Monday, September 15, 2008

PIT போட்டி - உதவுங்கள் ப்ளீஸ்!!

இன்னைக்கு சில அவசர அவசிய காரணங்களுக்காக வெளியூர் போக வேண்டி இருக்கறதால நேத்து நடந்த அதிஷா இல்லத் திருமணம் குறித்தும் (காதுகுத்துக் கல்யாணம்க..), பதிவர் சந்திப்பு குறித்தும் (நாட்டுல இந்தப் பதிவருங்க தொல்லை தாங்க முடியலைப்பா) நாளைக்கு எழுதறேன். இப்போதைக்கு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


இதுல எதை PIT போட்டிக்கு அனுப்பறதுன்னு கன்னாபின்னான்னு குழம்பி, போட்டிக்கு நம்ம தேர்ந்தெடுக்கப் பட்டதே பெரிய விஷயம்டா... இதுல ரொம்ப யோசிச்சு ஜெயிக்கணும்கற ஐடியாவெல்லாம் எதுக்கு-ன்னும் தோணுது!

இன்னைக்கு நைட் பன்னெண்டு மணிவரைக்கும் அனுப்பலாம்ல? அதுனால உங்க யோசனைகள் தேவை.. ப்ளீஸ்...

மொதல்ல காது குத்து நடந்த அதிஷாவோட தங்கச்சி குழந்தைகள் ஹரிணி, சிவாஷினிக்கு வாழ்த்து சொல்லீடுங்க. (தலீவா, வீட்ல சொல்லி சுத்திப் போடச் சொல்லுப்பா. )

இது திண்டல் மலை முருகன் கோயில். இந்தப் படத்தை அனுப்பலாமா?
இது மருதமலைல எடுத்தது. ராஜகோபுர கட்டுமானப் பணி நடக்குது.

இது கோவை ராம் நகர்ல எடுத்தது. குறுக்கால இருக்கற மின்கம்பிகள் படத்தைக் கெடுக்குது. அதையெல்லாம் நீக்கற டெக்னாலஜியெல்லாம் நமக்குத் தெரியாது.


இந்த மூணுல எதை அனுப்ப? ப்ளீஸ்.. சொல்லுங்கப்பூ...

25 comments:

SurveySan said...

//குறுக்கால இருக்கற மின்கம்பிகள் படத்தைக் கெடுக்குது. அதையெல்லாம் நீக்கற டெக்னாலஜியெல்லாம் நமக்குத் தெரியாது.
//

என்ன கொடுமைங்க இது?

ஏன் இந்த கிளாஸுக்கு வரல? முட்டி போடுங்க.

;)

விஜய் ஆனந்த் said...

:-)))...

rapp said...

me the third

சூர்யா said...

இந்த கயித்தமலை முருகன் கோயில் போயிருந்தப்ப எடுத்திருந்தீங்களே.. அந்தப் படத்த போட்டிக்கு அனுப்பலாம்ல..?

narsim said...

முதல் படத்தை அனுப்புங்க.. கோபுரம், சூரிய ஒளி.. ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்த்தும் படி உள்ளது...

நர்சிம்

முரளிகண்ணன் said...

narsim karuththai vazhimozhikireen

கார்க்கி said...

நாம ஃபோட்டோ எடுத்து அணுப்பனுமா, இல்ல அடுத்தவங்க எடுத்த ஃபோட்டவ நாம எடுத்து அனுப்பலாமா?

rapp said...

எனக்கு முத மூணு படங்களும் ரொம்பப் பிடிச்சிருக்கு:):):) போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்:):):)

நந்து f/o நிலா said...

//Blogger SurveySan said...

//குறுக்கால இருக்கற மின்கம்பிகள் படத்தைக் கெடுக்குது. அதையெல்லாம் நீக்கற டெக்னாலஜியெல்லாம் நமக்குத் தெரியாது.
//

என்ன கொடுமைங்க இது?

ஏன் இந்த கிளாஸுக்கு வரல? முட்டி போடுங்க.

;)//


picasa 3 லயே இப்ப அந்த வசதி வந்திருக்கு. யூஸ் பண்ணி பாருங்க க்ருஷ்ணா. சும்மா படம் காட்டுது

சுபாஷ் said...

கோவிலுக்கு பின்னால் சூரியன் இருக்கும் படம் நல்லாருக்கு

சுபாஷ் said...
This comment has been removed by the author.
சுபாஷ் said...

pls check this also

http://hisubash.com/chuma/3.jpg

சுபாஷ் said...

விரும்பினால் இதையும் சேர்த்துக்கொள்ளவும்

புதுகை.அப்துல்லா said...

கோவில் படம் நல்லாயிருக்கு. இன்னோரு கேள்வி அதான் குழந்தைங்க படத்தப் போட்டீங்கள்ல? அப்புறம் தனியா தெய்வம் படம்(கோவில்) வேற போட்டு இருக்கீங்க !! :)))

அகநாழிகை said...

நண்பா ! வணக்கம். எனக்கு பின்னூட்டம் போட்டிங்க, ரொம்ப நன்றி. ஆனா பின்னுட்டத்த பார்க்க ரொம்ப லேட் ஆயிடுச்சு. ஒரு தகவல் வேணும், பின்னூட்டம் பதிவுக்கு கீழேயே தெரிய என்ன பண்ணனும் ? தயவு செய்து உதவுங்கப்பா ! லதானந்த் பின்னூட்டம் போட்டிருந்தாரு. நான் இப்போதான் அவர் பக்கத்துக்கு பொய் படிச்சேன். ரொம்ப இயல்பா இருக்கு. அங்க போனாலும் உங்களோட பதிவுதான் அதபத்தி விரிவா அப்புறம் எழுதறேன்.
இப்போ உங்க படத்துல ராஜா கோபுர படம் இல்லன்னா முருகன் கோயில் படம் அனுப்புங்க. வாழ்த்துக்கள் !

SK said...

கோவில் படம் நல்ல இருக்கற மாதிரி தோணுது.

தாமிரா said...

கட்டப்பட்டுக்கொண்டிருக்கிற பில்டிங் நல்லாயிருக்குதோ.? (எதுக்கும் நம்ப ரசனையை கணக்குல எடுத்துக்காதீங்க..)

பரிசல்காரன் said...

// சுபாஷ் said...

pls check this also

http://hisubash.com/chuma/3.jpg//

சுபாஷ்,

பிரமிப்பாக உள்ளது!

மிக்க நன்றி!

கூடுதுறை said...

ஹலோ தலைவா...

நம்மபளையேல்லாம் ஞாபகம் இரூக்கா?

கூடுதுறை said...

முடிஞ்சா இங்க வந்து படிங்க.

http://scssundar.blogspot.com/2008/09/blog-post_15.html

சுபாஷ் said...

//பிரமிப்பாக உள்ளது!

மிக்க நன்றி!//

:)
தினமும் உங்க பதிவு வாசகன். ஆனா உருப்படியாக போட்ட பின்னுட்டம் இதுதான்.

வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

சிம்பா said...

நான் கோபுர படத்துக்கு ஒட்டு போடறேன்,

nathas said...

1 & 3(without lines) are nice :)

VIKNESHWARAN said...

அதிஷாவின் படத்தை அனுப்புங்களேன். அதிஷா ஒரு பலதரபட்ட வல்லவன்.

தாமிரா said...

பாட்டில் ரெடியா இருக்குது, என் கடைக்கு வரவும். ஏற்கனவே வந்துட்டீங்களா.. சரி பரவால்லை, சாப்புடுற ஐட்டம்னாலே உங்க பதிவுக்கு வந்து விளம்பரம் பண்ணணும்னு முடிவுல இருக்கேன்.