Wednesday, July 9, 2008

சென்ஷிக்கு மொக்கைக் கேள்வி... கோவி. கண்ணனுக்கு சூப்பர்(?) பதில்!!

தில்லானா மோகனாம்பாள்-ல ஆச்சி கேப்பாங்க-ள்ல “என்ன சிக்கலாரே”ன்னு. அதுதான் ஞாபகத்துக்கு வருது!


”என்ன கோவியாரே.. இப்போ சந்தோஷம் தானே?”

என்னை கேள்வி கேட்ட கோவி கண்ணன், இதை ஆரம்பிச்ச ஜெகதீசன்.. எல்லாரும் நல்லாயிருங்க!

இம்சை அரசனைவிட்டு துண்டைக் காணோம், துணியை காணோம்ன்னு அந்தக் காவலாளிகள் ஓடினதுபோல நானும் வலையுலகத்தை விட்டு ஓடிவிடுவேனென்று பகல் கனா கண்டீரோ? ம்ஹூம்! நடக்காது நண்பரே.. இதோ பிடியுங்கள் பதிலை!


(இதுவரைக்கும் அடிச்சுட்டேன்.. இதுக்கு மேல எப்படி நகர்த்தறதுன்னு தெரியல.. யாரோ சொல்லியிருக்காங்க.. ஒரு கதையோ, எதுவோ எழுத உக்காரும்போது முதல் வரியை மட்டும் நீங்க முடிவு பண்ணுங்க.. பாக்கியை அதுவே கொண்டு செல்லும்-ன்னு. இதைச் சொன்னவர் மட்டும் இப்போ கிடைச்சார்ன்னு வைங்க..)


(இந்த பதிலுக்கு ஹிண்ட் கொடுத்த கஸின் கிரேசி கிரிக்கு நன்றிகள் பல!!)


கேள்வி: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?


பதில்: இதுக்கு நேரடியான பதில் இருக்கா, என்னங்கறதெல்லாம் நிஜமாவே தெரியல! சிம்புதேவனைத்தான் கேட்கணும்.. என் சௌகரியத்துக்கு இப்படி வெச்சுக்கலாம்...


தட்டான்-ன்னா தங்க நகை ஆசாரி. (தட்டான் = பொற்கொல்லர். கழகத் தமிழ் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பக்கம் 206... எவ்ளோ ஆராய்ச்சியெல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா?) இல்லையா? பொற்கொல்லர் வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? தீயில, ஊதுகுழல் வெச்சுகிட்டு ஹீட்டான பொருட்களின் அருகிலிருந்து வேலை செய்வாரு. அப்படி வேலை செய்யறப்போ வேர்த்துவடியும். அதுனால ஆசாரி எப்பவுமே சட்டை போடாமதான் வேலை செஞ்சுட்டு இருப்பாரு. அவரு வேலை செஞ்சாதானே அவர் குடும்பம் பொழைக்கும்? (என்னா ஒரு கண்டுபிடிப்பு!!) அவருக்கு ஒரு பையன். கொஞ்சம் உயரம் கம்மியா இருப்பான். அதனால குட்டைப்பையன்-ன்னு சொல்லுவாங்க. (10)


அந்தத் தட்டான் கொஞ்சம் சோம்பேறி. அதுமில்லாம சுகவாசி. கொஞ்சநேரம் வேலை பாக்கவேண்டியது. அப்புறமா சட்டையைப் போட்டுட்டு ஊர்ல வேலை, வெட்டியில்லாம திரிவாங்களே.. அந்தப் பசங்களோட போய் வெட்டிநியாயம் பேசவேண்டியது. இப்படியே பண்ணீட்டிருந்தாரு. இதுனால அவருக்கு முறையான வருமானம் வராம இருந்தது. குறையான வருமானம்தான் வந்தது! குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டாங்க அவரோட மனைவி!


(அம்பது வரில பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ஜெகதீசன்? அதப் படிக்கறது அத விட கஷ்டம்!)


அவர் வீட்டுப் பிரச்சினை பஞ்சாயத்துக்கு வந்தது. (20) பஞ்சாயத்துல அவரை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க. ஜெகதீசன் மாதிரி மொக்கையா கேளுங்க-ன்னு யாரும் கண்டிஷன் போடல. அதுனால ஊர்ப் பெரியவங்க-ள்லாம் சேர்ந்து `ஏன்யா இப்படிப் பண்ற?’ `உன் குடும்பம் உனக்கு முக்கியமில்லையா?’ உன் பையன் வாழ்க்கையாவது நல்லா இருக்க வேண்டாமா’ (25 வரி ஆச்சா?) இப்படீன்னெல்லாம் கேள்வி கேட்டாங்க.


எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியல நம்ம தட்டானால. பேசாம நின்னாரு. தான் செய்யறது தப்புன்னு அவருக்கு தெரிஞ்சுடுச்சு. பஞ்சாயத்துல வெச்சு ஒரு உறுதிமொழி குடுத்தாரு. (30) `இனிமே நான்...” தொடர்ந்து பேச்சு வர்ல அவருக்கு. `என்னாச்சு?’ ஊர்ப்பெரியவங்க கேட்டாங்க. தட்டான் அமைதியா நின்னாரு. கூடியிருந்த ஊர் மக்கள் எல்லாம் திகைப்பா பாக்கறாங்க. `ஏன் என்னமோ சொல்ல வந்தத பாதில நிறுத்தின?’ - ன்னு கேட்டாங்க. எல்லாரையும் பாக்கறாரு தட்டான். `தொடர்ந்து சொல்லீட்டா பரிசல்காரனால அம்பது வரிக்கு ஜவ்விழு இழுக்க முடியாதே’ அப்படீன்னு மனசுக்குள்ள நினைக்கறாரு தட்டான். ஆனா வெளில சொல்ல முடியல. (பாருங்க... அவருக்கு கூட என்னோட கஷ்டம் தெரிஞ்சிருக்கு) தண்ணி குடிக்கறாரு. (40)

`இனிமே நான் வேலையை விட்டுட்டு வெட்டியா ஊரைச் சுத்தமாட்டேன். இத இந்த ஊர் ஜனங்க முன்னாடி சத்தியம் பண்ணி சொல்றேன்’ - ன்னு வாக்கு குடுத்துடறாரு. பஞ்சாயத்துல அம்மா அழுதுட்டே நிக்கறதையும், அப்பா எல்லார் முன்னாடியும் குற்றவாளிபோல நிக்கறதையும் பாத்துட்டே இருக்கான் குட்டைப்பையன்.


அடுத்தநாள்..


வழக்கம்போல தட்டான் வேலைக்குப் போறாரு.


ஒழுங்கா வேலை செஞ்சுட்டு இருக்காரு. அவர்கூட ஊர்சுத்தியே பழக்கப்பட்ட அவரோட ஃபிரண்டு ஒருத்தன் வர்றான். `டேய்.. பஞ்சாயத்து கிடக்குது. வாடா.. ஒரு ரவுண்டு போலாம்’ – ன்னு கூப்பிடறான். `நான் வர்லடா’ங்கறாரு தட்டான். (அப்பா.. 50 வரி ஆச்சு!) `ப்ச்.. சட்டையைப் போட்டுட்டு கிளம்புடா.. சும்மா பிகு பண்றான்’ ன்னு சொல்லிகிட்டே தட்டானுக்கு சட்டையப் போட்டுவிடப் பாக்கறான் அந்த ஃபிரண்டு. இதப் பாத்துட்டிருந்த குட்டைப்பையனுக்கு வந்ததே கோபம்.. `இவன மாதிரி ஆளுகளாலதானே அம்மா பஞ்சாயத்துல அழுதுட்டே நின்னாங்க’ -ன்னு ஆத்திரம் வர பக்கத்துல இருந்த ஒரு கட்டையை எடுத்து அப்பாவோட ஃபிரண்ட் மண்டைல போட்டான் ஒரு போடு!


தலைல ரத்தம் வழிய “ஐயையோ.. குட்டைப்பையன் கட்டையால அடிச்சுட்டான்’ ன்னு கத்திகிட்டே ஓடினான். ஊர்ல அதுக்கப்புறம் சொல்லிகிட்டாங்க.. “தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்”-ன்னு!

இதுதாங்க அது!

இந்த மொக்கை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா?

ஜெகதீசன் & கோவி.கண்ணன்:- பிராக்கட்ல இருக்கற என்னோட கமெண்டையெல்லாம் கணக்குல சேர்த்தாமதான் எண்ணிருக்கேன்!

(எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)இனி.. என் கேள்வி... ரொம்ப நாளா என் பிளாக்குக்கு வராம டிமிக்கி குடுத்திட்டிருக்கற சென்ஷிக்கு!


”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”


இது அக்மார்க் சொந்த கேள்வி. (நேத்து நைட் ரெண்டு மணிவரைக்கும் தூங்கல.. நீங்களும் கிடந்து தவிங்க!!)

42 comments:

தமிழ் said...

இடை இடையே
எண்ணிக்கை போட்டு
கடைசி வரை
சுவையாக இருந்தது
மற்றும்
தங்களின் கோர்வையாக
சொன்ன விதமும்
நன்றாக இருந்தது

கோவி.கண்ணன் said...

//தட்டான்-ன்னா தங்க நகை ஆசாரி. (தட்டான் = பொற்கொல்லர். கழகத் தமிழ் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பக்கம் 206... எவ்ளோ ஆராய்ச்சியெல்லாம் பண்ணிருக்கேன் தெரியுமா?) இல்லையா? பொற்கொல்லர் வேலை செய்யறதைப் பாத்திருக்கீங்களா? தீயில, ஊதுகுழல் வெச்சுகிட்டு ஹீட்டான பொருட்களின் அருகிலிருந்து வேலை செய்வாரு. அப்படி வேலை செய்யறப்போ வேர்த்துவடியும். அதுனால ஆசாரி எப்பவுமே சட்டை போடாமதான் வேலை செஞ்சுட்டு இருப்பாரு. அவரு வேலை செஞ்சாதானே அவர் குடும்பம் பொழைக்கும்? (என்னா ஒரு கண்டுபிடிப்பு!!) அவருக்கு ஒரு பையன். கொஞ்சம் உயரம் கம்மியா இருப்பான். அதனால குட்டைப்பையன்-ன்னு சொல்லுவாங்க. (10)//

பரிசல்,

சத்தியமாக சொல்கிறேன், இதே பொருளில் தான் விளக்கம் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை.

சூப்பர்........!

கோவி.கண்ணன் said...

//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”//

என்னால என் முதுகைப் பார்க்க முடியுது. ஐ மீன் தலை சுத்துது.
:))))))

ஜோசப் பால்ராஜ் said...

அட மக்கா, இப்டி ஒரு மொக்கைய நான் பார்ததே இல்லை. குசும்பன் எல்லாம் இனிமே மூட்டைய கட்டிகிட்டு ஊருக்கு போய் ஓலை சுவடிலத்தான் எழுதனும்.
ஆனா இப்டி ஒரு மொக்கை பதிலுக்கு காரணமான மொக்கை கேள்விய கேட்ட கோவி.க வுக்கு அடுத்த சிங்கை பதிவர் சந்திப்புல கட்டாயம் ஏதாச்சும் கொடுக்கணும்.

என்ன கொடுக்கலாம்னு சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசாக போண்டா உண்டு.

ஜெகதீசன் said...

கலக்கீட்டீங்க போங்க...
:))
//
ஜெகதீசன் மாதிரி மொக்கையா கேளுங்க-ன்னு யாரும் கண்டிஷன் போடல.
//
நான் எங்கங்க மொக்கை கேள்வி கேக்க சொன்னேன்??
அறிவுப் பூர்வமாதான கேக்க சொன்னேன்... :P

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தலைப்பை மாத்தி வச்சிட்டீங்களா :)

சும்மா கேட்டாலே கொலவெறியோட தான் சென்ஷி கிட்ட இருந்து பதில் வரும்..இது கொலவெறியோட கேட்கப்பட்ட கேள்வி.. மொக்கன்னு வேற கேள்விய சொல்லிட்டதால.. விளக்கமான உருக்கமான பதிவை எதிர்பார்க்கலாம்..

rapp said...

ஆஹா உங்களுக்குள்ள தூங்கிட்டிருந்த மிருகத்த எழுப்பி விட்டுட்டீங்க போலருக்கு. செம செம கலக்கல் பதில்.

//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”//


ஆனா ஏங்க இந்தக் கொலைவெறி? இதுக்காகவே உங்களுக்கு '(மொக்க) கேள்வியின் நாயகன்'ன்னு ஒரு பட்டமே வழங்கறேன்:):):) ரொம்ப சூப்பர்

rapp said...

//கயல்விழி முத்துலக்ஷ்மி said:

இது கொலவெறியோட கேட்கப்பட்ட கேள்வி.. மொக்கன்னு வேற கேள்விய சொல்லிட்டதால.. விளக்கமான உருக்கமான பதிவை எதிர்பார்க்கலாம்//
இதை நான் பயங்கரமா வழிமொழியறேன்

வெட்டிப்பயல் said...

சூப்பரான விளக்கம்...

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

:)

anujanya said...

கே.கே.

சென்ஷிக்கு பின்நவீனத்துவம் எல்லாம் தண்ணி பட்டபாடு. அவருடைய காகங்கள் (கா.கதை) பதிவு படித்தீர்களா? He is one of the very few to have genuine sense of humour.

அனுஜன்யா

Thamira said...

ஏய் .. என்னங்க.. ஆளாளுக்கு இப்படி கிளம்பிட்டீங்க? உங்கள் கேள்விகளும் பதில்களும் சிந்தனைக்கு பெரு விருந்தாக அமைகின்றன. ராப், பரிசலுக்கு வழங்கும் 'கேள்வியின் நாயகன்' பட்டத்தை வழிமொழிகிறேன்.

பரிசல்காரன் said...

மிக்க நன்றி திகழ்மிளிர்! (கவிதைக்கு மட்டும்தானே வருவீங்க? இப்படி ஒரு மொக்கைக்கு மொத ஆளா வந்திருக்கீங்களே.. பாவங்க நீங்க!)

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்..

//சத்தியமாக சொல்கிறேன், இதே பொருளில் தான் விளக்கம் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். என்னாலேயே நம்ப முடியவில்லை.//

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு...

நைட் எப்படி மண்டைய உடச்சு யோசிச்சுட்டு இருந்தேன் தெரியுமா? என்னமோ பிரமோஷனுக்கு பேங்க் எக்ஸாம் எழுதறவனாட்டம்.. ஈசியா சொல்லீட்டீங்க.. இந்த மாதிரிதான் எழுதுவீங்க-ன்னு நெனச்சேன்-ன்னு!

//என்னால என் முதுகைப் பார்க்க முடியுது. ஐ மீன் தலை சுத்துது.//

கண்ணன் சார்.. நிஜமா பதிலை விட, இந்தக் கேள்விக்குத்தான் ரொம்ப நேரம் யோசிச்சேன்..

பரிசல்காரன் said...

@ ஜோசப் பால்ராஜ்


முதல் வருகைக்கு நன்றி..!

// இப்டி ஒரு மொக்கை பதிலுக்கு காரணமான மொக்கை கேள்விய கேட்ட கோவி.க வுக்கு அடுத்த சிங்கை பதிவர் சந்திப்புல கட்டாயம் ஏதாச்சும் கொடுக்கணும்.

என்ன கொடுக்கலாம்னு சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசாக போண்டா உண்டு.//

விடிய விடிய தூங்காம யோசிச்சு பதில் சொன்னது நானு.. பரிசு அவருக்கா?

சரி.. யார் வாங்கினா என்ன..

ஒரு இன்ச் ஆக்சாபிளேடு அரை டஜன் வாங்கிக் குடுங்க..

(போண்டா பார்சலை ஊசிப்போறதுக்கு முன்னாடி அனுப்பவும்..)

பரிசல்காரன் said...

@ ஜெகதீசன்

//கலக்கீட்டீங்க போங்க...//

நன்றி!

//நான் எங்கங்க மொக்கை கேள்வி கேக்க சொன்னேன்??
அறிவுப் பூர்வமாதான கேக்க சொன்னேன்... //

அதுசரி..

பரிசல்காரன் said...

நன்றிகள் கயலக்கா.
//. மொக்கன்னு வேற கேள்விய சொல்லிட்டதால.. விளக்கமான உருக்கமான பதிவை எதிர்பார்க்கலாம்..//

நானும் ரொம்ப எதிர்பார்க்கறேன்..

பட்டத்துக்கு ரொம்ப தேங்க்க்சுங்க வெட்டியாபீசர்!

மிக்க நன்றி வெட்டிப்பயல் & சிரிப்புக்கு நன்றி பாரி அரசு.. !

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

//சென்ஷிக்கு பின்நவீனத்துவம் எல்லாம் தண்ணி பட்டபாடு. //

தெரியுமே.. அதுனாலத்தானே அவர்கிட்டா கேக்கணும்ன்னு முடிவு பண்ணினப்பவே கேள்வி, இப்படி வந்து விழுது!

@ தாமிரா

//உங்கள் கேள்விகளும் பதில்களும் சிந்தனைக்கு பெரு விருந்தாக அமைகின்றன//

சிந்தனையா.. ஹலோ.. உங்க அட்ரஸ் என்ன கீழ்ப்பாக்கமா?

பரிசல்காரன் said...

சென்ஷி.. சென்ஷி-ன்னு ஒருத்தர் இருந்தார்.. எங்கீங்க ஆளையே காணோம்? நானும் வருவாரு, வருவாரு-ன்னு பாக்கறேன்.. ரொம்ப பயந்துட்டாரோ?

VIKNESHWARAN ADAKKALAM said...

இது ஒரு கொலை முயற்சி... சென்ஷிய யாராவது காப்பாத்துங்க...

பரிசல்காரன் said...

@ vikneswaran

//இது ஒரு கொலை முயற்சி... சென்ஷிய யாராவது காப்பாத்துங்க...//

ச்ச்சான்ஸே இல்ல!!

(அவரு எங்கியோ தலைமறைவாய்ட்டாரு!!)

Anonymous said...

//பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை //

மீரா பிறந்த நாளுக்கு சாப்பிட்ட விருந்துனால ஏதாவது அஜீரனம்?

ஏன் இந்தக் கொல வெறி?

சென்ஷி said...

என்னக் கொடும பரிசல்காரரே இது...
:(...

எத்தனை நாள் கொலவெறி இது :))

சென்ஷி said...

//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”
//

ஸ்ஸ்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே... யாரங்கே... ஒரு கிளாஸ் தண்ணியாச்சும் காட்டுங்கப்பூ :(

சென்ஷி said...

//பரிசல்காரன் said...
@ அனுஜன்யா

//சென்ஷிக்கு பின்நவீனத்துவம் எல்லாம் தண்ணி பட்டபாடு. //

தெரியுமே.. அதுனாலத்தானே அவர்கிட்டா கேக்கணும்ன்னு முடிவு பண்ணினப்பவே கேள்வி, இப்படி வந்து விழுது!
//

இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தியே எழுத்த ரணகளமாக்கி வுட்டுடுங்க... :)

எப்பவுமே நான் செய்யற வேலைய இப்ப எல்லோருமே ஆரம்பிச்சுட்டாங்கப்பூ :))

சென்ஷி said...

ஹைய்யா... நாந்தான் 25.

(நொம்ப முக்கியம்ன்னு சலிச்சுக்காதீங்கப்பூ )

ஆயில்யன் said...

//எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)///

FALL ஆகாமா நல்லாவே ஆடியிருக்கீங்க :)))


ஆனா சென்ஷிக்கு போட்ட பந்து நல்ல ஃபுல்டாஸா இருக்கு லட்டு மாதிரி வாங்கி அடிச்சுடுவாருன்னும் நம்பிக்கை இருக்கு! (சென்ஷியண்ணே கமிட் பண்ணிக்கிட்டேன் நல்லா அடிச்சு ஆடுங்க! ))

பரிசல்காரன் said...

@ வடகரை வேலன்

அண்ணா.. எல்லாம் கோவியார் மேல இருந்த கோவம்தான். மணி பதினொண்ணா இருந்திருந்தா உங்களைக் கூப்டிருப்பேன். ரெண்டு மணிக்கு ஏன் கூப்டுவானே-ன்னு நானே கஷ்டப்பட்டு யோசிச்சு கேட்ட கேள்வி இது!

பரிசல்காரன் said...

@ சென்ஷி

வாங்க வாங்க.. எப்படியிருக்கீங்க?

ஜெகதீசனோட விதிகள்ல 48 மணி நேரத்துல பதில் சொல்லணும்ன்னு போட்டிருக்கு. கேள்வி கேட்டு 24 மணி நேரம் நெருங்கப்போகுது..

//ஸ்ஸ்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே... யாரங்கே... ஒரு கிளாஸ் தண்ணியாச்சும் காட்டுங்கப்பூ//

மொதல்ல அப்படித்தான் இருக்கும்.. ஆரம்பிச்சா சரியாப் போய்டும்! (எழுத ஆரம்பிச்சா....!)

/ஹைய்யா... நாந்தான் 25.//

எதிர்ல இருக்கற விபரீதம் தெரியாம விளையாடுதுபார் குழந்தை!

பரிசல்காரன் said...

@ஆயில்யன்

//FALL ஆகாமா நல்லாவே ஆடியிருக்கீங்க//

நொம்ப தேங்சுங்க!

//சென்ஷியண்ணே கமிட் பண்ணிக்கிட்டேன் நல்லா அடிச்சு ஆடுங்க!//

ம்ம்ம்ம்ம்ம்மாட்னாராஆஆஆஆஆஆஆஆ!!

கயல்விழி said...

என்னங்க பரிசல் இப்படி எல்லாம் ப்ளேடு போடறீங்க? தாங்க முடியல :(

சென்ஷி said...

அண்ணா... நான் பதில் பதிவு போட்டு கேள்வியும் கேட்டாச்சுண்ணே :))

இங்க இருக்குது.. என்னோட அடுத்த கேள்வியும் உங்களுக்கான பதிலும்...

http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_09.html

தமிழன்-கறுப்பி... said...

இதெல்லாம் எங்களோட விதி...:(

நல்லா எழுதறாருன்னு பாத்தா பெரும் கொடுமைக்காரங்களையில்ல கூப்பிட்டு வச்சிருக்காங்க...:)

தமிழன்-கறுப்பி... said...

@ விக்னேஸவரன்...

யாரு சென்ஷியையா!!!!
விக்கி, அவரு சிங்கம்லே... சும்மா கலக்குவாரு பாரங்க அவரோட நகைச்சுவைகளுக்கு நான் ரசிகன்...:)


(சென்ஷி அண்ணே இத விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது...)

தமிழன்-கறுப்பி... said...

ஒரு முடிவோடதான் புறப்பட்டு வந்திருக்காப்புல பரிசல்காரன் ....

கொலை வெறியோட கலக்குறிங்க வாழ்த்துக்கள்...:))

பரிசல்காரன் said...

நன்றி கயல்விழி..

@ சென்ஷி

லிங்க் எல்லாம் எதுக்கு தலைவா? உங்களுது நம்ம ஃபேவரைட்ல இல்ல இருக்கு...

இப்போதான் தனி விண்டோவுல ஓப்பன் பண்ணினேன்.. (உங்க பேஜ் ஒப்பன் ஆகறப்ப, தலைவர் இளையராஜாவோட பாட்டு கலக்குது!) பதிலோட ஆரம்பத்த படிக்கறப்பவே தலை கன்னா பின்னா-ன்னு சுத்துது! நான் போட்ட கூக்ளில சிக்ஸர் அடிச்சுட்டீங்க போல!


@ தமிழன்

/நல்லா எழுதறாருன்னு பாத்தா பெரும் கொடுமைக்காரங்களையில்ல கூப்பிட்டு வச்சிருக்காங்க//

என்ன பண்ணச் சொல்றீங்க? என்னை ஒழிச்சுக்கட்டணும்னே கேள்விகேட்கறப்போ வேற வழியில்லாம இந்தக் கொடுமையைப் பண்ண வேண்டியதாப் போச்சு..

Vijay said...

செம கலக்கல் பதிவுங்க..

//(எந்த பால் போட்டாலும் கோல் அடிப்போம்ல நாங்க!)//

கிரிக்கெட்ல தானெ? :))

சின்னப் பையன் said...

மொக்கையோ மொக்கை....

பரிசல்காரன் said...

@! விஜய் & ச்சின்னப்பையன்

ட்யூப்லைட்ப்பா நீங்க!

Vijay said...

அது நிஜம்தாங்க. பாத்தாலே தெரியுதே!!! நாம எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதான்னு.

Sathiya said...

என்ன சின்ன புள்ள தனமா இருக்கு...வுட்ரா வுட்ரா!;) இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொறுமைங்க!

//”எழுத்துகளில் தெறிக்கும் பின்நவீனத்துவப்போக்கிற்கு சமமான பிரளயமீட்சியின் பரிணாம பரிமாணங்களுக்கிடையேயான ரௌத்ர பூதாகாரத்தில் தொக்கி நிற்கும் விடை தெரியா கேள்விகளின் விடை தெரிந்தவர் வடை வேண்டுமென்றால் சரவணபவனுக்குப் போவாரா.. வீட்டிலேயே சுட்டு சாப்பிடுவாரா?”
//
அதாவது, ஒரு லக்னத்தில் ஒன்பது கிரகங்களும் முச்சம் பெற்ற ஒருவன், "ஒருவன்", சரவணபவனுக்குப் போயும் சாப்பிடலாம், வீட்டிலேயும் சாப்பிடலாம், வடையே இல்லாமலும் சாப்பிடலாம்!

இரா.ச.இமலாதித்தன் said...

நான் இணைக்கு தான் படிக்கிறேன் இந்த பதிவி...தமிழ் குழுமத்தில் இன்று தான் அறிமுக படுத்தினார்கள்...


ரொம்ப நல்லா இருக்கு.கோர்வையா ஐம்பதை தாண்டிட்டீங்க..உங்க வயசும் 50 தாண்டி இருக்கும்ன்னு நினைக்கிறேன்.