Monday, September 8, 2008

அந்த இளிச்சவாயனின் பெயர்....


அந்த இளிச்சவாயனின் பெயர் வட்டிக்கு கடன் குடுத்த சுடர்மணி. அவனின் வசீகரமே அவன் பர்ஸ்தான். மற்ற கடன்காரன்களின் பர்ஸ்களின் அடர்த்தி இவன் பர்ஸின் ஒரு பிரிவுக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான பர்ஸ் அவன் பேண்ட் பாக்கெட்டை மீறி துருத்தி நிற்கும். அவன் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவன் சிகப்பாக இருந்திருந்தால் என்ன, கருப்பாக இருந்திருந்தால் என்ன.. எதுவுமே அத்தனை நன்றாக இருந்திருக்காது, அவனிடம் பர்ஸ் இல்லையென்றால். நாசமாய்ப் போன ஒரு முகம். எப்போதுமே ஒரு தடித்த கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டிருக்கும் உதடுகள். கையிலுள்ள பை, அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த பச்சை நிற நோட்டுக்கள் கிட்ட தட்ட காசில்லாமல் திரியும் ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.



என் வீட்டுக்கு எதிர் வீடு அவன் உறவினர் வீடு. அவன் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. ஒரு லட்சம் வரை கடன் கொடுத்துவிட்டு, சீட்டுக் கம்பெனி நடத்திவிட்டு அங்கே போலீஸ் தேட உறவினர் வீட்டுக்கு வந்து விட்டான். ஒரு காலை நேரத்தில் அவனின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவனின் மனைவி அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. ஒரு கடன்காரன் வந்துவிட்டான். செலவுக்கு காசில்லாமல் வேறு அல்லாடிக் கொண்டிருந்தேன் நான். அவனிடம் கடன் கேட்கவென்றே நான் எதிர்வீட்டுக்குச் சென்றேன். அவனைக் கவர எத்தனை முயற்சிகள். ஆனால் அவன் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் அவன் வீட்டுக்கு முன் இருந்த அவன் பைக்கில் என் ஹெல்மெட்டை மாட்டினேன். வந்து பார்த்த அவன் கெட்ட வார்த்தையிலேயே திட்ட ஆரம்பித்தான். "ஏண்டா, அறிவுகெட்ட முண்டம், உன் ஹெல்மெட்டை என் வண்டியில வெச்சிருக்கியே, அறிவில்லையாடா உனக்கு" என சொல்லிவிட்டு செருப்பைக் கழட்டிக் காட்டி, கன்னத்தில் அறைந்தான். ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் கண்ணில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனிக்கத் தொடங்கியது போல ஒரு அவமானம்.



என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். நான் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் எல்லா கடன் கொடுத்தவர்களும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பதால் நான் இருக்கும் இடமே கண்றாவியாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவன் என்னை வெறுக்கக் காரணமாம். கடனோலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்மணி என எல்லாம் கிறுக்கத் தொடங்கினேன். எந்த மரத்தைப் பார்த்தாலும் உச்சா போக ஆரம்பித்தேன். ஒரு ப்ராமிஸரி நோட்டும், பேனாவும் என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவில் கண்ணாடியில் கையெழுத்துப் போட்டுப் பார்க்க தொடங்கினேன். அவனிடம் கடன் கேட்கும் போது போட வேண்டுமே..


அவன் காதில் பூ வைக்க ஆசைப்பட்டேன். கடன் கொடுத்துவிட்டு அவனை என் பின்னாலேயே அலையவிட ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்கத் தொடங்கினேன். ஒருமுறை கேட்டு அவன் ’தரமுடியாது போடா’ என்றபோது அபத்தமாய் அழுகை பொங்கிப் பொங்கி வந்தது. பொங்கியதை எல்லாம் கர்ச்சீப்பில் துடைத்து எடுத்தேன். அம்மாவின் சமையல் நின்று போனது. (ஊரைச் சுத்தற நாய்க்கு தண்டச் சோறு வேறா என்ற பேச்சோடு) அப்பாவின் அட்வைஸ்கள் அலுப்பாக இருந்தன.



என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன்... கடன் கேட்க!

அவன் சொன்ன ஐடியாவின் படி, ஒரு நாள் அவனுக்கு - நண்பன் ஒருவனை விட்டு ஊற்றிக் கொடுத்து விட்டு மட்டையாகப் போகும் தருணத்தில், உதவுவது போல அவனைக் கொண்டு வீடு சேர்த்தேன். அடுத்தநாள் போய் பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்டேன். அட! ’நாளை வா, தருகிறேன்’ என்றான்!


வித விதமாக அவனை குல்லா போட ஆசையாக இருந்தது. அதில் அவன் மயங்கி காசைத் தூக்கி எறிவதைப் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது.


அடுத்த நாள் அவன் சொன்னது போலவே எனக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்தான். அவன் சட்டையை பிடித்து இழுத்து ‘இதை உன்னால் முடிஞ்சா திருப்பி வாங்கிக்கடா’ என்று சொல்ல ஆசை வந்தது. அடக்கிக் கொண்டேன்.



நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவனோ கொஞ்ச நாளுக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்தான். அவனை ஏமாற்றுவது என்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது எனக்கு.



எப்படியோ, கடன் வாங்கி, மூன்று மாசமாகியும் வட்டியும் கட்டாமல், அசலையும் அடைக்காமல் அவனை அலைக்கழித்தேன். ஃபைனான்ஸ்காரனையே ஏமாற்றியவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் எந்த நேரத்தில் தான் அவன் மனைவிக்கு விஷயம் தெரிந்து என் தந்தையிடம் போவார்களோ என்று பயமாயும் இருந்தது.



ஒரு ஐடியா செய்தேன். அவனது முந்தைய ஊரின் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதினேன். அவன் இங்கேதான் இருக்கிறான் என்று. அவன் ஒட்டுமொத்தமாக பாய், படுக்கையெல்லாம் கட்டப்பட்டு வேறு ஊருக்கும் அழைத்துப் போக பட்டான். அவனும் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடன்கொடுப்பது என்பது பிச்சையிடுவதற்கு சமமாக அவனும், அவனது மனைவியும் நினைத்திருக்கக் கூடும்.


(ஆறு மாதங்களுக்கு பின்…………………)






அந்த பைஜாமாக் காரனின் பெயர் பிந்திரா சேட். அவன் வடநாடு. பான்பராக் போட்ட வாயும், வழு வழு தலையும், பானை போன்ற தொந்தியும், கையில் எப்போதும் வைத்திருக்கும் கறுப்பு லெதர் பேக்கும் காசில்லாதவர்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த லெதர் பேக்கே அவனின் சிறப்பம்சம். அவன் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் என்ன, கறுப்பாக இருந்தால் என்ன, உள்ளே இருக்கும் நோட்டின் நிறம் பச்சைதானே. (ஒருவேளை அதுவும் கறுப்போ?) அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த பச்சை நிற நோட்டுக்கள் கிட்ட தட்ட காசில்லாமல் திரியும் ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.

*
*
*
*
*


போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது…

கடன் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!


குறிப்பு: இந்தப் பதிவின் மூலத்தை எழுதிய அபிஅப்பா என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன்!

16 comments:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்டு

புதுகை.அப்துல்லா said...

படிச்சுட்டு அப்புறம் வர்றேன்

புதுகை.அப்துல்லா said...

வினையும் நல்லா இருந்தது...அதுக்கு உங்களோட எதிர்வினையும் நல்லா இருக்கு :)))

வெண்பூ said...

பரிசல்... சரியான எதிர்பதிவு... கலக்குங்க.. நல்லா வாய்விட்டு சிரிக்க வெச்சிங்க.. பாராட்டுகள்.

விஜய் ஆனந்த் said...

ஹாஹாஹாஹா!!!!

யாரங்கே!!!

உடனடியாக இந்த மாதிரி பதிவுக்கு எதிர் - கும்மி பதிவு போடும் லகுடபாண்டிகளைப் பிடித்துவந்து தலைகீழ் மூக்குப்போடி கொடுங்கள்...

க க க போ...

வால்பையன் said...

எனக்கு ஏற்பட்ட அதே அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

(வேற வழி அங்க போட்ட அதே பின்னூட்டம் தானே இங்கேயும் போடனும்)

பரிசல்காரன் said...

நன்றி தலைவர்களே!

அப்புறமா டீட்டெயிலா பின்னூட்டமாறு போடறேன்...

Mahesh said...

முதல்ல பின்னூட்டம் போட வந்தேன். அப்பறம் பின்னுட்டமெல்லம் பாத்துட்டு மறுபடி பின்னூட்டம் போடவந்தேன். அப்பறம் மறுபடி...

அட போங்கப்பா...பின்னூட்டம் மறுபடி ஆரம்பிச்ச எடத்துக்கே வந்துருச்சு....

எதாச்சும் புரியுதா? இல்லயா....இருங்க மறுபடி சொல்றேன்...அதாவது முதல்ல.... (எட்றா ஆட்டோவ...)

narsim said...

//கடன் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!//


சர்வ நிச்சயமான வார்த்தைகள்


கலக்கல்!


நர்சிம்

அபி அப்பா said...

அட பாவிங்களா!எத்தன பேர் வலையிலே உலவறீங்க இது போல!நெம்ப கஷ்டபட்டு ஒரு "புனைவு" எழுதினா கங்கனம் கட்டிகிட்டு வேலை பாக்குறீங்களே!! வாங்க வாங்க உங்களை உங்க தங்கச்சி கிட்டயே மாட்டிவிடறேன்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-(((((

சின்னப் பையன் said...

//பரிசல்... சரியான எதிர்பதிவு... கலக்குங்க.. நல்லா வாய்விட்டு சிரிக்க வெச்சிங்க.. பாராட்டுகள்//

ரிப்பீட்டே!!!

நாதஸ் said...

:)

பாலராஜன்கீதா said...

உண்மையிலேயே அ(எ)திர்பதிவுதான்.
;-)

கோவி.கண்ணன் said...

குசும்பனின் எதிர்வினைப் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

:)

பரிசல்காரன் said...

//அபி அப்பா said...

அட பாவிங்களா!எத்தன பேர் வலையிலே உலவறீங்க இது போல!நெம்ப கஷ்டபட்டு ஒரு "புனைவு" எழுதினா கங்கனம் கட்டிகிட்டு வேலை பாக்குறீங்களே!! வாங்க வாங்க உங்களை உங்க தங்கச்சி கிட்டயே மாட்டிவிடறேன்!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-((//

வந்ததுக்கு நன்றி அபிஅப்பா!

மாட்டிவிடறதுன்னா வெண்பூவை மாட்டிவிடுங்க. போன பதிவுல இப்ப என்ன செய்ய'ன்னு கேட்டதுக்கு அவருதான் பின்னூட்டத்துல அபிஅப்பா ஒரு சூப்பர் பதிவு போட்டிருக்காரு, போய் எதிர்பதிவு ரெடி பண்ணுங்கன்னாரு!

அப்புறம்,,

//நெம்ப கஷ்டபட்டு ஒரு "புனைவு" எழுதினா//

தங்கச்சிகிட்ட ரொம்ப பயம் போல?
புனைவு'ன்னு அழுத்தி சொல்லியிருக்கீங்க?

ஸேம் ப்ளட்!

Sridhar V said...

இதுதான் இந்த வார ட்ரெண்டா? ஒரு குரூப்பாதான்யா கெளம்பியிருக்கீங்க :-))

இன்னும் எத்தனை வாரத்துக்கு போகப் போகுதோ... :-((((