Tuesday, July 29, 2008

ஒரு பாடல் உருவாகிறது

டைரக்டர் கிச்சுகிச்சா இசையமைப்பாளர் மீஜிக் மன்னாருடன் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்அமர்ந்திருக்கிறார்.

“என்ன டைரக்டரே, இன்னும் பாடலாசிரியரைக் காணோம்?”

“பாடலாசிரியருக்கா வெய்ட் பண்ணீட்டிருக்கீங்க? நான்கூட இன்னும் உங்களுக்கு வர்லியோன்னு நினைச்சேன்”

“வந்திருச்சேய்யா, இப்போதானே டாய்லெட் போய்..”

“இல்லீங்க... மூடு வர்லியோன்னு கேட்டேன்..”

“அது கிடக்குது கழுத. பாடலாசிரியர் எங்கீங்க?”

“ஹி..ஹி.. நாந்தான் இந்தப் படத்துக்கு எல்லாப் பாட்டையும் எழுதறேன்”

“என்னது? நீதான் எழுதறியா? கிழிஞ்சது போ! நீ எழுதற வசனத்தையே எவனும் புரிஞ்சுக்க மாட்டீங்கறான். இதுல பாட்டு வேற எழுத வந்துட்டியா?”

“நீங்க போடற ம்யூசிக்ல பாட்டெங்கே கேக்கப் போகுது?”

“சரி... என்னமோ.. எழுதறது உம் பாடு, கேக்கறது கேக்கறவன் பாடு... சிச்சுவேஷன சொல்லு”

“அந்தக் கிராமத்துல இருக்கற..”

“என்னது? கிராமமா? நேத்துதான் தயாரிப்பாளர்ட்ட இதுவரைக்கும் போகாத நாட்டுக்கெல்லாம் போகணும்ன்னு ஆஸ்திரியாவிக்கு விசாவெல்லாம் ரெடி பண்ணச் சொன்ன?”

“அங்கதாங்க போய் கிராமத்து செட் போடப்போறேன்..”

”அதுசரி! ஏன்யா இங்க இருக்கற கிராமமெல்லாம் என்னாச்சு?”

”இந்த கிராமங்களெல்லாம் தன் சுயத்தை இழந்துவிட்டன. மரங்களில் கூடு கட்டிக் கொண்டிருந்த குருவிகள், இன்று ஃப்ளாட் வெண்டிலேட்டர்களிலே..”

“யோவ்... என்ன கேமராவா ஓடுது? எதுக்கு இவ்ளோ எமோஷன்?”

“சாரிங்க.. ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணீட்டிருந்தேனா.. அதான்..”

“ஓஹோ... மனப்பாடம் பண்ணித்தான் பேசறியா? அன்னிக்கு ஒரு இண்டர்வ்யூல எல்லாமே என் மனசிலேர்ந்து வருதுன்ன?”

“மனப்பாடம் பண்ணினா, மனசுக்குள்ளதானே இருக்கும்?”

“உன்னையெல்லாம்.. சரி. என்ன சிச்சுவேஷன்?”

”சிச்சுவேஷன் என்னன்னா ஹீரோ உக்கார்ந்திருக்கற கோவில்ல...”

“நீ என்ன `நான்கடவுளா எடுக்கற? ஹீரோவை கோவில்ல உக்காரவெச்சிருக்க?”

”இல்லிங்க நானெடுக்கறது `நான் பிச்சைக்காரன்’”

”தயாரிப்பாளரை மனசுல வெச்சுட்டு எடுக்கற போல... சரி சொல்லு”

“அந்தக் கோவிலுக்கு ஹெராயின்.. ச்சே.. ஹீரோயின் வர்றா, வந்து ஒரு ரூபா ஹீரோவுக்கு போடறா, அப்போ ஒரு ரூபாய்ல என்ன வாங்க முடியும்ன்னு கொதிச்சுப் போய், ஹீரோ நாட்டு விலைவாசிய பாட்டா பாடறான்”

”அடா.. அடா... பிச்சைக்காரன்கூட கேக்கற அளவுக்கு ஆயிடுச்சா நாட்டு நிலைமை?”

“சார்.. பிச்சைக்காரங்கள அவ்வளவு தாழ்வா நினைச்சுடாதீங்க”

“சரி, ம்ம்ம்ம், இது ஓக்கேவான்னு பாரு, தனனா தனனா தனனா, தந்தானா தந்தானா”

“தந்தாளா”ன்னு தானே வரணும்? தந்தானா’ன்னா ஆண்பால் வருது”

“ஆண்பாலா? உன் வாயில கள்ளிப்பால ஊத்த. இது மெட்டுய்யா..”

”ஓ! சரி.. சரி.. தனனா.. தனனா..” (மனதுக்குள் பாடிப்பார்த்து) இந்த வரிகள் ஓக்கேவா பாருங்க...”

“சொல்லு”

“தகஜம் தகஜம் தகஜம், தம்கிடதம் தம்கிடதம்”

“யோவ்... என்ன நக்கலா? மியீசிக்கெல்லாம் நான் போட்டுக்கறேன். நீ பாட்டு வரிய சொல்லு”

“பாட்டு வரிதாங்க இது...”

“பிச்சைக்காரன் எதுக்குய்யா தகஜம்னெல்லாம் பாடணும்?”

“எனக்கு பாரதத்து மேல ஆர்வம் அதிகம்க”

“பாரதத்து மேலயா? அடுத்த ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா?”

“ச்சே.. பரதத்து மேல’ன்னு சொல்ல வந்தேன்”

“அடிங்க... வேற சொல்லுய்யா” என்றபோது தயாரிப்பாளர் உள்ளே நுழைகிறார்.

“டைரக்டரே... நீரொண்ணும் பாட்டு எழுதிக் கிழிக்க வேண்டாம். அதுக்கு புதுசா மூணு பேரைக் கூட்டியாந்திருக்கேன்” என்கிறார்.

இயக்குனரும், இசையமைப்பாளாரும் வாசலைப் பார்க்க...


அங்கே...

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட்!


-என் வலையுலக வரலாற்றில் (?) முதல் முறையாக
(தொடரும்)

-----------------------


டிஸ்கி 1: ஒண்ணுமில்ல.. எழுத எழுத இன்னைக்கு கொஞ்சம் நேரமா வரச்சொல்லி எம்.டி.-யிடமிருந்து ஃபோன். அதான் தொடரும் போட்டுட்டேன்.


டிஸ்கி 2: இந்தப் பின்குறிப்புகளை ‘டிஸ்கி’ன்னு ஏன் சொல்றாங்க? அதுக்கு என்ன அர்த்தம்? (அது தெரியாமயே இவ்ளோ நாள் எழுதீட்டிருந்திருக்கேன்!)

27 comments:

Nilofer Anbarasu said...

are u working in Kay Tee corporation? b'coz i knw a person with the same name who worked in Kay Tee?

விஜய் ஆனந்த் said...

டிஸ்கின்னா disclaimerதானே!!!
அப்புறம், டிஸ்கி 3 : இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே.யாரையும் குறிப்பதல்ல!!! கரெக்டா???

rapp said...

கலக்குங்க, நாளைக்கு எப்படி முடிக்கறீங்கன்னு பாக்கலாம்

வெண்பூ said...

கோச்சுக்காதீங்க பரிசல். இந்த பதிவுல உங்களோட ரெகுலர் டச் மிஸ்ஸிங்... அடுத்ததுக்காக ஆவலோட காத்திருக்கேன்.

FunScribbler said...

பரிசல்காரா, கலக்குறீங்க. ரசித்து படித்தேன். அடுத்து என்ன ஆச்சு! விரைவாக போடுங்க அடுத்த பதிவை.
வாழ்த்துகள்

புதுகை.அப்துல்லா said...

அண்ணே முழுசா முடிங்க மொத்தமா வந்து கருத்து சொல்றேன்.(ஏன் இப்ப சொன்னா ஓல்லிய்யா சொல்லுவியான்னெல்லாம் கேக்கக் கூடாது)

பரிசல்காரன் said...

@ Raja

No Sir. I'm not working in Kay Tee.

@ VIjay Anand

நன்னீங்க!!

//டிஸ்கி 3 : இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே.யாரையும் குறிப்பதல்ல!!! கரெக்டா???//

ஹி..ஹி...

பரிசல்காரன் said...

@ ராப்

நன்றிங்க!

@ வெண்பூ

ஏங்க நான் கோவிச்சுக்கப் போறேன்? சந்தோஷம்தான், என்னை இவ்ளோ மைனூட்டா கவனிச்சு பின்னூட்டறதுக்கு!

இத உங்களுக்கு தனியா மெயில்ல சொல்லலாம்ன்னு நெனச்சேன். இங்கயே சொல்றேன்..

இந்தப் பதிவ ஒரு ஐடியாவும் இல்லாம ச்சும்மா ஆரம்பிச்சேன். எனக்கே புடிக்கல. கரெக்டா, அப்போ எங்க எம்.டி. கூப்ட்டாங்க.., அதுனால வேணும்னே சச்சின், சவுரவ், ட்ராவிட் கேரக்டரை உள்ள புகுத்தீட்டு மூடிட்டேன். நாளைக்காவது கலகலன்னு எழுதணும்ன்னு! பாக்கலாம்!

நன்றி தமிழ்மாங்கனி.. (ரொம்ப நாளாச்சே??)


புதுகை அண்ணாச்சி...

எப்ப வேணா வாங்க! ஆனா, இப்படி சொல்லீட்டு போங்க. இல்லாட்டி கோவிச்சுக்குவேன்!

கோவி.கண்ணன் said...

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே முழுசா முடிங்க மொத்தமா வந்து கருத்து சொல்றேன்.(ஏன் இப்ப சொன்னா ஓல்லிய்யா சொல்லுவியான்னெல்லாம் கேக்கக் கூடாது)
//

அப்துல்லா,

நானும் பாதிக்கதைக்கெல்லாம் பின்னூட்ட மாட்டேன்.

ஜெகதீசன் said...

:-

தொடரும்..

(டிஸ்கி: சிரிப்பானின் மீதிப் பகுதியை அடுத்த பகுதியில் பின்னூட்டுகிறேன்...)

முரளிகண்ணன் said...

வெகு விரைவில் எதிர்பார்க்கிறேன்

கிரி said...

//ஜெகதீசன் said...
:-

தொடரும்..

(டிஸ்கி: சிரிப்பானின் மீதிப் பகுதியை அடுத்த பகுதியில் பின்னூட்டுகிறேன்...)//

:))))))))

VIKNESHWARAN ADAKKALAM said...

நீங்களும் ஆரம்பிச்சாச்சா? கூடிய சீக்கிரத்தில் நானும் ஆரம்பிக்கிறேன் பாருங்க...

ஜெகதீசன் said...

//
கிரி said...

//ஜெகதீசன் said...
:-

தொடரும்..

(டிஸ்கி: சிரிப்பானின் மீதிப் பகுதியை அடுத்த பகுதியில் பின்னூட்டுகிறேன்...)//

:))))))))

//
கிரி அண்ணே,
எதுக்கு இவ்வளவு பெரிய சிரிப்பு? கே.கே தொடர் கதை எழுதுறப்ப, நான் தொடர் பின்னூட்டம் போடக்கூடாதா என்ன?

பரிசல்காரன் said...

@ கோவி.கண்ணன்

சரிங்க!

@ ஜெகதீசன்

சிரிங்க... சிரிங்க..

@ முரளி கண்ணன்

நானும் எதிர்பார்க்கறேன். ஆனா வருமான்னுதான் தெரியல..

@ கிரி

நானும் :-))

@ விக்கி

எத ஆரம்பிக்கப் போறீங்க? சொல்லீட்டு செய்யுங்கய்யா..

புதுகை.அப்துல்லா said...

புதுகை அண்ணாச்சி...

எப்ப வேணா வாங்க! ஆனா, இப்படி சொல்லீட்டு போங்க. இல்லாட்டி கோவிச்சுக்குவேன்!
//

அய்!உங்க கோவத்தப் பற்றி எனக்கா தெரியாது. எங்க அண்ணிகிட்ட தினமும் கோவிச்சுகிறீங்க.ஆனா என்ன ஆச்சு இதுவரைக்கும்?
:))

புதுகை.அப்துல்லா said...

கோவி.கண்ணன் said...
அப்துல்லா,

நானும் பாதிக்கதைக்கெல்லாம் பின்னூட்ட மாட்டேன்.
//

பாதில சொல்றது ஏதோ கடமைக்கு சொல்ற மாதிரி எனக்கு ஃபீல் ஆவுதுண்ணே.

Thamira said...

அண்ணே, வணக்கம்ண்ணே!

சின்னப் பையன் said...

பரிசல் -> சூப்பரா போகுது தொடர்.

//ஓஹோ... மனப்பாடம் பண்ணித்தான் பேசறியா? அன்னிக்கு ஒரு இண்டர்வ்யூல எல்லாமே என் மனசிலேர்ந்து வருதுன்ன?”

“மனப்பாடம் பண்ணினா, மனசுக்குள்ளதானே இருக்கும்?”
//

இது எனக்கு நடந்தது. கேள்வி யாரோ. பதில் நான்.

இந்த சட்டை நல்லாயிருக்கே. ரெடிமேடா, துணி வாங்கி தெச்சியா?

துணி வாங்கி தெச்சதை, ரெடிமேடா வாங்கினேன்.... அவ்வ்வ்வ்....

Athisha said...

எப்ப போடுவீங்க எப்ப போடுவீங்க
அடுத்த பதிவ எப்ப போடுவீங்க

சென்ஷி said...

கலக்கல்....
அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டீங்க் :))

சென்ஷி said...

//தாமிரா said...
அண்ணே, வணக்கம்ண்ணே!
//

இதுக்கு பேர்தான் கடமை உணர்ச்சி :))

சென்ஷி said...

//”இந்த கிராமங்களெல்லாம் தன் சுயத்தை இழந்துவிட்டன. மரங்களில் கூடு கட்டிக் கொண்டிருந்த குருவிகள், இன்று ஃப்ளாட் வெண்டிலேட்டர்களிலே..”/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கலக்குறீங்க அண்ணா...

கயல்விழி said...

வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் அவசரத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். :)

முழு தொடர் முடிந்தபிறகு கருத்து எழுதுகிறேன்

கயல்விழி said...

வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் அவசரத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். :)

முழு தொடர் முடிந்தபிறகு கருத்து எழுதுகிறேன்

பரிசல்காரன் said...

@ புதுகை அப்துல்லா

நன்றி! அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே! (இப்போ இரவு 11.15. இன்னும் 45 நிமிஷமிருக்கு!)

நன்றி தாமிரா, அதிஷா, ச்சின்னப்பையன்,

@ சென்ஷி

ம்ம்.. உங்ககிட்டேர்ந்து பின்னூட்டம் வரணும்னா என்னவெல்லாம் பண்ண வேண்டியதாயிருக்கு! இந்த பயம் இருக்கட்டும்!

Natty said...

:D