Friday, July 25, 2008

அவியல் – ஜூலை 25

வர வர அவியல் எழுத மேட்டருக்காக அலைய வேண்டியதாயிருக்கு! இந்தவார மேட்டருக்காக ஒரு பேப்பர வெச்சுட்டு டெய்லி குட்டி குட்டியா குறிப்பெடுத்து வெச்சிருந்தேன். இன்னைக்கு தேடறேன்... சிக்கல. சின்னவ மேகா சொல்றா.. “நேத்துதான் `கம்ப்யூட்டர் முன்னாடி எவ்ளோ குப்பை பாரு’ன்னு அம்மா க்ளீன் பண்ணீட்டிருந்தாங்க”-ன்னு! ஹூம்!

----------------------------

ஃபயர்ஃபாக்ஸ் 3 – பதிவிறக்கம் பண்ணீட்டீங்களா? நல்ல வேகமா இருக்கு. அதுல TOOLS போய், ADD ONS-ல, RECOMMENDED ADD ONS ப்ரவ்ஸ் செய்தீர்களானால் FAST DIAL என்றொரு ADD ON இருக்கும். அதை பதிவிறக்கம் செய்து உங்கள் ஹோம் பேஜாக வைத்துக் கொள்ளலாம். (BLANK PAGE ஆக இருந்தால் FAST DIAL தானாக ஹோம் பேஜாக வரும்) முன் பக்கத்திலேயே நீங்கள் அடிக்கடி பார்க்கும் வலையை வைத்துக்கொள்ளலாம். 3x5 என்றால் முகப்பில் 15 விண்டோ தெரியும்! எதற்குப் போக வேண்டுமோ அதை க்ளிக்கிப் போகலாம். இவ்வாறு 100 விண்டோ வரை முகப்பிலேயே வரச் செய்யலாம்!

அதே போல இன்னொரு தளம் அடிக்கடி நாம் பார்க்கும் வெப் பேஜ்களை ஒட்டுமொத்தமாக கொடுத்திருக்கிறார்கள். அது www.allmyfaves.com.

---------------------------

திருப்பூரிலிருக்கும் இன்னொரு பதிவரை நானும் வெயிலானும் சந்தித்தோம். சாமினாதன். ஆள் பார்க்க வெகு ஸ்மார்ட்டாக இருந்தார். அடிக்கடி எழுத நேரமில்லை என்றார். பதிவெழுத நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது. உதாரணமாக சென்னை பார்க் ஷெரட்டான் ஹோட்டலைப் பற்றி அவர் சொன்னது... அங்கே இவர் போயிருந்தபோது அங்கிருக்கும் ஒரு டாக்ஸி ட்ரைவர் சொன்னாராம். “நைட் 9 மணிக்கு கைல பாட்டிலோட செல்ஃப் ட்ரைவிங்க்ல அவரு வருவாருங்க. கொஞ்ச நேரத்துல பின்னாடியே அவங்களும் வருவாங்க. காலைல 4 மணிக்குதான் ரெண்டு பேருமா போவாங்க” (அவரு, அவங்க யாருன்னு இவரு சொல்லவே இல்ல!)

அப்புறம் ஹோட்டல்ல இவருக்கு குடுத்த டாக்ஸில, ட்ரைவர் பின்னாடி பாக்கற ரிவர்வ்யூ மிர்ரர் இல்லியாம். ஹோட்டல்ல இருக்கற எந்தக் கார்லயும் இருக்காதாம். அதுக்கு அவர் சொன்ன காரணம் இன்னும் சுவாரஸ்யம். அது என்னன்னா...

வேணாம். விடுங்க. கோவிச்சுப்பாரு.

சாமினாதன் என்ன பேர்ல பதிவெழுதறாருன்னு கேக்கலியே நீங்க? ஈரவெங்காயம்!

-----------------------------------

இந்தவார விகடன்ல ஜே.கே.ரித்தீஷ் ஒரு கேள்விக்கு பதில் சொல்லீருந்தாரு.

கேள்வி: உங்க அழக கூட்டிக்கொள்ள, மூக்கை ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணப் போறீங்களாமே?

இவரு பதில்: ”நாமெல்லாம் இயற்கை அழகு உள்ள ஆளுங்க (அதுசரி) எதுக்கு அழகா இருக்கறத (???) கெடுக்க ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கணும். இங்கே நம்ம நடிப்பைப் பாக்கறாங்களா, (நடிப்பா? அப்ப கமல் பண்றதெல்லாம்??) இல்லே மூக்கைப் பாக்கறாங்களா? (ரெண்டையுமே பாக்கல!!)”

ஒண்ணும் சொல்றதுக்கில்ல!

-----------------------------------

எதிர்க்கட்சிகள்: `அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கெதிராக ஆர்பாட்டம் செய்வோம்!’

ஆளுங்கட்சி: `சரி.. இதோ அறிவிச்சுட்டோம். இனி டெய்லி கரண்ட் கட்டாகும்’

எதிர்க்கட்சி: `அப்படி வாங்க வழிக்கு! இப்ப சரி!’

மக்கள்: ?????????????????????

----------------------------------

யூத்ஃபுல்விகடன்.காமில் லப்டப் மீட்டர் என்று ஒன்று போட்டிருந்தார்கள். அதில் கிருஷ்ணா – உமா என்று போட்டுப் பார்த்தேன். காதலின் சதவிகிதம் 35% என்று வந்தது. பக்கத்தில் உமா என்னை முறைத்த முறைப்பில், `இருப்பா’ என்று, கிருஷ்ணகுமார்-உமாகௌரி என்று போட்டேன். 70% என்றது. மறுபடி எங்கள் பெயரை இனிஷியலோடு போட்டேன் 94.5% என்றது! சந்தோஷமாக எழுந்து போனாள்.

உமா போனபிறகு கிருஷ்ணகுமார் – நமீதா என்று போட்டுப் பார்த்தேன். 45% வந்தது! இதையெல்லாம் நம்பக்கூடாதுங்க!

-------------------------------------

போனவார விகடனில் தமிழ்மகள்-ங்கற தலைப்புல மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர் ம.கார்த்திக் எழுதி வெளிவந்த ஒரு கவிதை என்னை அசரவைத்தது. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே என்னையுமறியாமல் கைதட்டினேன்.. (ஸ்பூன்ல சில்லி பரோட்டா சாப்பிட்டுட்டு இருந்தேங்க!!)


நேற்று என் அப்பாவுக்கு
ஸ்போக்கன் இந்தி!
இன்று எனக்கு
ஸ்போக்கன் இங்கிலீஷ்!
நாளை என் மகளுக்கு
ஸ்போக்கன் தமிழ்!


இந்தக் கவிதை எனக்கு கவிதாயினி அ.வெண்ணிலா வெகுநாட்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதையை ஞாபகப் படுத்தியது...

பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ ப்ளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்.

31 comments:

Udhayakumar said...

//ரிவர்வ்யூ//

ரியர் வியூ...

அவியல் நல்லா இருக்கு.

rapp said...

இதைத்தான் நேத்து வெண்பூ சொன்னாரா, அது ஒருவேளை நீங்களா இல்லாம லக்கிலுக் சாரா இருக்கும், சரியா? நீங்க சாமிநாதன் சார புகழ்ந்து எழுதி இருக்கீங்களா, இல்லை நக்கல் பண்ணிருக்கீங்களா? ஏன் எங்க தலயோட மூக்குக்கு என்னங்க குறைச்சல், அவர் எதுக்கு அறுவைசிகிச்சை பண்ணிக்கணும்? நீங்க சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆளா இருப்பீங்களோன்னு சந்தேகப்படறேன். யார் யாரோ எழுதின சாதாரண கவிதையப் படிச்சு கை தட்டற இந்த மக்கள் என்னோட ஆழ்ந்த கருத்துடைய கவிதைய படிச்சி எதுக்கு உர்ருன்னு மூஞ்சை தூக்கி வெச்சுக்கறாங்கன்னு தெரியல, என்னமோ போங்க

பரிசல்காரன் said...

உதயகுமார்... தப்புதான். மன்னிச்சுடுங்க!

@ rapp

//இதைத்தான் நேத்து வெண்பூ சொன்னாரா,//

என்னாச்சுன்னா, பதிவப் போட்டுட்டு, டைம் மாத்தாம விட்டுட்டேன். மறுபடி போய், மாத்தறதுக்குள்ள என் பதிவ கூகுள் ரீடர்ல படிக்கற, என்னோட லட்சக்கணக்கான வாசகர்கள்கிட்ட அது போய் சேர்ந்துடுச்சு! (சரி..சரி.. விடுங்க.. வலைப்பதிவுல இதெல்லாம் சகஜம்தானே..!) அவரு கூகுள் ரீடர்ல படிச்சுட்டாரு!!!

//அது ஒருவேளை நீங்களா இல்லாம லக்கிலுக் சாரா இருக்கும், சரியா?//

எது? புரியல தங்கச்சிக்கா...(நன்றி:சென்ஷி!)

//நீங்க சாமிநாதன் சார புகழ்ந்து எழுதி இருக்கீங்களா, இல்லை நக்கல் பண்ணிருக்கீங்களா? //

ஏங்க.. இப்பதான் எங்க நட்பு துளிர்விட்டிருக்கு. அதுக்குள்ளே வெந்நீர் ஊத்தாதீங்க..

//ஏன் எங்க தலயோட மூக்குக்கு என்னங்க குறைச்சல், அவர் எதுக்கு அறுவைசிகிச்சை பண்ணிக்கணும்?//

அவரைச் சொல்லி குத்தமில்ல.. உங்களை சொல்லணும்!

//யார் யாரோ எழுதின சாதாரண கவிதையப் படிச்சு கை தட்டற இந்த மக்கள் என்னோட ஆழ்ந்த கருத்துடைய கவிதைய படிச்சி எதுக்கு உர்ருன்னு மூஞ்சை தூக்கி வெச்சுக்கறாங்கன்னு தெரியல, என்னமோ போங்க//

யாரு மூஞ்சியத் தூக்கி வெச்சுகிட்டா? வலையுலகக் கவுஜாயினி பட்டம் வாங்கினதை மறந்துடீங்களா?


ரொம்ப நாள் கழிச்சு விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி வெட்டியாபீசர்!!

கயல்விழி said...

ஜேகே ரித்தீஷை நீங்களும் இழுத்தாச்சா? :) எங்கேஎ போனாலும் அந்த ஆளின் புகழாகவே இருக்கு. எஸ்ஜே சூர்யாவே பரவாயில்லை, ஏதோ பொங்கலுக்கு வெள்ளையடித்த சுவர் மாதிரி கொஞ்சமா மிரட்டினார், ஆனால் இவர்?

ஃபயர் பாக்ஸ் பற்றிய தகவல்களுக்கு நன்றி :)

பரிசல்காரன் said...

//கிருஷ்ணகுமார் – நமீதா என்று போட்டுப் பார்த்தேன். 45% வந்தது! //

இதத்தான் சொன்னீங்களா ராப்? லக்கியா இருக்காது. அவரு ஷகீலா ரசிகருல்ல:-))))

பரிசல்காரன் said...

@ கயல்விழி..

//ஜேகே ரித்தீஷை நீங்களும் இழுத்தாச்சா? :)//

எப்பவோ நான் இவரப் பத்தி எழுதீட்டேன்.. ஒருதடவை விஜய் டி.வி.கலக்கப் போவது யாரு -ல இவரை ரம்யா `வீரத்தளபதி' ன்னு கூப்டப்போலேர்ந்து இவர கவனிச்சுட்டுதான் இருக்கேன்!!!

rapp said...

அதேதாங்க, அவர் ஷகீலா ரசிகருங்கறதாலதான் வெறும் 45%, ஆனா உங்களுக்கு அவ்வளவு குறைச்சலா வராதுன்னு ஆறுதல் படுத்தினேன் :):):) (இன்றைய பதிவை(பின்னூட்டங்களோட) உங்களோட திருமதி கண்டிப்பா படிக்கனும்னு பிரார்த்திச்சிக்குரேன், ஏதோ என்னாலான சேவை)

rapp said...

நான், 'சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆளா நீங்க'ன்னு கேக்குற கேள்விக்கு மட்டும் ஏன் பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க? அப்போ அதான் உண்மையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................................

Anonymous said...

தசாவதாரம் பார்ட் இரண்டுக்கு கமலுக்கு பதில் சாம் ஆண்டர்சன போடலாமா இல்ல ரித்தீஷ் போடலாமான்னு அடுத்த விவாதம் ஒண்ணு கெளம்பப்போகுது பாருங்க. கவிதைகள் நல்லா இருக்கு.

இராம்/Raam said...

அவியல் நல்லாயிருக்குங்க... :)

பரிசல்காரன் said...

//ஏதோ என்னாலான சேவை//

உங்க சேவைக்கு என்னோட அவியல தொட்டுக்கறேன்!

பரிசல்காரன் said...

@ சின்ன அம்மணி

//தசாவதாரம் பார்ட் இரண்டுக்கு கமலுக்கு பதில் சாம் ஆண்டர்சன போடலாமா இல்ல ரித்தீஷ் போடலாமான்னு அடுத்த விவாதம் ஒண்ணு கெளம்பப்போகுது பாருங்க.//

இதுல விவாதம் என்னாதுக்கு? ரித்தீஷேதான்!

பரிசல்காரன் said...

நன்றி இராம்!!!

சின்னப் பையன் said...

ச்சே. அந்த குப்பையிலே எவ்ளோ கதைகள், கட்டுரைகள், காவியங்கள், கவிதைகள் இருக்கோ... அவ்வ்வ்வ்.. எல்லாம் போச்சே. போச்சே....

ராவ் தலைவி கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலே - இந்த வாரயிறுதியிலே உண்ணாவிரதம் அறிவிச்சிடலாமா சொல்லுங்க தலைவி????

லப்டப் மீட்டருக்கு பொறாமைங்க...

//ஸ்பூன்ல சில்லி பரோட்டா சாப்பிட்டுட்டு இருந்தேங்க!!)//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா......

லதானந்த் said...

அவியல் ரொம்ப ருசியா இருக்கு

சென்ஷி said...

அவியல் நல்லாருக்குங்க

முரளிகண்ணன் said...

கடைசி இரண்டு கவிதைகள் அருமை

பரிசல்காரன் said...

ச்சின்னப்பையன்... என்னையே இப்படி கோவிச்சுக்கறீங்களே... உங்க தலைவரைப் பத்தி இன்னைக்கு நான் சொன்ன பதிவர் நண்பர் ஈரவெங்காயம் போட்ட பதிவப் படிச்சீங்களா?

பரிசல்காரன் said...

நன்றி லதானந்த் அங்கிள், முரளி கண்ணன் & சென்ஷி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவியல் எளிதான விசயம்ன்னு இல்ல நினைத்திருந்தேன்.. அதற்கும் குறிப்பெடுக்கனுமா ? :(

எங்க கல்லூரி மாணவரா ஓ ..உண்மையான வார்த்தைகள்..

Anonymous said...

யோவ் கல்யாணமாகி இவ்வளவு வருசம் கழிச்சு லவ் மீட்டர் கேக்குதோ?

ஆள் போட்டு கவனிக்கனும் போலருக்கே. சரியில்ல அம்புட்டுதேன்.

புதுகை.அப்துல்லா said...

//
இவரு பதில்: ”நாமெல்லாம் இயற்கை அழகு உள்ள ஆளுங்க (அதுசரி) எதுக்கு அழகா இருக்கறத (???) கெடுக்க ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கணும். இங்கே நம்ம நடிப்பைப் பாக்கறாங்களா, (நடிப்பா? அப்ப கமல் பண்றதெல்லாம்??) இல்லே மூக்கைப் பாக்கறாங்களா? (ரெண்டையுமே பாக்கல!!)”
//


எங்க தலையத் திட்டியாவது பேர் எடுக்கனும்னு நினைக்கிறீங்க. டிரைப் பண்ணுங்க :)

பரிசல்காரன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

அவியல் எளிதான விசயம்ன்னு இல்ல நினைத்திருந்தேன்.. அதற்கும் குறிப்பெடுக்கனுமா ? :(


நமக்கு மறதி ஜாஸ்திக்கா. அதுதான்..


//எங்க கல்லூரி மாணவரா ஓ ..உண்மையான வார்த்தைகள்..//

என்னவொரு சிந்தனை பாருங்க! உங்க ஜூனியர்ல?

பரிசல்காரன் said...

//வடகரை வேலன் said...

யோவ் கல்யாணமாகி இவ்வளவு வருசம் கழிச்சு லவ் மீட்டர் கேக்குதோ?

ஆள் போட்டு கவனிக்கனும் போலருக்கே. சரியில்ல அம்புட்டுதேன்.//

ஹி..ஹி...

@ புதுகை அண்ணாச்சி

//எங்க தலையத் திட்டியாவது பேர் எடுக்கனும்னு நினைக்கிறீங்க. டிரைப் பண்ணுங்க :)//

நீங்களுமா?

Anonymous said...

// யோவ் கல்யாணமாகி இவ்வளவு வருசம் கழிச்சு லவ் மீட்டர் கேக்குதோ?

ஆள் போட்டு கவனிக்கனும் போலருக்கே. சரியில்ல அம்புட்டுதேன் //

நான் கவனிச்சுக்கறேன் வடகரை வேலன் அண்ணாச்சி!

கயல்விழி said...

//எப்பவோ நான் இவரப் பத்தி எழுதீட்டேன்.. ஒருதடவை விஜய் டி.வி.கலக்கப் போவது யாரு -ல இவரை ரம்யா `வீரத்தளபதி' ன்னு கூப்டப்போலேர்ந்து இவர கவனிச்சுட்டுதான் இருக்கேன்!!!//

சரிங்கோ சூப்பர் ஸ்டார் ரித்தீஷைப்பற்றி நீங்க தான் முதலில் எழுதனீங்க! No dispute

கோவை விஜய் said...

ஃபயர்ஃபாக்ஸ் 3 –பற்றிய தகவல்களுக்கு நன்றி


//பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ ப்ளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்//
கவிதைகளும் அருமை.


இப்படிக்கூட கவிதை வரும்

அப்பா கிராமத்தில் சுகமான சுவாசத்துடன்
நானோ நகரத்தில் மூக்கு கவசத்துடன்
மகனோ முதுகில் ஆக்ஸிசன் சிலிண்டருடன்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/

பரிசல்காரன் said...

நன்றி வெயிலான் & கயல்

விஜய் உங்க கவிதை அருமை!!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

அவியல் எல்லாமே சூப்பர் !

VIKNESHWARAN ADAKKALAM said...

//நேத்துதான் `கம்ப்யூட்டர் முன்னாடி எவ்ளோ குப்பை பாரு’ன்னு அம்மா க்ளீன் பண்ணீட்டிருந்தாங்க”-ன்னு! ஹூம்!//

ஹா ஹா ஹா... வீட்டில் உங்கள் பதிவுகளை படிப்பார்களா?

Unknown said...

ம.கார்த்திக்கின் கவிதை என்னையும் வாவ் என்று அலரவைத்தது browsing centre இல்.