Saturday, July 5, 2008

திருப்பூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு!

திருப்பூரில் ஜுலை நான்கு (நேற்று) ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது!


அதுகுறித்த ஒரு விளக்கமான விபரம் இங்கே..


நேற்று வழக்கத்திற்கு மாறாக வேலை விஷயமாக வெளியில் செல்ல வேண்டி வந்தது.. ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைத்து மணி பார்த்தேன். மதியம் மூன்று! ( திருப்பூரில் இதுதான் வழக்கமான மதிய உணவு நேரம்!) உடனே நண்பர் வெயிலான் ரமேஷை அழைத்தேன்.


"ரமேஷ்.. எங்க இருக்கீங்க?"


"ஆபீஸ்ல சாப்பிட்டு இருக்கேன்"


"அட... உங்க கூட சாப்பிடலாம்ன்னு நெனச்சேனே.."


"அஞ்சு நிமிஷம் முன்னாடி கூப்பிட்டு இருக்கலாம்ல? சரி.. நீங்க அன்னபூர்ணா வந்து சாப்பிட்டுட்டு இருங்க.. நான் வந்து உங்களை பாக்கறேன்"


நான் உடனே உற்சாகமாகி அன்னபூர்ணா சென்று ஒரு ஆனியன் ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.


சற்று நேரத்தில் வெயிலான் வந்து.. என்னைத் தேடி கண்கள் அலைபாய செல்லில் அழைத்தார்.


ஒரே ஊரில் இருந்தாலும்.. தினமும் பேசிக் கொண்டாலும்..
நானும் அவரும் இதற்கு முன் சந்தித்துக் கொண்டதில்லை!


என் செல் ஒலிக்க, நிமிர்ந்து பார்த்த நான் ஒருத்தர் செல்லுடன் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு அழைத்தேன்!


வெயிலான்தான் நான் சந்திக்கும் முதல் பதிவர்!!


கை குடுத்துக்கொள்ள முடியாமல் என் கையை ஆனியன் ரோஸ்ட் ஆக்ரமித்திருந்தது! (பசி!!) என் முன்னே அமர்ந்ததும் ரொம்ப நாள் பார்த்துப் பழகிய நண்பரைப் போல பேச ஆரம்பித்தார்!


குழந்தை போல முகம், வெயிலான் என்றால் வெயிலில் கறுத்துப் போயிருப்பாரோ என்று நினைத்தேன்! அவர் என்னடாவென்றால் கொஞ்சம் உயரம் கம்மியான அஜித் போல சிவப்பாய் இருந்தார்!


வலையுலகம் பற்றி சகலமும் பேசுகிறார்.. (எனக்கு வலையுலகம் பற்றி ஒண்ணுமே தெரிலங்கறது அவர்கிட்ட பேசும்போதுதான் தெரிஞ்சது!)நடுநடுவே அலுவலக நிமித்தம் வரும் அழைப்புகளுக்கு பொறுமையாக, தெளிவாக பதில் சொல்கிறார்..


என்னைப் போல மொக்கைப் பதிவெல்லாம் போடாமல்.. கொஞ்சமாக என்றாலும் நல்ல பதிவுகளாக போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். வலைப்பூ ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே.. தமிழ்மணம் ஸ்டார்-ஆக இருந்திருக்கிறார்.

ஜூலை - 13 , கோவை வலைப் பதிவர் சந்திப்பில் மீண்டும் சந்திக்கலாம் என்று பேசிக்கொண்டு.. ஒரு நெடுநாள் நண்பரை சந்தித்த மகிழ்ச்சியோடு பிரிந்தேன். பிரிவதற்கு முன் கேட்டேன்..

"ஏங்க.. சிவாஜி வாயிலே ஜிலேபி-ன்னு எழுதி.. லக்கிலுக்-கை தொடரச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்ல. நீங்களும் "காத்திருந்த காதலி" தொடரை தொடரவே மாட்டீங்கறீங்க"

"அடடே... சொல்ல மறந்துட்டேன்.. அந்தக் கதைல சங்கர்கிட்டேர்ந்து வர்ற மெசேஜை கௌரி பாக்கறா இல்லியா.. அதுல என்ன இருந்துதுன்னா.." என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்தவர் நிறுத்தி "வேண்டாம்" என்றார்.


"ஏங்க?"

"நீங்க என் பிளாக்-ல வந்து படிச்சுக்கோங்க!" என்று புன்னகையுடன் விடை பெற்றார்..

டிஸ்கி: தலைப்பை நல்லா படிச்சுட்டுதானே வந்தீங்க? "ஒரு" வலைப்பதிவர் சந்திப்புன்னுதான் குடுத்திருக்கேன்.. வேற எதுவும் நினைச்சு ஏமாரலியே?32 comments:

rapp said...

அய்யய்யோ, எத்தனப் பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க? அப்போ அவர் தொடர்கதைய போட்டுட்டாரா? போய் பாக்கறேன். ஏங்க இப்படி தோசைய (அதுவும் ஆனியன் ரோஸ்டாம்) ஞாபகப்படுத்தி வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க?:(:(:(

லக்கிலுக் said...

//சிவாஜி வாயிலே ஜிலேபி-ன்னு எழுதி.. லக்கிலுக்-கை தொடரச் சொன்னேன். //

அண்ணாச்சி... கோச்சிக்காதிங்க. எப்படியாவது எழுதிடறேன் :-(

பரிசல்காரன் said...

@ ராப்

ஏங்க.. அங்கெல்லாம் ஆனியன் ரோஸ்ட் கிடைக்கறதில்லையா?

@ லக்கிலுக்..

வருகைக்கு நன்றி!

கோவிச்சுக்காதீங்க சார்.. ஒரு நாள் விடாம கலக்கறீங்க.. இதையும் கொஞ்சம் கண்டுக்கலாமே-ன்னுதான் கேட்டேன். என்னைக்குன்னாலும் நீங்க எழுதிடுவீங்க-ன்னு தெரியும்!

rapp said...

கிடைக்குங்க, ஆனா எனக்குத் தெரிஞ்சு ஆந்திரா வில்லேஜ்ங்கர உணவகத்தைத் தவிர, வேறெங்கயும் இந்த மாதிரி சிற்றுண்டிகள் நல்லா இருக்கறதில்லை. தொட்டுக்க கொடுக்கிற தக்காளிச்சட்னியிலிரிந்து எல்லாத்திலும் தேங்காய அரைச்சு ஊத்திடுவாங்க, இன்னிவரைக்கும் காரணம் தெரியல. அதுவும் தேங்காய் சட்னிய அவ்வளவு மோசமா வேற யாராலும் செய்யவே முடியாது. மொத்தத்தில் ஏண்டா சாப்டம்னு ஆகிடும். இன்னொரு விஷயம் என்னன்னா, எல்லா இந்திய உணவகங்களிலும் சிற்றுண்டி செய்யறதில்லை. தமிழர்கள் மிக மிக அதிகமாக வசிக்கும் அல்லது தொழில் செய்யும் பகுதிகளில்தான் சிற்றுண்டி அளிக்கும் உணவகங்கள் இருக்கு. எனக்கோ சின்ன வயசிலேருந்து பல முறை முயன்றும் பிடிபடாத காரியம்னா, இட்லி தோசைக்கு மாவரைப்பது. அவ்வளவு அருமையா சொதப்புவேன். இப்போ புரியுதா என் பிரச்சினை.

☼ வெயிலான் said...

// குறி பாக்கறா // கெளரி பாக்கறா
// புன்னையுடன் // 'கை' விட்டுட்டீங்க ;)
//ஏமாரலியே?// ஏமாறலியே?

// கொஞ்சம் உயரம் கம்மியான அஜித் போல சிவப்பாய் //
இதெல்லாம் நெம்ப ஓவருங்ணா.

Anonymous said...

நல்லா இருங்க.

பரிசல்காரன் said...

வெயிலான்...போஸ்ட் பண்ணீட்டு முதல்ல உங்களைக் கூப்பிட்டு அவசர அவசரமா எழுதீட்டேன்.. நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு-ன்னு சொன்னேன்.. இப்படி போட்டுக் குடுத்துட்டீங்களே..

@ வேலன்...

உங்க ஆசீர்வாதம்!

Vijay said...

அட, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா இருந்துருக்கும் போலருக்கே...ம்..ம்..."ராப்பு"க்கு தேசை ஆசைய கெளப்பினதுத்தான் மிச்சம்....ம்...

Vijay said...

சே.....ஜஸ்ட் மிஸ்ஸூ.....அது தேசை இல்லபா ......ஹி.....ஹீ.......

பரிசல்காரன் said...

@ vijay

//அட, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா இருந்துருக்கும் போலருக்கே...//

ஆமாங்க.. நான் முதன்முதல்ல நேர்ல ஒரு வலைப் பதிவரை சந்திக்கிறேன் இல்லையா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்களுக்கு தெரியாதா ஒரே ஒரு ஆள் அதாவது தலைய எண்ணினாலும் ஒரே ஒரு ஆள் தான்.. சந்திச்ச வலைப்பதிவர் சந்திப்பெல்லாம் இங்கே நடந்திருக்கு அப்பறம் லிங்க் தேடி அனுப்பரேன்..நம்ம அபி அப்பா அவரையே சந்திச்ச சந்திப்பெல்லாம் நாங்க பாத்துட்டோம்.. நீங்க வேற ஒருத்தரத்தானே சந்திச்சீங்க.. தைரியமா வலைப்பதிவர் சந்திப்புன்னு சொல்லிக்கலாமே...

Thamiz Priyan said...

சந்திப்பது ஒருவராக இருந்தாலும் கூட முகம் தெரியாத ஆனால் நெடுநாள் பழகியது போன்ற இந்த உறவுகளை சந்திப்பது உண்மையில் மகிழ்வான விஷயம் தான்... :)

சின்னப் பையன் said...

சந்திப்பது ஒருவராக இருந்தாலும் கூட முகம் தெரியாத ஆனால் நெடுநாள் பழகியது போன்ற இந்த உறவுகளை சந்திப்பது உண்மையில் மகிழ்வான விஷயம் தான்... :)

ரிப்பீட்டேய்ய்ய்

Anonymous said...

ஆனியன் ரோஸ்ட், அன்னபூர்ணாதான் எனக்கு தெரிஞ்சுது. வலைப்பதிவர் சந்திப்பேல்லாம் ஒண்ணும் தெரியலை. குடுத்து வச்சவங்க

கோவை சிபி said...

ஜுலை 13 கோவையில் பதிவர் சந்திப்பா? எங்கே? பின்னூட்ட பதிவர்கள் வரலாமா!

VIKNESHWARAN ADAKKALAM said...

லக்கி லுக் அவரது லோகோவை தலைகீழாக போட்டுவிட்டதால் சரி செய்து போட்டுவிட்டு போகிறேன் :-)

வர்ட்டா....

பரிசல்காரன் said...

@ கயல்விழி முத்துலெட்சுமி
நன்றிங்க கயலக்கா

சரியா சொன்னீங்க தமிழ்பிரியன் & ச்சின்னப்பையன்

@ சின்ன அம்மணி..
//குடுத்து வெச்சவங்க//

என்னது.. காசா?

@ கோவை சிபி..
ஆம்.. வரலாம்.. podiyan.blogspot.காம்-ல் எங்கே என்று விபரம் தருவார்கள்.

@ விக்கி..
ரொம்பத்தான் குசும்புய்யா உங்களுக்கு..

cheena (சீனா) said...

பரிசல்காரன்,

பதிவர் சந்திப்பு எனில் புதிய நட்பு உதயம் எனப் பொருள். அது ஒருவராயினும் சரி - பல பேரானாலும் சரி.

நல்லதொரு பதிவு

Thamira said...

அன்புள்ள பரிசல், உங்களுடைய இந்த சந்திப்பு குறித்த பதிவு அருமை. ஆனால் அதைவிடவும் இந்த பின்னூட்டங்களில்தான் எவ்வளவு சுவாரசியம், நகைச்சுவை.! இப்படி ஒரு இனிய உலகம் இயங்கிக்கொண்டிருப்பது இவ்வளவு நாட்களாக தெரியாமல் போய்விட்டதே.! இந்த சுவாரசியங்களுக்கு நடுவே விகடனுக்கு சந்தா கட்டுவதே வேஸ்ட் ஆகிவிடும் போல தோன்றுகிறது. கொஞ்ச நாட்களாக நெட்டை திறந்தாலே உங்கள் குழுக்களின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிப்பதைத் தவிர வேறெதையும் திறப்பதில்லை. வளர்க உங்கள் சேவை (அதாவது தொண்டு, எங்கே நக்கலடிப்பீர்களோ என்று தோன்றுகிறது.) குறிப்பாக பின்னூட்டம் தந்த விஜய் யின் .:பீல் நன்கு புரிந்து கொள்ள முடிந்து, ரசித்துச் சிரித்தேன். ஆனால் அவரது பிளாக் காலியாக கிடக்கிறதே.. கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன். அவரது பதிவுகளை படிக்கவும் ஆவலாகவுள்ளேன்!

பரிசல்காரன் said...

வருக தாமிரா..

Vijayதான் தன் பிளாக்-கிற்கு “வரும்.. ஆனா வராது”ன்னு பேர் வெச்சுட்டாரே.. வருமோ... வராதோ..

(ஒருவேளை அதுவும் நீங்கதானா?.. ஏன்னா இந்த மாதிரி ஸ்ப்ளிட் பெர்சனாலிடிங்க வலையுலகத்துல அதிகம்)

Vijay said...

//உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்.//

பரிசில்....இப்போ ஒரு வலைபதிவு போடணும்ன்னு வைங்க.....பர்ஸ்ட்......(அய்யோ....அய்யோ......ஏன்பா......அடிக்கிறீங்க....நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட் சொன்னராம்பா...)

Saminathan said...

அன்னபூர்னா ரோஸ்ட், சரவண பவன் இட்லி, உப்புமா பாய் கடை, படையப்பா முட்டை தோசை, பாகிஸ்தான் சேட் பானி பூரி, மரண விலாஸ் புரோட்டா, கோல்டன் பிரியாணி, சுரேஷ் காபி பார் சில்லி, செட்டியார் கடை முட்டை வீச்சு....இன்னும் எவ்வளவோ இடம் இருக்குங்க திருப்பூர்ல வலைப்பதிவர் சந்திப்பு நடத்த....ஓட்டுங்கய்யா ஓட்டுங்க...!!!

கோவி.கண்ணன் said...

நான் விரும்பி படிக்கும் பதிவுகளின் பட்டியலில் வெயிலான் ரமேஷ், மற்றும் உங்கள் பதிவுகளும் அடக்கம்.

தங்கள் இருவரின் சந்திப்பு குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது.

தங்கள் இருவரும் ஆன நட்பு என்றென்றும் தொடருட்டம்.

Vijay said...

மேல இருக்குற பின்னூட்டம்,,,,,,,(மறுபடியும்....ஹி..ஹீ....)உங்க அடுத்த பதிவுல போடவேண்டியது...இங்க...போட்டுட்டேன்.....இப்பிடி புல்லட் ஸ்பீட்ல பதிவு போட்டா...எப்பிடி நாங்க கரீட்டா பின்னூட்டம் போடரது.(யப்பா...எப்புடியோ இந்த தடவை சமாளிச்சிட்டேன். அடுத்த தப்புக்கு எப்பிடியோ......கண்ணை கட்டுதுறா சாமீஇ......)

Vijay said...

ஹலோ!!! தாமிர சார்,

கொஞ்சம் இருங்க.... கிள்ளி பாத்துக்கிறேன். (என்னை இல்லீங்க...சே...சே...பக்கத்துல வெட்டியாதான தூங்கறான். ஒரே ஒரு கத்து கத்திட்டு அப்புறம் கன்டின்யு பண்ணிகட்டுமே,...என்னா நான் சொல்றது?)

சாரி, நான் இத எழுதறத்துகுள்ள..பரிசில் சாரும் பின்னூட்டம் போட்டுட்டார்.

//நீங்கதான் உங்க பிளாக்குக்கு “வரும்.. ஆனா வராது”ன்னு பேர் வெச்சுட்டீங்களே.. தினம் வந்துடுச்சா,
வந்துடுச்சா-ன்னு பாத்து மண்டை காயுது!//

கூடவே இன்னொரு சொறுவல் வேற வுட்டுருக்காரு......

//வருக தாமிரா..

Vijayதான் தன் பிளாக்-கிற்கு “வரும்.. ஆனா வராது”ன்னு பேர் வெச்சுட்டாரே.. வருமோ... வராதோ..

(ஒருவேளை அதுவும் நீங்கதானா?.. ஏன்னா இந்த மாதிரி ஸ்ப்ளிட் பெர்சனாலிடிங்க வலையுலகத்துல அதிகம்)//

தேவைதானா உங்களுக்கு இது தாமிரா? உங்க ரேஞ்ச்க்கு சரக்கு இருந்தா நாங்க(ளும்) பதிவு போட்ருக்க மாட்டோமா? வச்சிகிட்டா வஞ்சன பண்ணுறோம்...எதோ கொஞ்சம் தேத்தி பதிவு போடலாம்னு பார்த்தா...அதே மேட்டருல(அம்பி கவனிக்க...மேட்டருன்னா "விசயம்".(புல் ஸ்டாப் தான் வச்சாச்சில அப்புறமா "விசயம்னா?"ன்னுல்லாம் கேக்கபடாது) யாராவது பதிவா போட்டு நம்ப சரக்க(அட சே ...மேட்டருதாம்பா)அதுல பின்னூட்டமா தள்ளிகினு(அய்யோ....அய்யோ...தட்டிகினுபா) பூட்ராங்களா? அதான் இப்புடி அம்போன்னு நிக்கிறேன்.

எனிவே..தாமிரா சார் & பரிசில் சார்,

பதிவு போட்டேன்னு வைங்க...(சரி சரி...அது நடக்ககூடாதுன்னு பீச்ல பிரார்த்தனை கூட்டத்துக்கு போஸ்டரடிக்க வசூலா....நடத்துங்க ...ந்டத்துங்க...எதோ நல்லா இருந்தா செரி) பெரிய ADVT குடுத்துடுவோம்.நெட்டுல,பத்திரிக்கைல...etc..(அப்பொதானா தவறி யாரும் வந்து மாட்டிக்க மாட்டாங்க)

பரிசல்காரன் said...

நன்றி கோவி.கண்ணன், & ஈரவெங்காயம் (???)

விஜய்.. கேட்டுட்டீங்க.. உங்களுக்கு ஒரு ஐடியா.. உங்க பின்னூடமெல்லாம் சூப்பரா இருக்கறதா ஒரு அப்பாவி சொல்லிட்டதால நீங்க போடற பின்னூட்டங்களையே copy / paste பண்ணி (பதிவு: பொன்மொழிகள்... பதிவர்: பரிசல்காரன்.. என் பின்னூட்டங்களும் அவர் பதில்களும் அப்படீன்னு..) போட்டு டெய்லி எங்கெங்க போய் என்னென்ன கழுத்தறுக்கறீங்களோ அத வெச்சே ஓட்டலாம்ல? எப்டீ?

anujanya said...

கே.கே.

நல்ல பதிவு. தாமிரா சொல்வதுபோல் மிக சுவாரஸ்யமான பதிவர்களில் நீங்களும், லதானந்தும் முன்னிடம் வகிக்கிறீர்கள். And a good set of people who give interesting feedback (which include me as well). கலக்குங்கள் !

அனுஜன்யா

பரிசல்காரன் said...

மிக்க நன்றி அனுஜன்யா..

உங்க ஆதரவு இருக்குல்ல. தொடர்ந்து கலக்குவோம்!

Vijay said...

இங்க பார்ரா,

பரிசில், என் பதிவுக்கு ஐடியா கேட்டா, அவர் பதிவுக்கு ADVT குடுக்க ட்ரை பண்ணுராரு. சரிங்கண்ணா, ரோம்ம்ப நல்லவரு அண்ணாஆ....நீங்க....ம்..ம்..

☼ வெயிலான் said...

// அன்னபூர்னா ரோஸ்ட், சரவண பவன் இட்லி, உப்புமா பாய் கடை, படையப்பா முட்டை தோசை, பாகிஸ்தான் சேட் பானி பூரி, மரண விலாஸ் புரோட்டா, கோல்டன் பிரியாணி, சுரேஷ் காபி பார் சில்லி, செட்டியார் கடை முட்டை வீச்சு.... //

இதெல்லாம் எப்படி ஈரவெங்காயத்துக்கு தெரிஞ்சது பரிசல்?

☼ வெயிலான் said...

// நான் விரும்பி படிக்கும் பதிவுகளின் பட்டியலில் வெயிலான் ரமேஷ், மற்றும் உங்கள் பதிவுகளும் அடக்கம். //

மிக்க மகிழ்ச்சி!

நன்றி கோவியாரே!

Thamira said...

நண்பர்கள் பதிலிடும் வேகம் பிரமிக்க வைக்கிறது. நான் கொஞ்சம் ஸ்லோ தான், பொறுத்துக்கொள்ளவும். விஜய், அனுஜன்யா, பரிசல்க்கு நன்றி. ஆனாலும் பரிசல், என்னை சந்தேகப்படுவது கொஞ்சம் அநியாயம்ங்க.(புது ஆளை இப்படித்தான் ராக் பண்ணுவீங்களோ..) இப்படியெல்லாம் கூட பண்றாங்களா? நமக்கு அந்த அளவுக்கு புத்திசாலித்தனம் பத்தாதுங்க.!