Monday, September 8, 2008

இப்ப நான் என்ன செய்ய?

என்ன பதிவு போடுவது என்று மேட்டர் கிடைக்காமல் இருப்பது ஒரு வகை என்றால், கிடைத்த மேட்டர்களில் எதைப் பதிவில் போடுவது என்று குழம்பி, ஆரம்பிக்க முடியாமல் மண்டை காய்ந்து கொண்டிருப்பது இன்னொரு வகை.

நான் சொன்னதையும் கேட்காமல், அடக்க முடியாமல், அடங்கியிராமல் ஒருத்தன் நேற்றும், அதற்கு முன் தினமும் முட்ட முட்ட குடித்ததைப் பதிவாய்ப் போடலாம். ஆனால், அவன் பெயரைப் போட முடியாது. ‘இதை அவரையே அழைத்துச் சொல்ல்லியிருக்கலாமே?’ என்று கும்மத் தயாராய் இருப்பார்கள். ஆகவே, இதை அப்புறம் பார்த்துக் கொள்லலாம்.

அதே மாதிரி ‘குடித்ததால் எனக்கு விரைவில் மரணம் நேரலாம்’ என்று ‘தண்ணி’லை விளக்கம் அளித்த ஒரு இனிய நண்பர் ‘டேய்.. நான் செத்தா எனக்கு இரங்கற்பா நீ எழுதுடா’ என்றதை பதிவாக எழுதலாம். மனம் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக ‘நீங்க செய்யறது சரியா?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புதல் உசிதம். அதுவும் முடியவில்லை. காரணம், புரியாமல் செய்பவர்களுக்கு புத்தி சொல்லலாம். எல்லாம் தெரிந்தவர்கள் தவறு செய்கையில் வேடிக்கைப் பார்த்து அழும் மனம் மட்டுமே நமக்கு வாய்த்திருக்கிறது.

மின் தொல்லை காரணமாக சரிவரத் தூங்க முடிவதில்லை. படிக்க முடிவதில்லை. எழுத முடிவதில்லை. இப்படியே இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்து சிந்தித்து முடி நரைக்கத் தொடங்கியாயிற்று. தூக்கத்தின் காதலர்களாகத்தான் எல்லாருமே இருக்கிறோம். தூங்காமல் இருக்க முடியுமா.. அட.. இந்தத் தூக்கத்தைப் பற்றி ஒரு பதிவு போடலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் விவரங்கள் சேகரிக்க வேண்டும், அரை மணிநேரத்தில் ஆகக்கூடிய காரியமில்லை அது. ஆகவே அதையும் தள்ளி வைக்கலாம்.

மங்களூர் சிவாவுக்கு வியாழக்கிழமை திருமணம். அவரை கன்னாபின்னாவென்று வாழ்த்தி ஒரு உருப்படியான பதிவு போடலாம். ஆனால் பதிவு கொஞ்சம் உருக்கமாக இருக்கவேண்டியது அவசியம். இப்போதுள்ள மூடில் அது சாத்தியமில்லை. ஆகவே, அதையும் தள்ளி வைக்கலாம்.

ஆளாளுக்கு எதிர்ப்பதிவு எழுத ஆரம்பித்துவிட்டார்கள். நாமும் ஒரு நல்ல பதிவை எடுத்து எடிட் பண்ணி கடகடவென்று எதிர்ப்பதிவு போடலாம். ஆனால் தமிழ்மணத்தைத் திறந்து பார்த்தால் உடனே எதிர்ப்பதிவு போடத் தோன்றுகிற மாதிரி ஒன்றிரண்டுதான் தேறியது. அதில் ஒன்று என் பதிவுக்கு நக்கல் நாயகன் குசும்பன் எழுதிய பதிவு. உடனே அதற்கு நானும் போட வேண்டாம், இன்னும் ஒரு நாள் போகட்டும் என்று விட்டு விட்டேன்! (ஆனால் சொல்ல முடியாது, இன்றைக்கே நேரம் கிடைத்தால் போட்டு கும்முவேன்!)

நாலைந்து புகைப்படங்கள் இருக்கிறது. அதை அப்லோடு செய்து வலைமக்கள் பார்வைக்கு வைக்கலாம். ஆனால் அது வீட்டு கணிணியில் இருக்கிறது. பென் ட்ரைவிலும் காப்பி செய்து வரவில்லை. அதனால் இப்போதைக்கு அது முடியாது.


இப்ப
நான்

என்ன
செய்ய?

65 comments:

narsim said...

ஆக, அவியல் திங்ககிழமையே வந்தாச்சு இந்த வாரம்!

//மங்களூர் சிவாவுக்கு புதன்கிழமை திருமணம்//


வியாழன்..

நர்சிம்

குசும்பன் said...

//இப்ப
நான்
என்ன
செய்ய?//

மதியம் சாப்பாட்டுக்கு கோழி கறி, முட்டை ஆம்லேட், பிரியாணி செய்யவும்

குசும்பன் said...

//நாமும் ஒரு நல்ல பதிவை எடுத்து எடிட் பண்ணி கடகடவென்று எதிர்ப்பதிவு போடலாம். //

நல்ல பதிவு என்று சொல்லிட்டு என் பதிவுக்கு எதிர்பதிவு என்று சொல்லி இருக்கிறீர்களே உமக்கு ரொம்பதான் குசும்பு. ஒரு வேளை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா ”நொல்ல” என்று வரவேண்டுமா?:))

குசும்பன் said...

ஏதாவது ஒரு பதிவை எடுத்துக்கிட்டு கும்மி அடிக்கலாம்! அதுதான் பெஸ்ட்:)

வெண்பூ said...

//நான் சொன்னதையும் கேட்காமல், அடக்க முடியாமல், அடங்கியிராமல் ஒருத்தன் நேற்றும், அதற்கு முன் தினமும் முட்ட முட்ட குடித்ததைப் பதிவாய்ப் போடலாம்.//

:(

//இப்ப
நான்
என்ன
செய்ய?//

ஆபிஸ்ல ஆணி......................

Unknown said...

"நாலைந்து புகைப்படங்கள் இருக்கிறது. அதை அப்லோடு செய்து வலைமக்கள் பார்வைக்கு வைக்கலாம். ஆனால் அது வீட்டு கணிணியில் இருக்கிறது. பென் ட்ரைவிலும் காப்பி செய்து வரவில்லை. அதனால் இப்போதைக்கு அது முடியாது"

அப்டினா??? ஆஃபீஸ்ல இதான் வேலையா?? any vacancies?

முருகானந்தம் said...

வலையுலகத்தை கரை ஏற்ற வந்த பரிசல்காரருக்கே என்ன செய்ய என்ற கேள்வி வந்தால் வலை உலகிற்கு அது நல்லதில்லையே.. :)

புதுகை.அப்துல்லா said...

கிடைத்த மேட்டர்களில் எதைப் பதிவில் போடுவது என்று குழம்பி, ஆரம்பிக்க முடியாமல் மண்டை காய்ந்து கொண்டிருப்பது இன்னொரு வகை.
//
அப்ப எந்த மேட்டரும் உருப்படியா இல்ல!

விஜய் ஆனந்த் said...

ஆனாலும்...

ஏதாவது செய்யணும் பாஸ்...

புதுகை.அப்துல்லா said...

ஆகவே, இதை அப்புறம் பார்த்துக் கொள்லலாம்.

//

அப்ப அதையும் விடுறதா இல்ல?

வெண்பூ said...

//விஜய் ஆனந்த் said...
ஆனாலும்...

ஏதாவது செய்யணும் பாஸ்...
//

நம்மால முடிஞ்சது கும்மிதான். வேறென்னா செய்ய??

புதுகை.அப்துல்லா said...

எல்லாம் தெரிந்தவர்கள் தவறு செய்கையில் வேடிக்கைப் பார்த்து அழும் மனம் மட்டுமே நமக்கு வாய்த்திருக்கிறது.

//

அப்படியெல்லாம் இருக்க கூடாது. பாருங்க நான் உங்க பதிவெல்லாம் படுச்சுட்டு அழுதுகிட்டா இருக்கேன்? பின்னூட்டமெல்லாம் எழுதல :))

புதுகை.அப்துல்லா said...

மின் தொல்லை காரணமாக சரிவரத் தூங்க முடிவதில்லை. படிக்க முடிவதில்லை. எழுத முடிவதில்லை

//

லதானந்த் அங்கிள் லெட்டர் போட்டப்ப மின்தடை இல்லையே? :))

விஜய் ஆனந்த் said...

// கிடைத்த மேட்டர்களில் எதைப் பதிவில் போடுவது என்று குழம்பி, ஆரம்பிக்க முடியாமல் மண்டை காய்ந்து //

நோட் பண்ணுங்க...நோட் பண்ணுங்க...

// கொண்டிருப்பதுஇப்படியே இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்து சிந்தித்து முடி நரைக்கத் தொடங்கியாயிற்று. //

சே..சே...இதெல்லாம் நோட் பண்ணாதீங்கப்பா...

வெண்பூ said...

//எல்லாம் தெரிந்தவர்கள் தவறு செய்கையில் வேடிக்கைப் பார்த்து அழும் மனம் மட்டுமே நமக்கு வாய்த்திருக்கிறது.

//

அப்படியெல்லாம் இருக்க கூடாது. பாருங்க நான் உங்க பதிவெல்லாம் படுச்சுட்டு அழுதுகிட்டா இருக்கேன்? பின்னூட்டமெல்லாம் எழுதல :)) //

அவரு நம்ம பதிவெல்லாம் பாத்துட்டு அழுவாரோ என்னவோ????

புதுகை.அப்துல்லா said...

மங்களூர் சிவாவுக்கு புதன்கிழமை திருமணம். அவரை கன்னாபின்னாவென்று வாழ்த்தி ஒரு உருப்படியான பதிவு போடலாம். ஆனால் பதிவு கொஞ்சம் உருக்கமாக இருக்கவேண்டியது

//


உருக்கமா இருக்க வசனமா எழுதப் போறீங்க?

வெண்பூ said...

//நான் சொன்னதையும் கேட்காமல், அடக்க முடியாமல், அடங்கியிராமல் ஒருத்தன் நேற்றும், அதற்கு முன் தினமும் முட்ட முட்ட குடித்ததைப் பதிவாய்ப் போடலாம். ஆனால், அவன் பெயரைப் போட முடியாது//

இதுக்கு நீங்க பேரே சொல்லியிருக்கலாம்.

***

உண்மையில் எனக்கு மிகவும் வருத்தம் பரிசல். :(

புதுகை.அப்துல்லா said...

மங்களூர் சிவாவுக்கு புதன்கிழமை திருமணம்.

//

கல்யாணம் வியாழக்கிழமை

புதுகை.அப்துல்லா said...

வெண்பூ said...
அவரு நம்ம பதிவெல்லாம் பாத்துட்டு அழுவாரோ என்னவோ????

//

ஹா..ஹா...ஹா...

புதுகை.அப்துல்லா said...

பார்ட்னர் வெண்பூ ஆணி ஓன்னும் இல்லையோ?

விஜய் ஆனந்த் said...

இங்கப்பாருங்கப்பா ஒருத்தர...

காலைல, வீட்ல சும்மாதான் இருக்கேன்னு சொன்னாரு..கொஞ்ச நேரம் முன்னாடி, ஆபிஸ்ல ஆணின்னாரு...இப்ப என்னடான்னா நம்மால முடிஞ்சது கும்மிதானங்குறாரு...

ஒன்னியும் பிரியலயே???

கார்க்கிபவா said...

ங்கொக்க மக்கா... உங்கள எல்லாம் பாலைவனத்துல கொண்டு போய் விட்டாலும் பால் பாயசம் காய்ச்சி குடிப்பீங்க போல இருக்கே... இப்பவே சொல்லிடுறேன்.. இதுக்கு எதிர்பதிவு உரிமை பரிசலிடம் நான் வாங்கியாச்சு.. வாங்கியாச்சு...

புதுகை.அப்துல்லா said...

விஜய் ஆனந்த் said...
இங்கப்பாருங்கப்பா ஒருத்தர...

காலைல, வீட்ல சும்மாதான் இருக்கேன்னு சொன்னாரு..கொஞ்ச நேரம் முன்னாடி, ஆபிஸ்ல ஆணின்னாரு...இப்ப என்னடான்னா நம்மால முடிஞ்சது கும்மிதானங்குறாரு...

ஒன்னியும் பிரியலயே???

//

அவரு அரசியலே தனி விஜய் :))

விஜய் ஆனந்த் said...

// புதுகை.அப்துல்லா said...

அவரு அரசியலே தனி விஜய் :)) //

ஓஓஓஓ!!!!

அவரா இவரு!!!!

வால்பையன் said...

இந்த பதிவில் எங்கேயாவது என் வாடை அடிக்கிறதா?
அப்படி இருந்தால்
நான் அவன் இல்லை

மங்களூர் சிவா said...

/
மங்களூர் சிவாவுக்கு புதன்கிழமை திருமணம். அவரை கன்னாபின்னாவென்று வாழ்த்தி ஒரு உருப்படியான பதிவு போடலாம்.
/

அண்ணா வியாழக்கிழமைண்ணா

செப்டம்பர் 11, 2008
7.30 - 9.00
வடபழனி முருகன் கோவில், சென்னை

வெண்பூ said...

அபி அப்பா ஒரு பதிவு போட்டிருக்காரு. போயி பாருங்க பரிசல். எதிர்பதிவு சூப்பரா போடலாம் :)

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
அபி அப்பா ஒரு பதிவு போட்டிருக்காரு. போயி பாருங்க பரிசல். எதிர்பதிவு சூப்பரா போடலாம் :) //

உங்க ப்ளான் என்ன??? எதிர்ப்பதிவா இல்ல ரிப்பீட்டா???

Mahesh said...

எங்கள மாதிரி ஆளுக எழுதின 'கன்னி முயற்சி' கதயெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடலாமே !!!

புதுகை.அப்துல்லா said...

விஜய் ஆனந்த் said...
// வெண்பூ said...
அபி அப்பா ஒரு பதிவு போட்டிருக்காரு. போயி பாருங்க பரிசல். எதிர்பதிவு சூப்பரா போடலாம் :) //

உங்க ப்ளான் என்ன??? எதிர்ப்பதிவா இல்ல ரிப்பீட்டா???

//

என் பிளான் அப்பீட்டு

வெண்பூ said...

அடப்பாவிங்களா.. இப்படியெல்லாம் கிளப்புறீங்க.. நான் "ஆபிஸ்ல ஆணி..."ன்னு சொன்னது பரிசல் கேட்ட "இப்ப என்ன செய்ய?" அப்படிங்கறதுக்கு பதில். ஆபிஸ்ல ஆணி புடுங்குங்கன்னு சொன்னேன். நான் எப்பங்க சொன்னேன் எனக்கு ஆணி அதிகம்னு...

வெண்பூ said...

//புதுகை.அப்துல்லா said...
விஜய் ஆனந்த் said...
// வெண்பூ said...
அபி அப்பா ஒரு பதிவு போட்டிருக்காரு. போயி பாருங்க பரிசல். எதிர்பதிவு சூப்பரா போடலாம் :) //

உங்க ப்ளான் என்ன??? எதிர்ப்பதிவா இல்ல ரிப்பீட்டா???

//

என் பிளான் அப்பீட்டு
//

அப்துல்லா சொன்னதுக்கு நான் போட்டுக்கிறேன் ஒரு ரிப்பீட்டு...

வெண்பூ said...

ஆனாலும் ப்ரொஃபைல் போட்டோல பாத்தீங்களா? நர்சிம் சும்மா ஸ்மார்ட்டா இருக்காரு. வெள்ள வெளேர்னு சும்மா வெள்ளகாரனாட்டமா..

புதுகை.அப்துல்லா said...

Mahesh said...
எங்கள மாதிரி ஆளுக எழுதின 'கன்னி முயற்சி' கதயெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடலாமே

//

என்னாது கன்னிய முயற்சியா...ச்சீய் நீ ஆய் பையன்.

புதுகை.அப்துல்லா said...

நர்சிம் சும்மா எம்.ஜி.ஆர் கணக்கா இருக்காரு.(எங்களுக்கெல்லாம் வெள்ளைன்னாலே எம்.ஜி,,ஆர் தான்) :)

விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
நான் எப்பங்க சொன்னேன் எனக்கு ஆணி அதிகம்னு... //

நீங்க ஆணி அதிகம்னு சொன்னிங்கன்னு எங்கங்க சொன்னேன்??? ஆணி அதிகமா இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதான சொன்னேன்...

புதுகை.அப்துல்லா said...

வால்பையன் said...
இந்த பதிவில் எங்கேயாவது என் வாடை அடிக்கிறதா?
அப்படி இருந்தால்
நான் அவன் இல்லை

//

தல உங்ககிட்ட தான் வாடை அடிக்கும். உங்க வாடையெல்லாம் அடிக்காது.

(அப்புறம் எப்ப வர்றீங்க சென்னைக்கு? புதுசா நிறைய கடையெல்லாம் திறந்துருக்காங்க)

வெண்பூ said...

//புதுகை.அப்துல்லா said...
Mahesh said...
எங்கள மாதிரி ஆளுக எழுதின 'கன்னி முயற்சி' கதயெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடலாமே

//

என்னாது கன்னிய முயற்சியா...ச்சீய் நீ ஆய் பையன்.
//

கரெக்டு... கன்னி... முயற்சி... இதையெல்லாம் ஆபிஸ்ல இருந்து எப்படி பாக்குறதாம்?

வெண்பூ said...

//புதுகை.அப்துல்லா said...
தல உங்ககிட்ட தான் வாடை அடிக்கும். உங்க வாடையெல்லாம் அடிக்காது.

(அப்புறம் எப்ப வர்றீங்க சென்னைக்கு? புதுசா நிறைய கடையெல்லாம் திறந்துருக்காங்க)
//

இது எப்படி உங்களுக்கு தெரியும்?

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
வெண்பூ said...

//வால்பையன் said...
இந்த பதிவில் எங்கேயாவது என் வாடை அடிக்கிறதா?
அப்படி இருந்தால்
நான் அவன் இல்லை
//

அது வேற ஒண்ணும் இல்ல பரிசல் கோச்சுகாதீங்க. உங்க போன பதிவுகள்ல நீங்க சொன்ன மாதிரி மின்சார பிரச்சினை தீர நாமளும் அரசாங்கத்துக்கு உதவி பண்ணனும். அரசாங்கம் தனியார்கிட்ட இருந்து மின்சாரம் வாங்குனும்னா அதுக்கு நெறய பணம் வேணும். பணம் எங்கிருந்து வரும்? அதுக்காக‌தான் வால்பையன்......

புதுகை.அப்துல்லா said...

இது எப்படி உங்களுக்கு தெரியும்?

//

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா பார்ட்னர்?

வெண்பூ said...

//விஜய் ஆனந்த் said...
நீங்க ஆணி அதிகம்னு சொன்னிங்கன்னு எங்கங்க சொன்னேன்??? ஆணி அதிகமா இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதான சொன்னேன்...
//

அதுதான் மாசக்கடைசியில அவ்ளோ ஆணி குடுக்குறாங்களே. அதுவும் நல்லா ஆப்பு சைஸில...

வெண்பூ said...

//புதுகை.அப்துல்லா said...
இது எப்படி உங்களுக்கு தெரியும்?

//

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா பார்ட்னர்?
//

இதை பழக்கடைன்னு மாத்திடலாம். ரெண்டும் ஒரே ஸ்மெல்லுதானே.. (இது எப்படி உனக்கு தெரியும்னு எதிர்கேள்வி கேக்ககூடாது)

வால்பையன் said...

குடிமகன்கள் சேவை
நாட்டுக்கு தேவை

வெண்பூ said...

எங்க விஜய் ஆன்ந்த் ஆளைக் காணோம்? 50ன்னு அடிச்சி வெச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காரா?

வெண்பூ said...

//வால்பையன் said...
குடிமகன்கள் சேவை
நாட்டுக்கு தேவை
//

உங்கள மாதிரி இரு ட்ரூ சிட்டிசன் சொன்னா அது கரிகிட்டா தான் இருக்கும்.

வால்பையன் said...

//இது எப்படி உனக்கு தெரியும்னு எதிர்கேள்வி கேக்ககூடாது//

அதான் நீங்களே உளரீடிங்க்களே!
நாங்க வேற கேக்கனுமாக்கும்

வெண்பூ said...

//இது எப்படி உங்களுக்கு தெரியும்?


//

ஹி..ஹி...ஹி //

இதை எதுக்கு எடுத்தீங்க அப்துல்லா????

வெண்பூ said...

50

வெண்பூ said...

ஹைய்யா... நாந்தான் 50

Anonymous said...

ஏம்பா இதச் செய்யிறதா அதச் செய்யிறதான்னு யோசிக்கிறியே தவிர, ஆபீசூன்னு ஒன்னு இருக்கு அங்க ஆணி புடுங்கனும்னு தோனுதா உனக்கு. உம்பதிவ ட்ரான்ஸ்லேட் பண்ணி மேடமுக்கு மெயிலனுப்பலாம்னு இருக்கேன்.

வெயிலானும் ஓக்கேன்னு சொல்லீட்டாரு.

எப்படி ஐடியா?

rapp said...

//அப்படியெல்லாம் இருக்க கூடாது. பாருங்க நான் உங்க பதிவெல்லாம் படுச்சுட்டு அழுதுகிட்டா இருக்கேன்? பின்னூட்டமெல்லாம் எழுதல :))
//

super anna, :):):)

பரிசல்காரன் said...

'என்ன பதிவு போட்டாலும் கும்முவாங்கடா... இவங்க ரொம்ப நல்லவங்கடா” என்று உங்களைப் பற்றி என் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கைவிடாம, பேரைக் காப்பாத்திட்டீங்க மக்கா!

பரிசல்காரன் said...

// மங்களூர் சிவா said...

/
மங்களூர் சிவாவுக்கு புதன்கிழமை திருமணம். அவரை கன்னாபின்னாவென்று வாழ்த்தி ஒரு உருப்படியான பதிவு போடலாம்.
/

அண்ணா வியாழக்கிழமைண்ணா

செப்டம்பர் 11, 2008
7.30 - 9.00
வடபழனி முருகன் கோவில், சென்னை//


மாப்பூ, ஸாரி!

11ம்தேதி கல்யாணம்னா புதன்கிழமை போகணும்ன்னு நெனைச்சுகிட்டே இருந்ததோட விளைவு! மன்ச்சுக்கப்பா! ஆங்..

புதுகை.அப்துல்லா said...

உங்களைப் பற்றி

//

உங்களைப் பற்றியா? அல்லது உங்களையெல்லாம் பற்றியா?

புதுகை.அப்துல்லா said...

11ம்தேதி கல்யாணம்னா புதன்கிழமை போகணும்ன்னு நெனைச்சுகிட்டே இருந்ததோட விளைவு!

//

ஆமா..பெருசா வரப்போற மாதிரி பில்டப்ப பாரு :)

Mahesh said...

உங்கள கும்மும்போது என்னையும் சேத்துல்ல கும்முறாங்க.... நெல்லுக்கிழைத்த நீர் வாய்க்கால் வழியோடி....

Thamira said...

//நான் சொன்னதையும் கேட்காமல், அடக்க முடியாமல், அடங்கியிராமல் ஒருத்தன் நேற்றும், அதற்கு முன் தினமும் முட்ட முட்ட குடித்ததைப் பதிவாய்ப் போடலாம். ஆனால், அவன் பெயரைப் போட முடியாது//

இதுக்கு நீங்க பேரே சொல்லியிருக்கலாம்.//

என்ன வெண்பூ இப்பிடி கவுக்குறீங்க..

Thamira said...

"இப்ப என்ன செய்ய?" ‍// கேட்டுட்டு ஓடிட்டீங்களா.. பாருங்க உங்களுக்காக நம்ப ஆளுங்க எவ்ளோ சின்சியரா கும்மிட்டுருக்காங்க.. எல்லோருக்குமொரு சேதி மக்களே.. கடைக்காரர் இல்லாத கடையில கும்மினா அது நமக்கு இழுக்குங்குறேன் நான், இன்னா சொல்றீங்க..

Thamira said...

முந்தின கமென்டுக்காக பரிசல் நேரிலேயே என்னை கும்முவதற்காக சென்னை வருகிறாராம்..

Thamira said...

ஆமா.. அப்துலோட கடையை கவுத்துட்டு நேரே எல்லோரும் இங்க வந்துட்டீங்களா.?

Thamira said...

ஆளில்லாத கடையில வந்து கூவிக்கினுருக்கிறதே என் வேலையா போச்சு.. சே.!

☼ வெயிலான் said...

// ஏம்பா இதச் செய்யிறதா அதச் செய்யிறதான்னு யோசிக்கிறியே தவிர, ஆபீசூன்னு ஒன்னு இருக்கு அங்க ஆணி புடுங்கனும்னு தோனுதா உனக்கு. உம்பதிவ ட்ரான்ஸ்லேட் பண்ணி மேடமுக்கு மெயிலனுப்பலாம்னு இருக்கேன்.

வெயிலானும் ஓக்கேன்னு சொல்லீட்டாரு. //

டபுள் ஓக்கே!

வேணும்னா, ஆடுமாடு அண்ணாச்சிட்ட சொன்னா, இந்தியில டிரான்ஸ்லேட் பண்ணி கொடுப்பாரு.

அவங்க படிக்க ஈசியா இருக்கும்ல, அதுக்காக சொல்றேன் ;)

லக்கிலுக் said...

ரொம்ப ரசித்தேன் :-)