Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Wednesday, July 2, 2008

காத்திருந்த காதலி

மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்..

”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”

”ஏன்? யாருக்கு என்னாச்சு?”

”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”

(கார்த்திக் சொன்னதுல பாதி உண்மை மீதிப் பொய்)

இதுக்கு மேல இந்தக் கதையைத் தொடரப் பரிசல்காரனை அழைக்கிறேன்

------------------------------------

இப்படீன்னு அண்ணன் வடகரை வேலன் அவர்கள் ஒரு கதை எழுதி என்னைத் தொடரச் சொல்லியிருந்தார். அவர் ஆரம்பித்ததை இங்கே படித்துவிட்டு இதைத் தொடருங்கள்....

---------------------

கௌரியை அழைத்ததும் கார்த்திக் தனது செல்போனை அணைத்துவிட்டு கங்கா ஹாஸ்பிடலின் ஐ.சி.யு-விற்குள் எட்டிப் பார்த்தான்..

“சார்.. உள்ள வராதீங்க” வெள்ளுடை நர்ஸ் தடுக்க..

“சிஸ்டர்.. தலைல சிவியர் இஞ்சுரி-ன்னு மட்டும் சொல்லீட்டு போன டாக்டர் இன்னும் வரவே இல்ல. நான் அவன் அப்பா, அம்மாகிட்ட கூட தகவல் சொல்லல. அவன் கட்டிக்கப்போற பொண்ணுகிட்ட சின்ன ஆக்ஸிடெண்ட்-ன்னு பொய்யச் சொல்லி வரச் சொல்லிருக்கேன். டாகடர் எப்ப வருவாரு.. எப்ப ஸ்கேன் பண்ணப் போறீங்க?” என்று பதட்டததோடு பொரிந்தான் கார்த்திக்.

“மிஸ்டர்.... ஐயாம் டாக்டர் இருதயராஜ்’

குரல் கேட்டு திரும்பினான்.

“டாக்டர்..”

“அந்த டாக்டர் வேற ஒரு அவசர ஆப்ரேஷனுக்காக போய்ட்டாரு.. உங்க ஃப்ரண்டை நாந்தான் அட்டெண்ட் பண்ணப் போறேன். ப்ளிஸ்.. ஒரு பத்து நிமிஷம் அப்பிடி உக்காருங்க”

சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டார்.

கார்த்திக் அவர் கைகாட்டிய இடத்தில் இருந்த நாற்காலியை ஆக்ரமித்தபோது, ஹாஸ்பிடலுக்கு வெளியே கௌரியின் கார் நின்றது.


ரிசப்ஷனில் விசாரித்து, பதட்டத்தோடு ஓட்டமும் நடையுமாய் ஐ.சி.யு. முன் அமர்ந்திருந்த கார்த்திக் முன் வந்து நின்றாள் கௌரி.


“என்ன கார்த்திக். செல்லை ஆஃப் பண்ணீட்டீங்க?’


”ஐ.சி.யு-க்குள்ள போகலாம்னு ஆஃப் பண்ணினேன். ஏன்... என்னாச்சு கௌரி?”


“அஞ்சு நிமிஷம் முன்னாடி சங்கர் எனக்கு ஃபோன் பண்ணினார்”


”என்னது?”

அதிர்ச்சியோடு கேட்டான் கார்த்திக்...

“நானும் சங்கரும் வந்த கார் ஆக்ஸிடெண்ட் ஆகி எனக்கு சின்னக் காயம் கூட இல்லாம தப்பிச்சுட்டேன். என் கண்ணு முனனாடி தலைல வழியற ரத்தத்தோட சங்கரை ஐ.சி.யு-க்குள்ள அனுப்பினது நான்.. அவன் உனக்கு ஃபோன் பண்ணினானா? என்ன விளையாடறியா?”


“நான் விளையாடல கார்த்திக். சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் அவர் ஃபோனை நீங்க எடுக்கலியில்ல?”


”இல்ல”


“ஐ.சி.யு-ல இருந்த டாக்டர் வெளில போய்.. இப்போ வேற ஒரு டாக்டர் வரப்போறதா சொன்னாங்களா?”

“சொன்னாங்களாவா? வேற ஒரு டாக்டர் உள்ள போயாச்சு”


“அவரு பேரு இருதயராஜா?”


“ஆ...ஆமாம்.. ஆனா இதெல்லாம் நீ எப்படி கரெக்டா சொல்ற?”


”ஐயோ.. எல்லாம் நீங்க போனை ஆஃப் பண்ணினதால வந்த வினை”


“எனக்கு ஒண்ணுமே புரியல கௌரி” என்றவாறு தனது செல்ஃபோனை ஆன் செய்தான் கார்த்திக்.


ஆன் செய்ததுமே ஏழு புதிய மெசேஜ் என திரை காட்ட, திறந்தான்.


ஆறு மெசேஜ் சங்கரிடமிருந்து ஆறு மிஸ்டு கால் வந்திருப்பதை சொன்னது.


ஏழாவது மெசேஜைத் திறந்தான்.. படித்ததும் வியர்த்துப்போனது கார்த்திக்குக்கு. செல்ஃபோன் கையிலிருந்து நழுவுவது போல உணர்ந்தான்..

“கௌ.. கௌரி...”

“கார்த்திக்.. என்னாச்சு...?”

கௌரிக்கு பதில் சொல்ல முடியாமல் அரை மயக்கமாய் கார்த்திக் நாற்காலியில் விழ, அவன் கையிலிருந்த செல்ஃபோனை வாங்கிப் பார்த்தாள்.

அதில்...

------------------------------

வடகரை வேலன் சொன்னது போலவே, இங்கிருந்து இதைத் தொடர நண்பர் வெயிலான் அவர்களை அழைக்கிறேன்..


வடகரை வேலன் போட்ட கண்டிஷன்கள்:-


1. யாரையும் சாகடிக்ககூடாது.

2. இதெல்லாம் கனவுன்னு டுமீல் விடக்கூடாது.

3. ஏற்கனவே வந்த கதை அல்லது திரைப்படத்தின் சாயல் வரக்கூடாது.


எனது எக்ஸ்ட்ரா கண்டிஷன்..

4. எந்த டாக்டரையும் மோசமானவராகக் காட்டக்கூடாது..

(ம்ம்ம்ம்மாட்னீங்களா? அடுத்தவங்களை சிக்க விட்டு வேடிக்கை பாக்கறதுல என்னா ஒரு ஆனந்தம்!!)