Tuesday, July 22, 2008

******க் கதைகள் – 2

”கிருஷ்ணா, இந்த சீனுக்குண்டான டயலாக்-கை ஹீரோயினுக்கு சொல்லிக் குடு” – டைரக்டர் அவனிடம் சொல்ல, ஹீரோயின் மாலினியை நோக்கிச் சென்றான் அசிஸ்டெண்ட் டைரக்டர் கிருஷ்ணா. ஹீரோயின் அருகில் சென்றபோது தான் கவனித்தான், அவள் காலில் செருப்பணிந்துகொண்டு நின்றிருந்தாள்.

“மேடம்” தயக்கமாய் ஆரம்பித்தான் கிருஷ்ணா. மாலினி எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவாள்.

“அம்மன் கோயிலுக்கு முன்னாடி நிக்கறீங்க. செருப்போட..”

மாலினி கண்களில் எரிப்பது போல ஒரு பார்வை பார்த்தாள். “ஏய் மேன்... பூரா மண்ணா இருக்கு மேன்”

“மேடம் இது கிராமத்து கோவில் செட். டைல்ஸா போட முடியும்?”

“என்னா மேன் திமிரா பேசற? நான் செருப்பையெல்லாம் கழட்ட முடியாது”

“கோவில் சீன்ல யாராவது செருப்பு போட்டுட்டு..”

“யோவ்.. என்ன சீன் எடுக்கறாங்கன்னு எனக்கும் தெரியும். நான் சாமி கும்பிடற மாதிரி க்ளோஸ் அப் ஷாட்தானே? காலெல்லாம் தெரியாது.. போ..” மிகவும் எடுத்தெறிந்து பேச.., கோபம் வந்தது கிருஷ்ணாவுக்கு. அடக்கிக் கொண்டான்.

“இல்ல.. நான் என்ன சொல்ல வர்றேன்னா...”

“மேனேஜர்..” அவள் கத்திய கத்தலில் யூனிட்டே திரும்பிப் பார்த்தது.

பிறகு டைரக்டர் அவளை சமாதானப்படுத்தி, இனி படம் முழுவதும் கிருஷ்ணா அவளிடம் பேச வேண்டாம் என்று சொல்லி ஷூட்டிங்கை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டு, வருத்ததோடு இருந்த கிருஷ்ணாவிடம் வந்தார்.

“கிருஷ்ணா... விடுப்பா... இன்னைக்கு டாப் ஹீரோயின் அவ. அடுத்த செட்லயே அவளுக்காக காலைலேர்ந்து காத்திட்டு இருக்காங்க. ஏதோ நான் அறிமுகப்படுத்தினேன்னு நன்றிக்கடனுக்காக ஏர்ப்போர்ட்லேர்ந்து நேரா இங்க வந்துட்டா. கோவிச்சுட்டு போய்ட்டான்னா ஒரு வாரத்துக்கு வரமாட்டா. யோசிச்சுப் பாரு. அவ செருப்பப் போட்டா நமக்கென்ன... கழட்டினா நமக்கென்ன?”

காமிரா சுழல, செருப்பணிந்த காலோடு ஷாட்டுக்கு தயாரான மாலினி, கிருஷ்ணாவைப் பார்த்து ஏளனமாய் ஒரு சிரிப்பு சிரித்தாள்.


***********

ஏழெட்டு வருடங்களுக்குப் பின்...


டைரக்டர் கிருஷ்ணா எல்லோருக்கும் சீனை விவரித்துக் கொண்டிருந்தார்.

”நீங்க குடும்பத்தோட பொண்ணு பாக்கற மாதிரி சீன்” என்று மேற்கொண்டு விவரித்துவிட்டு அசிஸ்டெண்ட்டை அழைத்து, "எல்லாருக்கும் கைல காபி டவரா குடு” என்று கூறி விட்டு நகர்ந்தார்.

ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன், கூட்டத்தில் ஒரு நடிகையாய் அமர்ந்திருந்த மாலினி அசிஸ்டெண்ட் டைரக்டரை அழைத்தாள்.

“தம்பி, காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலை. இதுல காபி குடுக்க மாட்டீங்களா?”

“ஏம்மா, நீ மொதல்ல வேணா பெரிய ஸ்டாரா இருந்திருக்கலாம். இப்ப பெரியம்மா கேரக்டர்ல நடிக்கற.. உனக்கு காபியா? இது க்ளோஸ் அப் ஷாட்டெல்லாம் இல்ல. வெறும் டவரா போதும். குடிக்கற மாதிரி நடிங்க”

“இல்ல தம்பி...” ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் டைரக்டர் கிருஷ்ணா அருகில் வர, முகத்தை மறைத்துக் கொண்டு திரும்பினாள்.

”மாலினி மேடம்” கிருஷ்ணா அழைத்தான்.

மாலினி தயக்கமாய்த் திரும்பினாள்.

“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”

அவள் கண்களில் தளும்பும் நீரை அடக்கிக் கொண்டு நடக்கும்போது அந்த வீட்டிலிருந்த அம்மன் படம் கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் நின்று, அடக்க முடியாமல் “ஓ” வென அழுதாள். இப்போதும் யூனிட் திரும்பிப் பார்க்க, அமைதியாய் இருந்தான் கிருஷ்ணா.

36 comments:

Ramya Ramani said...

டச்சிங் :))

கோவி.கண்ணன் said...

//“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”
//

செண்டிமெண்ட் கதையாக போட்டு தாக்குறிங்களே ?

பாசக்கார புள்ள

பரிசல்காரன் said...

நன்றொ ரம்யா!

பரிசல்காரன் said...

//கோவி.கண்ணன் said...

//“போங்க.. நான் எல்லாம் ரெடி பண்றதுக்குள்ள போய் முதல்ல சாப்பிட்டுட்டு வாங்க.”
//

செண்டிமெண்ட் கதையாக போட்டு தாக்குறிங்களே ?

பாசக்கார புள்ள//

கதை நாயகன் பேரைப் பாத்தீங்கள்ல? அவன் அப்படித்தான்! சரியான இளிச்சவாயன்!

Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கிருஷ்ண இம்புட்டு நல்லவனா :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த நட்சத்திரக்கதை புத்தகங்களில் ஒருபக்கக்கதையில் வருவது போலவே இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//அவள் கண்களில் தளும்பும் நீரை அடக்கிக் கொண்டு நடக்கும்போது அந்த வீட்டிலிருந்த அம்மன் படம் கண்ணில் பட்டது. //

உங்க டயலாக் கொஞ்சம் பழசு !

கிளிசரின் இல்லாமல் முதன் முறையாக மவுனமாக அழுதாள் என்று சொல்லி இருக்க்கனும்
:)

கோவி.கண்ணன் said...

//”நீங்க குடும்பத்தோட பொண்ணு பாக்கற மாதிரி சீன்” என்று மேற்கொண்டு விவரித்துவிட்டு அசிஸ்டெண்ட்டை அழைத்து, "எல்லாருக்கும் கைல காபி டவரா குடு” என்று கூறி விட்டு நகர்ந்தார்.
//

பல்லவி ஞாபகம் தான் வருது, பலடங்களில் நாயகியாக நடித்த அந்தம்மா வேலைக்காரன் படத்தில் இரண்டாவது கதைநாயகியாக சரத்பாபுவுக்கு ஜோடியாக நடித்தது. அப்பறம் சமீபத்தில் 1998ல் அருணாச்சலம் படத்தில் பாட்டுப்பாடும் ஒரே ஒரு சீனில் 'மாத்தாடு மாத்தாடு..' அடியெடுத்துக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடும்.

லதானந்த் said...

ஒரு பக்கக் கதையாக இதைச் சுருக்கிப் பத்திரிக்கைக்கு அனுப்பியிருந்தா கேரண்டியாப் பிரசுரம் ஆகும்.

பரிசல்காரன் said...

@ syam

அத ஏன் கேக்கறீங்க!!

@ கோவி.கண்ணன்

அட! உங்க வசனம் அருமை! மாத்தியிருக்கலாம்!

&
You're right!!

எனக்கு ராஜ்கிரணையும் ஞாபகப்படுத்தும்!

@ லதானந்த்

தேங்க்யூ அங்கிள்!

புதுகை.அப்துல்லா said...

super annan.

Vijay said...

பரிசில்,

டிரண்ட்ட புடிச்சிட்டீங்க. உங்க மெயில் ஐடி பிளீஸ்..

viji022@gmail.com

rapp said...

நல்ல கதை, வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

நன்றி புதுகை அண்ணாச்சி!

நன்றி விஜய் (என்னோட ப்ரொஃபைல்லயே இருக்கே?)

நன்றி வெட்டியாபீசர்! (என்னாச்சு கொஞ்ச நாளா ஒரு வரிப் பின்னூட்டம்??)

Anonymous said...

கொஞ்சம் அழகுபடுத்தினால் நட்சத்திரம் இன்னும் பிரகாசிக்கும்.

பரிசல்காரன் said...

முயல்கிறேன் நண்பரே!

வெண்பூ said...

கிளப்புறீங்க பரிசல். கொஞ்சம் பழைய வாசனை அடிக்குது..

(மனதுக்குள்) ம்கூம்...தமிழ்மணத்துல ****னு பாத்த உடனே எதையோ எதிர்பார்த்து அடிச்சி புடிச்சி வந்தா, இவரு ஒவ்வொரு கதையிலயும் ஒவ்வொரு ஸ்டார் பத்தி எழுதுறாரு. அடுத்தது ஸ்டார் டிவி, 75 பைசா ஸ்டார் ஜெராக்ஸ் பத்தியெல்லாம் எழுதுவாரு போல...

பரிசல்காரன் said...

ஆஹா. ஐடியாவுக்கு நன்றி வெண்பூ!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நைஸ்ஸ்ஸ்ஸ் ஸ்டோரி !ஓடம் ஒருநாள் வண்டியில் போகும் .வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும் . இதனை உணர்ந்தவருக்கு வாழ்க்கையில் என்றும் அடக்கம் மிகுந்திருக்கும் . இல்லையென்றால் இப்படித்தான் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு..!

தமிழன்-கறுப்பி... said...

///டைரக்டர் கிருஷ்ணா எல்லோருக்கும் சீனை விவரித்துக் கொண்டிருந்தார்.//

உங்களுக்கு இந்த ஆசை வேற இருந்திச்சா...;)

தமிழன்-கறுப்பி... said...

//ஏழெட்டு வருடங்களுக்குப் பின்...//


ஒரு புளொக்தான் இயக்க முடிஞ்சுது..;)

தமிழன்-கறுப்பி... said...

///இது என்னய்யா ட்விட்டர்? ஒரு எளவும் புரியல///

அண்ணே அதென்னண்ணே ட்விட்டர்?
சொன்னா நல்லாருக்கும்ல...! நாங்களும் வருவம்ல...!

VIKNESHWARAN ADAKKALAM said...

முன்னோடி எழுத்தாளரின் கலை தெரிகிறது...
கலக்குங்கள்

சின்னப் பையன் said...

அருமை.. அருமை..

பரிசல்காரன் said...

@ aruvai Baskar

@ நன்றி!! நன்றி!

@ தமிழன்

இன்னைக்கு நாலுதானா?

//உங்களுக்கு இந்த ஆசை வேற இருந்திச்சா...;)//

என்ன இறந்தகாலத்துல கேக்கறீங்க? இப்போ இருக்கக் கூடாதா?

//ஒரு புளொக்தான் இயக்க முடிஞ்சுது.//

அதுதான் உண்மை!!

:-(((((

பரிசல்காரன் said...

நன்றி விக்னேஸ்வரன்

&

ச்சின்னப்பையன்!!

சென்ஷி said...

//rapp said...
நல்ல கதை, வாழ்த்துக்கள்
//

::)))

நானும் ஒண்ணும் சொல்ல விரும்பலை. வெறுமனே ரிப்பீட்டே போட்டுக்கறேன்

சென்ஷி said...

வெறுமனே ஒத்த கமெண்டோட சென்ஷி போயிட்டான்னு தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, புவியியல்ல எழுதிடப்படாதுன்னு இது அடுத்த பின்னூட்ட கயமை.. :))

பரிசல்காரன் said...

வாங்க சென்ஷி..

என்னாச்சு புதுப் பதிவு?

இன்னும் மனசு கனமாவே இருக்கா?

கயல்விழி said...

வழக்கம் போல நல்ல கதை, செண்டிமெண்டலா இருக்கு.

இத்தனை நல்ல இயக்குனர்கள் கூட இருப்பார்களா?(பரிசல் தான் இயக்குநரோ?)JK. Good work

பரிசல்காரன் said...

//இத்தனை நல்ல இயக்குனர்கள் கூட இருப்பார்களா?//

இருக்காங்க கயல்!! நிஜமாவே...

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. மாலினி போல பல பேர் எனில் கிருஷ்ணா போல சில பேர்!

இப்பல்லாம் கோயில் முன் மட்டுமின்றி அம்மன் படத்தின் முன்னும் செருப்பைக் கழட்டச் சொல்லி லைட் பாய் சொன்னாக் கூட நடிகைகள் கேட்டுப்பாங்க. செய்யாட்டா பின்னர் பேரும் தலையும் எப்படி உருளும் எனத் தெரியாதா...:))?

Thamira said...

நாம் படிப்பது குமுதமா அல்லது பிளாக்கா என்ற சந்தேகம் எழுந்தது. சூப்பர் சென்டிமென்ட். வாழ்த்துக்கள் பரிசல்!

பரிசல்காரன் said...

//இப்பல்லாம் கோயில் முன் மட்டுமின்றி அம்மன் படத்தின் முன்னும் செருப்பைக் கழட்டச் சொல்லி லைட் பாய் சொன்னாக் கூட நடிகைகள் கேட்டுப்பாங்க. செய்யாட்டா பின்னர் பேரும் தலையும் எப்படி உருளும் எனத் தெரியாதா...:)//

சூப்பர் க்கா! இந்தப் பாயிண்டை நான் யோசிக்கவே இல்ல!

@ தாமிரா

நன்றி தாமிரா! (உங்களுக்கு வந்து கும்மி போட்டப்புறம் நம்ம பக்கமே வர பயப்படறீங்க!!)

Thamira said...

இதுக்கெல்லாம் அசந்துர்ரவங்க.. நாங்க இல்ல, டாய்.. யாரப்பாத்து? (சில சமயங்களில் கொஞ்சம் சீரியசாகவே ஆணி புடுங்க வேண்டியது வந்துவிடுகிறது. பொழப்பு அப்படி! பொறுத்துக் கொள்ளவும்.)