நேற்றைய கிசுகிசுவை ஏறக்குறைய எல்லாரும் கண்டுபிடித்தாலும் ஒன்றரண்டை மிஸ் பண்ணியிருந்தார்கள்.
இதோ...
பெயரை மாற்ற விரும்பும் பதிவர் – நம்ம தாமிரா! ஆமாங்க.. அதே பேர்ல ஒரு எழுத்தாளர் இருக்கறதால பல குழப்பங்களும், இவருக்கு கிடைக்கற திட்டு அவருக்கு கிடைக்கறதாவும் தகவல். அதுனால இந்த முடிவு. உங்களுக்கு நல்ல ஐடியா தோணினாலும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி சைடில்.
2. கார்க்கி – பரிசல்
3. நர்சிம்-பரிசல் (வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான ஃபோன் வந்ததுன்னு பீலா விடுவேன். நெஜமாவே நேத்து நர்சிம்மை ‘ஸ்டிக்கர் பதிவர்’ன்னு ஏன் சொன்னீங்கன்னு நிறைய ஃபோன் கால்! ஸ்டிக்கருக்கான காரணம்... பதிவின் கடைசியில் காண்க!)
4. வால்பையன் – பிறந்தநாள் தோழர் அதிஷா – நன்றி சொல்ல மறந்த பதிவர் ஈரவெங்காயம். (இதுக்கு கார்க்கி, வெண்பூன்னு சொல்லியிருந்தாங்க... ஆமா... வெண்பூக்கு கார்க்கி ப்ளாக்லேபிள் ஃபுல் வாங்கிக்குடுத்தாரா என்ன? சொல்லவேல்ல?!?)
5. அதிஷா 6. கேபிள் சங்கர் 7. யெஸ். பாலபாரதி –முரளிகண்ணன்
கடைசில சொன்ன அடுத்தவார தமிழ்மண நட்சத்திரம்....? வெய்ட் அண்ட் சீ!
*************************
புதிய பார்வை ஆசிரியராக பாவை சந்திரன் இருந்தபோது நம்ம ரமேஷ் வைத்யா இசை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி.. டிசம்பர் சீசனில் எழுத வாய்ப்பு கேட்டிருக்கிறார். ‘மாலை அஞ்சு மணிக்கு வர்றீங்களா?’ என்றிருக்கிறார் பாவை சந்திரன்.
மாலை ஐந்து மணிக்கு இவர்கள் போனபோது..
“யார் நீங்க?” என்றிருக்கிறார். நண்பர் ஹரிகுமாரோடு போன இவர் மறுபடி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ‘இசைக் கட்டுரை சம்பந்தமா...”
“ஓ! இன்னும் படிக்கல. காலைல பத்து மணிக்கு வர்றீங்களா?”
காலை பத்து மணிக்கும் அதே யார் நீங்க கேள்வி... இவர்கள் அறிமுகப்படலம் எல்லாமே அரங்கேறியிருக்கிறது. எல்லாம் முடிந்து மறுபடி அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மறுபடி யார் நீங்க... மறுபடி அறிமுகங்கள்..
இதே தொடர்ந்து நாலைந்து நாளாக நடக்க... ஆறாவது நாள் பாவை சந்திரன் 'யார் நீங்க’ எனக் கேட்டதும் ரமேஷ் வைத்யாவின் நண்பர் ஹரிகுமார் சொன்னாராம்..
“புதிய பார்வைங்கற பத்திரிகைக்கு நீங்க ஆசிரியரா இருக்கறது ரொம்பப் பொருத்தம் சார். ஒவ்வொரு முறையும் ‘புதிய பார்வை' பார்த்து யாரு.. யாருன்னு கேட்கறீங்க”
பின் குறிப்பு: ‘இதை அவியல்ல போடறேண்ணா’ என்று ரமேஷ் வைத்யா அண்ணனிடம் கேட்டபோது அவர் சொன்னார்.. “ஏன்... அறிஞர்கள் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள்’னு எழுதிப் போட மாட்டியா?”
ஆச..தோச..அப்பளம்..வடை!
********************
உஷா பத்திரிகை அலுவலகத்துக்கு டி.ராஜேந்தர் வரும்போதெல்லாம் (அந்த பத்திரிகை இருந்தப்போ!) ஒரு டயலாக் சொல்வாராம்...
“சர்க்குலேஷனை மேல ஏத்தணும்யா... இப்ப இருக்கற ட்ரெண்டை மாத்தணும்யா”
– இதைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
ஒரு நாள் அங்கே இருக்கும் டேபிள், சேரையெல்லாம் எடுத்து வந்து கொண்டிருந்தார்களாம்.
“என்ன நடக்குது” என்று நண்பர் ஒருவர் கேட்க.. சொன்னார்களாம்..
“அதான் சர்க்குலேஷனை மேல ஏத்தணும், மேல ஏத்தணும்னு சொன்னாருல்ல... அதான் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டை மேல-மூணாவது ஃப்ளோருக்கு ஷிப்ட் பண்றாங்க”
*******************************
அகர்வால் கண் மருத்துவமனையில் வாசல் கதவு ஒரு கண்ணின் அமைப்பில் இருக்கும். அதாவது கண் பாவையினூடே பார்வையாளார்கள் நுழைவது போல..
மருத்துவமனையைத் திறந்து வைத்தவர் அப்பல்லோ மருத்துவமனையிலன் கைனகாலஜிஸ்ட். திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பாராட்டி இப்படிச் சொன்னாராம்...
“நல்லவேளை.. அகர்வால் என் துறையில் இல்லை!”
*****************************
சென்றவாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த வால்பையனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். “ஸ்டாரா இருந்தீங்களே.. நல்ல முன்னேற்றம் இருக்கும்ல?”
”இல்ல பரிசல்... அதே நம்ம வழக்கமான ஆட்கள்தான் பின்னூட்டியிருந்தாங்க”
“ஓஹோ... பின்னூட்டத்த விடுங்க... ஆனா ஹிட்ஸ் ஏறியிருக்குமே..”
“ஹும்.. BUDS இருந்தாக்கூட காது கொடயலாம். HITSஐ வெச்சுட்டு என்ன பண்ண?”
*****************************
யாவரும் நலம் இந்தியில் 13B என்ற பெயரில் வந்திருக்கிறது. மாதவன் 13 Bயாவது ஃப்ளாட்டில் குடியிருப்பதாய்க் காட்டியிருக்கிறார்கள். B கூட எழுதும்போது 13ன் வடிவத்தில் வருவதால்தான் என்கிறார்கள். 13 ராசியில்லாத நம்பரா என்று பேசிக்கொண்டிருந்தாபோது நம்ம தமிழ்நாட்ல வாக்குப்பதிவு மே 13தானே’ என்று நண்பர்கள் சொன்னார்கள்.
நல்லா நடக்கணும் தேர்தல் என்று வேண்டிக் கொள்கிறேன். ஏதாவது கலவரம், அசம்பாவிதம் நடந்து மே13 கருப்பு நாளாக ஆகிவிடக்கூடாதே என்ற வருத்தம்தான்.
‘யாருக்குமில்லாத அக்கறை உனக்கேன்’னு கேட்கறீங்களா...
என் பொறந்த நாள்ங்க அது!
********************************
அவியலுக்கு மேட்டர் சேகரிப்பது ஒவ்வொரு முறை கஷ்டமாக இருக்கும். ‘சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம்பரம் கொடுக்கலாமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. ரமேஷ் வைத்யா போன்ற சகலகலா வல்லவர்கள் நட்பிருப்பதால் தப்பித்து வருகிறேன். முடிந்தவரை பிரபலமானவர்கள் வாழ்வென்று இல்லாமல்.. நம்மோடே இருக்கும் நண்பர்கள் சந்திக்கும் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது!
இந்த வாரம் கொஞ்சம் ஈஸியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
***********************
நர்சிம்மை ஸ்டிக்கர் பதிவர் என்றதன் அர்த்தம்:-
ஸ்டிக் = கம்பு
ஸ்டிக்கர் = ?
கம்பர்!
அதுவுமில்லாம அவர் யார்கூட பழகினாலும் டக்னு ஒட்டிக்குவார்ங்க! அதான்!
அடி விழறதுக்குள்ள ஓடிடறேன்!
************************
36 comments:
ஸ்டிக் = கம்பு
ஸ்டிக்கர் = ?
கம்பர்! ////
nice one :)
வர வர அவியல்ல என்னை முந்திகிடுறாங்க.. அழகான சுவையான, அவியல்.
இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/
பொண்ணுங்களை பற்றி கிசு கிசு போடாத ஒரே இடம் இதான்பா.....சந்தோசமா இருக்கு
நல்லா இருங்கையா....நல்லா இருங்க
வழக்கம் போல
//. 13 ராசியில்லாத நம்பரா என்று பேசிக்கொண்டிருந்தாபோது நம்ம தமிழ்நாட்ல வாக்குப்பதிவு மே 13தானே’ என்று //
கவலையில்ல தல. நம்மூருக்கு 8தான் ஆகாத நம்பர்.
படிச்சிகிட்டிருக்கும்போது என்னென்னவோ எழுதனும்னு தோணுது. கமென்ட் போடாவரும் போது எல்லாம் மறந்து போவுது, என்ன வியாதின்னே தெரியல.. யாருக்காவது வைத்யம் தெரிஞ்ச சொல்லுங்கப்பா..
//பெயரை மாற்ற விரும்பும் பதிவர் – நம்ம தாமிரா! ஆமாங்க.. அதே பேர்ல ஒரு எழுத்தாளர் இருக்கறதால பல குழப்பங்களும், இவருக்கு கிடைக்கற திட்டு அவருக்கு கிடைக்கறதாவும் தகவல். அதுனால இந்த முடிவு. உங்களுக்கு நல்ல ஐடியா தோணினாலும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி சைடில்.//
செம்பா ன்னு வெச்சிக்கலாம்!
//வெண்பூக்கு கார்க்கி ப்ளாக்லேபிள் ஃபுல் வாங்கிக்குடுத்தாரா என்ன?//
அட! வெண்பூ நமக்குக் கூட சொல்லலை! இருங்க அவங்க வீட்டுட்த் தங்க்ஸ்கிட்டே போட்டு கொடுக்கிறேன்!
//ஸ்டிக் = கம்பு
ஸ்டிக்கர் = ?//
இதெல்லாம் ஓவர் தலைவரே
//“அதான் சர்க்குலேஷனை மேல ஏத்தணும், மேல ஏத்தணும்னு சொன்னாருல்ல... அதான் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டை மேல-மூணாவது ஃப்ளோருக்கு ஷிப்ட் பண்றாங்க”//
:))
// என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம்பரம் கொடுக்கலாமா //
இதுக்கு பேர் என்ன? ரூம் போட்டு யோசிப்பீங்களா இல்ல பழகிடுச்சோ?
கம்பர் ல கம்(gum) இருக்கறதால சொன்னீங்கன்னு நினைச்சிருந்தேன்
நர்சிம்..உங்கள் ஸ்டிக்கர் விளக்கத்தை படிக்கும் போது எப்படி இருந்திருபார் என யோசிச்சேன் :P
:-)))
//திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பாராட்டி இப்படிச் சொன்னாராம்...
“நல்லவேளை.. அகர்வால் என் துறையில் இல்லை!”
//
அண்ணே அந்த மருத்துவமனையில் இருந்து மூனாவது கட்டிடம்தான என் அலுவலகம். அந்த மருத்துவமனையை தினமும் கடந்து போகும் போதெல்லாம் எப்படி சிரிப்பை அடக்கிக் கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.
:)))))
ஸ்பெஷல் அவியல் ஸ்பெஷலா சூப்பரா இருக்கு - அட்டகாசம் - கலக்கிட்டீங்க
கம்பர்கிட்ட கம்பாலயே அடிவாங்க தகுதியானவர் நீங்க!
முன்னாடி இப்படி ஒரு கம்பர் ஜோக்கை எஸ்.வி.சேகர் நாடகத்தில் கேட்டிருக்கேன். நான் தமயந்தி.சிறுகதை எழுத்தாளர்.உங்கள் வலைப்பதிவு என்னையும் வலைபதிவு எழுத தூண்டி உள்ளது. நல்ல முயற்சி
:-))
sema taste ppa
தாமிராவுக்கு பதில்
கொடுமிரா என்று வெச்சுக்கலாம்...
தா= கொடு எல்லாம் ஒரே மீனிங் தானே!
ஹி ஹி நாங்களும் = எல்லாம் போட்டு மீனிங் சொல்லுவோம் சித்தப்பு:)))
மே மாசம் பிறந்த நாள் வாழ்த்து வாங்க இப்படி ஒரு பிட்டா.
//அண்ணே அந்த மருத்துவமனையில் இருந்து மூனாவது கட்டிடம்தான என் அலுவலகம். அந்த மருத்துவமனையை தினமும் கடந்து போகும் போதெல்லாம் எப்படி சிரிப்பை அடக்கிக் கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.//
உங்க ஏமாற்றத்தை நினைச்சுக்கோங்க.. சிரிப்பு அடங்கிடும் அண்ணே
குசும்பனை யாராவது கலாய்ங்கப்பா.
ஸ்டிக்கர் விளக்கம் கூல்!!
//(வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான ஃபோன் வந்ததுன்னு பீலா விடுவேன். நெஜமாவே நேத்து நர்சிம்மை ‘ஸ்டிக்கர் பதிவர்’ன்னு ஏன் சொன்னீங்கன்னு நிறைய ஃபோன் கால்//
கமிட்டியின் சார்பாக ஃபோன்,மெயில் செய்த அத்துனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி..
அவியல் உண்மையிலேயே ஸ்பெஷல் தான் தலைவரே..அதுவும் அந்த கண் ஆஸ்பத்திரி மேட்டர்.. !!!
கொடுமிரா - கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல 'கொடுமைரா' ஆகிடும். குசும்பா, உன் கொடுமைக்கு அளவே கிடையாதா?
அவியல் - உனக்கே எங்க புகழ்ச்சி போர் அடிக்கல?
அனுஜன்யா
//நான் தமயந்தி. சிறுகதை எழுத்தாளர்.உங்கள் வலைப்பதிவு என்னையும் வலைபதிவு எழுத தூண்டி உள்ளது. //
என்ன கொடுமை க்ருஷ்ணா இது!
ஸ்பெஷல் அவியல் ஸ்பெஷலாத்தான் இருக்கு....
அகர்வால் மருத்துவமனை படிச்சதும் அப்துல்லா ரியாக்ஷன் பாக்கணும்னு நினைச்சேன்... நான் நினைச்ச்ச மாதிரியே ரியாக்ட் பண்ணியிருக்காரு :))
ஸ்டிக்கர் ஜோக் கொஞ்சம் பழசுதான்... எஸ் வி சேகர் "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி" ட்ராமால வரும். :)
வழக்.. கலக்..
(ஹாஸ்பிடல் ஜோக் கொஞ்சம் ஓவரோ?)
(ஸ்டிக்கர் விளக்கம் ஒங்களாலதான் முடியும்.. மு டி ய ல..)
(வாசகர்களையும் பெயருக்கான தேர்வில் கல்ந்துகொள்ளவைத்த உங்கள் அன்புக்கு நன்றி பரிசல்)
நர்சிம்க்கு இப்படி ஒரு விளக்கமா??? போலாம் ரைட்
___படிச்சிகிட்டிருக்கும்போது என்னென்னவோ எழுதனும்னு தோணுது. கமென்ட் போடாவரும் போது எல்லாம் மறந்து போவுது, என்ன வியாதின்னே தெரியல.. யாருக்காவது வைத்யம் தெரிஞ்ச சொல்லுங்கப்பா..___
உங்களுக்குமா சிவக்குமரன் ?
எனக்கும்தான் ... ___ மோனி
அட்டகாசமான அவியல்...
ஒவ்வொரு மேட்டரும் சிரிப்பு.. சிறப்பு...
//மே மாசம் பிறந்த நாள் வாழ்த்து வாங்க இப்படி ஒரு பிட்டா//.
Repeatuuu...
எல்லா மேட்டரும் கலக்கல்.
நர்சிம் - ஸ்டிக்கர்
அருமை.
Ungakitta irundhu innum ethiparkireyn..!
Post a Comment