என்னுடைய ஒன்றிரண்டு புகைப்படங்களைப் பார்த்து நந்து f/o நிலா, ஜீவ்ஸ் ஆகியோர் பாராட்டி, பாராட்டி எனக்குள்ள இருந்த பி.சி.ஸ்ரீராமை தட்டி எழுப்பி விட்டார்கள்...
அதுனால நான் எடுத்ததுல `நல்லாயிருக்கு’-ன்னு நான் நம்பற இன்னொரு ஃபோட்டோ இதோ உங்கள் பார்வைக்கு..
படத்துல இடது ஓரம் இருக்கறது என் மனைவியோட அண்ணன் மகள் மஹிதா. பாக்கி ரெண்டு பேரை உங்களுக்கு அறிமுகப் படுத்தணுமா? (மேகா & மீரா)
இப்போ கோவை பதிவர் சந்திப்புக்கு கிளம்பறேன்..
நிறைய சுவாரஸ்யங்களான விஷயங்களோட உங்களை நாளை சந்திக்கறேன்..
27 comments:
//படத்துல இடது ஓரம் இருக்கறது என் மனைவியோட அண்ணன் மகள் மஹிதா//
படத்தைப் பாத்த உடனே "ஆஹா இந்த மூணாவது டிக்கெட்டைப் பத்தி பரிசல் சொன்னதே இல்லையே" அப்படின்னு தோணுனது, பரவாயில்ல விளக்கம் குடுத்திட்டீங்க.
நல்ல ரசனை உங்களுக்கு பரிசல். உங்களிடம் என்ன காமிரா உள்ளது?
அழகான படங்கள்...
Wonderful...rombave iyalba irukku parisal sir :)
நீங்க ஹீரோயின்களை மாற்றிப் படம் எடுத்துப்போடுங்க அப்பத்தான் திறமையை ஒத்துப்போம்.. அவங்க அழகால படம் வெற்றி பெற்றுவிடுகிறது... :)
Cute kids :)
போட்டிக்கு ஒரு துணைக்கேள்வி:
பரிசல்காரன் புகைப்படங்கள் அருமையாக வருவதற்கு காரணம் என்ன?
1. அவர் ஒரு அற்புதமான புகைப்படக் கலைஞர்
2. அவரிடம் அதி நவீன புகைப்படக் கருவி உள்ளது
3. அந்த புகைப்படங்களை அவர் எடுப்பதில்லை (ஹி..ஹி..)
4. மேல சொன்ன மூணுமே இல்லை. குழந்தங்க அழகா இருக்குறதுனால எல்லா படமும் தானாவே அழகா வந்துடுது
சூப்பரா இருக்கு படம்...
இந்த மூணு பேரும் சேந்தா பயங்கரமா கலாட்டா பண்ணுவாங்கன்னு பாத்தாலே தெரியுது!!!
பரிசில்,
பதிவர் சந்திப்பா?....ம்ம்ம்....:P
என்....ஜாய்ய்ய்ய்ய்...
ஒரு வாரத்துக்கு மேட்டர் தேத்திடுவீங்க போல இருக்கே. ம்ம்ம்ம்.....
@ வெண்பூ
//படத்தைப் பாத்த உடனே "ஆஹா இந்த மூணாவது டிக்கெட்டைப் பத்தி பரிசல் சொன்னதே இல்லையே" அப்படின்னு தோணுனது, பரவாயில்ல விளக்கம் குடுத்திட்டீங்க//
அதுக்காகவேதான் சொன்னேன்!
//உங்களிடம் என்ன காமிரா உள்ளது//
என்னிடம் காமிராவே இல்லை!
நன்றி விக்கி & ரம்யாரமணி!
@ கயல்விழி முத்துலெட்சுமி
//நீங்க ஹீரோயின்களை மாற்றிப் படம் எடுத்துப்போடுங்க அப்பத்தான் திறமையை ஒத்துப்போம்.. அவங்க அழகால படம் வெற்றி பெற்றுவிடுகிறது//
உண்மையா என்கிட்ட நல்ல காமிரா எதுவும் கிடையாதுக்கா. ஆனா ஒண்ணு ரெண்டு ஃபோட்டோகிராபி புக்குகளுக்கு சந்தா கட்டி, ரெகுலரா படிச்சுட்டு வர்றதாலயும், டிஜிட்டல் காமிரா போன்ற எலக்ட்ரானிக் ஐட்டங்களை ஆபரேட் பண்றது ரம்ப அர்வம் இருக்கறதாலயும், என் நட்பு வட்டாரத்துல யாரு காமிரா வாங்கினாலும் என்கிட்ட காமிச்சு “நல்லாயிருகா”ன்னு கேப்பாங்க. நானும், நாலஞ்சு நாள் வெச்சிருந்து என்னென்ன இருக்கு-ன்னு பாத்து சொல்றேன் - ம்பேன். சரின்னுடுவாங்க. அப்பல்லாம் எடுத்ததுதான் இதெல்லாம்.
அந்த மாதிரி சமயங்கள்ல வீட்ல இருந்து எல்லாம் பாக்கறதால குழந்தைகளை வெச்சு எடுத்து டெஸ்ட் பண்றேன்..
என்னோட ப்ரொஃபைல்ல இருக்கறது டூர் போனப்ப ஒரு பையன் தண்ணில விளையாடறதப் பாத்து நண்பர் காமிராவை அவசர அவசரமா புடுங்கி எடுத்தது.
எந்தக் காட்சியையும் வித்யாசமான கோணத்துல எடுத்தா அழகாய்டும்ன்னு நம்பறவன் நான்.
அதுக்கு நம்ம க்ரியேட்டிவிட்டி நல்லாநிருக்கணும் அது என்கிட்ட கொஞ்சம் இருக்கறதால என் படங்கள் கவனிக்கப்படுதுன்னு நெனைக்கறேன்.
இவ்ளோ பெரிய விளக்கம் நீங்க என்னோட ஹீரோயின்களைப் பத்தி சொன்னதால டென்ஷனாகி எழுதலக்கா! ரொம்ப நாளா இதெல்லாம் சொல்லணும்ன்னு இருந்தேன். இன்னிக்கு மாட்டினீங்க!
என் ஹீரோயின்கள்னால நான் ஃபேமஸானா என்னைவிட மகிழ்றவங்க யாரா இருக்க முடியும்!
அந்த ஹீரோயின்களோட ப்ரொடியூசர் நாந்தானே!
நன்றி ரிஷான் ஷெரீப்!
(மொத முறையா வரீங்களோ? இன்னைக்கு லதானந்த அங்கிள் உங்களைப்பத்தி சொன்னார்!)
@ வெண்பூ
//மேல சொன்ன மூணுமே இல்லை. குழந்தங்க அழகா இருக்குறதுனால எல்லா படமும் தானாவே அழகா வந்துடுது//
இது மட்டும்தான் உண்மையான உண்மை!
@ ச்சின்னப்பையன்
/இந்த மூணு பேரும் சேந்தா பயங்கரமா கலாட்டா பண்ணுவாங்கன்னு பாத்தாலே தெரியுது//
அட.. நெசந்தானுங்க..
@ விஜய்
//ஒரு வாரத்துக்கு மேட்டர் தேத்திடுவீங்க போல இருக்கே. ம்ம்ம்ம்//
ஆமா.. ரெடியா இருந்துக்கோங்க!
இந்தப் படம் நன்றாக உள்ளது நண்பரே!
நீங்கள் நன்கு படம் எடுக்கிறீர்கள். படமும் கதையும் என்ற வகையில் ஏன் புகைப்படத்தையும் சிறுகதையையும் இணைத்துக் கலர்ஃபுல்லா ஒரு முயற்சி செய்யக் கூடாது?
அவர்களின் இயல்பான சிரிப்போடு இருக்கின்றது புகைப்படம்
சுத்தி போடுங்கள் சார் ,கண் பட்டு விட போகின்றது
@ sp.vr.Subbiah
ஐயா.. மிக்க நன்றி!
@ லதானந்த்
அங்கிள்.. சூப்பர் ஐடியா! சீனியாரிடியை நிரூபிக்கறீங்க பாருங்க!
@ பாபு
சரிங்க நண்பரே!
அருமையா இருக்கு.
rainy day படமும் தூள்!
படம் அருமை. ( தலைக்கு மேலே மற்றும் வலது புறம் கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம். ரொம்ப டைட் கம்போஷிஷன். என் கருத்து மட்டுமே)
//மொத முறையா வரீங்களோ? இன்னைக்கு லதானந்த அங்கிள் உங்களைப்பத்தி சொன்னார்!//
நான் ஏற்கெனவே உங்க வலைத்தளத்துக்கு வந்து கொம்மெண்டெல்லாம் சொல்லிட்டுப் போயிருக்கேனுங்கோ..
அங்கிள் என்ன சொன்னாருங்கோ ?
பாவம் வயசுல பெரியவரு..
நல்லது சொல்லியிருந்தா மட்டும் ஒரு பதிவாப் போட்டுடுங்கோ.
தப்பா ஏதாவது சொல்லியிருந்தா மட்டும் எதையும் நம்பாம மறந்துடுங்கோ..பாவம் வயசுல பெரியவரு பாருங்கோ. இப்படித்தான் எதையாவது சொல்லிட்டிருப்பாரு. :)
(ஆனா என்ன சொன்னாருன்னு மட்டும் தனியா எனக்கு மெயில் பண்ணிடுங்கோ..அவரை நேரில் சந்திக்கும் போது வச்சுக்குறேன் )
மஹிதா,மேகா,மீராவால் சிறந்த புகைப்படக்காரர் என்ற பெயர் உங்களுக்கு ;)
முதல்ல ஒரு நல்ல கேமிரா வாங்குங்க.
@ surveysan
மிக்க நன்றி!!
@ jeeves
Noted...!
@ரிஷான் ஷெரீப்
அப்படியா?
@ வெயிலான்
சரி!
அருமை!
படம் அருமை பரிசல் காரரே!
//எனக்குள்ள இருந்த பி.சி.ஸ்ரீராமை தட்டி எழுப்பி விட்டார்கள்...///
ஒரு சின்ன திருத்தம் இன்னும் எம்புட்டு நாள் தான் பி.சி. ஸ்ரீராமை கூப்பிடுவீங்க, இனி எனக்குள் இருந்த ஜீவ்ஸையும், VCR யையும் எழுப்பி விட்டார்கள் என்று சொல்லுங்க
நன்றி kappi
&
குசும்பன்!
உங்க புளொக்குக்கு முதல் தடைவை வந்த போதே 'அது ஒரு மழைக்காலம்னு' இருந்த படத்தை ரொம்ப நேரம் பாத்துக்கொண்டிருந்தேன் அழகான குழந்தைகள் என்று, அப்பவே கேட்கணும்னு நினைச்சேன் ஆனா அத கேட்கறதுக்கு முன்னாலயே உங்க கிட்டயிருந்து பதில் வந்துடிச்சு...
குழந்தைகள் ரொம்ப அழகு:)
இந்தப்படமும் நல்லாருக்கு..!
Post a Comment