண்ணி பேஸ்ட் பண்ணி, “ஓஹோ இதுதான் பரிசல்காரன் பதிவுக்கு பின்னூட்டம் திரட்டுற ஐடியாவா?” என்று பின்னூட்டம் போட ஐ.பி.சி. (இண்டியன் ப்ளாக்கர் கோட்) செக்ஷன் 144ன் படி தடை விதிக்கப்படுகிறது!
//@ சென்ஷி..
திறந்ததும் ஆறு பின்னூட்டம்ன்னு இருந்ததுமே, ஆறுமே உங்களோடதாத்தான் இருக்கும்ன்னு நெனச்சேன்! ஜஸ்ட் மிஸ்! (பாம்பின் கால்...)//
அதுக்கென்ன இப்ப.. ஆறாவது கமெண்டும் போட்டாச்சுல்ல :))
/பரிசல்காரன் said...
//மறுபடி மெயில் அனுப்பி பின்னூட்டம் வரலைன்னு மிரட்டக்கூடாது. சொல்லிப்புட்டேன்.//
இதை கட்பண்ணி பேஸ்ட் பண்ணி, “ஓஹோ இதுதான் பரிசல்காரன் பதிவுக்கு பின்னூட்டம் திரட்டுற ஐடியாவா?” என்று பின்னூட்டம் போட ஐ.பி.சி. (இண்டியன் ப்ளாக்கர் கோட்) செக்ஷன் 144ன் படி தடை விதிக்கப்படுகிறது!
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... :))
எந்த பால் போட்டாலும் கோல் போடுறீங்களே!
மு
டி
ய
ல!
//ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன சைஸ்தான் அழகு! எங்காவது பயணிக்கும்போது, ஈஸியாக எடுத்துச்சென்று படிக்க வசதியாய், கைக்கு அடக்கமாய் இருந்தது. இதுபற்றி பதிவுலக நண்பர் வடகரைவேலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது “அவங்களோட மத்த எல்லா பத்திரிகைகளும் பெரிய சைஸ்லதான் வருது. இதுமட்டும் ச்சின்னதா வர்றதுல டெக்னிக்கலா இழப்பிருக்கு. அதுனால மாத்தீருப்பாங்க” என்றார். ”அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன ஃபார்மெட் தானே?” என்று நான் கேட்பதற்குள் என் அலைபேசியில் பாட்டரி தீர்ந்துவிட்டது! ஆப்செட் ப்ரஸ் வைத்திருக்கும் அவர் இதுபற்றி விளக்குவார்!//
அவ்வ்வ்வ்வ்...வியல்...நல்லா இருக்கு ! ஆனால்
இது போல் ஆங்கிலமும், தமிழும் கலந்து கலந்து எழுதுவது இயல்பாக வந்தாலும், முடிந்த வரையில் மாற்றிக் கொள்வது நல்லது.
ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன அளவு(சைஸ்)தான் அழகு! எங்காவது பயணிக்கும்போது, எளிதாக(ஈஸியாக) எடுத்துச்சென்று படிக்க வசதியாய், கைக்கு அடக்கமாய் இருந்தது. இதுபற்றி பதிவுலக நண்பர் வடகரைவேலனிடம் பேசிக்கொண்டிருந்தபோது “அவங்களோட மத்த எல்லா பத்திரிகைகளும் பெரிய அளவில்(சைஸ்ல)தான் வருது. இதுமட்டும் ச்சின்னதா வர்றதுல தொழில் நுட்ப(டெக்னிக்கலா) இழப்பிருக்கு. அதுனால மாத்தீருப்பாங்க” என்றார். ”அப்படீன்னா, விகடன் வெளியிடு(பிரசுரம்) மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன வடிவமைப்பு(ஃபார்மெட்) தானே?” என்று நான் கேட்பதற்குள் என் அலைபேசியில் மின்கலன் (பாட்டரி) தீர்ந்துவிட்டது! மின் அச்சகம் (ஆப்செட் ப்ரஸ்) வைத்திருக்கும் அவர் இதுபற்றி விளக்குவார்!
- பேசியதை அப்படியே எழுதி இருக்கிங்க, பரவாயில்லை. கட்டுரை போல் எழுதும் போது ஆங்கலம் கலக்காமல் எழுத முயற்சி செய்யுங்கள்
//அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.//
ரெளத்ரம் பழகு! இது கூட போடலாம். :)
அவ்வை சொன்னதை அழகு தமிழில் சொல்லி விட்டாஅ அம்பி:))!
//“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”
//
உங்க சொந்தகாரங்களும் உங்களை மாதிரியே திங்க் பண்றாங்க போல :))
@ கோவி.கண்ணன்
ட்ரை பண்றேங்க! (ஐயோ.. அடிக்காதீங்க..) முயற்சிக்கிறேன்!
கண்ணன் சார்.. என்னோட தம்பி (கிரேசி கிரி) பற்றி அடிக்கடி சொல்வேனில்லையா? அவர் உங்கள் தமிழார்வத்தை வியந்து வியந்து பலரிடம் சொல்லியிருக்கிறார்! உங்கள் வலைப்பூவில் நீங்கள் கொடுத்திருக்கும் தமிழ்சொற்களை அவர் அடிக்கடி எடுத்துப் பார்ப்பார்!
கருத்துக்கு மிக்க நன்றி! கருத்து, கருத்தாய் இருந்தமைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
@ ambi & ராமலட்சுமி
ambi said...
//அதை மாற்றி `நையப்புடை’ என்று எழுதலாமா என்று யோசிக்கிறேன்!.//
ரெளத்ரம் பழகு! இது கூட போடலாம்.
ராமலக்ஷ்மி said...
அவ்வை சொன்னதை அழகு தமிழில் சொல்லி விட்டாஅ அம்பி:))!
அச்சம் தவிர் என்பது முதற்படி. அச்சத்தைத் தவிர்த்தால் தீயவற்றைக் கண்டு வெகுண்டெழும் ரௌத்ரம் பழகும். ரௌத்ரம் பழகினால் செய்ய வேண்டியதுதான் “நையப்புடை!' எனக்கு ரௌத்ரம் அளவுக்கதிகமாய் இருப்பதால், அடுத்தபடியான, நையப்புடையை எழுதலாமா என்று யோசிக்கிறேன்!!!
சரிதானா?
// அப்படீன்னா, விகடன் பிரசுரம் மூலமா வர்ற புத்தகங்களெல்லாம் சின்ன ஃபார்மெட் தானே? //
விகடன் பிரசுர புத்தகங்களை வேற அச்சகத்துல அடிக்கிறாங்களாம்! ;)
// ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்யுங்கள் //
ரிப்பிட்டேய்.........
இல்லை. இல்லை. கோவியார் கோச்சுக்குவாரு.
நான் சொல்ல நினைத்தும் அதுவே!
@ வெண்பூ
//உங்க சொந்தகாரங்களும் உங்களை மாதிரியே திங்க் பண்றாங்க போல //
அவர் என்னை விட மூத்தவர். அதனால் அவர்களைப் போல நான்தான் எண்ணுகிறேன்!
@ வெயிலான்
// ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்யுங்கள் //
ரிப்பிட்டேய்.........
இல்லை. இல்லை. கோவியார் கோச்சுக்குவாரு.
நான் சொல்ல நினைத்தும் அதுவே!//
வெயிலான்... நேத்து பேசும்போது நீங்களும் கான்ஃப்ரன்ஸில (மன்னிக்கவும்) இருந்தீர்ர்தானே.. ஏற்கனவே, பேச்சு வேறு, எழுத்து வேறாக இருக்கிறார்கள் எழுத்தாளர்கள்-ன்னு ஒரு பேச்சு இருக்கு! அதனால அப்படியே போட்டுட்டன்! எல்லாருமா இந்த வாரு வாருறீங்களே!
ஒரு நாள் கொஞ்சம் சீரியஸாக ஆணி புடுங்கிக் கொண்டிருந்தால்கூட ஆட்டத்திலிருந்து கழட்டி விட்டு விடுவீங்க போலிருக்கே.. ஆணியா.. நானான்னு பார்த்துவிடுகிறேன்! பரிசலுக்கும், வெண்பூவுக்கும் விசிட் அடிக்கிற அத்தனை பேரும் மருவாதியாக தாமிராவுக்கும் எட்டிப்பார்க்க வேண்டும் என்றும், கையோடு பின்னூட்டம் போட வேண்டும் என்றும் எச்சரிக்கிறேன். அல்லாங்காட்டி... அவ்வ்வ்வ்வ்வ்வ்..!
@ தாமிரா
தாமிரா, உலகம் பயங்கர பாஸ்ட்டா ஒடீட்டிருக்கில்ல.. நாமளும் வேகமா ஓடித்தான் ஆகணும்!
அப்புறம், உங்க வேண்டுகோள் பரிசல் - ச்சீ-- பரிசீலிகப்படுகிறது!
//இடையறாத பணியினாலும்,
இடையே வந்தபோதெல்லாம்
இடையூறு செய்த
இணையத்தொடர்பாலும்
இடைவிடாது
இங்குவந்து நன்றிசொல்ல
இயலாமைக்கு வருந்துகிறேன்!//
இதை நான் என் பதிவுலயும் யூஸ் பண்ணிக்கட்டா :))//
சென்ஷி அண்ணே! சொல்லப்புடாது..சுட்டுரனும்
//“விடுப்பா. ஒனக்கு மொத்தம் அஞ்சு சுழி வரணும்ல.. கூட்டிப்பாத்தா அஞ்சு சுழி வருதுல்ல. அப்பறம் என்ன?”//
:-) :-) :-) :-) :-) :-) :-) :-)
வாய்ப்பே இல்லை!
சரியான டைமிங்!
அன்புடன்
வெங்கட்ரமணன்!
இன்று அவியல் சுவையாக உள்ளது. எனக்கென்னவோ சென்ஷீயிடமிருந்து பி.ந.புயல் மெல்ல கிழக்கு-தென் கிழக்கு நோக்கி நகர்ந்து பரிசலில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
'நையப்புடை', 'ரௌத்ரம் பழகு' வின் அடுத்த படியே. நீங்க அடித்து ஆடுங்கள்.
அந்தப் பாடல் ரீதிகௌள ராகம்தான். 'சின்னக் கண்ணனும்' அதே. கூடுதல் தகவல் 'தலையைக் குனியும் தாமரையே', 'அழகான ராட்சசியே' கூட இதே ராகம்.
ஐந்து சுழி படித்ததும் அந்தக்கால dbase/foxpro மென்மொழிகளில் if & endif ஞாபகம் வந்தது. logic சரியில்லாவிடினும் syntax error வராது. ஐயோ எவ்வளவு ஆங்கிலப் பிரயோகம் ! விடு ஜூட்.
அனுஜன்யா
அந்தப் பாடல் ரீதிகௌள ராகம்தான். 'சின்னக் கண்ணனும்' அதே. கூடுதல் தகவல் 'தலையைக் குனியும் தாமரையே', 'அழகான ராட்சசியே' கூட இதே ராகம்.
//
ஆம்.ரித்திகொளளவே தான். அக்னிநட்சத்திரத்தில் தூங்காத விழிகள் ரெண்டு, நேருக்குநேரில் அவள் வ்ருவாளா, ஆசையில் கொஞ்ச நாள் பொறு தலைவா,
நீ பாதி நான் பாதி கண்ணே இதெல்லாம் கூட அந்த அடிப்படை தான்
தமிழ்மணத்தில் டேக் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சென்ஷி இன்று தன் கருத்துக்கே எதிராக இருப்பதையும்..
தனியாக நீங்க் ரெண்டுபேருமே ஒருத்தருக்கொருத்தர் டேக் செய்து எழுதுவதையும் கண்டிக்கிறேன்..
ஆனால் நல்லாத்தான் மெயில் விளையாட்டு விளையாடறீங்க..
//டிஸ்கி: கொஞ்சநாளாக தமிழ்மணத்தை திறக்கவே பயமாயிருக்கிறது!//
... இவரு ரொம்ப அப்பாவியாம் ஜனங்களே.. :D
அவியலை ரசித்து, ருசித்த அனைவருக்கும் நன்றி!
ராகத்தைச் சொல்லி ரசிக்கவைத்த அனைவருக்கும் நன்றி! ரீதிகௌள ராகம்பற்றி எல்லாரும் குறிப்பிடும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. அழகான ராட்சஷியே வருவதற்கு முன்வரை, அந்த ராகத்தில் தலைவரைத்தவிர யாருமே மெட்டமைத்ததில்லையாமே?
தமிழ் மணம் திறப்பது பற்றிய கருத்தை வழிமொழிகின்றேன்.
தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்
ரீதிகௌள ராகம்பற்றி எல்லாரும் குறிப்பிடும்போது ஒன்று நினைவுக்கு வருகிறது. அழகான ராட்சஷியே வருவதற்கு முன்வரை, அந்த ராகத்தில் தலைவரைத்தவிர யாருமே மெட்டமைத்ததில்லையாமே?
//
மெட்டமைத்தது இல்லை என்று சொல்வதைவிட முழுமையாகப் பயன் படுத்தவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.`
நல்லப் பதிவு, வாழ்த்துக்கள்
//ஆனந்தவிகடனின் புதிய வடிவம் எனக்குப் பிடிக்கவில்லை! ச்சின்ன சைஸ்தான் அழகு//
வழிமொழிகிறேன்
எதைச் சொல்ல, எதை விட?
//என்னடா இது, இவரு சாதாரணமாப் பேசறதே இந்தமாதிரி பின்நவீனத்துவமாகத்தான் இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டேன்.//
சென்ஷி அண்ணே நீங்களும் இப்படியா..;)
எனக்கும் ஏகப்பட்ட தாக்குதல்கள் நீ கதைக்கிறது ஒண்டும் விளங்கையில்லை என்று...;)
இந்த அவிலுடைய கவிதையும் கலக்கல்..!
நன்றிக்குப் பிறகும் வந்து கொண்டிருப்பவர்களுக்கும்...
நன்றி!
//காதலியை தூர இருந்து ரசிக்கும் மனோபாவம் ஒத்ததை விட அவள் கணவனுடன் செல்லும்
துர்பாக்கியத்தை பெற்றவனாகவே கருதுவேன்.//
இப்படிக்கூட யாராவலாவது பேச முடியுமா? :)
விகடனை ஆன்லைனில் படிப்பது என் வழக்கம் என்பதால் புத்தக வடிவு மாற்றத்தை இதுவரை பார்க்கவில்லை. எங்கேயாவது போகும் போது ஹாண்ட் பேகில் போட்டு எடுத்துக்கொண்டு போக முடிந்த சிறிய ஆனந்த விகடனே பெஸ்ட் என்று நினைக்கிறேன்.
சசிக்குமார், சுவாதியின் புகைப்படங்களை கூடவே போட்டிருந்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்(எனக்கு இருவருமே யார் என்று தெரியவில்லை)
Post a Comment