நான் காதலிக்கும்போது அதிகமாகக் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய கடிதங்களுக்கு நடுவே...
”உனக்காக
ஒரு ரோஜா கொடுத்தபோது
கேட்டாய்...
`இது எல்லா காதலர்களும்
அவரவர் காதலிக்கு கொடுப்பதுதானே’ என்று.
நான் சொன்னேன்..
`கொடுப்பது நானும்
பெறுவது நீயுமாதலால்
இது
தனித்துவம் வாய்ந்தது’ என்று”
இப்படி மொக்கையாக சில கவிதைகளும் இருக்கும். (இந்தக் கவிதையை படிச்சுட்டு மூணு நாள் என்கிட்ட உமா பேசவே இல்ல! அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவைக்க ரொம்ப சிரமப்பட்டேன். இனி ஒரு மூணு மாசத்துக்கு கவிதையே எழுதமாட்டேன் – ன்னு சொன்னப்பறம்தான் பேசவே சம்மதிச்சா!!)
அதுக்கப்புறம் சிலகவிதைகள் எழுதி, உமாகிட்ட கொஞ்சம் நல்லபேர் வாங்கினேன்னு வைங்க! `காதலுடன் சில கவிதைகளும்’ - ன்னு அதை பதிவுலகூட போட்டிருந்தேன். இப்போ... வேற சில ஜாம்பவானகள் எழுதின எனக்குப் பிடிச்ச சில காதல் கவிதைகள் உங்கள் பார்வைக்கு...
மரம் நடுங்கள்..
மரம் நடுங்கள்..
என் அவள்
இந்த வீதியில்தான் நடந்து போகிறாள்
மரம் நடுங்கள்!
-ராசி. அழகப்பன்
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப் பூ
என் காதல்.
நீ
நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா?
-பழனி பாரதி
உன்னை
நினைவுபடுத்தும்
எல்லாவற்றையும்
எரித்துவிடச் சொல்கிறாய்
அப்படியானால்
நான்
தீக்குளிக்க வேண்டுமா?
-அ. சரவணராஜ்
புதைத்துப் பார்த்தேன்
முளைக்கிறது
எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது
கரைக்கலாம் என்றால்
மிதக்கிறது
சுமக்கலாம் என்றால்
கனக்கிறது.
பாவி
என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.
-(என் ஃபேவரைட்) ரவி சுப்பிரமணியன்
31 comments:
எல்லாமே சூப்பர், நீங்கள் எழுதியதையும் சேர்த்து.
அனுஜன்யா
வாவ், மி த பர்ஸ்ட்
உங்கள் பதிவை சில நாட்களாகப் படித்து வருகிறேன். இன்று தான் பின்னூட்டம் போடுகிறேன்.
\\என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.\\
அந்த என்னடீஈஈஈஈ ரொம்பவே சூப்பர்.
உங்க கவிதைகளே சூப்பரா தானே இருக்கு.
உங்கள் தினம் ஒரு பதிவு போடும் டிப்ஸ் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது. இன்னும் கடைபிடிக்க ஆரம்பிக்கவில்லை :)
அன்புடன்,
விஜய்
நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்
இன்னாது திடீர் ஃபீலிங்சு...
அவ்வளவும் நல்லா இருக்கு.வந்த இடத்துல எனக்கு பிடித்ததையும் சொல்லிட்டு போறேன்.
எதைக் கேட்டாலும்
வெட்கத்தையே பதிலாக
தருகின்றாயே?
வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
-த.பூ.சங்கர்
கவிஞர்களின் கவிதைகள் பிரமாதம் பரிசல். இந்த மாதிரி பக்கத்திலேயே ரசித்த கவிதைகளை போடும் ஐடியா இருக்கும் போது நம் கவிதைகளை போடுவதை தவிர்த்துவிடுவது நலம். கம்பேர் பண்ணிவிடுவார்கள், சிக்கலாகிவிடும். எனினும் இந்த முறை தப்பிவிட்டீர்கள்! உங்களோடதும் பிரமாதம்னு சொல்லவருகிறேன். (இந்த மாதிரி பயமுறுத்தினீங்கன்னா என்னிடமும் சில ரோஜா கவிதைகள் இருக்கின்றன. ஜாக்கிரதை!)
எல்லா கவிதையும் நல்லா இருக்கு...
கவிதைகள் நன்று!
அன்புடன்,
ஜோதிபாரதி.
// பாவி என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.//
உணர்ச்சிகளோடான வார்த்தைகள், உள்சென்று வதைக்கவும் செய்கிறது.
//அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவைக்க ரொம்ப சிரமப்பட்டேன். //
:)))
சே! நல்ல சான்ஸ், அப்பவே எஸ்கேப்பாகி இருக்கலாம் அவங்க. (சும்மா, உல்லாங்காட்டிக்கு, கோச்சுகாதீக)
”உனக்காக
ஒரு ரோஜா கொடுத்தபோது
கேட்டாய்...
\\`இது எல்லா காதலர்களும்
அவரவர் காதலிக்கு கொடுப்பதுதானே’ என்று.
நான் சொன்னேன்..
`கொடுப்பது நானும்
பெறுவது நீயுமாதலால்
இது
தனித்துவம் வாய்ந்தது’//
அவங்க விவரமா வேற எதாவது பயனுள்ளதா தாங்கன்னு சொல்லி இருக்காங்க.. தனித்துவம் அது இதுன்னு சென்ஷிக்கு நண்பனாகும் முன்னயே பின்நவீனத்துவமா பேசி இருக்கீங்க .. இருந்தும் அவங்க கவனிக்கல..
முதல் வருகைக்கு நன்றி அனுஜன்யா..
நன்றி விஜய்..
ராப்.. என்ன ஆச்சு உங்களுக்கு? கொஞ்சநாளா சரியில்லையே?
புதுகை அண்ணாச்சி..
அதையும் எழுதலாம்ன்னு நெனச்சேன். விட்டுட்டேன்!
@ தாமிரா
நல்ல பெரிய கவிஞர்களோட நம்ம கவிதைய கம்பேர் பண்றது நல்லாதுதனே நண்பா?
@ ஜோதிபாரதி
தாங்க்சுங்க//
@ வெயிலான்
நன்றி!
@ அம்பி
//சே! நல்ல சான்ஸ், அப்பவே எஸ்கேப்பாகி இருக்கலாம் அவங்க.//
அத இப்பவும் சொல்லுவாங்க!
@ முத்துலெட்சுமி
//அவங்க விவரமா வேற எதாவது பயனுள்ளதா தாங்கன்னு சொல்லி இருக்காங்க.. தனித்துவம் அது இதுன்னு சென்ஷிக்கு நண்பனாகும் முன்னயே பின்நவீனத்துவமா பேசி இருக்கீங்க .. இருந்தும் அவங்க கவனிக்கல..//
முத்தக்கா.. இப்பவுமே அவங்க சொல்றது சிலது நமக்கு லேட்டாத்தான் புரியுது!
பின்ன என்னங்க, என்ன பின்னூட்டம் போட்டாலும் கலாய்க்கறீங்க, அதான் ஒரு வாரம் நான் இப்டி பண்ணேன் :):):)
என்கிட்டே கவிதைகளுக்கு மட்டும் தயவுசெய்து விமர்சனமே எதிர்பார்க்காதீங்க. என் ரசன என்னான்னு தெரிஞ்சப்புறமும் கேட்டீங்கன்னா, அப்புறம் நான் நிஜமாவே கவிதைய எம் போக்குல ரசிச்சிடுவேன்,இப்பவே சொல்லிட்டேன், அப்புறம் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல :):):)
@ ராப்
ஏங்க.. நான் எப்பங்க உங்கள கலாய்ச்சேன்? நீங்கதான் எப்பவுமே என் ஸ்பெஷல் கெஸ்ட் தெரியுமா?
இதுக்கே இப்படீன்னா, நாளைக்கு உங்க தலையைப் பத்தி நான் அவியல்ல எழுதப் போறதுக்கு எப்படி கோவிச்சுக்குவீங்களோ????
என்னது எங்க தலயப் பத்தி எழுதப்போறீங்களா? அப்போ நீங்க சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆளா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................................
//இந்தக் கவிதையை படிச்சுட்டு மூணு நாள் என்கிட்ட உமா பேசவே இல்ல!//
ரொம்ம்ம்ம்ம்ம்ப தேங்க்ஸ் பரிசல்.. இன்னைக்கே நானும் என் தங்கமணிகிட்ட ஒரு கவித சொல்லி பாக்குறேன்.. :)))
ஆஹா... ஐடியா குடுத்துட்டேனா?
(அது காதலிக்கறப்ப.. இப்ப அடிதான் விழுது!!!)
//கிருஷ்ணகுமார் – நமீதா என்று போட்டுப் பார்த்தேன். 45% வந்தது! //
//இதையெல்லாம் நம்பக்கூடாதுங்க!//
ஏன் % இன்னும் அதிகமா வரணுமா???? :)))))
=>
இந்த பின்னூட்டத்தோட மெசேஜ் என்னான்னா...
என் கூகுள் ரீடரில் உங்கள் அவியல் ஜூலை 25 வந்துவிட்டது :)))
வெண்பூ, அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க? போஸ்ட் ஆப்ஷன்ல டேட் மாத்த மறந்துட்டேன்! வெயிலானும் சொன்னார்!!..
நல்ல முயற்சி! தொடருங்கள். இனிமையாக உள்ளது
உங்களுக்கு காதல் கவிதை மிக பிடித்தமானதோ ?
அப்படியென்றால் ஒரு இம்சையை இங்கு போடுகிறேன்.
எழுத்தில்லாத கவிதை !
===========================
எழுத்தில்லாமல் கவிதை எழுதமுடியுமா ?
கேட்டாள் அவள் !
முடியும் என்றேன் நான் !
எப்படி ? என்ற அவளிடம்
வெள்ளை காகிதத்தை நீட்டினேன்
என்ன இது ? என்றாள்
புரியவில்லையா ?
நீ இல்லாத என் இதயத்தை
தன் வெறுமையால்
வெளிச்சமிடும் கவிதை ஒன்று
இதன்
உள்ளே இருப்பது
உனக்கு
தெரியவில்லையா ?
எல்லா கவிதையும் நல்லா இருக்கு...
கோவி.கண்ணன் சார்... உங்க தங்கமணி உங்ககிட்ட பேச ஆரம்பிச்சிட்டாங்களா இல்லையா? பரிசலோட கவிதைக்கே அவங்க தங்கமணி மூணு நாள் பேசாம இருந்திருக்காங்க. உங்க கவுஜக்கி....ம்ம்ம்ம்
பரிசு!இப்பத்தான புரியுது கவிஜயும்,பொன்மொழியும்,ஊசிப்போன சரக்குகளா இருந்ததால்தான் வெறுமனே போட்டிப் படத்துக்கு மட்டும் பின்னூட்டம் போட்டிருக்கேன்னு:) இன்னிக்கு குசும்பும் நீங்களும் அடிச்ச கும்மி இருக்குதே! பின்னூட்ட ஆசையே புளிக்கிறமாதிரி ஆகிடுச்சு.அநியாயத்துக்கு மனுசனுக்கு என்ன 75 வரைக்குமா பின்னூட்டம் நீளும்? இன்னும் எத்தனை கொட்டிக்கிடக்குதோ இனிப் போய் பார்த்தாத்தான் தெரியும்.வர்றேன்.
@ லதானந்த்
தேங்க்ஸ் அங்கிள்!
@ கோவி.கண்ணன்
ஒரு பதிவை வேஸ்ட் பண்ணீட்டீங்களே சார்! (என்னை உங்க லக்கிலுக் பத்தின பதிவுல பயன்படுத்தியதுக்கு நன்றி!!)
நன்றி ச்சின்னப்பையன்
வெண்பூ, ரொம்ப பயமுறுத்தாதீங்க அவர!!
@ ராஜ.நடராஜன்
//இன்னும் எத்தனை கொட்டிக்கிடக்குதோ இனிப் போய் பார்த்தாத்தான் தெரியும்.வர்றேன்.//
போங்க போங்க.. போறதுக்குள்ள அங்க வந்து சதமடிக்கறேன்!
அவியோ அவின்னு அவிக்கறீங்க...
பார்க் ஷெரட்டன் மேட்டர் எல்லாம் சும்மா ஜுஜுபி...அதவிட இண்டரஸ்டிங் மேட்டர் எல்லாம் இருக்குங்க...ஒண்ணு ஓண்ணா அவிக்கலாம் !!
கவிதை
அனைத்தும்
அருமை
ஒருத்தி எனக்கு எழுதிய காதல் கடிதத்தில் சினிமா பாடல்களின் நடுநடுவே வரிகள் சுட்டு கவிதையாய் மாற்றி கடிதத்தில் இணைத்து காகிதத்தை நிரப்பி கொடுத்தாள்..
அவகிட்டேந்து வந்ததால அதுவும் தனித்துவம் அடைஞ்சுருச்சு :)
ஈர வெங்காயம்... அவியல்ல போடற பின்னூட்டத்தை இங்க போட்டுட்டீங்க..!!
நன்றி, திகழ்மிளிர்!
@ சென்ஷி...
என்னாச்சு?
Post a Comment