Sunday, July 20, 2008

சும்மா!

திருப்பூரிலேயே இருந்தாலும் என் நண்பர் கனலியை எப்போதாவதுதான் சந்திக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை மதிய உணவு இடைவேளையில் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். வழக்கம்போல, பேச்சு என் எழுத்துக்கள் பற்றி வந்தபோது “ஒரு நிமிஷம் கிருஷ்ணா” என்று எங்கிருந்தோ ஒரு சூட்கேஸை எடுத்துவந்து, அதில் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு பையை என்னிடம் கொடுத்தார். உள்ளே திறந்து பார்த்தபோது...

(வீட்டில் கொசுவத்திச் சுருள் இருந்தால் எடுத்து முகத்துக்கு முன் காட்டி ரிவர்ஸில் சுற்றிக் கொள்ளவும்.. ஒரு ஃப்ளாஷ்பேக்!)

நான் திருப்பூருக்கு வந்து பணிபுரிந்து கொண்டு இருந்த புதிதில், அவர் உடுமலையில் கனலி கலைக்கூடம் என்கிற பெயரில் ஆர்ட்ஸ் நடத்திக் கொண்டிருந்தார். எப்போது ஊருக்கு போனாலும், தொலைபேசினாலும் “எழுதறத விடாதீங்க கிருஷ்ணா” என்பதை வழக்கமாய்ச் சொல்லுவார். நானும் சரியென்று தலையாட்டிவிட்டு வருவேன். அப்போது, ஒரு ஐடியா தோன்றி, நான் அவருக்கு அவ்வப்போது “சும்மா” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை போல எழுதி தபாலில் அனுப்பிக் கொண்டிருந்த்தேன். 1999ல் ஆரம்பித்து 2004 வரை இது தொடர்ந்தது! `ஆறு வருஷம்’ என்று யாரும் பிரமிக்க வேண்டாம். அந்த ஆறு வருஷங்களில் வெறும் பத்தோ, பதினொன்றோதான் எழுதி அனுப்பியிருக்கிறேன்.

(FLASHBACK END)

அந்தக் கடிதங்களைத் தான் கொடுத்தார்! படித்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பேசிய சில வசனங்களைப் போல, அப்போதே கறபனை செய்து எழுதியிருக்கிறேன். (இந்த இடத்தில் ஒரு விளக்கம். நான் அவ்வப்போது, இது அப்போ எழுதினது என்று வருடத்தைக் குறிப்பிடக்காரணம் அதற்குப் பிறகு அதுபோல வந்திருந்து, அதை நான் காப்பியடித்தது போலிருக்ககூடாது என்பதற்காக மட்டுமே! உதாரணத்திற்கு நானெழுதிய ஒரு சாமியார் உருவாகிறார், அதற்குப்பிறகு வந்த ரன் விவேக் காமெடியை ஒத்திருப்பதாக பல நண்பர்கள் சொன்னார்கள்)

வெறும் ஒன்று (அ) இரண்டு பக்கங்கள்தான் அவை இருந்திருக்கிறது! ஒரு இன்லாண்ட் லெட்டரில்கூட எழுதியிருக்கிறேன். ”சும்மா - ஒரே ஆசிரியர், ஒரே வாசகர்” என்பதுதான் கேப்ஷன்! ஒரு இதழில் (???) `சுமாரான கையெழுத்து, படிப்பதுங்கள் தலையெழுத்து’ என்றுகூட கேப்ஷன் குடுத்திருக்கிறேன்! இலவச இணைப்பெல்லாம்கூடக் கொடுத்திருக்கிறேன்! (பொருளெல்லாம் இல்லை, ஒரு பக்கம் கூடுதலாக எழுதியிருப்பேன்!)

இதையெல்லாம் இங்கே குறிப்பிடக் காரணம்.. வேறென்ன, அதிலிருந்த சிலவற்றை இனிவரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்!

பின்னூட்ட ஐடியாக்கள்:-

# `உங்க பரண்ல இருக்கறது பத்தாதுன்னு இப்போ வீடு வீடா போய் சேகரிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? (இந்தப் பின்னூட்டம் கயல்விழி முத்துலெட்சுமி அக்காவுக்காக ரிசர்வ் செய்யப்படுகிறது!)

# ஆங்கில வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்திருக்கிறீர்கள். இருந்தாலும்... ஐடியாக்கள் = யோசனைகள், கேப்ஷன் – தலைப்பு, காமெடி – நகைச்சுவை, இன்லாண்ட் லெட்டர் – உள்நாட்டுக் கடிதம்.. இவற்றையும் தவிர்த்திருக்கலாம். (இந்தப் பின்னூட்டம் கோவி.கண்ணன் ஐயாவுக்காக ரிசர்வ்... ம்ஹூம்.. ஒதுக்கி வைக்கப்படுகிறது!, தலைவா, என்ன யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கிற்கு தெரியல!)

# உன்னையச் சொல்லி குத்தமில்ல, எடுத்து பத்திரமா வெச்சிருந்து குடுக்கறாரு பாரு அவரைச் சொல்லணும். எல்லாம் எங்க நேரம்!

# ரன் விவேக் காமெடி உங்களைப் பாத்து எழுதினார்ன்னு சொல்ல வர்றீங்களா? இது ரொம்ப ஓவர்!

# பதிவெழுதறதோட நிறுத்திக்கங்க. பின்னூட்டமும் நீங்களே எழுதிகிட்டா, நாங்க என்னதான் எழுதறதாம்?

# வேறு பின்னூட்டங்களிருந்தால் அதை, பின்னூட்டத்தில் குறிப்பிடவும்!

பின்குறிப்பு: நேற்றைய பதிவில் சொன்னபடி, இதை சனிக்கிழமை இரவே போட்டுவிட்டேன்! ஞாயிறு காலை இதை தமிழ்மணத்தில் சேர்க்கப் போகும் வலையுலக நண்பர் VIKNESWARAN நன்றியெல்லாம் சொல்லக்கூடாது என்றதால் அவருக்கு நன்றி சொல்லவில்லை!

33 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

//நேற்றைய பதிவில் சொன்னபடி, இதை சனிக்கிழமை இரவே போட்டுவிட்டேன்! ஞாயிறு காலை இதை தமிழ்மணத்தில் சேர்க்கப் போகும் வலையுலக நண்பர் VIKNESWARAN நன்றியெல்லாம் சொல்லக்கூடாது என்றதால் அவருக்கு நன்றி சொல்லவில்லை!//

அவ்வ்வ்வ்வ்

VIKNESHWARAN ADAKKALAM said...

அந்தக் கடிதங்களை இங்கே கொடுத்தால் நாங்களும் படிப்போமே...

ஆயில்யன் said...

//உங்க பரண்ல இருக்கறது பத்தாதுன்னு இப்போ வீடு வீடா போய் சேகரிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? (இந்தப் பின்னூட்டம் கயல்விழி முத்துலெட்சுமி அக்காவுக்காக ரிசர்வ் செய்யப்படுகிறது!)
///

அக்கா பின்னூட்டமிட வர்ற லேட்டாகும் அதனால அன்பு தம்பி நான் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்கிறேன் :)))))

ஆயில்யன் said...

//இலவச இணைப்பெல்லாம்கூடக் கொடுத்திருக்கிறேன்!//


பதிவுல வர்றப்பவும் கண்டிப்பா இது மாதிரி எதுனா கொடுக்கணும் ஒ.கே:))

ஆயில்யன் said...

பதிவெழுதறதோட நிறுத்திக்கங்க. பின்னூட்டமும் நீங்களே எழுதிகிட்டா, நாங்க என்னதான் எழுதறதாம்?

கோவி.கண்ணன் said...

பின்னூட்டமெல்லாம் பதிவினுள்ளேயே நீங்களே போட்டுக் கொண்டால் நாங்கள் என்ன செய்வது ?

ப்ளாஸ்பேக் ?

சமீபத்தில் 1901 ல்
:))

சாரி

அன்று நடந்தவை, நடந்தவை

புதுகை.அப்துல்லா said...

அவ்வப்போது “சும்மா” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை போல எழுதி //

அடடே! நீங்க வச்ச பேரு ''சும்மா''. என் கையெழுத்து பத்திரிக்கைக்கு நான் வைத்த பெயர் ''ஒண்ணுமில்லை ச்சும்மா''

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

நீங்க பெரிய்ய எழுத்தாளர் தான் போங்க !
வாழ்த்துக்கள் !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படியே போனா ப்ளாக்கர் கணக்கு வச்சிருந்து எனக்கு ஒரு பயனும் இல்ல.. பதிவில் நான் போடும் பின்னூட்டத்தை நீங்கள் போடுறீங்க.. சரி அதயாவது ஏன்னு கேக்கலாம்ன்னா ஆயில்யன் அதுக்கும்முன்னாலே வந்து அதையே\\ஆயில்யன் said...

பதிவெழுதறதோட நிறுத்திக்கங்க. பின்னூட்டமும் நீங்களே எழுதிகிட்டா, நாங்க என்னதான் எழுதறதாம்?//
இப்படி சொல்லிட்டா :(((

ஆனாலும் நீங்க வச்சத்தலைப்புகளில் "கையெழுத்து தலையெழுத்து" சூப்பர் ன்னு சொல்லி பின்னூட்டம் போட்டுக்கிறேன்.

சின்னப் பையன் said...

சூப்பர்!!! இனிமே 'விஜயகாந்த்' வசங்களையும், ரன் திரைப்பட விமர்சனங்களையும் இங்கே பார்க்கலாம்!!!

அவ்வ்வ்...

rapp said...

நல்லப் பதிவு வாழ்த்துகள்

பரிசல்காரன் said...

இப்போதான் இணையத்தில் அமர்கிறேன்!

அனைவர்க்கும் நன்றி!

விக்கி-க்கு ஸ்பெஷல் நன்றி!

@ ஆயில்யன்

ஏன் இப்படி அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படறீங்க? (:-))))

//பதிவுல வர்றப்பவும் கண்டிப்பா இது மாதிரி எதுனா கொடுக்கணும் ஒ.கே//

கண்டிப்பா? ஏற்கனவே என்னோட ஒரு அவியல்-ல இலவச இணைப்பு குடுத்தேன்!

பரிசல்காரன் said...

@ கோவி கண்ணன்

நடந்தவை என்பது ப்ளாஷ்பேக்-கிற்கு சரியாக வரவில்லையே... யாராவது உதவுங்களேன்...!

@ புதுகை எம்.எம்.அப்துல்லா

ஒண்ணுமில்லாத்துனாலதானே.. சும்மா?

@ அருவை பாஸ்கர்

ஹி..ஹி..

பரிசல்காரன் said...

@ கயல்விழி முத்துலெட்சுமி

லேட்டா வந்துட்டீங்களேக்கா!

@ ச்சின்னப்பையன்

நன்றி!

@ rapp

என்னாச்சு ரெண்டு மூணு நாளா உங்களுக்கு?

@ பரிசல்காரன்

ச்சே! அது நாந்தான்ல?

Veera said...

”ஒரே ஒரு ஆசிரியர், ஒரே ஒரு வாசகர்” - நல்ல கான்செப்ட்! :-)

Karthik said...

//“சும்மா” என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை

பரிசல்காரன்

நீங்க எழுதியதை இங்கே தருவீர்கள் என்று நம்புகிறேன்.

ப்ளாக் இல்லைனா நானும் இந்த மாதிரி ஏதாவது செய்ய வேண்டியிருந்திருக்கும். Thanks to Technology, thats not the case!

Ramya Ramani said...

நல்லப் பதிவு

லதானந்த் said...

அப்பச் சின்ன வயசிலெயிருந்தே இந்த வெறி அதாவது எழுத்து வெறி இருந்திருக்கு. வாழ்த்துக்கள். எதுக்கும் அடுத்த தபா ஒங்களைப் பாக்கிறப்போக் கொஞ்சம் தள்ளி நின்னே பேசுறேன்.

பரிசல்காரன் said...

@ வீரசுந்தர் @ karthik
& ரம்யாரமணி

நன்றி!

@ லதானந்த்

அங்கிள்... நீங்க இப்படிச் சொல்லலாமா? உங்க அனுபவம், எழுத்துக்கு முன்னாடி நான் ஜூஜூபி!

அப்புறம் ஒரு சந்தேகம்..

உங்களுக்கு முன்னாடி ரம்யாரமணி போட்ட பின்னூட்டத்துல சந்திப்பிழை இருக்குதானே?

priyamanaval said...

நல்ல பதிவு... மிகவும் ரசித்து படித்தேன்...

ஜோசப் பால்ராஜ் said...

ப்ளாஷ்பேக் ‍ நினைவலைகள் என்பது பொருத்தமான மொழிபெயர்ப்ப இருக்குமானு தமிழறிஞர்கள் பரிசீலிக்கணும். அலைகள்லயும் சுழல் சுழலா வரும், சினிமால ப்ளாஷ்பேக் காட்டுறப்பவும் சுழல் சுழலா காட்டுவாங்க என்ற ஒப்பீட்டு சான்றையும், த.அ. சபையின் முன் வைக்கிறேன்.

லதானந்த அங்கிளையே பயமுறுத்திட்டீங்க பரிசல்காரர்.

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பதிவுக்கு நான் பின்னூட்டம் போடப்போறதில்லை...:)

தமிழன்-கறுப்பி... said...

இது சும்மா..!

மங்களூர் சிவா said...

இந்த வருடத்தின் தலைசிறந்த பதிவு இதுவாகத்தான் இருக்க கூடும்.

மங்களூர் சிவா said...

அருமையான பதிவு இதை ஏன் நீங்கள் குமுதத்துக்கு அனுப்ப கூடாது?

மங்களூர் சிவா said...

இந்த வருட ஞானபீட விருது இந்த பதிவிற்குத்தான் நிச்சயம்.

பரிசல்காரன் said...

Thanks hi!

@ ஜோசப் பால்ராஜ்

அட! இந்த வார்த்தை பொருத்தமாக இருக்கிறதே! சபாஷ்! இதை நான் வழிமொழிகிறேன்!

@ தமிழன்

நிஜமா?

@ மங்களூர் சிவா

ஏன்.. ஏன் இந்தக் கொல வெறி?

என்ன, நட்சத்திரம் முடிஞ்சதும் ‘ஒரு மாதிரி' ஆயிட்டீங்களா?

மங்களூர் சிவா said...

/
@ மங்களூர் சிவா

ஏன்.. ஏன் இந்தக் கொல வெறி?

/

இல்லை பரிசல்காரன் நீங்கள் பதிவில் போட்டுக்கொண்ட பின்னூட்டங்களில் இதெல்லாம் இல்லை அதை தெரிவிக்கவே!

/

என்ன, நட்சத்திரம் முடிஞ்சதும் ‘ஒரு மாதிரி' ஆயிட்டீங்களா?
/

இப்ப ஃப்ரியா இருக்கேன் எங்க வேணா எவ்வளவு வேணா கும்மலாம்ல

:))))))

பரிசல்காரன் said...

@ மங்களூர் சிவா

//இப்ப ஃப்ரியா இருக்கேன் எங்க வேணா எவ்வளவு வேணா கும்மலாம்ல//

வாங்க! வாங்க!!

எங்களுக்கும் உங்களை மாதிரி நான்-ஸ்டாப் கும்மி மன்னன்னு பட்டம் வாங்க ஆசை! முடியலயே.!

சென்ஷி said...

இரண்டு நாட்கள் கழித்து லேட்டாய் இங்கு வந்து பின்னூட்டமிட புதிதாய் ஏதும் எனக்கு தோணாததால் வழக்கம்போல முத்துக்காவிற்கு நான் ரிப்பீட்டே வுட்டுக்கறேன் :))

சென்ஷி said...

//@ பரிசல்காரன்

ச்சே! அது நாந்தான்ல?//

அடப்பாவமே.. அந்த அளவுக்கா ஆயிடுச்சு :))

சென்ஷி said...

//ஜோசப் பால்ராஜ் said...
ப்ளாஷ்பேக் ‍ நினைவலைகள் என்பது பொருத்தமான மொழிபெயர்ப்ப இருக்குமானு தமிழறிஞர்கள் பரிசீலிக்கணும். அலைகள்லயும் சுழல் சுழலா வரும், சினிமால ப்ளாஷ்பேக் காட்டுறப்பவும் சுழல் சுழலா காட்டுவாங்க என்ற ஒப்பீட்டு சான்றையும், த.அ. சபையின் முன் வைக்கிறேன்.

//

எனக்கு அவசரத்துல ஒண்ணும் தோணாததால நான் இதுக்கு ரிப்பீட்டே வுட்டுக்கறேன்.. இல்லாட்டி மறுக்கா வழிமொழிஞ்சுக்கறேன் :)

பரிசல்காரன் said...

நன்றி சென்ஷியாரே...!