Monday, July 21, 2008

இவர்கள் வீட்டில் இப்படித்தான் பேசுவார்கள்

நேற்று நான் சொன்ன `சும்மா’ இதழிலிருந்து...

**********

இந்தப் பிரபலங்கள் வீட்டில், தங்கள் மனைவியிடம் இப்படித்தான் காபி கேட்பார்கள்..

மணிரத்னம்:

மணி: ”காபி”

சுஹாசினி: ”நேரமாகும்”

”எனக்கு வேணும். இப்ப வேணும்..”

”முடியாது”

”ஏன்?”

”முடியாதுன்னா முடியாது”

”அதான் ஏன்?”

”ஏன்னா.. கேஸ்ல சாப்பாடும் சாம்பாரும் வெந்துட்டிருக்கு”

”நிறுத்து”

”எதை..எதை நிறுத்தறது?”

”சாம்பாரை நிறுத்து..”

”ஏன்?”

”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”


டி.ராஜேந்தர்:

டி.ஆர்: ”ஏய்..உஷா.. மழை வருது லேசா.. நான் நேத்துப் பாத்தேன் பாட்ஷா.. ஒரு காபி போடு பேஷா..”

உஷா: ”அடுப்புல சாப்பாடு, சாம்பார் வெந்துட்டிருக்கு”

”எடை போடணும்னா தராசுல நிறுத்துப் போடு. காபி போடணும்ன்னா ஏதோ ஒண்ணை நிறுத்திப் போடு”

“முடியாது. சாப்பாடு போடலைன்னா விரலால வித்தை காட்டுவேன்னு பயமுறுத்தறான் சிம்பு”

“சிம்புவா? சிம்புவா அப்படிச் சொன்னான்? (உடனே கண்களில் நீர் வருகிறது.. தலையைக் கோதி விட்டபடி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டே..) ஏய் சிம்பு.. நீ ரெண்டு வயசுல பொம்மை கேட்ட. வாங்கித்தந்தேன். பத்து வயசுல படத்துக்குப் போக காசு கேட்ட. குடுத்தேன். ஆனா... ஆனா இப்ப இந்த அப்பாவுக்கு ஒரு காபி கேட்டா...

(`யோவ்..’ என்றபடி சிம்பு வர.. ஓடுகிறார்)


விஜயகாந்த்:

”ஏஏஏஏஏய்ய்! ஒரு காபி குடு”

”அடுப்புல சாப்பாடும், சாம்பாரும் வேகுதுங்க”

“இன்னொரு கேஸ்ல, இன்னொரு அடுப்புல பத்தவெச்சு போடு”

“ஒரு கேஸ்தான் இருக்கு”

“தமிழ்நாட்டுக்கு ஒரு வீட்டுக்கு ரெண்டு சிலிண்டர் தரணும்ன்னு எந்த அரசியல்வாதியாவது நெனச்சானா? ஒரு மனுஷன் ஒரு நாளைக்கு மூணு காபி குடிக்கணும். வருஷத்துக்கு 1095 காபி. ஒருத்தன் சராசரியா 60 வருஷம் உயிரோட இருப்பான்னு வெச்சுகிட்டாலும் மொத்தம் 65700 காபி குடிக்கணும்ன்னா எத்தனை சிலிண்டர் வேணும்? ஒரு சிலிண்டருக்கு 100 காபி-ன்னாலும் 657 சிலிண்டர் வேணும்.. அப்படீன்னா”

(திரும்பினால் அவரது மனைவி, வேலைக்காரர்களெல்லாம் மீட்டை முடிச்சோடு மதுரைக்கு ஓடுகிறார்கள்)

ரஜினிகாந்த்:

ரஜினி: ”ஜில்லு.. காபி..காபி”

லதா: ”முடியாதுங்க“

“ஏன்..ஏன்..ஏன்?”

“அடுப்புல சாப்பாடு, சாம்பார் வேகுது”

விரலைச் சுழற்றுகிறார்... “நான் ஒரு சிலிண்டர் வாங்கினா...”

“ஒரு சிலிண்டர்தான். நூறு சிலிண்டர் எல்லாம் ஆகாது.”

”ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹ்ஹாஆஆ” ஸடைலாகச் சிரிக்கிறார்.

35 comments:

கோவி.கண்ணன் said...

இந்த பதிவுக்கும் முந்தைய பதிவுக்கும் தொடர்பு இருக்கு.

பழைய சரக்கு தானே ?

நண்பரிடம் கொடுத்து இருந்த நீங்கள் எழுதிய கையெழுத்து பத்திரிக்கையில் இருந்தது தானே ?

//நேற்று நான் சொன்ன `சும்மா’ இதழிலிருந்து...
//

இதை அப்பறமாகத்தான் கவனித்தேன்
:)

Ramya Ramani said...

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேத்து சொன்னதலைப்பு பொருத்தமானது தான்..:)

ஜோசப் பால்ராஜ் said...

உங்க் வீட்ல எப்படி காபி கேப்பீங்கன்னு சொல்லியிருக்கலாம்.

ஜெகதீசன் said...

:))))))

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்

நன்றி!

@ ரம்யாரமணி

பதிலுக்கு நானும் :-)))

@ கயலக்கா

என்னது? சும்மாவா? இல்ல, படிப்பதுங்கள் தலையெழுத்தா? ஹா..ஹா.. வேற பதிவு எழுத நேரமில்லைக்கா.. அதான் இந்த மொக்கை!

@ ஜெகதீசன்

:-))) (பதிவர் சந்திப்புக்கு எல்லாம் ஆர்டர் பண்ணியாச்சா?)

VIKNESHWARAN ADAKKALAM said...

வைரமுத்து வீட்டில் எப்படி காபி கேட்பாருன்னு கொஞ்சம் ஆட் பன்னிருக்கலாம்...

Syam said...

அருமை :-)

//உங்க் வீட்ல எப்படி காபி கேப்பீங்கன்னு சொல்லியிருக்கலாம்.//

:-))

rapp said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

:)
:)
:)

Anonymous said...

மிகவும் அருமையான கற்பனை

வெண்பூ said...

நல்லா இருந்திச்சி பரிசல். எல்லா 'சும்மா'வையும் வரிசையா ரிலீஸ் பண்ணாம, வாரத்துக்கு ஒண்ணா ரிலீஸ் பண்ணுங்க. நல்லா வெரைட்டியா இருக்கும்.

பாபு said...

ரசித்தேன் சிரித்தேன்

ஜெகதீசன் said...

//

@ ஜெகதீசன்

:-))) (பதிவர் சந்திப்புக்கு எல்லாம் ஆர்டர் பண்ணியாச்சா?)
//
ஹிஹிஹி....
நான் தான் சந்திப்பைப் புறக்கணிக்கப் போறேனே... என் பரிந்துரைகள் ஏற்கப்படாததால்.... :P

பரிசல்காரன் said...

எல்லோர்க்கும் நன்றி.

நான் எப்படி காபி கேட்பேன்?

இதோ..

நான்: “கா....” (ஆரம்பிக்கும் முன்னரே உள்ளிருந்து உமாவில் குரல்..)

“எதப்பத்தியாவது கவலையிருக்கா உங்கப்பாவுக்கு? எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துகிட்டு...”

இதுக்கு மேல நான் கேப்பேன்னு நெனைக்கறீங்க?

@வெண்பூ

இதயே இன்னைக்கு போடற ஐடியா இல்ல. வேற எழுத மூட் செட் ஆவுல! அதுமில்லாம, எல்லாத்தையும் போடற ஐடியாவும் இல்ல! யாரு அடி வாங்கறது?

சின்னப் பையன் said...

:-))))))

வெட்டிப்பயல் said...

பதிவு சூப்பர் :-)

இராம்/Raam said...

சூப்பரு.... :)

புருனோ Bruno said...

அருமையான கற்பனை. பல குரல் மன்னர்களுக்கு உதவும்.

//மீட்டை//
? மூட்டை

தமிழன்-கறுப்பி... said...

சும்மா சொல்லப்படாது கலக்கல்தான்..:))

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே அவியல் போடுங்கண்ணே சாப்பிடணும் போல இருக்கு..!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

சூப்பர் !
அருப்புகோட்டை பாஸ்கர்

மங்களூர் சிவா said...

/
”நிறுத்து”

”எதை..எதை நிறுத்தறது?”

”சாம்பாரை நிறுத்து..”

”ஏன்?”

”நாலு பேருக்கு காபி போடணும்ன்னா சாம்பாரை நிறுத்தறது தப்பே இல்ல..”
/

சூப்பர்

பரிசல்காரன் said...

நன்றி ச்சின்னப்பையன், வெட்டிப்பயல், இராம், புரூனோ..

@ புரூனோ

தவறை சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி!

பரிசல்காரன் said...

@ தமிழன்

அவியல் வாரத்துக்கு ஒண்ணுதான்! ஏன்? வாரம் ரெண்டு போடலாமா? (மேட்டர் கிடைக்கறது கஷ்டமா இருக்குங்க..)

நன்றி பாஸ்கர்!

@ மங்களூர் சிவா

பயந்துடே ஸ்க்ரோல் பண்ணினேன் சிவா...

”நிறுத்து”

”எதை..எதை நிறுத்தறது?”

”பதிவை நிறுத்து..”

”ஏன்?”

”நாலு பேருக்கு நிம்மதி வேணும்ன்னா பதிவை நிறுத்தறது தப்பே இல்ல..”

இப்படிச் சொல்லீடுவீங்களோன்னு பயந்துட்டேன்.. (இதை சாகித்ய அகாடமிக்கு அனுப்பவா?)

தமிழ் பொறுக்கி said...

அருமை.. இதை கிரி வீட்டில் இருக்கும் போது சொன்னதா ஞாபகம். சரியா?...
நம்ம ஆளு பாக்கியராஜ விட்டுடீங்க..

thamizhparavai said...

//“சிம்புவா? சிம்புவா அப்படிச் சொன்னான்? (உடனே கண்களில் நீர் வருகிறது.. தலையைக் கோதி விட்டபடி, கண்ணிரைத் துடைத்துக் கொண்டே..) ஏய் சிம்பு.. நீ ரெண்டு வயசுல பொம்மை கேட்ட. வாங்கித்தந்தேன். பத்து வயசுல படத்துக்குப் போக காசு கேட்ட. குடுத்தேன். ஆனா... ஆனா இப்ப இந்த அப்பாவுக்கு ஒரு காபி கேட்டா//
கலக்கல்.. நல்ல நையாண்டி... அப்டியே விஜய்,அஜித்,தனுஷ் ந்னு தொடருங்க...(ஆட்டோ வந்தா நான் பொறுப்பில்லை..)

பரிசல்காரன் said...

நன்றி தமிழ் பொறுக்கி (தமிழ்ப்பொறுக்கின்னு மாத்தீடுங்க. லதானந்த் அங்கிள் கோவிச்சுப்பாரு)

நன்றி தமிழ்ப்பறவை..

பயமுறுத்தறீங்களே...

பாபு said...

புருஷன் கேட்டவுடன் காபி கொடுக்காத பொம்பளையும் ,பொண்டாட்டி சமையல் செய்யும்போது காபி கேட்கும் ஆம்பளையும் நிம்மதியா இருந்ததா சரித்திரம் இல்லை
இதை ரஜினி style இல் படிக்கவும்

சித்தன் said...

வாய்விட்டுச் சிரித்தேன், உங்களை "அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு" சிபாரிசு செய்கிறேன்.. :))

பரிசல்காரன் said...

நன்றி பாபு & சித்தன்! (சித்தன் படத்துல இருக்கறது நீங்களா??)

சென்ஷி said...

//babu said...
புருஷன் கேட்டவுடன் காபி கொடுக்காத பொம்பளையும் ,பொண்டாட்டி சமையல் செய்யும்போது காபி கேட்கும் ஆம்பளையும் நிம்மதியா இருந்ததா சரித்திரம் இல்லை
இதை ரஜினி style இல் படிக்கவும்
//

:))

சென்ஷி said...

மணிரத்னம் டைலாக்கு அட்டகாசம்.... சிரிப்ப அடக்க ரொம்ப நேரம் ஆச்சு :))

சென்ஷி said...

//rapp said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
//

என்னாச்சு ராப் தங்கச்சிக்காவுக்கு.. ரெண்டு பதிவா இந்த ஒத்த வரி கமெண்டு மட்டும்தான் கண்ல படுது... :)

(உனக்கு வேற வேல இல்லைன்னா எல்லோரையும் அப்படியே நினைக்காதேன்னு யாரும் திட்டாதீங்கப்பூ)

பரிசல்காரன் said...

@ சென்ஷி

//என்னாச்சு ராப் தங்கச்சிக்காவுக்கு.. ரெண்டு பதிவா இந்த ஒத்த வரி கமெண்டு மட்டும்தான் கண்ல படுது..//

நல்லாக் கேளுங்க!