Tuesday, July 8, 2008

அவியல் – ஜூலை 08 - 2008

`என்னடா இவ்வளவு நாளாக அவியல் எழுதாமல் இருக்கிறாய்’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டதால்.... (வேற யாரு கேப்பா?) இன்று அவியல்...

-------------------------

பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்!

--------------------------------------


குசேலன் பாடல்கள் முதலில் கேட்பதற்கு `ஒண்ணும் பெரிசா சொல்றதுக்கில்லையே’ என்றிருந்தது. கேட்க, கேட்க பரவாயில்லை ரகம். `அட.. பரவாயில்லையே’ என்று தோன்ற இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருக்கலாம். எனக்கு மிகப் பிடித்தது `வெயிலோடு விளையாடி’ மியூசிக்கில், வேறு மெட்டில் ஜி.வி.பிரகாஷ் போட்டிருக்கும் `பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா’ என்ற பாடல். ரஜினி புகழ் பாடும் பாடல் என்றுதான் முதலில் நினைத்தேன். நன்றாக கேட்டபோது `அவர் தோழனே.. உனைப்பாடவே.. சுகம் கூடுதே’ என்ற வரிகள், இது, படத்தில் சிகை அலங்காரனாக நடிக்கும் பசுபதிக்காக எழுதப்பட்ட பாடல் என்பதைப் புர்ய வைக்கிறது. யுகபாரதி பின்னியெடுத்திருக்கிறார். ஏற்கனவே விகடனில் அவரெழுதிய தெருவாசகத்தில் இது போன்ற சாமான்யர்களை தன் கவிதையில் பெருமைப்படுத்தினார். (ஆனால் இதை எழுதும்போதுதான் எடுத்துப் பார்த்தேன். அதில் எழுதிய வார்த்தைகளை இந்தப் பாடலுக்கு அதிகமாக பயன்படுத்தவில்லை! சபாஷ் யுகபாரதி!!) நான் பாடல் வரிகளுக்காகவே பாடல்களை ரசிக்கும் ஜாதி. இதோ அந்தப் பாடலில் சில வரிகள்:

“இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக்கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடி போகின்றோமே எந்நாளும்”

“பிறர் தலையின் கனமெல்லாம்.. இவனாலே குறையாதோ”

“அடுத்த மனிதன் வளர்ச்சி கண்டு
மகிழும் மனிதன் உன்போலே
எவருமில்லை உலகில் இங்கு
தலையும் தருவார் தன்னாலே”

”இவன் கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்புப் போட்டு செய்யும் தொழிலால் வாழ்பை வெல்பவன்”

அதேபோல `சொல்லம்மா சொல்லம்மா’ பாடலில் பா.விஜய்-ய்யின் வரிகளும் சூப்பர்.

“Insurance இல்லாம வாழும் நமக்கு
Installment வாங்காம இன்பம் இருக்கு”

--------------------------------

என் நெடுநாள் நண்பன் ரகுவை நேற்று சந்தித்தேன். நண்பனென்று யாரைச் சந்தித்தாலும் “ஐயா.. சாமி.. நான் பிளாக்-ல எழுத ஆரம்பிச்சிருக்கேன்.. படீங்க சாமீ” என்று கெஞ்சுவதுதானே முதல் வேலை? அதே போல அவனிடமும் சொன்னேன்.

“எப்படா எனக்கு கம்ப்யூட்டரும், நெட் கனெக்‌ஷனும் வாங்கித்தர்ற?” என்று கேட்டான்.

“நான் எதுக்குடா உனக்கு வாங்கித் தரணும்?”

“முதல்லயெல்லாம் உன்கதை குமுதத்துல வர்றப்ப, குமுதம் வாங்கித்தந்து படிக்கச் சொல்லுவியில்ல? அதேமாதிரி....”

அதுசரி!

-----------------------------------------

அப்பாவின் காரியங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான், கிரேசி கிரி, செந்தில், தம்பி ராம் எல்லாருமாக உட்கார்ந்து என் வலையெழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். (உனக்கு வேற வேலையே இல்லியாடா?) உள்ளே ஒரு அறையிலிருந்து “எல்லாத்தையும் விட அவியல்தான் நல்லாயிருக்கு” என்றும், “ஆனா அவியல்ல ஏன் முருங்கக்காய் இல்ல?” என்றெல்லாமும் குரல்கள் கேட்டது. `ஆஹா.. நம்ம அவியல்ல முருங்கக்காய் சமாச்சாரத்தை எதிர்பார்க்கிறார்கள் போல ‘ என்று அப்போது போட்ட ஒரு அவியலில் நமீதா படமெல்லாம் போட்டேன். அடுத்த நாள் சாப்பிடும்போது என் கஸின் சுதாக்கா ”எல்லாருக்கும் நான் பண்ணின அவியல்தாண்டா பிடிச்சிருக்கு”
என்றபோதுதான் எந்த அவியலைப்பற்றி பேசியிருக்கிறார்கள் என்று புரிந்தது.

-----------------------------------

"எங்கே இந்தக் கவிஞர்கள்?” வரிசையில் இன்று மேகவண்ணன்

மென்மையாகத்தான் கைகுலுக்கினான்
ஆனாலும் வலிக்கிறது
காதலியின் கணவன்.

45 comments:

Anonymous said...

மீரா,
இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீராவுக்கு வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்

Anonymous said...

ஜெகதீசன் நாலாவ்து பகுதி எழுதி, TBCD கைல கொடுத்துட்டாரு, படிச்சீங்களா?

பரிசல்காரன் said...

@ வடகரை வேலன் & முத்துலெட்சுமி

மிக்க நன்றிகள்!!

பரிசல்காரன் said...

அட.. கிரி ராமலட்சுமிக்குத்தானே குடுத்திருந்தாரு.. ஜெகதீசன் எங்க வந்தாரு? ஒண்ணுமே புரியலண்ணா..

இன்னைக்கு பாக்கறேன்..

கோவி.கண்ணன் said...

//பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்!//


மீராவுக்கு உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்க ! வாழ்க !!

கோவி.கண்ணன் said...

கே.கே,

ஒரு மொக்கை பதிவு போடுவதற்கான அழைப்பாணை உங்களுக்கு காத்துக் கொண்டு இருக்கிறது.

Athisha said...

மீராவுக்கு என் இதயம்கனிந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"" i wish you a very happy bday meera ""

anujanya said...

(மான்) குட்டி கதை
ஒரு பெரிய வலையாறு உள்ளதாம்.
சில செடிகள் அழகாக
இருகரையில் பூ வளர்க்குமாம்.
பல தேனீக்கள் சும்மா பறந்துகொண்டே
ஒவ்வொரு வலைப்பூவிலும் தேன் நுகருமாம்
அந்த வலையாறில் பயணிக்க
ஒரு அழகிய பரிசல் ஒன்று உள்ளதாம்
தேனீக்களுக்கு பரிசலைப் பார்க்காவிட்டால்
தூக்கமே வராமல் போகுமாம்.
அந்த பரிசல்காரனிடம் இரு அழகிய
மான்குட்டிகள் இருக்கின்றதாம்.
பெரிய மான்குட்டிக்கு மீரா என்ற பெயர்
சிறிய மான்குட்டி மேகா என்றறியப்படும்
இன்று மீரா என்ற அந்த பெரிய
மான்குட்டியின் பிறந்த நாளாம்
இந்த திருநாளைக் கொண்டாட
வலையாறில் திரியும் அத்துணை
தேனீக்களும் பாடிக்கொண்டே இருக்கின்றதாம்
'Happy Birthday to You Meera' என்று
அத்துடன் தேனீக்கள் பரிசல்காரனிடம் சொன்னது
'குடும்பத்துடன் மான்குட்டி பிறந்தநாளை கொண்டாடு'

அனுஜன்யா

நானானி said...

செல்வி மீராவுக்கு என் அன்பான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!

ஜெகதீசன் said...

மீராவுக்கு வாழ்த்துக்கள்!!!
:)

rapp said...

மீராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ambi said...

மீராவுக்கு என் இதயம்கனிந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கவிதை நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

மீராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

//நான் பாடல் வரிகளுக்காகவே பாடல்களை ரசிக்கும் ஜாதி//

நானும் அப்படியே.

//"எப்படா எனக்கு கம்ப்யூட்டரும், நெட் கனெக்‌ஷனும் வாங்கித்தர்ற?” என்று கேட்டான்.

“நான் எதுக்குடா உனக்கு வாங்கித் தரணும்?”

“முதல்லயெல்லாம் உன்கதை குமுதத்துல வர்றப்ப, குமுதம் வாங்கித்தந்து படிக்கச் சொல்லுவியில்ல? அதேமாதிரி....”

ரசித்தேன்:))!

- யெஸ்.பாலபாரதி said...

மீரா குட்டிக்கு என் அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்.. கொடுத்துடுங்க தலைவா!

VIKNESHWARAN ADAKKALAM said...

மீராவுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//எல்லாருமாக உட்கார்ந்து என் வலையெழுத்துக்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.//

என்ன செய்வது பலருக்கு எழுதுவதும் படிப்பதும் கசக்கிறது. அப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க சிரமம்...

லக்கிலுக் said...

மீராவுக்கு வாழ்த்துக்கள்!

உண்மையிலேயே அவியல் நல்லாதாங்க இருக்கு :-)

பாபு said...

மீராவுக்கு வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்

Jaisakthivel said...

Many More Happy returns of the day.
Jaisakthivel, Chennai.

லதானந்த் said...

வாழ்க! வாழ்க!



நெஞ்சினிக்க நினைவினிக்க வாழ்த்துகிறோம்!
நின் பெருமை ஓங்கிடவே வேண்டுகிறோம்!

கொஞ்சு மொழி அஞ்சுகமே! கோல விழிச் சித்திரமே!
குவலயமே கொண்டாட வாழ்த்துகிறோம்!


சரியான பாதையினை நீ காட்டி
சரித்திரமே படைத்திடுவாய் இது உறுதி!

பிரியாத அன்புடனே பண்பும் சேர்த்து
பிறர்க் கெல்லாம் வழி காட்ட வாழ்த்துகிறோம்!

அரிய பெரும் பதவி பெற்று அரசே நடத்தும்
ஆளுமைதான் உனக்குண்டு அறிவாய் கண்ணே!

மீரா எனுமுன்றன் பேர்தான் எங்கும்
மேன்மையுடன் பரவிடவே வாழ்த்துகிறோம்.



நுரையாடும் கடல் மேலே தவழ்ந்தாடும் அலை போலே
நூறாண்டு வாழ்க வாழ்க

பிறை போலும் திருமகளே! பிள்ளைக் கனியமுதே!
பெருகி நீ வாழ்க வாழ்க!

விரைவாக நீ வளர்ந்து வித விதமாய்க் கற்றறிந்து
வீரங்கனையாய் வாழ்க!

பரிசிலான் பெற்றெடுத்த பளிங்கு மணிச் சுடரே
பல்லாண்டு வழ்க வாழ்க!

☼ வெயிலான் said...

மீரா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!

பரிசல்காரன் said...

நன்றி கோவியாரே...

வந்து பாத்து மொக்கை போட்டுடறேன்..

மிக்க நன்றி அதிஷா.. (ரொம்ப நாளாச்சு பாத்து!)

பரிசல்காரன் said...

அனுஜன்யா..

மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது உங்கள் வாழ்த்து! நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து, மீராவை படிக்கச் சொல்லி கேட்டோம்.

You made me the day! மிக்க மகிழ்ச்சி & நன்றி!

சின்னப் பையன் said...

மீராவுக்கு வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்...

பரிசல்காரன் said...

மிக்க நன்றி

நனானி, ஜெகதீசன், வெட்டியாபீசர் & அம்பி!

பரிசல்காரன் said...

@ ராமலட்சுமி

ரொம்ப நன்றிங்கக்கா.. நான் நீங்க சொல்லாததுக்கு முன்னாடியே.. உங்க சார்பா மீராவுக்கு சொல்லீட்டேன்..!

@யெஸ்.பாலபாரதி

குடுத்துட்டேன் தலைவா! (அத்துணை வேலைப்பளுவிலும் வந்து பின்னூட்டியதற்கு நன்றி பாலா!)

கிரி said...

மீராவிற்கு (பெயர் அட்டகாசம்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அனைத்து வளமும் நலனும் பெற்று பெற்றோர் பெயர் சிறக்க வாழ வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ vikneswaran

//என்ன செய்வது பலருக்கு எழுதுவதும் படிப்பதும் கசக்கிறது. அப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க சிரமம்...//

உண்மை! (அங்க ஆள் சிக்காம தவிக்கறீங்க போல!)

@ லக்கிலுக்..
//உண்மையிலேயே அவியல் நல்லாதாங்க இருக்கு :-)//

நன்றி தல! (வ.வா.பி.ரி!)

பரிசல்காரன் said...

தேங்க்ஸ் பாபு & ஜெயசக்திவேல்!

@ லதானந்த்

அங்கிள்.. மீரா உங்க வாழ்த்தை பிரதி எடுத்து வெச்சுட்டா! (உண்மையைச் சொல்லுங்க.. உங்க நண்பர் தமிழய்யா அரங்கமுத்துசாமி தானே இதை எழுதிக்குடுத்தார்?)

@ வெயிலான்

என்ன ரமேஷ்.. காலைலேர்ந்து பிசியா?

@ கிரி

//மீராவிற்கு (பெயர் அட்டகாசம்) இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

அந்தப் பெயர் வந்த கதை சுவாரஸ்யம்..! பின்னாடி எழுதறேன்!

சென்ஷி said...

மீராவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்...

ILA (a) இளா said...

மீராவுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

கவிதை அருமை, நறுக்!

Vijay said...

குறைவற்ற செல்வம், நீள் ஆயுள், பெற்று வாழ்க வளமுடன்.

கயல்விழி said...

மீராவுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

நன்றி கயல்விழி.., ila @ vijay

@ சென்ஷி

நேத்து நைட் ரெண்டுமணிவரைக்கும் உங்க பின்னூட்டத்தைக் காணோமே-ன்னு நெனச்சிட்டிருந்தேன். வந்துட்டீங்க.. கொஞ்சநாளா காணலியேன்னு உங்களைப் பழிவாங்க ஐடியா பண்ணிவெச்சிருக்கேன். இன்னிக்கு பாருங்க...

சீமாச்சு.. said...

மீராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்..


அன்புடன்
சீமாச்சு

சீமாச்சு.. said...

//மென்மையாகத்தான் கைகுலுக்கினான்
ஆனாலும் வலிக்கிறது
காதலியின் கணவன்.//


யப்பா... என்ன வரிகள்...

இதப் படிக்கும் போதே நெஞ்சு வலிக்கிறதே... "அந்தாளு" வந்து கை குலுக்கினா.. வலிக்காம இருக்குமா?


மீராக் குட்டி பிறந்த நாள் செய்தியிலே இந்த கவிதை வரிகள் வெளிச்சப் படவில்லை..

தனியா இதை ஒரு பதிவாப் போடுங்க..


சீமாச்சு

பரிசல்காரன் said...

முதல் வருகைக்கு நன்றி சீமாச்சு!

என் அவியலை தொடர்ந்து படிப்பவர்கள் கடைசியில் வரும் கவிதையை ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்..

சொன்ன வார்த்தையைவிட.. சொல்லாத வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!

கயல்விழி said...

//கொஞ்சநாளா காணலியேன்னு உங்களைப் பழிவாங்க ஐடியா பண்ணிவெச்சிருக்கேன். இன்னிக்கு பாருங்க...//

பார்த்தேன் பரிசல் பார்த்தேன்!

அந்த கொடுமையை என் கண்ணால பார்த்தேன்!(சோக பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் படிக்கவும்)

பரிசல்காரன் said...

@ கயல்விழி

//பார்த்தேன் பரிசல் பார்த்தேன்!

அந்த கொடுமையை என் கண்ணால பார்த்தேன்!(சோக பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் படிக்கவும்)/

அவரு கலக்கலா பதிலெழுதி அதே சோகமீஜிக்கை நம்மளைக் கேக்க வெச்சுட்டாருல்ல கயல்?

வெண்பூ said...

கொஞ்சம் லேட்டா "மீராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்"

better late than never

பரிசல்காரன் said...

நன்றி வெண்பூ..

பிஸியா இருந்திருப்பீங்க போல..

நோ ப்ராப்ளம்!

Venkatramanan said...

பரிசல்காரன்
அந்த பாடல் அனுபவத்தை யுகபாரதி தன்னோட நக்கீரன் தொடரில் வடித்திருக்கிறார் (http://www.nakkheeeran.com/ColumnContent.aspx?nid=4866) ஒரு நடை மௌஸ் பிடிச்சுப் போய் படிச்சு பாருங்க!
அன்புடன்
வெங்கட்ரமணன்

பரிசல்காரன் said...

சுட்டி(க்)காட்டியமைக்கு நன்றி வெங்கட்ரமணன்!

தமிழன்-கறுப்பி... said...

///பெரியவள் மீராவிற்கு இன்று பிறந்தநாள். பத்துவயது முடிந்துவிட்டது. நல்ல குணங்களும், அறிவும், ஆரோக்கியமுமாய் அவள் வாழ வலையுலகப் பெரியோர்களே... வாழ்த்துங்கள்!///

தாமதமான பிறந்த நாள் வாழத்துக்களுக்கு மன்னிச்சுக்கோடா மீரா...:)

நீ விரும்புவது போல ஒரு வாழக்கை உனக்காக இருக்கிறது..!

எப்பொழுதும் இன்பமாய் வாழ தேவதைகள் சார்பாக வாழ்த்துகிறேன்..!